மலர் 08
“ஹலோ மேடம் அவங்க மூன்று பேரும் என் பிரண்ட்ஸ். நீ வந்தவுடன் அவங்க உனக்கு பிரண்ட்ஸ் ஆகணுமா…? ஊர் உலகத்தில் வேற ஆட்களே இல்லை பாரு… உனக்கு பிரண்ட்ஸ் வேணும் என்றால் றோட்ல எத்தனை பேர் திரியுறானுகள் அவங்கள்ள இரண்டு,மூன்று பேரை ப்ரண்ட்ஸ் ஆக்கி தொலைக்க வேண்டியது தானே. எதுக்கு என் ப்ரண்ட்ஸ்சை ஆட்டையை போடப்பார்க்கிறாய்.”
“ஹலோ நான் ஒன்றும் உங்களை பிரண்ட் ஆக சொல்லி கேட்கவில்லை…. ஓ ஒருவேளை அது தான் உங்களது பிரச்சனை என்றால் நீங்களும் எங்க கூட பிரண்ட் ஆகுறிங்களா… ? போனால் போகட்டும் என்று உங்களை எங்க குரூப்பில் சேர்க்கிறோம்.என்ன? ஓகேயா…? கெளதம் அண்ணா.
“ஓகே நீ சொன்னால் மறுவார்த்தை ஏது…மை டியர் சிஸ்டர்.” என கெளதம் கூறவும் செந்தூருக்கு நித்யா மேல் கொலைவெறி உண்டானது. 
“ஏய்…குண்டுகத்தரிக்காய்,குள்ளவாத்து என்னடி என்னையே கலாய்க்கிறாயா… ?”
அவளை டி போட்டு பேசவும் காண்ட் ஆகிய நித்யா “ஆமாண்டா…  நான் குண்டா இருந்தா உனக்கு என்னடா? உன் வீட்டு காசில சோத்தை போட்டு வளர்த்து விட்ட மாதிரி ரொம்ப பேசாதே… என்ன? “
“டேய் இவளை மரியாதையா கீழே போகச்சொல்லு… “
“இது என் மாமன் வீடு. உனக்கு இருக்கின்ற உரிமை எனக்கும் இருக்கு அதனால் நீ என்னை அங்கே போ…., இங்கே போ… என்று ஓடர் போடாதே…”
“ச்சை… பெண்ணா இது பேய்.. “
“ம்ம் பையனா நீ… கிழவன்.”
இவர்களது சண்டை இப்போதைக்கு நிற்காது என்று உணர்ந்த நண்பர்கள் மூவரும் இடையில் புகுந்து இவர்களிருவரையும் சமாதானம் செய்யவதற்குள் போதும்… போதுமென்றாகி விட்டது. 
“டேய்…செந்தூர் ஏன்டா…?” என நண்பன் கார்த்திக் தலையிலடித்து கொண்டான்.
“பின்னே…என்னடா இவ இப்படி பேசுறா…சரியான பஜாரி.”
“டேய் அவ சின்னபுள்ளடா…”  என மதுரா அவளுக்கு சப்போட்டுக்கு வந்தாள். 
“ம்… இவ…இவ சின்னபுள்ளையா? சரியான ராங்கிகாரி. இவளுக்கு நீ சப்போட்டா…?”
“இல்லடா…நிஜமாவே இவ நம்மள விட ஐந்து வயசு சின்னப்பொண்ணுடா… “
 
“என்ன? வேணும் என்றாலும் சொல்லு மது இவளை பொண்ணு என்று மட்டும் சொல்லாதே…”
“அட உனக்கு நான் பொண்ணு என்று டவுட் என்றால் வீட்டுக்கு வா கிளியர் பண்ணுகிறேன்.”
