Advertisement

நெகிழினியில் நெஞ்சம்  கொண்டேன்

 

“கந்தா..  இந்த டைம்க்கு தான் அந்த புள்ள வரும்முன்னு  உனக்கு நல்லா தெரியுமா..?”

 “அண்ணே.. என்னன்னா இப்படி கேட்டுடீங்க, அந்த புள்ள வர டைம் தான் இது,எனக்கு கன்பார்மா தெரியும்..”
 “இல்லண்ணா..  எனக்கு எதோ சந்தேகமாவே இருக்கு..? அந்த புள்ள ஸ்கூல்
முடிஞ்சி சாயந்திரமே போயிருக்கும், இவன் என்னடான்னா இப்போ தான்
வரும்கிறான்” என்று  அக்கூட்டத்தின் தலைவன் போல் இருந்த சங்கரிடம்
மற்றொருவன் சந்தேகமாக சொல்ல,
“கந்தா..” என்று  சங்கர்  கோவமாக இழுக்க,
“அண்ணே..  என்னை நம்புங்கண்ணனே, அந்த புள்ள வர டைம் தான் இது, அந்த புள்ள
இப்போ பன்னிரண்டாம்  வகுப்பு படிக்குது இல்லை, அதான் டியூஷன்
முடிச்சிட்டு  தினமும்  இந்த டைம்க்கு தான் வீட்டுக்கு போகும்.  நான் ஒரு
வாரமா பல்லோவ் பண்ணிட்டு தான்  உங்ககிட்ட சொன்னேன்..” என்று பயத்துடன்
சொல்லி கொண்டிருந்த கந்தன், தூரத்தில் தெரிந்த காரின் ஹெட் லைட்
வெளிச்சத்தில் பரபரப்பாகி..
“அண்ணே..  அதோ  கார் வந்திடுச்சே..” என சொல்லவும், தங்களின் திட்டத்தை
மறுபடியும் வேகமாக சொல்ல ஆரம்பித்தான் சங்கர்…
“டேய்..  நான் சொன்னது எல்லாம்  ஞாபகம் இருக்கட்டும், அந்த தங்கதுரை
பயங்கர பலசாலி தெரியுமில்ல,  அவனை மட்டும் நீங்க விடாம புடிச்சிகிட்டா
போதும்,   மத்தது எல்லாம் நான் பாத்துக்கிறேன், இன்னிக்கு அந்த சுந்தரம்
குடும்பத்தை கதறவிடுறோம், எல்லாம் ரெடியா இருங்கடா..”  என்று சொன்னவன்,
கார் அந்த ஒத்தயடி பாதையின் அருகில் வரவும், புதருக்குள்
மறைத்திருந்தவர்கள் வேகமாக முன்னும் பின்னும் பாய்ந்து அந்த காரை மடக்கி
நிறுத்தியும் விட்டனர்,
காருக்குள் இருந்த தங்கதுரையோ, இதை முற்றிலும் எதிர்பார்க்காமல் ஒரு நொடி
திகைத்தாலும், அடுத்த நொடி வேகமாக திரும்பி பின் சீட்டில்
அமர்ந்திருந்தவளிடம்,
 “அஞ்சலிம்மா.. நம்மளை சுத்து போட்டுட்டாங்க,  எக்காரணத்தை கொண்டும்
நீங்க காரை விட்டு மட்டும்  இறங்கக்கூடாது”, என அவசரமாக சொல்லி கொண்டே,
போன் செய்து  அவசரமாக செய்தி சொல்லியவன் இறங்க பார்க்க, திடீரென நடந்து
விட்ட சம்பவத்தில் பயந்து போய் அமர்ந்திருந்த “அஞ்சலி”  தங்கதுரை
இறங்கவும் மேலும் பயந்தவள்,
“அய்யோ அண்ணா..  நீங்க எங்க இறங்கிறீங்க..?  நிறைய பேர் இருக்காங்க போல,
வேண்டாம்ண்ணா  இறங்காதீங்க..” என்று பயத்துடன் அந்த இளஞ்சிட்டு கெஞ்ச,
“அஞ்சலிம்மா..  எனக்கு ஒண்ணும் ஆகாது,  நீங்க தைரியமா இருங்க,  நான்
சொன்னது மட்டும் ஞாபகமிருக்கட்டும்,  எது நடந்தாலும் காரை விட்டு மட்டும்
இறங்கிடாதீங்க.  நான் இறங்குனவுடனே உள்ளே இருக்கிற காரோட மெயின் லாக்கை
மட்டும்  உடனே போட்டுடுங்க..”  என்று நாலாபுறமும் காரின் கதவை வெளியே
சத்தமாக உடையும் அளவு   தட்டி கொண்டிருந்தவர்களை பார்த்து வேகமாக
சொன்னவன்,
தன் முழு பலத்தையும் உபயோகப்படுத்தி தன் பக்கம் இருக்கும் கதவை வேகமாக
திறக்கவும்,  அங்கு தட்டி கொண்டிருந்த மூவரும் பத்தடி தள்ளி போய் விழுக,
வேகமாக இறங்கிய தங்கதுரை  நொடியில் காரை கதவை சாத்தவும், அஞ்சலியும்
உடனடியாக மெயின் லாக் செய்துவிட்டு கண்களில் கண்ணீர் வர
அமர்ந்திருந்தாள்.
