Advertisement

நீ என்னுள் யாரடா!

7

மறுநாள், சாரதா மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாள். மாலை நேரம்தான் டிஸ்ஜார்ஜ்..  நேராக தன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். கார்த்திக் துளசி காயத்ரி என மூவரும், அங்கே வந்தனர் அவளை பார்க்க. 

துளசி மருத்துவமனை சென்று பார்க்கவில்லை. எனவே, சாரதா வீடு வரும் முன்னே அங்கே சென்றுவிட்டாள்.. கார்த்திக், தன் அன்னை வரவில்லை எனவும்.. அன்னையிடம் கேட்டான்.. “நாம போகனுமில்ல ம்மா, அண்ணியை நாமதானே சேர்த்தோம்.. பரணி பார்ப்பான் என்றாலும்.. நீங்களும் வாங்க, போயிட்டு பார்த்துட்டு வந்திடலாம்” என்றான். கார்த்திக்கு, தன் அண்ணனின் விட்டேற்றியான நிலை பார்த்ததிலிருந்து.. அண்ணியையும் பிள்ளைகளையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என புரிந்துவிட்டது.. எனவே, அழைத்தான், மருத்துவமனைக்கே சென்று பார்க்கலாம் என.

ஆனால், கௌசல்யா “இல்ல, கார்த்தி, மனசே சரியில்ல.. வேலை வேற நிறைய இருக்கு.. நீங்க போங்க.. அப்புறம் நான் வரேன்.. காயூவை கூட்டி போ.. வரேன்னு சொல்லிக் கொண்டிருந்தாள்” என சொல்லி வீட்டில் இருந்துக் கொண்டார்.

கார்த்திக் நிமிர்ந்து அன்னையை ஆராய்ந்தான். அன்னை நிற்கவில்லை.. தங்கள் அறைக்கு சென்றுவிட்டார்.

கார்த்திக் தன் மனைவியோடு, தங்கையோடு  நேராக அவர்கள் வீட்டிற்கே வந்துவிட்டான். 

கௌசல்யா, சாரதா சொல்லியதை வீட்டில் எல்லோரிடமும் சொல்லினார், இரவே. 

சக்திவேல் “எப்படி இரண்டு பேரன்களை தனியே விடமுடியும்.. நல்லா இருக்குமா.. ஊர் என்ன சொல்லும்.. என்ன வேணுமோ நாம்  பார்த்துக்கலாம், உடம்பு சரியானதும், இங்க வரசொல்லும்மா” என்றார் தன் மனையாளிடம். அதுதான் சரியெனப்பட்டது கெளசல்யாவிற்கும். எனவே, இரண்டுநாள் சென்று மருமகளிடம் பேசிக் கொள்ளலாம்.. இப்போது செல்லாமல் இருந்தால்தான், எதோ கோவம் என மருமகளுக்கு புரியும் என அமைதியாக இருந்தார் மாமியார்.

தணிகாசலம் வள்ளி, வீட்டில்தான் இருந்தனர். இன்முகமாக வரவேற்றனர் இவர்களை.. சிற்றுண்டி முடித்து பேசிக் கொண்டிருந்தனர்.

துளசி,  திருமணம் முடிந்து விருந்தின் போது வந்திருந்தாள்.. அதன்பின் இப்போதுதான் வருகிறாள். ஆறு மாதங்களுக்கு முன் வந்ததற்கும் இப்போது வருவதற்கும் எதோ மாற்றம் தெரிந்தது அந்த வீட்டில் எனவே, சுற்றிலும் பார்வையை சுழற்றினாள்.

வள்ளி “என்ன ம்மா.. பார்க்கிற” என்றார்.

