Advertisement

ஜானி இவனை பார்த்ததும் துள்ளி வர, அவனை மேலே விழுந்து பிராண்டாமல் பிடித்துக் கொண்டான், பட்டு சட்டை பட்டு வேஷ்டி அல்லவா.

பின்பு அப்படியே அவனை அழைத்து கொண்டு போய் ஜெயந்தியின் முன் நிறுத்த, வேகமாய் சோஃபாவின் மேல் ஏறி நின்று கொண்டாள்..

“அண்ணிடா” என்று ஜானிக்கு சொல்லிக் கொடுக்க,

அது எம்பி கை நீட்ட, அவள் சோபாவில் நிற்க அவளின் கை உயரத்திற்கு கை நீட்டியது.

“பிடி, பிடி” என்று மருது சொல்ல.. கைகளை பின்னால் கட்டிக் கொண்டாள் பயத்தில்.

“ஒன்னும் பண்ணாது, நான் இருக்கேன் தானே, ஒன்னும் பண்ணாது!”  

மெதுவாக கலவர முகத்தோடு கை நீட்ட, அதனை பிடித்து ஜானியின் காலை கையாய் நினைத்து பிடிக்க வைத்தான்.

அவள் பயத்தோடு தொட்டவள் பின்பு உடனே இழுக்க பார்க்க, அவனின் முகத்தில் ஒரு கடினம் வந்து அமர்ந்து கொண்டது. “நீ பயந்தா இவன் என்னவோ ஏதோன்னு நினைப்பான். சாதரணமாய் இரு” என்று அதட்டினான்.

அவனின் அதட்டலில் முகம் கண்கள் எல்லாம் கலங்கியது. அதனை பார்த்து அவளின் கை விட்டவன், “அண்ணி டா, நீ தான் பார்த்துக்கணும். அண்ணியை தொந்தரவு பண்ணக் கூடாது. அண்ணியை பார்த்ததும் ஓடி வரக் கூடாது” என்று பொறுமையாய் பாடம் எடுத்தான்.

பின்பு அவனை ரூமில் விட்டு கதவை சாற்றி வந்தவன் ஜெயந்தியை பார்க்க.. அவள் அவனை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தாள்.. சிறு குழந்தைகள் கோபித்துக் கொண்டு நிற்குமே அது போல. புரிந்தாலும் மருது சமாதானம் எல்லாம் செய்யவில்லை.  

“தூங்கலாமா?” என்று அவன் கேட்க..

“பாத்ரூம் எங்கே இருக்கு?” என்றாள்.

“ரூம் குள்ள தான்” என்று அவன் சொல்ல,

உள்ளே சென்றவள் புடவை கால்களுக்கு நடுவினில் ஈரம் படமால் பிடித்து, கையை சோப் போட்டு கழுவு கழுவு என்று கழுவினாள்.

ஜானியை தொட்டதினால் என்று புரிந்தவன், “பார்த்து கை தேஞ்சிடப் போகுது என்று சற்று கடுப்பாக குரல் கொடுத்தான்.

எதுவும் அவளை அசைக்கவில்லை, கை கழுவில் வந்து “டவல்” என்று கேட்க.. அங்கிருந்த ஒரு கபோர்டை காண்பித்தான்.

அவளாக சென்று எடுத்துக் கொண்டவள் “எங்கே படுக்க” என்று பார்க்க அவன் உருண்டு புரண்டு படுக்கும் அளவிற்கு கட்டில் இருந்த போதிலும், இரண்டு பேர் படுக்க தாராளம் கிடையாது.. நெருக்கம் தான்.

அவள் அதனை பார்க்க.. “நான் பெருசு மாத்தப் போனேன், விஷால் தான் விடலை, பொண்ணு வீட்ல குடுப்பாங்க சொல்லிட்டான், எல்லாம் குடுப்பாங்க, நீங்க புதுசு வாங்கக் கூடாதுன்னு சொன்னான். அதான் எதுவும் வாங்கலை” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.  

