Advertisement

“நிவி ப்ளாஸ்டிக் இன்டஸ்ட்ரீஸ்” என்ற பெயர் பலகை கொண்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் செய்யும் தொழிற்சாலை தீப்பிடித்து எறிந்தது.. அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.. அதன் முதலாளி பாபு ஹாஸ்பிட்டலில் அட்மிடாகி இருக்க , பாபுவின் அம்மாவும் தங்கையும் எங்கு இருக்கிறார்கள் என்ற விஷயம் தெரியாததால், அதன் செயலாளர் நிறுவனம் காலவரையின்றி பூட்டப்படுவதாக அறிவித்தார். 
செயல் படாமல் இருந்த நிறுவனம் திடீரென தீ பிடித்தது எப்படி என்று போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரிப்பதாக தெரிவித்தனர். 
இந்த செய்தியை போனில் பார்த்தபடியே, அஷோக் மற்றும் அவன் நண்பர்கள் நால்வர் ஒரு ஹோட்டலில் அமர்ந்து உணவு உண்டனர். 
மேகன் “ என்ன அஷோக்? நாம மாட்டிப்போமா??.. “
அஷோக் “ கண்டிப்பா மாட்டோம் டா.. என் தங்கச்சி உயிரையே பரிச்ச அவனை சும்மா விட கூடாது.. அவன் உயிர் என் கையால தான் டா போகனும் “ 
கோகுல் “அவன் ஹாஸ்பிட்டலில் படுத்து இருக்கான் டா.. முடிக்கிறது ஈஸி”
“இல்லைடா அதுக்கு முன்னாடி ஒரு வேலை இருக்கு.. அவன் தநியா இத்தனை பொண்ண ஏமாத்தி இருக்க மாட்டான்.. அவங்க எல்லாம் யாரு என்ன கண்டு பிடிக்கனும்.. பாதிக்க பட்டு கம்ப்ளைன்ட் பண்ணின பொண்ணு டீடைல்ஸ் இருக்கு பேர் ரேவதி. அவங்களை மீட் பண்ணின நமக்கு ஏதாவது துப்பு கிடைக்கும் ..”
மேகன்  “நீ அவங்களை கண்டு பிடிச்சு என்னடா பண்ண போற?” 
“அப்படி சொல்லாத டா.. என் தங்கை ஒருத்தி செத்தது போதும்.. இனி யாரும் இப்படி பாதிக்கப்பட நான் விட மாட்டேன்.. அதுக்கு அந்த நாயிங்களை கண்டு பிடிச்சா தான் முடியும்.. “
நவீன் “கண்டிப்பா நாங்க எப்பவும் உனக்கு உதவியா இருப்போம் டா.. சரி நீ சென்னையில் அவன்  தங்கை இருப்பதா சொன்னியே? அவளை ஏதும் செய்யாமல் வந்துட்டியா? “
“அது அது.. வந்து அந்த பொண்ணு இவன் தங்க இல்லை டா.. அவ ஒரு போலீஸ் காரன் பொண்டாட்டி.. எப்படியோ மாட்டிக்காமல் தப்பி வந்துட்டேன்.. “ என்று பாதி பொய்யும் பாதி மெய்யும் கூறினான்.
“ஓ சரி மச்சி.. ரேவதி வீடு எங்க தெருவில் தான் இருக்கு.. நான் அவங்க அப்பாவை பார்த்து பேசிட்டு சொல்றேன் விசாரிப்போம்”
“சரி வாங்க போகலாம்.. ரொம்ப நேரம் வெளிய சுத்த வேண்டாம் கொஞ்ச நாள்”
*************************************** 
காலை எப்போதும் போல் நிவி ரோஷன் மீது கை போட்டப்படி உறங்கி கொண்டிருந்தாள். ஒரு புன் சிரிப்புடன் விழித்தவன் “கொசுக்குட்டி பகல் முழுதும் கோவப்பட்டு சுத்த வேண்டியது நைட் ஆனால் பைந்தாங்கொளியா மாற வேண்டியது” என எழுந்து சென்றான்
உடற்பயிற்சி முடித்து ரோஷன் மற்றும் ரவி டீவியில் நியூஸ் பார்த்து கொண்டிருந்தார்கள், நிவி வருவதை பார்த்த ரோஷன் திடீரென சானலை மாற்றி விட்டான்.
