Advertisement

நீ என்னுள் யாரடா!

15

ரேசொர்டில் உண்டு முடித்து.. பிள்ளைகளோடு கேம்பயர் என சொல்லி அமர்ந்துக் கொண்டனர் பெரியவர்கள் இருவரும். ம்.. காயத்ரி பெரியவள் லிஸ்டில் இல்லை.. இனியனும் காயத்ரியின் DJ பாட்டுகளை போட போட.. ஒரே ஆட்டம்தான் கூட்டத்தில். இவர்களை போல இரண்டு குடும்பங்கள் வந்திருந்திருந்தனர்.. அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்துக் கொள்ள.. அந்த இடமே கலைகட்டியது. சாரதாவும், பரணியும் தனியாக அமர்ந்து இவற்றை பார்த்து ரசித்துக் கொண்டே.. பேசிக் கொண்டிருந்தனர்.

கமல் ‘தன் வீட்டில், தன் அக்காவை தள்ளி வைக்க சொல்லி பேசியிருப்பது பற்றி..’ பரணி அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தான். அதைத் தொட்டு பேச்சுக்கள் நடந்தது இவருக்குள்ளும். என்னமோ அக்காவிடம் அமர்ந்திருப்பதால்.. அதிகமாக காயத்ரியை பார்க்கவில்லை, பரணி. 

ஆனால், காயத்ரியினுள் இந்த இரவில் நிறைய மாற்றம்.. அவளுக்கு பரணி, தன்னை பார்க்கிறான் என அப்பட்டமாக இன்றுதான் இந்த இரவில்தான் தெரிந்தது. ‘முன்போல.. பரணிமாமா பார்வையில் தள்ளி நிறுத்தும் தன்மையில்லை.. எதோ தனது போலவே பார்க்கிறாங்க..’ என எண்ணிக் கொண்டேதான் உண்டாள். ஆனால், இந்த கேம்பயர் இடத்திற்கு வந்த பிறகு.. பெண்ணவளுக்கு எல்லாம் மாறியது. உமேஷ் இனியன் என இருவரோடும் சேர்ந்து ஒரே ஆட்டம்தான்.

ஒருவழியாக ஒருமணிக்கு உறங்க சென்றனர்.

மறுநாள்: காலையில் உமேஷ் பிறந்தநாள் விழா இனிதாக தொடங்கியது. காலையில் நேரமாக உமேஷ் எழுந்துக் கொண்டான் தன் அன்னையோடு. பரணி அறையில் இனியனும்.. சாரதா அறையில் காயத்ரியும்தான் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

பரணி, மருமகனுக்கு வாழ்த்துக்கள் சொல்லுவதற்கு என கையில் பரிசோடு.. தன் அக்காவின் அறைக்கு வந்தான். போன் செய்து ‘உமேஷ் எழுந்துக் கொண்டானா’ என் கேட்டுதான் வந்தான் பரணி.

சாரதா கதவை திறக்க.. பரணி மருமகனை வராண்டாவிற்கு தூக்கி வருவதற்காக.. அந்த அறையில் லேசாக எட்டி பார்க்க.. பார்த்தவன் சட்டென வெளியே தன் தலையை இழுத்துக் கொண்டான்.. “அக்கா, நீ உமேஷை தூக்கிட்டு வெளியே வா” என சொல்லி. ம்.. காயத்ரி, இரவு உடையில்.. அப்படியே குழந்தை போல.. கவுந்தடித்து  ஜிக்ஜாக்காக படுத்திருந்தாள்.. அவள் சரியாகத்தான் உறங்கிக் கொண்டிருந்தாள்.. இவன் மனதில் கள்ளம்.. என்னமோ பரணிக்கு அதை பார்க்க கூடாது.. என தோன்ற அக்காவை வெளியே அழைத்தான்.

உமேஷ் “மாமா… மாம்..” என ராகம் பாடிக் கொண்டே.. கண்ணில் ஒளியோடு.. வெளியே வந்தான்.. மாமாவின் கையில் இருந்த வண்ண காதிதத்தை பார்த்துவிட்டானே, அதுதான் இந்த துள்ளல். அதனால் குஷியாக வெளியே வந்தான் உமேஷ்.

பரணி “உமேஷின் கையில் பெரிய வண்ண காகிதம் சுற்றிய பரிசு பொருளை கொடுத்து.. “ஹாப்பி பர்த்டே உம்மு” என சொல்லி குழந்தையை தூக்கி சுற்றி கன்னத்தில் முத்தம் வைத்து கீழே இறக்கிவிட்டான்.

