Advertisement

மலர் 04
அவளது எக்ஸாம் எல்லாம் இன்றோடு முடிந்து விட்டது. ஆனால் இன்று நடந்த அதிர்ச்சி சம்பவமே அவளின் உடல், மனம் இரண்டையும் அலக்கழிக்கச்செய்வதாய் இருந்தது. 
வீட்டுக்குள் நுழைய போனவள், அவள் வீட்டு வாசலில் நின்ற அந்த ஆவுடி கார்,அவளது வேகத்தை குறைத்து நிதானித்திருந்தது. 
‘இவ்வளவு பெரிய கார் நம்ம வீட்டுக்கு முன்னாடி நிற்கிறதே…! யாருடையதாக இருக்கும்.ஒருவேளை யாரும் வீடு மாறி வந்து விசாரிச்சிட்டு இருக்கலாம். ‘என நினைத்தவவள்,  ‘சரி யாராக இருந்தாலும் போய் பார்க்கலாம்’. என்றவாறு உள்ளே சென்றாள். 
உள்ளே சென்றவளின் காதுகளில் தனது தந்தையின் சிரிப்புச்சத்தம் கேட்கவும் தயங்கி நின்றாள். 
‘என்னடா இன்று எல்லாமே வழமைக்குமாறாக நடந்து என்னை ஆச்சரியப்பட வைக்கின்றதே…! என்னுடைய அப்பாவா இப்படி சிரிப்பது. அவர் இப்படி சிரித்தே பல வருடங்களாகி விட்டதே… ! அம்மாவின் துரோகத்திற்கு பிறகு அதுவுமில்லை. அவளிற்கு தன் தாயாரை நினைத்தும் பற்றிக்கொண்டு வந்தது. இப்பொழுது எதற்கு கண்ட நினைவுகள் என உதறித்தள்ளினாள். 
தனது அப்பா இத்தனை வருடத்திற்கு பின் இன்று மனசு விட்டு சிரிப்பதை பார்த்தவளிற்கு, அதற்கு காரணமானவரை கண்ணால் பார்க்க முன்னரே பிடித்திருந்தது. 
அந்த நல்ல உள்ளம் படைத்தவரை பார்பதற்காக உள்ளே சென்றவளை கண்ட அவளது தந்தை, “ஏய்…நித்தும்மா…வந்துட்டியா? வா… வா.நீ வர லேட்டாகும் என்று நினைத்தேன்.” 
“ஆமாப்பா…எக்ஸாம் முடிந்தவுடன் சீக்கிரமாக வந்துவிட்டேன்.”
அவர்கள் இருவரையும் ஆர்வமாக பார்த்த சுப்பிரமணியனைப்பார்த்து,  “டேய்… இவ தான் என் பொண்ணு.”
“ஆமாடா…சின்ன குழந்தையாக இருக்கும் போது பார்த்தது. இப்போது நன்றாக வளர்ந்து  விட்டாள்.” என்றார் சுப்ரமணியன். 
“அப்போது என்னை முதலே தெரியுமா?  அங்கிள். “
ஆமாம்… என்பது போல தலையாட்டியவர் ஏதோ சொல்ல வந்து விட்டு மெளனமானார். 
“அங்கிள் இருங்க ரீ கொண்டு வருகின்றேன்.” என்றவள் உள்ளே சென்றாள். 
அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்ந சுப்ரமணியனை கண்ட மார்க்கண்டேயன், “டேய்… நீ யாரென்று அவளுக்கு தெரியாது. அவளுக்கு சந்தேகம் வராமல் நடந்து கொள்,” என்றார். 
உள்ளே சென்று ஐந்தே நிமிடங்களில் ரீ கொண்டு வந்தவள் இருவருக்கும் அதை கொடுத்து விட்டு தள்ளி நின்றாள். 
“என்ன? நித்தி யோசனை? “என்றார் சுப்ரமணியன். 
“ஆ… அது…வந்து” என அவள் இழுக்கவும், “நான் சொல்லட்டா… நான் யார்? என்று தானே யோசிக்கின்றாய்.”
அவள் கண்களில் ஜொலிப்புடன் “ஆமா… அங்கிள்… எப்படி கண்டு பிடித்தீர்கள். “
“அது நீ இப்படி ‘திருதிரு’ என முழிப்பதை பார்த்தே என் நண்பன் கண்டு பிடித்திருப்பான். ”                        என்றார் மார்க்கண்டேயன். 
“இல்லையேடா… நான் வரும் போதெல்லாம் நித்தி ஸ்கூல், காலேஜ் என்று போய் விடுவாள். இப்போது தான் இவளை பார்க்க வேண்டும் என்று விதி போல.”
