Advertisement

கார்த்திக் விசாரித்தான் பரணியை, பரணி ஒன்னும் பிரச்சனையில்லை. நாங்கள் அவரை பார்க்கவேயில்லை.. உமேஷ்ஷை பார்க்க கூட வரவில்லை என்றுவிட்டான்.

கௌசல்யா ‘அதான் நீங்க அவனை பார்க்கவே விருப்படபலையே.. அப்புறம் எப்படி வருவான்’ என்றார்.

என்ன சொல்லுவான் பரணி.. அமைதியாகிவிட்டான். உண்மைதான் நாங்கள் பார்க்க விருப்படவில்லை. அதே போலதானே அவரும் என சொல்ல வாய் வந்தது. ஆனாலும் பரணி பேசி ப்ரோயோசனம் இல்லை என அமைதியாகிவிட்டான்.

இப்போது இனியன் கொஞ்சம் பயந்த குரலில் தன் அன்னையிடம் ‘அம்மா, அத்தை மேல.. இடுச்சிட்டேன் ம்மா’ என்றான்.

சாரதா அப்போதுதான் என்ன என பார்க்க.. காயத்ரி ஒருஓரமாக அமர்ந்திருந்தாள்.. சாரதா இப்போது அங்கே சென்று என்ன என வினவிக் கொண்டிருந்தாள்.

கௌசல்யா ‘அது ஒண்ணுமில்ல.. ரெண்டுபேரும் விளையாடும் போது தெரியாம, இனி அவள் காலில் போட்டுட்டான்.. அதுவாக விழுந்திடுச்சி’ என்றார் பேரனை விட்டுக் கொடுக்காமல்.

பரணி, இப்போதுதான் பார்த்தான் காயத்ரி எங்கே என.. தன் அக்கா விசாரிக்க.. காயத்ரி,  வலது கால் காட்டி.. பேசிக் கொண்டிருந்தாள். கன்றி போய் இருப்பதாக தோன்றியது பரணியின் கண்களுக்கு.. அவளின் முகமே சரியில்லை. அருகில் சென்று பார்க்க எண்ணம் எழுந்தாலும்.. கார்த்திக் இருக்கிறான் என அப்படியே அமர்ந்திருந்தான் பரணி.

இப்போது பரணி “இனி, ஒடகூடாது குறும்பு பண்ண கூடாதுன்னு சொல்லிட்டுதானே போனேன்” என அதட்டினான்.

காயத்ரி தன் அண்ணியை எட்டிக் கொண்டு, பரணியை பார்த்து “இப்போது எதுக்கு இனியை பேசுறீங்க, அவன் பாவம்.. அவனை ஏதும் சொல்லாதீங்க, இனி அத்தைக்கு தண்ணி எடுத்துட்டு வா” என அனுப்பினாள்.

பரணி பொதுவில் அவ்வளவாக பார்க்க மாட்டானே.. எனவே, ஏதும் பேசாமல்.. அவளை நொடி நேரம் கூட முறைக்காமல், கார்த்தியிடம் “க்கும்.. சரிங்க, நான் கிளம்பறேன்..” என சொல்லி எழுந்தான்.

கார்த்திக் “சாப்பிட்டு போகலாம்” என்றான்.

பரணி “இல்ல, நீங்க பாருங்க.. அம்மா அப்பா பாவம் தனியா இருப்பாங்க, நாளைக்கு வரேன்” என சொல்லிக் கொண்டு, எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினான்.

இனியன் வாசல்வரை வந்து மாமாவை வழியனுப்பி வைத்தான்.

பரணி வீடு வந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு.. தன் அன்னையிடமும் தந்தையிடமும் புனேவில் நடந்த கதை எல்லாம் சொன்னான்.. ‘அக்கா ஒருமாதிரி எதையும் காட்டிக்காமல் இருந்தாள்.. கமல், வந்து பையனை கூட பார்க்கலை.. நாங்க சொன்னதே போதுமென இருந்துவிட்டார்.. ம்..’ என எல்லாம் பேசினான் மகன்.

தணிகாசலம் “நாமதான் சரி சரின்னு இருந்துட்டோம்.. அவளுக்கு என்ன தெரியும்.. பாவம் இப்போது தனியா எல்லாம் பார்க்கிறேன்னு நிக்கிறா.. நான்தான் தப்பு செய்திட்டேன். கல்யாணம் ஆனால் சரியாகிடும்ன்னு நினைச்சிட்டேன்” என மீண்டும் வருத்தம் கொண்டார்.

பரணி தேற்றினான் “விடுங்க பா, யார் என்ன செய்ய முடியும்.. அவர் வாழ்க்கை அவர் கெடுத்துக்கிறார். நம்ம அக்காவிற்கு என்ன இப்போ… நல்லா இருப்பா.. நாம பார்த்துக்கலாம்” என்றான்.

பெற்றோர்களால் ஏதும் பதில் சொல்ல முடியவில்லை.

