Advertisement

பெரியவருக்கு, விழுந்ததில் சிராய்த்திருந்தது.. அதை காட்டினார். பெரிய அடியில்லை. ஆனாலும் அவர் வயதை கணக்கில் கொண்டு பரணி பேசினான்.

பரணி “வாங்க முதலில் ஹாஸ்ப்பிடல் போகலாம்” என்றான்.

பெரியவர் சைக்கிளை பார்த்தார்.. அவர் அதைவிட்டு நகருவார் போலில்லை. பரணி “வாங்க, அதை நான் பார்த்து தரேன்” என்றான்.

பெரியவர் “இது சின்ன காய்ம்தானுங்க” என சொல்லி, அவனை ஆராய்ந்தார்.

பரணிக்கு எதோ புரிய, பர்ஸ் எடுத்து.. பணத்தை எண்ணி கொடுத்தான்.. கணிசத்தை தாண்டிய தொகையைதான் கொடுத்தான். தலையை சரி செய்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டார், பெரியவர். 

பரணி, காயத்ரியிடம் “வண்டியில் போன் இருந்தா எடுத்துக்கோங்க” என்றாம். காயத்ரி லேசாக நடுங்கிய கைகளோடு.. தன் பொருட்களை எடுத்துக் கொண்டாள். பின் பரணி  தன் கார் சாவியை கொடுத்தான்.. “போய் உட்காருங்க” என்றான். 

காயத்ரி ஏதும் பேசாமல் சென்றாள்.

பரணி சுற்றிலும் பார்த்தான்.. நாலு கடைகள் இருந்தது. காயத்ரியின் வண்டியை தள்ளிக் கொண்டு, அங்கிருந்த மெடிக்கல் ஷாப்பில் விவரம் சொல்லி வண்டியை நிறுத்தினான். பெரியவருக்கு, மெடிசன் கேட்டு வாங்கினான். அந்த பெரியவரிடம் அதை கொடுத்தான். 

பின் மெடிக்கல் கடைகாரரின் எண்ணை வாங்கிக் கொண்டான் “வண்டியை இரண்டுமணி நேரத்தில் ஆட்கள் வந்து எடுத்துப்பாங்க” என சொல்லி,  வந்தான்.

காரில் ஏறி அமர்ந்ததும் பெண்ணவளின் முகத்தை பார்க்க.. வெளிறி போய் இருந்தது, இன்னும் அதிலிருந்து அவள் வெளிவரவில்லை என எண்ணிக் கொண்டான். 

ஆனால் பரணிக்கு, உள்ளுக்குள் காதல் உற்சவம்தான். அவளை பார்த்து முழுதாக இரண்டு மாதங்கள் இருக்கும்.. மறந்து கூட விடுவேனோ.. திருமணம் நிச்சம் ஆகிவிடுமோ என அத்தனை பயம். இன்று இப்படி எதிர்பாராமல் அவளை கண்டதும்.. உள்ளிருந்த காதல் அழகாக அவன் கண்களில் தாண்டவமாடியது. ‘ஏதாவது பேசு டா.. பேசுடா..’ என தனக்குதானே சொல்லிக் கொள்கிறான். ஆனால், வார்த்தைகள் வரவேயில்லை.

நிதானமான வேகம்.. இன்னும் சற்று தூரம்தான் என மனம் அல்லாடுகிறது. அவளை இப்போது திரும்பி பார்த்தான்.. அப்படியே அமர்ந்திருந்தாள். பரணி “என்னாச்சு பயந்தாச்சா..“ என்றான் முயன்று விளையாட்டான குரலில்.

காயத்ரி திரும்பி பார்த்தாள் “ம்.. க்கும்” என்றாள் இருவேறு பதிலாக.

பரணி “அதான் முடிச்சாச்சே. ரிலாக்ஸ்.. ம்..” என்றான், நன்றாக அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்து.

காயத்ரி “அண்ணா திட்ட போறான். இனி வண்டி எடுக்கவே விடமாட்டான். ச்ச..” என்றாள் கவலையாக.

பரணி “அதெல்லாம் பார்த்துக்கலாம், நான் பேசறேன் ம்” என்றான் திடமான குரலில்.

காயத்ரி திரும்பி பரணியை பார்த்தாள் “ம்.. உண்மையா” என்றாள் ஆர்வமான குரலில்.

