Advertisement

நீ என்னுள் யாரடா!

3

இனியன் முதல் பிறந்தநாள் விழா இனிதாக முடிந்தது. வீடு வந்தனர் அனைவரும். கமல்தான் ஒருநிலையில் இல்லை.. நண்பர்களோடு சேர்ந்து அதிகமாக சோமபானம் குடித்து.. தடுமாறிக் கொண்டிருந்தான். கார்த்தியும் பரணியும் அவனை கொண்டு வந்து வீடு சேற்பதற்குள் ஒருவழியாகிவிட்டனர்.

கெளசல்யாவிற்கு மனதே சரியில்லை.. வீட்டில் யாருக்கும் இந்த பழக்கம் இல்லை.. எப்படி இவன் பழகினான்.. அங்கெல்லாம் வந்தால் இப்படி இருப்பதில்லையே.. எப்படி இப்படி ஆனான் என தன் இளைய மகனிடம் புலம்பி தீர்த்துவிட்டார்.

கார்த்தியும் “விடும்மா, எதோ ஒருநாளாகதான் இருக்கும்.. நீ கவலைபடாத. அதெல்லாம் சரியாகிடுவான்.. நீ படு.. மணி ஒன்னாக போகுது” என சமாதானம் செய்து உறங்க வைத்து வெளியே வர.. தன் அண்ணனின் அறை வாசலில் பரணியும் அண்ணியின் நின்று பேசும் சத்தம் கேட்டது.

சாரதாவின் குரல் சரியாகவே இல்லை.. “இல்ல டா, எதோ இன்னிக்குதான்..” என்றாள்.

பரணி “இல்ல க்கா.. உண்மைய சொல்லு” என்றான் விசாரணையான குரலில்.

சாரதா “பிரெண்ட்ஸ் கூட வீகென்ட் போவார்.. அப்போது மட்டும்தான் இப்படி அதிகமா ட்ரிங்க் பண்ணுவார். மற்றபடி வீட்டில்தான். எதோ இன்னிக்கு கொஞ்சம் அதிகம், சந்தோஷத்தில்..” என சமாளித்தாள்.

பரணி “வேண்டாம் அக்கா.. இப்போவே சொல்லிவை” என்றான்.

சாரதா “இல்ல டா, அவர் அப்படி எல்லாம் கண்ட்ரோல் இல்லாமல் போபவர் இல்லை டா.. நீ போய் தூங்கு, காலையில் ஈயர்லி மோர்னிங் பிளைட்.. நீ போ” என்றாள் அதட்டலாக.

பரணிக்கு, என்னமோ தன் மாமா சரியில்லை என எண்ணம். விழாவில் அவரின் பேச்சும்.. ஆட்டம் பாட்டம் எல்லாம் எதோ ஒருமாதிரி இருக்க.. மச்சான் யோசினையோடே வந்தான் அறைக்கு. அவனின் பின்னால் கார்த்திக் வந்தான்.

கார்த்திக் பரணியிடம் “என்ன பரணி எதோ யோசனை” என்றான்.

பரணி “இல்ல, மாமா பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான் மறைக்காமல்.

கார்த்திக் என்ன பேசுவது என தெரியவில்லை.. எனவே, “எப்போ உனக்கு பிளைட்” என்றான் பேச்சை மற்றும் விதமாக.

பரணி “ம்.. மோர்னிங் 6:25” என்றான்.

கார்த்திக் “எங்களுக்கும் அதேதான்.. சேர்ந்தே போய்டலாம்” என்றான்.

பரணி தலையசைத்தான். பின் சற்று நேரம் போன் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும். ஏதும் பேசிக் கொள்ளவில்லை. கார்த்திக்கு தன் அண்ணன் பற்றி தெரியும், அவனின் சித்தாந்தம் வேறு.. எனவே, தான் ஏதும் பேச முடியாது என அமைதியாக இருந்துவிட்டான்.

அதிகாலையில், கார்த்திக் காயத்ரி பரணி மூவர், மற்றும் கமலின் அத்தை வீடு, பெரியப்பா வீடு என பத்து நபர்கள் மட்டும் கிளம்பினர் கோவை நோக்கி. தாய்மார்கள் இருவரும்.. இந்த வாரம் இருந்து பேரனை கவனித்து, வீட்டை நேர் செய்து வருவர்.

சாரதா, தன் தம்பியின் கேள்வியில் கொஞ்சம் பயம் கொண்டாள்.. கணவனிடம் ‘கொஞ்சம் அதிகமாக ட்ரிங்க் பண்றீங்களோ’ என்றாள். 