“என்ன சங்கர்..?  என்ன செய்றன்னு தெரிஞ்சிதான் செய்றியா..?”   என்று
தங்கதுரை அங்கிருந்த சங்கரை அடையாளம் கண்டுகொண்டு கோபத்துடன் கேட்க,
“எல்லாம் தெரிஞ்சுதான் செய்றோம்,  முடிஞ்சா  உங்க சின்னம்மாவை
இங்கிருந்து கூட்டுட்டு போயிடு பாக்கலாம்,  உங்க அய்யாவுக்கு எவ்வளவு
தைரியம் இருந்தா எங்க அய்யாவை பத்தி மீட்டிங்கில் தப்பு தப்பா பேசுவாரு,
இன்னிக்கு அவர் பொண்ணை தூக்கிட்டு போய் உங்க அய்யாவை கதறவிடறோம் பாரு..”
என்று சவால்விட,
“நீ செய்யப்போற வேலை முதல்ல உங்க அய்யாவுக்கு தெரியுமா..?”  என்று தன்
ஆட்கள் வரும் வரை பேச்சை வளர்க்க நக்கலாக இழுத்தான், அவன் கேட்டவுடனே
சங்கருக்கு மட்டுமல்ல சுற்றிருந்த பத்து பேருக்குமே பயத்தில் வேர்த்து
கொட்டியது,
ஏனெனில்   இவர்கள் செய்ய போகும் செயல் தெரிந்தால் “அவர்களுடைய அய்யாவே
இவர்களை தீர்த்து கட்டிவிடுவார்”  என்று நன்றாக தெரிந்தாலும்,
“எங்க
அய்யாவுக்காக நாங்க என்னவேனாலும்  செய்வோம்.. அதுல எங்க உயிரே போனாலும்
பரவாயில்லை..” என்று பழி வெறுப்புடன் சொன்ன சங்கர்,
“டேய்.. அவனை பிடிங்கடா, அவன் பேச்சுக்கொடுத்து நேரத்தை கடத்த
பாக்கிறான்”,  என்று தன் ஆட்களிடம் கத்த, அவரக்ளும்  கும்பலாய் பாய்ந்து
அவனை பிடிக்க, கொஞ்சம் கூட அசராமல்  வலுவாக எதிர்த்த தங்கதுரையின்
தலையில் கட்டையை கொண்டு பின்னால் இருவர் அடிக்கவும்,
அதில் சிறிது சிறிதாக பலவீனமடைந்த தங்கதுரையை சுலபமாக நால்வர்
பற்றிக்கொள்ள,  வெற்றி சிரிப்பு சிரித்த சங்கர், காரில் கண்ணீர் வழிய
பயந்து போய் அமர்ந்திருந்த அஞ்சலியை இறங்க சொல்லி  நாலாபுறமும் விடாமல்
தட்ட தொடங்கினான்,
அவள் திறக்காமல் இருக்க, காரின் கண்ணாடியை தங்கள் கையில் இருக்கும்
கட்டையால் அடித்து உடைக்கும் பொழுது, அவர்களுக்கு எதிர்புறமிருந்து கேட்ட
புல்லட்டின் சத்தத்தில்,  அதுவரை  எகிறிக்கொண்டிருந்த சங்கரின்
கூட்டத்தார் நடுநடுங்கி போயினர்,
“அண்ணே.. அண்ணே..  இது இது நம்ம சின்னைய்யா.. சின்னய்யா வண்டி சத்தம்”
என்று பயத்தில் தொண்டை வரள கந்தன் சொல்லவும், எல்லோரும் அடுத்து செய்வது
அறியாமல் திகைத்து நிற்கும் போதே, அந்த ஒத்தையடி பாதையை அடைந்து விட்டது
அந்த புல்லட்.
