Advertisement

” அது எப்படி அவள் இந்த வீட்டு மருமகளாக வந்த பிறகு, அவளுக்கு உரிய மரியாதையை நீ கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அண்ணி எந்த என்ற ஸ்தானம் அம்மாவிற்கு சமம்”. என்று வசந்தி சொன்னார்.

      “அப்படிலாம் அவள நெனச்சு கூட பாக்க மாட்டேன்…  நீங்க தான் ஆசைப்பட்டு கல்யாணம் பேசி இருக்கீங்க., இப்ப எனக்கு  எந்த சம்பந்தமும் கிடையாது” என்று பதிலுக்கு கத்தத் தொடங்கினாள் இனியா..

      அதே நேரம் வசந்தியும்., சூர்யாவும் “இதை எப்படி அவளிடம் பேச முடியும். அவர்கள் வீட்டிலும் இதை எப்படி சொல்ல முடியும்,”  என்று கேட்கும் போது சூர்யா மதி இடம் பேசப் போவதாக அலைபேசி எடுத்துக் கொண்டு செல்லவும்  முகிலோ  “ஒரு நிமிஷம் நான் பேசுவதைக் கேட்டுட்டு அதுக்கு அப்புறமா நீ பேசிக்கோ” என்று சொன்னான்.

சூர்யா நின்று பார்த்தான்., அதேநேரம் முகிலன் இனியவை நோக்கி பேசத் தொடங்கினான். “சரி அவ உன் வீட்டுக்கு வரக்கூடாது, நீ இவ்வளவு சொல்லும் போது கண்டிப்பா கூட்டிட்டு வர மாட்டேன்.,    அப்போ என் வீட்டுக்கு நீ வருவியா மாட்டியா”.,என்று கேட்டான்.

     ” உன் வீட்டுக்கு நான் வருவேன்., எனக்கு அதுக்கு உரிமை இருக்கு., என் அண்ணன் வீட்டுக்கு வர்றதுக்கு நான் யார்கிட்டயும் பெர்மிஷன் கேட்கணும்னு அவசியமில்லை”., என்று சொன்னாள்.

            “சரி நீ வருவ., அங்கு வந்து என்ன பண்ணுவ., அவ இருக்குற வீட்ல நீ வந்து எத்தனை நாள் தங்குவ., வந்துட்டு தலையை காமிச்சிட்டு போவியா”., என்று கேட்டான்.

            அதெல்லாம் வருவேன்., அதெல்லாம் இருப்பேன்., என் அண்ணன் வீடு ங்கிற உரிமை ல,  நான் எல்லாம் செய்வேன்”. என்று அவள் அதிகாரமாக பேசினாள்.

          வசந்தி தான் புலம்பினாள் “இவ இப்படி பேசினா எப்படி.., அவளை வரக்கூடாது ன்னு சொல்லுறவ., இவ மட்டும்   உன் வீட்டில் உரிமை கொண்டாடுவாளா., என்று கேட்டார்.

   முகிலன் “நான் மதிக்கிட்ட பேசிக்கிறேன்.,  நீங்க யாரும் இத பத்தி மதி ட்ட சொல்லனும் ன்னு அவசியமில்லை”., என்று சொன்னான்.

   சூர்யா “ஏன்டா பழையபடி மிரட்டி ஏதும் பேச போறியா” என்று கேட்டான்.

 வாழ்க்கையில் “மேரேஜ் ல எல்லாம் அப்படி எதுவுமே பண்ண முடியாது. இது வாழ்க்கை நான் பேசுற விதமா பேசிக்கிறேன்”.என்று சொன்னான்.

“பிரச்சினை வந்துற கூடாது., இப்ப தான் நீ சொன்ன மத்தவங்க முன்னாடி வாழ்ந்து காமிக்கணும். அதையேதான் நானும் சொல்றேன்., மத்தவங்க முன்னாடி வாழ்ந்து காமிக்கணும் அதுக்காகவாவது இனி கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகனும். எப்பவுமே ஒருத்தர் மட்டுமே விட்டுக் கொடுத்து போனா நல்லா இருக்காது  என்று சொன்னான்”.

