Advertisement

நீ என்னுள் யாரடா!

18

காயத்ரிக்கு, அழுகைதான் எங்காவது சென்றிடலாம் என பஸ்ஸில் அழாமல் அமர்ந்திருப்பதே  பெரிய சாதனையாக இருந்தது அவளுக்கு. மனதே கேட்கவில்லை.. இப்படி வீட்டைவிட்டு, செல்லுவது. அதே சமயம், ஒரு குடும்பத்தை.. எதுமே தெரியாத ஆதியை ஏமாற்ற முடியவில்லை அவளால். எனவே, என்னவாக நடக்கட்டும் என கிளம்பிவிட்டால்தான். ஆனால், மனது தன் வீட்டில்தான் இருந்தது.

கார்த்திக்கு, தங்கையின் செய்தி மாலை 6:30க்கு கிடைத்துவிட்டது. அவன் அலுவலகத்தில் இருந்தான். தங்கையை போனில் அழைக்க தொடங்கினான். தந்தை இன்று அலுவலகம் வரவில்லை.. காயத்ரியோடு சம்பந்தியை, மருத்துவமனையில் சென்று பார்க்க வேண்டும் என வீட்டில் இருந்துக் கொண்டார். கார்த்திக்கு இந்த செய்தியை பார்த்ததும்.. அத்தனை குழப்பம் கோவம் எல்லாம் வந்து சேர்ந்தது. தலையில் கை வைத்து அமர்ந்துக் கொண்டான்.

தன் தந்தைக்கு அழைத்து “அப்பா, அவளுக்கு டாக்ஸி கிடைக்கவில்லை. நீங்க கிளம்புங்க ஹாஸ்பிட்டல், அவள் வர லேட் ஆகும், நான் கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்” என்றான்.

அவரும் “சரிதான்.. ப்பா” என்றார்.

இப்போது பரணி அழைத்தான் கார்த்திக்கு. இந்த அழைப்பை ஏற்கும் மனநிலையில் இல்லை கார்த்திக். சந்தேகம் பரணியின் மேல்.. அதே சமயம் சந்தேகமும் இல்லை.. என்ன இருந்தாலும் பரணி.. காயத்ரியை நெருங்கவே மாட்டான் என அப்படி நம்பினான் கார்த்திக். ஆனாலும், இப்போது தங்கையின் செய்தி பார்த்து.. மீண்டும் அன்று தான் கண்டது உண்மையாக இருக்குமோ.. அதான் அழைக்கிறானோ என தோன்ற.. கார்த்திக்கு குழப்பமானது மனது.

பரணி இரண்டாவது முறை அழைக்க.. கார்த்திக் எரிச்சலாக “என்ன பரணி..” என்றான் குரலில் எரிச்சலோடு.

பரணி “ஏன் கார்த்திக் டென்ஷன். நான் வேண்ணா அப்புறம் கூப்பிடவா..” என்றான். பரணியின் குரலில் நிதானம் வந்திருந்தது. இயல்பாக இருந்தது. 

இப்போது கார்த்திக் மனது குழம்பி போனது. அவனுக்கு எங்கே தேடுவது என புரியவில்லை.. “சொல்லு பரணி” என்றான்.

பரணி “உங்க அண்ணன் பேசினார் மதியம்” என சொல்ல சொல்ல..

கார்த்திக் “இருங்க.. பரணி, காயத்ரி போன் சுவிட்ச் ஆஃப்ன்னு வருது” என்றான் ஒரு மாதிரி ஆராயும் குரலில். குழப்பமாக இவனுக்கு ஏதும் தெயர்யாதோ என்ற எண்ணத்தில்.

பரணி உடனே பரபரப்பானான் “எப்போலிருந்து” என்றான்.

கார்த்திக்கு இந்தமுறை ஆதாரம் வேண்டுமாக இருக்க.. “5மணியிலிருந்து.. தோட்டத்துக்கு போறேன்னு போனாள்.. என்னமோ போனேடுக்கவில்லை.. வேலை செய்பவர்களிடம் கேட்டால்.. பாப்பா ஐந்து மணிக்கே கிளம்பிடுச்சின்னு சொல்றாங்க.. எனக்கு ஒன்னும் புரியலை.. இன்னும் வீடு வந்து சேரலை” என்றான் இறுக்கமான குரலில்.

