Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

7

நீலகண்டன் வெளியே வர.. ரகு நின்றிருந்தான். 

நீலகண்டன்  “பார்த்துக்கோங்க.. நான் கிளம்புகிறேன்..” என்றான் ஏதுமில்லா பாவனையில்.

ரகு “இருங்க.. சித்தப்பா என்ன சொன்னார்..” என்றான்.

நீலகண்டனுக்கு, அவர் தன்னிடம் பேசியதாக தெரியவேயில்லை எதோ புலம்பியதாக தெரிந்தது அவனிற்கு.. எனவே, ரகு, எதற்கு இப்படி கேட்க்கிறார் எனவும் தோன்ற.. “என்ன சொல்லுவார்.. வலி வேதனை.. அவ்வளவுதான், அதற்குள் நர்ஸ் வந்துட்டாங்க” என்றான்.

ரகு “அது.. தங்கை மகனாக இருந்தாலும் உன் கிட்ட கேட்க.. கூச்சப்பட்டிருப்பார்.. உனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. என்னானா..” என பேசிக் கொண்டே கேண்டீன் வந்திருந்தனர் இருவரும்.

ரகு “என்ன சாப்பிடற..” என்றார்.

நீலகண்டனுக்கு இங்கே உண்பதில் அவ்வளவு பிடித்தமில்லை.. ஆனாலும் மணி ஆகிறதே.. இவரோ நீண்ட நேரம் பேசுவார் போல என எண்ணி “சப்பாத்தி” என்றான்.

ரகு ஆர்டர் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தார். மீண்டும் பேச தொடங்கினார்.. “அது சித்தப்பாக்கு” என தொடங்க.

நீலகண்டன் “யாரு சித்தப்பா..” என்றான். ரகு கொஞ்சம் சலித்துக் கொண்டார்.. வேலையாக வேண்டுமே என எண்ணி தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

நீலகண்டன் “உங்களுக்கு தெரியும் எங்களை தொலைத்து இருபது வருடம் ஆகிற்று என.. அதனால், கொஞ்சம் இந்த உறவு முறையில் எனக்கு குழப்பம்.. நீங்க எதோ என்னிடம் எதிர்பார்க்குறீங்க.. ஆனால் நான் எதுவும் புரியாமல் செய்ய முடியாதே..” என்றான் ஒரு மாதிரி நிதானமான குரலில்.

ரகு கொஞ்சம் சுதாரித்தான்.. இருவரும் சூட்ச்சமமானனவர்கள் போல.. ஒரு நிதானம் இருவரிடமும். ரகுவிற்கு இந்த நாலு ஏக்கர் பூமி வேண்டும்.. என்ற தெளிவு அதனால் ஒரு நிதானம் என்றால், நீலனுக்கு எதற்கு என்னை அழைத்தார்கள்.. முடியவில்லை என்றார்கள்.. வந்தால், அவர் ஏதும் பேசவில்லை.. என எண்ணம் அதனால் ஒரு நிதானம் என இருவரும் சரிசமமாக இருந்தனர்.

ரகு “சரிப்பா.. அது, கண்ணன் சித்தப்பாவோடு மனைவி ராதா, அவங்க என் சித்தி.. அதவாது என் அம்மாவும், ராதா சித்தியும் கூட பிறந்தவங்க..” என்றான்.

நீலகண்டன் “ம்..” என்றான் கதை கேட்க்கும் பாவனையில்.

ரகுவிற்கு கைகள் பரபரத்தது.. ‘இந்த சித்தப்பாவை..’ என அவரை வ்வைதுக் கொண்டே ரகு “கண்ணன் சித்தப்பா ராதா சித்திக்கு, குழந்தையில்லை.. அதனால் என் தம்பி மாதவனை தத்தெடுத்துக் கொண்டார்கள். அதனால் மாதவன்தான் எல்லாம் பார்க்கிறான். இப்போ கூட.. அவரின் மரியாதைக்காக சென்னை போயிருக்கான்.. தேசிய கட்சி நபர்களை பார்க்க.. அப்படியே தன் அப்பாவிற்கு மருத்துவம் குறித்தும் விசாரிச்சிட்டு வருவான்.. கொஞ்சம் அலைச்சல்தான், ஆனால், அவன்தானே எல்லாம் பார்க்கணும்” என தம்பியை தாங்கியே பேசினார்.

