Advertisement

அப்போது கேட்டுக்கு வெளியிருந்து “அண்ணா..”  என்ற சத்தம் கேட்கவும்,
“கதிர் அவங்க எல்லாம் வந்துட்டாங்க போல..” வா என்றவாறே அசோக், கதிர்
இருவரும் வெளியே  வந்தவர்களில் அசோக்,

“பசங்களா.. நாம நினைச்ச மாதிரி பங்க்ஷன் எந்த பிரச்சனையும் இல்லாம
நல்லபடியா முடிஞ்சிருச்சு, இதுக்கு உங்களோட சப்போர்ட்டும் ஒரு காரணம்,
அதுக்கு ரெண்டு அண்ணன்களின் சார்பா பெரிய நன்றி..” என்று வெளியே பெரிதாக
கூடியிருந்த இருதரப்பு இளைஞர்களிடம் உற்சாகத்துடன் சொல்ல.

“ஓஹ்..” என்று சந்தோஷ கூச்சலிட்ட இளரத்தங்களை, சிரிப்புடன் பார்த்த கதிர்,

 “போதும்டா.. நைட் நேரம் அடங்குங்க, இதோ எல்லாருக்கும் பிரியாணி இருக்கு,
எல்லாம் சாப்புட்டு வீட்டுக்கு கிளம்புங்க..”  என்று பார்சலை காண்பித்து
சொல்லவும்,

“அண்ணே.. என்று கோரஸாக கத்திய கூட்டத்தை, சலிப்புடன் பார்த்த கதிர்,
“டேய் என்னங்கடா..?” என்று மிரட்டலுடன் அதட்ட,

“என்னண்ணே தெரியாத மாதிரி கேட்கிறீங்க..?”  என்று கூட்டத்தில் ஒருவன் இழுக்க,

“உங்களுக்கு இதே வேலையா போச்சுடா”, என்றவாறே, பாக்கெட்டில் இருந்த கத்தை
பணத்தை எடுத்து நீட்டியவன், “இந்த மாச கோட்டா ஓவர்..” என்று கொடுக்க,

“என்ன அண்ணே இது..? இதெல்லாம் ஒத்துக்க முடியாது, இது உங்க
கல்யாணத்துக்கான ட்ரீட், இதுதனி”, என்றவர்கள்,

“ஹாப்பி மேரேஜ் லைப் அண்ணே..” என்று மறுப்படியும் கோரஸாக கத்தியவர்கள்,
கதிர் மறுத்து பேசுமுன் அங்கிருந்து ஓடியும் போயினர், அவர்களின்
சேட்டையில் சிரித்த கதிர், அசோக் இருவரும் வீட்டை நோக்கி சென்றனர்.

பழமையில் ஊறிப்போன பெரியவர்களிடம் பேசி புரியவைப்பதை விட, இன்றய
இளைஞர்களிடம் பேசுவது மேல் என்று கதிரும், அசோக்கும் அவரவர் இனங்களில்
அவர்வருக்களுக்காக ஒரு இளைஞர் பட்டாளத்தையே கூட்டாக இணைத்து
உருவாக்கியிருந்தனர்

உள்ளே தோட்டத்திற்கு வந்த அசோக்கிற்கும், காதிருக்கும் எவ்வித
பிரச்சனையும் இல்லாமல் பங்க்ஷன் நல்லபடியாக முடிந்ததில் ரிலாக்ஸாக உணர,

“எனக்கு உண்மையிலே நேத்துவரைக்கும் நம்பிக்கையே இல்லை, ஆனா இப்போதான்
ரிலாக்ஸா இருக்கு, இப்போ நீயும் நானும் மாமா.. மச்சா..!!” என்றவாறே அசோக்
கதிரை அணைத்து  தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான்,

முதல் இரவிற்காக அஞ்சலியை இளஞ்சிவப்பு நிற புடவையில், தலை மல்லிகை பூ
வைத்து, கழுத்தில் தாலி செயினுடன், மெலிதான ரெண்டு  செயின் அணிவித்து
சிம்பிளாக அலங்காரம் செய்த லதா, அவளிடம்,

