Advertisement

பிரசாந்த், மாதவனின் அருகில் வந்து அமர்ந்தான். ஏனோ தங்கைக்கு கோவமாக வந்தது, அவனை பார்க்கவே. ரஞ்சனிக்கு வீட்டில் இருக்கவே ஒருமாதிரி இருந்தது.. யாரும் தன்னை பெரிதாக கவனிப்பது இல்லை.. எப்போதும் அப்படிதான். ஆனால், மாதவன் எப்போதும் அப்படி இல்லை, வீட்டில் இருக்கும் நாளில், தன் தங்கையோடுதான் உண்ணுவான்.. அடிக்கடி மேலே அவளின் அறைக்கு வருவான்.. என்ன வேண்டும் ஷாப்பிங் போறியா.. தியேட்டர் போனியா.. என ஏதாவது பேசுவான்.

தந்தைக்கு உடல்நலமில்லாத் போது கூட.. தங்கையை நன்றாக கவனித்தான். ஆனால், இந்த மூன்று நாட்களில் அண்ணன் மேலே வரவில்லை, தன்னை தனியே பார்க்கவேயில்லை அண்ணன்.. என ஒரு தாங்கள் எழுந்தது அவளுள். அத்தோடு, அன்று தன் தந்தை நீலகண்டனிடம் தன் கைகளை கொடுத்தது குறித்து அவளுக்கு நிறைய கேள்விகள்.. குழப்பங்கள்.. அண்ணனிடம் தனியாக பேச வேண்டும்.. என ஏதேதோ எண்ணம். ஆனால், அண்ணன் தன்னை தனியாக பார்க்கவேயில்லை என இப்போது பிரசாந்தை பார்த்ததும் தோன்றியது. ஏற்கனவே அலுத்து சோகமாக இருந்தவள் முகம் ஜிவு ஜிவுவென.. சிவந்தது கோவத்தில்.

பற்களை கடித்தபடி ரஞ்சி “அண்ணா, உன்கிட்ட பேசணும்” என்றாள்.

மாதவன் “சொல்லுடா..” என்றான்.

ரஞ்சனி “தனியா பேசணும்..” என்றாள், இன்னும் பற்களுக்கிடையே வார்த்திகளை மென்று துப்பி.

பிரசாந்த் இப்போதும் நாகரீகம் கருதி எழுந்து செல்லவில்லை.. அப்படியே இருக்க.. தங்கையின் பார்வை அருகில் பார்ப்பதை உணர்ந்து.. மாதவன் “பிரசாந்தா.. அவர் இருக்கட்டுமே நம்ம வீட்டில் ஒருத்தர் டா” என்றான், சகஜமாக்கும் எண்ணத்துடன்.

ரஞ்சனிக்கு அந்த வார்த்தைகள் பிடிக்கவில்லை போல.. முகத்தை சுளித்து தன் ஒவ்வாமையை காட்டிவிட்டு, தன் அண்ணன் கையோடு இருந்த.. தன் கைகளை எடுத்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள்.

மாதவன் “என்ன டா” என்றான், தங்கையின் முகசுளிப்பை கவனிக்காதவன் போல.. வாஞ்சையாக வினவினான் அண்ணன்.

தங்கை ‘ஒன்றுமில்லை’ என தலையசைத்து அமர்ந்துக் கொண்டாள்.

இப்போது மேலே சென்ற வேலையாள் பிரசாந்திடம் “எல்லாம் ரெடிங்க ஐயா” என்றான்.

பிரசாந்த் வலது கையை போ எனும் விதமாக சைகையில் அசைத்து அமர்ந்துக் கொண்டான்.

மாதவனும் இதை கவனித்து அமர்ந்தான்.

ரகு “ரஞ்சனி சாப்பிடு வா.. மணி பத்து” என்றான். ரஞ்சனி ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

இப்போது பிரசாந்த் எழுந்துக் கொண்டு “நீ வா, நான் மேலே போறேன்” என்றான். மாதவன்  தலையசைத்தான் சரி என்பதாக.

மாதவன் மீண்டும் தங்கையிடம் எதோ வினவினான் “என்ன டா” என.

ஆனால், ரஞ்சனி ஏதும் பேசவில்லை.. அமைதியாக கண் மூடிக் கொண்டாள் “நீ போ ண்ணா” என்றாள்.

மாதவன் “காலையில் பேசலாம்..” என்றபடி மேலேறினான்.

ரஞ்சனிக்கு ‘யார் இவன்.. இவன் எப்படி என் அண்ணனின் ப்ரெண்ட்.. காலேஜ் மேட்டோ.. இவனே சூப்பர் சீனியர். இவன் ஏன், இத்தனைநாள் எங்கள் வீட்டில் இருக்கிறான்.. என்ன அந்த ஆள் எடுத்துட்டு போனாங்க.. அண்ணா, ஏன் எங்கிட்ட தனியா பேசலை..’ என அவளின் மனது யோசிக்க தொடங்கியது. 

