Advertisement

தலைப்பு – நீ என்பதே நான் தானடி.. 
நாயகன் – ரோஷன்
நாயகி – நிவியா
சென்னை அடையாறில் உள்ள சிறிய பங்களா அமைதியுடன் காணபட்டது.. வீட்டின் முன் அழகிய தோட்டமும், நடை பயிற்சி செய்ய வீட்டை சுற்றி சிறிய பாதை தவிர்த்து மற்ற இடங்கள் எல்லாம் பச்சை பசேல் என்று இருந்தது, இதற்கு காரணம் இந்த வீட்டின் மூத்த உறுப்பினர் தெய்வ நாயகி பாட்டி தான். தெய்வ நாயகி அந்த காலத்திலே பரத நாட்டியம் பயின்றவர், ஒரு நாட்டிய பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தவர், தன் மகன் ரவிக்கு 3 வயது இருக்கும் போது கணவர் ராசய்யா தவரிட, சொந்த பந்தங்கள் துணையை நாடாது தன்னந்தணியாக தன் பிள்ளையை வளர்த்து ஒரு ஐபீஎஸ் அதிகாரியாக ஆக்கினார். 
காலை 5 மணிக்கு எழுந்த தெய்வநாயகி பாட்டி, பூஜை அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இன்று தன் ஒரே மகன் மற்றும் மருமகளின் 30ஆவது திருமண நாள், அதற்காக சிறப்பு பூஜை செய்ய உள்ளார். சாயங்காலம் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கும் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார் பாட்டி. 
சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த மீரா “ ஏன் அத்தை தனியா பண்றீங்க ? என்ன எழுப்பி இருக்க வேண்டி தானே “
“பரவாயில்லை மா.. நீ காபி கலந்து எடுத்துட்டு வா… நான் இதோ அலங்காரம் பண்ணி முடிச்சிட்டேன். “
இருவரும் காபி குடித்து விட்டு காலை சமையலை கவனிக்க, ஒரு கார் வேகமாக வந்து போற்டிக்கோவில் நிற்கும் சத்தம் கேட்டது..
அத்தை ரோஷன் தான் வந்துட்டான் நினைக்கிறேன். நான் போய் பார்க்கிறேன். 6 மாதம் கழித்து வீடு திரும்பி இருக்கும் தன் மகனை காண ஆவலாய் சென்ற மீரா, செல்ல மகனின் கருப்பு ஆடி காரை பார்த்ததும் மகிழ்ச்சி பன்மடங்காக பெருகியது.
வாசலுக்கு சென்ற மீரா அதிர்ச்சியாகி அதே இடத்தில் நின்றார். சிறிது நேரம் உள்ளே இருந்த பாட்டி, இருவரும் உள்ளே வராததால் வேறு எவரோ வந்துள்ளார்கள் என நினைத்து வந்தவர் தன் பேரனை பார்த்து அப்படியே நின்றார்.
அங்கு ரோஷன் மாலையும் கழுத்துமாக ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்தான். முதலில் சுதாரித்த பாட்டி,
“டேய் ரவீ.. ரவீ.. உன் புள்ள என்ன காரியம் பண்ணி கிட்டு வந்திருக்கான் பாரு… “
தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த ரவி அமைதியாக இருவரையும் பார்த்தவர் , 
“ஏன் டா லேட் ? நேத்தே உன்ன வர சொன்னேன்ல.. வாம்மா நிவியா.. வெல்கம் ஹோம் ?”
“என்னங்க இது ? நீங்க இவ்வளவு அமைதியா பேசறத பார்த்தா உங்களுக்கு விஷயம் தெரியுமா? “
“மீரா.. நம்ம புள்ளைக்கு இன்னைக்கு நம்ம கபாலீஷ்வர் கோவிலில் கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு… மருமக பேரு நிவியா.. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவங்க கல்யாணம் உடனே நடக்க வேண்டியதா போச்சு.. வெளிய நிக்க வச்சு பேசாம ஆரத்தி எடுத்து உள்ள அனுப்பு.. அப்புறம் விலாவரியா சொல்றேன்”
தன் கணவர் கூறியபடி செய்தவர், தன் அழுகையை அடக்கிய படி உள்ளே சென்று விட்டார்.