பரணி “இரு கார்த்திக், நான் பார்க்கிறேன். இருங்க” என சொல்லி தனது போனை கட் செய்துவிட்டான்.

கார்த்திக் அமைதியாக இருக்க முயன்றான். ஆனால், முடியவில்லை. தங்கையை எங்கே தேடுவது.. ‘ஏன் காயூவிற்கு இதில் சம்மதம் இல்லையா.. துளசி அம்மா கூட, காயூ முன்போல இல்லை என சொன்னார்கள். ஆனால், என்ன பிரச்சனை அவளுக்கு. வீட்டில் என்ன பதில் சொல்லுவேன்.’ என மீண்டும் தலையில் கை வைத்து அமர்ந்தான்.

பத்து நிமிடம்தான். அதன் பின் தனக்கு தெரிந்த காயத்ரியின் தோழி குடும்பம் ஒன்று இருக்கிறது. அந்த தோழிக்கு திருமணம் முடிந்துவிட்டது. ஆனால், இருவரும் பள்ளி முதல் நல்ல தோழிகள். அவர்கள் வீடு இவனுக்கு தெரியும் எனவே, கிளம்பினான். போன் நம்பர் இல்லை அவர்களுடையது. அதனால், நேரில் கிளம்பினான்.

 

 காயத்ரிக்கு, பஸ்ஸில் மனமே இல்லை.. இறங்கி விடலாம் என எண்ணிக் கொண்டே இருந்தாள்.. ஜன்னலோர இருக்கை.. முகத்தில் மோதும் ஆக்ரோஷமான காற்று.. ம்.. அவளின் மனது போல சீறியது காற்று. அவளின் நேச ரோஷத்தை சற்று தளர்த்தியது.. ‘கமல் அண்ணா இப்படிதானே செய்தார்கள்.. நானும் அதையேதானே செய்கிறேன்.. அப்பா பாவம்’ என அவளுக்கு அந்த ஆக்ரோஷ காற்று கண்ணில் நீரை தந்தது. 

காயத்ரி, பயணம் தொடங்கிவிட்டாலே தவிர.. இந்த பயணத்தில் குற்றவுணர்வுதான் அவளை வாட்டியது. காதல் உணர்வு சற்று மந்தப்பட்டுவிட்டது. அப்பா அப்பா என மனம்.. அறற்றியது.. அப்பாவிற்கும் பரணிக்கும் நடுவே.. மனது பயணிக்க தொடங்கியது. அழுகையாக வர.. தனது போனை வெறித்தாள். வேண்டாம்.. அப்பாகிட்ட போகனும் என சிறுபிள்ளையாய் போனை ஆன் செய்தாள். சரியாக அந்த நேரம் பரணி.. அவளை போனில் அழைத்தான்.

காயத்ரியின் கண்கள் கடகடவென கரைதாண்டும் வெள்ளம் என கண்ணீர் சிந்தியது.. தான் எதற்காக போனை ஆன் செய்தேன் என மறந்தாள்.. ஈஸ்வர்.. என பெயரை பார்த்து. பெண்ணில் அல்லாடும் மனது.. தன்னவனின் அழைப்பில் கரை கண்டது.. அழைப்பை ஏற்று “ஹலோ” என்றாள் கரகரப்பாக சின்ன குரலில்.

பரணி தனது ஜீவனை எல்லாம் திரட்டிக் கொண்ட குரலில் “க்கும்.. எங்கடா இருக்க” என்றான்.

காயத்ரிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.. “பஸ்ஸில்..” என்றாள்.

பரணி “எந்த பஸ்..” என்றான்.

காயத்ரி “தெரியலை” என்றாள்.

பரணி “கேளு..” என்றான்.

காயத்ரி கேட்டு அப்படியே சொல்ல.. பரணி கோவை ரூட் எனவும்.. பாதி வழி வந்துவிட்டான். காயத்ரியிடம் போனை கண்டெக்டரிடம் கொடுக்க சொல்லி.. தான் எங்கே நிற்கிறேன் என சொல்லி பத்து நிமிடம் காத்திருந்தான் காரிலிருந்து இறங்கி.. பஸ் எண் பார்த்துக் கொண்டு நின்ருந்தான்.

அந்த நேரத்தில் கார்த்திக்கு அழைத்து “நான் காயத்ரிகிட்ட பேசிட்டேன் கார்த்திக், நீங்க கவலை படாதீங்க.. நான் கூட்டிட்டு வரேன்” என்றான்.

