Advertisement

தணிகாசலத்திற்கும் சக்திவேலுக்கும்.. அதிர்ச்சி. பரணி போன் செய்து எல்லோரிடமும் சொல்லி சண்டை போட்ட போது கூட.. யாரும் அப்படி கமல் பெண்ணை வீட்டுக்கு கூட்டி வருவானா என எண்ணிதான் இருந்தனர். ஆனால், வந்ததும் கண்ட காட்சி.. வாயடைத்து போகிற்று எல்லோருக்கும்.

சாரதா.. மேலே உள்ளே அறையில் போய் முடங்கிக் கொண்டிருந்தாள். என்ன யோசிப்பது எனகூட தெரியவில்லை.

சக்திவேல் கமலிடம் “என்ன டா, சாரதா எங்கே” என்றார்.

காயத்ரி “அண்ணா  அண்ணா, யாரிது” என்றாள்.

கமல் யாருக்கும் பதில் சொல்லாமல் “ஸ்வேதா, நீ உள்ள போ.. இனியா ஸ்வேதா கூட போ..” என்றான் தன் மகனையும் பார்த்து பொறுமையான குரலில்.

அந்த பெண், எல்லோரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

தணிகாசலம் அப்படியே அமர்ந்தார் சோபாவில்.

கமல் “என்ன அப்பா” என்றான் அருகில் இருந்த சேரில் அமர்ந்துக் கொண்டு.

வள்ளி கிட்சென் உள் சென்று.. எல்லோருக்கும் தண்ணீர் எடுத்து வந்தார்.

கார்த்திக் தன் அன்னையிடம் “அண்ணி எங்கேன்னு பாரும்மா” என்றான்.

பரணி.. மேலே சென்றிருந்தான்.

சாரதாவை பார்த்த பரணியால், பேசவே முடியவில்லை “வா அக்கா கீழ” என்றான்.

சாரதா அழுது அழுது அப்படியே நைட்டியோடு இருந்தாள்.. உமேஷ் எதோ சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாம் அங்கேயே இருந்தது.. விளையாட்டு பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது.

பரணி “அக்கா, வா.. எல்லோரும் வந்திருக்காங்க வா.. குளி” என இப்போது அதட்டலாக சொன்னான்.

சாரதா ஏதும் பேசாமல் தம்பி சொன்னதை செய்ய சென்றாள்.

உமேஷ்ஷை கையில் எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.

காயத்ரியும் வள்ளியும் மேலே வந்தனர் சாரதாவை பார்க்க.

கமலின் தந்தை, சக்திவேல் “என்ன டா.. சொல்லணும்.. என்ன நடக்குது. பரணிதம்பி சொன்னபோது கூட நான் நம்பலை.. எதோ குடும்பத்துக்கு செலவு கணக்கு பார்ப்ப, ஊர் சுற்றுவேன்னுதான் இருந்தேன். ஆனால், வீட்டில் இப்படி **** கூட்டி வந்து.. இதெல்லாம் நல்ல குடும்ப ஆட்கள் செய்கிற வேலையா..” என்றார் கோவமாக.

கமல் “என்ன செய்துட்டேன்.. இப்போ யாருக்கு என்ன குறை.. சொல்லுங்க” என்றான்.

தணிகாசலம் மாப்பிளையை இமைக்காமல் பார்த்தார். என்ன பேச்சு என்பதாக. ஏனோ பேசவே பெண்ணை பெற்றவருக்கு பயமாக இருந்தது.

பரணி “என்ன.. என்ன குறைன்னு கேட்க்குறீங்க.. யார் அந்த பொம்பளை” என்றான், மரியாதை என்பதே இல்லாமல்.

கமல் “பரணி, மரியாதையா பேசு” என்றான்.

பரணி “என்னங்க மரியாதை, யாருக்கு கொடுக்கணும் நான்.. வெட்கமாக இல்லை.. இரண்டு பசங்க.. மேலே ரூமில் பொண்டாட்டி.. கீழ நீங்க இன்னொரு பொண்ணுக் கூட.. இதில் மரியாதை வேண்டுமாம்” என கேள்வியாக கேட்டுக் கொண்டே கமலை நெருங்கியிருந்தான்.

கமல் அசராமல் அமர்ந்திருந்தான்.

இப்போது உமேஷ் அழத் தொடங்கினான்.

கார்த்திக் உமேஷை வாங்கிக் கொண்டான் பரணியிடமிருந்து. பின் “பரணி அமைதியா இருங்க..” என அவனை பின்னால் இழுத்தான்.

இப்போது சாரதா இறங்கி வந்தாள். 

