Advertisement

விழா நன்றாக நடந்தது… ரவியும் மீராவும் மிகவும் மகிழ்சியாக இருந்தார்கள். அவர்கள் ஆசைப்படி தன் மருமகள் என்று நிவியாவை அறிமுகம் செய்தார்கள். இரண்டு வாரம் கழித்து நடக்கவிருக்கும் திருமண வரவேற்பிக்கு அழைப்பிதலும் கொடுத்தார்கள்.
ரோஷன் விருந்தினர்களை கவனித்து கொண்டாலும் அவன் கண்கள் தன் மனைவியை சுற்றி வந்தது.
கொஞ்சம் தாமதமாக தன் குடும்பத்துடன் வந்தார் ஸ்ரீ்தர்.. அவருக்கு நிவியாவை அறிமுக படுத்தியதும் அதிர்ந்தார்.. அவரின் மனைவி லட்சுமிக்கும் வருத்தமாக தான் இருந்தது, மானசியை ரோஷனுக்கு கட்டி வைக்க ஆசைப்பட்டார். 
“என்னடா என் கிட்ட கூட சொல்லல்லை.. “
ரவி “ஆமாம் டா.. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உடனே பண்ண வேண்டியதாக ஆச்சு…. “
“காலையில் என் ஆபிஸுக்கு வந்தான் உன் பையன் ஒரு வார்த்தை சொல்லலை.. “
“டேய் அவன் அபீசியலா வந்திருப்பான் டா.. அதான் பர்ஸனல் விஷயம் பேசி இருக்க மாட்டான். உனக்கு அவனை பத்தி தான் தெரியுமே.. “
“ம்ம்ம் சரி வந்தவங்களை கவனி.. நாம அப்புறம் பேசலாம்..”
இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு அங்கு போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டனர். மானசி நிவியாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். இடையிடையே ரோஷனை பற்றியும் திருமணத்தை பற்றியும்  கேட்க ஐயோவென்றானது நிவியாவிற்கு.. 
அவள் முக மாற்றத்தை கண்ட ரோஷன் அங்கு விரைந்து வந்தவன் மானசியிடம் ஒரு கதையை விட்டு நிவியை காப்பாற்றினன்.
இங்கு லட்சுமி ஸ்ரீ்தரை திட்டி கொண்டிருந்தார் “போன வருஷமே கேட்க சொன்னேன்… நீங்க தான் என் பேச்சை கேட்களை இப்ப பாருங்க யாரையோ கட்டி கூட்டிட்டு வந்துட்டாங்க.. நம்ம பொண்ண ஆசையா கட்டி கொடுக்கலாம்னு நினைச்சேன்”
“சரி விடு லட்சுமி.. நம்ம பொண்ணுக்கு வேற இடமே கிடைக்காதா என்னு? விழாக்கு வந்துட்டு இப்ப அதை பத்தி பேசியே ஆகனுமா?”
“எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருப்பீங்க” 
அப்போது அங்கு வந்த மானசா மெல்லிய குடரலில் “ அம்மா இவங்க கல்யாணத்தில் ஏதோ ஒரு ரகசியம் இல்ல குழப்பம் இருக்குமா ”
“ஏன் டீ அப்படி சொல்ற?”
“இல்லை அதை பத்தி பேசும் போது மட்டும் அவ தடுமாறி பேசுனாள் அந்த ரோஷன் எங்கிருந்தோ வந்து சமாளிச்சிட்டான்”
லட்சுமியின் மனம் அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது.. 
“சரி நான் போய் பேச்சு கொடுக்குறேன்.. அவ தனியா தான் இருக்கா” என எழுந்தவளை தடுத்த ஸ்ரீ்தர் “அடுத்தவங்க குடும்ப விஷயம் நமக்கு எதுக்கு? பேசாம இருங்க “ என்று அடக்கினார்.
அவரை முறைத்துகொண்டே அமர்ந்தவர், நிவியாவை கூர்ந்து கவனித்தார்.. 
