Advertisement

நெகிழியினியில்  நெஞ்சம் கொண்டேன் 11 2
அஞ்சலியை கதிர் தூக்கி சென்ற மறுநாள் காலையிலே அவளை அவன் கோவிலுக்கு தான்
அழைத்து சென்றான்,  “ஏன் கோவிலுக்கு..?” என்று புரியாமல் கேள்வியாக தன்னை
பார்த்த அஞ்சலியை, கையை பிடித்து இறக்கியவன், உள்ளே கூட்டி கொண்டு
சென்றான்.
உள்ளே கருவறைக்கு சென்றவன், அங்கிருந்த பூசாரியிடம் தன்
பாக்கெட்டிலிருந்த ஒரு பொட்டலத்தை எடுத்து கொடுக்க, அவரும் பயபக்தியுடன்
அதை வாங்கி, அம்மன் காலடியில் வைத்து பூஜை செய்து அவனிடம் நீட்டினார்,
அஞ்சலி..  “என்ன நடக்கிறது..?”  என்று குழப்பத்துடன் பார்த்து
கொண்டிருக்கும்  போதே, அந்த பொட்டலத்தை பிரித்து அதிலிருந்து தாலியை
வெளியே எடுத்தவன், நேரே அவளின் அருகில் வர, நடப்பதை புரிந்த கொண்டவுடன்,
மின்சாரம் தாக்கியது போல் அதிர்வுடன் நின்றாள் அஞ்சலி.
கை கால்கள் எல்லாம் நடுங்க, விழிவிரித்த கண்களில் இருந்து கண்ணீர் வந்து
கொண்டிருக்க தன்னையே நம்பாமல் பார்த்து கொண்டிருந்த அஞ்சலியை நெருங்கி
நின்றவன், அவளின் கண்களை பார்த்தவாறே,  மிக நிதானமாக தங்க தாலியை
அணிவித்தான், பூசாரி கொடுத்த பொட்டை அவளின் மாங்கல்யத்திலும், உச்சி
நெற்றிலும் வைத்து விட்டான்.
கதிர் தன்னை தூக்கி வந்ததில் அதீத மனவுளைச்சலில் இருந்த அஞ்சலிக்கு
நடப்பது எல்லாம் புரிந்தாலும், அவளால் அதற்கு எந்தவிதமான எதிர்வினையும்
ஆற்ற முடியாமல், சிலை போலவே நின்றாள். அவளின் நிலைய நன்றாக புரிந்து
கொண்ட கதிர், அவளின் கையை தன் கையோடு மிக இறுக்கமாக கோர்க்கவும்,
குனிந்து,  இணைந்திருந்த இரு கைகளையும், தன் நெஞ்சின் மீது தொங்கும்
மாங்கல்யத்தையும் பிரமிப்போடு பார்த்தவள்,  “தன் கனவு நினைவாக” தன் கையை
கோர்த்தபடி சன்னதியை விட்டு வெளியே வரும் கதிரையே ஒருவித
நம்பாதன்மையோடு தான் பார்த்தாள் அஞ்சலி.. “அஞ்சலி கதிர் ஆனந்த்”.
அப்போது அங்கு வேகமாக வந்த அசோக், எடுத்த எடுப்பிலே கதிரை அடித்து விட,
அவனின் அடியில் கதிரின் முகம் சிவக்க, உடலும்  இறுகுவதை அவனின்
தொடுகையில் உணர்ந்து கொண்ட அஞ்சலி அவனையும், தன் அண்னனையும்  பயத்துடன்
பார்த்தாள்.