கமல் முதலில் ஆராய்ச்சியாக பார்த்தான்.. பின் “அன்று நடந்த நிகழ்வில் பயம் வந்திடுச்சா.. இதெல்லாம் இங்க சகஜம் டா. நீயே பாரேன்.. எத்தனை லேடீஸ் ட்ரின்க் பண்ணாங்க.. ம்.. எல்லோரும் கண்ட்ரோல்ல தான் இருக்கோம்.. இந்த ரெலாக்ஸ் இல்லைன்னா.. என்ன ஆகும். ம்.. வேலை எவ்வளோ டென்ஷன் தெரியுமா. யு டோன்ட் வொர்ரி.. சாரு. அதுக்குதான் புட்டில் கேர் எடுத்துக்கிறனே..” என்றான் சமாதானம் செய்யும் குரலில், சொல்லியவன்.. குழந்தையின் துணியை மிஷினில் போட்டு.. வந்தான்.

சாரதா.. வீட்டை மாஃப் போட்டுக் கொண்டிருந்தாள். இனியன் உறங்கிக் கொண்டிருக்க.. இந்த பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருந்தது. இப்போது இனியன் அழவும், கமல் “நீ போ.. நான் பார்க்கிறேன்” என மாஃப் போட தொடங்கினான்.

இதுநேரம் வரை இருந்த கலக்கம்.. இப்போது சட்டென மறைந்து போனது சாரதாவின் முகத்தில்.. கணவனையே பார்த்தாள்.. ‘எத்தனை அக்கறை என்மேல்’ என.

கமல்.. “என்ன மேடம்..” என அவளின் கன்னத்தில் முத்தமிட்டு.. “போ.. அவன் அழறான்.. மிச்ச ரொமான்ஸ் நைட்” என்றான்.

சாரதா மலர்ந்து புன்னகைத்து மகனை பார்க்க உள்ளே சென்றாள்.

மாதங்கள் கடந்தது.

தணிகாலசத்தின் உடல்நலம் தேறியது. அவரும் அலுவலகம் வர தொடங்கினார். பரணி MBA படிக்க பெங்களூர் கிளம்பினான். 

ஒருநாள் சாரதா, இரவு, பதினோரு மணிக்கு, தன் தம்பிக்கு போனில் அழைத்தாள்.

பரணி நேற்றுதான் அக்காவிடம் பேசியிருந்தான். இப்போது இந்த நேரத்தில் அழைக்கவும்.. “என்ன அக்கா,” என்றான் பரபரப்பாக.

சாரதா “தம்பி, அவரை போலீஸ் ஸ்டேஷன்னிலிருந்து கால் வந்தது.. அவர் எதோ வ்ரோங் டிரைவிங் அப்படின்னு. என்னடா பண்ணனும்” என்றான் பரபரப்பாக.

பரணிக்கு அதிர்ச்சி.. “எப்போக்கா” என்றான்.

சாரதா இப்போது அழ தொடங்கினாள்.. அப்படியே பதிலை சொன்னாள்.

பரணி “அவர் ப்ரெண்ட்ஸ் நம்பர் ஏதாவது இருந்தால் அனுப்புக்கா.. நான் பேசறேன். இனியன் என்ன பன்றான். ஒண்ணுமில்லக்கா.. இதெல்லாம் இப்போ சகஜம்” என்றான், அவன் குரல்தான் அப்படி சொன்னது. மனது ‘பொறுப்பில்லாதவன்’ என தன் மாமாவை திட்டிக் கொண்டது.

சாரதா “ம்.. ஏதும் பிரச்ச்னையில்லையில்ல” என்றாள், விசும்பலானக் குரலில்.

பரணி “அக்கா, ஏதும் பெருசாக இருக்காது. இரு அக்கா, நான் பேசிட்டு சொல்றேன்” என்றான்.

அப்படியே பரணி, கமலின்  நண்பர்களுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி.. கமலை போலீஸ் ஸ்டேஷன் சென்று பார்க்க வைத்தான். இரவு பனிரெண்டு மணி. ரேஷ் ட்ரைவிங்.. ட்ரிங்க்ஸ்.. போலீசை கண்டபடி பேசியிருக்கிறார் என நிறைய கம்பைன்ட்.. எனவே, காலையில் வந்து இன்ஸ்பெக்டர்ரை பாருங்க.. என்றுவிட்டனர்.

காலையில் தன் அக்காவை அழைத்து பேசினான் பரணி, பாவமாக அவள் குழந்தையை வைத்துக் கொண்டு பயந்துக் கொண்டி அமர்ந்திருந்தாள்.. பரணி அழைக்கவும் “ஏதும் பிரச்சனையில்லையே” என அழுதாள்.

பரணி “ஏன், அவங்க வீட்டில் சொல்லுக்கா.. கேளுக்கா.. இப்படி ட்ரிங்க் பண்றதா சொல்லு.. அவங்க அப்பா கண்டிப்பார்” என்றான் கோவமாக.