“உனக்கு நான் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை அஞ்சலி, இருந்தாலும் சொல்றேன்,
கதிர் உன்னோட புருஷனா வருவார்ன்னு நீ மட்டும் இல்லை நானும் கனவுல கூட
நினச்சு பார்த்ததில்லை”,

“ஏன் உன்னோட ஒரு தலை காதல் மேல எனக்கு வருத்தம் தான், ஆனா கடவுளோட
ஆசீர்வாதத்துல, நீ கனவுல கூட நினைச்சு பாக்கதா நீ ஆசைப்பட்ட வாழ்க்கை
உனக்கு கிடைச்சிருக்கு, அதுமட்டுமில்லாம உன்னோட கல்யாணம் ரெண்டு பகை
குடும்பத்துக்குள்ள நடந்திருக்கு, இது கண்டிப்பா நிலைச்சு நிக்கணும்”,
என்று அறிவுரையாக சொன்னவர்,

அவளை கதிரின் ரூமில் விட்டு வெளியே  வந்தவர், அங்கு தோட்டத்தில்
அசோக்கும், கதிரும் சந்தோஷமாக பேசி கொண்டிருப்பதை பார்த்து அங்கேயே
யோசனையாக நின்றார்,

ரூமிற்கு உள்ளே இருந்த அஞ்சலிக்கு, லதாவின் அறிவுரையே மனதில் ஓடி, அவளை
மேலும் பதட்டப்படுத்த, அங்கிருக்க முடியாமல் வெளியே வந்துவிட்டவள்,
லதாவின் பார்வையை கண்டு தானும் வெளியே பார்த்தவள்,

அசோக், கதிரின்,  பிணைப்பை பார்த்து  கோவத்தோடு  முகம் திருப்பிக்கொண்ட
அஞ்சலிக்கு,  லதா கணவனை சந்தேகமாக பார்ப்பது கண்டு, அதுவரை இருந்த
இறுக்கம், பயம், பதட்டம்,அச்சம் மறைந்து மெலிதான புன்னகை அரும்பியது.

லதாவின் சந்தேக பார்வையிலே அவளுக்கு அசோக், கதிரின்  நட்பு  தெரியாது என
புரிய, மெதுவாக அவரை நெருங்கியவள், “அண்ணி.. ஏன் அவங்களை இப்படி
பாக்கிறீங்க..?” என்று தெரியாதவள் போல் கேட்டாள்.

“ம்ம்..  இல்லை அஞ்சலி, நானும் இந்த ஒரு வாரமா பாத்துட்டுருக்கேன், இவங்க
ரெண்டு பேரோட பழக்கத்தை  பார்த்தா, புதுசா இப்போ வந்த பழக்கம் மாதிரி
இல்லை”, என்று யோசனையாக கூறவும், அஞ்சலியும் குறும்பு புன்னகையுடன்,

“ஆமா அண்ணி.. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு, எங்கேயோ  இடிக்குது
இல்லை..  ஏன் அண்ணி..  அண்ணா சென்னை சத்தியபாமா காலேஜ் தானே, இவரும் அந்த
காலேஜ் தான் அண்ணி, ஒருவேளை அங்கிருந்தே பழக்கம் இருந்திருக்குமோ..?”
என்று யோசிப்பது போல் சொல்ல,

லதாவும் அதே ரீதியில் யோசனை செய்தவருக்கு, நிறைய விஷயங்கள் பிடிபட்டது
போல் இருந்தது,  “அப்படித்தான்  இருக்கும் அஞ்சலி, உங்க அண்ணன் அப்பப்ப
எதோ ஜூனியர் கிட்ட பேசுறேன், ஜூனியரை மீட் பண்ண  போறேன் சொல்லிட்டு
போவார்”,

“அன்னிக்கு கூட அந்த ஜூனியர் ஒரு பொண்ணுன்னு எனக்கும் அவருக்கும் பெரிய
சண்டையே வந்துச்சு, தெரியுமா..?” என்று கடுப்பாக சொல்லவும்,

