Advertisement

நீ என்னுள் யாரடா!

8

பரணிக்கு, எப்போதும் ஒருகண் உண்டு அவள்மேல். அவளின் குழந்தைத்தனமும்.. வெகுளித்தனமும்.. அவனை பலசமயம் ஈர்த்திடும். இது காதல்.. திருமணம்.. என சொல்லிக் கொள்ளும் ஈர்ப்பு இல்லையாம்.. அவனே சொல்லிக் கொள்வான். ம்.. தனக்கு தானே  சொல்லிக் கொள்ளாத ஈர்ப்பு உண்டுதான் காயத்ரியின் மேல். ஆனால், ஒத்துக் கொள்ளமாட்டான். தானாக அவளை பார்க்க கூடாது, அவளிடம் பேச கூடாது என சின்ன கட்டுப்பாடு உண்டு அவனுக்கு, அவனிடம். 

ஆனால், அசந்து மறந்து.. எங்காவது விழாவிலோ.. பிள்ளைகளோடு விளையாடும் போதோ.. அவளை பார்த்துவிடுவான் தன்னையும் அறியாமல். அந்த நொடி நேரங்களை கடக்க, அவன் தனக்குள் போராடுவான். ஏனோ, அவனுள் ஒரு எண்ணம்.. இவளின் சிறுபிள்ளை தனமும், என்னுடைய அழுத்தமான போக்குக்கும் பரபரப்பான வாழ்க்கைக்கும் ஒத்துவரதாது. அவள், பஞ்சு மிட்டாய் கேட்ப்பாள்.. நான் கோவமாக இருக்கும் போது.. எனக்கு ஆகாது. அவள் வாழ்க்கையை ரசிக்க பிறந்தவள்.. நான், ரசிக்க நேரம் மட்டுமே ஒதுக்குபவன். ஒருநாளும் ஆகாது. அவளின் சிறுபிள்ளைதனத்தை என்னால் சமாளிக்கவே முடியாது என.. சிலநேரங்களில் தோன்றிடும். ஆக, அவனாகவே எல்லாம் முடிவு செய்துக் கொள்வான். அவளை ரசித்து பார்ப்பது கூட அவன் அகராதியில், தவறு. 

இப்போதும், அவள் வருந்தியிருப்பாள் என யோசிக்க முடியவில்லை அவனால், அவளுக்கு தான் பேசியதற்கு  கோவம் வரும்.. என இவனுக்கு தெரியாதே. அவனுக்கு தெரியாது. ம்.. பொதுவாக எதுவாக இருந்தாலும் காயத்ரி வீட்டில் கத்திவிடுவாள்.. சத்தமாக பேசி தனக்கு தேவையானதை செய்துக் கொள்வாள். அந்த வகையில்.. ‘அன்று நான் திட்டிய போது அமைதியாகத்தானே இருந்தால்… அதனால், இவளுக்கு கோவமில்லை என எண்ணிக் கொண்டேன் என நினைத்துக் கொண்டேன்’ என தனக்குள் சொல்லிக் கொண்டான்.. அடுத்த ஷணம், ‘அதான் அவளை பற்றி யோசிக்க கூடாதில்லை..’ என தன்னை தானே கட்டுக்குள் கொண்டு வந்தவன்.. தன் மருமகனோடு இப்போது விளையாட தொடங்கினான்.

காயத்ரி உண்டு முடித்தாள். துளசி கார்த்திக் காயத்ரி மூவரும் கிளம்பினர். வெளியே வந்தனர்.. பரணியிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

மறுநாள், சாரதா, தன் மாமியாருக்கு அழைத்து பேசினாள். கெளசல்யாவிற்கு கோவம் ‘இங்க என்ன குறை சாரதா உனக்கு.. தனியா எப்படி இருப்ப இரண்டு பசங்களோட.. விளையாட்டா.. இங்க நாங்க பார்த்துக்கிறோம்.. நீ வேலைக்கு போ.. இல்லை, பிஸினெஸ் பண்ணு.. நாங்க பார்த்துக்கிறோம்’ என்றார்.

சாரதா ‘இல்லை அத்தை அது சரியில்லையே.. எனக்கு அது சரியாக தோன்றவில்லை. நான் வீடு பார்க்கத்தான் போறேன்’ என தன் அத்தைக்கு விளக்கிக் கொண்டிருந்தாள்.