சாரதா “போடா, அவரை என்ன நினைப்பாங்க..” என்றாள், கண்களை துடைத்துக் கொண்டே.

பரணிக்கு, கோவமாக வந்தது. ஆனாலும் “இப்போதான் அங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் பேசினேன்.. அட்வோகேட் கூட போய்.. அமௌன்ட் கொடுத்து கூட்டி வரோம்ன்னு சொன்னாங்க.. வந்திடுவார் மாமா” என்றான் ஆறுதலாக.

சாரதா “அம்மா அப்பாகிட்ட ஏதும் சொல்லிடாத டா” என்றாள்.

பரணிக்கு பாவமாக இருந்தது.. தன் அக்காவை நினைத்து. ஒன்றும் சொல்லவில்லை.

பரணி கல்லூரி கிளம்பி வந்தான். வகுப்பில் அமர முடியவில்லை. அடிக்கடி போனை பார்த்துக் கொண்டான். மதியம் 12 மணிக்குதான் கேஸ் இல்லாமல் கமலிடம் பணம் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனராம்.

பரணி, மதியம் அழைத்து அக்காவிடம் பேசினான். சாரதா இப்போதுதான் தெளிந்த குரலில் பேசினாள். பரணி “என்ன க்கா, சத்தம் போட்டியா.. என்ன சொல்றார்” என்றான் எரிச்ச்லானக் குரலில்.

சாரதா “டேய்.. நான் என்ன சொல்றது. பார்க்கவே பாவமா இருக்கார்.. அவராகவே சொல்லட்டும்” என்றாள்.

பரணி ‘அக்கா.’.. என பல்லை கடித்தான். “கோவை வந்து இரண்டு நாள் இருந்துட்டு போ க்கா..” என்றான். அக்காதான் பாவமாக தெரிந்தாள் பரணிக்கு. எனவே அப்படி சொன்னான்.

சாரதா “எங்க டா.. இப்போதான் வந்தார். வருவேன். அடுத்த மாசம் பெரியப்பா பையன் காது குத்துக்கு வரணும்.. அப்போ நீயும் வா பார்க்கணும்” என்றாள்.

பரணிக்கு ஒன்றும் பேச முடியவில்லை.

கமல் சொந்தங்களின் விழா என்றால் வருவதில்லை. சாரதா மட்டுமே வந்தாள். தணிகாசலத்திற்கு சங்கடம் எப்போதும். அப்படிதான் தன் தம்பி பெண் திருமணத்திற்கு கமல் வரவில்லை.. இந்த சடங்கு.. திருமணம் என்பதில் எனக்கு நாட்டமில்லை நான் வந்து என்ன செய்ய என ஒரு பதில் சொல்லினான். சாரதா “அவர் வெளிநாடு போயிருக்கார் வேலை விஷயமாக” என சமாளித்தாள், அப்போது. எனவே, இந்த விஷயம் தெரிந்து தணிகாசலத்திற்கு வருத்தம். அதென்ன நெருங்கிய சொந்தங்களுக்கு கூட வருவதில்லை.. இதெல்லாம் முறையா என வருத்தம். ஆனால், பெண் வாழ்வு இதனால் கெட கூடாது என அமைதியாக இருந்தார்.

சக்திவேலின் குடும்பம் மொத்தமும், அந்த விழாவிற்கு சென்று வந்திருந்தது. தன் மகன் தங்களிடமும் அதே பதிலை சொல்லி, தான் வரவில்லை என்றான். எனவே, சம்பந்தியை பார்க்கவே சக்திவேலுக்கு அவ்வளவு சங்கடம். பெரிய குடும்பம்.. மனுஷ மக்கள் ஆளும் பேருமாக அத்தனை சொந்தம் உண்டு.. இப்படி தன் மகன் விலகி நின்றால்.. வரும் தலைமுறை எப்படி வளரும் எனவும் ஆற்றாமை. ஒன்றும் பேசமுடியாமல்.. மகனிடம் ஏதாவது சொன்னால் மருமகளிடம் கோவத்தை காட்டுவான் என எண்ணி அமைதியாகினர் அவர்.

இப்படியேதான் கமலோடான வாழ்க்கை சாரதாவிற்கு. எந்த நெருங்கிய சொந்தத்தின் விசேஷத்திற்கும் கமல் வரவேயில்லை. இவள் மட்டும் மகனோடு.. தன் மாமியார் மாமனாரோடும் தான் சென்றாள்.

சொந்தங்கள் பேசுவது என்பதையும் தாண்டி.. பெற்றோருக்கு அத்தனை சங்கடமாக இருந்தது.

Advertisement