அங்கு மறுபடியும் பேச்சுவார்த்தை பிரச்சினையை தொடக்கி வைத்தது…
இதற்கிடையில் திருமணப் பேச்சு தொடங்கிய போதிலே அந்த பேசப்படும் பெண்ணுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்பது கலையின் உறவுக்காரப் பெண் மூலமாக தகவல் எட்டியிருந்தது. அதை சூர்யா அந்த இடத்தில் சொல்லி காட்டவும். பெண்வீட்டார் களிலுள்ள சொந்தக்காரர் ஒருவர் எதிர்த்து பேசத் தொடங்கினார்., “அதனாலதான் இப்போ இங்க பிரச்சனை மாதிரி நீங்க சொல்றீங்க” என்று அவரை வாய்விட்டு தொடங்கினார்.
“இவ்வளவு பேசுறீங்களே உங்களுக்கு பொண்ணு சொந்தத்துல கிடைக்கலைன்னா., இங்க வந்துருக்கும் உங்க அப்பாக்கு பிரண்ட் இருக்காரே ரொம்ப வருஷமா., குடும்பத்தில் ஒருத்தரா., அவர் வீட்டிலேயே ஒரு பொண்ணு இருக்குல கொடுப்பாரா ன்னு கேளுங்க”., என்றார்.
“அதெப்படி என்ன தான் ப்ரண்ட்ஸ் னாலும் அவங்க இனத்தை தானே பார்ப்பாங்க”., என்றார் பொதுவான சொந்தத்தில் ஒருவர்.
“எங்க குடுக்க சொல்லுங்க பார்ப்போம் கொடுக்க மாட்டார்., இப்ப உள்ள காலத்துல போலீஸ்காரனுக்கு பொண்ணு கொடுக்க அது எவ்வளவு பெரிய சொந்தமாக இருந்தாலும் சரி., ரத்த சம்பந்தம் இருந்தாலும் சரி., கொஞ்சம் யோசிக்க தான் செய்வாங்க, சும்மா பொண்ண எல்லாம் கொடுக்க முடியாது., இப்போ உள்ள நிலவரம் தெரியுமா போலீஸ்காரன் னா, ஒரு பயம் எரிச்சல் அதிகமா தான் இருக்கு தெரியுமா., அந்த டிவியில் போட்டு காட்டுறான் இல்ல, போலீஸ் என்னென்ன செய்தான்” என்று அந்த பெண் வீட்டு மனிதர் தொடங்கினார்…
அதற்குள் சூர்யாவிற்கு கோபம் வந்து., “அந்த மீடியா காரங்களைக் என்று பல்லை கடித்த படி., இல்லாத விஷயத்தை எல்லாம் பெருசு பெருசா காட்டிட்டு., இருக்கிற உண்மையான விஷயத்தை காட்டாம விட்டு கேவலப்படுத்துகிறார்கள்., அத அப்படியே நம்புற மக்களை…. என்று சத்தம் போட்டுக் கொண்டே அவனுக்குன்னு பொறந்த பொண்ணு எங்க இருந்தாலும் வருவா பொண்ணு கொடுக்கவில்லை னா கிளம்புங்க., என்று சத்தம் போடவும்” அதுவரை பேசாமல் இருந்த பாலன் அப்போது பேச தொடங்கினார்…
“எல்லாரும் இருங்க கல்யாணம் பேச வந்துட்டு, கல்யாணம் பேசாம போகக் கூடாது., எல்லாரும் அப்படியே உட்காருங்க இதற்காகவெல்லாம் போகாதீங்க., எப்ப நாளும், நீங்க சொந்தமில்லை ன்னு இருக்க போறது இல்ல., நாளைக்கு எங்க பையன் கல்யாணம் ஆனாலும் உங்களுக்கெல்லாம் பத்திரிக்கை வைக்க தான் செய்வேன்., எல்லாரும் கண்டிப்பா வரணும்”., என்று சொல்லிவிட்டார்.
முதலில் அவன் அப்பாவிடம் திரும்பி பார்க்கவும். பாலனின் அப்பா கண் ஜாடையில் சம்மதம் தெரிவிக்கவும். ராஜனிடம் திரும்பி “ராஜா இத்தனை வருஷம் நட்பு ங்கிற., அந்த உரிமைல கேக்கறேன் உன் பொண்ண என் வீட்டுக்கு மருமகளா அனுப்பு”., என்று கேட்டார்.
சூர்யா ஏதோ சொல்ல வர சூர்யாவை பேசாதே என்பது போல் கையை காட்டி நிறுத்திவிட்டார், பாலன். அதற்கு மேல் அந்த இடத்தில் சூர்யாவால் எதுவும் பேச இயலவில்லை, சூர்யா முகிலனைப் பார்க்க முகிலன் சூர்யாவை பார்த்து அமர்ந்து இருந்தான்…
சொந்த பந்தங்களுக்கு அதிர்ச்சி தான்., உறவுகளுக்குள் ஒரு வார்த்தை பேசவில்லை அமைதியாகவே இருந்தது அந்த இடம்., ராஜனும் பதில் பேச முடியாத சூழ்நிலையில் அங்கு பெண்கள் பகுதியில் வசந்தியின் அருகில் அமர்ந்திருந்த சந்திராவை பார்க்க சந்திரா சம்மதம் என்பதுபோல் கண் அசைக்க ராஜனும் “பெரியவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டுக்கோ” என்று சொல்லவும் பாலனின் அப்பா பேச தொடங்கினார்.