மெத்தை வாங்கினார்கள் தெரியும். ஆனால் கட்டில் எல்லாம் வாங்கவில்லை, முறையாய் கொண்டு வந்து விடும் போது எல்லாம் செய்திருப்பார்கள்.. இவர்கள் தான் அவசரமாய் வந்து விட்டார்களே!   அவள் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை.

“இந்த பெட் ஸ்ப்ரெட் எப்போ துவைச்சீங்க?”  

“ஞாபகமில்லை”

“வேற புதுசு இருக்கா?”

“தெரியலை” என்றான் அசால்டாய்.

அவனை முறைப்பாய் பார்த்தவள், அவனின் கபோர்ட் திறந்தாள். அங்க ஒரு துவைத்த பெட்ஷீட் இருக்க.. அதனை எடுத்தவள் அங்கே படுக்கை மேல் இருந்த பெட் ஸ்ப்ரெட் எடுத்து விட்டு.. அதனை படுக்கை மேல் விரித்தாள்.. பின்பு இரண்டு தலையணை இருக்க.. அதில் இருந்த தலையணை உரைகளை கழட்டி விட்டு இரண்டு தலையணையும் இரண்டு டவல்களில் சுற்றி வைத்து விட்டு..

பின்பு “ஷப்பா” என்று படுத்துக் கொள்ள முதுகு வலித்தது. கால் நீட்டி நேராய் படுத்துக் கொண்டாள். அதே பட்டுப் புடவையில்.. அவள் எல்லாம் செய்யும் வரையிலும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பார்த்தும் பாராமல் அடுத்தவர் முன் பார்க்கும் பார்வை அவளை கண்களில் நிரப்பிக் கொள்ள பத்தாது. இப்போது சுதந்திரமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.  

படுத்து கண்களை அவள் மூடிக் கொள்ள, ஜெயந்தி என்னவோ பொருந்தி விட்டாள்.. மருதுவால் முடியவில்லை..

“நானும் அழுக்காய் இருக்கிறேனோ, இவள் நிறைய சுத்தம் பார்ப்பாளோ”  என்ற எண்ணம்.. உடை எடுத்து போய் குளித்து விட்டு வந்தான் .. பனியன் வேஷ்டியில் இருந்தான்..

ஜெயந்தியை பார்த்தால் இன்னம் கண்மூடி இருந்தாள், உறங்கி விட்டாளா தெரியாது. உடை மாற்றவில்லை, மாற்றுவதற்கு எதுவுமில்லை அவளுக்கு. லட்சத்தி பத்தாயிரம் அந்த புடவை, அவளின் நகைகள் அது ஒரு எட்டு லட்சம் இருக்கும், அதோடு படுத்திருந்தாள்.

இத்தனை செய்பவனிற்கு கட்டிலோ மெத்தையோ ஒரு விஷயமே அல்ல. ஆனால் அது அவனிற்கு தெரியவில்லை. விஷாலும் வேறு வாங்கக் கூடாது அவர்கள் கொடுப்பது தான் என்று சொல்லி விட, விட்டுவிட்டான்.  

அனுமதி இல்லாமல் எப்படி பக்கத்தில் படுக்க…

“நான் இங்க பக்கத்துல படுத்துக்கட்டுமா?” என்றான் தயங்கிய குரலில், அதில் கண் திறந்தவள், அவனை சில வினாடிகள் பார்த்து விட்டு “படுத்துக்கங்க” என்று கொண்டே திரும்பி படுக்க புடவை உறுத்தியது..

கனமான புடவை, அவளுக்கு அந்த புடவை நகைகளின் விலை எல்லாம் தெரியாது.. மெதுவாக எழுந்து அமர்ந்து கொண்டாள்..

“என்ன?” என்று நின்று கொண்டே பார்த்தவனிடம்,

“புடவை உறுத்துது”  

“மாத்திக்க வேற ஒன்னுமில்லையே”  

“உங்க நைட் பேன்ட் ஷர்ட் இருக்கா புதுசு?”  

