Advertisement

நீ எனக்கு யாரடா!

12

அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பரணியின் காதல் உற்சவத்தால்.. இரவில் அடிக்கடி உறங்குவதில்லை அவன். பாதி நேரம் ‘இன்னும் ஏதாவது பேசியிருக்கலாம்.. அவளுக்கு என்னை புரியவேயில்லை’ என யோசனை ஓடிக் கொண்டே இருக்கிறது.

ஆனால், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல பரணிக்கு இயல்பாக தெரியவில்லை. அவளின் போன் நம்பர் கூட அவனிடம் இல்லை. என்னமோ அதை அக்காவிடமிருந்து சுட்டு.. தானாக அழைத்து பேசவும் அவனின்.. இயல்பு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே, அமைதியாக இருந்தான். 

சாரதா இன்னமும் சம்பாத்தியம் செய்யும் அளவிற்கு வரவில்லை. எனவே, இனியனின் டேம் பீஸ்.. பரணியை கட்ட சொல்லியிருந்தாள். அதனால், பரணி இன்று மதியமாக அக்கா வீடு வந்தான். மதியம் உண்டு சற்று நேரம் சோபாவில் கால் நீட்டி படுத்து உறங்கினான். எப்போதும் அப்படி கிடையாது. இன்று பள்ளிக்கு செல்லவேண்டும் அக்காவோடு என நினைத்து சற்று ஓய்வெடுத்தான்.

அதேபோல, மாலை மூன்றுமணிக்கு சாரதாவும் பரணி உமேஷ் மூவரும்  கிளம்பி பள்ளிக்கு சென்று.. பீஸ் கட்டிவிட்டு.. இனியனை அழைத்து வந்தனர்.

சாரதா அப்போதுதான் பரணியிடம் கேட்டாள் “பரணி, இன்னும் எத்தனை நாட்கள் கடத்தலாம்ன்னு இருக்க.. அடுத்த வாரம் உன் பர்த்டே ஞாபகம் இருக்கா..29 வயதாகிடும். ம்.. அம்மா ரொம்ப கவலைபடுறாங்க” என்றாள்.

பரணிக்கு, பதில் சொல்லுவதற்கு பதில்.. காயூ முகமே நினைவில் வந்தது. சுதாரித்த பரணி “என்ன அக்கா இப்போ.. நீயும்தான் பார்க்கிற.. நான் என்ன செய்ய.. இதுக்கெல்லாம் கவலை எதுக்கு. அது அது நடக்கும் போதுதான் நடக்கும்” என்றான் குரல் கொஞ்சம் அழுத்தமாகதான் வந்தது.

பரணி “அதைவிடுக்கா.. audi A6 டெலிவரி ஃப்ரைடே பண்றாங்க.  அப்பா சொன்னாரா..” என்றான்.

சாரதா “ம்.. இப்போது எதுக்கு அது. கல்யாண செலவெல்லாம் இருக்குல்ல.. அம்மா அதுக்கும் சொன்னாங்க..” என்றாள் கண்டிப்பான குரலில்.

பரணி அலட்டவேயில்லை “அக்கா, இதெல்லாம் அவதுவாக அமையுது. கல்யாணம் பாரேன்.. நாம எவ்வளோ தேடுறோம் அமையவேமாட்டேன்கிது. ம்.. எனக்குன்னு என்ன இருக்கோ அதுதானே நடக்கும் ம்” என்றான் குரல் இப்போது இயல்பாக எழுந்தது அவனிடத்தில்.

சாரதா “டேய்.. நீயாக எல்லாவற்றையும் தள்ளி வைச்ச” என்றார்.

பரணி “அக்கா அப்படி எல்லாம் இல்ல க்கா, அது.. அது.. எனக்கு செட் ஆகாது க்கா.. அதை விடு. இவ்வளோ சொல்றீங்களே உங்க வீட்டில் காயத்ரிக்கு பிக்ஸ் ஆகிடுச்சா..” என்றான், ஆராயும் வண்ணம்..

சாரதா “டேய்.. என்ன டா.. இப்படி கேட்க்கிற” என்றாள்.