வயதில் மூத்தவர் என்ற முறையில் அவர் சொன்னார். “இந்த காலத்தில் யார் ஜாதிய பார்க்க., நமக்கு அதெல்லாம் வேண்டாம், நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கணும் அவ்வளவு தான்., இத்தனை பேர் முன்னாடி சொல்லிட்டாங்க., இப்போ என் மகன் அவனோட இத்தனை வருஷ நட்பு, உன் நண்பனோட மரியாதையை காப்பாற்ற வேண்டிய இடத்தில நீ இருக்க., பொண்ண பெத்தவன் நீ என்ன முடிவு பண்ணினாலும் பண்ணிக்கோ” என்று சொல்லவும்., தன் நட்புக்காக தன் மகளை அங்கு பெண் கொடுக்க அனைவர் முன்னிலையிலும் சம்மதம் தெரிவித்தார்…
அதேநேரம் பெண் வீட்டை சேர்ந்த ஒருவர் வேண்டுமென்றே., ராஜனிடம் “உன் பொண்ணு வெளியூர்ல தான் படிச்சு இப்ப அங்க தான் வேலையும் பார்க்குது., ஒரு தடவை நல்ல கேட்டுக்கோ கல்யாணத்தப்ப மாப்பிள பிடிக்கலன்னு சொல்லிட்டு போயிர போகுது அல்லது வேற எங்கேயும் யாரையும் லவ் பண்றேன்னு சொல்லிர போகுது, நல்லா கேட்டுட்டு பேசி முடிவு பண்ணுங்க., இங்க இருக்க பொண்ணுக்கு 1008 கதை சொல்லுவாங்க., நாளைக்கு உன் பொண்ணு மேல கதையை திருப்பி விடுவார்கள்”. என்று சொன்னார்…
“யாரும் தப்பா நினைக்காதீங்க…, என் பொண்ணை நான் அப்படி வளர்க்கல., உங்களுக்கு எல்லாம் நம்பிக்கை இல்லைன்னா., இப்போ போன போடறேன்., ஸ்பீக்கர் ல போடறேன் நீங்களே கேளுங்க” என்று சொல்லிவிட்டு தன் அலைபேசியில் இருந்து மதியின் எண்ணிற்கு அழைத்தார்…
இரண்டு மூன்று ரிங் போனவுடன் போனை எடுத்து அவள் “அப்பா சொல்லுங்கப்பா., இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கீங்க, என்ன பா” என்று கேட்டபடி பேச்சை தொடங்கினாள்., அவள் பேசுவதை கேட்பதற்காகவே இங்கு அனைவரும் அமைதியோடு இருந்தது போல தோன்றியது.,
முகிலனும் சரி, சூர்யாவும் சரி, ஆளுக்கொரு என்ன போக்கில் இருந்தனர்.
இனியா தற்செயலாக அன்று வர இயலாத காரணத்தினால் கோயிலுக்கு வரவில்லை, அவள் என்ன சொல்வாள் என்று தெரியாது என்ற யோசனையுடன் முகிலனும்., இந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தால் இந்த முட்டாள்தனமான பாசமுள்ள அண்ணனும் தங்கையும் என்ன செய்வார்களோ என்ற பயம் சூர்யாவையும் பிடித்து ஆடிக்கொண்டிருந்தது..
அதேநேரம் ராஜன் தன் மகளிடம் பேச தொடங்கியிருந்தார். “அப்பா உனக்கு மாப்பிள்ளை பேசி முடிவு பண்ணிட்டேன் டா., அதனால இப்போ பேசி முடிச்சிடலாம் முடிவு பண்ணி இருக்கேன்., நீ என்ன பதில் சொல்ற”., என்று கேட்கவும்..
“அப்பா உங்களுக்கு தெரியாது ஒண்ணுமே இல்ல, நீங்க என்ன செஞ்சாலும் சரியா தான் இருக்கும்” என்று அப்புறம் இருந்து மதியின் பதில் கேட்டது…
“உனக்கு முழு மனசா சம்மதமா., மா நீ மாப்பிள்ளை பார்க்கணுமா” என்று கேட்டார்.
“இல்லப்பா., நீங்க பார்த்து முடிவு பண்ணா போதும்., எனக்கு இப்ப லீவு கிடைக்காது., அதனால நீங்க கல்யாணம் பேசுவதாக இருந்தாலும் மூணு மாசம் அப்புறம் கல்யாணம் பேசுங்க… மூன்று மாசத்துக்கு எனக்கு லீவு கிடைக்காது., அது ஒன்னு தான் எனக்கு இப்போ இருக்குற ப்ராப்ளம்”. என்று சொன்னாள்….