கார்த்திக், அந்த தோழியின் வீட்டிற்கு செல்லும்  பாதி வழியில் இருந்தவன், மீண்டும் அலுவலகம் வந்தான்.

கார்த்திக்கு, தன் தங்கைக்கு அழைக்கலாம் என தோன்றியதுதான். ஆனால், இந்த பரணி காயத்ரிக்கு நடுவில் என்ன இருக்கிறது.. நான் அழைத்தவரை.. அவள் போன் சுவிட்ச் ஆஃப்பில் இருந்தது.. ‘எப்படி பரணிக்கு ரீச் ஆனது.. காயத்ரி என்றால் இப்போதெல்லாம் அவனுக்கு என்னமோ ஆகிறதோ.. நான் கவனிக்கவில்லையோ.. அப்போ என்னமோ இருக்கோ.. என்ன செய்வது.. இவன் ஏன் இப்படி செய்கிறான்.’ என கண்மூடி அமர்ந்திருந்தான், அலுவலகத்தில்.

பரணி, காத்திருக்க தொடங்கினான்.. ‘எப்படியோ, கிடைத்துவிட்டாள் பாவம் குழம்பியிருப்பாள்’ என மனது காயத்ரிக்காக தவித்தது. ஆனாலும் என்ன நடந்தது அவளுக்கு என குறைப்பட்டுக் கொண்டான்.. மனதில் ஆயிரம் கேள்விகள் பதில்கள். ‘காயத்ரியை நான் அதிகாமாக பாதித்துவிட்டேனோ.. தப்புதானே என் தப்புதானே. பாவம் அவள் சின்ன பெண். என் விருப்பத்திற்கு எல்லாம் செய்கிறேன். அவள் மனதை யோசிக்கவேயில்லையே.. என்ன நடந்தது என தெரியவில்லை.. கார்த்தியின் குரல்.. எதோ தன்னிடம் ஆராய்கிறது அப்போ அவனுக்கு எதோ தெரிந்திருக்கும்.. இவள் சொல்லியிருப்பாளோ.. ஆக, இவள் சொல்லிவிட்டாள்.. என்ன சொன்னால் தெரியலையே..’ என ஒன்றுமே சரியாக பிடிபடாத நிலையில் நின்றிருந்தான்.

பரணி காரின் மேல் சாய்ந்து நின்றுக் கொண்டிருக்க.. பஸ் அவனை கடந்து ஸ்டாப்பிங்கில் நின்றது பஸ். காயத்ரியை இந்த நிறுத்தத்தில் இறங்க சொன்னார் கண்டெக்டர். இறங்கினாள். பரணி கைகட்டிக் கொண்டு.. அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். காயத்ரியை முழுதாக பார்த்தவனுக்கு இப்போதுதான் கண்களில்  ஜீவன் வந்தது.. மற்றபடி ஏதும் மாற்றமில்லை.. அசையாமல் நின்றான்.

காயத்ரியால் பரணியை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.. தன்னை நினைத்தே வெட்கமாகவும்.. கோவமாகவும் வந்தது. ஆனாலும், இவனை கண்ணில் காணத்தானே பிடிக்கிறது. ஆயிரம்முறை அழைத்தாலும்.. உரிமை என்ற பெயர் சொல்லி வந்தாலும்.. அந்த ஆதியை பிடிக்கவில்லையே என்ன செய்வது.. என கண்ணீர் வராமல் தன்னை தானே கட்டுபடுத்திக் கொண்டு பரணியை நோக்கி நடந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்க முயன்று.. தோற்றனர். மனதில் காதலும் குற்றவுணர்வும் சரிசமமாக நின்றது. அதனால் புன்னகையும் கண்ணீரும் சங்கடமும் தளும்பி நிற்கிறது இருவருக்குள்ளும்.

காரில் ஏறி அமர்ந்தனர்.

பரணி ஏதும் பேசவில்லை.. போனில் கார்த்திக்கு அழைத்தான்.. “காயத்ரியை பிக் பண்ணிட்டேன் கார்த்திக் வீட்டுக்கு வந்திடுவோம்” என்றான்.

