Advertisement

நீ என்னுள் யாரடா!

11

சாரதா, இப்போது வீட்டிலிருந்தபடியே தைக்க தொடங்கி இருந்தாள். பரணி, அடிக்கடி அக்காவின் ப்ளாட்டிற்கு வருகிறான். இப்போது காயத்ரிதான் அதிகம் வருவதில்லை. அவளுக்கு, கல்லூரி முடிந்திருந்தது. ‘வேலைக்கு என்றால் திருமணம் முடிந்ததுதான் போக வேண்டும்’ என முன்பே சொல்லியிருந்தனர். காயத்ரிக்கும் இது தெரியும் வீட்டில் திருமணத்தை முடிக்கத்தான் நினைப்பார் என. அதனால், இப்போது தனது வேலையாக, தனது பண்ணை வீட்டை மாற்றிக் கொண்டாள். 

பொள்ளாச்சி அருகே.. அழகான வாய்க்கால் அருகே அவர்களின் பண்ணை நிலம். காயத்ரி வாரத்தில் மூன்று நாட்கள் அங்கே செல்லுகிறாள். ம்.. தங்குவதற்கு அனுமதியில்லை. எனவே, வீட்டிலிருந்து காலையில் சென்றுவிட்டு மாலையில் வீடு வந்திடுவாள். அந்த அலைசலில் அதிகமாக சாரதாவை பார்க்க வருவதில்லை. பசங்க இருவரும்.. விடுமுறையில் வீடு வந்துவிடுவதால்.. இவள்.. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அங்கு செல்லுகிறாள். 

பெரியவர்கள் யாரும் சாரதா வீட்டிற்கு வருவதில்லை.. ம்.. முன்பே இருப்பதுதான். எல்லாவற்றுக்கும் சேர்த்து காயத்ரி இங்கும் அங்கும் செல்லுவதும் தங்குவதுமாக இருந்ததால் ஏதும் தெரியவில்லை. இப்போது இயல்பு நிலை திரும்ப திரும்ப.. சாரதா தனியே இருப்பதாக உணர தொடங்கினாள். அதனால் பரணி அதிகமாக அக்காவை பார்த்துக் கொள்வதற்கு அங்கே செல்லுகிறான். அவன் அங்கே தங்குவது இல்லை.. ஆனால், மதிய உணவிற்கு வருவான்.. இரவில் பெரும்பாலும் உணவு முடித்துதான் செல்லுவான்.

கார்த்திக்கும் ஆண் குழந்தை பிறந்து ஒருமாதம் முடிந்திருந்தது.

இயல்பான வாழ்க்கைமுறைக்கு சாரதா தன்னை பழக்கிக் கொண்டாள். கடை அது இதுவென ஏதும் பெரிதாக செய்யவில்லை. உமேஷ்ஷை அடுத்த வருடம்தான் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவே, இப்போது வீட்டிலிருந்து தையல் வேலையை தொடங்கினாள்.

காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கிவிட்டனர். இவளின் ஜாதகத்தில் சிக்கல் என்பதால்.. தாமதமாகவே அந்த வேலைகள் நடந்தது.

காயத்ரிக்கு, இப்போது அத்தனை சந்தோஷம். படிப்பு முடிந்தது.. திருமண நாளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு மங்கையின் நாட்கள், அத்தனை சுவாரசியமானதுதானே. கண் நிறைய கனவுகள்.. கல்யாணம் முடிந்து இப்படி இருக்கணும்.. இந்த டிரஸ் என ஆல்டைம் காம்ப்ராட்.. சரீ கட்ட கத்துக்கணும்.. அங்க போயாவது ஸ்லீவ்லெஸ் ட்ரெஸ் போட்டுக்கணும்.. ம்.. அக்சப்ட் பண்றமாதிரி ஒரு மனுஷன் வரணும்  என முகமே தெரியாத ஒருவன்  இப்படி எல்லாம் இருப்பானா என காயத்ரிக்கு கனவுகள் விரிய தொடங்குகியிருந்தது இந்த மூன்று மாதங்களில். 

ஆக, அழகாக அந்த கனவுகளை ரசித்துக் கொண்டு காலையில் எழுந்து, தன் அன்னைக்கு உதவுவாள்.. அண்ணனுக்கும் தந்தைக்கும் உணவு பரிமாறுவாள். வீட்டை சுத்தம் செய்வாள்.. உடைகளை மடித்து வைப்பாள்.. துளசி இப்போது அம்மா வீட்டில் இருப்பதால்.. அண்ணனின் அறையை சுத்தம் செய்வாள்.. இப்படி தான் வீட்டில் இருக்கும் போது ஏதேனும் வேலையை செய்ய தொடங்கினாள், பொறுப்பாக.