நிவி நேராக தன் மாமனாரிடம் சென்று “ மாமா நாளையிலிருந்து நான் வேலைக்கு போகனும்.. எனக்கு சிறுசேரி போக வழி தெரியாது.. “
“நீ ஏன் மா வருத்தப்படுற.. டேய் நாளையிலிருந்து நிவியை ட்ராப் பிக்கப் நீ தான் பண்ணனும்.. “
“அப்பா.. என்னால் முடியாது.. நான் ரொம்ப பிஸி.. நீங்க தான் வெட்டி ஆபிஸர்.. 6 மாசத்தில் ரிட்டையர் ஆக போறீங்க.. நீங்க அந்த வேலையை பாருங்க”
“அடிங்க யாருடா வெட்டி ஆபிஸர்.. நிவி.. நாளைக்கு கண்டிப்பா இவன் கூட்டிட்டு போவான்”
“சரிங்க மாமா.. “ 
கிட்சன் சென்று மீராவிற்கு காலை உணவு தயாரிக்க உதவி புரிந்தாள். என்ன தான் வசதி வாய்ப்புடன் வளர்ந்தாலும், வீட்டு வேலை அனைத்தும் பழகி இருந்தாள். இரண்டு வருடங்களாக ஹாஸ்டலில் தங்கியதால்  கொஞ்சம் சமையல் மறந்து விட்டது.. இப்போது மீராவிடம் பழகி கொள்கிறார். 
ரோஷன் மீது இருந்தது வெரும் ஈர்ப்பு என்ற முடிவுக்கு வந்தவள், தன் தாய் தனக்கு தீங்கு செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த வாழ்வை கொஞ்ச கொஞ்சமாக ஏற்க பழகி கொண்டாள். ஆனால் ரோஷன் மீது கோவம் இருந்தது. அவனிடம் சரியாக பேசுவது இல்லை.. 
தன் அண்ணணை பற்றி விவரம் ஏதும் சொல்ல மறுத்ததால் அவன் மீது கோவம்.. தந்தை தான் 10  வயதில் இறந்ததும் பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்திருந்த பாபு தன் தாயுடன் சேர்ந்து நிறுவனத்திற்கு செல்ல ஆரம்பித்தான்.. 4 வருடத்தில் அனைத்தும் விரைவில் கற்று கொண்டவன் தன் அன்னைக்கு ஓய்வு அளித்து விட்டு அவன் நிறுவனத்தை பார்த்து கொண்டான். நிவிக்கு பாபு எப்பவும் ஹீரோ தான்.  
ரோஷன் தன் அறைக்கு செல்லும் முன் நிவியை  “நிவி, ஒரு நிமிஷம் இங்க வா” 
அவள் காதில் விழாதது போல் வெங்காயம் நறுக்கி கொண்டிருக்க 
மீரா “ நிவி.. அவன் கூப்பிடுறான் பாரு”
சலித்து கொண்டே அவன் பின்ன சென்றாள். 
ரூம் சென்று கதவை அடைத்து விட்டு “ஏன் டி திமிரா.. எங்கிட்ட சொல்லாமல் எங்க அப்பா கிட்ட போய் கேக்குற?”
“உங்க கிட்ட ஏன் கேட்கனும்? கேட்டா செஞ்சுடுற மாதிரி தான்”
“ஏய்.. என் பொறுமை ரொம்ப சோதிக்காத”
“என்ன பொம்மைனு நினைச்சீங்களா?  எங்க அம்மாவுக்காக தான் இங்க இருக்கேன்.. ஒரு நாளில் என் வாழ்கையே மாறி போச்சு.. ஏன் இப்படி ஆச்சுனு யோசிச்சு யோசிச்சு பைத்தியம் ஆயிட்டேன் நான்.. என்ன தான் நடந்தது ப்ளீஸ் சொல்லுங்க” என அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுவதை பார்த்த ரோஷனுக்கு மனம் பதபதைத்தது.. எப்படியும் ஒரு நாள் அவளிடம் சொல்லி தான் ஆக வேண்டும்.. நாளை அவள் அலுவலகம் செல்ல ஆரம்பித்தால் அவளுக்கு விஷயம் கண்டிப்பாக தெரிந்து விடும்.
“நிவி ப்ளீஸ் அழாதே.. “
“நிவி இங்க பாரு.. சாயங்காலம் 5 மணிக்கு கிளம்பி இரு.. நான் ஒரு இடத்துக்கு கூட்டி போறேன்.. அங்க வச்சி உங்க அண்ணன் பத்தி எல்லா விஷயமும் சொல்லிடுறேன்… வீட்டில் சில விஷயங்கள் பேச முடியாது.. ப்ளீஸ் அழாதே”
“ப்ராமிஸ்?”
