Advertisement

அத்தியாயம் 6

 

விதி விளையாடி தான்

பார்க்கிறது…

 

பகடையாய் அது

உருட்டி விளையாட

உன்னையும் என்னையும்

தேர்ந்தெடுத்தது தான்.,

நமக்கான விதியாகி

போனது…,

 

ஏணியில் ஏறுமா.,

சறுக்கி இறங்குமா.,

எனத் தெரியாமல்.,

 

முதல் முறையாக நம்மை

சேர்த்து  விளையாட

தொடங்குகிறது  விதி….,

 

        மற்ற விஷயங்களை ஊரில் இருந்து பெரியவர்கள் வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்ற முடிவுடன் கோயிலிலிருந்து அனைவரும் வீடு நோக்கி திரும்பினர்.

         ராஜன் சந்திராவுடன் அவர் வீட்டிற்கு செல்ல.,   பாலன் இரண்டு வீடு தள்ளி எதிர் வரிசையில் இருந்த  அவர் வீட்டை நோக்கி குடும்பத்தோடு சென்றார்.  அவர்கள் வீட்டிற்குள் சென்று அமரவும்,  இனியா விஷயத்தை கேள்விப்பட்டு  வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது.

              நேராக முகிலன் இடம் சென்று சண்டையை தொடங்கினாள். “எனக்கு பிடிக்காதுன்னு தெரியும் நீ எப்படி சம்மதிச்ச” என்று கேட்டாள்.

           “அவன் இன்னும் சம்மதம் சொல்லவே இல்லை”. என்று சூர்யா சொன்னான்.

 “அப்புறம் எப்படி கல்யாணம் பேசினீங்க” என்று சண்டை போட்டாள்.

             அங்கு நடந்த பேச்சுவார்த்தைகள் சொல்லப்பட்டது. “இது முகிலனின் கௌரவப் பிரச்சனை நம் வீட்டின் கௌரவமும் இதில் தான் அடங்கி இருக்கிறது”.  என பாலன் சொல்லிக் கொண்டிருத்தார்..

     அவர் பேச்சில் குறுக்கிட்டு “எனக்கு அவளை பிடிக்காது. அவ எங்க அண்ணனுக்கு மனைவியாக வருவதில் எனக்கு விருப்பமில்லை” என்று கத்த தொடங்கினாள்.

             “அவள விட்டா வேற பொண்ணு இல்லையா உலகத்துல., ஏன் வேற யாராவது சொந்தத்துல பொண்ணு தேடுங்க”., என்று சத்தம் போட்டுக் கொண்டிருத்தாள்.

           பாலனின் அப்பா முதல்முறையாக பேத்தியை அதட்டினார். “இங்க பாரு இனியா உனக்கு ஒன்னும் தெரியாது, சின்னப் புள்ளத்தனமா பிஹேவ் பண்ணாத.,  இது நாங்க பெரியவங்களா பேசி முடிவு எடுத்தது. உன்னை விட மதி நல்ல பொண்ணு ங்கிறது நம்ம வீட்டுக்கே தெரியும்”., என்றார்.

            “அது எப்படி நீங்க என்னைய அவளோட கம்பேர் பண்ணி பேசலாம். நான் என்ன குணம் கெட்டவளா”.,  என்று கேட்டாள்.

        “உன் குணத்துக்கு உங்க அண்ணனுக்கு எந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சாலும் நீ பிரச்சனை தான் பண்ணுவ., எங்களுக்கு தெரியும்., அதே இது மதியா இருந்தா உன் குணம் தெரிஞ்சி கண்டுக்காம போயிருவா., வேற பொண்ணு வந்தா, கண்டிப்பா பிரச்சினையாகும் பார்த்துக்கோ”. என்றார்.

       சூர்யா அண்ணன் பொண்டாட்டி ய நான் கொடுமை படுத்துற மாதிரி பேசுறீங்க.. கலை கிட்ட நான் சாதாரண மா தானே இருக்கேன். அதே மாதிரி தான் முகிலன் அண்ணன் வொய்ப் ம்”., என்றாள்.

     ” வேற யார்ட்டையாவது போய் இதை சொல்லு நம்புவாங்க., சின்ன பிள்ளையில் இருந்து என்னை பார்த்தா பயப்படுவ., அவன் ட்டையோ அழுது அடம் பிடிச்சு காரியத்தை சாதிப்ப., பயத்துல தான் நீ கலை கிட்ட வம்பு பண்ணலை, இல்லை னா நீ பண்ணியிருப்ப ன்னு எனக்கு தெரியாதா” என்றான் சூர்யா.

      ” உனக்கு எப்பவும் மதி னா ஸ்பெஷல் தான். என்ட்ட தான் கன்ட்ரோல் எல்லாம்”., என்றாள்.

      “அவ இதுவரைக்கும் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா சொல்லு” என்றான்.

