Advertisement

மலர் 03
அவள் ஓடிய திசையை பார்த்து தோளை குலுக்கியவன் தன் காரை பின்பக்கமாக திரும்புவதற்காக முனையும் முன்னர் அவளிருந்த சீற்றை திரும்பி பார்க்க, சீற் இடுக்கினுள் செயின் போல ஏதோ ஒன்று மின்னவும் தன் சீற்றை பின்பக்கமாக வளைத்து அதை எட்டி எடுத்தான். 
அவன் கையினுள் இருந்த தங்க சங்கிலியை சுழற்றி பார்த்தவன், அப்படியே சரிந்து வைத்திருந்த தன் சீற்றில் சாய்ந்த வண்ணம் அந்த செயினை மறுபடியும் சுற்றி பார்த்த வண்ணம் இருந்தவனுக்கு செயினில் இருந்த லாக்கட் தட்டுப்படவே அதை திறக்கலாமா? வேண்டாமா?  என நினைத்தவன்
‘சரி இவ்வளவு ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம்டா செந்தூர்’ என மனம் அடித்துக் கொண்டாலும் அவனது கைகள் அந்த செயினின் லாக்கட்டை திறந்து பார்த்தது. 
அதற்குள் அந்த செயின் காரியை போல சாயலுள்ள ஒரு பெண்ணின் படம் இருந்தது. அதை கையில் வைத்து சுழற்றியவன், காரை சைட் எடுத்து காலேஜ் அருகில் இருந்த பெரிய மரத்தடியின் கீழ் நிறுத்தி விட்டு அப்படியே சார்ந்து அமர்ந்திருந்தான்.
எக்ஸாம் ஹோலுக்குள் உள்ளே சென்று அமரந்தவளின் ‘படபட’ப்பு குறையாத வண்ணம் இருந்தவள் அந்த உணர்வோடே தன் பரீட்சையை எழுதி முடித்து விட்டு விரைவாக நடந்து வெளியே வந்தவள் அப்படியே அதிர்ந்து நின்றாள். 
‘இவன் ஏன்? இன்னும் போகாமல் நிற்கின்றான். இவனை நல்லவன் என்று நினைத்தேன்.இவன் என்னடா என்றால் எல்லோரையும் போல என காட்டுகின்றானே?’ என நினைத்தவள் அவனை கண்டும் காணாதது போல போய் விடுவோம் என அவனை தாண்டி செனறவளின் பின்னால் விசில் சத்தம் கேட்கவும் அதனையும் பொருட்படுத்தாது அவள் நடந்தாள். 
கார் மீது ஸ்ரைலாய் சாயந்து நின்றவனிற்கு அவளது நடவடிக்கை விசித்திரமாக இருக்கவும் அவன் அவளைப் பார்த்து,  “குண்டுமணி… .ஏய் புள்ள பாங் வாசல்ல அழுதுகிட்டு நின்ற குண்டு… மணி…” என அழுத்தம் கொடுத்து அழைக்கவும் அவள் கால்கள் தானாக நடையை நிறுத்தின.
அவள் நின்று திரும்பி பார்க்கவும் “இங்கே வா” என கையசைத்தான். 
அவள் அருகில் வந்து,அவனைப்பார்த்து “சார்… நீங்களா?  நான் உங்களை கவனிக்கவில்லை…!”
“ஆமாம்… ஆமாம்… நீ என்னை பார்த்து விட்டு பார்க்காதது போல போனதை பார்த்து கொண்டு தான் இருந்தேன்… ” என்றான். 
“ஈஈஈஈஈஈஈஈஈஈ” என அசடு வழிந்தவள் 
“நீங்கள் வேலைக்கு போகமல் ஏன் இங்கேயே நிற்கிறீர்கள்.” 
“என்னது வேலையா? என்ன?  வேலை? நான் எல்லாம் வேலை செய்யவில்லை என்றால் யாருக்கு நஸ்ரம்”
அவள் தன் பையை திறந்து, அவன் வாங்கி கொடுத்த மருந்துக்கும், சுடிதாரிற்குமான பணத்தை எடுத்து “சாரி… சேர் நான் நீங்கள் வாங்கி கெடுத்த பொருட்களிற்கு பணம் தராமல் போய்விட்டேன். நீங்கள் வேறு வேலை இல்லை என்றெல்லாம் கூறுகிறீர்கள், அப்புறம் உங்களுக்கு பணம் தட்டுப்பாடு ஆக நான் காரணமாய் இருக்க கூடாதல்லவா?” என்றவாறு பணத்தை அவன் முன் நீட்டினாள். 
“செம விவரம் தான் போ…”  என்றவன் அவளை பார்த்து “நீ எப்பவும் இப்படித்தானா? இல்லை அப்பப்போ இப்படி மாறுவாயா?  என்றான். 
அவள் அதற்கு பதில் சொல்லாது பேசாது இருக்கவும் “ஓகே பணத்தை கொடு.” என்று வாங்கியவன் அவள் கொடுத்த பணத்தை பார்த்து திகைத்து நின்றான். 
ஏனெனில் அவள் அவனிடம் கொடுத்திருந்தது பத்து, இருபது,ஐம்பது என தாள் காசுகளுடன் ஒன்று, இரண்டு,ஐந்து என குற்றி நாணயங்களும் சேர்ந்து அவன் இரு கையும் நிரம்பி வழிந்தது. அவற்றை கார் போனற் மீது வைத்தது விட்டு அவளை பார்த்தான். 