இதுவரை அமைதியாக இருந்த நிவியா முதல் முறையாக ரோஷனிடம் மென் குறலில் “அங்க நடந்த உண்மையை சொல்லுங்க, இல்லாட்டி நம்ம ஏதோ திட்டமிட்டு வீட்டை விட்டு ஓடி போன மாதிரி சீன் க்ரியேட் பண்ணிடுவாங்க..”
“அதை நான் பார்த்துக்கிறேன்.. உங்க அம்மா சொன்ன மாதிரி என் பேச்சை மட்டும் கேட்டு நீ நட..”
“ப்ப்ச்ச்.. “ சலித்து கொண்டாள். காலையிலிருந்து 10வது முறையாக இதை கேட்கிறாள்.
அதிர்சியுடன் நின்ற பாட்டியின் அருகே நிவியை கூட்டி வந்த ரோஷன்,
“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி “ என காலில் விழுந்தான், நிவியா காலில் விழாமல் இருக்க, அவள் கையை பிடித்து இழுத்து காலில் விழ வைத்தான்.
என்ன செய்வதென்று புரியாதவர் “ நல்லா இருங்கப்பா “ என கூறினார்.
நிவியா “பாட்டி என்ன தப்பா நினைக்காதீங்க.. இந்த கல்யாணம்..” என்று ஏதோ சொல்ல வந்தவளை தடுத்த ரோஷன்,
“பாட்டி.. எங்க லவ் ஸ்டோரியை நான் அப்புறமா சொல்றேன்.. ரொம்ப டயர்டா இருக்கு “ என கூறி விட்டு அவளை  மாடியில் உள்ள தன் அறைக்கு இழுத்து சென்றான்.
உள்ளே வந்ததும் நிவி “ஏன் இப்படி மிருக தனமாய் நடந்துக்குறீங்க? எங்க அம்மா சொன்ன ஒரே காரணத்திற்காக தான் நீங்க சொல்லும் படி கேட்கிறேன்.. எங்க அண்ணன் மட்டும் குணமாகி வரட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு.. உங்க அம்மா எவ்வளவு கஷ்ட படுறாங்க பார்த்தீங்களா?”
“நிவி பேபி எங்க அம்மா இல்லை உன் அத்தை அதாவது உன் மாமியார்”
“பேபியா.. ச்சி என்னை அப்படி கூப்பிடாதீங்க..”
“ஹஹஹா பேபி.. இந்த ஊர் உலகத்தை பொறுத்த வரைக்கும் நாம 2 பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கிட்டவங்க.. அப்படி தான் நான் சொல்ல சொல்லியிருக்கேன்.. அதனால் பேபி, டார்லிங் அப்படி தான் கூப்பிட வேண்டி இருக்கும் “
“நான் எல்லார் கிட்டையும் அப்படி இல்லனு சொல்லிட்டா?”
இது வரை இருந்த விளையாட்டு தனம் மாறி அவன் முகம் கடுமையாக மாறியது 
“இங்க பாரு நிவி, நடந்த ஏதாவது வெளியில் சொன்ன, ஹாஸ்பிட்டலில் இருக்கும் உன் அண்ணன் கதி தான் உனக்கும், மரியாதையா நான் சொல்றதை கேட்டு நட.. “
நிவியா “போடா பொறுக்கி.. “
“ஹஹஹா.. செல்லாக்குட்டி.. உன் புருஷன் பொறுக்கி இல்லைமா.. போலீஸ்.. நீ குளிச்சிட்டு ரெஸ்ட் எடு நான் என் வேலையை முடிச்சிட்டு வந்து பார்க்கிறேன்.. பை.. “ என கூறி விட்டு தன் தந்தையை காண சென்றான்.
மீரா அழுது கொண்டிருக்க ரவி அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது உள்ளே வந்த ரோஷன்
“அம்மா ஏன் இப்படி அழுறீங்க.. உங்க புள்ள மேல நம்பிக்கை இல்லையா ?”
“அப்புறம் ஏன் டா என் கிட்ட கூட சொல்லாமல் இப்படி நடந்து கிட்ட ?”
