Advertisement

மலர் 19 
அட்றா… சக்கை. என் மருமகன் என்றதை காட்டியாச்சு… இந்த கெத்து எனக்கு பிடிச்சிருக்கு… . ஆனால் என் மகளுக்கு பிடிக்கணும் இல்ல. என் மக மனசை யார் கொள்ளை அடிக்கின்றானோ…? அவன் தான் என் எனக்கு மருமகனாக முடியும். ஏற்கனவே அவளும், நீங்களும் எலியும், பூனையும் மாதிரி அடிச்சுக்கிறீங்க… இதுவே வாழ்க்கை முழுவதும் நீண்டால் வாழ்க்கை சலித்துப்போய்விடும். என்மக உங்கள் விடயத்தில் தீயா…? இருக்கின்றாள். உங்கள் பெயரைக்கேட்டாலே கடல் கொந்தளிப்பது போல் கொந்தளிக்கிறாள். முதல் உங்கள் விருப்பத்தை அவகிட்ட சொல்லுங்க மாப்பிள்ளை. அவ மனசும் உங்களை விரும்பினால் ரொம்ப சந்தோசம்.” என கூறியவர் அருகில் இருக்கும் பாங் அருகே நிறுத்தச்சொல்லவும் அவன் பாங் அருகே காரை நிறுத்தினான். 
மாப்பிள்ளை பத்து நிமிடத்தில் வந்து விடுவேன் என்றவர் இறங்கி பாங்கிற்குள் சென்று மறைந்தார். அவன் போன பின்பு தான் அவன் சுற்றுப்புறத்தை கவனித்தான். அவ் இடத்திற்கு இரண்டு மூன்று முறை தான் வந்திருந்தாலும் கடைசியாக அவன் வந்தபோது நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தவன் அதிர்ந்தான். ஏனென்றால் அவன் காப்பாற்றிய பெண் நித்யா, இந்த மாட்டரை இவன் எப்படி மறந்தான்.
அது தான் அவள் அவனை முதல்முதலாக பார்த்த போது தெரிந்தவரோடு பேசுவது போல அவனுடன் புன்னகை மாறாமல் அவனோடு கதைப்பதற்காக வந்தாள். ஆனால் அவனுக்கு இருந்த ரென்சனில் அவளை நினைவிருந்தால் தானே… ! “சிட்…” என்றவாறு தன்கையால் ஸ்ரேறிங்வீலை ஓங்கிக்குத்தினான். 
அவன் செய்வதறியாது தன் அலையலையான கேசத்திற்குள் தன்விரல்களால் கோதியவன் அப்படியே தலையை சீற்றின் மீது சாய்த்து கண்களை மூடியவன் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. இது தன் கடந்த கால தவறுக்காக, அவன் நம்பியது அவனை ஏமாற்றி விட்டது. எதிர்பார்க்காதது அவன் கையருகே கிடைக்கின்றது அது அவனை ஏற்றுக் கொள்ளுமா…? 
நித்தியாவிடம் தன் காதலை எப்படிச்சொல்வது?  செல்லும் போது அவன் செய்து வைத்திருக்கும் காரியத்துக்காக அவன் முகத்தில் காறித்துப்பவும் தயங்கமாட்டாள். இந்த கொஞ்ச நேரத்திற்குள் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கவும், செய்வதறியாமல் திகைத்தவனின் தொண்டைப்பகுதியில் பந்து போல ஏதோ ஒன்று திரண்டுவந்து அடைத்தது. 
உள்ளே சென்றவர் வருவதற்கு முதல் தன்னை சமப்படுத்தியவன், சாதாரணமாக இருப்பது மாதிரிக்காட்டவும் ரொம்ப சிரமப்பட்டான். தொழிலில் எதிரிகளின் கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்டுபவன் கண்களுக்குள் நித்யா விரலை விட்டு ஆட்டுவது போலிருந்தது. சொன்ன நேரத்தை விட இருபது நிமிடங்கள் மாமனார் தாமதமாக வரவும் அவன் தன்னை நன்றாக சமாளித்துக்கொண்டான். 
காரில் வந்து ஏறியவர், “உள்ளே கூட்டமாக இருந்தது மாப்பிள்ளை அதுதான் லேட். ” என்றவாறு அமரவும் ஒரு புன்னகையுடன் காரை எடுத்தான். 