அசோக் ஓர் அடியோடு நிறுத்தாமல் திரும்ப, திரும்ப அடிக்க, பதறி போன
அஞ்சலி, தன் அண்ணனின் கையை பிடித்தவாறே, “விடுங்கண்ணா, அவரை
அடிக்காதீங்க, விடுங்க” என கெஞ்ச,
அப்போதுதான் அவளை திரும்பி பார்த்த அசோக்கின் கண்களுக்கு அவளின்
கழுத்தில் தொங்கும் மாங்கல்யமும், நெற்றியில் உள்ள பொட்டும் தெரிந்தது,
புரிந்தவுடன் அவனும் சில நிமிடம் அஞ்சலியை போல் சிலை போலவே நின்றவன்,
பின் பாய்ந்து சென்று மறுபடியும் கதிரை அடிக்கவே செய்தான்,
“ஏண்டா.. ஏன் ஏன் இப்படி செய்த..? உனக்கு தெரியுமில்லை நம்ம பகை,  என்ன
தைரியத்துல இப்படி செஞ்ச..?” என்று கத்திகொண்டே அடிக்க, சில அடிகள்
அமைதியாக வாங்கி கொண்ட கதிர், பின் அசோக்கின் கையை பிடித்து
தடுத்துவிட்டான்.
அதில் இன்னும் ஆங்காரம் கொண்ட அசோக், பலத்துடன் அவனின் கையை உதற பார்க்க,
அவனால் கதிரின் கையை அசைக்க கூட முடியவில்லை, “நான் சொல்றதை கொஞ்சம்
பொறுமையா கேளுங்க..” என்று கதிர் மிக நிதானமாக சொல்லவும், அவனின்
நிதானத்தில் மேலும் கோவம் கொண்ட அசோக்,
“என்ன நீ சொல்றதை நான் கேக்கணும்..? சொல்லு என்ன கேக்கணும்..? அதான்
எல்லாம் முடிச்சிட்டியே..?” என்று கத்த, அப்போதும் கதிர் மிக பொறுமையாக
மறுபடியும்,
“நான் என்ன சொல்லவரேன்னு  கேளுங்க..” என்று கதிர் சொல்ல வருவதை கூட
கேட்காமல் அசோக் தொடர்ந்து கத்திய போதும்,  தன் நிதானத்தை இழக்காத கதிர்,
பொறுமையாகத்தான் பேசினான்,  ஆனாலும் அசோக் கதிரின் பேச்சை கேட்க
விரும்பாமல்,
“நான் நேத்து நீ அஞ்சலியை தூக்கிட்டு போகும்போதே எவ்வளவு சொன்னேன்,
கெஞ்சினேன், ஆனா நீ எதையும் கேட்காம, என் தங்கச்சியை தூக்கிட்டு போனதும்
இல்லாம, இப்போ தாலியை வேற கட்டியிருக்க”, என்று அண்ணனாக கொதிக்கவே
செய்தான் அசோக்,
அவனின்  கோவம் நியாயம் என்பதால் பொறுமையாக இருந்த கதிர், தன் பக்க
காரணத்தை சொல்ல முயற்சி செய்ய, அதை கேட்க விரும்பாமல் அசோக் தொடர்ந்து
கத்தவே செய்தான்,
அஞ்சலியும்,  தன் அண்ணனை  சமாதான படுத்த எவ்வளவு  முயன்றாலும், அடங்காத
அசோக் கத்த.. கத்த கதிரின் முகம் வெளிப்படுத்தும் கோவத்தையும் புரிந்து
கொண்டு  என்ன செய்வதென்று தெரியாமல், பயத்துடன்  இருவரையும் பார்த்தவாறே
நின்றாள்.
“நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க”, என்று பொறுமையிழந்த கதிரும் சத்தமாகவே
கத்த, பிரச்சனை இன்னும் பெரிதாகி போனது, அசோக் பேச, பதிலுக்கு கதிர் பேச,
அஞ்சலிதான் அவர்களின் பேச்சு புரிந்தும் புரியாமலும் நின்றாள்.
இறுதியில்,
“உனக்கு நடந்ததுக்கு  என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டி எங்களை எல்லாம்
பழிவாங்கிட்ட இல்லை”, என்று அசோக், “கதிரின் உண்மை காரணம்..?”  தெரியாமல்
குற்றம் சொல்லவும், ஏற்கனவே தன் பேச்சை கேட்காமல் பகையாளி போல் சண்டை
போடும் அசோக்கின் மேல் கோவத்தில் இருந்த கதிர்,
“ஆமா.. உங்களை எல்லாம் பழிவாங்கத்தான் இவ கழுத்துல தாலி கட்டினேன்..