கௌசல்யா, மகளின் மாற்றத்தை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டே.. அவளுக்கு சமையல் கற்பிக்க தொடங்கினார். காயத்ரியும் காலையில் ஏதேனும் ஒரு வகையை செய்ய தொடங்கினாள். அதில், அவளின் தந்தையின் பாராட்டை அடிக்கடி பெறவும் தொடங்கினாள். ம்.. சக்திவேல் “என் பொண்ணு எங்க அம்மா மாதிரியே சமைக்கிறா.. அப்படியே இருக்குடா.. உனக்கு அவங்க கைப்பக்குவம்..” என உண்ணும் போது நான்கு முறையாவது சொல்லிவிடுவார்.

இனியனும் உமேஷ்ஷூம்  அப்படியே. காயத்ரியின் ஸ்னாக்ஸ்க்கு அவர்கள் அடிமை. அவர்கள் வந்தால், காயத்ரிக்கும் கொண்டாட்டம்தான்.. சிற்றுண்டி வகைகளை செய்வாள்.. பிள்ளைகள் அவள் எது செய்தாலும் மறுக்காமல் உண்ணுமே. எனவே, காயத்ரியை கையில் பிடிக்க முடியாது அப்போதெல்லாம்.

கார்த்திக்தான் ஏதாவது சொல்லுவான்.. கார்த்திக்கு காரம் மணம் எல்லாம் நிறைய வேண்டும்.. கொஞ்சம் சுருக்கென இருந்தால்தான் உண்பான். ஆனால், காயத்ரியின் கைப்பக்குவம்.. பாட்டி சமையல் போல.. அளவான காரம்.. புளி.. என இயல்பான பழைய சமையல் போல இருக்கும். அதனால், அவனுக்கு தன் அன்னையின் சமையல்தான் பிடிக்கும். தங்கை ஏதாவது செயதால்.. ‘ம்.. ம்..’ என சொல்லி உண்டு எழுந்துக் கொள்வான்.

வீட்டில் மட்டுமல்ல காயத்ரி, இப்போது தனது தோட்டத்தில், பண்ணை வேலையிலும் தேர்ந்திருந்தாள். இப்போது தென்னைகளுக்கு அடுத்து இருந்த இடத்தை உழுது. நேர் செய்து.. வெற்றிலை பயிரிட தொடங்கியிருக்கிறாள். அதற்காக மண் வளம் ஆராய்ந்து.. உரமிட்டு.. காத்திருந்து நீர் பாய்ச்சி.. சென்ற வாரம்தான் வெற்றிலை பயிரிட்டிருக்கிறாள். 

சக்திவேலுக்கு பெருமை பிடிபடவில்லை. மகளோடு.. சென்றார் போனவாரம்.. அப்படியே அந்த தென்னை மரங்கள் கேட்பாறற்று இருந்தது.. முன்பு. இப்போது, களைஎடுத்து, சரியான பராமரிப்போடு இருப்பதை பார்க்க பார்க்க சந்தோஷம். மகள் பணம் கேட்க்கும் போதெல்லாம் கொடுத்தார்.. அது இப்படி உருப்படியாகும் என வந்து பார்த்தபோதுதான் நம்பினார். சக்திவேல் “இப்படி எல்லாம் செய்திட்டு, கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சினா என்ன செய்வது காயூம்மா.. நீ எப்படி வந்து பார்ப்ப” என்றார் சிரித்துக் கொண்டே.

காயத்ரி “ம்.. ஊள்ளூர் மாப்பிளையாக பார்த்திருங்களேன் அப்பா.. வேலை ஈசி” என்றாள் சிரித்துக் கொண்டே பெண்.

சக்திவேல் “ம்.. எங்கடா உனக்கு வருவது எல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளையாக தானே வருது. நீ வேற ரெண்டு டிகிரி படிச்சிட்ட.. சீக்கிரமாக கிடைக்கமாட்டேங்குது.. பார்ப்போம்.. ம்..” என்றார் பெண்ணிடம் எதையும் காட்ட கூடாது என்ற குரலில்.

காயத்ரி இன்றும் அப்படிதான் கிளம்பிக் கொண்டிருத்தால் பண்ணைக்கு, இரவில் நல்ல மழை, அதனால்.. கௌசல்யாவிற்கு பயம்.. “நாளைக்கு போகலாமில்ல.. இங்கேயே இப்படி இருக்கு.. அங்க காட்டுக்குல்ல.. மழை பெய்யும் காயூ, நாளைக்கு பார்த்துட்டு போலாம். கார் சர்வீஸ்க்கு போயிருக்குல்ல டா..” என்றார் மகளிடம்.

