மற்றவர்கள் அவர்கள் பின் வந்து கொண்டிருந்தனர். இனியாவை பார்ப்பதற்காக முகிலன், அவள் வீட்டிற்கு சென்றுவிட்டு அவளையும் வரச்சொல்லி தாமதமாக கோயிலுக்கு வந்து சேர்ந்தான்., அதேநேரம் அவன் பின்னோடு இனியாவும் அவள் கணவனோடு வந்து சேர மதி இவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் சற்று விலகி நின்றாள்.
அந்தநேரம் கீதாவும் வந்து சேர பேசிக்கொண்டே தள்ளி நின்று விட்டாள். அவள் முதுகுப் புறம் மட்டுமே தெரிந்ததால் இவர்களும் அவளை கண்டுக் கொள்ளவில்லை, அவர்கள் நிற்பது தெரிந்ததால் திரும்பி கூட பார்க்கவில்லை.
கீதா “ஏன் இங்கே நின்னுட்ட”.என்று கேட்டாள்.
” துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்று பழமொழியே இருக்கு., “நாம போயி பிரச்சனை எடுத்துக்க கூடாது. அதனால தான் நான் இங்கே நிற்கிறேன்”. என்று பேசிக் கொண்டு குழந்தையை வைத்துக்கொண்டு இங்கேயே நின்றாள்.
சற்று நேரத்தில் கலையை நோக்கி குழந்தையை அனுப்பி விட்டு., குழந்தை அவர்களிடம் சென்றதை கண்ட பின்., அம்மா அப்பாவிடம் தொலைபேசியில் அழைத்து தான் முன்னே வீட்டிற்கு செல்வதாகவும், நீங்கள் பின்னே வாருங்கள் என்று சொல்லிவிட்டு வேகமாக இறங்கி சென்றாள்.
இதை முகிலனும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் விலகி செல்பவளை பார்ப்பதே தவறு என்ற காரணத்தினால் அவனும் அமைதியாகவே இருந்து கொண்டான். அவனுக்கு எப்போதாவது தான் விடுமுறை கிடைக்கும். விசேஷங்களுக்கு இப்பொழுதெல்லாம் கலந்து கொள்ள முடிவதில்லை., ஏனோ இந்த முறை புது வருடத்திற்கு விடுமுறை கிடைத்தால் வந்தான், அதுவும் நாளை மறுநாள் காலை கிளம்பி விடுவான். எனவே அந்த நேரங்களில் குடும்பத்தினருடன் செலவழிக்க அவன் விரும்பினான்.
வீட்டிற்கு வந்த பிறகுதான் இனியா சூர்யாவிடம் ” பாப்பாக்கு இந்த ட்ரெஸ் எப்ப வாங்குன, அதுவும் அவ போட்டிருக்க கலர் டிரஸ் வாங்கி இருக்க,” என்று கேட்டாள்.
கலைதான் “இல்லை இது பாப்பாவிற்கு மதி வாங்கிட்டு வந்த டிரஸ் அவளுக்கு பிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஒரே கலர் எடுத்திருக்காங்க, அதனால அம்மு க்கும் அந்த கலரில் டிரெஸ் எடுத்துட்டு வந்து இருக்கா, அதை எப்படி நாங்க ஏன் எடுத்துட்டு வந்தே ன்னு கேட்க முடியும்”.என்றாள்.
” அவ வாங்கி கொடுத்தால் உடனே போடுவீங்களா”., “போடனும் ன்னு என்ன கட்டாயமா இருக்கு” என்று கேட்டாள்.
சூர்யாவோ., ” இனியா தேவையில்லாமல் பேசாதே அம்மு மேல பாசமா இருக்கா…, அதை அம்முட்ட காட்டுறா, நாங்க அப்படித்தான் போடுவோம் இதுல நீ தலையிட அவசியம் இல்லை. உன் பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்கலை புரியுதா, நீயும் என் பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்கலை., அதனால நீ தேவையில்லாம பேசாதே என்று சொன்னான்”.
” நான் உன் பிள்ளைக்கு வாங்கிக் கொடுத்ததே இல்லை என்று சொல்லி காட்டுரையோ” என்று இனியா அதை சண்டையாக மாற்ற முயல.
முகிலன் தான் சத்தம் போட்டான். “தேவையில்லாம பேசாத இனியா விடு” என்று சொன்னான்.
“நீ என்ன சூர்யாவுக்கு சப்போர்ட் பண்ற” என்று முகிலன் இடம் இனியா பேசத் தொடங்கினாள்.