“என்ன? சேர் என்னை பார்க்கிறீர்கள்.பணம் சரியாக இருக்கிறதா? என எண்ணிப் பாருங்கள்.” என்றாள். 
‘இதில இதுவேறயா?’ என நினைத்தவன் அவளது ஆசையை ஏன்? கெடுப்பான் என்று எண்ணிப்பார்த்தான.அதில் இரண்டாயிரத்து இருநூற்று பதினெட்டு ரூபா இருந்தது. 
அவன் அந்த தொகையை சொல்லவும்,அவள் “சார் உங்களுக்கு நான் இன்னும் எவ்வளவு தர வேண்டும் என்று சொன்னால்… .” என அவள் இழுத்தாள். 
“சொன்னால் உடனே தந்து விடுவாயா? என்றவன் சரி…  விடு.அவ்வளவு பெரியபணக்காரியா? நீ? நிறைய பணம் வைத்திருக்கிறாயே…!”
“இல்லை மூணு மாசம் சேர்த்த பாக்கெட் மணி.நீங்கள் வாங்கி கெடுத்த சுடி ரொம்ப விலை என்று தெரியும்.ஆனால் அந்த பணத்தை இன்னும் மூன்று மாதத்தில் எப்படியாவது தந்துவிடுவேன்.” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்தபடி. 
“எப்படி?  நான் உன்னை நம்புவது. இப்போது போல் கண்டும் காணாதது போல் நீ?  போனால்…”
“இல்லை சேர்… நான் தப்பாக நினைத்து… என்றவள் சாரி சார் நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். நீங்கள் உங்களது பாங் எக்கவுண்ட் நம்பர் கொடுங்கள் போட்டு விடுகின்றேன்.” என்றாள்.
“அது இருக்கட்டும். இரண்டு லட்சத்தை கொண்டு வந்து பாங்ல உன் பேர்ல போடுற அளவுக்கு நீ பெரிய அப்பாடக்கரா… ?”
“இல்லை அப்பா வாழைக்குலை விற்ற பணம்…”என்று தகப்பன் கெடுத்து விட்டதை சுருக்கமாக கூறி முடித்தவள். “சார் தப்பாக நினைக்க வேண்டாம்.நான் வேலைக்கு போன பின்னால் உங்களுடைய மீதி பணத்தை தரட்டுமா? என்றாள். 
அவளது முகத்தை பார்த்தவன் என்ன? நினைத்தானோ? தெரியவில்லை. “சரி இந்த காசையும் எடு அப்புறம் வேலைக்கு போன பிறகு கொடு என்று, அவள் மறுக்க மறுக்க அவளிடம் கொடுத்தவன் அவளது செயினையும் எடுத்து அவளிடம் நீட்டினான். 
இவள் இரண்டு கைகளிலும் காசோடு நிற்பதை பார்த்தவன் அவளது செயினை கழுத்தில் போட்டு விடவும் அவள் திகைத்து நின்றாள். 
அவளது திகைப்பை கண்டவன், “ஹலோ மேடம் நான் ஒன்றும் உனக்கு தாலி கட்டவில்லை. உன்னுடைய செயினை உன்னிடம் தந்தேன், நீ…கையில் காசுகளை நிரப்பி வைத்திருந்ததால் போட்டுவிட வேண்டி இருந்தது. இதற்காக தான் இவ்வளவு நேரம் நான் நின்றதே… !” என்றான். 
‘அவளுக்கே இருந்த ‘பரபர’ப்பில் கழுத்தில் செயின் இல்லாதது தெரியவில்லை… ! ஆனால் அவன் அதை அவளிடம் கொடுப்பதற்காக நின்றிருக்கிறான். நல்ல வேளை…. அம்மாவின் படம் டொலருக்குள் இருக்கின்றது. வேறு எங்கேயாவது விழுந்து யாராவது திருடி இருந்தால்…’ என்று நினைக்கும் போதே அவள் கண்கள் கலங்கின.அவள் பணத்தை பைக்குள் வைத்து விட்டு தனது செயினை கைக்குள் இறுகப்பற்றினாள்.
“ரொம்ப…ரொம்ப…  நன்றி சேர்.” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. 
“ஹேய்… குண்டுமணி… அழாதே…”என அவள் கண்ணீரை தன் கர்ச்சிப்பால் துடைத்து விட்டவன்,அவளது அழுகை குறையவும் அவளைப்பார்த்து புன்னகைத்தவன் “நல்ல வேளை நீ அழுவதை நிறுத்தி விட்டாய் இல்லை என்றால் பார்ப்பவர்கள், நான் உன்னை ஏதோ செய்து விட்டேன் என நினைத்து இப்போது என் முதுகில் டின் கட்டியிருப்பார்கள். ” என்றான். 
“நீங்கள் என்னை எதுவும் செய்யவில்லை சரியா? “
“அதெப்படி நீ அழுத்தும் பார்க்க நல்லா இருக்கிறாய்,சிரித்தாலும் அப்படியே…” என்றான். 
“எனக்கொன்றும் அப்படி தெரியவில்லையே…  என்றவள் ஒகே சேர் வருகின்றேன் பஸ் வருகிறது.” என்று கூறி அவள் பஸ்சை நோக்கி சென்றாள். 
‘தன் அழகையை கவனிக்காமல் குண்டு பேபியை போல் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.’ என நினைத்தவன்  காருக்குள் ஏறி காரை வீட்டை நோக்கி கிளப்பினான். 

Advertisement