தணிகாசலம் “வீடு பெயின்ட் செய்து முடித்தோம் இப்போதுதான். பரணிக்கு பொண்ணு பார்க்க தொடங்கியிருக்கு.. அதான், கொஞ்சம் வீட்டு வேலையை முடிச்சோம்.. அங்க.. தோட்டத்தின் முன்பக்கம் போய் பாரும்மா.. அல்லி குளம் வைச்சிருக்கோம்.. வள்ளிக்கு ரொம்பநாள் ஆசை.. மகன் செய்து கொடுத்துட்டான். போய் பாரும்மா.. இந்த நேரத்திற்கு காற்று சில்லுன்னு வரும்” என சொல்லி வள்ளியோடு அனுப்பி வைத்தார்.

வீட்டின் முன்பக்க தோட்டத்தில்.. கம்பவுண்ட் சுவரை ஓட்டினார் போன்று.. அந்த மாலை வேளையை அழகு செய்வது போன்று.. அழகான பர்ப்பிள் நிறத்தில் மலர்ந்தும் மலராமல் ஆங்காங்கே பூக்களோடு.. மீன்கள் நிற்காமல் சுறுசுறுவென ஓட.. மாலை வேலை தொன்றல் காற்று துளசியின் முகத்தில் இதமாக வீச, அந்த இடமே ரம்யமாக இருந்தது.

துளசி “அத்தை ரொம்ப நல்லா இருக்கு.. அல்லி பூ இப்படிதான் இருக்குமா” என்றாள் மலர்ந்த முகமாக.

வள்ளி “வா.. அந்த பெஞ்சில் உட்காரு..” என இரண்டடி தள்ளி இருந்த இருக்கையை காட்டினார்.

வள்ளி “ம்.. இந்த கலர் இருக்கு.. இதைவிட லைட் கலர் ஒன்னும் இருக்கும்… நர்சரியில் சொல்லி வைத்திருக்கோம்.. வரும்.” என்றார்.. அத்தோடு அமைதியாகிவிட்டார்.. பெண்ணின் நினைவு வந்து அடுத்து இயல்பாக எழும் பேச்சை கட்டி போட்டுவிட்டது.

துளசி “ஏன் சித்தி அமைதியாகிட்டீங்க” என்றாள்.

வள்ளி “என்ன சொல்ல துளசி..” என்றார் ஆழ்ந்த குரலில்.

இரண்டு நிமிடம் இடைவெளி விட்டு வள்ளியே “வா டா.. குடிக்க ஏதாவது தரேன்.. உள்ள வரியா.. நான் போய் ஏதாவது எடுத்து வரேன், ம்..” என்றவர் உள்ளே சென்றார்.. அவளின் தலையசைப்போடு.

அங்கே, தணிகாசலத்திடம்.. கார்த்திக் “ஓ.. அடுத்து பரணி கல்யாணம்தான் நம்ம வீட்டில்” என பேச தொடங்கியிருந்தான்.

காயத்ரி போனில் பேசிக் கொண்டிருந்தாள்.. வாசல் வராண்டாவில் நின்று.

இப்போது பரணி உமேஷ், இனியன், சாரதா என நால்வரும் வந்தனர்.

பரணி உமேஷை கையில் ஏந்திக் கொண்டு.. உள்ளே வந்தான். 

காயத்ரி, இவர்களின் காரை பார்த்தும்.. போனை கட் செய்து.. “அண்ணி” என முன்னே சென்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுக் கொள்ள முயலாமல் நடந்தனர்.

காயத்ரி “அண்ணி இப்போ எப்படி இருக்கீங்க.. உங்க விரதம் முடிஞ்சி.. இனி சரியா சாப்பிடுவீங்கதானே” என அண்ணியின் கைபிடித்தாள். 

சாரதா புன்னகைத்தாள் இதமாக.

பரணியின் கையிலிருந்த உமேஷ்.. அத்தையை பார்த்ததும்.. காயத்ரியிடம் தாவினான்.. “அத்த அத்த..” என தாவினான். ‘ம்.. இந்த பரணி எனும் ஹிட்லர் கையிலிருந்து எப்போதடா தப்பிப்போம்’ என ஆனது குழந்தைக்கு.. ‘மருத்துவமனையில் இருந்து மாலை ஆறுமணிக்கு இறுக்கி பிடித்தவன்தான் இன்னும் என்னை கீழே விடவில்லை’ என அந்த குழந்தை எண்ணிக் கொண்டது போல.. காயத்ரியை பார்த்தும் அப்படி அழுகை.. தாவினான் அவளிடம்.

