அன்று இனியனின் பிறந்தநாள். சாரதா இனியனை மாலையில் தன் மாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள். கார்த்திக் தன் மனையாளை கூட்டி வர சென்றிருந்தான். காயத்ரி, வீட்டை அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள்.
கௌசல்யா காலையிலேயே தன் மகன் கமலுக்கு அழைத்தார். ஏனோ கமலின் அலைபேசி ஒரு தரம் மட்டுமே அழைத்து ஓய்ந்தது.. மகன் எடுக்கவில்லையே என அடுத்தமுறை அழைக்க.. ஹிந்தியில் எதோ சொல்லியது கௌசல்யா தன் மகன்மேல் சங்கடப்பட தொடங்கிவிட்டார்.. ‘மகனுக்கு பிறந்தநாள்.. மறந்துட்டானோ என்னமோ, பேச சொல்லனும்ன்னு நினைச்சேன்..’ என எண்ணிக் கொண்டார். கமலின் போன் எடுக்கவில்லை எனவும் ஒரு சங்கடம். என்னமோ அந்த அன்னைக்கு மகனின் போக்கு பிடிக்கவில்லைதான்.. அதனால் என்ன ஏது என மகனிடம் கேட்க்க கூட பிடிக்கவில்லை அப்போதே. அதுவும் ஒரு பெண்ணோடு.. தங்களை திரும்பியும் பாராமல்.. சென்றவனிடம் பேசவே மனதில்லைதான். ஆனால், பெற்றமனமாகிற்றே ‘தப்பு செய்கிறாய் டா.. வந்திடு டா.. உனக்கு பிள்ளைகள் இருக்கு டா.. என்றேனும் ஒருநாள் உறவுகளை தேடுவ டா.. பிள்ளைகள் பாவம் அப்பா இல்லாமல் கஷ்ட்டபடுது டா.. உனக்கும் அந்த பாசம் வேண்டாமா’ என எண்ணி, பேரனின் பிறந்தநாள் பற்றி சொல்லி.. மகனிடம் சற்று பேசலாம் என எண்ணினார் கௌசல்யா. ஆனால், மகன் போனை எடுக்கவில்லை. யாரிமும் சொல்ல முடியவில்லை. பேரனுக்கு தான் அழைத்து பேசினார்.. ‘மாலையில் வா, இங்கே கேக் கட் பண்ணிக்கலாம்.. சித்தப்பா கேக் ஆர்டர் செய்கிறான்.’ என பிறந்தநாள் வாழ்த்து சொல்லி போனை வைத்தார்.
சாரதா, தங்கள் நால்வருக்கும் காபி கலந்துக் கொண்டிருந்தாள். கௌசல்யா, சமைப்பவரிடம் சிற்றுண்டி என்ன என சொல்லிக் கொண்டிருந்தார்.
சக்திவேல் பேரன்களோடு பேசியபடியே இருந்தார் மகள் செய்யும் அலங்காரங்களை பார்த்துக் கொண்டு. இனியனுக்கு பலூன் ஊத வரவில்லை என அத்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
சாரதா தன் மாமனாருக்கு காயத்ரிக்கு கெளசல்யாவிற்கு என காபி கொடுத்துவிட்டு, தானும் அருந்த தொடங்கினாள். பிள்ளைகள் இருவரும் சற்று முன்பே பால் அருந்திவிட்டனர்.
இப்போது பரணி தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு வந்தான்.
சக்திவேல் சம்பந்தியை வரவேற்றார்.
பின் பரணியிடம் திரும்பி “வாப்பா.. எப்படி இருக்க” என்றார்.
பரணி “நல்லா இருகங்க மாமா..” என்றான்.
சக்திவேல் “இப்போ எல்லாம் இங்க வரதேயில்ல.. அக்காவை பார்த்துட்டு அப்படியே போயிடுரியா பரணி” என்றார்.
பரணி “அதுங்க.. அங்கேயே சரியா இருக்குங்க..” என்றான்.
சக்திவேல் “ம்.. சரிதான்.” என்றவர் தன் சம்பந்தி தணிகாசலதிடம் திரும்பி “என்னாச்சுங்க, ஏதாவது தகையுரா மாதிரி இருக்கா” என்றனர்.
தணிகாசலம் “ம்.. இரண்டு இடம் சரியா இருக்குங்க சம்பந்தி.. அதில் எதோ ஒன்னு, தகைஞ்சிடும். ஒரு இடம் பொண்ணு வேலைக்கு போகணும்ன்னு சொல்லுது.. பொண்ணு சென்னையில் வேலை பார்க்குது.. ம்.. இன்னொரு இடம்.. நம்மைவிட வசதி நிறைய.. ஒரே பொண்ணு. ம்.. பார்க்கலாம்ங்க” என்றார்.
சக்திவேல் “யாருங்க.. சிங்காநல்லூர் வகையறாதானே” என்றார். அப்படியே எதோ பேச்சு இருவரும் பேசிக் கொண்டிருக்க.. வள்ளி அப்போதே டைனிங் ஹால் சென்றுவிட்டார், கௌசல்யாவோடு.
