Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 13
கதிர் இன்று பஞ்சாயத்துக்கு செல்ல வேண்டாமென சொல்லவும், சிறிது யோசித்த
மாறன்,  “இல்லப்பா அது சரிப்பட்டுவராது, அவன் நம்ம ஆளு,  நாமளே அவன்
சப்போர்ட்டுக்கு  போகலேன்னா அப்பறம் அது வேறமாதிரி பிரச்சனையை தான்
கொண்டுவரும், அதனால  நாம  போறதுதான் நல்லது..”  என்ற மாறனின் பேச்சில்
உள்ள நியாயம் புரியவே,
ஓஹ் சரிப்பா.. “அப்போ நானும் உங்களோட பஞ்சாயத்துக்கு  வரேன்..!!” என்று
மறுக்க வழியேயில்லாமல்  வம்படியாக தன்னுடன் வந்து கொண்டிருக்கும் மகனை
கண்ட மாறனுக்கு தலை வேதனையாக இருந்தது,
அவனோ அவரின் கவலையை கண்டுகொள்ளாமல் யார் யாருடனும் போனில் பேசிக்கொண்டே
வர,  “இன்னும் என்ன என்ன செய்ய காத்திருக்கிறானா..? எத்தனை
பஞ்சாயத்தோ..?” என்று கதிரின் நடவடிக்கையில் நொந்து போயி இருந்தார்
மனிதர்.
சுந்தரத்தை போலே அவராலும்  அவர்களின் திடீர் உறவை ஏற்றுக்கொள்ளமுடியாமல்
மனதில் புழுங்கி கொண்டு தான் இருந்தார், “ஒரு வருட பகையா..? இரு வருட
பகையா..?” இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் பகை,
இப்பொழுது வந்து திடீரென எல்லாவற்றையும் மாற்றும் மகனின் மீது கோபம்
பொங்கிய போதும், அவனின் அடாவடி குணம் பற்றி தெரிந்ததாலே எதுவும் கேட்க
முடியாமல், ஏன் கேட்டும் பயனில்லை..!! என்று நன்றாக தெரிந்ததால் கதிரின்
செயலை நினைத்து மனதில் போறும மட்டுமே முடிந்தது,
இதில்  சுந்தரத்திற்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் அவருக்கும்
உண்டு, அவர்களின் “சொந்த பந்தங்கள், பங்காளிகள், கட்சி ஆட்கள், இனஆட்கள்
என்று அவரை சுற்றி, அவருக்ககாவே இருக்கும் அத்தனை பேரும் இதை எப்படி
ஏற்று கொள்வார்கள்..? என்ன சொல்லி ஏற்று கொள்ள வைப்பது..?” அவர்கள் ஏற்று
கொள்வது இருக்கட்டும்,
“முதலில் தன்னாலே அந்த சுந்தரத்தின் மகளை மருமகளாக எப்படி  ஏற்று கொள்ள
முடியும்..?”  என்று இவ்வளவு மனபோராட்டங்களில் நொந்து போயிருந்த மனிதரை,
இன்னும் டென்சன் செய்வது போல் அவருடன் பஞ்சாயத்துக்காக வந்து
கொண்டிருந்தான் கதிர், “அங்கு வந்து என்ன செய்ய காத்திருக்கிறானா..?”
என்று மாறனிற்கு அதுவேறு மண்டையை உடைத்தது,
“ப்பா… இது.. இது இந்த பஞ்சாயத்து இப்போ எப்படி சரியா வரும்..?” என்று
கட்ட பஞ்சாயத்துக்காக சுந்தரத்துடன் காரில் சென்று கொண்டிருந்த அசோக்
தயக்கத்துடன் கேட்க, சுந்தரமோ மகனின் கேள்வி காதில் விழாதது போல்
அமைதியாகவே வந்தார்,
ஆனாலும் அசோக் விடாமல் இரண்டு மூன்று முறை கேட்கவே செய்தான், அப்படியும்
சுந்தரம் அமைதியாகவே வர, அதற்கு மேல் எப்படி கேட்பது என்று  தெரியாமல்
தானும் அமைதியாகி விட்டான்.