இல்லாட்டி இவ கழுத்துல நான் ஏன் தாலி கட்டப்போறேன்” என்று  தானும்
பதிலுக்கு கத்தினான் கதிர்,
கதிரின் பேச்சில் தன் காதலுக்கு கிடைத்த அங்கீகாரத்தில்,  பரிசில்
எல்லாம் முடிந்தது போல் உள்ளம் நொறுங்க நின்றிருந்தாள்  அஞ்சலி, அவளின்
துயரத்தை புரிந்து கொள்ளாத  கதிரும், அசோக்கும் மேலும் தொடர்ந்து
சண்டையிட, ஏற்கனவே மிகவும் பொறுமை குறைவாகவே உள்ள கதிர், முற்றிலும் தன்
கட்டுப்பாடை இழந்து,
“நான்  பழிவாங்கதான் இவ கழுத்துல தாலி கட்டினேன்ன்னு சொல்லிட்டேன் இல்லை,
போங்க உங்களால முடிஞ்சதை செஞ்சுக்கோங்க..?” என்று அசோக்கிடம் சவால்
விட்டபடி, கிளம்புவதற்காக அஞ்சலியின் கையை பிடிக்க, பட்டென அவனின் கையை
உதறினாள் அஞ்சலி.
அதில் இருவருமே  அவளை  கேள்வியாக பார்க்க, அவளோ கோபுர மேட்டை வெறித்தபடி
நின்றிருந்தாள். கதிர்  மறுபடியும் அவளின் கையை பிடிக்க பார்க்க,
அப்போதும் கோபுர மேட்டையே வெறித்தபடி கதிரின் பக்கம் திரும்பாமல் தன்
கையை தூக்கி நில் என்பது போல் காட்டியவள், உள்ளே வெடித்து சிதறும் தன்
இதயத்தின் ரத்த துளிகளை வெளியே காட்டாமல், உறுதியுடன்
 “எங்களை பழிவாங்கதானே நீங்க தாலியை கட்டினீங்க, அதுதான் முடிஞ்சிடுச்சி
இல்லை.  இனி நான் உங்க கூட வரனும்ன்னு எந்த அவசியமும் இல்லை” என, கதிர்
அவள் சொல்லவருவதை புரிந்து கொண்டு அவளையே  உறுத்து விழிக்க, அவனின்
பார்வை புரிந்தாலும், அவன் புறம் திரும்பாமல்,
 அவங்களை பழிவாங்கதான் என் கழுத்துல நீங்க தாலி கட்டி இருக்கீங்க, “இது
ஒரு பொண்ணா எனக்கு எவ்வளவு பெரிய அவமானம், அசிங்கம் தெரியுமா..? உங்க
பகையை, சண்டையை உங்களோடதான் நீங்க  முடிச்சிருக்கணும், அதைவிட்டு இப்படி
ஒரு பொண்ணை தூக்கி, யாருக்கும் தெரியாம இப்படி தாலி கட்டி..” என்று
வெறுப்பிடன் சொன்னவள், அந்த கோபுர மேட்டை தான் பார்த்து கொண்டிருந்தாள்,
அவளின் கேள்வியில் கொதித்தெழுந்த கதிர், “நான் என்ன சொல்ல வரேன்னு கூட
கேட்காம அண்ணனும் தங்கச்சியும்  இப்படி  உங்க இஷ்டத்துக்கு பேசி என்னை
டென்க்ஷன் பண்ணாதீங்க, முதல்ல நான் என்ன சொல்ல வரேன்னு” என்று கதிர்
ஆரம்பிக்க,
அசோக்கை போல் அஞ்சலியும் கோவம், தன் காதல் தோல்வி கண்ணை மறைக்க, அவன்
சொன்னதை கூட முழுதாக காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னுள்ளே உழன்றவள்,
“பழிவாங்கன்னு ஆரம்பிச்ச இந்த உறவே எனக்கு  வேண்டாம்,  இப்போ மட்டும்
இல்லை  எப்பவுமே வேண்டாம், இதோட எல்லாம் முடிஞ்சது ” என்று மிக மிக
உறுதியுடன் சொன்னாள்.
