Advertisement

“அஞ்சலி கதிரோட விஷயத்துல உன்னோட முடிவு என்ன..?” என்று மகளிடமே
அபிப்ராயம் கேட்டார் சுந்தரம்,
“அது.. இல்லப்பா, அவர் இப்படி தாலி கட்டி, அது எப்படி சரியா வரும்,
வேணாம்ப்பா,” என்று தட்டு தடுமாறியபடி, மீனட்சியின் முறைப்பையும் மீறி
சொல்லிவிட்ட.
“ஏன் சரியா வராது..?” என்று மீனாட்சி மகளிடம்  கோவத்தில் எகிற,
“ஷ்ஷ்.. மீனாட்சி என்னது இது..? அமைதியா இரு, பொறுமையா பேசலாம்” என்று
கணவர் மனைவியை அதட்ட,
“இல்லைங்க.. அந்த தம்பி செஞ்சது தப்புன்னு புரிஞ்சி எவ்வளவு பதுவிசா,
அமைதியா  வந்து நம்மகிட்ட  கேட்டுட்டு போயிருக்கார், எதனால  இவகூட
சேர்ந்து வாழணும்ன்னு தானே..?, அதை புரிஞ்சிக்காம வேணாம்ன்னு சொல்றா”,
“ஏன் அவருக்கு என்ன குறை..?, நல்ல குணமான புள்ளை தான்,  என்ன கோவம்
மட்டும் கொஞ்சம் அதிகம், அவ்வளவுதானே.”  என்று மருமகனுக்கு
வரிஞ்சிக்கட்டு கொண்ட சண்டைக்கு வந்த மீனாட்சியை எல்லோரும் அதிசயமாக
பார்த்தனர், அசோக் வாய்விட்டே கேட்டுவிட்டான்,
“என்னம்மா கதிருக்கு இப்படி சப்போட் பண்றீங்க..?”
 “டேய்… என்ன நீ மாப்பிள்ளையை பேர் சொல்லி கூப்பிடுற, ஒழுங்கா
மாப்பிள்ளைன்னு கூப்பிடு, இல்லை மச்சான்னு கூப்பிடு, அதை விட்டு பொட்டுல
அடிச்சமாதிரி பேர் சொல்லி கூப்புடுற”, என்று மகனையும் அதட்ட, நொந்து போன
அசோக்,
 “ம்மா.. இதெல்லம் ரொம்ப ஓவர் பாத்துக்கோங்க, கதிர் என்னோட ஜூனியர்”,
“ஜூனியரா இருந்தா வீட்டு மாப்பிளையை பேர் சொல்லி கூப்பிடுவியா..? இதுதான்
கடைசி, இனி அவரை பேர் சொல்லி கூப்பிட்டேன்னு பாத்துக்கோ..”  என்று என்று
அசோக்கை மேல்கொண்டு பேசவிடாமல் மிரட்டியவர், கணவரிடம்,
“இங்க பாருங்க, உங்க கட்சி சண்டை, இனசண்டை எல்லாம் உங்களோட, என்
மாப்பிள்ளை சொன்னமாதிரி அவருக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இருக்க
போறதில்லை, அப்பறம் என்ன உங்களுக்கு..?”
“அவரை விட ஒரு நல்ல மாப்பிள்ளையை நீங்க உங்க பொண்ணுக்கு கொண்டு
வந்திறமுடியுமா..? நான் முடிவே பண்ணிட்டேன்.  என்னை பொறுத்தவரைக்கும்
எனக்கு மாப்பிள்ளைன்னா அது அவர்தான், என்ன பணிவு, என்ன மரியாதை”, என்று
கதிரின் புகழ் பாட  கடுப்பான அஞ்சலி,
“ம்ம்மா.. அவர் எனக்கு எதுக்கு தாலி கட்டினார்ன்னு மறந்துராதீங்க, அவர்
கல்யாணம் நின்னதுக்கு நான் பழியா..?” என்று கதிரின் செயலில் உண்டான
கோவத்தை அம்மாவிடம் காட்டினாள். மீனாட்சியோ, அவளின்  கோவத்திற்கெல்லம்
அசராமல்,
“ஆமா அவர் கல்யாணம் செஞ்சுக்க  இருந்த பொண்ணை உங்க  பங்காளிகளும், உங்க
அப்பாவும் தூக்கிட்டு போனங்களே..?  அது ரொம்ப நல்ல வேலையோ..? எவ்வளவு
பெரிய தப்பு அது, அந்த தப்பால் தானே என் சம்மந்தியம்மா..? என்று லட்சுமி
அம்மாளை நொடியில் தான் சம்மந்தியாக்கி அவருக்காக வேதனைப்பட்ட மீனாட்சியை
எல்லாரும் “என்னடா நடக்குது இங்க..?” என்றே பார்த்தனர்.