நீலகண்டன் கேட்டுக் கொண்டான் ம் கூட சொல்லவில்லை.

ரகு இந்த அமைதியை பார்த்து “சித்தப்பாக்கு, உடம்பு முடியலை.. சொத்தை தங்கள் பிள்ளைகள் பேரில் மாற்றி எழுத விரும்பறார்.. அந்த வீடு, அதான் கட்சி ஆபீஸ் இருக்குல்ல.. அதை அவர் பெயருக்கு மாற்றனும், நான் சொல்றது புரியுதா.. அதுக்கு உங்க, அதாவது உன் கையெழுத்தும் உன் தம்பி கையெழுத்தும் வேண்டும்.. என்ன உண்டோ அதை செய்திடலாம்.. அதெல்லாம் கண்டிப்பா செய்திடுவார்.. என் சித்தப்பா” என்றான் இப்போது கொஞ்சம் நிமிர்வாக பேசினான்.

நீலகண்டன் மனதில் ஒட்டி பார்த்துக் கொண்டான் ‘என் சித்தப்பா செய்துடுவாரா..’ அப்போ எனக்கு அவர் யார்?.. என தோன்றாமல் இல்லை. அதனால், ஒரு ஒதுக்கம் வந்தது அவனுள்.

‘ம்.. பிள்ளைகள்… அது யார் யார்..’ ‘எங்கள் கையெழுத்து.. அப்படினா, கண்டிப்பா பத்திரத்தை பார்க்கணும் நான்.. என் அம்மாவின் பங்கு நேரடியாக இருக்குமோ.. ம்.. என்னமோ சரியில்லை’ என எண்ணிக் கொண்டான். இப்போது நீலன் “யார் பிள்ளைகள்.. எத்தனை பேர் இருக்காங்க” என்றான்.

ரகுவிற்கு, அது உனக்கு தேவையில்லாதது என சொல்லத்தான் தோன்றியது. ஆனாலும் நாம் விவரம் சொல்லாவிட்டால், வேறு யாரிடமோ கேட்ப்பான்.. இல்லை, ஊர்காரர்கள் யாராவது சொல்லுவார்கள் என எண்ணி ரகு “அது.. என் தம்பியை தத்தெடுத்த பின்.. இவங்களுக்கு ரஞ்சனிதேவி பிறந்தாள்.. அதனால் ரெண்டு பிள்ளைகளுக்கும் சொத்தை சரிசமமாக எழுத நினைக்கிறார்.. அதனால்தான், இப்போது.. கொஞ்சம் அவசரம்.. சித்தப்பாவின் நிலை நீயே பார்த்தியல்ல.. முடியலை.. இனி எத்தனைநாள் இருந்தாலும் வலியும் வேதனையும் அவரை, தன்னுடைய பொறுப்பை கவனிக்க விடாது.. அதான் தம்பி பார்க்கிறான் எல்லாத்தையும்.” என்றார்.

பின் ரகு “இன்னும் நாட்கள் குறைவு உனக்கு புரியும். நீங்க எப்போது உங்களுக்கு வசதிப்படும்ன்னு சொல்லுங்க.. பத்திரத்திம் மாற்றி எழுதிக்கலாம்.. உங்களுக்கு எவ்வளோ வேணுமோ சொல்லுங்க.. தம்பிகிட்ட பேசிடுறேன்.. செய்துக்கலாம்..” என்றார்  

நீலகண்டனுக்கு மனம் கசங்கியது.. ‘அவரின் வைத்தியத்தை பார்க்க காணோம்.. சொத்தை பிரிக்கனும்மாம்..’ என மனம்  கசங்கியது. ஏதும் காட்டவில்லை அவனின் முகம்.

அதை பார்த்து ரகு டென்ஷனாக மீண்டும் “உனக்கு என்ன சொல்றேன்னு புரியுதா.. நாட்கள் குறைவாகத்தான் இருக்கு.. சீக்கிரம் நீங்க தேதி சொல்லுங்க.. உங்களுக்கு உண்டானதை செய்திடலாம்..” என்றார்  சிரித்த முகமாக.

நீலகண்டனுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான். அமைதியாக எழுந்து வெளியே வந்துவிட்டான். 

$%$%$%%$%$%$%$%$%$

நீலகண்டன் கடைக்கு வந்து சேர்ந்தான். பெரிய பாரம்தான், அழுத்தம்தான்.. மாமாவின் வார்த்தைகளில்.. ரகுவின் பேச்சில்.. என எல்லாம் அழுத்தம்தான் அவனுக்கு.

