Advertisement

பரணி, காயத்ரியை முறைத்தான்  “ஏன், எங்க அண்ணனை திருத்தலைன்னு கேட்க்கிறாங்க அக்கா” என்றான்.

சாரதா “காயூ, நீ சின்ன பெண் சொல்ல கூடாது, ஆனாலும் சொல்றேன்.. இரண்டு வருஷமா அவர்.. உங்க அண்ணன் சரியில்லை.. உமேஷ் பிறந்து எடுத்துட்டு வந்ததிலிருந்து அவர் என்கிட்டயிருந்து தள்ளி போயிட்டார் எப்படி சொல்றது.. எனக்கு ப்ரீடம் கொடுத்தார்.. ஆனால், அது எனக்கு தேவையில்லாத பிரீடம்.. ம்.. என்னை ட்ரிங்க் பண்ண அல்லோ பண்ணார்.. எனக்கு தேவையில்லாத படம் எல்லாம் போட்டு காட்டினார்.. ம்..” என சொல்லி கீழே குனிந்துக் கொண்டாள்.

காயத்ரி “அப்போ கண்டிப்பா இதை நீங்க சொல்லியிருக்கணும்.. ஏன் அமைதியா இருந்தீங்க.. இப்போ பாருங்க.. உமேஷ்ஷும்.. இனியனும்.. இப்போ கஷ்ட்டப்பட போறாங்க. சொல்லணும் சிலதை சொல்லிடனும்.” என்றாள் ஆதங்கமாக.

பரணி “நீ சொல்லுவியா.. இப்படி உனக்கு வரவன் இருந்தால் நீ சொல்லுவியா” என்றான் எழுந்து நின்று, சின்ன குரலில்.

சாரதா “டேய்..” என்றாள் அதட்டலாக.

பரணி,  தள்ளி சென்றுவிட்டான். 

கார்த்திக் “அமைதியா இரேன் காயூ. உனக்கு இது புரியாது டா” என்றான் தங்கையிடம்.

காயத்ரி “போ அண்ணா, எனக்கு என்னதான் புரியும். அண்ணியோட அமைதிதான், அவருக்கு தைரியத்தை கொடுத்திருக்கு.” என்றாள், நச்சென..

சாரதா, எங்கோ வெறிக்க தொடங்கினாள். பதில் பேச முடியவில்லை. எப்படி என்றாலும் கடைசியில் எல்லாம் பெண்கள்தான் காரணம் சொல்லி விடுவார்கள்.. ம்.. அதுதானே என உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.

பரணி, எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டுதான் நின்றான். அவள் சொல்லுவது உண்மைதான். சாரதா அமைதியாக இருந்ததுதான் கமலுக்கு தைரியத்தை கொடுத்திருக்கும்.. என்பது உண்மைதான். ஆனால், அப்படி சொல்லுவது மூடத்தனம்.. என எண்ணினான். ‘தப்பாக யோசிக்கிறா.. பெண்ணை மட்டும் காரணமா சொல்ல கூடாது. ம்.. யார் சொல்லுவது இவளிடம்..’ என எண்ணிக் கொண்டான். கூடவே சந்தேகம் வந்தது ‘எப்படித்தான் இவள் இதையெல்லாம் பார்த்தால்.. இனியனோடு அமர்ந்து சிங்க்சான் பார்த்துக் கொண்டிருப்பாள்.. இப்படி எல்லாம் யோசிப்பாளா’ என தோன்றியது பரணிக்கு.

பரணி திரும்பி “நீங்க போங்க.. போய்.. சிங்க்சான் பாருங்க.. சும்மா இரிட்டேட் பண்ணிக்கிட்டு” என்றான் கடுப்பாக.. என்னமோ அவள் பேசுவதை கேட்டும் மீண்டும் அக்கா தனக்குள் முடங்கிக் கொண்டாள் என்ன செய்வது என தோன்ற.. காயத்ரியிடம் காய்ந்தான்.

காயத்ரி எழுந்து சென்றுவிட்டாள்.

கார்த்திக்கும், தன் தங்கையின் கேள்வி ஞாயமாக இருந்தாலும்.. அவள் சொல்லுவது போல.. தைரியம் என்பதாக வேண்டுமானால் இருக்கலாம்.. ஆனால், கமல் பற்றிதான் எல்லோருக்கும் தெரியுமே. அதனால், சாரதா எதாவது பேசியிருந்தால்.. இப்படி சுமூகமாக நடந்திருக்காது இந்த பேச்சு வார்த்தை. நிறைய சேதாரம் ஆகியிருக்கும் என உண்மை நிலையை  எண்ணிக் கொண்டான். ஆனாலும், முறைத்துக் கொண்டே செல்லும் தங்கையை பார்த்து.. ‘ம்.. ரொம்ப பேசறா’ என  எண்ணினான், கார்த்திக்.