பரணி, இனியன் அருகில் வந்தான். அவன் பலூனை வைத்துக் கொண்டிருக்க.. பரணி “இன்னும் கொஞ்ச நாள் ஆகும் இனி, நீ பலூன் ஊத..” என சொல்லி அங்கிருந்த பலூன்களை நின்றுக் கொண்டே ஊதி ஊதி.. இனியன் ரப்பர்பேன்ட் கொடுக்க.. கட்டி கட்டி கீழே போட்டான்.
பாவம் காயத்ரி அரைமணி நேரத்தில் ஐந்து பலூன் ஊதி இருந்தாள்.. இவனோ ஐந்து நிமிடத்தில் பத்து பலூன் ஊதி விட, இனியன் “அத்தை.. மாமா சூப்பரா ஊதறாங்க… உங்களுக்கே ஊத தெரியலை” என கிண்டல் செய்தான்.
காயத்ரி “என்ன டா, நான்தானே இத்தனையும் ஊதினேன்.” என அங்கிருந்த எல்லா பலூனையும் காட்டினாள் பெண்.
இனியன் “இல்ல.. நீ இதெல்லாம் மட்டும்தான், இதெல்லாம் மாமாவோடது” என பாகம் பிரித்து, எண்ணி ஐந்து பலூன் மட்டுமே காயத்ரியுடையது என கணக்கு காட்டினான்.
காயத்ரி “திடீர்ன்னு கட்சி மாருர.. நான்தான் அந்த ஹாப்பி பர்த்டே வால் ஹாங்கிங் வாங்கினேன்.. அங்க பார் ப்ரக்ரன்ஸ் கேன்ட்ல்ஸ்.. அங்க பாரு ஸ்டார்ஸ்.. உங்க மாமா பலூன் மட்டும்தானே ஊதினார். போ உங்க மாமாவையே இதையெல்லாம் டேகேரெட் பண்ண சொல்லு” என எழுந்துக் கொண்டாள் பிடிவாதமாக…
இனியன் ஓடி வந்து அத்தையின் இடுப்பை கட்டிக் கொண்டான் “அத்தை.. மாமாக்கு அதெல்லாம் தெரியாது.. நீங்கதான் அத்தை செய்யணும். ப்ளீஸ் ப்ளீஸ்..” என்றான் கெஞ்ச தொடங்கினான்.
பரணி அவர்களை இவ்வளவு நேரம் கவனிக்கவே இல்லாதது போல.. தன் வேலையை மட்டும் பார்த்திருந்தவன். அவள் எழவும், சட்டென ஓர கண்ணால் அவளை பார்த்தான். இப்போது காயத்ரி, இனியனிடம் “இல்ல நான் போறேன்.. நீ உங்க மாமாவையே டேகேரெட் பண்ண சொல்லு” என்றாள் மீண்டும் முறுக்கிக் கொண்டு.
இப்போது பரணி, பலூன்களை ஊதி முடித்து.. அவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, அந்த பலூன்களை.. நாலு ஐந்தாக எடுத்து ஒன்று சேர்த்து கட்ட தொடங்கினான் ‘என்ன ரகளை பன்றால்.. அவன்கிட்ட’ என எண்ணிக் கொண்டே.. கட்ட தொடங்கினான்.. ஒரு சேரில் அமர்ந்துக் கொண்டு. பார்வையால் இவர்களை கண்டுகொள்ளவில்லை.
காயத்ரிக்கு, எப்போதும் பரணி ஒரு உறவுதான். அண்ணியின் தம்பி.. அதனால் மாமா.. என உறவு. மற்றபடி எந்த ஈர்ப்பும் இல்லை. ஒரு பார்வை கூட அவனிடமிருந்து உணர்ந்ததில்லை அவள். இப்படி எல்லோரும் இருந்தால்தான் பரணி இருப்பான்.. பேசுவான், அவளோடு. மற்றபடி அவளை, அவன் தனிமையில் இத்தனை வருடங்களில் சந்தித்ததேயில்லை. எனவே, பரணி மீது என அபிப்ராயமும் இல்லை. அண்ணியின் தம்பி என மரியாதை உண்டு.
இப்போது இனியன் காயத்ரியை சமாதானம் செய்திருந்தான்.
காயத்ரி ஏதேதோ அலங்காரங்கள் செய்ய தொடங்கினாள். இனியன், அத்தை கேட்ட.. பலூன்.. வாங்கி வைத்திருந்த அழகு பொருட்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்து உதவி செய்தான்.
அரைமணி நேரத்தில் வேலை முடிந்தது.
சாரதா “காயூ நீ ரெடியாகு” என்றாள். அடுத்து தன் மகனை பார்த்து “வா, இனி.. ரெடியாகலாம்” என இரு பிள்ளைகளையும் அழைத்து சென்றாள், தங்களின் அறைக்கு.
பரணி.. முன் வராண்டாவில் அமர்ந்து போன் பார்க்க தொடங்கிவிட்டான்.