கௌசல்யா ‘இப்படி ஒரு பிடிவாத்தை நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலை சாரதா’ என்றார்.

சாரதா ‘சூழ்நிலை அத்தை.. அவர்கிட்ட பிடிவாதமே பிடிக்க தெரியலை.. அதான், தோற்றுவிட்டேன். இப்பவும் நீங்கள் எல்லாம்தான் என் சப்போர்ட் அத்தை. அதனால்தான், அங்கே நடந்தது போல.. திரும்பவும் ஒரு அவமரியாதையோ.. உதாசினத்தையோ என்னாலும் என் பிள்ளைகளாலும்  தாங்க முடியாது அத்தை, அதான் தனியா இருக்கேன்னு சொல்றேன். வேற ஒண்ணுமில்ல..’ என்றாள்.

ஆனால், கெளசல்யாவிற்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை.. ‘என்னமோ செய்’ என்றுவிட்டார்.

சாரதா அதன்பின் தானாக அழைக்கவில்லை.

மாமியாரும் ஏதும் பேசவில்லை.

துளசி ‘வளைகாப்பிற்கு வரவேண்டும்’ என அழைத்து தினமும் பேசினாள். வளைகாப்பின் முதல்நாள் காலையில் சாரதாவின் மாமியார், அழைத்து பேசி.. இன்றே வீடு வா என்றார்.

அதனால், சாரதா துளசியின் வளைகாப்பின் முதல்நாள் காலையிலேயே..  தன் மாமியார் வீடு சென்றுவிட்டாள். சக்திவேல் வரவேற்றார்.. ஒருவாரமாக பேரங்களை பார்க்காததால்.. “ரெண்டுநாளுக்கு ஒருதரம் பிள்ளைகள் முகத்தை காட்டிட்டு போம்மா” என்றார்.

சாரதா சங்கடமாக உணர்ந்தாள். சரியென தலையசைத்தாள். தொடர்ந்து, தன் மாமனாரிடம் பேசினாள்.. தன் அத்தையிடம் பேசியது போல.. எல்லா செய்தியையும் சொன்னால். அவரும் கேட்டுக் கொண்டார்.. ‘இனி எதுக்கு, வேலை அதுஇதுன்னு.. நீ தொழிலாக ஏதாவது செய்ம்மா.. நான் பணம் தரேன்.. அவசியமே இல்லை, நீ வேலைக்கு போகணும்ன்னு’ எனவும் பேசினார்.

சாரதா பொறுமையாக கேட்டுக் கொண்டாள்.. ஏதும் வாதடவில்லை.

மறுநாள், காலையிலேயே எல்லோரும் மண்டபத்திற்கு கிளம்பினர். கௌசல்யாவும், சாரதாவும் முன்னே சீக்கிரமாக அங்கு சென்று எல்லா ஏற்பாடுகளையும் பார்ப்பதாக திட்டம் போட்டிருந்தனர். எனவே, உமேஷ் மட்டுமே, சாரதாவோடு இருந்தான். இனியன் தன் மாமன் பரணியோடு வருவதாக ஏற்பாடு.

எனவே, சாரதா கௌசல்யா சக்திவேல் என இவர்கள் மூவரும் காலை ஆறு மணிக்கே கிளம்பிவிட்டனர் உமேஷ்ஷோடு. எட்டு மணிக்கு விழா ஆரம்பம். அதனால் முன்னமே வந்து வரவேற்ப்பு பார்க்க வேண்டும் என வந்துவிட்டனர்.

கார்த்திக் மனையாளோடு.. தங்கைக்காக காத்திருந்தான் ஹாலில். மணி ஏழு. ஏழு மணிக்கு கிளம்பி வந்துவிடுங்கள் என சொல்லியிருந்தார் கௌசல்யா.

ஏழு மணியை கடந்தும் காயத்ரி இன்னும் கீழே வரவில்லை. துளசி, காயத்ரிக்கு போனில் அழைத்தாள். காயத்ரி “அண்ணி” என்றாள் அழைப்பை ஏற்று.

துளசி “மணியாச்சு காயூ.. சீக்கிரம் வா” என்றாள்.