“ப்ராமிஸா டார்லிங்”
அவன் டார்லிங் என்று அழைத்ததும் பொய்யாக முறைத்தவள் “ கண்டிப்பா கூட்டி போகனும்”
“சரி மா.. “
“சரி நான் சமைக்க போறேன் “ என்று மகிழ்சியுடன் ஓடி விட்டாள்.
இப்போது நிவி ஒரு வளர்ந்த குழந்தை போல் தெரிந்தாள் ஆவனுக்கு.. இவள் சொன்னால் நம்புவாளா இல்லை கோவம் கொண்டு கத்துவாளா? குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் ரோஷன்.
மாலை 5 மணி ஆனதும் நிவி மாமியாரிடம் “ அத்தை அவங்க என்ன வெளிய கூட்டி போறேன் சொன்னாங்க.. நான் போய் ரெடி ஆகுறேன்”
“சரி மா.. சந்தோஷமா போயிட்டு வா.. அப்படியே டின்னர் முடிச்சிட்டு வாங்க.. உனக்கும் வீட்டுக்குள்ளே இருக்க போர் அடிக்கும்”
“அப்படிலாம் ஏதும் இல்ல அத்தை.. பாட்டி கிட்ட சொல்லிடுங்க.. நான் கிளம்புறேன்”
“சரி டா”
நிவி ப்ளூ ஜீன்ஸும் மெரூன் டாப்ஸும் அணிந்து சிறு ஒப்பனையுடன் தயாரானாள். ரோஷன் கூறியது போல மாலை 5.30க்கு வீடு வந்தவன்,  நிவியை பார்த்து ஜெர்க் ஆனான். சும்மா அவளை பார்த்தாலே நான் மயங்கிடுவேன்.. இதுல இப்படி கும்முனு ரெடியாகி இருந்தா நான் என்ன பன்றது.. ஐயோ நம்ம கண்ணு வேற எதையும் பார்க்க மாட்டேன்னு அடம் புடிக்குதே.. ரோஷன் கன்ட்ரோல்…. 
“என்ன அப்படி பார்க்குறீங்க? நான் ஜீன்ஸ் எல்லாம் போடுவேன்.. நீங்க போடக்கூடாதுனு சொன்னா, நான் கேட்க மாட்டேன்”
“நீ ஜீன்ஸ் போட்டா நல்லா தான் இருக்கு பேபி… அது போடலனாலும் நல்லா தான் இருக்கும்”
“என்னது??????”
“அதாவது ஜீன்ஸ் இல்லாமல் வேற ட்ரஸ் போட்டாலும் நல்லா தான் இருக்கும்னு சொல்ல வந்தேன்.. நீ ஏன் மா தப்பா எடுக்குற?? சரி நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்.. எனக்கு ஒரு காபி போட்டு தரியா “ என்று பேச்சை மாற்றினான்
மனதுக்கு புடிச்ச பொண்ணு.. இது காதல் தான்னு கன்பார்ம் ஆகறத்துக்குள்ள மனைவி ஆகிட்டா ஆனால் மனசு விட்டு பேசவோ பழகவோ முடியாதபடி இருக்கும் சூழ்நிலையை நொந்தவன் குளிக்க சென்றான். அவனும் கிட்ட தட்ட அதே நிறத்தில் உடை அணிந்து வந்தான். அதை பார்த்த மீராவும் தெய்வா பாட்டியும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்..
நிவி “ஏன் பாட்டி சிரிக்கிறீங்க??”
“இல்ல ஒருத்தன் சொன்னான் சிவப்புலாம் ஒரு கலரா? அந்த கலரில் எனக்கு ஏன் டீ-ஷர்ட் வாங்குனீங்கனு என் கிட்ட சண்டை போட்டான்.. இப்ப அவனே ரெட் கலர் ட்ரஸ் போட்டு இருக்கான் அந்த மானஸ்தன நீ பார்த்த மீரா?”
இப்போது நிவிக்கு புரிந்தது ரோஷனை கிண்டல் செய்கிறார்கள் என்று.. அது அவனுக்கு புரிந்தாலும் கண்டு கொள்ளாமல் “நிவி நான் வண்டி எடுக்குறேன் வா.. அம்மா, பாட்டி பை… “ என்று சென்று விட்டான்.
“கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலையாம் என் பேராண்டிக்கு “ என்று மூவரும் சிரிக்கும் சத்தம் அந்த வீட்டையை நிறைத்தது..