         முகிலன் “இனியாவிற்கும்., அவளுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. எனக்கும் மதிக்கும் மட்டும்தான்., அந்த இடத்தில் சம்மந்தம் இருக்கும். என் வாழ்க்கை நான் பார்த்துக்கிறேன். கண்டிப்பா அவள நல்ல பார்த்துப்பேன்.,  நீ பயப்படாதே”, என்று தயங்கி தயங்கி பதில் சொன்னான்.

         அதேநேரம் சூர்யாவும் ” இதுதான் நான் உன்கிட்ட பேசணும் நினைச்சேன்.,  மதிக்கு சின்ன விஷயத்தில் கூட பிரச்சினை வருவதை நான் விரும்பல, நீ  இனியா பேச்சைக் கேட்டு,  அவளை ஏதாவது விதத்தில் கஷ்டப்படுத்தினால் அதுக்கப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு கிடையாது.,  கண்டிப்பா உன்னையும்,  மதியும் பிரித்து வைக்க கூட நான் தயங்க மாட்டேன்.,  ஏன்னா எனக்கு மதியோட லைஃப் முக்கியம்., அவ குணத்துக்கு  விட்டு கொடுத்து போவா.,  ஆனால் வாழ்க்கை முழுக்க ஒருத்தி அடிமை மாதிரி போக முடியாது.,  விட்டுக்கொடுத்து அடிமையாக வாழ முடியாது. வாழ்க்கை என்பது ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக் கொடுத்து போவது.,   ஆனால் அது உன்னோட அன்புக்காக விட்டுக் கொடுக்குறதா தான் இருக்கணும்., உன் அதிகாரத்துக்கு விட்டுக்கொடுத்து உனக்கு பயந்து போறதா இருக்கக்கூடாது.,  ஏற்கனவே அந்த பொண்ணுக்கு போலீஸ் உத்தியோகம் பிடிக்காதாம். இப்பதான் கீதா சொன்னா., இந்த அழகுல உன்ன கல்யாணம் பண்ணிக்கவே யோசிப்பா.,  என்ன பண்ண ”  என்று சொன்னான்.

    ” அதெல்லாம் நான் பேசிக்கிறேன்”. என்று இவனும் பதிலுக்கு பேசிக் கொண்டிருந்தான்.

      எப்படியோ அவளை தான் திருமணம் செய்வது என்று முடிவு தெரிந்த பின் அதற்கு ஏற்றவாறு இவனும் பேச., சரி முகிலனுக்கு சம்மதம் என்ற எண்ணம் வீட்டில் உள்ள அனைவருக்கும் வந்தது., இனியா மட்டும் தானே, அது இங்கு வரும்போது மட்டும் தானே, என்று நினைத்துக் கொண்டார்கள்….

       கீதாவிடம் போன் பேசிய சூர்யா.,  “இங்கு நடந்தவற்றைச் சொல்லி, முகிலன் சம்மதித்து விட்டான். இனியா மட்டும் தான் சம்மதிக்கவில்லை. இங்கு வரும் போது தானே சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை வரும்., அதுவும் அருகில் இனியாவின் வீடு, என்பதால் அவள் பெரும்பாலும் இங்கு தங்குவது இல்லை என்பதாலும், பிரச்சினைகள் அதிகம் வர வாய்ப்பு இல்லை எனவே பார்த்துக்கொள்ளலாம்”., என்று சொல்லிவிட்டான்.

     கீதா சூர்யாவிடம் “அண்ணா நீங்க பார்த்துப்பீங்க ன்னு தெரியும்., நானும்  சொல்ற விதமா சொல்றேன்,  மதிய பொருத்தவரைக்கும் அவளுக்கு காதல் அந்த மாதிரி இதுல எல்லாம் பெரிய இன்ட்ரஸ்ட் இல்ல., ஆப்டர் மேரேஜ் தான்,  தனக்கு எல்லாம் அப்படிங்கிற மாதிரி தான் அவ எப்பவுமே பேசுவா..,  அதனால நான்  சொல்கிறேன் விட்டுகொடுத்து தான் போவா., அவளிடம் பேசி பேசி அவளை மாத்திருவேன்,  ஆனால் அவளுக்கு எந்த விதத்திலும் பிரச்சினை வருவதையோ,  அவ மனசு வருத்தப்படுவதோ.,  என்னால தாங்க முடியாது அண்ணா”., என்று கீதா சொன்னாள்.