உமேஷின் கவனம் எல்லாம் அந்த பரிசு பொருள் மீதே இருக்க.. பரணி “ம்.. பிரிடா.. என்ன இருக்கு பாரு “ என்றான்.

உமேஷ் அவரச அவசரமாக இழுக்க.. இரண்டே இழுப்பில்.. அந்த பெரிய காகிதங்கள் எல்லாம் கிழிந்துக் கொண்டு வந்தது. அதன்பின் அந்த பெட்டியை பரணி பிரித்து கொடுக்க.. உள்ளே.. குட்டி குடியாய் கார் பஸ் ஸ்கூட்டர்.. ஏரோ ப்ளேன்.. ஹெலிகாப்டர்.. பௌக்லைன்.. ஆர்மி வேன் என எல்லா வண்டிகளும் இருந்தது. உமேஷ் எல்லாவற்றையும்.. தன் பிஞ்சு விரல்களால்.. ஓட்ட ஆரம்பித்தான்.. எல்லாம் அவன் இழுப்பிற்கு வந்தது.. இப்போது நிமிர்ந்து பரணியிடம் “மாமா முத்தா” என சொல்லி ஆசையாய் மாமாவிற்கு முத்தம் தந்திருந்தான் உமேஷ்.

அதன் பிறகு, பரணி  சைக்கிள் எடுத்துக் கொண்டு.. சற்று நேரம் வலம்வர சென்றுவிட்டான்.

இனியன் எழுந்து மாமாவை போனில் அழைத்து.. ‘ஸ்விம்ங்பூலில் குளிக்கனும் வாங்க..’ என அழைத்தான். 

பரணி இனியனோடு சற்று நேரம் அவனுக்கு ஸ்விம் சொல்லிக் கொடுக்கிறேன் என இருவரும் பசிக்கும் வரை நினைவே இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தனர். இனியன் “மாமா பசிக்கிறா மாதிரி இருக்கு..” என்றான், நீண்ட நேரம் சென்று.

பரணிக்கு சிரிப்பு அப்படி வந்தது.. மருமகனை.. தண்ணீரில் நன்றாக முக்கி எடுத்து “ஏன்டா.. பசிக்கிறா மாதிரி இருக்கோ..” என இறுக்கம் தளர்ந்து விளையாடிக் கொண்டே  மேலே இழுத்து வந்தான்.

இருவரும் மீண்டும் ஒருதரம் குளித்து உடைமாற்றிக் கொண்டு.. உண்பதற்கு சென்றனர். சாரதா உமேஷ் காயத்ரி எல்லாம் உண்டுவிட்டு.. அவர்கள் தனியாக விளையாட சென்றுவிட்டனர். 

மதியமாக கார்த்திக் துளசி வந்தனர். குட்டி பையன் ஷ்ரவன் வந்தான். உமேஷ் பிறந்தநாளுக்கு கேக் அங்கேயே ஆர்டர் செய்திருந்தனர். பெரியவர்களுக்கு வீடியோ காலில் அழைத்து.. அவர்களை பார்க்க செய்து.. அங்கேயே கேக் கட் செய்தான் உமேஷ். உமேஷ் பரிசு பொருட்களால் மகிழ்ந்து போனான். அப்படியே மதியம் உண்டு முடித்து.. துளசியும் சாரதாவும் சற்று நேரம் அறையில் பேசிக் கொடிருந்தனர். ஷ்ரவன் உறங்க தொடங்கினான். மற்ற எல்லோரும் சுற்றுவதற்கு சென்றனர். 

கார்த்திக்கு, பரணியிடம் இப்போது பொதுவாக பேசிக் கொண்டிருந்தான்.

