Advertisement

காயத்ரி, தன்னையே பார்த்துக் கொண்டு பாவமாய் நிற்பது தெரிந்து.. தன்னை தானே சுதாரித்துக் கொண்டு  எதோ பேச சாரதா எத்தனிக்க.. இப்போது பரணி கடையின் உள்ளே வருவது தெரிந்தது சாரதாவிற்கு. இயல்பாய் ஒரு சுவாரசிய உணர்வு வந்தது சாரதாவினுள்.. ஏதும் கண்டுக் கொள்ளாதது போல.. வேலையை பார்த்தாள் சாரதா.

பரணி “அக்கா.. என்ன பண்ற” என கேட்டுக் கொண்டே. காயத்ரியிடம் கண்களால்.. ‘என்ன’ என வினவினான்.

காயத்ரிக்கு சட்டென அவனின் கேள்வி புரியாமல் “மாமா, பாருங்க அண்ணி, என்கிட்டே பேசவேயில்லை.. என்னான்னு கேளுங்க” என்றாலே பார்க்கலாம். சாரதாவும் பரணியும் ஒருசேர திரும்பி பெண்ணவளை பார்த்தனர். பரணியை எப்போதும் மாமா எனத்தான் அழைப்பால் காயத்ரி, ஆனால், இப்போது இந்த அழைப்பில் அத்தனை அன்பும்.. நேசமும் சிணுங்கலுமாக இருந்தது. சாரதா அதிர்ந்து திரும்பினால் என்றால்.. பரணி, ஏண்டி இப்படி என அதிர்ந்து திரும்பினான்.

அதில் காயத்ரி “மாமா.. இப்போதான் பார்க்கவே செய்யறாங்க.. சரியில்ல. என்னை அவங்களுக்கு பிடிக்கலை போல..” என்றாள் புகார் சொல்லும் குரலில்.

பரணிக்கு ‘அய்யோடா..’ என்றானது,

சாரதா சிரிக்கவும் முடியாமல்.. தம்பியின் அதிர்ந்த பார்வையை கண்டு முறைத்தபடியே இருவரையும் சுவாரசியமாக பார்த்தாள்  சாரதா.

பரணி “சாரிக்கா..” என்றான்.

காயத்ரி “ஏன் அண்ணி, என்னை பிடிக்கலையா.. உங்க தம்பிக்கு நான் மேட்ச் இல்லையா” என்றாள் கோவமும் கொஞ்சலும் கலந்த குரலில். சாரதாவின் அமைதி கண்டு மீண்டும் அவளே “நீங்களே எங்க விஷயம் தெரிந்து பேசுவீங்கன்னு பார்த்தேன், பேசவேயில்லை. நானே வந்தாலும் நீங்க பேசமாட்டேங்கிறீங்க.. ஏன் எங்க வீட்டையும் என்னையும் பிடிக்கலையா” என்றாள் இப்போது ஆராயும் பார்வையில்.

சாரதா தம்பியை முறைத்தாள் இப்போது. என்ன இருந்தாலும்.. காயூ சொல்லுவது உண்மை என்றாலும்.. காயத்ரியை பிடிக்காமல் இல்லை. ஆனால், மீண்டும் அதே இடத்தில்.. அதே வழி உறவிலா நாம் சந்திக்க வேண்டும் எனதான் சாரதாவிற்கு எண்ணம். ஆனால், சில நிகழ்வுகளை தடுக்கவோ.. கடக்கவோ முடியாது ஏற்க வேண்டும். அதில் இந்த காயத்ரி பரணி திருமணம் என்பது அவளுக்கு புரிந்திருக்கிறதே.. எனவே, இப்போதுதான் சாரதா “ஏன் அவளை பேசவிட்டு வேடிக்கை பார்க்குறியா” என்றார் தம்பியிடம்.

பரணி புன்னகையோடு “அக்கா..” என்றான்.

காயத்ரி “உங்க தம்பிகிட்ட மட்டும்தான் பேசுவீங்களோ.. என்கிட்ட பேசமாட்டிங்களோ” என ராகம் பாடியபடியே.. சாரதாவை இடித்துக் கொண்டு அருகில் வந்து நின்றாள்.

சாரதாவும் “ஆமாம்.. எல்லோரும் இப்போ பெரியாள் ஆகிட்டாங்க.. என்கிட்டே யார் விஷயத்தை சொன்னாங்க. நீங்களா சொன்னீங்க. இவன்தான் வந்து சொன்னான். எனக்கே தெரியாமல் இந்த சின்ன பெண் என்னென்னமோ செய்யும்.. நான் வந்து பேசணுமா..” என்றாள் அதட்டலாக.. எல்லாம் விளையாட்டாகவே பேசினர்.