“என்ன?  யோசனை பலமாக இருக்கு?  மாப்பிள்ளை.” என்றவரை திரும்பிப்பார்த்தவன் ஒன்றுமில்லை என்பதால் தலையசைத்தான். ‘ பின்னே உங்கள் மகளைத்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன்.’ என்று சொல்லவா முடியும். 
அவன் கைகள் தன் பாட்டில் காருக்குள் இருந்த பாட்டுப்பெட்டியின் சுவிச்சை தட்டியது. அதுவும் மனதுக்கு இதமான பாடல்களை மீட்ட இருவரும் அதில் ஆழ்ந்த படி வந்து கொண்டிருக்கும் வழியில் பஞ்சு மிட்டாய் விற்பவர் நிற்கவும் காரை ஓரங்கட்ட சொல்லிவிட்டு கீழே இறங்கியவர் கைநிறைய பஞ்சுமிட்டாய் சுருள்களை வாங்கிக்கொண்டு வந்தவர் அதை பத்திரப்படுத்தினார். 
“நித்யாக்கு சின்னபிள்ளயில இருந்தே இது பிடிக்கும் மாப்பிள்ளை. இதைக்காட்டித்தான் சின்னகுழந்தையா இருக்கும்  போதெல்லாம் சமாளிப்பேன் அவ்வளவு ‘துருதுரு’ என்று ஏகப்பட்ட கலாட்டா பண்ணிக்கொண்டேயிருப்பா…  பிறகு வளர்ந்தவுடன் தன் வால் தனமெல்லாம் அடக்கி விட்டு ரொம்ப அமைதியாகிட்டா. இங்கே வந்த பிறகு மறைத்து வைத்த வால் தனத்தையெல்லாம் கொஞ்சம்,கொஞ்சமாக வெளியே எடுத்து விட ஆரம்பிச்சிட்டா. ” 
அவன் பதிலேதும் பேசாது உதட்டுக்குள்ளே புன்னகையை அடக்கியன் ‘மனதுக்குள்ளேயே அதுக்கென்ன மாமா உங்கள் மக மட்டும் ஓகே சொல்லட்டும் பஞ்சுமிட்டாய் கம்பனி வைத்துக்கொடுத்து அவளை அதுக்கு ஓனர் ஆக்கி விடுகின்றேன். ‘ என்ற அவனது நினைப்பு போன திசையை பார்த்து அவனுக்கே வெட்கமா இருந்தது. 
சீக்கிரமாக வீடு வந்து சேர்ந்தவர்கள் இறங்கி அவளைப்பார்க்கவே சென்றனர். 
அவர்கள் வந்ததை கூட யாரும் கவனிக்காமல் அவளோடு செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தனர். 
அதே அறைக்குள் இருந்த அலமாரியினை திறந்து தனது டவலையும், மாற்றுடுப்பையும் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்த போது தான் அவனது தாயார் அவனைக்கண்டு 
“அப்பு… இரண்டு பேரும் வந்தாச்சா, அண்ணா எங்கே… ?” என விசாரித்தார். 
அவன் தாயை முறைத்து விட்டு உள்ளே சென்று கதவை சாத்தினான். இவன் எப்போது வந்தான் என்று தெரியவில்லையே… ? என நினைத்தபடி சந்திரா திரும்பி பார்க்கவும் தமையன் கையில் பஞ்சுமிட்டாயோடு இருப்பதைப்பார்த்தவர், “அண்ணா….  நீங்க வந்ததை நான் கவனிக்கவில்லை உள்ளே வந்து அமருங்கள் நான் ரீ போட்டுக்கொண்டு வருகின்றேன்.” என்றவர் கீழே இறங்கிச்சென்றார்.
மகளருகில் வந்தவர் கையிலிருந்த பஞ்சுமிட்டாயை கொடுத்து விட்டு அவளருகே வந்து அமர்ந்தவர் ” அம்மு கால் ரொம்ப வலிக்குதா…?, நெஞ்சுவலி எப்படி இருக்கின்றது.” எனக்கேட்கவும் அவளது கவனம் பூராகவும் கையில் இருந்த பஞ்சுமிட்டாயிலே நின்றது. 
அவள் பஞ்சு மிட்டாயை எப்போது பார்த்தாலும் புதிதாக பார்த்து வைப்பது போலவே பார்த்து வைப்பாள். அது தெரிந்தும் அவளிடம் கேள்வி கேட்டது தன் தவறு என்பதை உணர்ந்தவர் அவளது வீங்கியிருந்த கால்களை பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். 