காரினுள் நடுங்கி கொண்டுருந்த அஞ்சலி வண்டி சத்தத்தில் “தங்களை காக்க
உதவி கிடைத்து விட்டது”  என்று மெலிதான சந்தோஷத்தில்,  தங்களின் காரின்
வெளிச்சத்தில் தெரிந்த அந்த புல்லட் வண்டியில் வந்தவனை பார்த்தவள் மேலும்
நடுங்கவே செய்தாள்,
“அய்யோ.. இது இவங்க முதலாளியாச்சே..” என்று  இன்னும் பயப்பட, புல்லட்டில்
வந்தவனோ வண்டியை நிறுத்தி விட்டு இறங்காமல் காலை தரையில் வலுவாக ஊன்றி,
தன் கையை கட்டிக்கொண்டு கூர்மையாக நடந்து கொண்டிருக்கும் சம்பவத்தை
நொடியில் அலசி ஆராய்ந்தவன், அங்கிருந்த கந்தனை தீவிரமாக பார்க்க, அவனோ
நடுங்கி கொண்டே  புல்லட் வண்டிக்காரனிடம் சென்றவன்,
“சின்னய்யா.. சின்னய்யா..” என்று பயத்தில் எச்சில்விழுங்கி கொண்டு திக்க,
அவன் அருகில் வர வர தன் இரும்பு கையை   ஓங்கி இடியென அவன் கன்னத்தில்
மாறி மாறி இறக்கியவன், தன் காலை தூக்கி  ஆக்ரோஷமாக உதைக்க கந்தன் பறந்து
சென்று விழுகவும், மற்றவர்கள் அவன் கண்களில் தெரிந்த ஆக்ரோஷத்தில் இருந்த
இடத்தை விட்டு பத்தடி பின் சென்று நின்றனர்.
அதுவரை நம்பிக்கையில்லாமல் பார்த்து கொண்டிருந்த அஞ்சலி அவனின் செயலில்
நம்ப முடியாமல் அவனையே திறந்த வாய் மூடாமல்  ஆச்சரியமாக பார்த்தாள்.
அவன்   “கதிர்.. கதிர் ஆனந்த்..”  தங்களை தாக்க வந்த கூட்டத்தின் சின்ன
எஜமான். அதுவரை தங்களின் எதிரியாக பார்த்திருந்தவனை இன்று முதன் முதலாக
ஆச்சரியமாக.. அதிசயமாக பார்த்தாள் அஞ்சலி.
“வேலூர் அருகே உள்ள காவேரிப்பட்டினம்..”  அங்கு மிகவும் பிரபலமானது
“மாறனும்.. சுந்தரனும் தான்..”  இருவருமே  “தமிழ் நாட்டின் இரு வேறு
முக்கிய கட்சியின் MLAக்கள்..  வேறு வேறு இனம்.. வேறு வேறு குணம்..”
 ஆனால்..  இருவருக்குமே ஒரே “ஒற்றுமை பதவி.. அதிகார மோகம்..” அதோடு
இருவருமே பரம்பரை பணக்காரர்கள். அதனாலே இருவருக்குமே பணத்தை அடுத்து
பதவி, அதிகார மோகம் பிடித்து ஆட்டுவித்தது.
“மாறனின் மனைவி லக்ஷ்மி அம்மாள்.. அவர்களுக்கு  நான்கு பிள்ளைகள். மூன்று
ஆண்.. ஒரு பெண்”, அதில்  கடைக்குட்டி சிங்கம் தான்
 “நம் நாயகன்   கதிர் ஆனந்த்..”
“சுந்தரனின் மனைவி மீனாட்சி.. அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்”, மூத்தவன்
அசோக்.. இளையவள்
“நம் நாயகி   அஞ்சலி..”
கதிர்  அடுத்து  சங்கரை தீயாக வெறிக்க,  “அது.. அது..  சின்னய்யா.. அந்த
அய்யா  கூட்டத்துல  நம்ம அய்யாவை ரொம்ப மரியாதையில்லாம பேசிபுட்டாரு,
அதான் கொஞ்சம் பயங்காட்டலாமான்னு..”