காயத்ரி “அண்ணி, வெட்கமா இருக்காதா.. நானே எப்படி வந்து சொல்லுவேன்” என்றாள்.

சாரதா “அவன்கிட்டேயே.. நீதான் சொன்னியாம்.. என்கிட்டே என்ன” என்றாள் கிண்டலாக.

காயத்ரி “அய்யோ.. எல்லாத்தையும் சொல்லிட்டிங்களா பரணி மாமா.. நீங்க போங்க..” என பரணியிடம் இருந்து பார்வையை சாரதா பக்கம் திருப்பியவள் “அண்ணி, அவங்க சொன்னதை நம்பாதீங்க.. நான் சொல்லுவதுதான் உண்மை. அந்த ரேசொர்டில் இவர்தான் எதோ சொன்னார்.. இவர்தான் முதலில் சொன்னார். ம்.. இனியன் வந்து கூப்பிட்டதால.. அப்புறம் நாங்க பேசிக்கலை.. ஆமாம்தானே” என்றாள் படபடக்கும் மனதோடு.. இமைக்காமல் பரணியை பார்த்துக் கொண்டு.

பரணிக்கே இது புதிய செய்தி.. மேலும் அவளின் இமைக்காத பார்வை.. என்னவும் செய்யும் தானே அவனை.. எனவே பரணியும்  “ம்.. தெரிஞசிடுச்சா” என்றான் தலையை கோதிக் கொண்டே புன்னகையோடு.. அவைகளுக்கும் மட்டும் கேட்க்கும் குரலில்.

ஆனால், சாரதாவிற்கும் தம்பியின் பதில் காதில் விழுந்தது.

காயத்ரி “பார்த்தீங்களா.. ம்.. அதான் உண்மை” என்றாள்.

சாரதாவிற்கு தம்பியின் முகமும்.. காயத்ரியின் முகத்தையும் பார்க்க.. வேறு எதையும் யோசிக்க முடியவில்லை “சரி, இப்போது எதுக்கு இரேண்டுபேரும் இங்க வந்தீங்க.. என்னை சாக்கு வைச்சி.. பார்த்துக்கவா..” என்றாள் கண்டிப்பான  குரலில்.

காயத்ரி “இல்ல அண்ணி, நான் அப்படி இல்லை. மாமாகிட்ட நேற்றே சொன்னேன்.. அண்ணியை பார்க்க போன்றேன்.. நீங்களும் வாங்கன்னு.. இவர் வரவே மாட்டேன்னு சொல்லிட்டார். இப்போது எதுக்கு வந்தார்ன்னு தெரியலை.. ஏதாவது சுடிதார் தைக்க கொடுக்க வந்திருப்பார் போல.. கேட்டுக்கோங்க. நான் உங்களை பார்க்க மட்டுமே வந்தேன்.. நானாகதான் வந்தேன்.” என்றாள் மிடுக்காக.

சாரதா தம்பியை முறைக்க.. பரணிக்கு புன்னகை தாண்டி வேறேதும் இல்லை.. அக்காவை பார்த்து.. “நான் போய் வேலையை பார்க்கிறேன். லஞ்ச் சேர்த்து ஆர்டர் செய்கிறேன்.. ம்.. வரும் போது.. பலூன் வாங்கிட்டு வரேன்.. ம்.. நீங்க பாருங்க” என.. இறுதி வாக்கியத்தை தன்னவளை பார்த்து  சொல்லி முடிக்க கூட இல்லை..

காயத்ரி “எனக்கு வைட் பலூன் வேண்டும்” என்றாள்.

சாரதா தம்பியை பார்த்து தெரிந்தும் தெரியாமலும் கிண்டலாக புன்னகைக்க.. பரணி “அஹ.. பட்ஜெட் பிரென்ட்லி அக்கா.. பலூன்.. பஞ்சுமிட்டாய்.. ஒரு லாங் டிரைவ்.. 100க்கு சாக்லெட்.. அவ்வளவுதான்.” என்றவன் விளையாட்டாய் சொல்லிக் கொண்டே ஒரு சாக்லெட் எடுத்துக் கொடுத்தான் காயத்ரியிடம்.

காயத்ரி அந்த சாக்லெட் ஆசையாக வாங்கிக் கொண்டாள்.. முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.. பரணி சாரதா இருவரும் கிண்டல் செய்கின்றனர் என தெரிந்தாலும் அவளின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. 