“அப்போது நான் இல்லாத நேரத்தில் தான் வருவீர்களா?அங்கிள். அப்படி என்றால் இன்றோடு என் காலேஜ் லைஃப் முடிஞ்சு போச்சு… நீங்க இனி நான் இருக்கிற நேரத்தில் அடிக்கடி வரணும்.”
“ஓகே குட்டிம்மா… நீ சொல்லி விட்டாயல்வா இனி அடிக்கடி வந்து உன்னை பார்க்கிறேன். “
“இல்ல…  அங்கிள் நீங்க வந்ததால் தான் இன்று அப்பா இப்படி வாய் விட்டு சிரிப்பதை பார்த்தேன்… ” என்றவளிற்கு கண்கள் கலங்க,மற்ற இருவரும் ஸ்தம்பித்து போய் நின்றனர். 
“சரி… சரி அழாத குட்டிமாமா. இனி ஒவ்வொரு நாளும் உன் அப்பனை நான் சிரிக்க வைக்கின்றேன் அதை நீ பக்கத்தில் இருந்து பார்க்கிறாய்… .ஓகே. “
“ஆமாடா…நீ உன் அத்தனை வேலை எல்லாம் போட்டது,போட்டபடி ‘விட்டுவிட்டு’ வந்து என்னை சிரிக்க வைக்க போறியா…? அப்போது உன் வேலையை யார்? பார்க்கிறது. “
“அதுவும் சரி தான். ஆனால் அதுக்கு ஒரு வழி இருக்கிறது… நீ ஒத்துக்கொள்ள  மாட்டாய். “
“எனக்கு உடன்பாடில்லாத முடிவுகளை என் நண்பன் எடுக்க மாட்டான் என்று தெரியும்…. இருந்தாலும் என்ன முடிவு என்று நான் தெரிந்து கொள்ளலாமா? “
“அது தானே பார்த்தேன் நீயாவது உன் தோட்டம்துரவு எல்லாத்தையும் விட்டு வருவதாவது…” என்று சிரித்தார் சுப்ரமணியன்.
“சரி அங்கிள் நீங்கள் சொல்ல வந்த விடயம் என்னவென்று சொல்லவில்லையே… !”
“சொல்கின்றேன்….முதலில் நான் கேட்கும் கேள்விக்கு பதில் செல்லு… “
“என்ன கேள்வி அங்கிள். “
“உனக்கு இன்றோடு காலேஜ் முடிந்து விட்டது.இனி என்ன செய்வதாக உத்தேசம்.”
“றிசல்ட் வரும் வரை அப்பா கூட ஜாலியாக தோட்டத்துக்கு போவேன்,தண்ணீர் விடுவேன் பம்பு செட்டில் குளிப்பேன்.முக்கியமாக நானே சாப்பாடு  கொண்டு போய் அப்பாக்கு கொடுப்பேன்…அப்புறம் பூசணி கூட விளையாடுவேன்.”
“அது யாரு பூசணி? பக்கத்து வீட்டு குழந்தையா? 
“இல்லை அங்கிள் முந்தாநாள் தான் அது பிறந்தது. “
“அப்படியா… யாரு அது? “
“அது ஆட்கள் இல்லை அங்கிள். ஆட்டுக்குட்டி. எவ்வளவு கியூட் தெரியுமா? கண்ணை ‘உருட்டி உருட்டி’ பார்க்கும் போது இன்னும் செமயா இருக்கும். “
அவள் அடுக்கி கண்டு போவதை பார்த்த அவளது தகப்பன், “போதும்…போதும்… நீ இப்படி வேற கனா காண்றியா…? அப்படி எண்ணம் இருந்தால் அதை அப்படியே மூட்டை கட்டி வைத்து விட்டு,றிசல்ட் வரும் வரை ஆடிற்ரிங் பண்ணுவதற்கு அசிஸ்ரன்ட்ராக ஆறு மாசம் ரெயினிங் போவதற்கு எனக்கு தெரிந்தவரிடம் கேட்டு வைத்திருக்கின்றேன். இன்னும் ஒருகிழமை கழித்து நீ அவங்க கம்பெனியில் சேர வேண்டும் தயாராகு.”
“அப்பா… அதுக்கு இப்போது என்ன அவசரம்.”
“நீ இப்போது ரெயினிங் போனால் தான் றிசல்ட் வரும் நேரத்தில் நல்ல வேலை,நல்ல சம்பளத்துடன் கிடைக்கும் கண்ணு. “
“சரி… அப்பா உங்கள் விருப்பம் எதுவோ? அது போலவே நடக்கின்றேன்.” என்றாள் அமைதியாக. 
“என்ன? அப்பாவும்,பொண்ணும் பேசி முடிச்சா…நான் என்ன?  சொல்ல வருகிறேன் என்றும் கொஞ்சம் கேட்கலாமே… “