காயத்ரி “அண்ணி, என் ப்ளவுஸ்.. டைட் ஆகிடுச்சி அண்ணி, நான் இப்போதான் பிரிச்சிகிட்டு இருக்கேன்.. நான் குண்டாகிட்டேனா அண்ணி” என்றாள் அழும் குரலில். துளசிக்கு சிரிப்பாக வந்தது.

தன் கணவனிடம், காயத்ரியின் நிலையை சொன்னால் துளசி.

கார்த்திக்கு லேசாக டென்ஷன் ஏறியது.. ‘எவ்வளோ நேரம் ஆகும்ன்னு கேளு’ என்றான்.

காயத்ரியிடம் துளசி, அப்படியே கேட்க்க.. காயத்ரி “தெரியலையே அண்ணி, நீங்க கிளம்புங்க, நான் டாக்ஸியில் வந்திடுறேன்” என்றாள்.

கார்த்திக்கு, தங்கையை அப்படி விட்டு போக மனமில்லை. அவளை மட்டும் எப்படி விட்டு போவது என.. யோசித்துக் கொண்டிருக்க. சரியாக அன்னை அழைத்தார், அவனை.

கார்த்திக அழைப்பை ஏற்று.. இனிதான் கிளம்பனும், காயத்ரிக்கு எதோ சரியாக இல்லையாம்.. என விவரம் சொன்னான் அன்னையிடம்.

கௌசல்யா ‘முதலில் நீங்க ரெண்டுபேரும் வந்து சேருங்க.. அப்புறம் கார் அனுப்பிக்கலாம்’ என்றார் அன்னை.

அதனால், காயத்ரியிடம் சொல்லிக் கொண்டு.. கணவன் மனைவி இருவரும் காரெடுத்துக் கிளம்பினர்,

காயத்ரி, திடமாக சொல்லிவிட்டால்.. நான் டாக்ஸியில் வந்துவிடுகிறேன் என.. ஆனாலும், அண்ணன் கிளம்புகிறேன் எனவும் என்னமோ போலானது.

காயத்ரிக்கு பெரிய கவலை வந்து ஒட்டிக் கொண்டது ‘எல்லோரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க, நான் குண்டாகிட்டனா’ என இருவேறு மனநிலையிலேயே ஏனோ தானோவென உடுத்திக் கொண்டாள். நல்ல அழகான பான்சி பட்டு, ராமர் பச்சையும்.. காப்பர் கலரும் கலந்த சரீ.. தன் அன்னையின் சஃப்யர் ஹாரம்.. தோடு.. கையில் ஒற்றை வளையல்.. என பார்க்க அழகாக இருந்தாள்.. என்ன, கண்ணில் எப்போதும் இருக்கும் குறும்பும் வேகமும் இல்லை.

எப்போது புடவை அணிந்தாலும், அவளின் தந்தை.. ‘என் பொண்ணுக்கு கல்யாண வயசு வந்திடுச்சி’ என ஆசையாக சொல்லுவார். இப்போது அதை எண்ணிக் கொண்டு.. கீழே வந்தாள் காயத்ரி.

சரியாக அந்த நேரத்தில் அன்னை, காயத்ரிக்கு அழைத்தார். பெண்ணிடம்.. ‘இனியனுக்கு எடுத்த புது உடை இங்கேதான் இருக்கு.. எங்களோடு அறையில் இருக்கு.. எடுத்து வா டா. பரணியும் இனியனும் வராங்க.. அவனுக்கு போட்டு கூட்டிட்டு வா, அவன் அழுகையாம். நீயும்  அவங்க கூட வந்திடு.. டாக்ஸி ஏதும் புக் பண்ணாதம்மா’ என்றார்.

இரண்டு நிமிடத்தில், இனியன் வந்தான்.. அழுது அழுதே முகமும் கண்ணும் சிவப்பாக இருந்தது. காயத்ரி சரியாக உடையை எடுத்து வைத்திருந்தாள்.

இனியன் “அத்தை, என்னோட ட்ரெஸ்ச மட்டும் எல்லோரும் மறந்துட்டாங்க..” என மீண்டும் அழுவது போல ஆரம்பித்தான் காயத்ரியை பார்த்தும்.