“புதுசு என்ன? பழசு கூட இல்லை” என்றான் சன்ன சிரிப்போடு.. அது அத்தனை வசீகரமாய் அவனின் முகத்திற்கு இருக்க.. இப்படி இலகுவாய் பேசும் மருது அவளுக்கு புதியவன் தானே!    

“நான் வேஷ்டி பனியன் தான்”

“எனக்கு தூக்கம் வருது, ஆனா இதெல்லாம் உருத்துது” என்று பாவமாய் சொல்ல,

“என் புது சட்டை இருக்கு, போட்டுக்கோ. காட்டன் தான். உறுத்தாது. இதெல்லாம் கழட்டிட்டு மாத்திக்கோ” என்று சொல்லி அவள் மாத்துவதற்கு எடுத்துக் கொடுத்தான்,

அவளின் முகத்தினில் தயக்கம் தெரிய, “வேற இல்லை” என்றான்.

நகைகளை கழட்ட ஆரம்பித்தாள்.. இந்த சினிமாவில் வருவது போல வந்து உதவி செய்வானோ என்று பார்க்க, அப்படி ஒன்றுமே செய்யவில்லை.. ஆனால் அவள் செய்வது அத்தனையும் ஒரு ரசனையான பார்வையோடு பார்த்திருக்க, அதுவே ஜெயந்தியை தடுமாற வைத்தது. அவளே வேகமாய் கழட்டி விட்டவள், படுக்க போனவனிடம் “நான் டிரஸ் மாத்தனும்” என,

எதுவும் பதில் பேசாமல், வெளியில் சென்று விட்டான், கதவை சாற்றியவள், உடையை மாற்றிக் கொள்ள, அவனின் சட்டை அவளின் உள்பாவாடை..    

அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க சிரிப்பு வந்தது.. சட்டை அவளின் முழங்காலிற்கு சற்று மேல் இருக்க அதற்கு கீழே அவளின் பாவாடை தெரிய, வயல் வரப்பில் மாட்டி வைத்திருக்கும் சோளக்கொல்லை பொம்மை போல இருந்தாள்.

மருதுவின் முன் இப்படி இருக்கப் போவது கூச்சமாய் இருந்த போதும், கதவை திறந்து விட்டு “வாங்க” என்றவள் புடவை மடித்து அங்கிருந்த சேரில் ஆறப் போட்டு அவனை கவனமாய் தவிர்த்து படுத்தாள்.

அவளை அந்த நிலையில் பார்த்தவனுக்கு சிரிப்பு, கூடவே ஒரு உல்லாச மனநிலை. அவனின் வீட்டில் ஒரு பெண், அவனின் அறையில் ஒரு பெண், அவனின் படுக்கையில் ஒரு பெண், அவனின் மனைவி, அவனின் குடும்பம்.. அப்படி ஒரு நிறைவைக் கொடுத்தது. என்னவோ அவனுள் இருந்த வெற்றிடம் காணாமல் போக துவங்கியது.  

அவளின் அருகில் படுத்துக் கொண்டான்.

ஜெயந்திக்கு இருந்த களைப்பில் உறக்கம் வந்து விட,

இவனுக்கு உறக்கம் அணுகவே இல்லை. அவளின் முகத்தை பார்த்தே இருந்தான். ஆனாலும் அவனுக்கு சோதனை காலம் தான். பின்னே அவளின் உடை அவளிடம் நிற்கவே நிற்காது.

அதன் பொருட்டே நைட்டி கூட அவளுக்கு வீட்டில் கிடையாது.. நைட் பேன்ட் ஷர்ட் தான்.

முழங்காலுக்கு மேல் அது அசால்டாய் ஏறிக் கொள்ள.. பார்வையை திருப்பு என்று ஒரு மனது சொல்ல.. ம்கூம் அவளின் வனப்பு பார்வையை நகர கூட விடவில்லை.  

“போடா” என்று அதனை விரட்டி விட்டவன், “அவ தான் பக்கத்துல படுக்க ஓகே சொல்லிட்டால்ல, அவன் என் மனைவி, நான் அப்படி தான் பார்ப்பேன்!” என்று சொல்லிக் கொண்டான்.