“அம்மா 30 நிமிஷத்தில் முடிவு பண்ணிட்டேன் கல்யாணம் பண்ணி தான் கூட்டிட்டு வரனும்னு.. அப்பவும் அப்பாவிற்கு ஒரு மெஸேஜ் போட்டுட்டு தான் செய்தேன்”
அவர் திரும்பி தன் கணவரை பார்த்து முறைக்க, 
“என்ன ஏன் டா கோத்து விடுற ? நீயே நடந்ததை சொல்லு”
தன் தாயிடம் நிவியாவை பற்றி கூறி, உடனே கல்யாணம் செய்ய வேண்டிய சூழ்நிலையும் கூறினான்.
“அதெல்லாம் சரிப்பா.. உனக்கு பொண்ண பிடிச்சிருக்கனும்ல? அவளை காப்பாத்த போயி உன் வாழ்க்கையை பணயம் வச்சிட்டையா?”
“ஐயோ மம்மி… நான் 2 மாசத்திற்கு முன் ஒரு பொண்ண பத்தி உங்க கிட்ட சொன்னேன் இல்ல.. அந்த பொண்ணு தான் நிவியா”
“அப்படியா டா”
“ஆமாம் மா. பாவம் அவளும் அவ அம்மாவும், அவ அண்ணன் பண்ணின குற்றதிற்கு இவளுக்கு எதுவும் ஆகிட கூடாதுனு தான் அந்த முடிவ எடுத்தாங்க.. உங்களுக்காக ரொம்ப வருத்தப்பட்டாங்க மா”
“இப்போ அவங்க எங்கப்பா..”
“அவங்க காசிக்கு போயிருக்காங்க மா.. அநேகமா அவங்க திரும்பி வர வாய்ப்பில்லை”
“என்னடா இப்படி சொல்ற?”
“ஆமாம் மா.. அவங்க பையன் ராஜா செய்த குற்றங்களை அவங்களால் ஏத்துக்க முடியலை.. இங்கிருந்தா பிள்ளை பாசத்தில் ஏதாவது செஞ்சிட போறேன் அதற்கு நான் இந்த ஊரில் இருக்க கூடாது என சொல்லிட்டு தான் போனங்க.. இப்போதைக்கு எனக்கு மட்டுமில்ல நிவிக்கும் நீங்க தான் அம்மா.. அவளுக்கு அவங்க அண்ணன் பத்தி எதுவும் தெரியாது.. பெங்களூரில் ஐடி கம்பணியில் வேலை பார்த்திட்டு இருந்தா.. அப்படியே இங்க வர வச்சிட்டாங்க”
இதை கேட்டதும் மீராவிற்கு உறுகி விட்டது.. 
“சரி டா நான் போய் அவளை  பார்த்து விட்டு வரேன் “
“ஹலோ மம்மி ரொம்ப பாசத்தை பொழியாதீங்க, அவ ஒரு டெரர் பீஸூ.. நான் போய் பார்த்துக்குறேன்.. எனக்கு ரொம்ப பசிக்குது முதலில் சாப்பாடு ரெடி பண்ணுங்க” 
மீரா நேரே தன் மாமியாரிடம் சென்று நடந்தவற்றை கூற தெய்வநாயகி பாட்டிக்கும் நிவியாவை பிடித்து போயிற்று.. ஒரு படி மேலாக, தன் பேரன் மீது தனி மரியாதையும் வந்தது.. இருவரும் சேர்ந்து காலை உணவை தயாரிக்க சென்றார்கள்.
தன் அறைக்கு வந்த ரோஷன் , குளிக்க கூட செல்லாமல் அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்த நிவியை பார்த்து,
“டார்லிங் என்ன குளிக்கிற, பல் விளக்குற பழக்கம் எல்லாம் இல்லையா?” அவனை திரும்பி முறைத்த நிவி,
“என் கிட்ட வேற டிரஸ் எல்லாம் இல்லை”
அவன் 2 ட்ராலியை தள்ளி கொண்டு வந்து அவளிடம் கொடுத்தவன், “இந்தா உன் திங்க்ஸ்.. ஹாஸ்ட்டலை காலி பண்ணியாச்சு.. உன் வேலையை சென்னை ப்ராஞ்சிற்கு மாத்திக்க.. இனி நீ என் கூட தான் இருக்க போற..”
