Advertisement

காயத்ரியின் வீட்டில் நடு ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க.. சக்திவேல் அவள் அருகில் வந்து அமர்ந்தார்.. கார்த்திக் இன்று நேரமாக வீடு வந்தான். கௌசல்யா அங்கேயே நின்றுக் கொண்டு இருந்தார்.

தந்தை மகளிடம் “ஒரு வரன் வந்திருக்குடா.. ஜாதகம் ஒத்து போகிவிட்டது. பையன் வெளிநாட்டில் இருக்கிறான். குடும்பம் நல்ல குடும்பம்.. ஒரு பையன் ஒரு பொண்ணு.. பெண் படிக்கிறா..” என எல்லாம் எடுத்து ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல.. காயத்ரிக்கு மனதில் இத்தனை நாள் இல்லாத கலவரமாக பரணியின் முகம்தான் நினைவில் வந்தது. அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தாள் பெண்.

தந்தை “கார்த்திக்.. பாப்பாகிட்ட அந்த போட்டோவை காட்டு” என்றார்.

கார்த்திக் டிவி பார்ப்பது போல இந்த உடறையாடலை கவனித்திருந்தான். காயத்ரியை போலவே, இந்த பேச்சு வாரத்தை இந்த ஒருவாரமாக தொடங்கியது முதல்.. அவன் மனதிலும் பரணியின் முகம்தான் வந்து போனது.

காயத்ரியிடம், அந்த புகைப்படத்தை காட்டினான்.. பையன் நன்றாக இருந்தான். தகுதி.. படிப்பு வேலை என எல்லாம் இருந்தது.. வசதி மட்டும் இவர்களை விட சற்று குறைவு. ஆனால், வெளிநாட்டில் வேலை.. பையன் நன்றாக சம்பாதிக்கிறான் என்பதால்.. குறை என ஏதுமில்லை. ஜாதகம் ஒத்து போகிற்று, எனவே பெரியவர்கள் எப்போது பெண்பார்க்க வருவது என்பது வரை பேசிவிட்டனர்.

இப்போது கார்த்திக், தங்கையை ஆராய்ந்தான். முகத்தில், வேண்டாம் என்ற பாவமும் இல்லை, வேணும் என்ற ஆசை பாவமும் இல்லை. கார்த்திக்கினால் தங்கையின் மன உணர்வுகளை கணிக்க முடியவில்லை. இப்போது டீபாய் மீதிருந்த அவளின் போனை எடுத்தான். பெண்ணவள், தந்தையின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தாள். இப்போது கௌசல்யாவும் வந்து அமர்ந்து.. “அடுத்த வாரத்தில் நாள் நல்லா இருக்குடா.. ம்..” என எதோ பேசிக் கொண்டிருந்தார்.

கார்த்திக்.. தங்கையின் போனை பார்க்க.. அதில் பரணியின் அழைப்பே இல்லை. வாட்ஸ்சப் என எதிலும் அவனின் எண் இல்லை.  தான் அன்று பார்த்தது பொய்யோ என போனை கீழே வைத்துவிட்டு தங்கையை பார்த்து “என்ன காயூ.. சொல்லு, ஒகே வா” என்றான்.

கௌசல்யா “ம்.. அதெல்லாம் அவளுக்கு பிடிக்கும்..” என எடுத்து கொடுத்தார்.

கார்த்திக் “இரேன் ம்மா..” என்றான்.

காயத்ரி தன் அண்ணனையும் தந்தையும் பார்த்து  “நாளைக்கு சொல்லவா” என்றாள்.

கௌசல்யா “எதுக்கு, நாங்க என்ன உன்கிட்ட பத்து போட்டோவா கொடுத்திருக்கோம்.. ஏதுன்னு பார்த்து சொல்ல சொல்லி.. தேடி சலிச்சு எடுத்து.. இதுதான்னு கொடுத்திருக்கு.. இன்னும் என்ன யோசனை” என்றார்.

காயத்ரி “அதான் தெரியலைம்மா.. எனக்கு கல்யாணம் ஓகேதான். ஆனால், இவங்களை பிடிச்சிருக்கான்னு.. பத்து நிமிஷத்தில் எனக்கு சொல்ல தெரியலை. மனசில் முகம் பதியுமா தெரியலையே” என்றாள்.

கௌசல்யா “எல்லாம் பதியும்.. நானெல்லாம் எந்த போட்டோ பார்த்தேன். இவளுக்கு கையில் போட்டாவை கொடுத்தால். பதியம் போடுவாளாம்.. எல்லாம் நிச்சயம் ஆனால் சரியாகிடும். ம்..” என்றார்.

சக்திவேல் “இரு கௌசி..” என மனைவியிடம் சொன்னவர், மகளை பார்த்து “ம்.. நீ நாளைக்கு சொல்லுடாம்மா.. பொண்ணு பார்த்துட்டு பூ வைச்சதுக்கு அப்புறம்தான் உனக்கு போட்டோ அனுப்புவான் அண்ணன்.. வேணும்ன்னா, இப்போ இன்னொரு தரம் பார்த்துக்கோ” என்றார் புன்னகை முகமாக.

காயத்ரி சங்கடமாக ‘வேண்டாம்’ என தலையசைத்தாள். 

சக்திவேல் பெண்ணுக்கு வெட்கம் என எண்ணிக் கொண்டு  “உண்மையாக வேண்டாம்ன்னா சரி” என்றார் புன்னகையாக.

காயத்ரி போனை எடுத்துக் கொண்டு மேலே சென்றாள்.

இப்போது மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். துளசியை நல்லநாள் பார்த்து அழைத்து வருவது பற்றி.