காயத்ரிக்கும், அவனின் அதே எண்ணம்தானே, காயத்ரியும் “ஆமாம் டா.. என்னையும் விட்டுட்டே போயிட்டாங்க, இந்த பாட்டி கொஞ்சம் கூட சரியே இல்லை.. கொஞ்சம் கூட லவ்  இல்ல.. நீயும் நானும் பாட்டி கூட பேசவே கூடாது.” என சொல்லிக் கொண்டே, அவனுக்கு உடைமாற்றினாள்.

சரியாக அந்த நேரம் பரணி உள்ளே வந்தான். சுதந்திரமாக அவளை ரசிக்கலாம் என ஒருமனம் சொல்லியது அவனுள். ஆனாலும் மூளை தன் கட்டுபாடுகளை நினையூட்டிக் கொண்டது தனக்குதானே.

இனியன் “ம்.. எல்லோரும் என்னை மறந்துட்டாங்க..” என்றான்.

காயத்ரி “என்னையும் மறந்துட்டாங்க.. நாம தனியா போய் அவங்க எல்லோரையும் விட்டுட்டு.. ப்ரௌனி சாப்ப்பிடலாம்” என்றாள்.

இனியன் “எனக்கு மட்டும்தான் உமேஷ்க்கு கிடையாது, ம்.. அவனை மட்டும் கூட்டிட்டு போயிட்டாங்க” என்றான்.

காயத்ரி “ம்.. கார்த்திக் கூட, துளசி சித்தியை மட்டும் கூட்டிட்டு போயிட்டாங்க.” என்றாள் தானும் போட்டிக்கு.

இனியன் முகம் உடையை மாற்றிக் கொண்டதும்.. மலர்ந்து புன்னகைத்தது.. இனியன் “அத்தை சூப்பர்ரா இருக்குல்ல..” என்றான்.

காயத்ரி “ம்.. நான்தான் எடுத்தேன்.. உனக்கு, பர்ப்பிள்.. உமேஷ்க்கு ப்ளூ” என்றாள்.

இனியன் “எனக்கு ப்ளூதான் பிடிக்கும். ஆனாலும் இது சூப்பர் அத்தை” என்றவன் தன் மாமாவிடம் திரும்பி “மாமா எப்படி இருக்கு” என்றான்.

பரணி இதுநேரம் வரை இருவரின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான்.. மனதில் எப்போதும் போல.. பொறுமை பரந்திருந்தது ‘எது குழைந்துன்னு தெரியவே இல்லை..’ என. இப்போது இனியன் அந்த சிந்தனையை கலைக்க.. பரணி “ம்.. நல்லா இருக்கு. இதுக்குதான் இவ்வளோ அழுகையா நீ. நீ இன்னும் சின்ன பையன் இல்லை இனி. இப்படி அழ கூடாது. அம்மா, பாட்டி எல்லோரும் எதோ வேளையில் உனக்கு ட்ரெஸ் கொடுக்க மறந்துட்டாங்க.. அதுக்கு அழுது அழுது பாரு.. முகமே நல்லா இல்ல. இனி அழகூடாது.” என்றான் கண்டிப்பான குரலில்.

காயத்ரிக்கு ‘இனி, நல்லா இருக்கான்னு தானே கேட்டான்.. எவ்வளோ பெரிய லக்ஸர் கொடுக்கிறார்.. ம்..’ என எண்ணிக் கொண்டாள்.

மறந்தும் பரணி, பெண்ணவளை பார்க்கவோ ரசிக்கவோ இல்லை. அவளின் குரல்தான் இதுநேரம் வரை அவனின் காதில் விழுந்துக் கொண்டே இருந்தது. அதையும் ரசிக்க கூடாது என எண்ணி, கிண்டலாக மொழி பெயர்த்துக் கேட்டுக் கொண்டான், தனக்குள். இப்போது, காயத்ரி இனியனோடு செல்பி எடுப்பதற்காக அவனின் அருகே அமர்ந்தாள்.