மாறனுடன் பஞ்சாயத்துக்காக வந்திருந்த கதிரை எதிர்பார்க்காத அசோக்,
கண்களில் கேள்வியாக அவனை பார்க்க, அவனோ “உன் கேள்விக்கு பதில் சொல்ல
முடியாது..” என்பது போல் கோவம் கலந்த  திமிராகத்தான் பார்த்தான், அவனின்
கோவத்தை புரிந்து கொண்ட அசோக்,
“நல்ல நேரம் பார்த்தான் இவன் என்கிட்ட கோவப்பட, நான் அவங்க கல்யாண
விஷயத்தை அப்பாகிட்ட சொல்லிட்டோம்ன்னு அவன்கிட்ட சொல்லிகூட  இத்தனை நாள்
ஆச்சு, அதை என்ன எதுன்னு சரிபண்ணாம, இங்க என்ன வேலைக்கு கட்ட
பஞ்சாயத்துக்கு வந்திருக்கான்”,
“அதுவும் எங்க அப்பா வருவார்ன்னு அவனுக்கு நல்லா தெரியாத்தானே செய்யும்,
அப்படி இருந்தும் இவனை யாரு இங்கவரச்சொன்னா..? பிரச்சனை ஏதாவது பெருசான
என்ன செய்ய..?” என்று எப்போதும் போல் அவனால் கதிரின் செயலை நினைத்து
பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது.
மாறனுடன் வந்த கதிரை பார்த்த சுந்தரத்திற்கு ஆத்திரம் கொப்பளித்தாலும்,
தன்னை கட்டுப்படுத்தி கொண்டு தன் ஆட்களுடன் பேச ஆரம்பித்துவிட, அவரின்
முகத்தையே பார்த்து கொண்டிருந்த மாறனுக்கும், கதிருக்கும் அவரின் கோவம்
புரியத்தான் செய்தது.
அதிலும் மாறனிற்கு சுந்தரத்தை பார்க்க.. பார்க்க  “இவன் எப்படி தனக்கு
உறவாக..!!”  என்று எண்ணும்போதே, மனம் ஒப்பாமல் போக வேகமாக முகத்தை
திருப்பி கொண்டார்,
தன் ஆட்களுடன் பேசிக்கொண்டிருந்த சுந்தரத்திற்கும் இதே யோசனை தான், “இந்த
மாறன் எப்படி தனக்கு சம்மந்தியாக..!!” என்று தோன்றும் போதே,மாறனை போல
அவராலும் ஏற்று கொள்ளமுடியாமல்  தான் போய்விட்டது.
எல்லோரும் வரவே பஞ்சாயத்து ஆரம்பிக்க, நட்ராஜ், முத்து இருவரும்  தங்கள்
தரப்பு நியாயத்தை சொல்ல, அடுத்து பிரச்னைக்குரிய இடத்தை பற்றி பேச
ஆரம்பித்ததும், மெதுவாக சண்டை வலுக்க ஆரம்பித்தது,
இவர்கள் ஆட்கள் பேச, அவர்கள் ஆட்கள் பேச என்று பிரச்சனை பெரிதானாலும்,
மாறனும் சரி, சுந்தரமும் சரி எதுவும் பேச தோணாமல், ஏன் பேச முடியாமல்
தான் அமர்ந்திருந்தனர்,
இருவராலுமே அவர்களின் திடீர் உறவை ஏற்று கொள்ள முடியாமல் போனாலும்,
தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அக்கறை இருந்ததால் அமைதியாகவே
இருந்தனர்,
அவர்கள் இருவரையும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த கதிரின் முகத்தில்
அவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட பாவனையில் குறுஞ்சிரிப்பு பிரகாசமாக
உதயமானது, அவன் எதிர்பார்த்தும் இதை தானே,  “இனி தன்னால் அஞ்சலியை
தன்னுடன் அழைத்து செல்ல முடியும்!!” என்ற நம்பிக்கை ஆணித்தரமாக
தோன்றியது,
இதுநாள் வரை வெளியே காண்பித்து கொள்ளாவிட்டாலும்  “எப்படி இவர்களை
சமாளிப்பது..?” என்ற கவலை, யோசனை அவனின் மனதிற்குள்ளும் இருக்கத்தான்
செய்தது, ஏனெனில் இவர்களின் பகை அப்படிப்பட்டது,
ஏன் இப்போதுமே சிலபல பிரச்சனைகள், தடங்கல்கள் வரத்தான் செய்யும், ஆனால்
எல்லாவற்றயும் தன்னால் சமாளிக்க முடியும்..!!  என்கிற நம்பிக்கை இந்த
நொடியில் கதிருக்கு பரிபூரணமாக உண்டானது.