கமல் தன் மனையாளை பார்த்து “இங்கபார், உனக்கு பதில் சொல்ல மட்டும்தான் என்னால் முடியும்.. சும்மா, எல்லோரையும் கூட்டிட்டு வந்துட்டா ஆச்சா.. நீ என்ன கேட்கணுமோ கேளு” என்றான்.. பரணியை முறைத்தபடியே.

பரணி “எங்களுக்கு இருக்குங்க.. எல்லா ரைட்சும். எங்களுக்கும் பதில் சொல்லணும் நீங்க” என்றான் எகிறிக் கொண்டு.

காயத்ரி கார்த்திக் இருவரும் அப்படியே பார்த்திருந்தனர் பரணி இவ்வளவு ஆவேசமாக பேசுவான் என கணிக்காதவர்கள் அப்படியே பார்த்திருந்தனர்.

தணிகாசலம் “பரணி அடுத்து எப்போ ப்ளைட்” என்றார்.

பரணி “இருங்க பா.. அந்த பொம்பளைய அடிச்சி விரட்டிட்டு பார்க்கிறேன்” என்றான்.

கமல் எழுந்தான் “பரணி.. திஸ்சிஸ் யுவர் லிமிட்..” என்றான்

பரணி, கமலின் கழுத்தை பிடித்திருந்தான் “என் லிமிட் தெரியும். வீட்டுக்குள் வைச்சி எங்க அக்காவை ரத்தமில்லாமல் சித்ரவதை செய்திருக்க நீ. அத்தனை தரம் கேட்டேன்.. என்ன அக்கா நடக்குதுன்னு கேட்டேன் உன்னை பத்தி ஒருவார்த்தை சொல்லலையே.. பாவி.. லிமிட் பற்றி நீ பேசற.. வெட்கமா இல்ல.. எப்படி டா.. இன்னொரு பெண்ணை வீட்டுக்கு கூட்டி வர முடியுது” என்றான்.

கமல், பரணியின் பிடியில் சிக்கியிருந்தான்.. விடுவித்துக் கொள்ள முயன்றான்.. பிடி இருக்கிறது.. அப்படியே நின்றான் கமல். 

தணிகாசலம் “பரணி விடு அவரை” என்றார்.

பரணி, பேசி முடித்து தளரவும்.. கமல் தன் பலம் கொண்டு.. பரணியிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.

பெண்கள் யாரும் பேசவில்லை.

காயத்ரிதான் “ஏன் அண்ணி, அப்போவே என்னான்னு எல்லோருரிடமும், சொல்லியிருந்தால்.. இப்படி ஆகியிருக்காதில்ல” என்றாள்.

பரணி காயத்ரியிடம் திரும்பினான் “என்ன பேசற நீயு. என்ன செய்திருப்பீங்க.. இப்போ செய்ங்க.. பார்க்கிறேன் இப்போ செய்ங்க..” என்றான்.

காயத்ரி “அண்ணி, அப்போவே அண்ணன் பற்றி சொல்லி இருக்கலாமில்ல.. அதான் சொன்னேன்” என்றாள் இப்போது பயந்த குரலில்.

கௌசல்யா “சும்மா இரு காயூ” என்றார்.

காயத்ரி “அண்ணியும் என்ன நடக்குதுன்னு சொல்லணுமில்ல ம்மா” என்றாள்.

பரணி “ஓ.. இப்போ அவள்தான் சொல்லலை.. அதான் பிரச்சனை..” என்றான் அவளை எரிப்பது போல பார்த்து.

கார்த்திக் “இல்ல, அவள் அப்படி சொல்லல பரணி. அவள் சின்ன பெண்.. நாங்க யாரும் அண்ணியை ஏதும் சொல்லல..” என சமாதானம் செய்தான்.. பின் காயத்ரியிடம் திரும்பி “நீ அமைதியா இரு” என்றான்.

காயத்ரி “அண்ணா, நான் என்ன சொன்னேன்.. அண்ணன் மேல தப்பு இல்லைன்னு சொல்லலையே.. அண்ணியும் கண்டிச்சிருக்கணும், முடியலைன்னா.. அப்பாகிட்ட சொல்லியிருக்கணும். அப்படின்னுதானே சொல்றேன்” என விளக்க..

பரணி “ஓ.. சாரதா சொல்லாததுதான் பிரச்சனை. சொல்லி நீங்க கண்டிச்சு இருந்தால்.. உங்க அண்ணன் சரியா இருந்திருப்பார்.. ம்.. உனக்கு தெரியுமா உன் அண்ணன் என்ன என்னெல்லாம் செய்தார்ன்னு.. “ என காயத்ரியிடம் பேச தொடங்கினான்.

கார்த்திக் “காயத்ரி நீ போ” என்றான்.