காயத்ரிக்கு, அண்ணியின் பேச்சை கூட கவனிக்க முடியவில்லை.. தாவிய குழந்தையை சாமாதானம் செய்வது போல.. “ஏன்டா தங்கம்.. மாமா அச்சிட்டாங்களா” என மழலை பேசிக் கொண்டே உமேஷை வாங்கினாள், பெண்.

சாரதா கூட புன்னகைத்தாள்.. அவளின் கேள்வியில்.

பரணிக்கு ஏனோ புன்னகைக்கு பதில்.. எரிச்சல் வந்தது ஒன்றும் பேச முடியாமல்.. குழந்தையை கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான். பரணியின் முகம் எப்போதும் சாந்தமாகவே இருக்கும்.. சட்டென அவனை யாரும் டென்ஷன் செய்ய முடியாது. ஆனால், இந்த இரண்டு நாட்களாக.. காயத்ரியும்  உமேஷூம் மட்டும் சட்டென அவனை டென்ஷன் செய்து விடுகின்றனர்.

பரணீஷ்வரன், ஒரு ப்ரைவேட் லிமிட்டெட் கம்பெனியின் பாஸ். பார்ப்பதற்கு எதோ.. கல்லூரி படிப்பவன் போல.. இளமையான தோற்றம் அவனின் உடமை. அதை தக்க வைப்பவன் போல.. கிளீன் ஷேவ்.. ஆடாத அசையாச அளவில் அடர் சிகை.. எப்போதும் டக்கின் செய்த உடைதான்.. நேர்த்தியான போர்மல் ஷூஸ்.  குதிகாலை முன்வைத்துதான் நடப்பான் எதோ பட்டாளத்தில் ப்ரைட் செய்பவன் போல.. அவ்வளவு நேர்த்தி எதிலும். கண்ணில் தீட்சண்யம்.. அது ஒன்றே சொல்லும் அவனின் ஒழுக்கத்தை. இப்படி திடமானவனிடம் ஒரு இனுக்கு குறை என்றால்.. அது, எல்லோரிடமும் ஒரு மரியாதையை கௌரவத்தை எதிர்பார்ப்பான். யாரும் தன்னை மரியாதை குறைவாக நடத்திட கூடாது என எண்ணுவான். அதனால், அவனுக்கு நண்பர்கள் என்பதே சற்று குறைவு. நண்பர்களிடம் கண்ணியமான பார்வையை எதிர்ப்பார்த்தால், எப்படி நட்பை தக்க வைக்க முடியும். ஆக, நட்பு வட்டம் மிக குறைவு. ஆனால், பெரியவர்கள் அதாவது இவனை விட பெரியவர்கள் நட்பு வட்டம் இவனின் சொத்து. அதாவது, இவனின் அப்பா நண்பர்கள்.. எல்லோருக்கும் இவன் ஒரு தத்து பிள்ளை போல.. பரணியை கேளேன் ஒரு வார்த்தை என.. தங்களின் பிள்ளைகளுக்கு சொல்லும் அளவு வல்லவன் அவர்களின் பார்வையில், பரணி.

காயத்ரி, உமேஷ்ஷோடு பேசிக் கொண்டே உள்ளே வந்தாள்.

பரணி கார்த்திக்’கை இன்முகமாக வரவேற்றான். கார்த்திக், தலையசைத்து ஏற்றான்.

சாரதா, கொஞ்சம் அசந்து தெரிந்தாள்.. மற்றபடி தெளிவாகவே இருந்தாள்.. தன் கொழுந்தனாரை இன்முகமாக வரவேற்றாள்.. “எங்க துளசி” என்றாள்.