“பார்த்தீங்களாடா இவ பேச்சையும்,ஆளையும்…”
“இதில் என்ன?  இருக்கு, வீட்டில் பேர்த்சேட்டிபிக்கட் இருக்கு வா காட்டுகிறேன் அதுக்கு தான் வீட்டுக்கு வரச்சொன்னேன்… நீ… என்ன?  நினைத்தாய்.” என அவள் கூறவும், ஒருகணம் செந்தூரும் வாயடைத்து தான் போனான்.
“அடியேய்…! நீ இங்கேயிருந்து போகிறாயா? இல்லையா?” என பல்லை கடிக்கவும் அவனை பார்த்து அடபோடா என்கின்ற மாதிரி துச்சமாக ஒரு பார்வையை பார்தவள் அவனின் நண்பர்களிடம் இனிமையாக விடை பெற்றாள்.  
காய வைத்த வடகங்களை மற்ற பக்கமாக திருப்பி வைத்துக்கொண்டிருந்த தனது அத்தை தென்படவும் அவரை நோக்கி “அத்தை…” என்று துள்ளியோடியவள் சற்று நின்று திரும்பி அவனை பார்த்து நாக்கை துருத்தி காட்டி விட்டு சந்திராவின் அருகில் ஓடிப்போனவள் “அத்தை வாங்க… வாங்க அந்த கொடியவகை மிருகம் நம்மை தாக்க வருகிறது.” என்று கூறியபடி அவரை இழுத்துக்கொண்டு கீழே ஓடினாள். 
கீழே வந்த சந்திரா மூச்சுவாங்க நின்றவளை பார்த்து “என்ன? பட்டுக்குட்டி உன்னை யார்…? என்ன?  சொன்னார்கள்…..? சொல்லு…? நான்போய் நாலு சாத்து சாத்துறேன். “
“ஐயோ…! அத்தை நீங்கள் சாத்தவும் வேண்டாம் மூடவும் வேண்டாம். அந்த குரங்கை அடக்க ஒடுக்கமாக இருக்கச்சொன்னாலே போதும்.”
“யாரை சொல்கிறாய் நித்திம்மா… “
“ம்… நீங்க ஒன்றை பெத்துபோட்டு வைச்சிருக்கீங்க… அந்த தண்டக்கருமாந்தரத்தை தான் சொல்கின்றேன்.”
“ஹேய்…   என்னடி என்புள்ளயை தான் கண்டபாட்டுக்கு திட்டி தீர்க்கிறாயா… ?”
“ஆமாம். அந்த மூதேவியை தான் சொல்லுகிறேன்.”
“அடியேய்… அவன் உனக்கு வருங்கால புருசனாக கூட வர வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. நீ வீணாக வார்த்தையை விட்டு பிறகு கஸ்ரப்படாதே…”என சந்திரா கூறவும், தன் நெஞ்சை பிடித்தபடி அதிர்ந்தவள் அத்தைகாரியை பார்த்து, “அத்தை உன் பையனை நான் கட்டிக்கிற நிலை வந்தால் நான் அப்படியே சன்னியாசம் போனாலும் போவேனே தவிர அந்த திமிர் பிடிச்சவனை நான் கட்டிக்கவே மாட்டேன். உங்க பையனுக்கு அவனைப்போலவே ஒரு மங்கியை பார்த்து கட்டி வையுங்கள். நேரமாகிவிட்டது நான் கிளம்புகின்றேன்.” என்றவாறு ஒரே ஓட்டமாக கிளம்பினாள். 
வீட்டுக்கு வந்தவள் அவள் தந்தையருகே அமர்ந்து, “அப்பா நான் உங்களிடம் ஒரு விடயம் கேட்கட்டுமா…? 
என்ன? என்பது போல அவர் பார்க்கவும், அவள் நிதானமாக ஆனால் தெளிவாக “நான் முன்பெல்லாம் யார்க்கிட்டேயும் இப்படி அதிக பிரசங்கி தனமாய் இருக்கவும் மாட்டேன், பேசவும் மாட்டேன், ஊரில் இருக்கும் போது என்னை பார்ப்பவர்கள், பழகியவர்கள் எல்லோரும் நான் ரொம்ப இனொசன்ட் ,அமைதி என்று தானே செல்வார்கள்.இங்கே வந்த பிறகு என் இயல்பே மாறின மாதிரி எல்லோரோடும் வாயடிக்கிறேன்,எதிர்த்து பேசுகிறேன். என்னாலேயே இந்த மாற்றத்தை நம்பமுடியல்ல. நான் ரொம்ப கெட்ட பொண்ணாயிட்டேனா… ?”