ரகு “ரஞ்சனி” என்றான் அதட்டலாக.. இப்போது.

ரஞ்சனிக்கு தலை வலித்தது இந்த யோசனையில்.. அவளுக்கு இப்படி நடப்பது புதிது. இந்த வீட்டில் இதுவரை.. யாரும் இப்படி வந்ததேயில்லை.. பெரியம்மா கூட ஒன்றிரண்டு முறைதான் வந்திருக்கிறார்.. ரகுவின் குடும்பம் வந்ததேயில்லை.. அத்தோடு, நண்பன் என இப்படி ஒரு ஆள்.. யாரென இத்தனை நாட்கள் தெரியவே தெரியாது அவளிற்கு.. எனவே, ஒரு பயம் தந்தை இல்லையே என பயம்.. அத்தோடு.. அருகில் நெருங்காத  அண்ணன் இன்னமும் பயமுருத்தினான்.. இப்போது ரகுவும் அழைக்க.. எரிச்சலானாள்.. “என்ன.. சத்தம் போடுறீங்க..” என்றாள்.

ரகுவின் மனைவி சத்தம் கேட்டு வந்தார் ஹாலுக்கு.. ரஞ்சனி ரகுவை முறைத்தபடி நின்றிருந்தாள்.

ரகு “மணியாச்சுல்ல, ரஞ்சனி” என்றார்.

ரஞ்சனிக்கு கோவமே “உங்க இஷ்ட்டத்துக்கு நான் சாப்பிட முடியாது..”   என்றவள் மேலேறினாள் வேகமாக.

உண்ணவில்லை.. உறங்கவும் இல்லை. அவளுக்கு, ‘யாரிவன்’ என்ற யோசனை.. என்னமோ வெறித்து பார்த்தபடி.. நிற்பது, காலையில் பெரியம்மா தன்னை அழைத்து பேசும் போது  எங்கிருந்தாலும் ஹாலில் வந்து அமர்ந்து தன்னையே பார்ப்பது.. தன் வீட்டின் முடிவுகளை எடுப்பது.. தன் அண்ணனை சுற்றிக் கொண்டே இருப்பது.. என யாரோ இவன் சரியில்லை.. என எண்ணம்தான் இரவு முழுவதும்.. அப்பா.. என கத்த வேண்டும் போல இருந்தது..  யாரை என்ன சொல்வது.. என்ன கேட்பது.. குழப்பம்.. ஏனோ தன் வீடே தனக்கு அந்நியமானது போலொரு எண்ணம்.. குழப்பத்தின் மத்தியல் பெண் இருந்தாள், அடுத்தடுத்த நாட்களில்.

“திசையெல்லாம் எனக்கு

இருளாகி கிடக்கு..

எங்கேயோ பயணம் 

தொடருதம்மா..

என்னோட மனசும் 

பழுதாகி போச்சு..

சரி செய்ய வழியும் 

தெரியலம்மா..”

!@!@!@!@!@!@!@!@!@!

நீலகண்டனுக்கு அடுத்தடுத்த நாட்களும் எந்த மாறுதலும் இல்லாமல்  சென்றது. குகன் போன் எடுக்கவில்லை. நீலகண்டன் தன் மாமா இறந்ததற்கு, தான் சென்று வந்தது கோவம் என எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தான்.

கார்த்திக்கும் அதுதான் சொன்னான் ‘நான் அன்னிக்கு கூப்பிட்டேன், எடுக்கலை.. மாமா செய்திக்கு.. இது எனக்கு தேவையில்லாதது.. என அனுப்பியிருந்தான்.’ என சொன்னான். அண்ணனும் சரி என அமைதியாக இருந்தான்.

தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என கோவம்.. அத்தோடு.. மாமாவின் வீட்டிற்கு சென்றதும் சேர்ந்துக் கொண்டது.. இருக்கும்தான்.. அவனுக்கு இதெல்லாம் புரியாது.. என்ன செய்ய, சின்ன பையன் தானே’ என தனக்குள் சமதானம் செய்துக் கொண்டான் நீலகண்டன்.

ரகு, போன் செய்தான்.. நீலகண்டன் எடுத்தான் “நாளை எட்டாம் நாள், நாளைக்கே காரியம் வைத்திருக்கிறோம்.. அது முடிஞ்சி நல்லது செய்துக்கலாம்ன்னு.. வேற நாள் இல்லை..” என தொடங்கி நேரம் சொன்னார், அடுத்து என்ன பேசுவது என தெரியவில்லை இருவருக்கும், வைத்துவிட்டனர்.

நீலகண்டன், அதியமானிடம் போய் நின்றான்.. “நா..நான் ஏதாவது முறை செய்யனுமா” என நின்றான். அதியமான் தங்கள் பழக்கம் சொன்னார். எனவே நீலகண்டன் ரகுவிடமே கேட்க எண்ணினான்.

நீலகண்டன், ரகுவிடம் கேட்கவேண்டும் என எண்ணி ரகுவை அழைத்தான். ரகு எடுக்கவும்.. அதை பற்றி பேசிவிட்டு வைத்தான்.