பஃபே முறையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அனைவரும் உண்டு மன நிறைவுடன் விடை பெற்றனர். ஒரு வழியாக விழா நிறைவு பெற, வீட்டினர் மட்டும் கடைசியாக உணவு உண்டுக்கொண்டு இருக்கும் போது திடீறென எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன் நிவியாவை வெட்ட வந்தான்.. சடுதியில் சுதாரித்த ரோஷன் அவன் காலை தட்டி விட்டு , அவன் தடுமாறி கீழே விழுந்ததும் அவன் அரிவாளை பிடிங்கினான்  நிவியா மீது வெட்டு படாமல் தப்பித்தாள்.. அவன் எழுந்து ஓடும் முன்  அவனை பிடித்த ரோஷன் வெளியில் காவலுக்காக நின்ற இரு போலீசாரிடம் ஒப்படைத்தான்
“இவனை நம்ம ஸ்டேஷன்ல வச்சு பூட்டுங்க நான் வந்து பார்த்துக்குறேன்”
“சரிங்க சார்”
நிவியா மிகவும் பயந்து விட்டாள் மீரா கையை பிடித்தவள் விடவில்லை.. கை நன்றாக நடுங்கி கொண்டிருந்தது.. தெய்வா பாட்டி உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே நிவியாவிற்கு தைரியம் சொல்லி கொண்டிருந்தார்
அவர்களிடம் வந்த ரோஷன் “ பயப்படாதீங்க.. அவன் ஒரு பிக் பாக்கட் கேஸ்.. போன தடவை நான் தான் பிடிச்சு கொடுத்தேன்.. அந்த கோவத்தில் இப்படி பண்ண வந்துட்டான்” அவனது பதிலை ரவியை தவிர மற்றவர்கள் அப்படியே நம்பினர். 
தெய்வா பாட்டி “ ஒரு நிமிஷம் பயந்து விட்டேன் பா.. வீட்ட சுத்தி எப்பவுமே காவல் இருக்க ஆளூங்க ஏற்பாடு பண்ணுப்பா”
“நான் பண்றேன் பாட்டி பயப்படாதீங்க”
ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்து உறங்க அனுப்பி வைத்தான்  ரோஷன். நிவியாவை தன்னுடன் அழைத்து சென்று, அவளை உடை மாற்ற வைத்து உறங்க சொன்னான்
நிவி “எனக்கு உங்க கிட்ட ஒன்னு கேட்கனும் “
“என்னு பேபி?”
“பேபினு கூப்பிடாதே.. “
“சரி பேபி சொல்லு பேபி.. “
“ஐயோ.. பேபி சொல்லாதீங்க.. “
“ஹஹஹா சரி பேபினு கூப்பிடலை என்னு விஷயம் சொல்லு..”
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. நிஜமாவே உனக்கு நிறைய எநிமீஸ் இருக்காங்களா.. உன்னை பழி வாங்குறதா நினைச்சு என்னை ஏதாவது செய்து விட போறாங்க..?” 
“அப்படி ஏதும் நான் நடக்க விட மாட்டேன்.. என் உயிரை கொடுத்தாவது உன்னை காப்பாத்தி விடுவேன் சரியா ?”
“அப்போ உனக்கு நிறைய எதிரி இருக்காங்க? “
“ போலீஸ் காரனுக்கு எதிரி இல்லாமல் இருக்குமா.. அதுக்கு எல்லாம் பயப்பட முடியாது டார்லிங்..”
“டார்லிங்கா… உங்களை திருத்த முடியாது.. நான் தூங்க போறேன்.. “
கட்டிலின் நடுவே தலகாணியை அடுக்கி விட்டு படுத்துக்கொண்டாள். ரோஷன் அவள் செய்வதை கேள்வியாக நோக்க,
“நான் தூக்கத்தில் உருளுவேன்.. உங்க மேல உருண்டுட்டேனா உங்க பிஞ்சு உடம்பு தாங்காதில்லை அது தான் இந்த பாதுக்காப்பு”
“அடிங்க நான் 6 பேக் வச்சிருக்கேன் என்னு பார்த்து பிஞ்சு உடம்புனு சொல்ற?? வாய் கொழுப்பு ?”