பரணி, திரும்பி காயத்ரியின் பயம் தாண்டி.. ஆர்வம் ஒளிர்ந்த கண்களை பார்த்தான்.. உள்ளுக்குள் அவளின் ஆர்வம் எதையோ தொட்டு எழுப்ப.. பார்வையை திருப்பிக் கொண்டான்.. தன் போர்ன்ட் போர்டிலிருந்து சன் கிளாஸ் எடுத்து அணிந்துக் கொண்டான் சட்டென.

பரணி “பேசிக்கிறேன் ம்..” என்றான் இன்னும் திடமான் குரலில்.

பெண்ணவளுக்கு அந்த வார்த்தைகள் நம்பிக்கையை தந்தது.

காயத்ரிக்கு, அவனின் நிலை தெரியவில்லை.. அவன் பேசுகிறேன் என சொன்னதும் சந்தோஷமாக.. பேச தொடங்கிவிட்டாள் “உங்களுக்கு தெரியுமா.. மழை நேத்தி முழுக்க.. அதான் பாத்தி முழுக்க தண்ணீர்.. இன்னிக்கு மழை வரகூடாது ஆண்டவான்னு வேண்டிக்கிட்டே வந்தேன். சைடிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் அந்த தாத்தா வந்துட்டார். நானாக இருக்ககண்டு.. சமாளிச்சு கீழே விழாமல் இருந்தேன்” என்றாள் கண்களை விரித்து கதை சொன்னால் பெண்.

பரணிக்கு லேசாக புன்னகை வந்தது அவளின் பேச்சில்.

காயத்ரி “என்ன எதுவுமே சொல்லமாட்டேங்கிறீங்க” என்றாள்.

பரணி ஒன்றுமில்லை என தலையசைத்தான்.

காயத்ரி “என் வண்டி பாவம் தனியாக நிக்குது” என்றாள் கவலையாக.

பரணி “இல்ல புண்ணியம்” என வாய்விட்டவன், சுதாரித்து “அதுக்கு.. அதான் என் கூட வந்திருக்க நீ” என தனக்குள் சொல்லி முடித்தான்.

காயத்ரி “என்ன” என்றாள்.

பரணி “நீங்க டிரைவ் பண்ணுவீங்கல்ல..” என்றான் பேச்சை மாற்றும் விதமாக,

காயத்ரி “கார் தானே.. பண்ணுவேன், இப்போ நான் டிரைவ் பண்ணவா” என்றாள்.

பரணிக்கு ஆசையாகத்தான் இருந்தது.. திரும்பி பார்த்தான், அவளை.

காயத்ரி “சரி நான் கீர் போடுறேன்” என்றாள் தன் இருகைகளையும் தேய்த்துக் கொண்டு.

பரணிக்கு, அவளின்  இந்த கொனஷ்ட்டைகள் தான் பிடிக்குதே.. அவளை திரும்பி பார்த்தான்.. முகம் ஒளிர.. காயத்ரி “இப்போ இந்த கிரில் இருக்கீங்க” என்றாள்.

பரணி, இப்போது கீரிலிருந்து கையை எடுத்தான்.. மூன்று எனவிரல் காட்டினான்..

காயத்ரி “ரெடி.. நான் போர்த் போடுறேன்” என சொல்லி படக்கென இவள் மாற்ற, பரணி கீழே அக்சீலேட்டரை அழுத்தினான்.. கார் வேகமெடுத்து.

காயத்ரி “ஓகே நெஸ்ட் பஃவை” என்றாள்.

பரணி “நோ.. சிட்டி வந்தாச்சு.. செகண்ட் போடுங்க” என்றான் நிதானமானக் குரலில்.

காயத்ரி “ஓகே..” என சொல்லி படக்படக் என இழுக்க.. முதல் கீருக்கு சென்றுவிட்டது. காரில்  கீரிச் என சத்தம் வந்தது.

பரணி அனிச்சையாய் அவளின் கைமேல் கை வைத்து.. “இதுதான் செகண்ட்.. ம்..” என்றான்.

காயத்ரி “ம்.. அது ரைட் ஹன்டில் போடவும்.. கண்ப்பியூஷன் ஆகிடுச்சி” என்றாள் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டு.

பரணி இப்போது நாசுக்காக தன் கையை எடுத்துக் கொண்டான்.. அவள் கை மீதிருந்து.. அவளை கவராமல்.

காயத்ரியும் “நீங்களே டிரைவ் பண்ணுங்க” என்றாள் எதோ விட்டு கொடுப்பது போல.