இப்போது காயத்ரி, இரு மரத்திற்கு இடையே.. எதோ கயிற்றில் பாலம் போல செய்திருந்தனர் அதில் நடை பழகிக் கொண்டிருந்தாள். கயிற்றில் நடப்பது.. அதுதான் அங்கே இருந்தது. கொஞ்சம் உயரம் கூடுதல்தான்.. அவளின் முதுகில் ஹூக் போன்ற  ஒரு பிடிமான வ்யருடன்தான்  நடைபயின்றுக் கொண்டிருந்தாள்.. ஒன்றும் பயமில்லைதான். முதல்முறை இனியனோடு நடந்தாள்.. இனியனை முன்னே விட்டு.. அவனை கையில் பின்னிலிருந்து பிடித்துக் கொண்டு கவனமாகதான் நடந்தாள். ஆனால், அதில் அவள் சரியாக என்ஜாய் செய்யவில்லை.. என சொல்லி இரண்டாம் முறை.. தனியாக நடந்தாள். எப்போதும் போல விளையாட்டு தனம்.. காயத்ரி ‘இனி.. பறக்கிற மாதிரி இருக்குடா..’ என அண்ணனோடு.. இனியோடு பேசிக் கொண்டே, மேலே பார்த்துக் கொண்டே நடக்க.. சட்டென பாதி வழியில் தடுமாறிவிட்டாள்.. பெண்.  காயத்ரி “அம்மா..” என சத்தத்தோடு.. தடுமாறி பாதி தூரம் கீழ் நோக்கி.. இறங்கிவிட்டாள். காயத்ரிக்கு இதயமே நின்று போனது போல ஒரு ப்ரமை.. அப்படியே கண்களை மூடிக் கொண்டாள். அங்கே பக்கவாட்டில் கார்த்திக் பரணி இனி என மூவரும் பேசிக் கொண்டிருக்க.. பரணி அவள்மேல் ஒரு கண் வைத்திருந்தவன். அவள் கத்திய நொடி.. இறங்கி வந்தவளின் பாதம் பிடித்து தாங்கிக் கொண்டே.. அவளின் பின்னிருந்த வ்யர் பற்றி கீழே இழுத்தான். இப்போது பணியாளர்கள் இருவர் வந்துவிட்டனர். காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை.. படபடப்பில் பரணியின் கையை பற்றிக் கொண்டு.. அவன் நெஞ்சில் அப்படியே தலையை அழுத்தி வைத்துக் கொண்டு நின்றாள். வேறொன்றும் தெரியவில்லை அவளுக்கு. பரணிக்கு படபடப்புதான்.

பணியாளர்கள் அந்த ஹூக் எடுத்து விட்டு.. அவளின் இடுப்பில் இருந்த பெல்ட் கழற்ற..  அது என்னமோ வரவேயில்லை. யாரோ சேர் எடுத்து போட்டனர்.

கார்த்திக், இதை பார்த்து.. பாதி தூரத்தில் அப்படியே தாமதித்து.. பின் நடந்தான் இப்போது.  கார்த்திக், தங்கையின் குரல் கேட்டு விரைந்தான்தான் ஆனால், அதைவிட வேகமாக பரணி காற்றின் வேகத்தில் அங்கு சென்று நின்றதை பார்த்தவன் சற்று தாமதித்து.. அங்கே சென்றான். 

பரணி அவளை அமர வைத்தான்.. காயத்ரி அமர்ந்து பின்னால் சாய்ந்தாள். பரணியின் வலது கை.. இயல்பாய் அவளின் பின் சாய்ந்த தலையை பிட்த்துக் கொண்டது சுவாதீனமாய். சரியாக கார்த்திக் அங்கே வர.. அவள் தலையை  பிடித்திருந்த பரணியின் கைகள் அனிச்சையாய் விலகியது, பரணி “தண்ணீர் எடு இனி” என சொல்லி லேசாக அவளை சேரில் சாய்த்து விட்டு.. இனியனோடு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான், கார்த்தியின் கையில். எங்கும் அவளை விட்டு நகரவில்லை.. பரணி. பின் அவனே “கார்த்திக், அவங்க பெல்ட் ரெலீப் பண்ணுங்க” என்றான்.

அதன்பின்தான் கார்த்திக், தங்கையை கவனித்து.. அவளுக்கு தண்ணீர் கொடுத்து.. அவளுக்கு பெல்ட் அகற்றி என உதவிகள் செய்தான். காயத்ரி தளர்ந்து அமர்ந்தாள்.. தண்ணீரை குடித்துக் கொண்டே “அண்ணா.. ரொம்ப ஹைட் இல்ல..” என்றாள்.

பரணி “இல்லைங்க.. நீங்க, அசால்ட்டா இருக்கீங்க. அதெப்படி எப்போதும் கவனமே இல்லாமல் இருக்கீங்க..” என கையில் அவள் குடித்து முடித்த தண்ணீர் பாட்டிலோடு நின்றுக் கொண்டு, கேட்டான்.

காயத்ரி இப்போது அண்ணனை அனிச்சையாய் நிமிர்ந்து பார்த்தாள். பரணிக்கு அவள் பார்வை சென்ற திசை பார்த்த போதுதான் எதோ புரிந்தது.. ‘ஐயோ’ என நெற்றி தடவிக் கொண்டே திரும்பிக் கொண்டான்.