“அட…ஆமாம் அங்கிள் நீங்களும் முதல்லில் இருந்தே ஏதோ சொல்ல வருகிறீர்கள், நாங்கள் அதை கேட்காமல் எங்கள் பிரச்சனையில் உழன்று கொண்டிருக்கிறோம்… சரி… அங்கிள் நீங்கள் செல்லுங்கள். “
“இதுவும் உங்களது பிரச்சனை தான்… நித்தி நீ என்னுடைய கம்பனியில் வந்து ரெயினிங் செய்.”
“அது… அங்கிள் அப்பா என்ன? சொல்கிறாரோ அதன்படி தான் நடப்பேன்.”
“டேய்…சுப்பிரமணி என் பெண்ணை அனுப்பி விட்டு, நான் எப்படி தனியாக இருப்பேன். “
“உன்னை யார்? இங்கே தனியாக இருக்க சொன்னது.நீயும் உன் பெண்னோடு அங்கே வா. உன் தோட்டத்தை கொத்தாமல்,கிண்டாமல் அதை கொஞ்ச
நாளைக்கு நிம்மதியாக விடு…இப்படியே எத்தனை நாள் தான் இப்படியே இருக்க போகிறாய். உன் பெண்ணுக்காக வெளியே வா.”
“இல்லடா… அது சரி வராது நித்தி உன் கம்பனியில் வேலை செய்கிறது எல்லாம் சரி வராதுடா… “
“ஏன்… ? என் கம்பனியில் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பிற்கோ,வசதிக்கோ என்றும் குறை வர விட்டதில்லை.ஆனால் அப்படிப்பட்டவன் நான். உன் மகளை என் மரும… என்று கூறி சுதாகரித்து கண்டு நன்றாக பார்க்க மாட்டேனா? அப்படி என்றால் நீ என்னை நண்பன் என்று சொல்லுவது வெறும் வாய்வார்த்தைக்கு தானா?”
“இல்லை… அப்படி இல்லை.நான் அப்படி நினைக்கவில்லை. நித்து தனிய இருக்க வேண்டுமே…!”
“உனக்கு உன் மகளை என் கம்பனிக்கு அனுப்ப பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லு…அதை ‘விட்டுவிட்டு’ நொண்டிச்சாக்கு சொல்லாதேடா. நித்தி வந்தால் எனக்கும் ஒரு நம்பிக்கையான ஆள் கிடைத்தது என நிம்மதி இருக்கும்டா. எனக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கும் என நினைத்தேன். உன் வீட்டில் இருந்து என் வீடு நீண்ட தூரம் பார்… என்ன? ஒரு… ஒருமணித்தியாலம் வருமா? இவ அவ்வளவு தூரம் காலேஜ்ச்சுக்கு வர்ற உன் மகளுக்கு பக்கத்தில் இருக்கும் என் கம்பனிக்கு வருவது கஸ்ரம் தான்.”
“ச்சு…போடா…. என் பிரச்சனை விளங்காமல்,இவ்வளவு நாளும் இவ போய் வரும் வரை வயித்துல நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போலிருக்கும்.அதனால் தான் இப்போது ரெயினிங் அருகில் இருக்கும் படியாக இருந்தால் நன்றாக இருக்கும். “
“உன் மகளை நான் பார்த்து கொள்ள மாட்டேனா? இது தெரிந்தால் உன் தங்கை எவ்வளவு சந்தோசப்படுவாள். அவள் பார்த்துக்கொள்ள மாட்டாளா? “
“என்னை நீ புரிந்து கொள்ள மாட்டாயா சுப்பிரமணி. “
“உன்னை நன்றாக புரிந்ததால் தான் கேட்கின்றேன்,எத்தனை நாளைக்கு வயசு பிள்ளையை வைத்துக் கொண்டு இப்படியே ஒழிந்து மறைந்து உன் முகத்தை ஊருக்கு காட்டாமல் ஒழித்து கொள்வாய்.நாளைக்கு அவளிற்கு கல்யாணம்,காட்சி என்று எதுவும் நடாத்த வேண்டாமா ? “
இதெல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த நித்யா திடீரென்று எழுந்து வந்து தந்தையை கட்டிக்கொண்டு “நான்   யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். என் அப்பாவை விட்டு எங்கேயும் போட மாட்டேன். ” என்றாள். 
      
   
  
    
   
 
  
   

Advertisement