அந்த மகிழ்ச்சி அவனின் முகத்தில் வெளிப்படையாக தெரிய, அசோக் தான் அவனின்
திடீர் மகிழ்ச்சிக்கான காரணம் தெரியாமல் அவனின் முகத்தையே பார்த்து
முழிக்க வேண்டியதாக இருந்தது.
இங்கு பஞ்சாயத்தில் முத்துவும் சரி, நட்ராஜும் சரி..
விட்டுக்கொடுக்காமல், ஏன் விட்டு கொடுக்க பிடிக்காமல் தங்களின் ஜென்ம
பகையை வளர்க்கும் விதமாகவே வீண் சண்டை போட்டு கொண்டிருக்க,
மாறனும், சுந்தரமும் “எப்படி இந்த பிரச்சனை பெரிதாகாமல் தடுப்பது..?”
என்ற யோசனையுடன் பார்த்து கொண்டிருக்கும் போது, அங்கு  வந்தனர், கதிர்
ஏற்பாடு செய்திருந்த இடம் அளக்கும் சர்வேயர் மற்றும் போலீஸ்,
அதற்கு பிறகென்ன அவர்கள் பிரச்னைக்குரிய இடத்தை அளந்து அவரவர்களுக்கு
உரிய இடத்தை பிரித்து கொடுத்து பிரச்சனையை முடிக்க பார்த்தனர்,
அப்படியும் இருதரப்பு ஆட்கள்  ஏற்றுகொள்ள முடியாது என வாதிட,
கதிர் மற்றும் அசோக்கின் தலைமையில்  பாதுகாப்பிற்கென உடன்வந்துருந்த
போலீஸ் அவர்களின் பாணியில் ஏற்றுக்கொள்ள வைக்கவும், “மாறன், சுந்தரதிற்கு
இடையே எப்போதும் ஏற்படும்,  வீண் சண்டையும், மனக்கசப்பும் இல்லமாலே
கதிரின் திட்டப்படி பஞ்சாயத்து வெற்றிகாரமாக முடிந்தது”.
அதில் “மாறனிற்கும், சுந்தரதிற்கும் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை,
இன்னும் சொல்லப்போனால் இந்த பிரச்சனை எந்தவிதமான சண்டையும் இல்லாமல்
சுமுகமாக உடனே முடிந்ததில்  கதிரின் செயலை நினைத்து நிம்மதியே அடைந்த
வண்ணம்” அவர்கள் இருவரும்  அங்கிருந்து கிளம்பும் போது,
தன்னையே குழப்பமாக பார்த்து கொண்டிருந்த அசோக்கை பார்த்து கதிர்
குறும்பாக கண்ணடித்து விட்டு தான் கிளம்பினான். அவனின் கண்ணடிப்பில்
அரண்டு போன அசோக்கிற்கு,
 “ஆத்தி.. இப்போ என்ன வில்லங்கமா செய்ய போறான்னு தெரியலையே..?” என்று
கிலியே பிடித்து விட்டது, அன்று முழுவதும் அதே கிலியுடன் சுற்றி
கொண்டிருந்த அசோக்கை ஏமாற்றாமல், மறுநாள் காலையிலே அவர்களின் வீட்டிற்கு
வந்து நின்றான் கதிர்.
கதிரை அவ்வளவு காலையிலே தங்கள் வீட்டில் எதிர்பார்க்காத மீனாட்சியும்,
லதாவும், அவனை வரவேற்ககூட  தோன்றாமல் ஒருவித பிரம்மையிலே
நின்றுவிட்டனர், அவர்களின் நிலையை புரிந்து மெலிதாக சிரித்த கதிர்,
கைகூப்பி மரியாதையுடன்  “வணக்கம்..”  வைக்க,
மாமியாரும், மருமகளும் பதிலுக்கு தன்னை போலவே கைகூப்பி வணக்கம் வைத்தனர்.
அவர்களின் பாவனையில் மேலும் சிரிப்பு வந்தபோதும் அடக்கி கொண்ட கதிர்,
மீனாட்சியிடம், அவர்களின் வட்டார மொழியிலே “தலைவரை பாக்கணும்..!!” என்று
சுந்தரத்தை கேட்கவும்,
“நீங்க.. நீங்க உட்காருங்க.. நான் கூப்பிடறேன்” என்றபடி கணவனை கூப்பிட
வேகமாகவே ஓடினார் மீனாட்சி, அவர் ஓடிவிடவும், தனித்து நின்ற லதாவிற்கு,
அன்று கோவிலில் அவனிடம் அஞ்சலிக்காக சண்டை போட்டது அசந்தர்பமாக ஞாபகம்
வர,
அன்று இருந்த தைரியம் “இன்று அவன் அஞ்சலியின் கணவன்” என்ற உரிமையில்
வந்து நிற்கும் போது காணாமல் போய்விட என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த
அவரும், ஸ்வேதாவின் குரல் கேட்கவும், இதுதான் சான்ஸ் என்று  வேகமாக தன்
ரூமை நோக்கி ஓடினார்.