மகளின் கேள்வியில் சிரித்தவர் “அது அப்படியில்லை பாப்பா. நீ இரண்டு வயதாக இருக்கும் போதே அவ்வளவு ‘துரு துரு’ என்று இருப்பாய். இங்கேயிருந்து ஊருக்கு போன பிறகு நீ தனித்து போனாய்.என்னை தவிர யாரோடும் சேர்வதும் இல்லை,இப்போது உன் வயசு பிள்ளைகளை பார்க்கும் போது உனக்குள் இருக்கின்ற உண்மையான முகம் வெளி வருகிறது. இது நல்ல விசயம் தான் அதனால் சும்மா ‘கண்ட கண்ட’ ஆய்வில இறங்கிறதை விட்டு இயல்பாக இரு.”
“சரி அப்பா. அப்போ… நான் சின்ன வயசுல இருந்தே வேற லெவல் என்றீங்க… அப்படித்தானே…! “
“அப்படியேதான்… தாயே…! இப்போது என்னை என் வேலையை செய்ய விடுகிறாயா…?”
“ஆனால் ஒரு விசயம் என்னவென்றால் எனக்கும் இப்படியே இருக்க பிடித்து இருக்கிறது. இனி நான் இப்படித்தான் இருப்பேன் ஓகேவா…” என்று தகப்பனார் காதுகளில் விழும் வண்ணம் கூறிக்கொண்டே தன்னறைக்கு சென்றாள். 
அவள் சென்ற திசையை நோக்கியவர் தன் மகளை இன்னும் கொஞ்சம் லூசாக விட்டிருந்தால் அவள் தனிமை குறைவதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்குமோ… ? என சிந்தித்தவர், இனிமேல் அவள் தனிமையை போக்க தான் முயற்சி எடுக்க வேண்டும் என உறுதி பூண்டார்.
                                  *****
புகழ்பெற்ற சொப்பிங் மால் ஒன்றில் அக்ஷ்சரா பொருட்களை வாங்கி குவித்து கொண்டிருந்தது மட்டுமல்லாது,ஒவ்வொரு பொருளையும் பார்த்து அவற்றின் அழகில் மயங்கி அவற்றை வாங்கும் எண்ணத்தில் விலைகளை பார்வையிட்டவளின் மனது திக்கென்றது. ‘இவ்வளவு விலையா…?,இவற்றை வாங்க முடியாது இவற்றை பார்த்தாவது ஆசையை தீர்க்கலாம்.’ என எண்ணி அந்த விலையுயர்ந்த புதுவகை மாடல் உடைகளை பார்த்து கொண்டே, அவனையும் பார்த்தாள். 
இவள் வெறும் சில பொருட்களை வாங்குவதற்கு பல மணி நேரத்தை கடத்திக்கொண்டிருக்கவும் கடுப்பானான் செந்தூர். ஏனெனில் இவன் இதுவரையில் தன் தாய், சகோதரிகளுக்காக கூட இவ்வளவு நேரம் செலவழித்ததில்லை. அப்படிப்பட்டவனை காதலிக்கின்றேன் என்று சொன்னதற்காக இழுத்தடித்து கொண்டிருக்கிறாள் ஒருத்தி என நினைக்க, நினைக்க கட்டுக்கடங்காமல் வந்த கோபத்தை  கட்டுப்படுத்தியவன் அவளருகில் குனிந்து “அந்த ரெஸ்சை எடுப்பதானால் எடு இல்லை என்றால் கிளம்பு உன் கூட சுத்துகிறேன் என்பதற்காக நீ நினைத்தபடி நடப்பேன் என்று அர்த்தமில்லை.” என இறுகிய குரலில் கூறினான். 