“சம்மந்தி அம்மாவும் இல்லாம போய், கல்யாணமும் நின்னு, அப்போ  என்
மாப்பிள்ளை எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பர், அதெல்லாம் யாராலா…? உங்களால
தானே, பாவம் என் மாப்பிள்ளை, அவருக்கு அவங்க அம்மான்னா ரொம்ப உசுரு,
பின்ன உங்களை மாதிரியா என் மாப்பிள்ளை.?”,  என்று சமயத்தில் தன்
பிள்ளைகளை போட்டு தாக்கியவரை அதிர்ச்சியுடன் பார்த்த அசோக்கின்
இதயத்தில் ரத்த கண்ணீரே வடிந்து ஆறாக ஓடியது,
“டேய் கதிர் உனக்கு  இவ்வளவு சப்போர்ட்டா..?  அதுவும்  ஒரே நல்லா
எப்படிடா..?”  என்று கதிரை மனதில் தாளித்தவன், பொறுக்காமல்,
“ம்மா.. அவனை பத்தி தெரியாம ரொம்பத்தான் சப்போர்ட் பண்ற பார்த்துக்கோ..”
என்று கடுப்பாக சொன்னான்,
“டேய்  உனக்கு நான் இப்போதானே சொன்னேன், மாப்பிளையை மரியாதையா
கூப்பிடுன்னு..” என்று அசோக்கின் எச்சரிக்கை வார்த்தைகளை ஒதுக்கித்தள்ளி
அவனை திட்ட,
“ம்ஹூம்..  உங்களுக்கு இதுக்கு மேல  சொல்றது சல்லிக்காசுக்கு
புரியோஜனமில்லை” என்று சலித்த அசோக்கின் வாய் தன்னாலே மூடிக்கொண்டது.
“மீனாட்சி.. அவசரப்படாத கொஞ்சம் அமைதியா இரு,  முதல்ல மககிட்ட
அவவிருப்பத்தை கேட்கவேணாமா..?” என்று சுந்தரம் மனைவியை அதட்டி
அமைதியாக்கியவர், மகளிடம்
“என்னம்மா சொல்ற..? உன்னோட விருப்பம் என்ன..?” என்று கேட்க, அஞ்சலி உறுதியாக
“இல்லைப்பா.. எனக்கு இது சரியா வரும்ன்னு தோணலை, நான் அவரோட போகலை” என்று
முடிக்க பார்த்தவளிடம்,
“சரி.. அப்போ உன் வாழ்க்கை..? நீ கதிரோட  சேர்ந்து வாழவேண்டாம்ன்னு
முடிவு எடுத்தா  எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான், ஆனா.. அதுக்கு அப்பறம்
என்ன செய்யலாம்ன்னு இருக்க..?” என்று மகளிடம் வருங்காலத்தை பற்றி
கேட்டார்.
“எப்பவும் போல ஹாஸ்பிடல் டியூட்டி, வீடு.. நீங்க எல்லாம் தான் எனக்காக
இருக்கீங்களே அப்பறம் என்ன..?”