சக்திவேல், பேச்சிற்கு மறுபேச்சு எப்போதும் கிடையாது கார்த்தியிடம். கார்த்திக், அப்படியே ஒத்து சென்றுவிடுவான். காயத்ரிக்கு, என்ன  வேண்டும் என பெரியவர்கள் பார்த்து பார்த்து செய்வர்.. இல்லை, எனக்கு இதுதான் வேண்டும் என அவள் கேட்டால்.. அதுவே நடக்கும்.. சில கட்டுபாடுகளுடன் சக்திவேல் பெண் ஆசைப்பட்டத்தை ஏற்பாடு செய்து தருவார்.

முதல்முறை அப்படி அவள் அடம்பிடித்து கற்றது, இந்த கார் டிரைவிங்தான். மற்றபடி எல்லாம் தானாகவே செய்து தந்திடுவர். இவளின் M.Tech அக்ரி முடிந்ததுதான் திருமணத்திற்கு பார்க்க வேண்டும் என ஜோசியர் சொல்லியிருந்தனர்.. அதனால், படிக்க வைக்கின்றனர் பெண்ணை. எனவே, காயத்ரிக்கு விளையாட்டு தனம் அதிகம்.. துடுக்கதனம் அதிகம்.. அதை ரசிக்கும் வீடு என்பதால் இவள் எது பேசினாலும்.. அவர்கள் வீட்டில் தவறாக தெரியாது. இப்போதும் தன் தங்கையின் பேச்சை உள்ளுக்குள் ஆமோதித்துக் கொண்டேதான் இருந்தான் கார்த்திக்.

அவ்வபோது பரணிக்கும் அவளுக்கும்தான் முட்டிக் கொள்ளும்.. எப்படியும் பரணி தூர போய்விடுவான்.. இவளிடம் வாய் கொடுத்தால் மரியாதை தெரியாமல் பேசிடுவாள் என.

அடுத்து யாரும் ஏதும் பேசவில்லை. இரவு உண்டு, சாரதா மேலே சென்றுவிட்டாள் பிள்ளைகளோடு. காயத்ரியை உள்ளே அன்னைகளோடு சென்று படுக்க சொல்லியும் அவள்.. ஹாலில் அமர்ந்துக் கொண்டு.. டாய்ஸ்டோரி பார்த்துக் கொண்டிருந்தாள். 

பரணியும் கார்த்தியும்தான் விழித்திருந்தனர்.

கமல் வந்தான் ஸ்வேதாவோடு பதினோரு மணிக்கு மேல். 

அதை பார்த்துவிட்டு, எழுந்து.. காயத்ரி, அவர்களோடு.. நேராக அவர்களின் அறைக்கு சென்றாள்.

பரணிக்கு கோவமாக வந்தது.. கார்த்தியிடம் “கூப்பிடுங்க அவங்களை.. எதுக்கு போறாங்க காயத்ரி” என்றான் எரிச்சலாக,

கார்த்திக் “அவங்க அண்ணன் அவள் போறா.. இரு, என்ன நடக்குது பார்க்கலாம்.” என்றான் ஆசுவாசமாக.. அவர்களின் அறை வாசலின் அருகே நின்றுக் கொண்டான்.

காயத்ரி “ஏன் அண்ணா.. இனி ஊருக்கு வரமாட்டியா?” என்றாள்.

கமல் “என்ன, யார் சொன்னாங்க” என்றான்.

காயத்ரி ஸ்வேதாவை பார்த்துக் கொண்டே “நான்தான் கேட்க்கிறேன்” என்றாள்.

ஸ்வேதா.. ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள்.

காயத்ரி “ஏன் அண்ணா, யாரு ண்ணா இது. நல்லாவே இல்ல. அண்ணியை ஏன் பிடிக்கலை” என்றாள்.

கமல் உடைமாற்றிக் கொண்டே “அவள் சரியாக எமோஷனல். இந்த உலகத்தில் நாம வாழத்தானே பிறந்திருக்கோம். அவளுக்கு அந்த கிட்சென்.. குழந்தை தவிர ஏதும் தெரியாது. பாரு, நாங்க அடுத்தவாரம்.. பாங்காங் போறோம்..” என்றான்.

காயத்ரி “கல்யாணம் ஆகிடுச்சா” என்றாள் அண்ணன் சொன்னதை கேட்டு வாயில் கை வைத்துக் கொண்டு.

கமல் “சின்ன பிள்ளையாட்டாம் கேள்வி கேட்டாத” என்றான்.

காயத்ரி “ஏன் ண்ணா, எனக்கு புரியலை.. நீ அண்ணியோட மட்டும்தானே போகனும். இவங்க யாரு என்னான்னே தெரியாது.. பார்க்கவே வேற ஊர் மாதிரி இருக்காங்க.. கல்யாணம் ஆகிடுச்சா.. அதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டியா” என்றாள்.

ஸ்வேதா வந்தாள் இப்போது. ஆங்கிலத்தில் கமலிடம்.. “வெளிய போய் பேசுங்க.. எனக்கு தூக்கம் வருது” என்றாள்.