“சப்போர்ட் பண்ணல… இது உனக்கு தேவையில்லாதது, அவன் பிள்ளைக்கு என்ன கலர் டிரஸ் போடுறான், யார் வாங்கி கொடுத்ததை வாங்கி போட்டா உனக்கு என்ன…? உன் வேலையை பாரு என்று சொன்னான்.
அதேநேரம் விளையாடிக் கொண்டிருந்த அம்மு வந்து அவனை நோக்கி சித்தப்பா என்று மழலையில் அழைத்தாள்.
“என்னடா தங்கம்” என்று கேட்கவும்
” சாக்லேட் இருக்கு எடுத்து தா என்று அது மழலையில் கேட்டாள்”.
“நிறைய சாப்பிடக்கூடாது” என்று சொன்னான்.
“சித்தப்பா நீயும் மதிம்மா மாதிரி சொல்லுறீங்க” என்று தொடங்கினாள்.
அதற்கும் இனியா பிடித்துக் கொண்டாள். “அது எப்படி மதிம்மா ன்னு கூப்பிடுவா.., நீ ஏன் அப்படி பழக்குற என்று கலை இடமும் சூர்யாவிடம் இனியா சண்டைக்கு கிளம்ப கலை ஒரே வார்த்தையில் முடித்து விட்டாள்., அம்முஅப்பா, மதிம்மா ன்னு தான் மதியை கூப்பிடுவாங்க, அம்முவும் அப்படியே கூப்பிடுறா., மற்றபடி யாரும் சொல்லிக் கொடுத்து கூப்பிடல சின்ன குழந்தைங்க அப்படித்தான் இருக்கும்., என்று சொன்னாள்.
குழந்தையோ “மதிம்மா வாங்கித்தந்த சாக்கி தான்” என்று அவள் மறுபடி கதை பேசிக் கொண்டிருப்பதை கேட்டவள்.
“அவ என்ன வாங்கி கொடுக்கறது, அவ எப்போ வீட்டுக்கு வந்தாள்”., என்று கேட்டு இனியா மறுபடி பேச தொடங்கினாள்.
அப்போது பாலன் தான் சத்தம் போட்டார். “உன் வீட்டுக்கு யாரும் வரல என் வீட்டுக்கு யார் வருவதை யாரும் கேட்கக்கூடாது” என்று சத்தம் போட்டவுடன் பாலன் கவனிப்பதை கண்டு இனியா அமைதியானாள்.
அதேபோல அங்கு மதியும், மதியின் அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டிருந்தாள். “அது என்ன பொம்பிள பிள்ளைக்கு அப்படி ஒரு குணம். கல்யாண வயசு ஆயிடுச்சு, இன்னும் ஒரு வருஷம் ரெண்டு வருஷத்துல கல்யாணம் கட்டி கொடுத்திடு -வோம்., கோயிலுக்கு வந்த இடத்தில பெரியவங்க கிட்ட பார்த்து எப்படி இருக்கீங்க, என்ன ன்னு பேசுறது இல்லை” என்று சத்தம் போட்டு திட்டினார்.
“அம்மா, ஏன் மா இப்படி, அத்தையும் மாமாவும் பாக்குறேன், சூரியா ணா பார்க்கிறேன், கலையக்கா வையும் பார்க்கிறேன், அம்மு வந்தா தூக்கிட்டு போனேன். இதுல என்ன இருக்கு, ஏன் இப்ப சத்தம் போடுறீங்க., ஏன் அங்க இனியா இருந்தா நான் வந்தா, என்னை பார்த்தாலே இனியாக்கு ஆகாதுன்னு தெரியும்., தெரிஞ்சும் திருப்பி நா அங்கே வந்தா நல்லா இருக்காது, புரிஞ்சுக்கோங்க.. அதனாலதான் நான் அங்க இருந்து அப்படியே கிளம்பி வந்தேன்., ஏன் தேவையில்லாம பிரச்சனையை கிளப்பனும், நல்ல நாள் அதுவுமா சாமிய கும்பிட்டோமா., வந்தோமா ன்னு இருக்கனும்., நாளைக்கு ஈவினிங் நான் கிளம்பிருவேன். பேசாம இருங்க நாம பிரச்சினைக்கு போககூடாது., அடுத்த வீட்டில் எப்படி இருந்தால் நமக்கென்ன., அப்பாவோட பிரண்ட் மாமா அவ்வளவு தான்., அதுக்கு மேல நமக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது”.