“அப்போ அந்த ஜூனியர் கண்டிப்பா இவராத்தான் இருக்கணும் அண்ணி பாருங்க
எவ்ளோ பாசமா பேசிட்டு இருகாங்க,”, என்று போட்டு கொடுத்தவள்,

 “இருந்தாலும் இந்த அண்ணன் இவ்வளவு பெரிய விஷயத்தை உங்ககிட்ட இருந்து
மறைச்சிருக்க கூடாது, அப்போ இன்னும் இதுபோல எவ்வளவு விஷயங்களை உங்ககிட்ட
இருந்து மறைச்சிருக்கோ..?,

“இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே அண்ணி, உங்களை நினச்சா எனக்கே கஷ்டமா
இருக்கு”, என்று அசோக் மேல் இருந்த கோவத்தில் லதாவை முடிந்தமட்டும்
ஏற்றிவிட்டவாறே, அசோக்கை பார்த்து நக்கலாக சிரித்தவள் ரூமிற்குள்ளே
சென்றுவிட,

அப்பொழுது அவர்கள் பக்கம் பார்த்த அசோக்கிற்கு லதாவின் மேல் மூச்சும்,
கீழ் மூச்சுமான முறைப்பும், அஞ்சலியின் நக்கல் சிரிப்பும் சரியில்லாததாய்
தோன்ற, மனதில் அபாயசங்கு அதிக சத்தத்துடன் அடித்தது.

அவனின் திடீர் பீதியடைந்த முகத்தை புரியாமல் பார்த்த கதிர், “என்ன
ஆச்சு..?” என்று கேட்டவாறே, அசோக்கின் பார்வை செல்லும் இடத்தை
பார்த்தான், அங்கிருந்த லதாவோ இன்னும் கணவனை முறைத்தபடிதான்
நின்றிருந்தாள். அவரின் முறைப்பை பார்த்த கதிரும்,

“ஏன் இப்படி முறைக்கிறாங்க..?” என்று அசோக்கிடம் கேட்க, “எனக்கும் அதான்
தெரியல..”, என்று இன்று இரவு தூக்கமும் பறிபோகும் கவலையில் சொன்ன அசோக்,
அஞ்சலியின் நக்கல் சிரிப்பு ஞாபகம் வரவும்,

“இது கண்டிப்பா அஞ்சலி வேலையாத்தான் இருக்கும், என்மேல இருந்த கோவத்துல
எதோ என்னை கொத்துவிட்டு போயிருக்கா ராட்சஸி..”  என்று தங்கையை கடிய,

“அவளா..? அவ இப்படி எல்லாம் செய்வாளா..?” என்று அஞ்சலியின் அமைதியான
குணத்தை நினைத்து சந்தேகமாக கேட்ட கதிரிடம்,

 “உலகத்துல இருக்கிற எல்லா அண்ணகளோட தங்கச்சியும் இப்படித்தான், சேன்ஸ்
கிடைச்சா போட்டு தள்ளிறது..” என்று நொந்து கொண்டான் அந்த பாசமிகு அண்ணன்.

கதிரின் ரூமிற்குள்ளே வந்த அஞ்சலிக்கு லதாவின் கோவமுகமே நிற்க அதுவரை
இருந்த பயமும் பதட்டமும் மறைய, அசோக்கை நினைத்து சிரிப்புடன்
அமர்ந்திருந்தவள், கதவை லாக் செய்யும் சத்தம் கேட்கவும், வேகமாக திரும்பி
பார்த்தாள்,

அங்கு கதவை லாக் செய்துவிட்டு நின்றிருந்த கதிரை காணவும், அவசரமாக
எழுந்து நின்றவளுக்கு மீண்டும் பயமும், பதட்டமும் உச்ச பட்ச வேகத்தில்
தொற்றி கொண்டது. அதை அவள் முகமும் பிரதிபலிக்க, அதை கண்டும்
பொருட்படுத்தாத கதிர்,

அவளையே கூர்மையாக பார்த்தபடி வந்தவன், அவளை கடந்து  செல்லும் போது
வேண்டுமென்றே லேசாக இடித்துவிட்டு தான் சென்றான், அதிலே மேலும் அச்சம்
கொண்ட அஞ்சலி, தன் கை விரல்களை உள்ளங்கையில் இறுக்கமாக பற்றியபடியே
நின்றாள்.