“ஹிஹிஹி.. கோவிக்காதீங்க காமடி… “
“அம்மாடி ராசாத்தி உன் மொக்க ஜோக்கெல்லாம் கேட்க எனக்கு நேரமில்ல மா.. வேலை இருக்கு நான் போகனும்”
“என்னுது போகனுமா? அப்ப நான் தனியா தூங்கனுமா.. என்னை வேணும்னா பாட்டி ரூமில் விட்டுட்டு போறீங்களா?”
“ஐயயோ.. வீட்டுக்கு தெரியாம நான் போகனும்.. நீ என்ன மாட்டி விட்ருவ போலவே..”
“எனக்கு தனியா தூக்கம் வராது.. “
“அவ்வளவு தான பிரச்சனை.. நீ தூங்கும் வரைக்கும் நான் இங்க இருக்கேன்.. லேட்டா நான் கிளம்புறேன் ஓகே”
“ம்ம் சரி.. ஆமாம் ஒரு டவுட்.. திருடன் தான் நைட் வெளிய போவான்.. போலீஸ் காரன் நீ எதுக்கு நைட்ல போற??”
அவளை முறைத்தவன் “ சரி சரி நீ எப்படி பேசி கிட்டே இரு நான் வெளிய போறேன்”
“ஐயோ சாரி சாரி.. தோ நான் தூங்கிட்டேன்”
சிறு பிள்ளை போல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்திருந்தாள்
அவள் செய்கையில் புன்னகை புரிந்தவன் அவளருகில் அமர்ந்தான்.. தன் மடிக்கணினியில் சில தகவல்களை சரி பார்த்தவன் மணி 12 ஆனதும் தன் மனையாளை பார்த்தான். அவள் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். மெல்ல எழுந்தவன், அவளுக்கு போர்வை நன்றாக போர்த்தி விட்டு பின் வாசல் வழியாக வெளியே வந்தான்.. பிறகு தன் காம்பௌன்ட் சுவரை எகிறி குதித்து, பின்னால் நிக்க வைக்கப்பட்டிருந்த  தன் ஆடி காரில் பறந்தான். 
ஒரு பாழடைந்த பங்களாவின் அருகே தன் காரை பார்க் செய்தவன் உள்ளே சென்றான். காவாளிகள் இருவரும் அவனுக்காக காத்திருந்தனர்
“சாரி நாச்சியப்பன் கொஞ்சம் லேட் ஆச்சு”
“பரவாயில்லை சார்”
“அந்த ஆள் எங்க இருக்கான்? ஏதாவது சாப்பிட கொடுத்தீங்களா?”
“சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டான் சார்.. நிறைய தடவை கேட்டும் வாய திறக்கல.. நீங்க வராமல் கை வைக்க வேண்டாம்னு வெயிட் பண்றோம் சார்”
“நாம அடிச்சு விசாரிக்கிற அளவு அவன் பெரிய குற்றவாளி இல்லை நாச்சியப்பன்.. வாங்க அவனை போய் பார்ப்போம்”
ஒரு சின்னு ரூமில் ஒரு சேரில் அவனை கட்டி போட்டு வைத்திருந்தார்கள்.. 
ரோஷன் மட்டும் உள்ளே வந்தவன், “ஹலோ அருண்?”
அவன் திரு திருவேன விழிக்க,
“என்ன அருண் எப்படி உங்க பேர் தெரியும்னு பார்குறீங்களா? உங்க பேர் மட்டும் இல்ல உங்க தங்கச்சி அணிதா பற்றியும் தெரியும்”
“அணிதா என்ற பேரை கேட்டதும் அழ ஆரம்பித்தான் அருண்”
“அந்த பாபு செஞ்ச காரியத்தால என் தங்கை இப்ப உயிரோடவே இல்லை சார்.. ஆனால் அவன் தங்கச்சி மட்டும் கல்யாணம் காட்சி பண்ணி சந்தோஷமா இருப்பாளா?”
“ சரி நான் ஒன்னு சொல்றேன் கேளூங்க..”
“சொல்லுங்க சார்”
“நீங்க இப்ப பாபுவோட தங்கச்சியை அதாவது என் மனைவியை கொல்றீங்கனே வச்சிப்போம்.. நீங்க பண்ற தப்புக்கு உங்க அம்மாவை நான் நடு ரோட்டில் நிக்க வச்சு  சுட்டு பழி வாங்கட்டுமா?”