கார்த்திக் விசாரித்தான் தன் அண்ணியை. அடுத்து இனியனை கை நீட்டி அழைத்தான். மடியில் அமர்த்திக் கொண்டான்.

பரணி “இருங்க கார்த்திக், நான் ப்ரெஷ்ஷாகி வரேன்..” என மேலே சென்றான்.

துளசி, இவர்களின் கார் பார்த்துவிட்டு.. மெதுவாக பக்கவாட்டில் இருந்த தடத்தின் வழியே உள்ளே வந்தாள் இப்போது.

சாரதா “வா துளசி.. இரண்டு நாளில் வளைகாப்பு, அலையாதேன்னு சொன்னால், கேட்டமாட்டேன்கிற” என கடிந்தாள்.

துளசி கொஞ்சம் அதிர்ச்சியாக பார்த்தாள் சாரதாவை.. திருமணமாகி வந்தது முதல் சாரதா, அதட்டி பேசி பார்த்ததேயில்லை.. என்னமோ குரலில் தெளிவும் அதட்டலும் வரவும்.. தன் கணவன்.. இரண்டு நாளாக சொல்லிக் கொண்டிருந்தது எல்லாம் சரிதான் என தோன்ற.. துளசி “இங்கதானே வரேன் அக்கா.. அதென்ன அலைச்சல்.. எங்க வீடு மாதிரிதானே” என்றாள்.

ஒன்றும் பேச முடியவில்லை சாரதாவினால். 

இனியன் தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டே மேலே மாமாவின் அறைக்கு சென்றான்.

பெண்கள் இருவரும் அமர்ந்தனர். துளசி,  நலம் விசாரிக்க தொடங்கினாள்.

காயத்ரி, உமேஷோடு, நேராக தன் அண்ணியின் அறைக்கு சென்றாள்.. ம், அவளுக்கு தெரியுமே, சாரதாவின் அறை.. எனவே, கீழே  உள்ள தன் அண்ணியின் அறைக்கு சென்றாள். இரண்டு நாளில் உமேஷின் உடைகள் இங்கும் அங்கும் இருந்தன. எனவே, ஹீட்டர் ஆன் செய்து அவனுக்கு குளிக்க வைத்து.. உடைமாற்றி அழைத்து வந்தாள். நேராக, டைனிங் டேபிள் கூட்டி போய், ப்ரிஜில் இருந்து பழம் எடுத்து கட் செய்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

இப்போது இனியன் கீழே வந்தான். கைகால் கழுவி இருந்தான். உடைமாற்றி இருந்தான். 

காயத்ரி அழைத்து, அவனுக்கும் பழம் கொடுக்க தொடங்கினாள். இனியன் துளசிக்கு ஒரு துண்டு ஆப்பிள் கொண்டு வந்து கொடுத்தான். 

துளசி வாங்கிக் கொண்டு.. “காயூ.. நீயா இது” என அங்கிருந்தே கேட்டாள்.

காயத்ரி “ம்.. அப்போ அப்போ, பெட்டெர் வெர்ஷன் வெளிய வரும் அண்ணி” என்றாள் இன்முகமாக.

பரணி இப்போது இறங்கி வந்தான்.. அமர்ந்தான்..  ஆண்கள் பேச்சில் கலந்துக் கொண்டான்.

காயூ, அண்ணிகளின் அருகே வந்தாள். உமேஷ் காயூ பின்னாலேயே வந்தான்.

வள்ளி இப்போது மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் குடிக்க கொடுத்தார்.

பரணி கார்த்தியோடு பேசிக் கொண்டிருந்தான்.

இரவு உணவு ஆண்கள் உண்ண தொடங்கினர். காயத்ரி, உமேஷ்க்கு டேபிளில் அமர்த்தி உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். கார்த்தியின் தட்டிலிருந்து, பூரியை எடுத்தான்.. உமேஷ்.