பரணி, அவர்களின் பேச்சை மாற்ற.. இனியன் காயத்ரி குறித்து பேசினான். இருவரும் பெரிய கவலையை விடுத்து.. சின்ன கவலையில் கவனம் கொண்டு, உடனே கெளசல்யாவிற்கு அழைத்து பேச தொடங்கினர்.

பரணி, தானே எடுத்து வைத்து உண்டு.. மேலே தனதறைக்கு சென்றான்.

பரணி, எப்போதும் போல.. இரண்டு நிமிடம் அவளின் கால் பற்றி நினைத்தான்.. பின் அவளை நான் நினைக்க கூடாது.. குழந்தை மாதிரி, அவன் கூட சேர்ந்து விளையாடினால் இப்படிதான்.. என எண்ணிக் கொண்டு உறங்க சென்றான்.

சாரதா, இனியனை தன் வீட்டின் அருகே உள்ள பள்ளியில் சேர்த்தாள். டைலர் ஷாப் வைக்கலாம் என முடிவு செய்துக் கொண்டாள். முன்பே அவளுக்கு தைக்க தெரியும்.. அதனை புதுபித்துக் கொள்ள.. டைலரிங் வகுப்பிற்கு சென்றாள் சாரதா.

உமேஷை அருகில் இருந்த ப்ளே கிளாஸ் போட்டுவிட்டாள். அந்த நேரத்தில் தான் வகுப்பிற்கு சென்றாள். சாப்பாடு, காலையில் செய்துவிடுவாள். மாலையில் பரணி வரும் போது.. ஏதேனும் வள்ளி கொடுத்துவிடுவார்.

செலவுகளுக்கு, தன் நகைகளை வைக்கிறேன் என்றாள் சாரதா. அவ்வளவுதான் சக்திவேலும் தணிகாசலமும்.. ‘உன்னுடைய எல்லா முடிவுகளுக்கும் ஒத்து போக்கினோம். அதே போல நீ.. இந்த ஒரு விஷயத்தில் எங்கள் பேச்சை கேள்.. மாதம் இவ்வளவு தருகிறோம். எங்கள் பிள்ளை எங்கள் பேரன்’ என பேசி அவளை சம்மதிக்க வைத்தனர்.

காயத்ரி இரண்டு நாட்களுக்கு ஒருதரம் கண்டிப்பாக தன் அண்ணி வீட்டிற்கு வருவாள். அப்போது இட்லி மாவு.. பேரன்களுக்கு கஞ்சி மாவு.. முளை கட்டிய பயறு என கௌசல்யா கொடுப்பதை எல்லாம் எடுத்து வருவாள். காயத்ரி வந்தால், அந்த நாட்கள் எப்படியும் வெளியில் ஆர்டர் செய்வாள்.. குழந்தைகளை காரணம் காட்டி. பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான்.

இன்னும் இரண்டு பாட்டிகளும் பேரன்களை பார்க்க.. இந்த வீட்டிற்கு வரவில்லை.  அவர்களுக்கு மனது கேட்க்கவில்லை. சாரதாவும் கோவம் தணிந்து வரட்டும் என விட்டுவிட்டால். ஒரு உறவு போனால் என்ன.. ஆயிரம் உறவு இருக்கிறது மண்ணில். ஆக, உறவுகள் எல்லாம் தாங்கி நிற்க.. சாரதா கௌரவமாக தனியே வளர தொடங்கினாள்.

மாலை ஏழு மணி. பரணி, அன்று, தன் அக்காவின் வீட்டிற்கு வந்தான். அலுவலகம் முடிந்தது.. நேரமாக. எனவே, அக்காவை எட்டி பார்க்கலாம் என வந்தான். பரணி, அக்காவை இப்படி வந்து பார்த்து தங்குவது எல்லாம் கிடையாது. அன்னை கொடுப்பதை கொண்டு வந்து கொடுப்பான். போனில் பேசுவான்.. என்ன வேண்டும் என்பான்.. பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கி தருவான்.. அப்போது வந்து பிள்ளைகளை கூட்டி போவான். இப்படிதான் அவன்.

இப்போது இனியன் ஸ்கேட்டிங் கிளாஸ் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்க.. இன்று அவனை கூட்டி போய் விவரம் கேட்டு வந்தாள் சாரதா. ஸ்கேடிங்  டூல்ஸ் வாங்க வேண்டும்.. எனவே, பரணியிடம் சொல்லி இருந்தாள் சாரதா. அதை வாங்கிக் கொண்டு வந்தான் இப்போது பரணி.

இனியன், தன் மாமா வாங்கி வந்ததை எடுத்துக் கொண்டு.. கீழே விளையாட கிளம்பினான் இப்போதே.

பரணி தடுக்கவில்லை.. சாரதா “இருடா.. விழுந்திடுவ..” என சொல்லிக் கொண்டே மகனோடு சென்றாள்.

பரணி, புன்னகை முகமாக அதை பார்த்துக் கொண்டே அமர்ந்தான் சோபாவில். தான் டக்கின் செய்த ஷர்ட்டை எடுத்துவிட்டுக் கொண்டு தளர்வாக அமர்ந்தான். 