       அவள் முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு திரும்பி நிற்கவும். தாத்தா மீண்டும் இனியாவிடம் பேச தொடங்கினார்..

        “அது மட்டுமில்லாம மதி நம்ம வீட்டில் உள்ள எல்லோரை பற்றியும் அவளுக்கு தெரியும். அவளை பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும்.  அதனால பிரச்சினை இல்லாமல் போகும்.,  ஜாதி மதம் கௌரவம் பார்க்கிற நானே சம்மதிச் -சிட்டேன்., உனக்கு என்ன” என்று  சத்தம் போட்டார்.

“நானும் அதையே தான் சொல்றேன். நீங்க ஜாதி மதம் எதுவுமே பார்க்க வேண்டாம்.  வேற பொண்ண பாருங்க, இவ வேண்டாம்”.என்று கத்தினாள்.

        முகிலன் அமைதியாக  பார்த்துக் கொண்டிருந்தான். சூர்யாவிற்கு தான் கஷ்டமாக இருந்தது. ‘பிரச்சனை இப்பவே தொடங்கும் போது இன்னும் திருமணம் என்று வந்தால் மதியின் வாழ்க்கைக்கு இவளால் ஏதும் வந்து விடுமோ என்ற பயமும் இருந்தது. அதே நேரம் தாத்தா சொன்னது போல் இதில் முகிலனின் கௌரவமும் அடங்கியிருக்கிறது. குடும்பத்தின் கவுரவமும் அடங்கி இருக்கிறது. அத்தனை பேர் முன்பு அவர்கள் பேசிய பின்பு , அப்பாவும் வாக்கு கொடுத்தார். மாமாவும் அப்பாவின் நட்பை மதித்து வீட்டு பெரியவர்களிடம் கூட சம்மதம் கேட்காமல் சம்மதம் தெரிவித்தார். அப்படி இருக்கும்போது இரண்டு குடும்பத்தினரின் மதிப்பும் இதில் அடங்கி இருக்கிறது. என்ன செய்வது முதலில் மதியிடம் எப்படி இதை பற்றி பேசுவது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே’.,  அவனது அலைபேசி அழைத்தது கீதாவின் நம்பரிலிருந்து சூர்யாவிற்கு அழைப்பு வந்தது…..

            சூர்யா போனை எடுக்கவும்., கீதா அவனிடம் “அண்ணா  நீங்க எப்படி சம்மதிச்சிங்க” என்று கேட்டவுடன் கீதாவிற்கு விஷயம் தெரிந்து விட்டது என சூர்யா தெரிந்து கொண்டான்.

           அதே நேரத்தில் அவர்கள் முன்னிலையில் எதுவும் பேச முடியாத காரணத்தினால் “ஒரு நிமிஷம் இரு” என்று சொல்லிவிட்டு போனை எடுத்துக்கொண்டு பின்புறமுள்ள தோட்டத்திற்குள் போனான்.

       அங்கு போனவுடன் “சொல்லுமா” என்று கேட்டான்.

         “எப்படி நீங்க சம்மதிச்சிங்க, ரெண்டு பேருக்கும் எப்படி ஒத்துப்போகும். நீங்க எப்படி நம்புறீங்க”., என்று கீதா படபடப்பாக பேசினாள்.

         “கூட்டத்தில் என்னால எதிர்த்து பேச முடியலை மா”., என்றான்.

         “இது மதிக்கு தெரியுமா ண்ணா”., என்று கேட்டாள்.

           ” யார் மாப்பிள்ளை ன்னு சொல்லல, பேசி முடிக்க போறேன் ன்னு மாமா சொன்னதும்., சரி ன்னு மட்டும் தான் சொன்னா., யார் என்று யாரும் சொல்லலை” என்று சொன்னான்.

           “ஐயோ அண்ணா முதல்ல சொல்லுங்க., கண்டிப்பா சம்மதிப்பா ன்னு எனக்கு தோனல.,  என்ன  ரெண்டு பேருக்கும் எப்பவும் சண்டை., அது மட்டுமில்லாம ஒரு  பெரிய விஷயம்., என்ன னா  மதிக்கு  போலீஸ்  பிடிக்காது அப்படிங்கற ஒரு விஷயமும் இருக்கு.,  எப்படி அண்ணா அவளுக்கு பிடிக்காத இரண்டு விஷயம்.,  இன்னும் ஒன்னு உங்க தம்பி  உங்க தங்கச்சி என்ன சொன்னாலும் அப்படியே நம்பிட்டு சண்டை போடுற டைப்பு., அப்படி இருக்கும்போது அவளை ஹேப்பியா  இருப்பா ன்னு., எப்படி நம்புறீங்க.,    இதனால் மதிக்கு ஏதும் பிரச்சினை வந்தா.,  அவ  வாழ்க்கை வீணாகிரும்., நல்ல யோசிச்சு கோங்க”., என்று சொன்னாள்.