காயத்ரி, அழகான சல்வார் அணிந்து ப்ளாக் மெட்டல் அணிகலன்கள் என அழகாக வந்து சேர்ந்தாள்.. சாரதாவிடம்.
காயத்ரி “அண்ணி, அண்ணி எனக்கு ஒரு ஹெல்ப்” என்றாள்.
சாரதா, இரு மகன்களையும் குளிக்க வைத்து கூட்டி வந்திருந்தாள்.. எனவே, துடைத்துவிட்டுக் கொண்டிருந்தாள் உமேஷ்ஷுக்கு.
காயத்ரி ஹெல்ப் எனவும் “என்ன காயூ” என்றாள்.
காயத்ரி இனியனுக்கு கேட்க்காத குரலில் “நான் இவனுக்கு கிஃப்ட் வாங்கியிருக்கேன்.. ஆனால், இன்னும் கிஃப்ட் பேக் பண்ணலை.. எனக்கு பாக் செய்ய தெரியலை.. வழுக்கிட்டு போகுது.. கொஞ்சம் வந்து பாக் செய்து தரீங்களா” என்றாள்.
சாரதா முறைத்தாள்.. “என்ன விளையாடுறீயா.. நான் வந்ததும் சொல்லி இருக்கலாமில்ல.. டிரஸ் போட்டுவிடணும்.. கார்த்திக் வந்திடுவார். மணியாச்சு.. நீ அப்படியே கொடு.. இனியன் பார்த்ததும் ஹாப்பி ஆகிடுவான்” என கடிந்துக் கொண்டாலும், புது யோசனை சொன்னாள், அண்ணி.
காயத்ரி “அண்ணி நானே பார்த்துகிறேன்” என வெளியே வர.. கார்த்தி அண்ணன் அண்ணி வந்திருந்தனர்.
காயத்ரிக்கு அவர்களை பார்த்தும்.. ‘பாக் செய்ய ஆள் கிடைத்த நிம்மதியில்’ அண்ணியை வரவேற்றாள்.. துளசியின் வயிற்றில் கை வைத்து.. “பாப்பா.. எப்படி இருக்கீங்க” என பேச தொடங்கினாள்.
துளசி “உங்க அத்தை.. இந்த வாரம் வரவேயில்ல பாப்பா.. நீ பேசாத” என்றாள்.
காயத்ரி “அண்ணி, பாப்பா கிட்ட தப்பு தப்பாக சொல்லாதீங்க.. நான் அங்க.. ஃபார்ஹவுஸ்க்கு போயிட்டேன், அதான் வரலை.. பாப்பா..” என சொல்லி பேச தொடங்கினாள் குழந்தையிடம்.
கார்த்திக் வந்ததும்.. பரணி உள்ளே வந்தான். கார்த்திக் பரணி இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
பரணி, காயத்ரி பேச தொடங்கவும்.. போனை பார்க்க தொடங்கிவிட்டான்.
காயத்ரி இப்போது “கார்த்தி அண்ணா, இனிக்கு கிபிட் வாங்கினேன்.. பாக் செய்ய முடியலை.. வழிக்கிகிட்டே போகுது.. நீ பாக் செய்து கொடுக்கிறீங்களா” என்றாள்.
கார்த்திக்கு அப்போது போனில் அழைப்பு வந்தது.. “சரி எடுத்து வா” என சொல்லி எழுந்து போன் பேச சென்றுவிட்டான்.
காயத்ரி “இனிக்கு தெரிய கூடாதே எப்படி எடுத்து வரது” என்றாள் அண்ணியிடம்.
துளசி “சரி, வா.. வராண்டாவில் போய் பாக் பண்ணலாம்” என்றாள்.
இப்போது இனியனும் உமேஷ்ஷும் அறையில் இருந்து.. புது உடைகள் அணிந்துக் கொண்டு வெளியே வந்தனர்.
காயத்ரி எல்லா பொருட்களையும்.. ஒரு கட்ட பையில் போட்டு எடுத்துக் கொண்டு.. வெளியே வர.. இனியன் துளசியோடு பேசிக் கொண்டு.. ஹாலில் நிற்கிறான்.
காயத்ரி, அவன் கண்ணில் படாமல் வராண்டாவிற்கு சென்றாள். எப்படி அண்ணியை அழைப்பது என.. யோசனை அவளுக்கு. பக்கவாட்டில் இருந்த டேபிளில் அமர்ந்து யோசிக்க தொடங்கினாள். ‘எப்படியும் இனியன் என்னை பார்த்தால்.. என்னுடன்தான் இருப்பான்.. எப்படி அண்ணியை அழைப்பது.. போனும் இல்லை’ என அமர்ந்து.. மீண்டும் அந்த வண்ண காகிதங்களை பரிசு பொருட்கள் மேல் வைத்து.. சுருட்டி.. பிரட்டி.. என எதோ செய்ய.. அவளின் குழந்தை மனது கலங்க தொடங்கியது.. ‘யாருமே வரலை.. என்னகு ஏன் வரலை’ என அழும் நிலையில் இருந்தாள் பெண்.