“சார் எங்க அம்மா பாவம் சார் அப்பாவி சார்.. நான் பண்ணின தப்பிற்கு அவங்களுக்கு எப்படி தண்டனை கொடுப்பீங்க.. ?”
“வெரி குட்.. எக்ஸாட்லி அதே தான் நானும் சொல்ல வரேன்.. அந்த பாபு தப்பு பண்ணுனதுக்கு என் அப்பாவி பொண்டாட்டி எப்படிப்பா காரணமாவா அவளை எப்படி நீ தண்டிக்க நினைக்கலாம்?”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “ சாரி சார்.. ஏதோ கோவத்தில் முட்டாள் தனமா முடிவெடுத்துட்டேன்”
“டோன்ட் பீ சாரி மிஸ்டர் அருண்.. உங்க கோபம் நியாயம் ஆனது தான் ஆனால் நீங்க காட்டும் இடம் தான் தவறு.. “
“என்ன சார் சொல்றீங்க..”
“அந்த பாபு தனியா எப்படியும் இத்தனை பண்ணிருக்க மாட்டான்.. அவனை விசாரனைக்கு கூட்டிட்டு போகும்போது தான் பயங்கற ஆக்ஸிடன்ட் ஆச்சு.. நீங்க அவன் ப்ரண்ட்ஸை கண்டு பிடிக்க உதவி செய்றீங்களா?”
“கண்டிப்பா சார்.. எல்லாத்தையும் புடிச்சு கண்டிப்பா தண்டனை வாங்கி தரனும்.. அவங்களை கண்டிப்ப அடிச்சு உதைச்சி காலை உடச்சி பிடிச்சு தரேன் சார் ”
“ஓகே… குட்.. சாரி அருண் உங்களை கட்டி வைக்க வேண்டியாச்சு” என கட்டை அவிழ்த்து விட்டான்
பிறகு அவனை சாப்பிட வைத்து, அவன் சொந்த ஊருக்கு பஸ் ஏற்றி விட்டு விடியற்காலை 4 மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் ரோஷன்
தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்து படுத்தவன் தூக்கத்தில் ஆழ்ந்தான்.
காலை 8 மணி அளவில் கண் விழித்த நிவியா, தன் அருகில் குழந்தை போல் தூங்கி கொண்டிருக்கும் கணவனை பார்த்ததும் முதலில் கனவு என்று நினைத்து, ஏற்கனவே கலைந்திருக்கும் அவன் சிகையை கலைக்க, தூக்கத்தில் அவன் புரண்டு படுத்தான்.. பிறகே இருவருக்கும் திருமணம் நடந்ததும், தான் அவன் வீட்டில் இருப்பதும் நினைவு வர, 
“ஐயயோ என்ன நினைப்பான்? நல்ல வேளை நல்லா தூங்குறான்” அவள் பாத்ரூம் சென்று கதவை அடைக்கும் வரை தூங்குவது போல் இருந்தவன் மெல்ல கண் விழித்து “ அப்ப அவள் மனதிலும் நான் இருக்கேன்.. அப்புறம் எதுக்கு டைவர்ஸ் அது இதுனு பேசினாள்.. சரி பார்த்துப்போம்.. “ உற்சாகமாய் விசிலடித்து கொண்டே உடற்பயிற்சி செய்யும் அறைக்கு சென்றான்
குளித்து முடித்த நிவியா வெளியே வந்தாள்.. ரோஷனை காணாது முழித்தவள், கீழே இருப்பான் என நினைத்து கொண்டு கீழே சென்றாள்.
மீரா காலை உணவை தயாரித்து உணவு மேஜையில் எடுத்து வைத்தார்.. 
நிவியா “ குட்மார்நிங் அத்தை சாரி கொஞ்சம் தூங்கிட்டேன் “
“பரவாயில்ல மா.. வா சாப்பிடு”
“ மாமா எங்க அத்தை.. “
“அவர் யோகா பண்ணிட்டு இருக்கார் மா.. லேட்டாகும் நீ சாப்பிடு.. “
“இல்லை அத்தை எல்லாரும் வரட்டும் சேர்ந்து சாப்பிடலாம்”
“அப்ப ஒரு கப் காபி குடி வா.. அவங்க வர ஒரு மணி நேரமாவது ஆகும்”
இருவரும் காபி குடித்து கொண்டிருக்கும் போது தெய்வா பாட்டி பூஜையை முடித்து கொண்டு வந்தார். மூன்று பெண்களும் அரட்டையில் இறங்க ரவி யோகாவை முடித்து கொண்டு வந்தார். 
