Advertisement

மாறனும்.. சுந்தரமும்.. “மனமிருந்தால் மார்க்கம் உண்டு..!!”  என்ற
பொன்மொழிக்கு ஏற்ப, இவ்வளவு பாகையையும், வேறுபாட்டையும் தன்
பிள்ளைகளுக்காக தங்கள் பேச்சுதிறமையால் கடந்து தாங்கள் நினைத்தை
சாதித்ததோடு,
தன் தலைமை அறிவையும் முழுமையாக பயன்படுத்தி முடிந்தமட்டும்
எல்லாவற்றையையும்  நேர்செய்ய முயன்று, அதில் ஓரளவிற்கு வெற்றியும்
கண்டனர்,
 ஒரே வாரத்தில் கதிர் மற்றும் அசோக்கின் வாயிலாகவே எல்லா ஏற்பாடுகளையும்
செய்து, கோவிலில் வைத்து முறையோடு “அஞ்சலியை, கதிரின் மனைவியாக..!!,
மாறன் குடும்பத்து மருமகளாக..!! புகுந்த வீட்டிற்கு நல்முறையில்
வழியனுப்ப நாளும் குறித்து எல்லோரும் கோவிலில் கூடியும் விட்டனர்,
கோவிலுக்கு வெளியே உள்ள காலிமைதானத்தில் இருபக்க ஆட்களுக்கும்
தனித்தனியாக டென்டுகள் போடப்பட்டு, பிரச்சனைகளை தவிர்க்கும் பொருட்டு
பந்தியும் தனித்தனியாகவே பரிமாறப்பட்டது, ஆனால் “செலவு மொத்தமும்
சுந்தரத்துடையதே..”
“இது என் ஒரே மகளுக்கு தான் செய்யும் முறை.. எங்கப்பக்கம் முறையும்
இதுதான்”  என்று கதிரிடம், அசோக் மூலமாக கண்டிப்புடன்
விட்டுக்கொடுக்காமல் பேசிவிட, மாறனும், சுந்தரத்தின் பக்கமுறையை
புரிந்துகொண்டு அதற்கு ஒத்துக்கொண்டார்,
 பங்க்ஷனில் எந்த விஷயங்களுக்காகவும் பிரச்சனை வந்துவிட கூடாது என்பதே
இரு குடும்பத்தின் மிகப்பெரிய தலையாய கடமையாகவே   இருந்தது, அதனாலே சிறு
விஷயம் முதற்கொண்டு பெரிய விஷயம் வரை எல்லாவற்றையுமே  கதிர் தன்
கட்டுப்பாட்டிலே வைத்திருந்தான்,
தன்னுடைய திருமணத்தால் புதிதாக எந்தவிதமான மனக்கசப்பும் ஏற்பட்டு
விடக்கூடாது என்பதில் மிக மிக தீவிரமாக இருந்தான், இதுவரை எப்படியோ..?
ஆனால் இனி.. இரு குடுமபத்துக்கும் எந்த விதமான பகையும்  கிடையாது என்பதே
அவனின் குறிக்கோளாகவே இருந்தது.
அதனாலே இதை தன் கல்யாண பன்க்ஷனாக பார்க்காமல், இருகுடும்பத்தையும்..
இருபக்க ஆட்களையும் இணைக்கும் பலமாகவே பார்த்தான், இனிமேலாவது
இனவேற்றுமையும்,  கட்சிவேற்றுமையும் இல்லாமல்  எல்லாருமே நிம்மதியாக
இருக்க வேண்டும் என்பதும் அவனின் எண்ணத்தில் ஒன்றாகவே இருந்தது,
ஆனால் அது சாத்தியமில்லை என்று அவனுக்குமே புரியாத்தான் செய்தது,
இருந்தாலும் தன்னுடைய திருமணம் அதற்குண்டான ஒரு தொடக்கமாக
இருக்கட்டுமே..!!”