அஞ்சலி சொன்னதை கேட்டவுடன், அவளிடம் இத்தகைய பேச்சை எதிர்பார்க்காத
கதிர்.  தான் எவ்வாறு உணர்கிறோம் என்றுகூட புரியாமல் அவளை வெறித்து,
வெறுத்து போய்தான் பார்த்தான்.
சிலநிமிடம் அங்கே மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய, அசோக்குமே அஞ்சலியின்
பேச்சில் தன் கோவத்தை, சண்டையை மறந்து அவளை புரியாமல் தான் பார்த்தான்.
கதிர் மீதான அவளின் தீவிர காதல் தெரிந்த அசோக்கிற்கு  அவளின் முடிவான
பேச்சு  ஆச்சரியத்தை தான் கொடுத்தது,
“இப்போ நீ பேசினத்துக்கு என்ன அர்த்தம்ன்னு தெரிஞ்சுதான் பேசுறியா..?
இந்த உறவு உனக்கு வேண்டாமா..?” என்று கதிர் மிக அழுத்தத்துடன் அஞ்சலியை
பார்த்து கேட்டான், அவனின் குரலில் உள்ள அழுத்தம் அஞ்சலிக்கு நன்றாகவே
புரிந்தாலும், அவளால் கதிரின் செயலை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை,
அதனாலே “ஆமாம்..”  என்று மறுபடியும் உறுதியுடன் முடித்துவிட்டாள். அவனை
நான் உயிருக்கு உயிராக காதலித்து தினம் தினம் மருகி கொண்டிருக்க, அவனோ
தன் குடும்பத்தை  பழிவாங்க
“தன்னை.!! தன் காதலை..!! அவன் காப்பாற்ற வேண்டிய அவளின் பெண்மையை,
மரியாதையை அவனே அழித்திருக்கிறான்..!!, என்று கதிரின் பக்கம் உள்ள காரணம்
தெரியாமல், கோவத்தில், ஏமாற்றத்தில் தன்னோடு சேர்த்து கதிரையும்
தண்டித்து கொண்டிருந்தாள்.
இயல்பாகவே மிகவும் திமிர் உள்ள ரோஷக்காரனான கதிரால், அதற்கு மேலும்
அஞ்சலியிடம்  இறங்கி பேச மனம் வரவில்லை, அப்படியே பேசினாலும் அவள்
ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதும் கதிருக்கு நன்றாகவே
புரிந்ததால் அவளின் அவசரத்தில் அவள் மேல் மிகப்பெரிய கோவத்தோடு,
ஆற்றாமையும் உண்டானது.
இவை எல்லாவற்றையும் விட, அஞ்சலியின் பேச்சில்  கதிரை மிகவும் பாதித்தது,
“அவன் பழிவாங்க தான் அவளை தூக்கி வந்து அவளின் கழுத்தில் தாலி
கட்டியிருக்கிறான்” என்ற அவளின் உறுதியான நம்பிக்கை, கதிருக்கு கிடைத்த
மிகப்பெரிய தோல்வியே..??
அதனாலே.. “சரி உனக்கு இந்த பந்தம் வேண்டாம்ன்னா என்ன செய்ய..?
உன்னிஷ்டம்” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட, அவனின் ஒப்புதலிலும்
அஞ்சலிக்கு மனம் வலிக்கத்தான் செய்தது,
“இதுதானே காதல்..!!
வேண்டும் என்றால் வேண்டாம் என்பதும்..!!
வேண்டாம் என்றால் வேண்டும் என்பதும் தானே காதல்..!!