காயத்ரி “மாமா.. கார்த்தி அண்ணாக்கு போன் செய்து மதியம் லஞ்ச் முடிச்சு நான் வருவேன்னு சொல்லிடுங்க” என்றாள் அசராமல்.

பரணி “ம்.. இப்படிதான் கொஞ்சம் பெருசா.. கோர்த்தும் விட்டுடுவா..” என்றான் தன்னவளிடம், செல்ல கோவமாக.

சாரதாவிற்கு புன்னகையும் கலவரமும் சேர்ந்துதான் வந்தது.. இதுங்க ரெண்டும் சேர்ந்து என்னை என்ன செய்யுமோ என எண்ணியவர்.. “எனக்கு வேலை இருக்கு.. காயத்ரி அம்மாகிட்ட சொல்லிட்டியா.. என்ன சொன்னாங்க.. இங்கே வந்திருப்பது தெரியுமா” என விசாரணையில் இறங்கினாள்.

காயத்ரி “அப்பாகிட்ட அம்மாகிட்ட சொல்லிட்டுதான் வந்தேன். துளசி அண்ணி அப்போவே சொன்னாங்க.. பரணியை தான் பார்க்க போறேன்னு சொல்ல வேண்டியது தானே.. அதென்ன சாரதா அக்கா பேர் சொல்றன்னு கேட்டாங்க.. இவங்க நைட் வரலேன்னு சொல்லிட்டு.. இப்போது வந்திருக்காங்க.. நான் என்ன பண்றது. எனக்கு பொய் சொல்ல வராது.. கார்த்திக் அண்ணாகிட்ட மட்டும் சொல்லிடுங்க மாமா ப்ளீஸ்.. ஓகே தானே அண்ணி” என்றாள்.

சாரதா “பயங்கரமான ஆளாகிட்ட காயூ” என்றாள் புன்னகையோடு.

காயத்ரி “ம்ம்.. உங்க தம்பி மிதவாதியாவே இருக்கார் அண்ணி.. அதான் நான் இப்படி பயங்கரவாதி ஆகிட்டேன்” என்றாள் பரணியை பார்த்து கண்ணடித்து.

சாரதா வாயில் கை வைத்து.. துணிகளை உள்ளே வைக்க சென்றுவிட்டார்.

பரணி “ஏய்.. அக்கா டி..” என அவளின் தலையில் கொட்டினான் வலிக்காமல்.

காயத்ரி “மாமா.. ஏன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. நைட், என்கிட்டே நாலு வார்த்தை பேசிட்டு வைச்சிட்டீங்க.. ஏன் என்ன ஆச்சு” என்றாள் அக்கறையாக.

பரணி “அம்மா வந்துட்டாங்க டா.. அதான். அம்மாக்கு இதெல்லாம் இன்னும் ஏற்கவே கஷ்ட்டமாகதான் இருக்கு. இதுக்குதான் எந்த பெண்ணையும் பிடிக்கலைன்னு சொன்னியான்னு இப்போ வரை கேட்டிட்டு இருக்காங்க.. அம்மாக்கு இன்னும் புரியவேயில்ல..” என்றான் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டு.

காயத்ரி “ம்.. ஏன் இந்த அம்மாக்கள் மட்டும் இப்படி இருக்காங்க..” என்றாள் தன் அன்னையையும் சேர்த்துக் கொண்டு.

பரணிக்கு ஏதும் சொல்ல முடியவில்லை.. என் அன்னை வேறு.. உன் அன்னை வேறு என. எனவே பரணி “அதெல்லாம் பார்த்துக்கலாம்.. இன்னும் அந்த ஆதிக்கு பெண் அமைசுதானே.. நம்ம கல்யாணம். இன்னும் டைம் இருக்கு” என்றான்.

காயத்ரி ரசனையாக பரணியையே பார்த்துக் கொண்டே “நான் பாவம் ஈஷ்வர்” என்றாள் முழு காதலான குரலில்.

பரணியும் மிதமான ஒலியில் அவளின் அருகே குனிந்து “ஈஷ்வர் வேணும்ன்னா.. சும்மவா.. ம்.. “ என்றான் புருவம் உயர்த்தி கர்வமாக.

காயத்ரியின் கண்கள் காதலில் விரிந்தது.

“ஒரே மழை அள்ளி நாம போர்த்திகனும்..

கைய கொடு கதவாக்கி சாத்திக்கணும்..

ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்..

உன்ன மட்டும் உசுராக்கி பார்த்துக்கணும்..”

Advertisement