“கதிர் எல்லாம் ஓகேதானே..?” என்று பரபரப்புடன் கேட்டு கொண்டே வந்த அசோக்கிடம்,
“இதுவரை எல்லாம் ஓகேதான்.. ஆனா,  இன்னும் கொஞ்சநேரத்துல எல்லாம்
பேசறத்துக்காக  கோவில்ல ஒன்னு கூடுவாங்க, அங்க எந்த பிரச்சனையும் வராம
இருக்கணும்..”  என்று யோசனையாக சொன்னான் கதிர்,
“அதை என் அப்பாவும், உன் அப்பாவும் பாத்துக்குவாங்க, அவங்களுக்கும் அந்த
டென்சன் இருக்கத்தான் செய்து, அப்படியும் ஏதாவது பிரச்சனை வந்தா நாம
எப்பவும் போல சமாளிச்சிக்கலாம் விடு..” என்று சொல்லிக்கொண்டிருந்த
அசோக்கை, மீனாட்சி கூப்பிடுவதாக ஆள் வந்து சொல்லவும், சென்றவனை,
“மீனாட்சி குமுறு குமுறு என்று குமுறி எடுத்துவிட்டார்”,
“நீ மட்டும் புதுமாப்பிள்ளை கணக்கா  புதுத்துணி போட்டுட்டு சும்மா
சுத்திட்டு இருக்க,  ஆனா என் மாப்பிள்ளை இன்னும் புதுத்துணி கூட
போட்டுக்க முடியாம எல்லா வேலையும் அவர் தலையிலே இருக்கு”,
“அவர் பங்கஷனல் கூட அவர்தான் எல்லாவேலையும் செய்யணும், நீங்க எல்லாம்
எதுக்குத்தான் இருக்கீங்களோ..?” என்று இடைவிடாமல் பொரிந்து தள்ளியவர்,
அசோக்கின் கையில் ஒரு பெரிய பார்சலை கொடுத்து கதிரை தயார் செய்யும்படி
விரட்டியவர், இறுதியாக,
“என் மாப்பிள்ளை காலையிலுருந்து சாப்பிட்ட மாதிரி கூட தெரியல, பாவம்
முகம் எல்லாம் வாடிக்கிடக்கு, நீ மட்டும்  வீட்லயும் சாப்பிட்ட,
இங்கேயும் வந்து சாப்பிட்ட, இதுல போதாக்குறைக்கு அப்பப்ப ஜூஸ் வேற
உனக்கு, முதல்வேலையா என்  மாப்பிள்ளைக்கு சாப்பிட ஏதாவது குடுத்துட்டு
அப்பறம் அவரை ரெடி செய்..” என்று மிரட்ட,
நொந்து.. வெந்து போன அசோக், கடுப்புடன் கதிரை இழுத்துக்கொண்டு சென்று
வம்படியாக சாப்பிட வைத்தவன், அவன் மறுக்க மறுக்க தயார் செய்துவிட்டே
விட்டான்.
மீனாட்சி, அசோக்கை திட்டுவதை கேட்டுகொண்டிருந்த அஞ்சலிக்கு, ஆதங்கம்
கொப்பளித்தது, “அவளும் தான் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல்
இருக்கிறாள், அதை எதுவும் கண்டுகொள்ளாத அம்மா, மருமகனுக்கு மட்டும்
கவனிப்பதை பார்..” என்று நொடித்துகொண்டவாறே தன் அம்மாவை முறைக்க,
அவரோ அவளின் முறைப்பை, தூசி போல் தட்டியவர், அவள் புகுந்தவீடு செல்லும்
ஏற்பாட்டில் மூழ்க ஆரம்பித்துவிட்டார்,  அப்போது ஒரு படையுடன் அங்கு வந்த
நாயகி, தங்கள் வீட்டு மருமகளின் அழகை கண்டு கையாலே  திருஷ்டி கழித்தவர்,
அவரின் உறவின பெண்களிடம் அஞ்சலியை பெருமையாக காண்பிக்கவும் செய்தார்.