அவரின் ஓட்டத்தில் சிறிது சத்தமாகவே சிரித்த கதிர், “இவங்களுக்கு போயா
இந்த சீனியர் அந்த பயம் பயப்படறார்..!!”  என்று அந்த சூழ்நிலையிலும்
அசோக்கை மனதில் கலாய்த்து கொண்டிருந்தான்,
அவர்கள் இருவரும் ஓடிவிட, “எங்க இவளை காணோம்..?”  என்று அஞ்சலியை வீட்டை
சுற்றி தேடிக்கொண்டிருக்கும் போது, அங்கு வேகமாக வந்தனர் சுந்தரம், அசோக்
இருவரும்.
இருவரின் முகத்திலும் அவனை இங்கு தங்களின் வீட்டில் எதிர்பார்க்காத
அதிர்ச்சி அப்பட்டமாகவே தெரிந்தது, அதிலும் சுந்தரம், “இதெல்லாம் உன்
வேலையா..?” என்று சற்று கோபத்துடன் திரும்பி மகனை முறைக்கவே செய்தார்,
அவரின் முறைப்பில், “எனக்கு இவன் இங்க வரபோறது  சத்தியமாவே தெரியாதுன்னு
சொன்னாலும் இவர் நம்பபோறதில்லை” என்று நொந்து கொண்டான் மகன்.
மகனை முறைத்த சுந்தரத்தின் கோவத்தை எதிர்பார்த்தே வந்திருந்ததே
வந்திருந்த கதிர்,  அதை கண்டுகொள்ள பாவனையில் பணிவாகவே கைகூப்பி
“வணக்கம்”  வைத்தவன், தொடர்ந்து “நான் உங்களோட கொஞ்சம் பேசணும்,
பேசலாமா..?” என்று அதே பணிவுடன் அனுமதியாகவே  கேட்டான்,
அவனின் பணிவில், “ம்ம் உட்காருங்க..” என்று சொன்னபடி தானும் அமர்ந்த
சுந்தரம், மனைவியை பார்க்க, அவர் வேகமாக சென்று காபி கொண்டு வந்து
மரியாதையுடன்  கதிரிடம் கொடுக்க, அவனும் எந்தவிதமான அலட்டலும் இல்லாமல்,
அமைதியாக எடுத்து குடிக்கவே செய்தான், அதிலே அவன் வந்ததின் நோக்கம்
ஓரளவிற்கு சுந்தரத்திற்கு பிடிபட்டது,
லதாவின் உபயத்தால் மேல்மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்துகொண்டிருந்த
அஞ்சலிக்கு பாதி மாடிப்படியிலே, தன் வீட்டு ஹாலில், தனக்கு எதிரே  உள்ள
சோபாவில்,  தன் தந்தையுடன் அமர்ந்திருந்த கதிரை நம்பாமலே பார்த்தவள் இது
“கனவோ..?” என்றே நினைத்தாள்.
கதிருக்கு நேர் எதிரே படிக்கட்டு இருந்ததால் அவனாலும்  அவளை நன்றாகவே
பார்க்கமுடிந்ததோடு அவளின்  எண்ணமும்  புரியதான் செய்தது, லதா சொல்லவும்
பெட்டிலிருந்து அப்படியே ஓடிவந்திருப்பாள் போல,
 தலை முடி எல்லாம் களைந்து, தூக்கம் இன்னும் கண்களில் மிச்சம் இருக்க,
நம்பாமல் தன்னை பார்த்து திகைத்து நின்று கொண்டிருந்தவளின் உடை மேல்
இருந்த தாலியை பார்த்ததுமே கதிரின் முகத்தில் முதலில் தோன்றியது மந்தகாச
சிரிப்பே..!!,
இளஞ்சிவப்பு நிற இரவு உடையின் மேல், அவன் அணிவித்திருந்த தாலி
பளிச்சென்று ஒய்யாரமாக தொங்கி அவனுக்கும் அவளுக்குமான உறவை  இந்த
உலகத்திற்கு பறைசாற்றி  கொண்டிருந்தது,

Advertisement