நிவியா ரவியிடம் “குட்மார்நிங் மாமா “
“வெரி குட் மார்நிங் நிவி.. எங்கே உன் புருஷன் ஆளையே காணும்?”
“தெரியலை மாமா கீழ இருப்பார்நு நிநைச்சேன்”
“சரிமா ஆபீஸ் லீவ் போட்டு இருக்கியா? எப்ப போகனும் ?”
“ஒரு வாரம் லீவ் போட்ருக்கேன் மாமா ப்ராஜக்ட் ரிலீஸ் கேட்டிருக்கேன்.. இங்க சென்னையில் சிப்காட் பக்கம் தான் ஆபிஸ் இருக்கு.. வேற ப்ராஜக்ட் தேடனும்”
“சரி மா.. இப்படி திடீர்னு கல்யாணம் ஆச்சே என்ன பண்றது.. நம்மளை தப்பா நனைப்பாங்களோன்ற பயமெல்லாம் வேண்டாம்.. எங்களுக்கு ஓரளவு என்ன பிரச்சனை தெரியும். அதனால் பயப்படாம ப்ரீயா இரு.. உன் வீடு இது அந்த உரிமையோடு நீ நடந்துக்கனும் சரியா?”
“சரிங்க மாமா”
மீரா “சரி எல்லாரும்  வாங்க சாப்பிடலாம் அப்புறம் பேசிக்கலாம்.. நிவி நீ போய் ரோஷனை கூப்பிட்டு வா மா”
“சரி அத்தை “ 
நிவி மாடியில் உள்ள தங்கள் அறைக்கு சென்று தன் கணவநை தேட அவன் அங்கு இல்லை.. பக்கத்து அறை திறந்திருப்பது போல் தெரிய அங்கு சென்றாள்
ரோஷன் பாபு கேசை தான் ஆராய்ந்து கொண்டிருந்தான்.. தன் உயர் அதிகாரியிடம் கேஸ் முடிந்ததாய் அறிக்கை சமர்பித்து விட்டான் ஆனால் அவனுக்கு பாபு மாதிரி இன்னம் சில பேர் சம்மந்த பட்டிருப்பார்கள் என்று தோன்ற, தனக்கு கிடைத்த தகவல்களை படித்து கொண்டிருந்தான்
அப்போது அங்கு வந்த நிவி கணினியின் திறையில் தன் அண்ணன் புகைப்படத்தை பார்த்து விட்டாள்.. இவள் வரும் அரவம் கேட்டதும் லேப்டாப்பை மூடி வைத்து விட்டான் ரோஷன்
“என்ன டார்லிங் மாமாவை காணும்னு தேடி வந்தியா?”
“என் அண்ணன் பத்தி என்ன டாக்குமென்ட் அது? அவன எந்த கேஸில் உள்ள தள்ள பார்க்குற நீ”
“இங்க பாரு நிவி.. அதை பத்தி உன் கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. நான் யாரையும் உள்ள தள்ள பார்க்கல, தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கும்.. அப்படி நிஜமாவே உன் அண்ணன் மேல தவறு இல்லைனா உங்க அம்மா ஏன் அவனுக்கு உதவி பண்ணாமல் காசி ராமேஷ்வரம்னு சுத்த போறாங்க. வெட்டியா இருக்கும் நேரத்தில் யோசிச்சு பாரு”
“அப்படி என்ன அவன் தப்பு செஞ்சான்?”
“அது சொல்ல முடியாது நிவி.. நீ தாங்க மாட்ட, சரி அத விடு சாப்பிட போலாம் வா”
ரோஷன் முன்னே நடக்க, நிவி அவணை குழப்பத்துடநே பின் தொடர்ந்தாள்
— தொடரும்

Advertisement