அவர்களிடம் விடை பெற்ற நிவி, தன் கணவனுடன் புல்லட்டில் பறந்தாள்.
அவன் கூட்டி சென்றது ஒரு பாலடைந்த கட்டிடம்,  மேல் தளம் மட்டும் கட்டி இருந்தது ஆநால்  சிமன்ட் பூச வில்லை, பெயின்ட் அடிக்க வில்லை.. அவள் வெளியே நின்றிருப்பதை பார்த்தவன்
“கமான் நிவி, உள்ள வா.. இது நம்ம இடம் தான்.. ஒரு ஆசைக்காக இந்த இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தோம்.. இங்க வேலை பார்த்த கொத்தனார் 2 பேர் மர்மமான முறையில் இறந்து போயிட்டாங்க. அதற்கப்புறம் அப்படியே நிக்குது..” அவளுக்கு சற்று பயமாக இருக்க, ரோஷன் கையை பிடித்துக்கொண்டு நடந்தாள்.
அவளை பேஸ்மன்ட் கூட்டி சென்றவன் தன் சாவியை கொண்டு திறந்தான். உள்ளே சென்றதும் அவள் கண்கள் வியப்பில் விரிந்தது.. வீடு அவ்வளவு அழகாக இருந்தது..
“வாவ்.. ரோஷன் ரொம்ப அழகா இருக்கு இந்த வீடு.. வெளிய இருந்து பார்க்கும் போது பயமா இருந்தது.. உள்ள வந்து பார்த்தா 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கு.. சூப்பர் மேன்”
“ உனக்கு புடிச்சிருந்தா ஓகே தான்.. நான் அடிக்கடி கூட்டிட்டு வரேன் பட் ஒரு கண்டிஷன் “
 “என்ன?”
“இங்க கூட்டிட்டு வரேணு வீட்டில் யார் கிட்டையும் சொல்ல கூடாது.. “
“ஏன்??”
“அவங்களுக்கு இந்த வீடு பிடிக்காது. அதான்.. சரி வா உள்ள போய் பார்க்கலாம்”
பேஸ்மன்ட்டில் வீடு இருப்பதால்,  கீழே 3 அறைகள் மட்டும் இருந்தது.. ஒன்று அவனது அலுவல் அறை, இரண்டு  அறை காலியாக இருக்க, அதன் உள்ளே செல்ல முயன்றவளை தடுத்தான் ரோஷன்
“பேபி ஸ்டாப்”
“என்ன ?”
“அது.. லாக்கப் ரூம் என் பெர்ஸனல் லாக்கப்.. சில பேரை போலீஸ் ஸ்டேஷன் கூட்டி போய் விசாரிக்க முடியாது.. அதான் இப்படி.. அதில் ரவுடிங்க மட்டும் தான் போகனும்.. என் ரவுடி பேபி போக கூடாது..“
“நீ நெஜமா போலீஸா இல்லை கட்ட பஞ்சாயத்து ஏதாவது பண்றியா?”  
“பேபி மா மாமாவை பத்தி போக போக தெரியும்.. இப்ப வா மேல போகலாம்”
மேலே முதல் தளம் பூசப்படாமல் இருந்தாலும் உள்ளே அழகான இன்டீரியர்ஸ் செய்யப்பட்டிருந்தது.. அது மூன்று படுக்கை அறை கொண்ட அழகான வீடு.. 
ஒரு அறைக்குள்ளே அழைத்து சென்று, சில போட்டோக்களை காட்டினான். பாபு பல்வேறு பெண்களுடன் சிரித்து கொண்டும் அவர்களை அணைத்து கொண்டும் இருப்பதை பார்த்தவள் அதிர்ச்சி ஆனாள்.
“நீ எந்த அளவுக்கு தாங்கிப்பனு தெரியலை, சில விஷயங்கள் என் முன்ன பார்க்க கூட கஷ்ட மா இருக்கும்.. இந்த வீடியோஸ், சில பைல்ஸ் எல்லாம் இருக்கு இதுல.. நீ பார் நான் சமைக்கிறேன்” அவள் அதை பார்க்க தொடங்கியதும் கதவை அடைத்து விட்டு சமையலறை சென்று அவளுக்காக சமைக்க ஆரம்பித்தான்
இரண்டு மணி நேரம் ஆகியும் வெளியே வராததால் ரோஷன் அறைக்குள் சென்று பார்த்தான், அங்கு நிவி அழுதழுது மயங்கி கிடந்தாள்
— தொடரும் 

Advertisement