செந்தூர் குளித்து, உடை மாற்றி விட்டு வெளியே வந்த போது கண்ட காட்சியில் கடுப்பானவன்,  “மாமா கீழே வாருங்கள் சாப்பிடலாம்.” என அவரை வற்புறுத்தி அழைத்துச்சென்றவன் அவரை கீழே அமர்த்தி சாப்பிட வைத்து விட்டு மேலே வந்தவன், அவளைப்பார்த்து முறைத்தபடி நின்றது கூட தெரியாமல் பஞ்சுமிட்டாயில் கவனத்தை வைத்திருந்தவளை பார்க்க அவனுக்கு கொலை காண்ட் ஆகியது. 
“ஹேய்… என்னடி…  பண்ற… வேலை விசயமாக வெளியே போய் வந்த மனுசன்,  உங்க அப்பாவை சாப்பிட்டிங்களா… ? என்று ஒரு வார்த்தை கேட்காமல் பஞ்சுமிட்டாயை திண்ணுகிட்டு இருக்கிறியாடி… உன் குழந்தை பஞ்சுமிட்டாய் சாப்பிடுகின்ற வயசுல நீ பஞ்சு மிட்டாய் திங்கிறியா…  அதுமட்டுமல்லாது பொறுப்பே இல்லாமல் விளையாட்டுதனம் வேற… ”  என காய்ந்தான். 
“ஹலோ ரொம்ப பேசாதே…நான் இப்படி எழும்ப முடியாமல் இருப்பதற்கு காரணமே நீ தான். இதுக்கு முன்னாடி என் அப்பாவை நீயா? பார்த்துக்கிட்ட… “
“உனக்கு கால் தான் முடியாது. வாய் நல்லாத்தானே இருக்கு, அப்பா சாப்பிட்டாச்சா,  போன வேலை நல்ல படியாக முடிஞ்சுதா என கேட்பதற்கு என்னடி… “
“நீ அவருக்கு வெளியே ஏதாவது வாங்கிக்கொடுக்க முடியாதளவுக்கு கஞ்சனா மாறிட்டியா… “
“சும்மா…  பேசணும் என்பதற்காக பேசாதடி மூஞ்சையை பேத்துடுவேன்… “
“சும்மா… சும்மா… திட்டக்கூடாது நான் ஒன்றும் பேபி கிடையாது. “
“நீ பேபி என்றால் உலகத்தில் இருக்கும் அத்தனை பேபியும் கோபித்துக்கொள்ளும். சாப்பிட்டியா…? மாத்திரைகள் விழுங்கியாச்சா… ” என்றவாறு அவளை பார்த்தவன் அவளது திருட்டு முழியை வைத்தே அவள் மாத்திரைகளை விழுங்கவில்லை என்பதை கண்டு பிடித்தவன்…  மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வந்து அவளைப்பார்தவனுக்கு புன்னகையை அடக்கமுடியவில்லை. 
மாத்திரைகள் விழுங்குவதற்கு கள்ளப்பட்டு தலைமுதல் கால் வரை போர்த்தியிருந்தாள். அவனுக்கு தான் உறங்கி விட்டேன் என காட்டுகின்றாளம். 
பெட்சீட்டால் முகம் வரைக்கும் மூடியிருந்தவளுக்கு உள்ளே மூச்சடைத்து,  வியர்த்துக்கொட்டவும், அங்கே அவனிருக்கும் அரவமில்லாதிருக்கவும் பெட்சீட்டை மெதுவாக விலக்கி தலையை வெளியே எட்டிப்பார்த்தவள் உள்ளூர வெட்கினாலும், “நீங்கள் இன்னும் போகவில்லை… என்று கேட்வாறு எழுந்து அமர முயன்றவளது முகத்தில் வலி தெரியவும் அவளருகில் வந்து கைகொடுத்து எழுப்பி அமர்த்தியவன், கூடவே கையிலிருந்த மாத்திரைகளையும் அவளிடம் நீட்டவும் முகச்சுழிப்புடன் வாங்கியவள் வாயினுள் போட்டு தண்ணீரை விட்டு தொண்டைக்குள்ளே தள்ளினாள். அவனைப்பார்த்து “நான் என்னோட வீட்டுக்கு போகணும்.”