அதற்குள் அங்கு லேசான பேச்சு சத்தம் கேட்கவும்., “அப்பா வெளியே இருக்கீங்களா அப்புறம் பேசுவோம்” என்று சொன்னாள்.,
“மதி இல்லமா, திருப்பி ஒரு அஞ்சு நிமிஷத்துல நான் கூப்பிடுறேன்” என்று சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டு பாலனை திரும்பி பார்த்தார்.
பாலனும் “எனக்கு தெரியும்டா., மதி இப்படித்தான் சொல்லும் ன்னு., நம்ம பிள்ளையை பத்தி நமக்கு தெரியாதா., நான் பார்த்து பிறந்து வளர்ந்த பிள்ளை., அவ எப்படிப்பட்டவள் ன்னு எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு பேசிய மற்றவர்களை பார்க்கும்போது மற்றவர்களும் எதுவும் பேசவில்லை…
ஆனால் பெண் வீட்டில் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருந்த ஒருவர் “பொண்ணு யாரையாவது லவ் பண்ணுதா ன்னு கேட்டுக்கோங்க”என்று சொன்னார்.
சூர்யா கோபப்பட்டு பேச தொடங்கினான். “என் தம்பியை கூட நான் சந்தேகப்பட்டு கேட்பேன்., ஆனால் மதியை பத்தி எனக்கு தெரியும், மதி அந்த மாதிரி எதுவும் கிடையாது, அது எனக்கு தெரியும். அவ யார் கூட பழகுறா, பேசறா, என்பது வரை சொல்லிவிடுவாள். அதனால அவளை பார்த்து ஒரு வார்த்தையை நீங்க யாரும் சொல்லாதீங்க” என்று சொன்னான்.
“சரிப்பா உங்க வீட்டு விசேஷம் நல்லபடியா நடத்துங்க., கல்யாணத்துக்கு சொல்லுங்கப்பா வாறோம்., நாங்களும் பாக்க தானே போறோம், எப்படி வாழ்ந்து காட்டுறாங்க”என்று சொல்லிவிட்டு அவர்கள் கிளம்ப தொடங்கினார்கள். அந்த பெண் வீட்டை சேர்ந்தவர்கள்.
அதே நேரம் சூர்யா மறுபடியும் மதிக்கு போன் செய்ய சொன்னான்..
பாலனோ, “முதலில் எல்லாம் பேசிவிட்டு அதன் பிறகு மதியிடம் நாங்க எல்லாம் சேர்ந்து பேசுகிறோம், போன்ல என்று சொன்ன பிறகு” சூர்யாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.,
அதே நேரம் கலையும் சூர்யாவை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனெனில் இனியா கண்டிப்பாக வம்பு செய்வாள் என்று தெரியும், அதை தான் கலை வசந்தியிடம் தனியாக அழைத்து சொல்லிக்கொண்டிருந்தாள்.
“ஓ ஓ எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்”, என்று வசந்தி சமாதானம் சொல்லிக் கொண்டார்.
சூர்யாவின் மனநிலை தான் ஒருபுறம் சந்தோஷமாகவும் மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது. அவள் தங்கள் வீட்டுக்கு வருவது மகிழ்ச்சி என்றால் தம்பியின் குணம் அவன் தங்கை மீது வைத்திருக்கும் பாசம் எல்லாம் தெரிந்ததால் மனதிற்குள் சிறிது வருத்தமாகவும் இருந்தது.
அதைப் பற்றி முகிலனிடம் பேச வேண்டும், என்று முடிவு செய்து கொண்டான், அதையே அவனிடம் சொல்லி விட்டு, ” உன்னோடு தனியாக பேச வேண்டும். அதன்பிறகுதான் நீ உன் முடிவை சொல்ல வேண்டும்” என்று சொல்லியிருந்தான்.
முகிலன் இதுவரை அவன் வாயிலிருந்து சம்மதம் என்ற வார்த்தை சொல்லவில்லை. இருந்தாலும் சரி என்று சூர்யாவிடம் சொல்லி கொண்டு அவன் ஊருக்கு கிளம்புவதை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.,
அனைவரும் அவரவர் வீட்டு நோக்கி கிளம்ப பாலனும், ராஜனும் தான், தங்கள் பிள்ளைகளின் வாழ்வை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
வீட்டின் பெரியவர்களாக ராஜனின் அப்பாவை ஊரிலிருந்து வர சொல்வதாக இருந்தது, அதன்பிறகு இரு வீட்டாரும் சேர்ந்து திருமணம் பேசி முடிவு செய்யலாம், என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
அங்கு விருப்பமே இல்லாத இருவரை திருமணத்தில் கட்டிப்போடும் சூழ்நிலையை காலமோ , இல்லை விதியோ, ஏதோ ஒன்று அங்கு முடிச்சு போட்டு விட்டு விளையாட்டை வேடிக்கை பார்க்க விதி காத்திருந்தது…