சிறிது நேரத்திற்கு முன் பக்கத்தில் படுக்க சம்மதம் கேட்டவனின் தயக்கம் எல்லாம் எங்கே போனது என்று அவன் யோசிக்கக் கூட இல்லை.

ஒரு கை மெதுவாய் அவளின் கன்னம் வருடியது.

அதில் அவளுக்கு லேசாய் விழிப்பு வர “ஜதி” என்றான் மெல்லிய குரலில்.

பாதி தூக்கத்தில் கண் விழித்தாள்..

“நான் உன்னை தொட்டுக்கட்டுமா?” என்றான் அவளின் கண்களை நேராய் பார்த்து. அந்த கண்களில் இருந்த்த எதிர்பார்ப்பு, ஆசை.. அதையும் மீறி ஒரு வசியம்.. அவளுக்கு புரிந்தும் புரியாமலும் இருக்க..  

“எதுக்கு” என்று ஒரு கேள்வி வேறு கேட்டாள்.

“நான் இன்னும் பொண்ணை தொட்டு பார்த்ததே இல்லை, தொடணும்னு ஆசையா இருக்கு” என்று மனதை மறைக்காமல் சொன்னான்.

“ம்ம்” என்று சம்மதம் சொல்ல..

அவ்வளவு தான் ஜெயந்திக்கு தெரியும்..

தொட்டு பார்க்க சம்மதம் கேட்டவனுக்கு, வேறு எதற்கும் சம்மதம் கேட்க பேசக் கூட முடியவில்லை..

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி!

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!

… இந்தநிலை தான் மருதுவிற்கு…

கைகள் ஒரு இடம் விடாமல் உடலில் அலைய, பின்பு உதடுகளும் அலைய.. அவனின் கைகளில் கிடைத்த பொம்மையானால்.

ஜெயந்தி இதனை எதிர்பார்க்கவில்லை, உறக்கம் முற்றிலுமாய் களைந்து விட்ட போதும், உடலா? மனமா? ஒரு மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தது..

ஜெயந்தி திருமணமானால் என்ன நடக்கும் என்று தெரியாத சிறு பிள்ளை அல்ல.. அதை வேண்டாம் என்று மறுக்கும் எண்ணமும் இல்லை.. மனதை ஓரளவு தயார்படுத்தி தான் இருந்தாள். அன்றே எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் இப்படி ஒன்று நடக்க ஆரம்பிக்க, எதிர்பார்த்திராவிட்டாலும் தடுக்கும் எண்ணம் அவளுக்கு சிறிதும் இல்லை..

ஒரு தயக்கத்தோடு அவனை ஏற்க ஆரம்பித்தாள். புதிதாய் ஒரு ஆணின் ஸ்பரிசம், அவனின் வாசம் மனது சற்று முரண்டியது..

“என்ன பண்றீங்க?” என்று சன்னக் குரலில் கேட்டவளுக்கு அவனிடம் பதில் எதுவும் சொல்லால் இல்லை, செயலால் மட்டுமே.    

மருதுவிற்கும் அன்றே எதையும் நடத்திக் கொள்ளும் எண்ணம் இல்லை. சொல்லப் போனால் இதனை பற்றி யோசிக்காதவன் இல்லை. அப்படி யோசிக்கும் போது, முரண்டுவாளோ, மறுப்பாளோ, இன்னும் சிறிது நாள் போகட்டும் என்பாளோ, இப்படி எல்லாம் கூட நினைத்திருக்கிறான்.  

ஜெயந்தியின் உடல் மொழி இதை எதையும் காண்பிக்காத போது எல்லாம் அன்றே நடத்திக் கொள்ளும் அவசரம் வந்தமர்ந்து கொண்டது. அவனின் தயக்கம், எந்த நொடி தகர்ந்ததென்று அவனுக்கே தெரியவில்லை.   