இயல்பாய் பார்வை, காயத்ரியின் மேல் படிந்தது பரணிக்கு. மையெழுதிய கண்களும்.. மினுமினுத்த உதடுகளும்.. எப்போதும் போல, அவனை ஈர்த்தது. கார்த்தியின் திருமணத்தின் போதும் இப்படிதான் நிறைய தடுமாற்றம் அவனுள்.. அவளால். ‘கல்லூரி படிக்கும் போதுகூட.. இப்படி யாரிடமும் தடுமாறி தனியே நின்றதில்லை’ என அவனுக்கு அவனே எண்ணிக் கொண்டான். ஆனாலும், அவளை பார்க்க கூடாது என நிறைய தனக்குள் சொல்லி விலகி விலகித்தான் நின்றான். ஆனாலும், அவள் ப்ரங்ஞ்சையே இல்லாமல் பிள்ளைகளோடு பேசுவதும்.. ஓடுவதும்.. அவர்களோடு ஐஸ் கிரீம் சாப்பிடுவதும்.. பலூன் வாங்குவதும்.. உடைப்பது என  அவளின் எல்லா செயல்களும் அவனின் கண்ணில் மட்டும் பட்டு அவனின் மனதை தெறிக்க செய்தது. அதையெல்லாம் கடந்து.. ‘எனக்கு பெண் பார்க்கிறார்கள்’ என வீட்டோடு சேர்த்து மனதுக்கும் வெள்ளையடித்துக் கொண்டு.. புது மாப்பிள்ளையாக வலம் வர.. காத்திருக்கிறான். ஆனாலும், மீண்டும் ப்ரங்ஞ்சையே இல்லாமல்.. இனியனோடு தோள் மேல் கை போட்டு கொண்டு உதடு விரித்து ஈஈ.. என பல்லிளித்து நிற்பவளை பார்க்கும் போது.. மீண்டும் தடம் மாறி துடிக்கிறது.. அவனின் கட்டுபாடான இதயம்.

ம்.. என அமைதியாக இருப்பது போல.. சோபாவில் அமர்ந்திருந்தான் பரணி.

இனியன் “மாமா வாங்க.. செல்பி” என அழைத்தான்.

பரணி “டைம் ஆச்சு, போலாமா” என்றான். அவர்களோடு புகைப்படம் எடுக்க மனதில்லை அவனுக்கு எனவே, எழுந்தான்.

இனியன், குடுகுடுவென ஓடி.. பரணியின் அருகே சோபாவில் ஏறி நின்று “அத்தை.. வாங்க” என்றான்.

காயத்ரி இருவரையும் தனியே புகைப்படம் எடுத்தாள். பரணிக்கு ‘அப்பாடா’ என்றானது. 

ஆனால், கண்ணெதிரி அவள் கையுயர்த்தி.. போனோடு நிற்கிறாள்.. பரணி அப்பட்டமாக அவளை ரசிக்க கூடாது என போனைத்தான் வெறித்தான்.. ஆனால், அவனின் கருவிழியின்பாவை மட்டும், அழகாக அவளையே நோக்கியது. திவ்யமாக இருந்தாள்.. பட்டுகட்டி.. கேர்லி செய்த ஹேர் தோளின் இரு புறமும் வழிய.. அதில் சரமாய் மல்லிகை.. மையெழுதிய கண்கள்.. அணிமணிகள்.. அவள் இருகைகளையும் தூக்கி புகைப்படமெடுக்க.. புடவை விலகி.. அவளின் அரைத்த சந்தனஉடலின்  இடை தந்த தரிசனத்தில் பரணியின் கண்கள்.. நிலைகுத்திதான் நின்றது.. நொடிகணக்கில். 

எப்போதும் போல, மூளையில் அலாரம் அலற.. எதோ தீசுட்டார் போல, தன்னை உலுக்கி, தன்னை மீட்டுக் கொண்டான் பரணி. சொல்லவும் முடியவில்லை மென்று விழுங்கவும் முடியவில்லை.. அவளை கடக்க முடியாத இயலாமை ‘அவள் ஏன் என்னை ஈர்க்கிறாள்’ என கோவமாக மாறியது.. சட்டென விலகினான் புகைப்பட ப்ரேமிலிருந்து.. நெற்றி தேய்த்துக் கொண்டு.. மேலே வெறித்து தலை கோதி, தன்னை தானே.. சுதாரித்துக் கொண்டு.. “இனி, போதும்.. நீயும் உங்க அத்தையும்  விபூதி இட்டு வாங்க  போகலாம்” என்றான்.

கவனித்து விட்டான்.. அவளின் நெற்றியில் திருமண் ஏதும் இல்லை என.. அதனால் சொல்லிவிட்டு, வெளியே சென்றான்.