கார்த்திக், நேராக வீடு வந்துவிட்டான். கார்த்திக்கு பரணியும் காயத்ரியும் சேர்ந்து வருவது இத்தனை நாட்களில் பயத்தையோ எதிர்பார்ப்பையோ தந்ததில்லை. ஆனால், இன்று கார்த்தியின் மனதில் ஒரு பெரிய சந்தேகம் எழுக்கின்றது. அதை பார்க்கவேண்டும் என எண்ணிக் கொண்டே வராண்டாவில் அமர்ந்திருந்தான்.

சக்திவேல் கௌசல்யா இருவரும் மருத்துவமனை சென்றுவிட்டு இப்போதுதான் உள்ளே வந்திருந்தனர். சக்திவேல் வரும்போதே “காயூம்மா..” என அழைத்துக் கொண்டே வந்தார்.

கார்த்திக் “அப்பா.. உட்காருங்க” என்றான். சக்திவேல் “இருடா” என மீண்டும் உள்ளே பார்க்க.. கார்த்திக் “அப்பா உட்காருங்க” என்றான்.

கௌசல்யா உள்ளே சென்றுவிட்டார். 

கார்த்திக் மாலையில் காயத்ரி தனக்கு அனுப்பிய செய்தியை பற்றி பேச தொடங்கினான்.

முழுவதுமாக தனது சந்தேகத்தை சொல்லி முடித்தான்.. சக்திவேல் ஏதும் பேசவே முடியாமல் அமர்ந்திருந்தார்.

இப்போது பரணியும் காயத்ரியும் காரில் வந்து இறங்கினர். சக்திவேல் கார்த்திக் இருவரும் எழுந்து நின்றனர்.

கௌசல்யா இப்போது, வெளியே வந்தார்.. இருவரையும் உண்பதற்கு அழைக்க.. மகள் உள்ளேதான் இருப்பாள் என எண்ணி இருக்க.. பரணியோடு மகள் வருவதை பார்த்து ஒன்றும் புரியாமல் நின்றார்.

சக்திவேல் மகளின் முகத்தையே பார்த்தார்.  சக்திவேல் முகத்தில் அதிருப்தி. கார்த்தியின் முகமும்.. கௌசல்யாவின் முகமும் வாடித்தான் இருந்தது. எதையோ ஒருவருக்கொருவர் அறிய நினைக்கின்றனர். ஆனால், அப்படி அறிவது யாருக்கும் உவப்பானதாக இருக்க போவதில்லை.. அப்படி இருந்தும் உண்மையை மறைக்கும் நிலையை கடந்துவிட்டிருந்தனர், பரணி காயத்ரி இருவரும். அதனால், முன்னமே பேசாமல் இதுதான் என ஏற்றிருக்க வேண்டும்  இல்லை.. இப்போதேனும் பேசி தீர்க்கவேண்டும். என்ன நடக்குமோ..

கௌசல்யா “காயத்ரி, என்ன.. அண்ணன்.. நான், கூட்டிட்டு வரேன்னு சொன்னான்.. என்ன கார்த்திக். நிச்சயம் ஆகிவிட்ட பெண். என்ன பொறுப்பில்லாமல்” என கடிந்தவர்.. பரணியை வேண்டா வெறுப்பாக பார்த்தார்.

காயத்ரியின் பயத்தில் வெளிறிய முகம்.. தந்தையின் பார்வையில் பட..  காயத்ரி பரணியை பார்த்தாள். கார்த்திக் பரணியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான், பரணிக்கு என்ன சொல்லுவோம் என புரியவில்லை.. இந்த காயத்ரியின் பார்வை.. அவனை இப்போதுதான் நிலைகுலைய செய்தது.. ஏதும் பேசாமல்.. பார்வையால் யாசிக்கிறாள்.. பார்க்கவே கொடுராமாக இருந்தது காதலனுக்கு. எதற்கு வேண்டுமானாலும் என்னவளை யாசிக்க வைக்கலாம்.. அதுவும் தவறுதான். ஆனால், என் அன்பிற்காக அங்கீகாரத்திற்காக அவளை எப்படி ஏங்க வைத்திருக்கேன் என கார் நிறுத்திவிட்டு.. வராண்டாவிற்கு வரும் நேரத்திலேயே புரிந்துவிட்டது காதலனுக்கு.

கௌசல்யா “போடி உள்ள.. போய் சாப்பிட்டு படு” என்றார் மகளிடம் அதட்டலாக,

பரணி இப்போது “அத்தை இருக்கட்டும் அத்தை. கொஞ்சம் பேசணும்.. அப்புறம் போகட்டும்” என்றான் திடமாக.