அத்தோடு மாமா, எல்லாம் அவருக்கு தெரிகிறது புரிகிறது.. உடல் முடியவில்லை ஆனாலும் எதோ திடத்தில் இருக்கிறார் என ஒரு புதிராக இருந்தது அவனுக்கு.

ஆனால், தொடர்ந்து யோசிக்க முடியாமல் வேலை அழைத்துக் கொண்டது அவனை.

சற்று நேரத்தில் மயூராவும் அவளின் தந்தையும் வந்தனர்.. நாளை தன் அத்தை பைனின் பிறந்தநாள், அதனால் கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள் வாங்க வந்திருந்தாள்.

மயூராவின் தந்தை நீலகண்டனை பார்த்து “எப்படி இருக்கீங்க..” என பேச தொடங்கினார்.

மயூரா உள்ளே சென்றாள்.. இவனின் முகத்தை பார்த்துக் கொண்டே. பக்கத்து நாட்டு பகவதி இப்போது கோவமானார், இவளின் செய்கையில். 

மயூரா தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்துக் கொண்டாள்.. ரவி, மற்றவர்கள்பில் போடா வரும் போது..  நீலகண்டனுக்கு பொருட்களை எடுத்து.. மேலே வைத்துக் கொண்டு உதவியவாரே பேசிக் கொண்டிருந்தார்.

மயூரா வந்தாள். பொருட்கள் எல்லாவற்றையும் வைக்கவும்.. நீலகண்டன் பில் போட தொடங்கினான்.. ரவிக்கு.. மயூராவின் தந்தைக்கு  போனில் அழைப்பு  வந்தது இப்போது. பேசிக் கொண்டே வெளியே சென்றார்.

இப்போது, எதோ ஒரு பொருளில் பார்கோடு கம்ப்யூட்டரில் பதிவாகவில்லை.. போல, நீலகண்டன் தேடிக் கொண்டிருந்தான்.. மோஸோரோலா சீஸ் அவனின் சிஸ்டம் லிஸ்டில் இல்லை.. எனவே.. இதனை வைத்து விட்டு மயூராவை பார்த்து “வேற பாக் எடுங்க.. இது இன்வெண்டரி ஆகலை” என்றான்.

மயூராவிற்கு  புரியவில்லை.. இவனை பார்த்தாலே என்னமோ ஒரு தடுமாற்றம் வந்துவிடுகிறது அவளிற்கு.. எனவே, அப்படியே திரு திருவென விழிக்க.. நீலகண்டன் மற்ற பொருட்களை பில் செய்துக் கொண்டிருந்தான். இன்னும் சீஸ் வரலையே என இவன் விழி நிமிர்ந்த்தி பார்க்க.. அப்போதும் அங்கேயே விழித்துக் கொண்டு.. இவன் எப்போது நிமிர்வான் என்ற பாவனையில் நின்றாள் பெண்.. 

சட்டென அவளின் தடுமாற்றமான இந்த பாவனையை பார்த்தவனின்  இறுகிய உதடுகள் நீளமாக சற்று விரிய “வேற பாக் எடுங்க” என்றான், பற்கள் தெரியா புன்னகையில். 

அவள் முன்புறம் சென்று எடுத்து வந்தாள்.

நீலகண்டன் அவள் வந்ததும் “அந்த பாக் இன்வெண்டரி ஆகலை.. அதான் சொன்னேன்.. பிஸா சாஸ் வேண்டாமா” என்றான் அவனாகவே, அவள் வாங்கிய பொருட்களின் வகையை பார்த்து, அது மட்டும் இல்லையே என கேட்டான்.. இவ்வளவு நேரம் அவளின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு ஆர்வத்தில் கேட்டான்.

மயூரா “இல்ல, நான் பிர்ப்பேர் செய்து வைச்சிருக்கேன்.. தேங்க்ஸ்” என்றாள்.

நீலகண்டன் ஒன்றும் சொல்லாமல் பில் நீட்டினான். அவளின் தந்தை போன் பேசிக் கொண்டிருந்தார் வெளியே. இவளே தன் கார்ட் எடுத்துக் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள். தானே வண்டி எடுக்க அவரின் தந்தையை பின்னால் ஏற்றிக் கொண்டு கிளம்பினாள்.

Advertisement