காயத்ரி “இல்ல மா, இப்போ மழை இல்ல பார்.. வண்டில போய்கிறேன். அங்கே தண்ணீர் தேங்கி நின்னுட்டா.. இப்போதான் கொடி வர நேரம் அழுகிடும். என்னான்னு பார்க்கணுமே. அத்தோட.. இன்னிக்கு வெய்யில் வரும்ன்னு தோணுது.. நான் போய் பார்த்துட்டு வந்திடுறேன்” என சொல்லி கிளம்பிவிட்டாள்.

தனது வண்டியில்தான் கிளம்பினாள்.. கார்கள் எல்லாம் வெளியே சென்றிருந்தது.. 17 – 22 கிலோமீட்டர் வரும் எப்படி இருந்தாலும்.. ஆனாலும், கிளம்பிவிட்டாள். இந்த நாட்களில் கொஞ்சம் குழந்தைதனத்தை இது போன்ற நேரங்களில் விட்டிருந்தாள்.  குழந்தை, புதிதாக பிடிவாதம் பிடிப்பது போல இப்படி சின்ன சின்ன பிடிவாதம் பிடித்தாள் பெண்.  இப்போதெல்லாம் அந்த பிடிவாதம் கண்டு.. ஏதாவது சொன்னால் அதிகமாகுமோ பிடிவாதம் என விட்டுவிடுகின்றனர். ஆக, காயத்ரி நான் வளருகிறேனே மம்மி என வளர தொடங்கினாள்.

 ஒரு ஜீன் குர்த்தியில் கிளம்பினாள். ரெயின் கோட் எடுத்துக் கொண்டாள். பத்து மணிக்கு எல்லாம் வந்துவிட்டாள் பண்ணைக்கு, ஆட்களை வர சொல்லி இருந்தாள்.. நிலத்தில் கால் வைக்க முடியவில்லை.. தண்ணீர் நின்றது பாத்தியில். பாத்தியை வெட்டி.. தேவையற்ற நீரை வெளியேற்றி கொண்டிருந்தாள். அடுத்த மழை வந்தால்.. கண்டிப்பாக செடிகள் அழுகும்.. என்ன செய்வது என தனது ஆலோசகரை போனில் கேட்டுக் கொண்டிருந்தாள்.

படிக்கும் போது ஆயிரம் முறை இருக்கும். ஆனால், நடைமுறை என்பது முற்றிலும் வேறுதானே. எனவே, இந்த இயற்கையை கணிக்க யாரால் முடியும். அவர்களும் இன்று இரவு வரை பார்க்கலாம் என்றனர்.

மாலை சரியாக ஐந்து மணிக்கு கௌசல்யா மகளுக்கு அழைத்துவிட்டார் “கிளம்பிடு காயூம்மா.. அப்பா, கூப்பிட்டு கேட்டாங்க.. சீக்கிரம் வந்திடு” என்றார்.

காயத்ரிக்கும் நேரமாவது புரிய.. கிளம்பிவிட்டாள்.

தோட்டம் என்பது.. சக்திவேல் ஒரு சொத்திற்காக வாங்கி வைத்திருந்தார். 5 ஏக்கர் விவசாய பூமி அது. 1 ½ ஏக்கரில் தென்னை மட்டும் நட்டிருந்தனர். மற்றபடி எல்லாம் சும்மா இருந்த நிலம்தான். எந்த பராமரிப்பும் செய்யவில்லை. கம்பிவேலி போட்டிருந்தனர்.. வாய்க்காலில் தண்ணீர் எடுக்க என மோட்டார்.. கரண்ட்.. சின்னதாக ஒரு ஷீட் போட்டு நான்கு தூண்களுக்கு நடுவே ஒரு இடம் அவ்வளவுதான் அந்த பண்ணையில் இருக்கும். எப்போதாவது சற்று இளைப்பாற என சக்திவேல் வருவார்.. மற்றபடி எந்த பராமரிப்பும் இல்லை.

காயத்ரி வேலைக்கு போகணும் என சொன்னது.. இதை கையில் கொடுத்தார் தந்தை.. ஆனால், அப்போதே எதிர்பார்க்கவில்லை ஒரு லட்சம் செலவு செய்தாலும்.. இப்படி இந்த மண் மின்னும் என எதிர்பார்த்திருக்கவில்லை அவர். இப்போது மகளின் பராமரிப்பில் நிலம் மின்னியது. பெண்கள் எப்போதும் வரம் தருபவர்கள்தானோ. 