பரணிக்கு, இதமான புன்னகை அந்த பேச்சில், திரும்பி அவள் முகத்தை பார்த்தான்.. இயல்பாக அமர்ந்திருந்தாள்.. நேரே பார்த்துக் கொண்டு. பரணிக்கு தோன்றியது ‘லைவ்லிபெர்சன்.. அந்த அந்த நொடிகளில் வாழ்பவள்.. பாவம் பயந்துட்டா” என எண்ணிக் கொண்டே வேகமெடுத்து.. அவளின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்.

காயத்ரி, ‘அண்ணன் கார் இருக்கிறதா’ என பார்த்தாள் அது இல்லை எனவும் “அண்ணா இல்லை.. “ என சொல்லி உள்ளே சென்றாள்.

வராண்டாவில் சக்திவேல் அமர்ந்திருந்தார். பரணியின் காரில் வந்து இறங்கினால் பெண்.

சக்திவேல் பெண் உள்ளே வரவும் “என்ன டா ஆச்சு..” என்றார்.

மகள் தன் தந்தையின் அருகே சென்று நின்றுக் கொண்டாள்.

பரணி மற்றொரு சேரில் அமர்ந்தான்.

காயத்ரி நடந்ததை சொன்னாள்.

சக்திவேல் “உனக்கெங்கும் அடியா காயூம்மா, அதுக்குதான் சொல்றது, கால் டாக்ஸியில் போக வேண்டியதுதானே” என்றார் அதட்டலாக. பின் “கார்த்தி எதுக்கு வண்டியை சர்வீஸ் விட்டான்.. இன்னிக்கு போகணும்ன்னு நீ என்கிட்டே சொல்லியிருக்க வேண்டியதுதானே. பரணி வந்ததால ஆச்சு.. தேங்க்ஸ் பரணி” என்றார் படபடப்பாக.

பரணி “விடுங்க மாமா, அவங்க பயந்து இருக்காங்க.. நீங்களும் டென்ஷன் ஆகிட்டா.. இன்னும் பயந்துடுவாங்க.” என பேச கௌசல்யா வந்தார்.  அதை தொடர்ந்து கார்த்திக்கும் வந்தான். 

சிரித்த  முகமாக கார்த்திக் “பரணி எப்படி இருக்க, எவ்வளோ நாள் ஆச்சு.. பார்த்து” என்ற படியே அமர்ந்தான்.

காயத்ரி அண்ணனை பார்த்ததும் உள்ளே சென்றுவிட்டாள்.

சக்திவேல் கார்த்திக்கிடம் நடந்ததை சொன்னார்.

கார்த்திக் “மழையாக இருக்கே, இவள் எங்கும் போகமாட்டான்னு நினைச்சேன்.  “ என்றவன் “காயத்ரி” என தங்கையை அழைத்தான்.

பரணி “கார்த்திக் அதான் பிரச்சனை ஏதும் ஆகலையில்ல.. அவங்களே பயந்திருக்காங்க.. டூவ்வீலரை எடுக்க ஆள் போயாச்சு.. டோன்ட் வொர்ரி. நீங்க ஏதும் கேட்டாதீங்க.. ம்..” என்றான் கொஞ்சம் இறங்கிய குரலில் கடைசி வாக்கியத்தை சொல்லி முடித்தான்.. அதற்குள், பரணிக்குதான் முகம் வேர்த்து போனது.

கார்த்திக் “எவ்வளோ ஆச்சு..” என்றான் கொஞ்சம் தயங்கிய குரலில்.

பரணி எழுந்துக் கொண்டான் “கார்த்திக், இதென்ன அவசரத்துக்கு உதவினத்துக்கு.. கணக்கு எதுக்கு. வைங்க, ம்.. கிளம்பறேன்.. அப்புறம் பார்க்கலாம்” என எழுந்துக் கொண்டான்.. 

சக்திவேல் “சாப்பிட்டு போகலாம் பா” என்றார்.

பரணி “இல்ல மாமா, அக்கா பசங்க எல்லாம் அங்க வந்திருக்காங்கல்ல.. இனியன் எனக்காக வெயிட் பண்ணுவான்..“ என்றபடியே உள்ளே பார்வையால் அவளை தேடினான்.. தென்படமாட்டாள், என உணர்ந்துக் கொண்டு.. விடைபெற்றுக் கிளம்பினான்.

மனது உற்சாகமாக உற்சவம் கொண்டாடியது உள்ளுக்குள்.. 

“உன்னை அள்ளிதானே

உயிர் நூலில் கோர்த்தேன்..

உயிர் நூலில் கோர்த்து

உதிராமல் காப்பேன்..” என அவனுக்கு மட்டும் கேட்க்கும் குரலில் காரில் பாடல் இசைத்துக் கொண்டிருந்தது.

 

Advertisement