 “ம்ஹூம்.. இது சரியான பதில் கிடையாது பாப்பா, நான்  இன்னொரு கல்யாணத்தை
பத்திதான்  கேட்கிறேன் உனக்கு நல்லா புரியும்,..” என்று சுந்தரம்
சொல்லும்போதே அஞ்சலிக்கு ஒவ்வாமையும், வெறுப்பும் தோன்ற,
“அப்பா.. ப்ளீஸ் உங்ககிட்ட ரொம்ப கெஞ்சி கேட்கிறேன், இன்னொரு டைம்
என்கிட்ட இதுபோல் பேசாதீங்க” என்று எல்லையில்லா எரிச்சலுடனும்,
ஆத்திரத்துடனும் சொன்னவளை, தீர்க்கமாக பார்த்த சுந்தரம்,
“நான் இன்னொரு கல்யாணம்ன்னு பேச்சுக்கு சொல்றதே உனக்கு ஏன் இவ்வளவு
வெறுப்பா இருக்கு அஞ்சலி..?” என்று அசோக்கின் மூலம் அவளின் காதல் தெரிந்த
அழுத்தத்துடன் சுந்தரம் கேட்க, அவரின் தீர்க்கமான பார்வையிலும்,
அழுத்தத்திலும் மெலிதான நடுக்கம் கொண்ட அஞ்சலி,
“இல்லப்பா.. கல்யாணம்கிறது ஒருமுறை தான், அதான்..” என்று மழுப்ப பார்த்தவளை,
“சரி.. அப்போ  கதிரோட சேர்ந்து வாழு”,
“ப்பா.. நான் தான் சொன்னேனே.. அது சரிப்பட்டு வாரதுன்னு”,
“ம்ஹூம்… அஞ்சலி எல்லா பொண்ணுக்கும் வாழ்க்கை துணை ரொம்ப அவசியம்,
நாங்க எல்லாம் காலத்துக்கும் உன்கூட வரமுடியாது, உனக்குன்னு ஒரு துணை
கண்டிப்பா வேணும், அது யாருன்னு நீதான் முடிவு எடுக்கணும்”,
“உனக்கு இருக்கிறது  ரெண்டு ஆப்ஷன் தான், ஒண்ணு கதிரோட வாழுறது, இல்லை
இன்னொரு கல்யாணம் அவ்வளவுதான்”, என்று முடித்தவரிடம், மேலும் மறுக்க
முயன்ற அஞ்சலியை கை நீட்டி தடுத்த சுந்தரம்,
“உனக்கு நாளைக்கு நைட் வரை டைம், நல்லா யோசிச்சி எனக்கு நாளைக்கு நைட்
இதே டைம் உன்னோட முடிவை சொல்ற, இப்போ தூங்க போ”, என்று  அவளை பேசவே
விடாமல் அனுப்பிவிட்டார் சுந்தரம்.
இரவு முழுவதும் தூங்காமல் தவித்த அஞ்சலி மறுநாள் காலையிலே மனசஞ்சலத்துடன்
கோவிலுக்கு சென்றவள், எப்போதும் போல் தன் மனப்பாரத்தை அம்மனின்
சந்நதியில் இறக்கி விட்டு, கருவறையை விட்டு வெளியே வர, அவளுக்காகவே
காத்திருந்தது போல் நின்றிருந்தனர் நாயகி மற்றும் கதிர்,
ஆனால் நம்  நாயகியின் கண்களுக்கு தெரிந்தது என்னமோ கதிர் மட்டுமே, அதனாலே
இருந்த மனவுளைச்சலில் கதிரை முடிந்த மட்டும் முறைத்து விட்டு
நகர்ந்தவளின் முன்னாள் கடுமையான முகத்துடன் வழிமறைத்து நின்றவன்,
“உன்னை பாக்க வந்து அக்கா நிக்கிறாங்க.. நீ பேசாம எனக்கென்ன வர, என்ன
திமிரா..?” என்று சீறலாக கேட்கவும் தான், அவசரமாக திரும்பி பார்த்தவள்,
நாயகியை காணவும், வேகமாக அவர்முன் சென்று நின்றவள்,
“மன்னிச்சுக்கோங்க.. நான் கவனிக்கல” என்று பணிவாகவே வருத்தத்துடன்
கேட்டவளின் கையை பாசமாக பிடித்துக்கொண்ட நாயகி,
“அதனாலென்ன விடும்மா, நான் தான் உன்னை பாக்கணும்ன்னு தம்பிகிட்ட
கேட்டேன், அதான் கூட்டிட்டு வந்தான்”, என்று வாஞ்சையாக சொன்னவர், தன்
தம்பியின் மனைவியை நன்றாக பார்த்தார், இதுவரை மூன்றாம் மனிதராக
பார்த்திருந்தவர் இன்று உரிமையோடும், பாசத்தோடும் பார்த்தார்,
பார்த்தவருக்கு மிகவும் திருப்தியே,
ஆனால் நம் கதிருக்கு அவனின் தந்தை சொன்னது ஞாபகம் வர, அவளின் அழகையும்,
கலரையும் அலட்சியமாக பார்த்தவன், “பெரிய ஊர் உலகத்துல இல்லாத  ரோஸ்  கலர்
அழகி..!!, இவளுக்கு  எங்க அப்பா கொடுக்கிற பில்ட்அப் ரொம்ப  ஓவர்தான்”,
என்று உதட்டை பிதுக்கியவனை,
திரும்பி பார்த்த அஞ்சலிக்கு அவனின் முகத்தில் உள்ள அலட்சியத்திற்கு
காரணம் புரியாமல் கண்களை  சுருக்கி பார்த்தவளை, “அங்க பார்த்து பேசுடி..”