இப்போது கார்த்திக்கு, பரணி என போனில் அழைப்பு அழைத்தது அவனை. கார்த்திக், எதோ புன்னகை முகத்தில்.. தங்கை மேலே போனால் இப்போதுதான்.. ஏதும் சொல்லியிருப்பாளோ.. என எதோ அவனின் கற்பனை.

பரணி “ஹலோ கார்த்திக்.. கொஞ்சம் பேசணும்” என ஆரம்பித்தான்.

கார்த்தியிடம் “உங்க அண்ணன் போன் செய்தார்.. மிட்யூவல் டிவோர்ஸ்க்கு, கேட்க்கிறார்.. அக்காவிற்கு இது ஓகேதான். டிவோர்ஸ் அவருக்கு ப்ர்ட்னா இருக்க கூடாதில்ல.. யாரையோ கல்யாணம் பண்ணிக்கட்டும். நீங்க என்ன சொல்றீங்க” என்றான்.

கார்த்திக், எதிர்பார்த்தது என்ன.. இவன் என்ன பேசுகிறான் எனதான் முதலில் தோன்றியது. தன் கற்பனையை தாண்டி வெளியே வருவதற்கு. கார்த்திக் அமைதியானான்.. ‘பரணி அனிச்சையாய்தான் பதறியிருக்கிறான். நான்தான் கற்பனை செய்துக் கொண்டேன் போல..’ என புன்னகை முலர்ந்து ஒரு பெருமூச்சு வந்தது கார்த்தியிடம்.

பரணி “ஹலோ.. கார்த்திக்” என அழைத்தான்.

கார்த்திக் “ம்.. இருக்கேன்.. என்ன சொல்றது தெரியலையே.. அப்பாகிட்ட பேசலாம். அவன் என்ன மைன்ட்டில் இருக்கான்னே தெரியலை. இவனை.. ஒருவாரம் ஆகட்டும்.. நீங்க பேசினால், யோசிச்சு சொல்றோம்ன்னு சொல்லுங்க பரணி. அண்ணி என்ன சொல்றாங்க” என்றான்.

பரணி “இன்னும் அக்காகிட்ட சொல்லலை. அக்காவிற்கு இது நல்லதுதான் எனக்கு தோணுது” என்றான்.

கார்த்திக் “அதுவும் சரிதான். ஆனால், சொத்தை கேட்டுட்டு போயிருக்கான். இப்போது உங்ககிட்ட.. மிட்யூசுவல் டிவோர்ஸ் கேட்க்கிறான்.. நாமும் நம்ம அட்வகேட் பார்த்து என்ன ஏதுன்னு கேட்டுட்டு.. பதில் சொல்லலாமே, பரணி. ஒரு வாரம்.. துளசியை வீட்டுக்கு கூட்டி வர போறோம்.. அதை முடித்து இதை பேசிக்கலாம்” என்றான்.

பரணி, சரி என சொல்லி குழந்தயை விசாரித்து பிஸினெஸ் விசாரித்து என இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த்விட்டுதான் அழைப்பை துண்டித்தனர்.

பரணிக்கு, என்னமோ காயத்ரியின் குரல் கேட்க வேண்டும் போல இருந்தது. கார்த்திக்தான் ஏதும் நினைக்கவில்லை போலவே.. நாம் பேசலாம் என எண்ணி தைரியமாக பரணி அழைத்தான் தன்னவளுக்கு.

காயத்ரிக்கு பரணியின் அழைப்பை ஏற்பதா வேண்டாமா என குழப்பம். ஆனால், அவர் ஏதும் சொல்லுவாரோ.. இப்போ எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்களே.. என அழுகையாக வந்தது.

இரண்டாம் அழைப்பில் போனை எடுத்தாள் பெண்.

பரணி “ஹலோ” என்றான்.

காயத்ரிக்கு கண்ணீரை தந்தது இவனின் குரல்.

காயத்ரி “ம்.. என்ன” என்றாள் கரகரப்பாக.

பரணிக்கு, அவளின் நிலை ஏதும் புரியவில்லை “குரல் கேட்டே ரொம்ப நாளாச்சு.. கேட்கனும் போல இருந்தது..” என்றான் ரசனையான குரலில்.

காயத்ரிக்கு அமைதிதான்.

பரணி “எப்படி இருக்கீங்க” என்றான்.

காயத்ரி “ஒன்னு சொல்லவா” என்றாள் அழுகையை அடக்கிய குரலில்.

பரணி “என்னாச்சு சளி பிடிச்சிருக்கா” என்றான்.

காயத்ரி “இல்ல.. நீங்க என்ன நினைச்சி என்கிட்டே பேசறீங்க தெரியலை. எனக்கு இது சரியா படலை.. நீங்க இனி கால் பண்ணாதீங்க..” என்றாள்.

பரணி “ம்.. நீ நினைப்பது சரிதான். உன்கிட்ட மட்டும்தான் இப்படி நேரம் காலம் தெரியாமல் பேசனும்ன்னு தோணுது. ஏன், உனக்கு அப்படி தோணலையா” என்றான்.

காயத்ரி “அய்யோ.. தோணாது.. தோணவும் கூடாது. எனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சி.. போதுமா.. போங்க, வேற வேலை இருந்தால் பாருங்க.. பை” என்றவள் அழைப்பை கட் செய்தாள்.

பரணிக்கு அவள் சொல்லும் செய்தி புரிந்து.. அவளை அழைத்துக் கொண்டே இருந்தான்.. ஒன்று    மூன்று    ம்கூம்..  போன் ஸ்விட்ச் ஆப் என வந்தது.

பரணிக்கு என்ன செய்வது என தெரியவில்லை..

“பனியில் மூடி போன பாதை மீது

வெய்யில் வீசுமோ..

இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன்

காதில் கேட்க்குமோ..”

 

Advertisement