“ஓஹ்..  பயங்காட்டிறீங்களோ..? யாரை அந்த ஸ்கூல் போற பிள்ளையைவா..?”
என்று நக்கலாக சொன்னவன்,
“நீங்க செய்றது எங்களுக்கு தான் அசிங்கம், நாம எந்த காலத்துல
பொண்ணுங்களை நம்ம பிரச்னையில இழுத்திருக்கோம்,  அதுவும் ஸ்கூல் போற
பிள்ளையை,  நீங்க எல்லாம் தைரியமான மீசை வச்ச ஆம்பிளையா இருந்தா அவங்க
வீட்டு  ஆம்பிளைங்க கிட்ட தான் உங்க வீரத்தை காண்பிச்சிருக்கணும்”,
அதை விட்டு..  “ச்சீ.. போயும் போயும் சின்ன  பிள்ளையை வச்சி உங்க வீரத்தை
காட்டறீங்க..”  என்று வெறுப்பாக சொன்னவன், தூரத்தில் வேகமாக வரும்
கார்களின் ஓசையை  கேட்டு,
“இதோ வந்துட்டாங்க இல்லை உங்க மாமன்ங்க,  அவங்ககிட்ட உங்க வீரத்தை
எல்லாம் காட்டுங்க”, என்று சொன்னவன், அசையாமல் அங்கேயே  நின்றான்,
வேகமாக புழுதி பறக்க அடுத்து அடுத்த வந்த  நான்கு கார்களில் இருந்து
வேகமாக கைகளில் பொருட்களுடன் இறங்கியவர்கள், அங்கு நின்றுயிருந்த கதிரை
கண்டவுடன் அப்படியே நிற்க, முன்னாள் வந்த “அசோக்”  அவனை உறுத்து பார்க்க,
கதிரோ அலட்சியமாக தோள்களை குலுக்கியவாறு,  “எங்களுக்கும் இதுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை,  நீங்க  இவங்களை என்ன செய்ய நினைக்கிறீங்களா..?
செஞ்சிக்கலாம்”  என்று சொன்னான்.
“இதுதான் கதிர்.. தவறு யார் மீது இருந்தாலும் உண்மையாக.. நேர்மையாக
யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக குரல் கொடுப்பவன்”.
அதுவரை காரிலே அமர்ந்து அவனின் செயல்களையே அதிசயமாக  பார்த்து
கொண்டிருந்த அஞ்சலி,  தன் அண்ணனை கண்டவுடன் வேகமாக இறங்கி   அவனிடம்
ஓடவும், ஆதரவாக அவளை அணைத்து கொண்ட அசோக்,
“ஷ் ஷ்..  பயப்படாத அஞ்சலி,  ஒன்னும் இல்ல பாரு,  அதான் நாங்க எல்லாம்
வந்துட்டோம் இல்லை”  என்று சமாதானம் சொன்னவன், தன் ஆட்களை தீவிரமாக
பார்த்த அடுத்த நொடி அனைவரும் கதிரின் ஆட்களை துவைத்து எடுத்து விட்டனர்,
கதிரோ  எதையும் கண்டு கொள்ளாமல் தன் மொபைலையே  பார்த்து கொண்டிருக்க
அஞ்சலி தான்,  அவனின் செயலை நம்ப முடியாமல் அதிசயமாக அவனையே பார்த்து
கொண்டிருந்தாள்.

 

அசோக்கின் ஆட்கள் போதும்..  போதும்..  என்கிற அளவு அடித்து வெளுத்து விட,
கதிரின் ஏற்பாட்டில் வந்த ஆம்புலன்ஸ் அடி வாங்கிய தன் ஆட்களை ஏற்றி
கொண்டு பறந்தது. அதுவரை வண்டியிலே அமர்ந்திருந்த கதிர் கிளம்புமுன்,
“இந்த பிரச்சனை இதோட முடிஞ்சது,  அவங்க செய்ய நினைச்சதுக்கு நீங்களும்
பதிலுக்கு நல்லாவே செஞ்சிட்டிங்க.  சோ.. இது இதோட முடிஞ்சது..
பதிலுக்குன்னு எதுவும்  தொடர கூடாது..”   என்று மிக மிக அழுத்தமாக
உறுதியாக அசோக்கை பார்த்து சொன்னவன், தன் ஆட்களை பார்க்க ஆம்புலன்ஸின்
பின் சென்றான்.