காயத்ரி “இல்ல இங்கதான் பேசணும்.. இரு அண்ணா” என்றாள்.

கமல் “ஸ்வேதாக்கு தூக்கம் வருதாம்” என்றான்.

காயத்ரி “முடியாது. இரு.. கல்யாணம் ஆகிடுச்சா” என்றாள்.

ஸ்வேதா “இல்ல, நாங்க கல்யாணமும் செய்துக்க மாட்டோம். நோ கமிட்மெண்ட்ஸ். எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடிக்குது வாழறோம். பிடிக்காதப்ப பிரிஞ்சிடுவோம்.. ம்.. கமல்.. மோர்னிங் 3க்கு எனக்கு மீட்டிங்.. ப்ளீஸ்.. வெளிய போய் பேசுங்க” என்றாள்.

காயத்ரி எழமாட்டேன் என அமர்ந்திருந்தாள்.. “இந்த வயதில் லிவிங் டூகெதர் ம்.. உவே.. எங்க அண்ணன் ரூம் இது.. வீடு இது.” என்றாள் சட்ட்திட்டமாக.

இப்போது கார்த்திக், இங்கேயே பார்த்துக் கொண்டிருந்த பரணியை  அழைத்தான்.. பரணியும் அருகே வந்து நின்றான்.

காயத்ரி இப்போது “அண்ணா.. இதெல்லாம் நல்லா இல்ல.. நான் இப்படி இருந்தால் நீ ஒத்துப்பியா. நமக்குன்னு ஒரு சிஸ்டம் இருக்குல்ல.. அண்ணி பாவம். அவங்க மத்த வைப் மாதிரி இல்லைதானே.. உனக்கு பிரீடம் கொடுத்தாங்க.. அது லவ்வினால் கொடுத்த ப்ரீடம். அதை மிஸ்யூஸ் பண்ணிட்ட நீயூ. நீ வா.. அங்க வந்து கொஞ்சநாள் இரு” என்றாள் தன் அண்ணின் கையை பிடித்துக் கொண்டு.

கமல், தங்கையிடம் கூட இறங்கவில்லை. தன் கையை உதறிக் கொண்டான் “போ காயத்ரி. ஹர்ட் பண்ணாத. என்னால் இனி அவள் கூட வாழ முடியாது. போ.. கிளம்பு இங்கிருந்து..” என்றான் இறுக்கமான முகத்தோடு.

காயத்ரி வாடி போனாள். கண்ணில் நீர் நிறைந்தது. ஸ்வேதா இழுத்து போர்த்தி படுத்துவிட்டிருந்தாள்.

காயத்ரி வெளியே வருவதால்.. ஆண்கள் இருவரும் சோபாவில் சென்று அமர்ந்தனர்.

காயத்ரி வெளியே வந்ததும். கமல் கதவை தாளிடும் சத்தம் கேட்டது.

காயத்ரி, சோபாவில் தன் அண்ணன் அருகில் அமர்ந்து, தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

பரணி “எதுக்கு, அங்க போனீங்க.. மனுஷன் பேசமுடியாது அவங்ககிட்ட எல்லாம்..” என்றான், இறங்கிய குரலில்.

காயத்ரி “அண்ணா, அண்ணி பாவம். என்னையே கண்டுக்கலை.. சரியா ரெஸ்பான்ஸ் பண்ணலை. ஹர்ட் பண்ணேன்னு சொல்றார். பாவம் அண்ணி” என்றாள்.

கார்த்திக் “விடுடா, அவனுக்கு அவன் விருப்பம் மட்டும்தான் முக்கியம். விடு..” என்றான்,

பரணி அவள் பஸு செய்து சென்ற டாய்ஸ்டோரியை ஆன் செய்தான். அதன் டைலாக் கேட்கவும், தன் அண்ணனிடமிருந்து எழுந்து.. டிவி பார்க்க சென்றாள் காயத்ரி.

பரணி “நான் தூங்க போறேன்” என கார்த்தியிடம் சொல்லி சென்றுவிட்டான்.. ஒரு அறைக்கு.

கார்த்திக், தன் தங்கைக்கு துணையாக, ஹாலில் குஷன் ஒன்றை எடுத்து போட்டு படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் எல்லோரும் கிளம்பினர். காயத்ரி மட்டுமே தன் அண்ணனிடம் சொல்லிக் கொண்டு வந்தாள், அந்த அறைக்கு சென்று.

மற்றபடி எல்லோரும் கிளம்பிவிட்டனர் கனமான மனதோடு. ஏழு வருடம் முன்.. சந்தோஷமாக மருமகளை.. மகளை.. கணவனிடம் சேர்ப்பித்து சென்றவர்கள், இப்போது.. பாரத்தோடு, சாரதாவோடு ஊர் நோக்கி கிளம்பினர்.

 

Advertisement