“பதிலுக்கு பதில் நல்ல பேசு” என்றார்
“சரி. மா சும்மா இருங்க… டேய் வாடா டிவில எவ்வளவு ப்ரோக்ராம் இருக்கு., அத விட்டுட்டு நான் அம்மாகிட்ட வாயை கொடுக்க வேண்டியதா இருக்கு., நீ வாய் பாத்துக்கிட்டு இருக்க., ஒழுங்கா டிவி ல ரெண்டு பேரும் முடிவு பண்ணி ஒரு சேனல் வைக்கணும்., எப்ப பாத்தாலும் சேனல மாத்தி மாத்தி வைச்சிட்டு இருந்தா மண்டையில் அடிச்சிடுவேன்”.
“அக்கா நான் காலேஜ் போயிட்டேன். இன்னும் என்ன திட்டிக்கிட்டே இருக்காத, சின்ன பிள்ளை மாதிரி”,
“நீ எப்பவும் எனக்கு சின்ன பையன் தான் டா, வா டா” என்று தம்பியை அழைத்துக் கொண்டு போய், இருவரும் சேர்ந்து முடிவெடுத்து எந்த சேனலை பார்ப்பது என்று பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
“நான் சொல்றது எதையாவது இவ காதுல வாங்குறாளா பாத்தீங்களா., அடுத்த வருஷத்துல மாப்பிள்ளை பாருங்க சொல்லிட்டேன், போதும் போதும் இவ வேலைக்கு போனதெல்லாம், ஏன்டி பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரே கலர்ல டிரஸ் எடுக்குறீங்க சரி, எடுக்குறது தான் எடுக்க ஒரு சேலை எடுத்தா என்ன., கல்யாணம் முடிச்சு கொடுக்கும் போதேல்லாம் நிறைய சேலை வேணும் இல்ல”, என்றார்.
” ஐயோ அம்மா ப்ளீஸ் விடுங்க., நீங்க கோயிலுக்கு போயிட்டு வந்த பிறகுதான் இப்படி பேசுறீங்க, ஆறு நாளா வீட்டுக்குள்ள தான் இருக்கேன்., ஏதாவது சொல்லி இருக்கீங்களா”.
“சரி சாமி, இப்ப என்ன உன்ன ஒன்னும் சொல்ல கூடாது, அவ்ளோதானே சொல்லல, உங்க அப்பாட்ட சொல்லி அடுத்த வருஷம் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்க சொல்லுறேன். போய் உன் மாமியார் வீட்டுல உன் இஷ்டப்படி இரு”.
“அய்யோ ஆள விடுங்க, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்., நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிறேன். அவ்வளவு தான், அதுக்காக மாட்டேன் ன்னு நான் சொல்லல ஆனா கொஞ்ச நாள் ஆகும். இப்போ பத்து மாசம் தான ஆகுது ஜாயின் பண்ணி., லூசு பையன் ஆர்டர் லேட்டா அனுப்பிட்டான். அதனாலதான் பத்து மாசம் ஆகுது, இன்னும் இரண்டு மாசம் போச்சு னா தான் ஒன் இயர் ஆகும்”,
“ஆமா நீ கல்யாணம் பண்ணா தான், காலாகாலத்துல நாங்களும் பேரனோ, பேத்தியோ, பார்க்க முடியும்”.,
“ஐயோ சாமி நீங்க பாட்டி தாத்தா ஆக, நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது. பேசாம இருங்க ம்மா, ப்ளீஸ் டிவி பார்க்க விடுங்கம்மா, வேலைக்கு போயாச்சா டிவி பாக்குறதுக்கே டைமே கிடையாது ., நீங்க சொல்ற மாதிரி அந்த கம்ப்யூட்டர் கட்டிட்டு இருக்கேன், இப்ப தான் ஃப்ரீயா இருக்கேன், கொஞ்சம் டிவி பார்த்துக்கிறேன், விடுங்க உங்கள மாதிரி சீரியலா பார்க்கிறேன், எப்பவாது இந்த மாதிரி ப்ரோக்ராம் போடும்போது பாக்குறேன், ப்ளீஸ் ப்ளீஸ் நான் படம் பார்க்கல ரொம்ப நாளாச்சு பார்த்துக்கிறேன்”, என்று சொல்லி சமாதானம் செய்துவிட்டு தம்பியோட அமர்ந்து டிவி பார்ப்பதை முக்கியமான வேலை ஆக்கிக்கொண்டு கண்களையும் காதையும் தொலைக்காட்சிக்கு கொடுத்துவிட்டு அவர்கள் பேசுவது எதுவும் கேட்காதது போல அமர்ந்து கொண்டாள்.