அவனின் கைகளின் மாயமா, உதடுகளின் மாயமா, முற்றலும் தளர்ந்து விட்டாள்.. அவன் என்ன செய்தாலும் மறுக்கும் நிலையிலேயே இல்லை.. முரண்டிய மனதை அவளாய் அடக்கினாளா? இல்லை அடங்க வைத்தானா? விடையில்லா கேள்விகள்!

உணர்வுகள் முற்றிலுமாக தூண்டப்பட்டு இந்த நிலை ஜெயந்திக்கு புதிது, புதிது!

அவளுக்கு மட்டுமா அவனுக்கும் தானே…  

உடை என்னும் தடையை அவன் விலக்க ஆரம்பிக்க, “எனக்கு கூச்சமா இருக்கு” என்று மெல்லிய குரலில் முனகினாள்.

அவளை விட்டு பட்டென்று விலகி விட,

அம்மாடி! அப்படி ஒரு ஏமாற்றம்! இன்னும் வேண்டும் வேண்டும் என்ற பிதற்றல் ஆவல்..

கண்களை திறந்து பார்த்தால், அவனோ கபோர்டில் எதையோ தேடிக் எடுத்தவன் அருகில் வர, கண்களை மூடி கொண்டாள்.

ஏதோ ஒரு மெல்லிய துணி, அவளின் கண்களை கட்டி விட்டவன்.. “இப்போ இருக்காது” என்று அவளின் காதிற்குள் ரகசியம் பேசி ரகசியமானது எல்லாம் அவனும் முதன் முறை அறிந்து கொள்ள ஆரம்பித்தான்.

ஆசை மீறும் நேரமே ஆடை நான்தானே!

மனித உடல்களின் ரகசியங்கள்… பிரபஞ்சத்தின் சொல்லொணா ரகசியங்களில் ஒன்று.. 

காலையில் ஜெயந்தி கண் விழித்த போது அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் என்று தான் மனது பாடியது.. கண்களின் திரை இன்னும் இருக்க அதனை எடுத்தாள்…  

எப்படி இப்படி நடந்தது என்று அவளுக்கே தெரியவில்லை! எப்படி ஒரு சிறு எதிர்ப்பும் இல்லை என்னிடம், சுய அலசலில் படுத்தே கிடந்தாள்.. உடலிலும் ஒரு சுகமான அயர்வு!

அவள் எழுந்து விட்டாளா என்று பார்க்க வந்தவன், அவள் படுக்கையில் படுத்து இருப்பதை பார்த்ததும்.. “உன் ஃபோன் எங்கே?” என்றான் மலர்ந்த முகத்தோடு.. குளித்து சாமியும் கும்பிட்டு இருப்பான் போல நெற்றியில் திருநீறும் இருந்தது..  

அப்படி ஒரு பொலிவோடு மருதுவின் முகம் அவளின் கண்களுக்கு தெரிந்ததல்லை.. தானாய் பொலிவா இல்லை அது ஜெயந்தி கொடுத்ததா?

அப்போதுதான் அவனின் தோற்றத்தையே கவனித்தாள்.. உயரமாய் இருந்தான்.. வசீகரமாய் இருந்தான்.. திட காத்திரமான அவனின் உடல்.. நேற்று அவளுள் செய்த ஜாலங்கள்..

இவன் டிரஸ், இவன் ஹேர் ஸ்டைல், இதெல்லாம் தான் இவனை வயசானவனா கட்டுது போல என்று தோன்ற பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவளின் ஆராய்ச்சி பார்வையை உணர்ந்தாலும் மருது என்ன ஏதென்று கேட்கவில்லை.

“ஃபோன் எங்கே?” என்றான் அருகில் வந்து.

“நான் எடுத்துட்டு வரலை, வீட்ல தான் இருக்கும்”  

“உங்கம்மாக்கு கூப்பிட்டு, உன் டிரஸ் குடுத்தனுப்ப சொல்லு!” என்று அவன் சொல்ல,

படுத்திருந்த தன்னையே பார்த்துக் கொண்டாள். எப்படி படுத்தாலோ அப்படியே படுத்திருந்தாள். அவனின் சட்டை அவளின் பாவாடை என.