பரணி “இல்ல இல்ல.. அவங்க பொண்ணு.. அவங்களுக்கே இன்னும் எதும் அமையலை.. யாரும் பார்க்காமலா இருப்பீங்க. அதெல்லாம் நடக்கும் போதுதான் நடக்கும் அப்படி கேட்டேன்” என சமாளித்தான்.

சாரதா “இங்க பார்.. நீ சரியில்ல. அதுமட்டும் என்னால் சொல்ல முடியுது. பார்த்துக்க.. இப்போவெல்லாம் பொண்ணு கிடைக்கிறது கஷ்ட்டம். அத்தோட நான் வேற இப்படி இருக்கேன். அதனால், சீக்கிரம் கல்யாணம் செய்துக்க” என சொல்லி உமேஷ்ஷோடு இறங்கினாள்.

பரணி காரை நிறுத்துவிட்டு.. அக்காவின் வீட்டிற்கு வந்தான். சாரதா பேசியது அவனை காயப்படுத்தியது. பரணிக்கு, நான்கு மாதம் சென்று ஒரு ஜாதகம் பொருந்தி இருந்தது. அவர்கள், திருமணம் முடிந்ததும் தனியாக வைக்க வேண்டும் என்பது மாதிரி சொல்லி இருந்தனர். வள்ளிக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை திருமணம் முடிந்தால் போதும் என மகனிடம்.. பேச சொல்லி சாரதாவிடம் சொல்லியிருந்தார். அதான் சாரதா கேட்க்கிறாள். 

இப்போது பரணி “என்ன அக்கா.. எப்படி இருக்க நீயு.. நல்லாதானே இருக்க. என்ன இப்போ.. இப்படி சொல்றாங்கன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம். அம்மா ஏதாவது சொன்னாங்களா” என்றான்.

சாரதா “இதெல்லாம் ஒரு ரீசன்தானே டா.. உனக்கு மட்டுமில்ல.. அங்க காயத்ரிக்கும் நான் ஒரு ரீசன்தானே. கண்டிப்பா என்னை கணக்கில் எடுக்காமல் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் நடக்காது. அதனாலதான் சொல்றேன். சீக்கிரம் கல்யாணம் செய்துக்க..” என்றாள் காபி கலந்துக் கொண்டே.

பரணி “அக்கா, அதேதான் நானும் சொல்றேன்.. நீ முக்கியம் எனக்கு. அதுக்கு அப்புறம்தான் கல்யாணம் எல்லாம். நடக்காத ஒண்ணுக்காக.. நான், உன்னை தள்ளி வைக்க முடியாது.. அதை செய்யவும் மாட்டேன்” என்றான்.

சாரதா காபியை கொண்டுவந்து தம்பியி கையில் கொடுத்தாள்.. “சொல்லு, அம்மா.. அந்த பொண்ணு வீட்டில் பேசிட்டாங்க.. நான் தனியாதான் இருக்கேன்னு சொல்லியாச்சு. அவங்களுக்கு சம்மதம். நீ என்ன சொல்ற என்னை அதிகமாக யோசிக்காத.. எனக்குதான் எல்லாம் ஏற்பாடும் செய்து தரீங்களே அப்புறம் என்ன.. நான் எங்களை பார்த்துக்குவேன்.. நீ கல்யாணம் செய்துக்க” என்றாள்.

பரணி “அக்கா, அவங்க வீட்டில் என்ன சொல்றாங்கன்னு உனக்கு தெரியுமில்ல.. அம்மாகிட்ட எல்லா வாரமும் உங்க பொண்ணு வீட்டுக்கு வருவாங்களான்னு கேட்கிறாங்க.. என் பொண்ணுக்கு அதிகமாக வேலை செய்ய முடியாதுன்னு சொல்றாங்க.. மூணு மாசம் கழிச்சு, நீங்களே.. தனியா வைச்சிடுங்க.. அவ கொஞ்சம் செல்லமாக வளர்ந்த பொண்ணுன்னு சொல்றாங்க. இப்படி எல்லாம் ரூல்ஸ் போடும் குடும்பத்தோடு.. எப்படி அக்கா.. எனக்கு, அதை ஏத்துக்க முடியலை.. ப்ளீஸ் அக்கா.. இதுக்கு நீ கராணம் இல்லை. புரியுதா” என்றான் திடமான குரலில் அக்காவிற்கு புரிய வேண்டும் என சொன்னான்.