ஐந்து வருடங்களுக்கு பிறகு,

“அஞ்சலிம்மா நல்லா இருக்கீங்களா..?”  என்று ரயிலில் வந்திறங்கிய
அஞ்சலியிடம் தங்கதுரை பாசமாக வினவ,

“ம்ம்..  நல்லா இருக்கேண்ணா,  நீங்க எப்படி இருக்கீங்க..? வீட்ல அண்ணி
பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க..?”   என்று கண்களுக்கு எட்டா
சிரிப்புடன் சோர்வாக கேட்க,
“எல்லாரும் நல்லா இருக்கோம்மா..?”  என்று தங்கதுரையின்  வாய் பதில்
சொன்னாலும் மனம் என்னமோ அவளிடம் தெரிந்த சோர்வில், முக கலக்கத்தில்
சந்தேகத்தையே கொடுத்தது,
 “ஒருவேளை தெரிஞ்சிருக்குமோ..? இல்லை இல்லை வாய்ப்பே இல்லை,  இந்த
விஷயத்தை  யார்  போய்  அஞ்சலிம்மா கிட்ட சொல்லுவா..? இருக்காது..” என்று
குழம்பியபடியே அஞ்சலியின் பைகளை தூக்கி கொண்டு வந்தவர்  காரின்
டிக்கியில் பைகளை வைத்துவிட்டு  அஞ்சலிக்காக கதவை திறக்க,
“எத்தனை தடவை சொல்றது நானே திறந்துக்கிறேன்ன்னு கேட்க மாட்டேங்களே..”
என்று சலித்தபடி அஞ்சலி காரினுள் அமரவும், தங்கதுரை எப்போதும் போலே
எதுவும் சொல்லாமல் மெலிதான சிரிப்புடனே  காரை கிளப்பியவர்,
சிறிது தூரத்திலே மனம் கேட்காமல் சொல்லி விட வேண்டும் என்று    சொல்ல
வருவதும் பின் வேண்டாமென விடுவதுமாக இருக்க, அவரின் அவஸ்த்தையை புரிந்து
கொண்ட அஞ்சலி,
“என்ன அண்ணா..  ஏதாவது சொல்லனுமா..?  என்று அவர் சொல்ல வருவது தெரிந்து
கொண்டே தான் கேட்டாள்.
“அது..  அது..”  என்று இழுத்தவர் அந்த ஒத்தையடி பாதை வரவே வேகமாக
திரும்பி அஞ்சலியை பார்க்க, அவள் எப்பொழுதும் போல் அந்த இடம் வந்தவுடனே
கண்களை மூடிக்கொண்டாள்.
“அவளின் முகத்தில் தெரிந்த வலி..”  அவளின் மனதின் வலியை எதிரொலிப்பது
போலே காரில் உள்ள பிளேயரில் பாடல் ஒலித்தது..
“நெகிழினியில் நெஞ்சம் கொண்டே
உனை விலகி போனவள்..
நெருங்கி வர ஆசை கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்..
அணையும் திரி தூண்டிட
ஒளி மீண்டிடா..
எனை தீண்டிடு உயிரே..!!!
இவளின் துயர் தீர்த்திட
வழி சேர்த்திட
விரல் கோர்த்திடு உயிரே..!!! “
பாடல் வரிகளை கேட்டவுடன் தங்கதுரை வேகமாக  பிளேயரை அணைக்க, பாடல்
நிற்கவும் கண்கள் திறந்த அஞ்சலியின் கண்கள் சொன்னதெல்லாம், “இதை
நிறுத்திவிட்டால் எல்லாம் முடிந்துவிடுமா..?” என்பதே,
அதை சரியாக புரிந்து கொண்ட தங்கதுரை அடுத்து பேசுமுன் வீடே வந்துவிட,
கீழே இறங்கிய அஞ்சலி,
“அண்ணா.. நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னு எனக்கு தெரியும்”  என்று வலியோட
சொல்லி சென்றிட,  தங்கதுரை தான் அவளின் வேதனையில் அசையாமல்
நின்றுவிட்டார்,
“வாங்க டாக்டர் அம்மா.. இப்போதான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா..?”
என்று   “அசோக்கின் மனைவி லதா”  கேட்டு கொண்டே வர,  அவளுடன்,
“அத்தை..”  என்று தன் மழழை மொழியில் கூவிக்கொண்டே ஓடிவந்த “அவர்களின்
மூன்று வயது  மகள்  ஸ்வேதாவை” பாசத்தோடு வாரியணைத்து கொண்டாள் அஞ்சலி,
“ஸ்வேதா அப்படியே அஞ்சலியின் ஜாடை..” இருவருக்கும் எக்கச்சக்க பாசமும்
கூட.