அவரின் நல்லிணக்கத்தில் ஆனந்தம் கொண்ட மீனாட்சி பாசமாக பேசி தன்
கூட்டணியை நாயகியுடன் இணைத்துக்கொண்டார். அதை கண்டு மேலும் பொறுமிய
அஞ்சலி லதாவை பாவமாக பார்க்க, அவரும் அவர்களின் கூட்டணியில் ஐக்கியமாகி
இருக்க, மேலும் நொந்து போன அஞ்சலி, டென்டின் கேப்பில் வெளியே பார்க்க,
அங்கு சந்தனகலர் பட்டு வேஷ்டி சட்டையில் புது மாப்பிள்ளையாக ஜொலித்த
கதிர், சிறுசிரிப்புடன் அசோக்கிடம் பேசிக்கொண்டிருக்க, அவனின் கம்பீர
அழகில் எப்போதும் போல் இப்போதும் மயங்கியவள், அவனை நன்றாக பார்வையிட
செய்தாள்,
புதிதாக அவனுடைய கழுத்தில் தொங்கிய மைனர் செயின், இடதுகரத்தில் வைரம்
பதித்த வாட்ச், வலது கரத்தில் தங்கத்தில் காப்பு அணிந்திருக்க, அதை
மேலேற்றியவாறே பேசிக்கொண்டிருந்த கதிரின் புதுமாப்பிள்ளை முக ஜொலிப்பில்,
அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவளை,
உள்ளுணர்வு  உந்த திரும்பி பார்த்த கதிருக்கு, அலங்காரத்தில் அவளை
காணவும், தன் தந்தை சொன்ன  “ரோஸ் கலர் ரோஜாப்பூ தான்” ஞாபகத்திற்கு
வந்தது, அன்று அஞ்சலி அணிந்திருந்த புடவையும், மெலிதான ரோஸ் நிறத்தில்
இருக்க, நகை முதல் பூ வரை எல்லா அலங்காரமும் அதை ஓத்தே இருக்க,
அப்படியே கை, கால் முளைத்த ரோஜாப்பூ போலே இருந்தவளை, உரிமையுடன் கூடிய
ரசனையாக  பார்வையிட,  அவனின் பார்வையை கண்டுகொண்ட அஞ்சலி சட்டென
விலகிவிட, அவளின் செயலில் கடுப்பான கதிர்  “போடி..” என்ற தானும் பார்வையை
திருப்பிக்கொண்டான்,
ஊர் தலைவர்கள் அமர்ந்திருக்க, பேச்சுவார்த்தை தொடங்கவும், எழுந்துநின்ற
மாறன், அதிகாரத்துடனும், உரிமையுடனும் சுந்தரத்தை பார்த்து,
“என் மகன் யாருக்கும் தெரியாம உங்க பொண்ணை தூக்கிட்டு போய் தாலி கட்டினது
தப்புதான், ஆனா அதுக்கு காரணமும் நீங்க எல்லாரும்தான், என் மகன் கல்யாணம்
செஞ்சுக்க இருந்த பொண்ணை தூக்கிட்டு போனது உங்க ரத்தினம் தான்”,
“ஆனாலும் நீங்க எல்லாம் பஞ்சயாத்துல வச்சி என் மகனை பார்த்து கேட்க கூடாத
கேள்வியெல்லம் கேட்டுடீங்க, அதோட விளைவு தான் இதுயெல்லாம், ஆனாலும் என்
மகன் செஞ்சது தப்புதான், அதை நான் முழுமனசோடு ஒத்துகிறேன்”, என்று
கம்பீரகுரலில் கணீரென பேசியவர்,
“இப்போ என்னோட வேண்டுகோள் என்னன்னா..  என் மருமக அஞ்சலியை எங்க
வீட்டுக்கு மருமகளா..!! என் மகனுக்கு பொண்டாட்டியா..!! அனுப்பி
வைக்கணும்ன்னு சுந்தரத்துக்கிட்ட கேட்டுக்கிறேன்..” என்று நேரடியாக
சுந்தரத்திடமே கேட்டுவிட்டார்,
அவரின் பொறுப்பான பேச்சில், எதிர்த்து பேசதோனத, ஏன் எதிர்த்து பேசவும்
ஒன்றும் இல்லமால் போக, சுந்தரம் பக்க ஆட்கள் அமைதியாக இருந்துவிட்டனர்.
அடுத்து எழுந்து நின்ற சுந்தரமும், மாறனை ஓத்தே பேச ஆரம்பித்தவர்,
“கதிரோட கல்யாணவிஷயத்துல நடந்த பிரச்சனைக்கு எனக்கே தெரியாம நானும் ஒரு
காரணமாயிட்டேன், அதோட பஞ்சாயத்துல வச்சு அவரை எங்கப்பக்க ஆளுங்களும்
பேசுனது ரொம்ப தப்புதான், அதை நானும் ஒத்துகிறேன்”,
“ஆனா.. அதுக்காக அவர் என் பொண்ணை தூக்கிட்டு போய் தாலி கட்டினது
கண்டிப்பாவே தப்புதான், அதை ஒரு அப்பாவ என்னால இன்னமுமே ஏத்துக்க
முடியலைத்தான்”.