ஆக, நீலகண்டன் முறை செய்வது.. ரஞ்சனி வீட்டு ஆண்களுக்கு தெரியும்.. மாதவன் ‘பார்த்துக்கலாம்’ என இருந்தான்.

நீலகண்டன் மறுநாள் வந்தான். அளவான மக்கள்.. நட்புகள் அவ்வளவுதான். அரசு வந்திருந்தார். அவருடன் நின்றுக் கொண்டான் நீலகண்டன்.

அய்யர் சொல்ல சொல்ல.. சாங்கியங்களை மாதவன் செய்துக் கொண்டிருந்தான். கண்ணனுக்கு செய்ய வேண்டிய இறுதி காரியங்கள் முடிந்தது. குளித்து வந்தான்.

பிரசாந்த் அய்யரை அனுப்பிவிட்டு வந்தான்.

இப்போது வீட்டு முறை நடந்தது.. பெரியம்மா வந்து முதலில், தங்கள் பெண்ணின் சார்பாக எதோ செய்தார். அடுத்து நீலகண்டதான், என நிற்க. பிரசாந்த் வந்து சம்பந்தி முறை என எதோ செய்தான். உடைகள் எடுத்திருந்தான் போல.. மாதவன் வாங்கிக் கொண்டான், ரஞ்சனி ஏதும் அறியாதவள் போல குனிந்துக் கொண்டாள்.. மாதவன் எரிச்சலாக “ரஞ்சி” எனவும் “ம்.. அண்ணா” என வாங்கிக் கொண்டாள்.

அடுத்துதான் நீலகண்டன்.. அவனும் எதோ கொடுக்க.. மாதவன் இப்போது  குனிந்துக் கொண்டான்.. நீலகண்டன் சங்கடமாக பார்க்க.. ரஞ்சனி எடுத்துக் கொண்டு, அவனை பார்த்து புன்னைகைத்தாள்.. அதில் ஜீவன் இல்லை, உயிர்ப்பில்லை.. ஆனால், அவனை ஈர்த்தது அது. தானும் லேசாக உதடு வளைத்தான்.

அமைதியாக வந்து அரசுவோடு நின்றான்.

அரசு என்னமோ பேசினார்  “பார் பொண்ணு எப்படி இருக்குன்னு.. இன்னும் அவளுக்கு முகமே தெளியலை.. அப்பா போன துக்கம் இருக்கும்தான், ஆனால், பாரு வெறிச்சு போய் இருக்கா” என நீலகண்டனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு நீலகண்டனின் ஒதுங்கி நிற்கும் பாவம் கொஞ்சம் நெருடியது.. எனவே, தன் நண்பனின் வாக்கை காப்பாற்ற.. அவனிடம் பேசினார்.

நீலகண்டன், ரஞ்சனியை பார்த்தான் அவரின் வார்த்தையில்.. கண்ணில் ஜீவனே இல்லை.. உடலும் அன்று போல கூட இல்லை களைத்து., இளைத்து, இன்னமும் வெளிறிபோய்.. எப்படியோ இருந்தாள்.. நீலகண்டன் அவளை ஒருமுறை பார்த்தான் அதன்பின் அவரின் வார்த்தைகளை வாங்கிக் கொண்டான், அவளை பார்க்கவில்லை. 

அதற்கு பதில் பிரசாந்த் அந்த இடத்தை நிரப்பினான்.. அவன்தான் அங்கே நின்றான். ஏனோ அந்த இடத்தில் அவன் நிற்பது உறுத்தியது நீலகண்டனுக்கு. அவன் அங்கு எதற்கு சொந்தத்திற்கு மத்தியின் என தோன்றியது.

இப்போது ரஞ்சனியை பார்த்தான்.. நீலகண்டன். முறை செய்வது எல்லாம் முடிந்திருந்தது.. அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சற்று தள்ளி.. தன் பெரியம்மாவோடு நின்றாள். நீலகண்டன் பார்ப்பதை உணர்ந்து பார்த்தாள்.. நீலகண்டன் சின்னதாக இளகிய முகபாவம் காட்டினான்.. அவளும் அப்படியே காட்டி நின்றாள். அதில் எந்த யோசனையும் இல்லை.. தயக்கமும் இல்லை இருவருக்குள்ளும். இயல்பான பார்வை பரிமாற்றம்.. அவ்வளவுதான்.

பின் நீலகண்டன் உண்டு.. அரசுவோடு நின்றான்.

ரஞ்சனி, பெரியம்மாவோடு உண்டுக் கொண்டிருந்தாள். அவள் முடிக்கும் வரை அமர்ந்துக்  கொண்டிருந்தவன்.. அதன்பின், தலையசைத்தான்.. அவளை பார்த்து. யார் கண்களையும் உறுத்தவில்லை.. கவரவில்லை.. இந்த செய்கைகள். 

பின் ரகுவிடம் “பார்க்கலாம்” என கூறி விடைபெற்றான்.

Advertisement