சாரதாவிற்கு கண்கள் கலங்கவில்லை, மனம் கலங்கியது.. “டேய்.. நான் கல்யாணம் முடிஞ்சி தனியாக தானே இருந்தேன். இதெல்லாம் இப்போ சகஜம். அப்பா அம்மாவை பற்றி கவலைபடாத. நீ தனியா தொழில் பார்க்கிற.. இதெல்லாம் தெரியாதா. இப்போ இருக்கிற காலம் அப்படி. அந்த பொண்ணு வீடு நல்ல இடம்.. குடும்பம்.. அண்ணன் ஒருத்தர்தான். எல்லாவிதத்திலும் பொருந்தி இருக்கு ஜாதகம். நீ சொல்லு.. எனக்காக சொல்லு.. நாமும் ரூல்ஸ் போட்டு இந்த கல்யாணத்தை நடத்திக்கலாம். ம்.. சொல்லு” என விடாபிடியாக நின்றாள் சாரதா.

பரணி “உன்கிட்ட பேச முடியாது” என்றவன் பாதி காபியை குடித்து முடித்து அப்படியே வைத்துவிட்டு சென்றுவிட்டான்.

சாரதா “டேய் நைட் போன் பண்ணுவேன் முடிவை சொல்லணும்” என்றாள் திடமான குரலில்.

பரணிக்கு ப்ரான அவஸ்த்தை.. எதையும் வெளிக்காட்ட முடியவில்லை அவனால். ‘அக்காவின் மனது பாதிக்கும் இப்போது எனக்கு காயத்ரியை பெண் கேளு என சொன்னால்.. எப்படி அவளை விட முடியும். இன்னும் கொஞ்சநாள் ஆகினால்.. நிலையை மாற்றி.. எப்படியேனும் பேசி.. சரி செய்து அவளை பெண் கேட்க சொல்லலாம்.. இப்போது எப்படி சொல்லுவது. அத்தோடு, எனக்கு அவளை பிடிக்கும் என்பதே.. அவளுக்கு இன்னும் தெரியாதே.. என்ன செய்ய..’ என வீடு வந்து சேர்ந்தான்.

இரவில் பரணியிடம் அதே கேள்வியை அன்னையும் கேட்டார். பரணிக்கு கோவமாகதான் வந்தது. தன் அன்னையிடம் சத்தம் போட்டான் “என்ன என்ன கேட்டாங்க அந்த பொண்ணு வீட்டில். இதெல்லாம் நடைமுறைக்கு சரியாக வருமா.. உங்களுக்கு தெரியாதா.. நானும் அந்த ஆள் மாதிரி என் வாழ்க்கைதான் முக்கியம்ன்னு போகனுமா.. உனக்கு அப்படி இருந்தால் சம்மதமா சொல்லும்மா.. அக்கா கிட்ட எதுக்கு இதெல்லாம் சொன்ன.. எனக்கு இப்போதிக்கு கல்யாணமே வேண்டாம்.. நீயே சொல்லிடு..” என்றவன் மேலே சென்றான் தனதறைக்கு.

பரணிக்கு, எதையுமே யோசிக்க முடியாமல் திணறினான். தலையே வெடிக்கும் போல இருந்தது.. சிலது மனதில் ஒத்துவராது என முடிவெடுத்துவிட்டால்.. அவ்வளவுதானே.. ஒத்துக் கொள்ள முடியாது தானே. அது சொர்க்கமே என்றாலும்தான். 