“ஆனாலும் என் பொண்ணுக்காக, அவளோட வருங்காலத்திற்காக, மாறன் கேட்டது போல
என் பொண்ணை அவரோட மருமகளா,  என் மாப்பிள்ளை கதிரோட  பொண்டாட்டியா
அனுப்பிவைக்க முழுமனசா சம்மதிக்கிறேன், இதுக்கு ரெண்டுபக்க ஆட்களும்
ஒத்துழைப்பு தரணும்..”  என்று  முடித்துவிட்டார்,
“சுந்தரத்தின் பேச்சில் ஏதாவது வம்பிழுக்க முடியுமா..?” என்று
காத்திருந்த கதிரின் அண்ணன்களுக்கு சுந்தரம் அந்த வாய்ப்பையே கொடுக்காமல்
சுமுகமாக பேசி முடித்துவிட, அவர்கள் இப்பொழுதே அடுத்த வாய்ப்பிற்காக
காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.
“சுந்தரமும் சரி.. மாறனும் சரி இருவருமே விட்டுக்கொடுத்து மிகசிறந்த
தலைவர்கள்,,!!, அப்பாக்கள்..!!  என்று நிரூபித்து விட்டனர்”.
அதற்குப்பிறகு, சபையிலே “சுந்தரம் மாறனுக்கும், மாறன் சுந்தரத்திற்கும்
மாற்றி மாற்றி மாலை அணிவித்து சம்மந்தி முறைசெய்த பின், அஞ்சலியை சபைக்கு
வரவழைத்து, கதிரையும் அவளையும் ஊர்மக்கள் முன் மாலை மாற்றி அவர்களின்
திருமணத்தை உறுதி செய்தனர்”.
தன் பக்கத்தில் நின்றிருந்த கதிரை  கடைக்கண்ணால் பார்த்த அஞ்சலிக்கு,
தன் கோபத்தையும் மீறி உள்ளம் நிறைந்து தான் போனது, இதற்கு பிறகு தங்களின்
மணவாழ்க்கை எப்படி இருக்கும்..? என்று உறுதியாக தெரியாத போதும், “கதிரின்
மனைவி என்ற அங்கீகாரம்..  இதுவே போதும்..!!” என்ற நிம்மதியும் தோன்றாமல்
இல்ல.
அஞ்சலி கடைக்கண்ணால் பார்க்க, கதிரோ நன்றாக நேராகவே மனைவியை பார்த்தவன்,
“இப்போ எங்க போய் ஒளிஞ்சிக்குவ..?” என்று குறுஞ்சிறுப்புடன் சீண்டியவன்,
ஜோடியாக சென்று சாமி கும்பிட்டபிறகு பூசாரி கொடுத்த திருநீறை,
குங்குமத்தை தன்  கையில் வாங்கியவன்,
தானே அஞ்சலியின் நெற்றியிலும், தாலியிலும் வைத்தவன், சிரித்தவாறே அவளிடம்
தன் கையை நீட்டிவாறே  குனிந்து தன் நெற்றியை காட்ட, அவனின் குறும்பு
விளையாட்டில் எல்லாருமே சிரிக்க,
அவனின் அடாவடியில்  நொந்து போன அஞ்சலிக்கு,  எங்காவது போய்
முட்டிக்கொள்ளலாமா..? என்றே இருந்தது. இந்தநேரத்திலும், எல்லாரும்
இருக்கும்போது இது தேவையா..?  இவரை என்னதான் செய்ய..? என்று நொந்தவளை,
தோளில் தட்டிய மீனாட்சி, வைத்துவிட சொல்லி முறைக்கவும், எல்லோரும்
பார்க்க, நடுங்கிய விரலில் தயக்கத்துடன் கதிரின் நெற்றியில்  திருநீறை
வைத்துவிட்டாள் “கதிரின் ரோஸ் கலர் அழகு மனைவி”

Advertisement