சற்று நேரத்தில்.. காயத்ரியின் குரல் “அண்ணி, தண்ணி வேணும்.. வாட்டர் ப்ளீஸ் அண்ணி” என அவசரமாக அழைத்தாள்.

பரணிக்கு இது நேரம் வரை இவள் இங்கே இருப்பது தெரியாது.. ‘இது எப்போ வந்தது’ என எண்ணிக் கொண்டே.. தண்ணீர் எடுத்து கொண்டு கொடுத்தான்.. காயத்ரி அழகாக அறையில் உள்ள பால்கனியில் அமர்ந்துக் கொண்டு.. கால்களை மற்றொரு சேரில் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

பரணி, தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவன், இந்த கோலத்தை பார்த்தான்.. காலில் கட்டை காணோம்.. அவன் அப்போது அடிப்பட்டதை எண்ணித்தான் தண்ணீர் எடுத்து வந்தது. இப்போது இவள் ஜாலியாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் கொஞ்சம் கோவம் வந்தது.. “கால் சரியாகிடுச்சா” என்றான் முறைப்பான பாவனையில்.

காயத்ரி அந்த குரலில் யாரென பார்க்க.. பரணி. அவளின் கண்கள் அனிச்சையாய் விரிந்தது “நீங்க எப்போ வந்தீங்க..” என்றவள் அமைதியாக தன் கால்களை சேரில் இருந்து எடுத்துக் கொண்டாள்.

பரணி “கால் நல்லாதானே இருக்கு.. எழுந்து வந்து தண்ணியை எடுத்துக்க மாட்டியா” என்றான் அதட்டலாக.

காயத்ரி “நான் அண்ணியை தானே கேட்டேன். நீங்க, இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே.. எங்க அண்ணி” என்றாள்.

பரணி “இனி கூட கீழ போயிருக்காங்க..” என்றான் நின்று அவளிடம் பதில் சொல்லினான்.

பரணி “கால் இப்போ பரவாயில்லையா” என்றான் நிதான குரலில்.

காயத்ரி விழிவிரித்து எழுந்து நின்றாள்.. பரணி மாமா தன்னிடம் பேசுகிறாரா என எழுந்து நின்றாள். கமல் அண்ணனின் திருமணத்தின் போது, பரணியை ‘மாமா’ என அழைத்தது.. அதன்பின் பரணி, தன்னிடம் பேசவே மாட்டான் என்பது போல ஒரு தோற்றத்தை எழுப்பியிருந்தான் தன்னிடம். நீண்ட நாட்கள் கழித்து இப்போது தன்னிடம் நின்று பேசுகிறார் என எண்ணிக் கொண்டு எழுந்து நின்றாள்.

காயத்ரி “அது ரொம்ப நாள் ஆச்சு மாமா..” என மரியாதை பன்மை வந்துவிட்டது, அவளுக்கும்.

பரணிக்கும் மாமா என்ற அழைப்பில் மீண்டும் தன்னுடைய கட்டுபாடுகள் நினைவு வந்தது.. ஏதும் பேசாமல் பரணி வெளியே சென்றுவிட்டான்.. அவனுள் ‘தனியே அவளோடு இருப்பதா’ என தடுமாற்றம் வேறு வந்துவிட்டது. 

‘கிளம்பலாம்’ என எண்ணி, தன் போனை எடுக்க.. சாரதா வந்துவிட்டார்.. “காபி தரவா பரணி” என்றாள்.

பரணிக்கு மறுக்க தோன்றவில்லை “ம்.. கொடு.” என்றவன் கிட்சென் சென்று நின்றுக் கொண்டான்.  “ஏன் அக்கா.. இவ எப்போ வந்தாள்” என்றான்.

சாரதா “யாரு காயத்ரியை கேட்க்கிரீயா.. இரண்டு நாள் ஆச்சு. சமஸ்ட்டர் ஹொலிடே அதான் படிக்கிறா. இன்னிக்கு கார்த்திக் வந்து கூட்டி போறேன்னு சொன்னார். தோசை வார்க்கவா.. சாப்பிடுரீயா” என்றாள்.. காபியை தம்பியின் கையில் கொடுத்தபடி.

பரணி “இல்ல, வேண்டாம்.. மணி ஆகலை.” என வந்து சோபாவில் அமர்ந்தான்.

சாரதா வந்து அமர்ந்தாள்.

பின் பரணி “இது பைனல் இயர்ரா அக்கா” என்றான்.

சாரதா, உமேஷ் கிறுக்கிக் கொண்டிருந்த க்ரேயன்ஸ் எடுத்து வைத்துக் கொண்டே “ம்..” என்றார் கவனமில்லாமல்.

பரணியின், மனது லேசாக சலித்துக் கொண்டது சம்பந்தமே இல்லாமல்.. ம்.. சம்பந்தமே இல்லையா எனக்கும் அவளுக்கும்.. என மனதில் ஓடியது. ம்.. சம்பந்தமே இல்லைதான் என எண்ணிக் கொண்டான். காபியோடு சேர்த்து.. எதையோ விழுங்கிக் கொண்டான்.

 

Advertisement