Advertisement

நீ என்னுள் யாரடா!

23

காயத்ரியை கையில் பிடிக்க முடியவில்லை அப்படி பிஸியாக இருந்தாள் பெண். திருமணத்திற்கு மூன்று மாதம் இருந்தது. தேதியை முடிவு செய்து.. மண்டபம் பார்த்து முடித்திருந்தனர். ஓவ்வொரு வேலையாக தொடங்கியிருந்தனர். அதிகம் அந்த வேலையில் பரணி இல்லை.. தணிகாசலம் பார்த்துக் கொண்டார்.

பரணி எப்போதும் போல.. வேலையில் கவனமாக இருந்தான். ஒரு நிறைவு வந்திருந்தது அவனிடம்.. அந்த நிறைவே அவனின் மனதை உற்சாகமாக செய்ய.. இயல்பு போல வேலையில் கவனம் வைத்தான் பரணி.

ஆனால், காயத்ரிக்கு அப்படி இயல்பாக இருக்க முடியவில்லை.. காயத்ரி போல அவனால் ஆர்ப்பறிக்க முடியவில்லை. ம்..  பரணிக்கும் சேர்த்து காயத்ரி, கொண்டாடி கொண்டாள் தங்களின் காதலை.. நிச்சயத்தை. ம்.. தினமும் நினைக்கும் நேரத்தில் பரணிக்கு அழைத்தாள்.. பெண். சிலசமயம் பரணி மீட்டிங் என இருப்பான்.. அப்போதெல்லாம் சைலெண்டில் போன் இருக்கும்.. வேலை முடித்து அழைப்பான்.. பரணி இரண்டொரு வார்த்தை மட்டுமே பேசுவான். ஆனாலும் அதுவே அவளுக்கு போதுமானதாக இருக்கும் போல.. கோவித்துக் கொள்ளவோ.. சண்டை போடவோமாட்டாள். ஆனால், எப்போது அவனிடம் பேசினாலும் “உங்களை பார்க்கணும்” என்பாள், காயத்ரி. பரணிக்கு, அதென்னமோ செய்யும்.. அவளின் குரலும்.. அதில் வழியும் நேசமும் அவனை. சில நொடிகள் சென்று “ம்.. பார்க்கலாம்..” என்பான் உள்வாங்கிக் கொண்ட நேசத்தை.. தன் குரலிலும் கொண்டு.

 காயத்ரிக்கு, பரணியிடம் பேசுவது போல.. எளிதாக இல்லை, அவனை நேரில் பார்ப்பது. ஏனோ நேரம் சரியாக அமையவில்லை. அதனால், இருவருக்கும் காணும் ஆர்வம் இருந்தும்.. முடிவதில்லை. காயத்ரிக்கு, தோட்டம் அத்தோடு சேர்ந்து இப்போது பேகிங் வகுப்பும் செல்லுகிறாள். அதனால், பிஸியாம் அவள். அவளே சொல்லியும் கொள்வாள். வீட்டில் அத்தோடு காலை உணவு அவள் பொறுப்பாம்.. தானே ஏதுனும் சமைத்து.. தன் தந்தையை சோதனைக்குள்ளாகி.. இப்போதெல்லாம் அவரே பாராட்டும்.. அளவுக்கு வந்துவிட்டாள். நாட்கள் அழகாகவே சென்றது இருவருக்கும்.

கௌசல்யா எப்போதும் போல.. உண்டு முடித்து தனதறையில் இருந்துக் கொண்டார். எங்கும் பத்திரிகை பார்ப்பதற்கு, மண்டபம் அலங்காரம் பார்க்க என எங்கும் வருவதில்லை. காயத்ரி தன் அண்ணன் அண்ணியோடுதான் பத்திரிக்கை மாடல் பார்க்க சென்றாள். இருவீட்டாரும் ஒரே பத்திரிக்கையாக வைத்திடலாம் என்றனர். அதனால் பரணி வீட்டிலிருந்து வந்திருந்தனர்.. அவனின் பெற்றோர். காயத்ரி துளசி கார்த்திக் ஷ்ரவன் என இவர்கள் நால்வரும் சென்றிருந்தனர் பரணி வரவில்லை. காயத்ரி தன் அன்னை வள்ளியிடம் கேட்டால்.. “வேலைன்னு சொல்லிட்டான் ம்மா.. நீ பார்த்து எடேன். அதுபோதுமே” என்றார். 