பரணியின் ஆழ்மனதில் இப்போது காயத்ரி என்ற பிம்பம் பலவகையிலும்.. பதிந்து போய்விட்டது. அதற்கு காரணம்.. ஒருவகையில்.. காயத்ரி, தன் அக்காவிடம் நடந்துக் கொண்ட விதமாக கூட இருக்கலாம். அதில்தான் அவள்மேல், அவனுக்கு ஈர்ப்பு கடந்த ப்ரியம் தோன்றியது. அவன் அதை ஏற்கவில்லை என்றாலும்.. கார்த்தியின் திருமணம் வரை.. அவனை ஈர்த்தவள், சாரதா இங்கே வந்தபின், அவள் நடந்துக் கொண்ட முறையில்.. காயத்ரி மேல் ப்ரியம் கொண்டான் ஸ்திரமாக. ஆக, அவள் பதிந்துவிட்டால் அவன் மனதில். இனி வேறு பெண்ணோ.. அதை திரும்பவும் ஆராய்வதோ.. அவனுக்கு ஏற்புடையது அல்லவே. அதிலும் இப்படி, குடைந்து குடைந்து கேள்வியாக கேட்பவர்களிடம் எப்படி தன்மையாக மறுப்பை சொல்ல முடியும். எனவே, சத்தம் போட்டுவிட்டு வந்துவிட்டான்.

நாளை மறுநாள்.. சாரதா அன்னை வீடு வந்திருந்தாள் இனியன் பள்ளிக்கு லீவ் போட்டிருந்தான். நல்ல நேரத்தில் AUDI காரை எடுத்துக் கொண்டு.. வீடு வந்தான் பரணி. தனது அன்னை தந்தை அக்கா.. பிள்ளைகள் என எல்லோருமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பிறகு வீடு வந்தனர். இனியன் விடுமுறை எடுத்திருந்தான்.. பள்ளிக்கு செல்லவில்லை. எனவே, மதியம் உணவை முடித்துக் கொண்டு பிள்ளைகளோடு ஹாலிலேயே அமர்ந்து பேசியபடியே படுத்துக் கொண்டிருந்தான், பரணி.

மாலை நான்கு மணிக்கு, காயத்ரி அழைத்தாள் சாரதாவின் போனிற்கு. இனியன் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததால்.. இனியன் அழைப்பை ஏற்று“அத்தை எப்படி இருக்கீங்க” என்றான்.

காயத்ரி “என்ன ஸ்கூல் போயிட்டு வந்தாச்சா” என கேட்க.

இனியன் “இல்லையே, இன்னிக்கு நான் ஸ்கூல்க்கு லீவ் போட்டிட்டேன், மாமா புது கார் வாங்கியிருக்காங்க.. “ என தொடங்கி.. காலையிலிருந்து நடந்தது எல்லாம் சொன்னான்.

காயத்ரி “சொல்லவேயில்ல.. எங்க டா.. அம்மா கொடு” என்க. இனியன் தன் அம்மாவின் அறை நோக்கி சென்றான்.

படுத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த பரணி, இனியனை பிடித்து இழுத்தான்.. போனை வாங்கிக் கொண்டு “தம்பி எங்க பாரு” என்றவன் இனியவனை அந்தபக்கம் அனுப்பிவிட்டான்.

பரணி போனை காதில் வைத்து “ஹலோ யாருங்க..” என்றான், அசால்ட்டாக.

காயத்ரி “நான் காயூ. நீங்க பரணி  மாமாதானே” என்றாள்.. எனக்கு தெரியுமே என்ற குழந்தையின் குரலில்.

பரணிக்கு அவளின் குரல் அப்படியே மிதக்க வைத்தது. பரணி “ம்.. எப்படி இருக்கீங்க” என்றான்.

காயத்ரி “நல்லா இருக்கேன்” என்றாள்.

பரணிக்கு அடுத்து என்ன பேசுது என தெரியவில்லை..

காயத்ரியே பேச தொடங்கினாள் “சாரி, நான் தேங்க்ஸ் சொல்லவே இல்ல” என்றாள்.

பரணி “எதுக்கு” என்றான்.

காயத்ரி “அன்னிக்கு நீங்க ஹெல்ப் பண்ணதுக்கு” என்றாள்.

பரணி “போனால் போகுதுன்னு.. இப்படி உங்க அண்ணி போனை நான் எடுத்ததால் தேங்க்ஸ்.. ம்..” என்றான்.

காயத்ரி “இல்ல இல்ல அப்படி இல்ல.. உங்க நம்பர் சொல்லுங்க.. இப்போவே உங்களுக்கு கூப்பிடுறேன்” என்றாள்.

பரணி கடகடவென தனது நம்பர் சொன்னான்.

Advertisement