கார்த்திக் இப்போதுதான் நிம்மதியானான்.

சக்திவேல்க்கு என்ன நடக்கும் என தெரிந்தநிலை.. மகனை பார்த்தார். கார்த்திக் கண்களை மூடி திறந்தான் ‘பேசட்டும்’ என்றான்.

பரணி “மாமா.. நான் எப்படி சொல்றதுன்னு தெரியலை. நான் காயத்ரியை டிஸ்டர்ப் செய்திருக்கேன்.. அவள் என்னால்தான் இப்படி ஆகிட்டா.. சாரி.” என நிறுத்தினான்.

கௌசல்யா “என்ன ஆகிட்டா.. என்னங்க” என்றார் அவருக்கு ஏதும் தெரியாதே பதறினார் பரணியின் பேச்சில்.

பரணி அவரின் பேச்சில் நிமிர்ந்து பார்த்து “இப்போ சொல்றேன்னு நினைக்காதீங்க மாமா, ப்ளீஸ் எனக்கு அவங்களை கொடுத்துடுங்களேன்..” என்றான் நிதானமாக அதேசமயம் ஒரு முடிவான குரலில்.

சக்திவேல் “என்ன ப்பா.. என் உயிரை கேட்க்கிற நீ.. ஒரு மாசம் முன்னாடி வந்து கேட்டிருந்தால்.. உன்னை தவிற யாருக்கு கொடுப்பேன்..” என்றார் வருத்தமும் ஆசையும் போட்டி போடும் தழுதழுபான குரலில். 

பரணிக்கு அந்த வார்த்தையின் தழுதழுப்பு.. தேனாக நனைத்து அவனை. அந்த வார்த்தைகள் பொய்யில்லை என உணர்ந்தியது அந்த குரல்.

கௌசல்யா “என்ன.. என்ன சொல்றான் இவன்.. என்ன தரனும். இவளையா. ஓ.. அக்காவின் வாழ்க்கைக்கு பழிவாங்க வந்திருக்கானா. என் பையன் டிவோர்ஸ் கேட்டான். அவன் வேற கல்யாணம் செய்து நல்லா இருப்பது இவனுக்கு பிடிக்கலை.. அதான் பழிவாங்க வந்திருக்கியா” என்றார் துவ்ஷமாக.

பரணி “அத்தை.. ப்ளீஸ். இதுதான்.. இதுக்குதான், நான் இந்த ப்ரியத்தையே அவளிடம் கூட சொல்லலை” என்றான் எழுந்து நின்று ப்வ்யமாக.

கௌசல்யா “அதான் என் பெண்ணையே சுற்றினியா நீ.. என்ன இப்போது வந்து நல்லவன் மாதிரி நாடகம் போடுற. எங்க மானம் போகணும் அதானே உன் எண்ணம். நீ கிளம்பு முதலில். என்ன டா, கார்த்திக் பேசிகிட்டு இருக்க.. காயத்ரி நீ உள்ள போ..” என எல்லா பக்கமும் பாய்ந்தார் கௌசல்யா.

கார்த்திக் “அம்மா.. இரு ம்மா..” என்றான்.

கௌசல்யா “டேய்.. நிச்சயம் முடிந்தாச்சி.. என்ன டா.. பேச்சு, இவனோடு என் பெண் எப்படி வாழுவாள். டேய், நீ போட.. எங்க பெண்.” என்றவர்.. பரணியை பார்த்தார் இப்போது “அய்யா சாமி, உங்க அக்கா வாழ்க்கைக்கும் என் பொண்ணு வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்ல. அது அவளின் தலைஎழுத்து..” என சொல்ல சொல்ல..

சக்திவேல் “கௌசல்யா பேசாமல் இரு” என்றார்.

கௌசல்யா அழ தொடங்கினார் “என்னாங்க, இவனை நம்பாதீங்க.. இவன் என்னமோ செய்கிறான். அவன் அக்காவிற்காக எதுவும் செய்வான். நீங்க நம்பாதீங்க” என்றார். பின் தன் பெண்ணிடம் திரும்பி கையை ஓங்கி அவள் எதிர்பார்க்க நேரத்தில் ஏன் யாருமே எதிர்பாரா நேரத்தில் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி வைத்திருந்தார் “பட்”டென.. காயத்ரி “அம்மா” அலற.. பரணி “அத்தை..” என்றான் ரௌத்ரமாக.