          ” கண்டிப்பா நீ எப்படி யோசிக்கிறீயோ., அதேதான் நானும் யோசிக்கிறேன்.  எனக்கும் மதியோட சந்தோஷம் முக்கியம்.,  ஆனா முகிலன்  நல்ல பார்த்துக்கிறேன் ன்னு சொல்றான்., நான் நம்ப வேண்டியதா இருக்கு”., என்று சொன்னான்.

        “சரி ண்ணா., நீங்க முதல்ல மதிக்கிட்ட பேசுங்க”., என்று சொன்னாள்.

       “கீதா இல்லமா., வீட்டுல உள்ளவங்க பேசட்டும்., அதுக்கப்புறம் நான் பேசுறேன்”. என்று சூர்யா சொன்னான்.

          சரி என்ற கீதாவும் அதன் பிறகே மதியிடம்  பேசுவதாக சூர்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்…

        எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு சூர்யா வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பேசினான். அதன்பிறகு இரு வீட்டினரும் கலந்து பேசி முடிவு எடுத்துவிட்டு அனைவரும் இருக்கும்போதே,  மதியின்  வீட்டில் வைத்து, மதிக்கு மறுபடியும் அன்றிரவே போன் செய்தனர்.  இனியாவும் அங்கு வந்திருந்தாள், இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கும் பொருட்டு…

        மதி இடம் போனில் அழைத்தவுடன் “என்னப்பா மதியமே கூப்பிடுறேன் சொன்னீங்க.,  இப்ப தான் கூப்பிட்டு இருக்கீங்க” என்று கேட்டுக் கொண்டே., அங்கு தோழிகளோடு ஏதோ பேசும் சத்தம் கேட்டது., “என்ன செஞ்சிட்டு இருக்கீங்க”., என்று அப்பா கேட்டார்.

        “இப்பதான் சாப்பிட்டேன். ஹாஸ்டல் சாப்பாடு என்று சொல்லி சாப்பாடு பற்றி சற்று கிண்டல் செய்துவிட்டு சொல்லுங்கப்பா” என்று சாதாரணமாக பேசத் தொடங்கினாள்.

      அதற்கு இடையில் அவளிடம் பேச வேண்டிய விஷயம் அனைத்தையும் பேசி முடித்து வைத்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு மதி வேலைக்குப் போகவேண்டாம் என்று., எனவே ராஜன் முதலில் அதையே பேசத்தொடங்கினார்.

        “கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக வேண்டாம்” என்று சொன்னார்.

        “அப்பா இப்போதைக்கு 3 மாசம் என்னால வேலையே விட முடியாது. சோ நீங்க கல்யாணம் கண்டிப்பா  மூணு மாசத்துக்கு அப்புறம் தான் வைக்கணும்” என்று சொன்னாள்.

         “இல்லம்மா அது முடியாது ஒரு மாசத்துக்குள்ள கண்டிப்பா கல்யாணம் வச்சி ஆகணும்” என்று சொன்னார்.

   ” அப்ப என்னால உடனே வேலையை விட முடியாது, கண்டிப்பா மூணு மாசம் வேலை பார்த்தே ஆகணும்” என்றாள்.

           “சரி என்றவர் கல்யாணத்திற்கு பிறகு மூன்று மாதம் வேலை பார்ப்பதற்கு மாப்பிள்ளைவீட்டில் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அதன் பிறகு வேலையை விட்டுவிட்டு மாப்பிள்ளை வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்”. என்று மட்டுமே விஷயங்கள் சொல்லப்பட்டது.