மனமே இல்லாமல் எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொண்டு வீடு நோக்கி கிளம்பினாள்.

பரணி, இன்று ஒருவரை சந்தித்துவிட்டு வந்து கொண்டிருந்தான். வரும் வழியில்.. எதோ ஒரு பெண்ணை சுற்றிலும் நான்கு நபர்கள்.. அந்த இடத்தில் சின்னதாக ஒரு கூட்டம். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க என அந்த இடம்.. எதோ பிரச்சனை போல இருந்தது. எனவே வண்டியை ஸ்லொவ்’வாக்கி.. பரணி, காரின் மிரொர் வழியே அதை ஆராய்ந்துக் கொண்டே.. அதை கடந்து சென்றான் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல். 

ஆனால், பத்தடி தூரம் சென்றதும் காயத்ரியின் வண்டி எண்.. அத்தோடு அவளின் சாயல்.. அந்த கண்ணாடியில் தெரிய.. பரணி பரபரப்பானான்.. காரில் இருக்கும் பிரேக்’கை தன்போல அழுத்தி, காரை ஒரமாக  நிறுத்தினான் பரணி.

அந்த கூட்டத்தில் வந்து நின்றான்.. காயத்ரி ஒரு வயதானவரை இடித்துவிட்டால்.. அவர்தான் நின்று திட்டிக் கொண்டிருந்தார். அதற்குள் கூட்டம் கூடி விட்டது, காயத்ரி மறுத்து எதோ பேச.. கூட்டமும் எதோ பேச.. வேடிக்கை பார்க்க என அங்கே பத்துசனம் கூடி விட்டது. 

காயத்ரிக்கு பேசுகிறாள்தான், ஆனால், கத்தி பேசவரவில்லை.. வழியை விடமறுக்கிறார்கள்.. வாய்திருந்து ஏதும் காசும் கேட்கவில்லை.. என்ன செய்வது என பெண்ணுக்கு தெரியவில்லை நின்றுக் கொண்டிருக்க.. தொலைந்த குழந்தையின் கண்ணில் அகப்பட்ட அன்னையென, பரணி கண்ணில் தெரிந்தான் இப்போது காயத்ரிக்கு. காயத்ரி கண்ணில் விவரிக்க முடியா ஆசுவாசம்.. கண்கள் இரண்டும்.. சட்டென நீர் நிரம்பி தளும்பி.. அவனையே பார்த்ததுக் கொண்டிருந்தது.

பரணி, காயத்ரி தன்னை பார்த்துவிட்டால் எனவும்.. பொதுவாக “என்னாச்சுங்க” என்றான் கூட்டத்தை பார்த்து.

அந்த பெரியவர் “என்னாச்சு.. ஒவ்வொருவரிடமும் சொல்ல முடியுமா.. “ என திரும்ப.. பரணி டிப்டாப்பாக்க நின்றுக் கொண்டிருக்கவும் கொஞ்சம் நிதானித்தார்.

அந்த பெரியவரின் பக்கத்தில் இருந்த அந்த ஊர் ஆட்கள் “இந்த பெரியவரை இடிச்சிட்டாங்க.. பாருங்க” என காட்ட.. அவர் ஒட்டி வந்த சைக்கிள் கீழே கிடந்தது.. பின் வில் சற்று தாறுமாறாக உடைந்து.

காயத்ரிக்கு, கோவமும்.. இவர்களிடம் தன்னால் பேச முடியவில்லையே என்ற இயலாமையும் கூடி இருந்ததால்.. பரணியின் கேள்விக்கு ஏதும் பேச முடியவில்லை அவளால். பரணிக்கு அவளின் கலங்கிய தோற்றம்.. எதோ செய்ய.. அவளிடம் நெருங்கினான்.. “என்னாச்சுங்க” என்றான் சின்ன குரலில் வாஞ்சையாக.

காயத்ரி இரண்டுநிமிடம் தன்னுள் எதையோ விழுங்கிக் கொண்டு.. பரணியை பாராமல் “மாமா.. இவர் டெர்னிங்கில் சட்டுன்னு வந்துட்டார்.. பிரேக் போட்டேன்.. பேலன்ஸ் கிடைக்கலை..” என்றாள் திணறாமல் நிதானக் குரலில்.

கூட்டத்திற்கு, இவர்கள் உறவுக்காரர்கள் என புரிய.. நான்கு ஆண்கள் களைந்து சென்றனர். பின் அந்த பெரியவரிடம் பரணி “அடி பட்டுடிச்சா” என்றான்.

Advertisement