அவனது இறுக்கம் பார்த்து மனதினுள் திகிலடைந்தவள் இவனை பகைப்பது தன் வருங்காலத்தையே பாதிக்கும் என்று உணர்ந்தவளாக “ஓகே டார்லிங்…. போகலாம்  சும்மா தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என கூறி பில் போடும் இடத்தை நோக்கி நகரவும் அவளை தடுத்து இந்தா கிரடிட் காட் பில் செட்டில் பண்ணி விட்டு வா காரை வெளியில் எடுத்து ஃபாக் பண்ணுகிறேன் என்றவன் வெளியே செல்லவும், ‘இவன் கணக்கு பார்க்க மாட்டான் போல’ என நினைத்தவள்,தான் முதலில் ஏக்கத்துடன் பார்த்த உடையை நோக்கி ஒடியவள் அதையும் எடுத்து இன்னும் மூன்று நான்கு செட் அதிக விலை உயர்ந்த உடைகளையும் எடுத்துக்கொண்டு பில்போடும் இடத்துக்கு அவசரஅவசரமாக ஓடி போய் பில் போட்டு பணத்தை செட்டில பண்ணிக்கொண்டு வாசலை நோக்கி ஓடியவள் அவனது காரை கண்டுகொண்டு அவனருகில் செல்லவும்,அவனது ஃபோனுக்கு மெசேஜ் ஒன்று வந்தது அதை ஓப்பின் பண்ணலாம் என  ஃபோனை கையில் எடுக்கவும் அவள் கார்க்கதவை திறந்து உள்ளே ஏறினாள் அவன் ஃபோனை வெளியே எடுக்காது பான்ட் பாக்கெட்டினுள் வைத்து விட்டு காரை எடுத்தான். 
அடுத்ததாக  பைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள் சென்று அங்கே சில பல உணவுகளை ஆடர் பண்ணி விட்டு காத்திருக்கையில் அவனருகே அமர்ந்திருந்தவள் அக்கம் பக்கம் திரும்பி பார்த்து விட்டு எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு “சாரி”  என்றாள்.
அவன் எதற்கு என்பது போல புருவம் சுருக்கவும், “உங்களை காக்க வைத்ததற்கு” என்றாள். 
அவளது செய்கையால் சற்று இளகியவன் அவளது இடையில் கை வைத்து தன்னருகே இழுத்தான். அவனின் உடலில் அவளது செழுமைகள் படவும் உடல் சூடாகியவன் அவள் காதினுள் முத்தமிட்டு இரகசியம் பேசவும் அவளும் சம்மதம் என்பது போல் தலையசைத்தாள். 
இதற்கு மேல் அங்கே இருக்க பிரியப்படாமல் ஆடர் செய்த உணவுகளை பார்சல் செய்து எடுத்துக்கொண்டு கிளம்பினர் அவனது கெஸ்ட்ஹவுசுக்கு. 
இரவு முழுவதையும் அவனுடன் கழித்தவள் காலையில் கண்விழித்து பார்த்த போது அவன் தன் ஜிம்மில்  வியர்வை வடிய வேக்கவுட் செய்து கொண்டிருந்தான். 
இவனுக்கு களைப்பே இல்லை போல என நினைத்தவள் ப்ரஷ்அப்பாகி அவனருகே வரவும் அவனும் துவாலையால் வியர்வையை துடைத்தபடி, காற்றுப்படுமாறு வெளியே போடப்பட்டிருந்த மூங்கில் கதிரையில்  அமர்ந்தான். 
 அருகே வந்தவளது கையை பற்றி இழுக்கவும், அவன் மடியில் வந்து விழுந்தவள் தன் இரு கைகளாலும் அவன் கழுத்தை வளைத்து தன் விழிகளை அவன் விழிகளுடன் உறவாட விட்டாள். 