இருவரும் ஆடி அசைந்து.. விபூதி இட்டுக் கொண்டு.. வீட்டை பூட்டி விட்டு.. காரிலேறி அமர்ந்தனர்.

காயத்ரிக்கு கார்த்திக் அழைத்து.. ‘எங்க இருக்கீங்க’ என வினவினான். பேசி முடித்தாள்.

பரணி, இப்போது போர்ம்க்கு வந்திருந்தான். பேசாமல் வண்டியை மண்டபம் நோக்கி செலுத்தினான். இனியும், காயத்ரியும் நிறைய பேசிக் கொண்டே வந்தனர்.

பரணி உள்ளே நுழையும் போதே.. கார்த்திக் வந்து சிறப்பாக வரவேற்றான். அடுத்து எல்லோரும் வரவேற்றனர். பரணி முன்னிருக்கையில் அமர்ந்தான். ‘இந்த வளைகாப்பு விழா முடிந்ததும்.. கிளம்பிவிட வேண்டும் எனக்கு என்ன வேலை’ எனத்தான் அமர்ந்திருந்தான். 

வளைகாப்பு தொடங்கியது, உமேஷை துளசியின் மடியில் அமர்த்தி.. துளசிக்கும், அவனுக்கும் சேர்த்து வளையல் இட்டார் கௌசல்யா முதலில். பின் உமேஷ் இறங்கி தன் சித்தப்பாவின் தோளில் ஏறிக் கொண்டான். அடுத்து சாரதாவை, அழைத்து வளையல் அணிவிக்க செய்தனர். அப்படியே சில முக்கிய உறவுகள் மட்டும் வளையல் அணிவித்தது. பின், கார்த்திக் தம்பதியாய் எல்லோரிடமும்  ஆசீர்வாதம் வாங்க, உமேஷ் அவர்களின் இருவரோடும் சேர்ந்து எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கினான்.

இப்போது வந்திருந்த பெண்களுக்கு புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு.. என வளையல் அடிக்கினர்.. துளசி போல அமரவைத்து. காயத்ரி நின்றாள் அந்த வரிசியைல். உறவுகள் எல்லோரும் ‘உனக்கென்ன அவசரம்..’ என ஆனந்தமாக சலித்துக் கொண்டாலும்.. அதை காதில் வாங்காமல்.. காயத்ரி, முழங்கை வரை.. வளையல் அடிக்கிக் கொண்டு.. போட்டோவிற்கு அழகாக இருகைகளையும் காட்டி போஸ் கொடுக்க.. ‘அடுத்த வருஷம் உனக்கு திருமணம் முடிந்து இப்படி வளையல் அடுக்கனும் நாங்க’ என ஆசீர்வாதங்கள் வந்து சேர்ந்தது அவளை.

பரணி, முன்வரிசையில் அமர்ந்து ‘இதையெல்லாம் ஏன் டா ஆண்டவா என் கண்ணில் காட்டுற..’ என எழ இருந்தவன் காதில்.. பின்புறம் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டது காதில் விழந்தது. ‘க்கும்.. செவ்வாய் தோஷமாம்.. எங்க கொழுந்தன் மகனுக்கு கேட்டோம் காயத்ரியை. அப்போதுதான் சொன்னாங்க.. தோஷம்ன்னு.. அதான் பரிகாரம் செய்துகிட்டு இருக்காங்கலாம்.. அவனுக்கு தோஷம் ஏதும் இல்லை..’ என விழ.. அப்படியே அமர்ந்துக் கொண்டான் பரணி.

தான் அமர்ந்திருந்த ஆசனத்தில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு.. கால்மேல் கால் போட்டு சுவாரசியமாக பார்த்தான் ஒருநொடி ‘என்ன தோஷம் இவளுக்கு.. குழந்தைகளுக்கும் தேவதைகளுக்கும் எந்த தோஷம் பாதிக்கும்..’ என கவிதை சொன்னது அவனின் மனது அவளை பார்த்து. அழகாக, எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தவளை இமைக்காமல் பார்த்தான்.. பரணி இரண்டு நொடிகள். பின் எழுந்து போன் பேச வெளியே சென்றுவிட்டான்.

 

Advertisement