      இப்போதுவரை யார் மூலமாகவும் மதிக்கு முகிலன் தான் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்ற விஷயம் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். அப்புறம் கல்யாணத்துக்கு தேதியை பத்தி பேசும்போது அவருக்கு  ஆறு நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்க முடியும் என்று சொன்னாள் ஒருவாரமாக போட்டுக் கொள் அதற்கு மேல் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.

        இவளும் மாப்பிள்ளை யார் என்றுகூட கேட்காமல் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தாள்.  இது அனைவருமே கேட்டுக்கொண்டிருந்தனர் அதே நேரத்தில் பாலன் அவளிடம் பேச வேண்டும் என்பதை  சொல்லியே ராஜனிடம் பேசக் கொடுத்தார்.

           இவள்  எப்பொழுதும் பேசுவதுபோல் சாதாரணமாக ” மாமா நல்லா இருக்கீங்களா.,  அத்தை நல்லா இருக்காங்களா., என்று கேட்டுவிட்டு சொல்லுங்க” என்று சொன்னாள்.

   “உனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக கூடாதுன்னு சொல்லி இருக்கே, அதுல எதுவும் வருத்தமா மதி”., என்றார்…

              ” படிச்சிருக்கேன் வேலைக்கு போகணும்னு ஆசை இருக்கு, இல்லன்னு சொல்லல ஆனா, சிட்டுவேஷன் எல்லாத்தையும் யோசிக்க வேண்டியது தான் இருக்கு, அப்பா சொல்லிட்டாங்க நான் அதுக்கு மேல எதுவும் பேச விரும்பல., மாமா” என்று சொன்னாள்.

   “மாப்பிள்ளை யார் என்று கூட நீ கேக்கலை, என்று கேட்டார்.

    “அப்பா சொன்னா சரியா தான் மாமா இருக்கும்., அதுமட்டுமில்லாமல் சூர்யா அண்ணா கண்டிப்பா விசாரிச்சியிருப்பாங்க, விசாரிக்காமல் அப்பா பேசி முடிக்கிற வரைக்கும் போய் இருக்க மாட்டாங்க…, எனக்கு தெரியும்” என்று சொல்ல சூர்யாவிற்கு தான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

       இவனது குணம் தெரிந்தே மதியை பிரச்சனையான வாழ்க்கைக்குள் இழுத்து விடுகிறோமோ என்ற படபடப்பும் அவனுக்கு இருந்தது…

         பாலனும் “உனக்கு மாப்பிள்ளை பற்றிய விபரங்களுடன் போட்டோவையும் சூர்யா மெயில் ல அனுப்பி வைப்பான். நீ பார்த்து முடிவு சொல்ல வேண்டியது.,  உன்னுடைய கடமை, நாளை காலை மீதியை சூர்யாவிடம் பேசிக் கொள்”.என்று சொல்லி விட்டார்.

        இனி மதியிடம் பேசும் பொறுப்பு அனைத்தும் சூர்யாவை சார்ந்தது. என்னும்படி அனைவரும் பேச்சை முடித்து விடவும். சூர்யா என்ன செய்வது என்று யோசனையோடு அங்கிருந்து அவன் வீட்டுக்கு கிளம்பினான். அவனுடைய யோசனையை கலை புரிந்து கொண்டாலும், கலையும் செய்வதற்கு எதுவு -மில்லை, முகிலன் வேலை இடத்திற்கு கிளம்பு வதாகவும்.,  அவளுடைய போன் நம்பர் மட்டும் வேண்டும் என்றும் கேட்டான். அவளுடைய போன் நம்பரை முகிலனுக்கு கொடுக்கும் போது சூர்யா “எதுவாக இருந்தாலும் இரண்டு நாள் கழித்து பேசு., நான் முதலில் பேசி முடித்து விடுகிறேன். என்று சொல்லி இருந்ததால்., சரி என்று சொல்லிவிட்டு” அவனும் கிளம்பினான்.

வாழ்க்கை யாருக்கு எதை எங்கு வைத்து இருக்கிறது என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் தான் இந்த பயணம் நடந்து கொண்டே இருக்கிறது..

Advertisement