“வாட் ?”
“பேபி.. நமக்கு கல்யாணம் ஆச்சு.. நீ வேற ஊரில் நான் வேற ஊரிலா இருக்க முடியும்..”
அவள் திரு திருவென விழிக்க, 
“என்ன ஆச்சு?”
“நீ நிஜமா போலீஸா ? “
“ஆமாம் அதில் என்ன சந்தேகம்”
“அப்ப எங்க ஊரில் நீ வச்சிருந்த கம்ப்யூட்டர் சென்டர்?”
“அப்போ எல்லாம் உனக்கு நியாபகம் இருக்கா ?”
“ம்ம்ம்ம் “
ஒரு மந்தகாச புன்னகை புரிந்தவன்
“அது ஒரு குற்றவாளியை கண்டு பிடிக்க நான் போட்ட டிராமா.. அது என் நண்பன் ஹரீஷோட சென்டர்”
“ஓ ஓகே”
“வேற ஏதாவது கேட்கனுமா?”
“இல்லை.. “
“எனக்கு ரொம்ப பசிக்குது.. சீக்கிரம் ரெடியாகி வரியா? ப்ளீஸ்”
அவள் வேகமாக குளித்து விட்டு ஒரு பச்சை நிற சுடிதாரை அணிந்து கொண்டு வந்தாள். ரோஷன் பக்கத்து அறையில் சென்று குளித்து விட்டு வந்தவன் தன் அறையில் தயாராகி கொண்டிருந்தான். அவளை கண்ணாடி வழியாக பார்த்து “போகலாமா?” என்று கேட்டான்
“ம்ம்ம்”
இருவரும் கீழே நடந்து வர, ஜோடி பொருத்தம் அமோகமாக இருந்ததை பார்த்த மீரா தன் மாமியாரிடம் கண் காட்டினார். இருவர் முகமும்  மகிழ்சியாக இருந்தது
நிவியாவிற்கு மிகவும் தயக்கமாக உணர்ந்தாள். ஏதாவது திட்டி விடுவார்களோ என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது
மீரா “நிவியா இப்படி வாம்மா” அவள் அருகே வந்ததும், நெருக்க கட்டி இருந்த முல்லை பூவை சூடினார்
“நீ பயப்பட தேவையில்லை என்ன உன் அம்மா மாதிரி நினைச்சுக்க.. எதுனலும் என்ன கேளு.. சரியா ?”
“சரிங்க அத்தை”
அவள் அத்தை என்று அழைத்ததே ஆனந்தம் கொடுக்க, 
ரோஷன் “அம்மா உங்க சென்டிமன்ட் சீன் எல்லாம் நாளைக்கு வச்சிக்கங்க எனக்கு பசிக்குது”
“வரேண்டா சாப்பாட்டு ராமா”
அனைவரும் சாப்பிட அமர, நிவி ரோஷன் அருகே சென்று அமர்ந்ததும் மனம் நிம்மதி அடைந்தது தெய்வா பாட்டிக்கு..
சாப்பிட்டு முடித்ததும் தன் அறைக்கு வந்தவள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, ரோஷன்
“நிவி என்ன ஆச்சு ?”
அவள் ஒன்றும் இல்லை என்று தலையாட்ட.. நான் வெளியில் கிளம்புறேன்.. நீ இங்க டீவி பார்க்கிறயா இல்லை அம்மா கிட்ட இருக்கிறியா?”
டீவி பார்க்கிரதா? ஒரு நாளில் என் வாழ்க்கையே தலை கீழாக மாறி போன கவலையில் இருக்கேன்.. இவன் என்ன இப்படி கூலா இருக்கான்.. எங்க அம்மா ஏன் இவன் கிட்ட விட்டுட்டு போனாங்க..
“ஹலோ மேடம் என்ன ட்ரீம்ஸா?”
“ஆ இல்லை… நான் அத்தை கிட்ட போறேன்”
“சரி வா”
நிவியாவை தன் அம்மாவிடம் விட்டு விட்டு தன் புல்லட்டை எடுத்து கொண்டு பறந்தான் ரோஷன்
 —- தொடரும்
 

Advertisement