கமல் “அப்படி என்ன டா, நான் செய்துட்டேன்.. இதுவரைக்கும் இவளுக்கு ஒருகுறை இருக்குமா.. நல்லாதானே வைச்சிருக்கேன். பாங்கில் இவள் பேரில் மாதமானால் பணம் போடுறேன்.. பிள்ளைகளை வந்து பார்க்கிறேன். இன்னும் என்னடா” என்றான்.

இப்போது பரணி நக்கலாக எல்லோரையும் பார்த்தான் “பார்த்துக்கோங்க.. உங்க அண்ணன் லட்சணத்தை.. உனக்கு கல்யாணம் ஆகி, இப்படி நடந்தால்.. அப்போது தெரியும்.. பணம் போடுறாராம்..” என காயத்ரியை பார்த்து இறுதி வார்த்தை பேசி.. நின்றான்.

தணிகாசலம் “பரணி, நீ மாப்பிள்ளையை பற்றி மட்டும் பேசு” என்றார்.

கார்த்திக்கு இப்போது பரணியின் மீது கோவம்.. எனவே, முறைத்தான் “பரணி, நீங்க அண்ணனை பத்தி மட்டும் பேசுங்க” என்றான்.

பரணிக்கும், தன் தவறு புரிந்தது. எனவே, இப்போது கமலை பார்த்தான் “ஏன் கோவமே வரலை உனக்கு.. உன் தங்கச்சியை நான் பேசுறேன்.. கோவம் வரலை. உன் பொண்டாட்டியை, உன் தங்கச்சி பேசுறா கோவம் வரலை.. ஆனால், அந்த பொம்பளையை பேசினதும் உனக்கு கோவம் வந்துதுள்ள” என்றான் நக்கலான குரலில்.

கமல், தண்ணீர் எடுக்க..பிரிட்ஜ் நோக்கி சென்றான்.. பரணியின் பேச்சை காதில் வாங்காமல்.

பரணி, கார்த்தியை பார்த்து இப்போது “எப்படி போறார் பாருங்க.. கோவமாக வரலை.. உங்க அக்கா தங்கச்சிக்கு இப்படி நடந்திருந்தால்.. இப்படிதான் பேசிகிட்டே நிப்பீங்களா” என்றான். இந்த கமலை ஒன்றும் செய்ய முடியாமல், நான் தம்பி என் நிற்கிறேனே என தன்மீதே கோவம் பரணிக்கு. எனவே, அப்படியே எரிதணலாய் நின்றான் கமலை கண்களால் எரித்துக் கொண்டு.

சக்திவேல் “பரணி பொறுமையா இருப்பா.. அவனை கையை கால்களை உடைத்தாவது ஊருக்கு கூட்டி போயிடலாம். இனி, அவன் இங்க வேண்டாம்.. பேசிக்கலாம். இனி, கமல்.. கார்த்தியோட சேர்ந்து பிஸினெஸ் பார்க்கட்டும்” என்றார்.

பரணி “அஹ.. எதுக்கு மாமா, எங்க அக்காக்கு ஒரு மரியாதை.. மனசு.. எல்லாம் இருக்குங்க மாமா. அவள் இனி, இந்த ஆளோட சேர்ந்து வாழமாட்டாள்.” என்றான்.

பெரியவர்கள் எல்லோரும் ஒன்றும் பேசமுடியாமல் பார்த்தனர், பரணியை.

 காயத்ரி “கமல் அண்ணா.. என்ன அண்ணா.. ஏதாவது பேசேன்” என்றாள்.

பரணி இப்போதும் முறைத்தான், அவளை.

கமல் “நான் போக சொல்லையே.” என்றான் நயவஞ்சகமான குரலில்.

கார்த்திக்கே அண்ணன் மேல் கொலவெறி வந்தது.. “என்ன கமல் இப்படி பேசுற..” என சொல்லி அண்ணன் முகத்தை பார்க்காமல் திரும்பிக் கொண்டான்.

காயத்ரி “அண்ணா, இது பேச்சில்லை. இது சரியில்லை. அங்க அண்ணியை பாரேன். எப்படி நிக்றாங்க.. “ என்றாள்.

கமல் “நீ பேசாத காயூ. அவளுக்கு என்ன தோணுதோ செய்யட்டும். என்னால், என்னை மாற்றிக் முடியாது. டிவேர்ஸ் வேணும்ன்னா தரேன். பசங்க என் கூடவே இருக்கட்டும்.. எனக்கு ப்ரோப்லேம் இல்லை. அவ வேற மேரேஜ் பண்ணிக்கட்டும்” என முடிக்கவில்லை.

கௌசல்யா “டேய் நிறுத்துடா..” என்றார்.

கமல் அப்படியே நின்றான்.

அடுத்து என்ன செய்வது.. எப்படி இந்த பேச்சுகளை கொண்டு செல்லுவது என யாருக்கும் தெரியவில்லை. எல்லோரும் அமைதியாகினர்.

Advertisement