       ” எனக்கு அந்த யோசனை தான்., நான் முகிலன் கிட்ட பேசிட்டு, திருப்பி உனக்கு கூப்பிடுறேன். அதுவரைக்கும் மதிக்கு தெரிய வேண்டாம்”.., என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்…

    சூர்யா, கீதாவிடம் பேசிவிட்டு உள்ளே செல்லும் போது முகிலனோடு தனியே பேசிக் கொண்டிருந்தாள் இனியா., அதே இடத்திற்கு சூர்யாவும் போகவும்., அவர்கள் பேசுவது காதில் விழுந்தது.

    ” நீ அவளை கல்யாணம் பண்ணிகிட்டானா அப்படியே போயிருவ., அப்புறம் உனக்கு என் ஞாபகமே இருக்காது”.  என்று சொன்னாள்.

          முகிலன் “அப்படி எல்லாம் இல்ல, நான் உன் அண்ணனா இருக்க வேண்டிய இடத்துல கண்டிப்பா உன் அண்ணனாக மட்டும்  தான் இருப்பேன்., என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா”., என்று கேட்டான்…

          “நீ சொல்றத பார்க்கும் போது, உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் அப்படித் தானே”., என்று இனியா முகிலன் இடம் கேட்டாள்.

        முகிலன் சொன்ன வார்த்தை சூர்யாவிற்கு ஒருபுறம் நிம்மதியை கொடுத்தது.  “இது என்னோட கௌரவப் பிரச்சினை இனியா., அப்பாவோட கௌரவத்தை காப்பாற்று -வதற்காக மாமா பொண்ணு கொடுக்க., அவகிட்ட கேட்காமலேயே சம்மதம் சொன்னாங்க., அதே மாதிரிதான் மதியும் சொன்னா.,  யார் மாப்பிள்ளை என்னன்னு எதுவுமே தெரியாம தான் , அப்பா பாத்தா சரி அப்படின்னு சொன்னா, அப்படி இருக்கும் போது நம்ம அப்பாவும் அவங்க அப்பாவும்  ஊர் முன்னாடி அதுவும் நம்ம சொந்தகாரங்க முன்னாடி சொன்ன விஷயங்கள் மாறிவிடக்கூடாது. அது தப்பா போய்டும், இது சாதாரண பிரச்சனை கிடையாது, வாழ்க்கை பிரச்சனை.,அதுவும் அந்த பொண்ணு வீட்டு சைடில் உள்ள  ஒருத்தர் சொன்னாரு., கல்யாணத்துக்கு கூப்பிடுங்க வாரேன்.,  நாங்களும் இங்குதானே இருக்க போறோம்., அவங்க எப்படி வாழுறாங்கன்னு பாக்க தானே போறோம் ன்னு  சொல்லிட்டுப் போனாரு..,  எல்லாருக்குமே தெரியும் உனக்கு அந்த பொண்ணு கண்டாலே பிடிக்காது ன்னு.,  அப்படி இருக்கும் போது இப்ப எல்லாரும் எதிர்பார்க்கிறது என்னன்னா…, இந்த கல்யாணம் நடக்காது, நடந்தாலும் சேர்ந்து வாழ மாட்டாங்க.,  அப்படிங்கறது தான்.. அப்படி இருக்கும்போது அவங்க முன்னாடி வாழ்ந்து காண்பிக்கனும்.,  இப்ப  நீ தான் யோசிக்கணும்., நான் இப்பவும் சொல்றேன் உன் அண்ணனா இருக்க வேண்டிய இடத்துல கண்டிப்பா உன் அண்ணனா தான் இருப்பேன்.  அத மறந்துடாத” என்று சொன்னான்.

         இனியா பதிலுக்கு சொன்ன வார்த்தை மறுபடியும் சூர்யா, முகிலன் இருவருக்குமே ஒரு வித பயத்தை உண்டு பண்ணியது.  நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது.,  ஆனால் என் வீட்டு விசேஷத்துக்கு எதுக்கும் அவளை நீ கூட்டிட்டு வர கூடாது., அதற்கு சம்மதம் னா.,  அவளை கல்யாணம் பண்ணிக்கோ எனக்கு ஒன்னும்  பிரச்சனை கிடையாது. ஆனால் அவ கிட்ட நான் பேசனும் ன்னோ.,  அவ கூட சாதாரணமாக பழகவேண்டும் ன்னோ எதிர்பார்க்காத.,  நான்  அவ கூட பேச மாட்டேன்., அவளை வெளியே அண்ணி ன்னு சொல்ல மாட்டேன்.,  அவ்வளவுதான் இதுக்கு மேல என்ன எதிலும் கட்டாயப்படுத்தக்கூடாது”.  என்று சொல்லவும்., என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் அமைதி காத்தனர்..

     அவள் ஆசை பட்டதை செய்து கொடுத்துப் பழகிய முகிலன் இதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவும்., சூர்யாவும் வசந்தியும் சத்தம் போட்டனர்.

Advertisement