அசோக் அப்போதும் தங்கையின் வாழ்விற்காக கதிர் மேல் இருக்கும் தன் கோவத்தை
ஒதுக்கிவைத்து விட்டு, தங்கையிடம் பேசவே செய்தான்,
“வேண்டாம் அஞ்சலி, நீ அவசரபட்றியோன்னு தோணுது, கல்யாணம்ங்கிறது ரொம்ப
பெரிய விஷயம்.  அதை  இப்படி எடுத்தோம் கவுத்தோம்ன்னு  நீ மட்டுமே முடிவு
எடுக்க முடியாது,  கொஞ்சம் பொறுமையா இரு என்னன்னு பேசலாம்..”  என்று
“இதற்கு என்ன செய்ய முடியும்..?” என்று யோசிக்கவே செய்தான்.
ஆனால் அஞ்சலியை பொறுத்தவரை  “இதில் பேச ஒன்றுமே இல்லை, ஏனெனில் கதிர்
பழிவாங்க மட்டுமே அவளுக்கு தாலி கட்டியிருக்க முடியும், அதைத்தவிர்த்து
அவனிடம் வேற எந்த காரணமும் இருக்க வாய்ப்பே இல்லை..!!”  என்பதை அவள் மிக
மிக உறுதியாகவே நம்பினாள்,
அதனாலே அசோக் சொல்வதையும், கதிர் சொல்ல வருவதையும் கேட்க விரும்பாமல்
கதிரை விட்டு விலகும் முடிவில் உறுதியாக நின்றுவிட்டாள்.  “எனக்கு இப்படி
ஒரு கல்யாணம் நடந்தது யாருக்குமே தெரியாமலே போகட்டும், நீங்களும்
சொல்லமாட்டேங்கன்னு நம்புறேன்..”  என்று கதிரிடம் சொன்னவள் அவள் முடிவில்
அடமாகவே நின்றுவிட்டாள்,
அப்போதும் கதிர் மனம் கேட்காமல் இறுதி முறையாக பேசவே செய்தான், “இப்போ
நாம மறுபடியும் ஊருக்குள்ள போன நிறைய பேச்சு வரும், இன்னும் புதுசா நிறைய
பிரச்சனைகள், பஞ்சயாத்து எல்லாம் வரும்”, என்று எச்சரிக்கவே செய்தான்.
ஆனாலும் அஞ்சலி எதற்கும் அசையாமல் நிற்கவே அவனே மறுபடியும் அவளின்
வீட்டிற்கு கொண்டுவந்து  விட்டான்,
அன்று விடும்போது அவன் சொன்ன பழிவாங்கும் வார்த்தையில், அஞ்சலியின்
முடிவு இன்னும் உறுதியானது, அதனாலே அன்று அவனிடம், “இதுக்கு நீங்க என்னை
கொன்னே போட்டிருக்கலாம்..” என்று வெறுப்பாக சொன்னாள், கதிரும் அவளின்
பேச்சில், பிடிவாதத்தில், உண்டான கோவத்தாலே “தேவைப்பட்டா அதையும்
செய்வேண்டி..” என்று  சொன்னான்.
“கதிர் தான் அஞ்சலியின் கணவன்..” என்பதை அஞ்சலி உறுதி செய்துவிட்டாள்,
அதோடு அஞ்சலி கதிர் தூக்கி சென்ற மறுநாள் கோவிலில் வைத்து  தாலி
கட்டிவிட்டார்  என்றும்,   தான்..  தான் அவரை வேண்டாம் என்று பிரிந்து
வந்து விட்டதாகவும் சுருக்கமாக முடிந்துவிட்டாள்
லட்சுமி அம்மாள் தாலியில்  இரண்டும் அன்னப்பறவை  சேர்ந்து இருப்பது போல்
ஒரு அழகான கற்கள் பதிந்த முகப்பு இருக்கும்,  அதனாலே மீனாட்சியால்
சுலபமாக கண்டு பிடிக்க முடிந்தது,
 அஞ்சலி சொல்லிமுடிக்கவும்,  நடந்து முடிந்த மிகப்பெரிய, மாற்றவே முடியாத
செயலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் வீட்டில் உள்ள அனைவருமே நின்றனர்,
இனி என்ன..? என்று அனைவரும் சுந்தரத்தையே தான் பயத்துடன் பார்த்தனர்.

Advertisement