கௌசல்யா “அமைதியா நான் சொல்றத செய்யணும்.” என்றார் அதட்டலாக கோவமாக.

கார்த்திக் “இரு ம்மா.. டென்ஷன் ஆகாத” என்றான்.

காயத்ரி அமைதியாக கன்னம் சிவக்க நின்றாள்.

துளசி மகனோடு வெளியே வந்தாள்.. இப்போதுதான்.

சக்திவேல் “கௌசல்யா பேசிக்கலாம், நீ உள்ளே போ” என்றார். கௌசல்யா இன்னும் இன்னும் பரணியை முறைத்தார்.

பரணி “மாமா, தப்பு என்னோடது. அவள் பாவம்.. கார்ட்டூன்.. படிப்புன்னு இருந்தாள். நான்தான். இன்னும் அவகிட்ட எதையும் காட்டிகிட்டது கூட இல்லை.. நாலு தரம் பேசி இருப்போம் போனில். அவ்வளவுதான் மாமா.. அவளை ஏதும் சொல்லாதீங்க கேட்க்காதீங்க. நான் அவங்க வீட்டில் பேசவா.. நீங்க சங்கடப்டாதீங்க” என்றான்.

கார்த்திக் “எதுக்கு இன்னும் நாங்க மரியாதை கெட்டு போகவா பரணி. இது சரியில்லை பரணி.. என் தங்கையின் மனதை.. அதை சொல்லுவதற்கு என்ன.. உங்ககிட்ட இருந்து இந்த தவறை எதிர்பார்கலை பரணி.” என்றான் காட்டமாக.

சக்திவேல் “பரணி, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை நாளைக்கு பேசலாம். நீ இப்போ கிளம்பு. எந்த உறுதியும் என்னால் சொல்ல முடியாது. நீ கிளம்பு” என்றார்.

பரணி இப்போது “இல்ல, மாமா.. நான் அக்கா, அத்தை அப்பா அம்மா எல்லோர் பற்றியும் யோசித்தேன்.” ‘ஆனால், அவளை பற்றி யோசிக்கவில்லை. என்னிடம் யாசிக்கும் அளவிற்கு அவளை விட்டுவிட்டேன் இனி முடியாது’ என தனக்குள் சொல்லிக் கொண்டவன், கார்த்தியை பார்த்தான்.. பரணி.

கார்த்திக் தங்கையை பார்த்தான்.. கன்னம் சிவக்க.. தன் அருகில் நின்றிருந்தாள்.. தன் தந்தையையே பார்த்துக் கொண்டு.

கார்த்திக் “நீ என்னிடம் சொல்லியிருக்கனுமில்ல காயத்ரி” என்றான்.

காயத்ரி இப்போது அண்ணனை பார்த்தாள்.

பரணி “நான் எதுவுமே பேசலையே கார்த்திக், அவள் எப்படி என்னவென சொல்லுவாள்” என்றான் கொஞ்சம் சத்தமாக.

கார்த்திக் முறைத்தான். “நீ கிளம்பு, அப்புறம் பேசிக்கலாம்.” என்றான்.

கௌசல்யா “என்ன பேசணும். இதெல்லாம் சரிவராது” என்றார்.

பரணி மீண்டும் ஒருமுறை “அத்தை ப்ளீஸ்..” என தொடங்கி பேசினான். 

கௌசல்யா பரணியின் பேச்சை காதிலேயே வாங்கவில்லை “என்னாங்க.. நீங்க வாங்க, நான் அவங்க அப்பாகிட்ட பேசிக்கிறேன்” என்றார்.

பரணி, கார்த்தியின் முகத்தை பார்த்தான். கார்த்திக் ஒரு பெருமூச்சு விட்டு “நீ கிளம்பு, காலையில் பார்க்கலாம்” என்றான்.

பரணி மனதே இல்லாமல் தலையசைத்து விடைபெற்று சென்றான்.

அழகாக அமைய வேண்டிய நிமிடங்களை இப்படி சிக்கலாக்கி கொண்டது.. சுயநலமாக இல்லாமல்.. எல்லோரையும் யோசித்த பரணியின் மனம்தான். ம்.. நல்ல மனம் எப்போதும் சிக்கலைத்தான் சந்திக்கும் போல.. காதலாக இருந்தால் என்ன.. குடும்பமாக இருந்தால் என்ன. 

Advertisement