காயத்ரியிடமும் நேற்றே சொல்லியிருந்தான் பரணி “முடிந்தால் வருவேன்.. இல்ல, நீயே பார்த்துடு காயூ” என்றிருந்தான். எனவே, ஒன்றும் சொல்லாமல் காயத்ரியே பத்திரிக்கையின் மாடல் பார்த்து எடுத்தாள். எல்லோரு அதையே ஒப்புக் கொண்டனர்.

மண்டபம் அலங்காரமும் பார்ப்பதற்கு  என மற்றோருநாள் சென்றனர். பரணி அன்றும் வரவில்லை. பரணி அப்போது வீடியோ காலில் வந்தான் “உனக்கு பிடித்ததை செய்திடு டா.. இங்க இன்னும் வேலை முடியலை..” என்றான். காயத்ரியே தனக்கு பிடித்ததை சொன்னால்.. பெரியவர்கள் ஆமோதித்தனர். இப்படி ஒவ்வொன்றுக்கும் பரணியின் வேலை காரணமாக அவனால் வரமுடியாமல் போனது. காயத்ரி இரவில் பரணி பேசும் போது “ஏன் இப்படி ஹோப் கொடுக்குறீங்க” என காய்ந்தாள் பொறுமை தீர்ந்து போய்.

பரணி “சாரி டா.. இந்தமுறை ஒரு பெரிய ஆர்டர் எடுத்திருக்கோம். அதனால், என்னால் நகர முடியலை, புரிசுக்க காயத்ரி” என்றான்.

காயத்ரியினால் ஏதும் பேசிக் கொள்ள முடியவில்லை.

முகூர்த்த புடவை எடுக்க இன்று நல்ல நாள் என சொல்லியிருந்தனர். பரணியின் பெற்றோர் கிளம்பி கடைக்கு வந்துவிட்டனர்.. காயத்ரியின் குடும்பம் முழுவதும் இன்று வரும். 

கௌசல்யா காலையிலிருந்து பொருமிக்கொண்டே இருந்தார். சக்திவேல் ஒரு அதட்டல போட்டு.. “பொண்ணுக்கு நல்லது நடக்கும் போது, இப்படி முகத்தை தூக்காத..”  என்றார். அதில்தான் சற்று அமைதியானார் கௌசல்யா.

காயத்ரி நூறுமுறை பரணியிடம் கேட்டுவிட்டாள் “ஈஷ்வர்.. கிளம்பிட்டீங்களா.. ரெடியாகிட்டீங்களா.. வந்துடுவீங்களா” என கேட்டுக் கொண்டே இருந்தாள் காலையில் கிளம்பிக் கொண்டே.

பரணி தன் பெற்றோர் அக்காவோடு காரெடுத்ததும் காயத்ரிக்கு செய்தி அனுப்பிவிட்டான் “நாங்க கிளம்பிட்டோம்” என. அப்பாடா.. பெண்ணவளுக்கு நிம்மதியானது.

காயத்ரி உண்டுக் கொண்டிருந்தாள்.. எல்லோரும் தயராக இருந்தனர். கார்த்திக் காரெடுக்க.. வெளியே சென்றான்.

காயத்ரி தன் அன்னையிடம் “அம்மா.. பாட்டியோட அந்த ரெட்டைவடம் செயின் கொடும்மா..” என்றாள் தன் அன்னையிடம்.

கௌசல்யா அதிர்ந்து மகளை பார்த்து “என்ன புதுசா கேட்க்கிற” என்றார்.

காயத்ரி ஹாலில் இருந்த கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக் கொண்டே “நீதானே அது லக்கின்னு சொல்லுவ.. யாருக்கு பர்த்டேன்னாலும் போட்டு விடுவ.. இன்னிக்கு கொடேன்..” என்றாள்.

கௌசல்யா “அது.. உள் லாக்கரில் இருக்கு.. இபோவெல்லாம் எடுக்க முடியாது லேட் ஆகும்” என்றார்.

காயத்ரி “போம்மா.. மணியாச்சு..” என்றாள்.

துளசி “காயத்ரி இந்தா.. இந்த அன்னம் டாலர் செயின்.. போட்டுக்கோ.. ஜிமிக்கிதானே போட்டிருக்க.. அழகா இருக்கும்” என பெண்ணவளுக்கு எடுத்து வந்து கொடுத்தாள் துளசி.

காயத்ரி “அஹ.. சூப்பர் அண்ணி, தேங்க்ஸ் அண்ணி” என அணிந்துக் கொண்டாள்.

துளசி “கிளாசி லுக் போ” என்றாள்.

காயத்ரி “ம்.. நல்லா இருக்குல்ல..” என்றாள் முகம் மலர.