பரணி “உமு..” என சட்டென சத்தமாக அதட்டினான். அவ்வளவுதான் , அழ தொடங்கிவிட்டான் உமேஷ். உமேஷ்க்கு, பரணியை கண்டால் இந்த இரண்டுநாட்களாக பயம் வந்திருந்தது. மருத்துவமனையில் சமாளிக்க முடியாமல், பரணி அதட்ட தொடகியிருந்தான். எனவே, இப்போது காயூ சப்போட்டு இருக்கும் ஜோரில்.. சத்தமாக அழ தொடங்கிவிட்டான்.. உமேஷ்.

தணிகாசலம் “டேய் ஏன் டா, குழந்தையை இப்படி அதட்டற, பயந்துட்டான் போல” என்றார்.. பேரனின் முதுகை நீவிக் கொண்டே.

கார்த்திக், உமேஷை சமாதானம் செய்ய தொடங்கினான்.

வள்ளி, மகனை கடிந்தார் “ஏன் டா, இப்படி சத்தம் போடற” என்றார், பரணியிடம்.

உமேஷ் தேம்பத் தொடங்கினான் இன்னும். காயத்ரி குழந்தையை தூக்கிக் கொண்டாள். ஆனாலும் அழுகை நிற்கவில்லை.

சாரதா, தனது அறையில் துளசியோடு பேசிக் கொண்டிருந்தாள்.

காயூ, இப்போது பரணியிடமிருந்து தள்ளி செல்ல நினைத்து நகர்ந்தாள்.

பரணிக்கு, உமேஷின் அழுகை என்னமோ போலாக.. அவசரமாக கைகழுவி எழுந்தான்.

காயத்ரியின் பின்னோடு.. சென்றான்.

காயத்ரி, விளக்குகள் ஒளிர்ந்த.. அல்லி தடாகம் அருகே நின்றிருந்தாள்.. அழகுக்காக… அந்த குளத்தின் அருகே வைத்திருந்த மண் யானையை காட்டி, சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள். குழந்தை என்னமோ இன்னமும் கேவிக் கொண்டிருந்தான்.

பரணி, அமைதியாக அருகே வந்தான் “குட்டு..“ என அழைத்து.. மறைந்துக் கொண்டான் காயத்ரியின் பின்னால்.

உமேஷ், கேவினாலும்.. குரல் வந்த திசையை நோக்கி பார்வையை திருப்பினான். காயத்ரியின் தோள் வழியே எட்டி பார்த்து மீண்டும் பரணி “உமேஷ்..” என அழைத்து அவளின் அந்த பக்க தோளில்  மறைந்துக் கொண்டான்.

காயத்ரி இப்போது பரணியை பார்க்காமல் உமேஷை திருப்பிக் கொண்டாள்.

பரணி இப்போது “குட்டு” என அழைக்க.. குழந்தை முகத்தில் புன்சிரிப்பு.

காயத்ரி குழந்தையை அவனுக்கு, காட்டாமல் திரும்ப.. பரணி, அவளின் வலபக்க தோளையும் தாண்டி.. உமேஷின் தலையை தொட்டான். அவன் தொடவும்.. காயத்ரி திருபவும்.. பரணியின் விரல்கள்.. பெண்ணவளின் கன்னத்தை ஸ்பரிசித்து.. அனிச்சையாய். அதில் கோவம் கொண்ட காயத்ரி, திரும்பி பரணியை முறைத்தாள்.

பரணி ஏதும் சொல்லாமல், அவளை தீண்டியதை ஒப்புக் கொள்ளாமல்.. “குட்டு மாமாகிட்ட வாடா.. சும்மா, வா வா” என அழைத்தான்.

உமேஷ் ‘கெக்கபிக்க..வென’ சிரிக்க தொடங்கினான்.. பரணியின் இந்த விளையாட்டில்.

இப்போது காயத்ரி “வேண்டாம் டா, நீ போகாத.. உங்க மாமா, சரியான கருப்பண்ணன சாமி, நீ பயந்துடுவ” என்றாள்.