அவள் விழிகள் அத்தனை அழகு இல்லை எனினும் அதில் இச்சை வழிந்து அடுத்த தடவை உறவுக்கு தயார் என்பதை காட்டவும், அவள் இடையை இறுக்கியபடி தன் விழிகளையும் அவள் விழிகளுடன் உறவாட விட்டவனது உதடுகள் மட்டும் பேசின. 
“சொல்லு எப்போது கல்யாணத்தை பண்ணலாம். “
இவன் கேட்டது அவளுக்கு கிலியை ஏற்படுத்தினாலும் வெளியே காட்டிக்கொடுக்காது சமாளித்தவள் இருந்த நிலையில் இருந்தாலும் உணர்வுகள் வடிந்த நிலையில் “எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று பண்ணமுடியாதல்லவா டியர். வீட்டில் எல்லோருடனும் பேசி, சமாளித்து ஓகே பண்ண வைக்க வேண்டுமல்லவா?  அது மட்டுமன்றி என்னுடைய அப்பா வெரி ஸ்ரிக்ட்.” என்றாள். 
இவளது பேச்சில் இன்னமும் கடுப்பானவன் “உன் அப்பா ஸ்ரிக்ட் என்று நேற்று இரவு மாட்டர் பண்ணும் போது உனக்கு மறந்து   இருந்ததோ… ! நீ என்ன? நினைக்கிறாய் நான் கேனையன் என்றா…?நான் உன்னை கல்யாணம் பண்ண தான் கேட்டேன். கழட்டிவிடுவதற்கு இல்லை. பட் வன் திங் அக்ஷ்சரா கல்யாணம் பண்ணுவதால் உன் கேரியர் பாதிக்கும் என்று நினைக்கிறாயா… ?”
“பெண்கள் முன்னேறுவது தடுப்பவன் நான் அல்ல கல்யாணத்துக்கு பிறகு உன் கேரியர் தொடர்ந்து செய்வதற்கு நான் உனக்கு சப்போட் பண்ணுகிறேன். இதில மறுப்பு சொல்ல என்ன?  
இருக்கிறது. “
‘தமிழ் சினிமாவில் கல்யாணமான பெண்கள் உச்சம் பெறுவது அபூர்வமான விடயம்.இவனை இப்போது கல்யாணம் பண்ணினால் சினிமா என்பது அவளுக்கு இல்லை என்றே ஆகி விடுமே…’ என நினைத்தவள் இப்போது  கல்யாணத்துக்கு என்ன? அவசரம் டியர் நமக்கு வயசும் நிறையவே இருக்குதே…! எனக்கு இப்போது சினிமா வாய்ப்புக்களும் வந்திருக்கிறது…! அதனால் அதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு ஐந்து வருடம் கழித்து கல்யாணம் பண்ணலாம். அதுவரைக்கும் நாம் லிவிங் றிலேசன்சிப்ல இருக்கலாமா… ? டியர். 
“நீங்க கூட பெரிய மல்ட்டி மில்லியனர். அதனால் நான் நடிக்கும் படங்களை ப்ரொடியூஸ் பண்ணினால் இலாபம் இரண்டு பேருக்கும் வருமே…! அதனால் உங்களுக்கு சேர வேண்டிய சொத்தெல்லாவற்றையும் உங்கள் அப்பாவிடம் கேளுங்களேன். “
இவள் பேசப்பேச அவன் கண்கள் சிவந்து அவனது சிக்ஸ்பேக் பாடி இறுகியதை அவள் கவனிக்காது தன் கனவுகளை கூறி முடிக்ககவும் 
ஆஆ…என்ற கூச்சலோடு அவளை நிலத்தில் முழுப்பலங்கொண்டு தூக்கியெறிந்திருந்தான்.
“இதுக்கு உன் அப்பன் ஒன்றும் சொல்ல மாட்டானோ…. !” என்று கர்ஜித்தவன் உள்ளே சென்றான்.