சக்திவேல் மகளை பார்த்து “அப்பா.. அந்த முடியை கட்டி பின்னிட்டியா இன்னிக்கு.. இப்போதான் பார்க்கவே அழகா இருக்கு” என்றார்.

காயத்ரி “சும்மா ஒரு சேஞ்சுக்கு ப்பா.. நாளைக்கு திரும்பவும்.. போனிதான் போட்டுப்பேன்” என்றாள்.

துளசி காயத்ரிக்கு மல்லிகை பூ வைத்துவிட்டாள்.

சக்திவேல் மகளின் பேச்சை கவனிக்காமல்.. மகளின் முகம், பூ வைத்தும்  இன்னும் பிரகாசமாவதை பார்த்துவிட்டு.. தந்தை “ம்.. சரிதான். ஆனால் இதுதான் உனக்கு அம்சமா இருக்கு டா.. போலாமா.. சாமி கும்பிட்டியா டாம்மா..” என்றார்.

காயத்ரி பூஜை அறை சென்று வணங்கி வந்தாள்.. துளசியிடமிருந்து.. ஷரவனை வாங்கிக் கொண்டு காரில் சென்று ஏறிக் கொண்டாள், பெண்.

எல்லோரும் கிளம்பினர்.

பரணி, கடையில் பட்டு செக்ஷனில் அமர்ந்திருந்தான்.. இப்போது அவர்கள் வரவும்.. காயத்ரியை தேடிய அவனின் கண்களுக்கு.. பெண்ணவளின் பட்டு புடவை.. பூ.. ஜிமிக்கை.. கொஞ்சம் பெரிய பொட்டு .. என அவளின் மாறிய உருவம்.. சற்று வியப்பை தர.. இமைக்காமல் பார்த்திருந்தான் தன்னவளை. 

காயத்ரியும் பெரியவர்கள் முன் செல்ல.. பின்னால் தன் அண்ணன் மகனை கையில் ஏந்திக் கொண்டு வந்தவள்.. பரணியின் அதிர்ந்த தோற்றம் பார்த்து.. அருகில் வந்தவள்.. லேசாக அவனின் வயிற்றில் செல்லமாக குத்து வைத்தாள் .

பரணிக்கு புன்னகைதான் வந்தது “பாரு பாரு.. பப்பா காயத்ரி வெளிய வருகிறாள்.. போடா உள்ள.. உன்னை அம்மா தேடுவாங்க” என்றான் இமைக்காமல் பார்த்துக் கொண்டு.

காயத்ரி “நீங்க தேடலை..” என்றவள்.. முன்னே சென்றுவிட்டாள்.. அவனின் பதிலை கேளாமல், அவளின் அத்தனை அனுவும் சொன்னது அவளுக்கு கோவம் என.. பரணியிடம்.

பரணிக்கு சட்டென வாடிய அவளின் முகம்.. சற்று வாட்டத்தை கொடுத்து. அவளை பின்தொடர்ந்து.. அவளோடு.. தன் அன்னையின் அருகில் சென்று நின்றான். காயத்ரி “அத்தை சாப்பிட்டீங்களா.. நாங்க லேட்டா..” என கேட்டுக் கொண்டிருந்தாள். பரணியை கண்டுக் கொள்ளவில்லை.

பரணிக்கு அவளின் ஊடல் புரிய, தன் அன்னையிடம் “அம்மா.. என்னை எப்படி இருக்கேன்னு கூட கேட்க்கலைம்மா.. இவ” என்றான், காயத்ரியை பார்த்துக் கொண்டே  சொன்னான். வள்ளிக்குதான் இது புதிதாக இருந்தது. ஆனால், மணமக்கள் இருவரும் ஊடலோடு நின்றனர்.

காயத்ரி “அவர்தான் அத்தை என்னை பார்க்கலை.. நீங்க என்னான்னு கேளுங்க அத்தை. மண்டபம் பார்க்க வரலை.. பத்திரிக்கை பார்க்க வரலை.. இப்போ வந்தாலும் என்னை கண்டுக்கவேயில்லை” என்றாள் முகம் வாடி.

வள்ளி மெல்லிய குரலில் “அவன் அதெல்லாம் உன் பொறுப்புன்னு இருந்திருப்பான் டா.. பாரேன் காரியக்காரன்.. இதுக்கு சரியா வந்துட்டான் பாரு.” என மருமகளிடம் சொன்னவர் மகனிடம் திரும்பி “ஏன் டா பரணி இப்படி” என்றார் சின்ன குரலில்.

பரணி காய்த்ரியையே புன்னகையோடு பார்த்திருந்தான். காயத்ரி அடுத்து எதோ சொல்ல வர.. 

 

 

Advertisement