அங்கிருந்த டேபிளில் சாய்ந்து நின்றவன், அஞ்சலியை ஊசியாக துளைக்கும்
பார்வை பார்க்க, அவனின் லேசர் பார்வையில், தடுமாற்றத்துடன் நின்ற
அஞ்சலியிடம்,

“இங்க வா..”  என்று தன் பக்கத்தில் கண்ணை காட்டியபடி அழைக்க,

“இல்.. இல்ல..” என்று திணறியபடியே சொன்னவள், “எனக்கு எனக்கு தூக்கம்
வருது, நான் தூங்க.. தூங்கணும்” என்று அவனின் சீரியஸான முகத்தை பார்த்து
உஷாராக சொன்னவளை, பார்த்தவாறே அருகில் வந்தவன், மிக மிக நெருங்கித்தான்
நின்றான்,

இருவருடைய உடையும் உரசும் அளவு நெருங்கி நின்றவன், தன் மூச்சு காற்று
அவளின் முகத்தில் பட, “தூங்கணுமா..? இப்பவா..?” என்று நக்கலுடன்
கேட்டவன்,

“இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்ங்கிறது  மறந்துபோச்சா டாக்டர்
மேடத்துக்கு..!!”, என அவளை அங்குலம் அங்குலமாக பார்வையாலே மேய்ந்தபடி
தீவிரமான முகபாவத்துடன் சொன்னான்,

அவனின் நெருக்கத்திலும், பார்வையிலும், பேச்சிலும் அஞ்சலிக்கு எங்கே
பதட்டத்தில் மயக்கமே வந்துவிடுமோ என்றே இருந்தது, அப்படியே
வந்துவிட்டாலும் பரவாயில்லை என்றும் தோன்றாமல் இல்லை.

“என்னோட வயசு என்ன தெரியுமா..? 31 வயசு, இதுவரை நான் எந்த பொண்ணு
பக்கத்துல கூட நின்னதில்லை, அந்தளவுக்கு சுத்த கட்டை பிரம்மச்சாரி நான்,
இப்போ தான் எனக்கு கல்யாணமாகி என் பொண்டாட்டி வந்தபின்னாடியும் நான்
பிரம்மச்சாரியவே இருக்கனும்ன்னா எப்படி சொல்லு..?” என்றவாறே

ஒற்றை விரல் கொண்டு அவளின் நெற்றியிலிருந்து கண் மூக்கு, கன்னம் என்று
இழுத்து கொண்டே வந்தவன், கன்னத்தில் இருவிரல் கொண்டு மெலிதாக வருடி
அவளின் கன்னத்தின் மேன்மையை சோதிக்க, அஞ்சலி அவனின் தொடுகையில், பேச்சில்
 உறைந்து நின்றாள்,

 “பயங்கர சாப்ட் உன் கன்னம், அப்படியே ரசகுல்லா மாதிரி இருக்கு, டேஸ்டும்
அதுபோல இருக்குமா..?” என்றவாறே,  அடுத்து பயணித்த அவனின் இருவிரல்கள்
அவளின் உதட்டை இழுத்து குவித்தவாறே பிடித்தவன்,

“உன் உதடு அப்படியே எனக்கு ரொம்ப  பிடிச்ச தேன்மிட்டாய் மாதிரியே
இருக்கு..? டேஸ்டும் அப்படித்தான் இருக்குமா..?” என்று கேட்டவன்,

சிலை போலே நின்றவளின் இடையில் கை கொடுத்து  மேலும்  அருகில் இழுத்தவனின்
மேல் மோதியபடி வந்து நின்றவளின் உதட்டை பார்த்தபடியே  “டேஸ்ட்
பண்ணிரலாமா..?” என்றவாறே  அவனின் முகத்தை அருகில் கொண்டு வர, மூச்சடைத்து
நின்றாள் அஞ்சலி.

Advertisement