கார்த்திக் “ம்.. கவனமே இருக்கறதில்ல..” என்றான் அதட்டலாக.

காயத்ரி எழுந்துக் கொண்டாள். 

பரணி இதுவரை அவளை தவிர யாரையும் கவனிக்கவில்லை.. அத்தனை பரபரப்பு அவனிடம். இமைக்கும் நேரத்தில் விரைந்த வேகம்.. அவளை கண்ணியமாக பற்றி இழுத்த விதம்.. பணியாளர்களை கடிந்த கொண்ட விதம் என கார்த்திக்கின் கண்கள், இந்த அவதார பரணியை கண்டு கொண்டது. பரணி, இப்படி பதறியது அன்று புனேவில் கமல் செய்த காரியத்தில்தான். மற்றபடி.. எதற்கும் இப்படி அவனை பார்த்ததேயில்லை கார்த்திக்.

அமைதியாக பரணி அறைக்கு சென்றுவிட்டான். காயத்ரிக்கு அறைக்கு செல்ல மனதில்லை.. இன்னும் ஒருமணி நேரத்தில் கிளம்ப வேண்டும் எனவும்..  காயத்ரி “அண்ணா மரம் ஏற போலாம் ண்ணா,” என்றாள்.

கார்த்திக் ஏதும் சொல்லவில்லை. அவளோடு சென்றான். இனியனும் அவனும் அமர்ந்துக் கொண்டனர், காயத்ரியை போட்டோ எடுக்க. காயத்ரி மரம் ஏற தொடங்கினாள்.

பரணி அறையை வெக்கேட் செய்து கிளம்பி நின்றான். கார்த்தியும் ஏதும் சொல்லாமல், தலையசைத்து ப்ரெஷ்ஷாகி வந்தான். காயத்ரி உடைமாற்றி வந்தாள். 

கார்த்திக்கும் பரணியும் அதன்பின் பேசும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. எல்லோரும் சரியான மாலை ஐந்து மணிக்கு, காபி டீ ஸ்நாக்ஸ் எல்லாம் முடித்து கிளம்பினர். கார்த்திக் காயத்ரியை அழைத்துக் கொண்டு சென்றான். பரணி பிள்ளைகள் அக்கா என இவர்கள் ஒரு காரில் சென்றனர். 

பரணிக்கு, அடுத்தடுத்த நாட்களில் காயத்ரியை பற்றிய நினைவுகளை தள்ளி வைத்தான். என்னமோ தான் அன்று நடந்து கொண்டது எல்லா வகையிலும் தவறு என மனதார ஏற்றுக் கொண்டான் ‘அவன் அண்ணன்தான் நிக்கறானில்ல.. நான் எதுக்கு ஓடனும். கார்த்திக் என்ன நினைச்சானோ என்னை பற்றி.’ என எண்ணி எண்ணி அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை. அவள்மேல் நேசம் உண்டு.. அதை முறையாக தெரிவித்திருந்தால்.. பரவாயில்லை.. இப்படி அவள் அண்ணன் எதிரில்.. ‘அய்யோ’ என மீண்டும் மீண்டும்.. எதோ குற்றமாகவே பரணியை உறுத்தியது. அதிலிருந்து அவனால் மீளவே முடியவில்லை.. காயத்ரியின் அழைத்து உன் அண்ணன் ஏதாவது கேட்டானா என கேட்க்கலாம் என அவ்வபோது தோன்றும் பரணிக்கு. ஆனால், அவளை அழைக்க இப்போது இன்னும் தயக்கம் கொண்டான் நல்லவன்.

இப்படியே வாரங்கள் கடந்த நிலையில்.. கார்த்திக்கிடம் பேச வேண்டிய சூழல். ம்… இன்று,  பரணியின் அலைபேசிக்கு, கமல் அழைத்திருந்தான். ‘ டிவோர்ஸ் வேண்டுமாம்.. மிட்ச்யூவலாக போய்க்கலாம். அக்காவிடம் பேசிவிட்டு சொல்லு’ என மதியம் அழைத்து பேசினான் கமல்.

பரணிக்கு குழப்பமாக இருந்தது.. கார்த்திக், கமல் பற்றி சொல்லியது. இப்போது திடீரென தன்னை அழைத்து பேசுவது என எல்லாம் குழப்பமாக இருந்தது. கார்த்திக்கிடம் பேசினால் பரவாயில்லை என தோன்றியது.  இரவில் அழைக்கலாம் என காத்திருந்தான் பரணி.

Advertisement