“சரி வாங்க..  முதல்ல உள்ளே போகலாம்,  மாமா நீ வரேன்னு சொன்னதும் வெளியே
கிளம்பினவர் போகாம உனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கார்,” என்று
பேசிக்கொண்டே உள்ளே  சென்றவர்கள், ஹாலில் அமர்ந்திருந்த சுந்தரத்தை
காணவும் லதா கிட்ச்சன் உள்ளே செல்ல, அஞ்சலி  தந்தையின் பக்கத்தில் சென்று
மரியாதையாக  நின்றவள்,
“அப்பா நல்லா இருக்கீங்களா..?” என
 “நான் நல்லா  தான்  இருக்கேன், ஆனா நீ தான் எப்படியோ இருக்க..?, என்ன
படிப்பு ரொம்ப கஷ்டமா இருக்கா பாப்பா..?”  என்று மகளின் மெலிவில்
கவலையுடன் கேட்டார்,
“அப்படியெல்லாம் இல்லப்பா,  பைனல்  எக்ஸாம்ஸ் எல்லாம் இப்போத்தானே
முடிஞ்சது, அதான் கொஞ்சம் டயர்ட்,   வேறொண்ணுமில்லப்பா..”  என்று
சொன்னவளின் முகத்தில் தெரிந்த சோர்வில், மகளின் பேச்சை நம்பிய தந்தை,
“வந்த பிள்ளைக்கு இவ்வளவு நேரமாகியும் ஒன்னும்  கொடுக்கல..”
 “மீனாட்சி.. மீனாட்சி..”  என்று உள்ளே பார்த்து கோவமாக கத்த,
“இதோ வந்துட்டேங்க,   அஞ்சலிக்குதான் சூடா காபி கலக்க போனேன்”  என்று
கணவனுக்கு பதில் சொன்னவாறே மகளிடம் டம்ளரை நீட்டியவர் பாசமாக அவளின்
தலையை வருட,
அஞ்சலிக்கு அம்மாவின் மடியில் படுத்து ஒரு மூச்சி அழுதுட உள்ளம் துடியா
துடித்தாலும் “என்ன சொல்லி அழுக..?”
“என் ஒருதலை காதல் தோத்து விட்டது என்றா..?”
இல்லை..  “அவருக்கு  அடுத்த மாதம் திருமணம் நடக்க போகிறது என்றா..?”
இல்லை..  “தன்னை இப்படி ஒருவள் ஐந்து வருடமாக   மனதில் தணியாத காதலுடன்
சுமக்கிறாள்..!!  என்று கூட தெரியாத தன் காதலனை நினைத்து நொடியாக நொடியாக
என்னுள்ளே  அழுது கரைகிறேன் என்றா..?”  இதில் எதை சொல்லி  அழுதிட
முடியும்..?
அவளின் தவிப்பை  பார்த்த படி  உள்ளே பை வைக்க வந்த தங்கதுரைக்கு
மட்டுமில்லாமல் கிட்சனுள் நின்றபடி தன் நாத்தியை பார்த்து கொண்டிருந்த
லதாவுக்கும் தோன்றியது ஒன்றே ஒன்று தான்..
“என்ன இல்லை இந்த பெண்ணிற்கு..?  எல்லாம் இருந்தும் இந்த வயதிலே
நிம்மதியும் பறித்து உயிரையும்   அணு  அணுவாக கொள்ளும் இந்த கொடிய காதல்
தேவைதானா..?” என்பதே,
இருவரின் பார்வையும் உணரமுடிந்த அஞ்சலியின் மௌன பதில் எல்லாம்,
“எனையே  கேளாமல்..?!!
எனக்கே தெரியாமல்..?!!
என்னுள்ளே ஒவ்வொரு அணுவிலும் உறைந்து,  என் உயிரோடு இன்னொரு உயிராக
கலந்து இருக்கும்,
 அவனின் உயிரை.. காதலை..  என்ன சொல்லி..? என்ன செய்து..? பிரித்திட
முடியும் தன்னால்..?
அப்படியே பிரித்துவிட்டாலும்.. அதற்கு மேல் வாழ மட்டும் என்ன
இருக்கபோகிறது..?  வெறும் உடல் கூட்டை தவிர..  என்பதே!!

Advertisement