என்று சைகை காட்டி வாய் அசைக்க,
அப்போது நாயகியும் “எப்படிம்மா இருக்க..?” என்று பேச்சை ஆரம்பிக்க,
“நல்லா இருக்கேன்..” என்று “என்ன உறவு முறை சொல்லி அழைப்பது..?” என்று
தடுமாற,
“உனக்கு நான் அண்ணி முறையாகணும், அதனால அண்ணின்னே கூப்பிடும்மா..”  என்று
பேச ஆரம்பித்தவர்கள் சிலபல நிமிடங்கள் பொதுப்படையாக பேசிக்கொண்டிருக்க,
நேரத்தை பார்த்த கதிர்,
“க்கா.. அவளுக்கு டியூட்டிக்கு டைம் ஆச்சு, நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு
அப்பறம் அவகிட்ட எவ்வளோ  வேணுமோ பேசிக்கோ, இப்போ கிளம்பலாம்”, என்று
அக்காவிடம் சொன்னவன்,
“நீ என்ன வாய் பாத்து நின்னுட்டுருக்க.. ஹாஸ்பிடல் போக டைம் ஆகலையா..?
கிளம்பு” என்று அஞ்சலியை அதட்டினான், கதிர் சொல்லவும், “சரி அஞ்சலி.. நீ
கிளம்பு நாம அப்பறம் பேசலாம்..” என்று சொன்ன நாயகி,  தம்பியிடம்,
“நான் உள்ளே போய் சாமி கும்பிட்டு வந்துடுரேன் தம்பி..” என்றவர்,
அஞ்சலியிடம் விடைபெற்று  உள்ளே செல்லவும், தானும் கிளம்ப பார்த்த
அஞ்சலியின் கையை பிடித்தவன், நெற்றியை குனிந்து காட்டினான்.
அவன் கேட்கவருவதை புரிந்து கொண்ட அஞ்சலி, அவன் மேலிருந்த கோவத்தில், அவன்
கேட்டதை செய்யாமல் முகத்தை திருப்பி கொண்டாள், ஆனாலும் அவளின் காதல்
மனது, அவன் கேட்டதை செய்ய துடித்தது. இருந்தாலும் முகத்தை திருப்பிகொண்டு
வீம்பாக நின்றவளை கண்ட கதிர்,
“வைக்கமாட்டியா..? ஓகே அப்போ சரி..” என்றவன், அன்று போல் இன்றும் அவளின்
கை பிடித்து பூஜை கூடையில் இருந்த திருநீறை அவளின் விரல் கொண்டு தொட
செய்தவன், தானே  தன் நெற்றியில் வைத்து கொண்டான்.
அன்றுபோல் இன்று கை இழுக்காமல் அமைதியாக இருந்த அஞ்சலியை உணர்ந்த கதிரின்
முகத்தில் குறுஞ்சிரிப்பு உதயமாக,  பிடித்திருந்த கையை நன்றாக கிள்ளி
வைக்க, அதை எதிர்பார்க்காத அஞ்சலி வலியில்
“ஸ்ஸ்ஸ்..” என்றவாறே கையை தேய்த்தவள், கதிரை கோபத்துடன் பார்க்க,
“இல்லை.. ஒரு பெரிய மனுஷர் சொன்னார்., உனக்கு சுண்டிவிட்டா ரத்தம்
வரும்னு அதான் டெஸ்ட் செஞ்சேன், ஆனா வரல..!!”  என்று கிண்டலாக உதட்டை
சுழிக்க,
மேலும் முறைத்த அஞ்சலி அங்கிருந்து கிளம்பி செல்லவும், தன்னிடம் ஒரு
வார்த்தை கூட பேசாமல் செல்லும் அவளையே பார்த்திருந்த கதிருக்கு, இவளுடனான
வாழ்வு சுவாரசியமாகவே  இருக்கும் என்றே தோன்றியது.

Advertisement