நடந்தது எல்லாம் என் கற்பனையோ என்று தோன்றியது.. பின்னே அவள் இருந்த நிலை அவளுக்கா தெரியாது, உடையை விடு, ஒரு பெட்ஷீட் கூட பஞ்சமாகி தானே போனது.. எதையும் எடுக்கும் என்ன தேடும் நிலையில் கூட அவள் இல்லை..

மருது என்ற மனிதன் முற்றிலும் புதிதாய் அவளுக்கு தெரிந்த க்ஷணங்கள்..    

அவனிடம் கேட்கவா முடியும் “நீயா அணிவித்தாய்?” என,

அவள் விழி விரித்து பார்க்க.. அதனை ரசனையாய் பார்த்திருந்தவன்.

“குடுத்து விட சொல்லு” என்று சொல்லி தன் கைபேசியை அவளின் கையில் திணித்து, பக்கத்தில் அமர.. அவன் பார்த்துக் கொண்டே இருக்கும் போது அவளால் பேச முடியவில்லை.

“என்ன பார்வை இவனின் பார்வை” என்று தான் தோன்றியது.. உடையை தாண்டி உடலை ஊடுருவியது..  

மெதுவாக ஒருகளித்து படுத்து அம்மாவை அழைத்தவள், “அம்மா, எனக்கு ட்ரெஸ் குடுத்தனுப்பு, குளிச்சிட்டு வர்றோம். நேத்து புடவையே கட்ட முடியாது. அது ரொம்ப பெருசா இருக்கு” என்று பேசிக் கொண்டிருக்க..

“என் ஷர்ட் கூட தானே பெருசா இருக்கு” என்ற மெல்லிய குரல் கேட்க,

ஒரு கையினால் பேசாதே என்பது போல அவனின் வாயை மூடினாள்.

அந்த கைகளை அந்த இடத்தை விட்டு நகர விடாமல் பிடித்துக் கொண்டவன், அதில் முத்தமிட்டு “நன்றி” என்றான் ஆழ்ந்த குரலில்.

அம்மாவிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் பார்வை அவனை அலசி ஆராய்ந்தது.. புதிதாய் பார்ப்பது போல பார்த்தே இருந்தாள்..

ஒரு இரவில் எல்லாம் எல்லாம் மாறிவிட்டது   

“பெருசா இருக்கு போட முடியாது, கழட்டிடலாமா” என்றும் கேட்க,

அம்மாடி என்ன இது நினைத்தவள் “மா குடுத்தனுப்பு” என்று சொல்லி.. அவசரமாய் ஃபோனை அணைக்க,

“ம்ம், பெருசா இருக்கு, சின்னதா வேற இருக்கா பார்க்கலாம், இப்போதைக்கு இதை கழட்டிடலாம்” என்று மீண்டும் சொல்ல,

“ம்மா, அதெல்லாம் முடியாது, முடியாது, வேண்டாம், வேண்டாம், வெளிச்சமா இருக்கு, கமலன் வந்துடுவான், நீங்க குளிச்சிடீங்க, நான் குளிக்கலை” என்று வரிசையாய் மறுப்புகளை அடுக்க, அவளின் எந்த மறுப்பும் செல்லவேயில்லை.. சொன்ன வேலையை செய்தே விட்டான்.

மீண்டும் ஒரு திரை அவளின் கண்களை மறைக்க.. “பேசக் கூடாது” என்று உத்தரவாய் ஒரு குரல் கேட்க.. குரலுக்கு அடிபணிந்தாலா இல்லை அவனின் கைகளுக்கா, ஏதோ ஒன்று, பின்பு அவளிடம் எந்த பேச்சும் இல்லை மறுப்புமில்லை..  

ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம்

இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம்

இவன் மஞ்சம் போடும் மன்னன்

இவன் கொஞ்சும் போது கண்ணன்

என் உயிர்வரை பருகியவன் 

   

           

                   

   

   

         

Advertisement