அவளது அர்த்தமற்ற பேச்சில் கடுப்பானவன், அவளை உற்றுப்பார்தபடி
“எழுந்து ஒழுங்காக அமரமுடியவில்லை. இன்னொருவரின் உதவி தேவைப்படுகின்றது.இங்கேயே இரு நிறைய ஆட்கள் இருப்பதால் உன்னை பார்பதற்கு ஈசியாக இருக்கும். “
“எனக்கு என் றூமில் இருந்தால் கம்படபிளாக இருக்கும். அதனால் என்னை என் றூமில் விட முடியுமா?” என்றாள் காற்றாகிவிட்ட குரலில். 
“உன் வீட்டுக்கு போக வேண்டும் என்றால் இங்கே யாரும் தடுப்பதற்கில்லை. உன்னால் முடிந்தால் எழுந்து நடந்து போ.” என்றான். 
“என்னால் நடக்க முடியவில்லை என்று தான் உங்களை கேட்டேன். ” என்றவள் முகத்தை திருப்பிக்கொண்டாள். 
“ம்… அது எங்களுக்கு தெரியும். உன்னை நான் தூக்கிக்கொண்டு பேய் விடுவதற்கு நீ என்ன பச்சப்புள்ளயா… ? ஜப்பான் குண்டு மாதிரி இருந்து கொண்டு பேச்சைப்பார். ” என அவன் கூறவும் முகத்தை திருப்பியிருந்தவள் அவனை திரும்பி பார்த்து “நீ ஒன்றும் எனக்கு சாப்பாடு போட்டு வளர்க்கவில்லை… அதனால என்னை பற்றி நீ டிஸ்க்கிரைப் பண்ணவும் தேவையில்லை.” என்றவளது உதடுகள் அழுகையில் பிதுங்கின.
‘அழும் போது கூட ஆட்களை கவிழ்க்க இவளால் தான் முடியும்.’ என மனதுக்குள் நினைத்தவன் அவளருகில் சென்று அவளது கன்னத்தை அழுத்தமாக பிடித்து திருப்பியவன் அவளது கண்களை உற்றுப்பார்க்கவும் அவள் விழிகளில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள் உருண்டோடின. ” சரி அழுது தொலைக்காத… கண்கொண்டு பார்க்கமுடியவில்லை… என்ன?  ஆனாலும் நீ இங்கே தான் இருக்கின்றாய்… நான் மாமாகிட்ட அனுமதி வாங்கிக்கொள்கின்றேன் ஓகே.” என்றவன் அவளது கன்னத்தை இன்னும் அழுத்திய பின்னர் தன் கையை எடுத்து விட்டு அவளது முகத்தை பார்க்க, இவன் பிடித்து அழுத்திய இடம் கன்றிச்சிவந்திருந்தது. 
“காட்டுமிராண்டி,  எதுக்கு என் கன்னத்தை இந்த அழுத்து அழுத்துகின்றாய். என கத்தியவள் சரி… இப்போது நீ இந்த றூமை விட்டு கெட் அவுட்.” என்றாள். 
“ஹலோ அது என்னுடைய றூம்.அதில மேடம் இப்போது கெஸ்ட்டாக இருக்கிறீங்க அதை மறந்துடாதீங்க… “
“அந்த ஈரவெங்கயாம் எல்லாம் எனக்கு தெரியும். நீ வெளியில போடா… நானா இங்கே இருக்கப்போகின்றேன் என கேட்டேன்… என்றவாறு,  தலையணை ஒன்றையும் போர்வையையும் தூக்கி அவனருகில் போட்டவள், வெளியே பழகும் பொது லைட்டை அணைத்து விடுங்கோ….” என்றாள். 
‘என்னது லைட்டா அணைக்கணுமா…?’ என்று அவளது வார்த்தையில் புது அர்த்தம் கண்டுபிடித்தவன் ப்ரீஸாகி நிற்கவும். அவனை பார்த்தவள். “ஓவர் சீன் உடம்புக்காகாது  உன் நினைப்பில் மண்ணெண்ணையை ஊத்தி கொழுத்திடுவேன்.” என்றாள். 
‘அடிப்பாவி மைண்ட்வாய்சையே கட்ச் பண்ணிட்டா போல.’ என நினைத்தவன் அவளை பார்த்து சிறிதாக கண்ணை சிமிட்டிய படி லைட்டை அணைத்து விட்டு அவன் வெளியே இருந்த ஷோபாவில் தலையணையும்,பெட்சீட்டையும் போட்டு, விட்டு அதிலே அமர்ந்திருந்து ஃபோனை எடுத்து நோண்டியவனுக்கு தூக்கம் வராது தொலைவில் நின்று தலை, கால் புரியாது கூத்தாடியது. 
 

Advertisement