பரணி “ம்.. உங்க அத்தை மட்டும் என்ன.. காளி அம்மாதான்.. பாரேன் ரெட் ட்ரெஸ் போட்டிருக்காங்க” என்றான்.. கையை நீட்டி குழந்தையை அழைத்துக் கொண்டே.

காயத்ரி, தரமாட்டேன் என இறுக்கி பிடித்திருந்தால்.. குழந்தையை. ஆனாலும் கண்கள்.. பரணியின் விளையாட்டு முகத்தை.. ஆசையாக பார்த்தாள். இலகுவாக, ஷார்ட்ஸ் டி-ஷர்ட் அணிந்திருந்தான்.. எப்போதும் அசையாத அவனின் சிகை.. இந்த தென்றல் காற்றில்.. லேசாக முன்னுச்சி முடிகளை கலைக்க.. தனக்கு இணையாக குனிந்து குழந்தையை கொஞ்சிக் கொண்டிருப்பவனை விட்டு கண்ணெடுக்க முடியவில்லை, பாவையினாள்.

காயத்ரி இப்போது “நீங்க சாப்டா கூட பேசுவீங்களா” என்றாள் சம்பந்தேமேயில்லாமல்.

பரணி “வாட்..” என நிமிர்ந்தான்.. முகம் புரியாத பாவத்தில் இருந்தது.. அந்த கண்கள் அவளை ஆராய்ந்தது.

காயத்ரி, அந்த ஆராய்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் திரும்பிக் கொண்டாள்.. குளம் நோக்கி.

பரணி, அவளின் முன்வந்தான் இப்போது.. “வாடா குட்டு” என அழைத்தான் குழந்தையை, கைநீட்டி.

குழந்தை கேவல் நிறுத்தியிருந்தது.. மாமனை நோக்கி தாவியது இப்போது. பரணி பெண்ணவள் மேல் கைபடாமல வாங்கிக் கொண்டவன்.. “இத்தனை வருஷமாக என்னை தெரியும். நான் பேசி பார்த்ததில்லையாமா? உங்க அத்தை” என குழந்தையிடம் பேசுவது போல பேச.

காயத்ரி “ம்.. ஹோட்டலில் எல்லோர் எதிரேயும் எப்படி கத்தினீங்க.. எங்க இருக்கோம்ன்னு பார்க்கவே மாடீங்களா.. ஒரு சாரி கூட கேட்க்கலை.. அதான் கேட்டேன்.. உங்களுக்கு தன்மையாக கூட பேச தெரியுமான்னு” என்றாள் வெடுக்கென.. கள்ளமில்லாமல், இதை கேட்க்கலாமா வேண்டாமா என யோசிக்காமல் கேட்டால், பாவை.

பரணி திரும்பி பார்த்தான்.. காயத்ரியை. அவளின் கண்கள் தன்னை பார்க்கவில்லை என உணர்ந்து.. ஏதும் பேசாமல் விளையாட தொடங்கினான். குழந்தையை தூக்கி போட்டு பிடித்தான்.. கீழே இறக்கிவிட்டான்.

காயத்ரி பதில் சொல்லாததால்.. அடுத்து கேட்க்க முடியாமல்.. திரும்பி திட்டில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

பரணி சட்டென “சாரி.. ஹர்ட் ஆகியிருந்தால் சாரி..” என்றான், ஒன்றுமில்லா குரலில்.

காயத்ரி “இட்ஸ் ஓகே.. “ என்றாள் அவளும்.

காயத்ரிக்கு என்னமோ போலானது, எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். நான் ஹர்ட் ஆகியிருப்பேன்னு தெரியாதா.. இப்போது ஒன்றுமே இல்லாத குரலில் சாரி சொல்றார்.. நான் சொன்னதும்.. என எதோ உள்ளே ஓடியது சம்பந்தமே இல்லாமல், எரிச்சலாக வந்தது. உண்பதற்கு அமர்ந்துக் கொண்டாள். தன் அண்ணிகளோடு.

 

Advertisement