Advertisement

மலர் 17
அவள் காலை உணவை கேட்டதும், அவளுக்கு கொண்டு வந்திருந்த உணவை அவள் முன்னால் வைத்தார் தகப்பன். 
அவள் ஆவலாக உணவை பார்க்கவும் முகம் சுருங்கியது. ” என்னப்பா…  இது… காலையில் ஆபீசுக்கு போறதா…? இல்லை டாய்லெட்டில் போய் உட்காரவேண்டுமா… ? இதை எப்பிடி சாப்பிடுவது.” கௌபி, மற்றும் அருகம்புல் யூசை பார்த்து கடுப்பானாள். 
” இதுதான் சாப்பாடு. இன்றிலிருந்து டயட் உணவு தான். இல்லை என்றால் நீ ஜிம்முக்கு போக வேண்டாம்.”
“சரி திண்ணு தொலைக்கின்றேன்.” என்றவள் தொண்டைக்குள் செல்ல மறுத்த உணவை மிண்டி விழுங்கி விட்டு கையை கழுவியவள். அப்பா நான் போய்விட்டு வருகின்றேன்.” என்றவாறு தன் உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். 
இன்று அவளது மாமனின் பேக்கரியை சுற்றி பார்த்து, அதில் இருக்கும் குறைகளை சரி பண்ண நடவடிக்கை எடுப்பதுடன், கணக்கு வழக்குகளையும் பார்க்க வேண்டும். அவள் சரியாக எட்டு முப்பதுக்குள் பேக்கரி முன்னால் நின்று மாமனார் வருகின்றாரா… ? என பார்த்துக்கொண்டு நிற்கவும்,  பத்து நிமிடம் கழித்து அவர் தன் காரில் வந்து இறங்கியவர் அவளை பார்த்து புன்னகைத்தார். 
“நானும் உன்னை என்னுடன் காரில் வரச்சொல்லி சொல்கின்றேன். ஆனால் நீயும் பிடிகொடுக்க மாட்டேன் என்கிறாய். ” என்று கூறிக்கொண்டே அவர் அந்த பெரிய பேக்கரிக்குள் உள்ளே செல்லவும் அவளும் பின் தொடர்ந்தவள்,  ” இல்லை…  மாமா…  நான் உங்க சொந்தக்காரி என்று தெரிந்தால் தொழிலாளர்கள் என்னோடு சகஜமாக பழகமாட்டார்கள். அத்தோடு தேவையில்லாமல் வீண் பிரச்சனைகள் தோன்ற வழிவகுக்கும். அதை விட சில உண்மைகளை கண்டு பிடிக்க வேண்டும். அதனால் நான் உங்களது உறவினர் என்று யாருக்கும் தெரிய வேண்டாம் மாமா.” என்றாள். 
அவளை திரும்பி பார்த்த மாமனார், “என்ன?  சொல்கின்றாய் நித்தி இங்கே ஏதும் ‘தில்லு முல்லு’ நடப்பது போல் இருக்கின்றதா… ? கூடியளவு நம்பிக்கையான நபர்கள் தான். அந்தக்காலத்தில் இருந்தே வேலை செய்தவர்கள், அவர்களது பிள்ளைகள் தான் இந்த பேக்கரியில் வேலை செய்கின்றார்கள். இவர்கள் மேலா உனக்கு சந்தேகம். “
“இல்ல… மாமா… நான் இன்னார் மேலே தான் சந்தேகம் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை.இவ்வளவு சொத்துக்களின் கணக்கு, வழக்குகளை சரி பார்க்கின்ற வேலையை என்னை நம்பி தந்திருக்கின்றீர்கள் நான் என் வேலையில் தவறில்லாமல் நடக்க வேண்டும் என்றால். நான் ரொம்ப கண்டிப்பாக இருக்க வேண்டுமா… ? இல்லையா… ? அதனால் நான் யாரையும் பட்டென்று நம்புவதில்லை.”
“ம்… சரிம்மா…  நான் உன் மேலே ரொம்ப பாரத்தை வைக்கின்றேனா… ?”
“அப்படியெல்லாம் இல்லை மாமா. இதுவும் ஒரு சவாலாகத்தான் இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… “
“ஏதும் பிரச்சனை என்றால் என்னை உடனே தொடர்பு கொள்.நீயே ஏதும் றிஸ்க் எடுத்து மாட்டிக்கொள்ளாதே… நித்தி, உன்னை விட இந்த காசு, பணம், சொத்து, சுகம் இதெல்லாம் பெரிய விடயம் இல்லை. நமக்கு வசதி வாய்ப்புக்கள் இருப்பதனால் எந்த இடத்திலிருந்து பிரச்சனைகள் தன்பாட்டிலே வரும். நீயே சமாளிப்பதாக நினைத்து பிரச்சனைகளை என்னிடம் சொல்லாமல் றிஸ்க் எதுவும் எடுக்காதே…”
“கட்டாயம்… மாமா…  என் உயிர் எனக்கு வெல்லம் தான். எனக்காக இல்லாவிடிலும் என் அப்பாவுக்காக என் உயிர் இருந்தே ஆகணும். “
பேச்சோடு பேச்சாக உள்ளே போய் எல்லோரிடமும் இவளை அறிமுகப் நடத்தியவர், அங்கே இருந்த கணக்குப்பிள்ளையிடம் கணக்கு வழக்குகளை பற்றி அலசியவர்கள், கடையை சுற்றிப்பார்த்தனர். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கணக்கு வழக்கு எல்லாம் சரி பண்ணி கொடுப்பதாய் கூறி அங்கிருந்த லெஜர் மற்றும் பில் புத்தகங்கள் என்பவற்றை அவள் வாங்கிக்கொண்டு வரவும் இருவரும் கிளம்பினர். 
சுப்பிரமணியன் அவளையும் தன் காரில் வரச்சொல்லவும் தயங்கியபடியே “இல்லை மாமா…  அது சரி வராது. நான் ஆட்டோவிலயே ஆபீசுக்கு வர்றேன். அங்கயும் பெண்டிங் வேக்ஸ் கொஞ்சம் இருக்கு என தயங்கியவள் படி கூறியவள் எதிரே வந்த ஆட்டோவினை கைநீட்டி அழைத்தவள், அருகில் ஆட்டோ வந்ததும் போக வேண்டிய இடத்தை சொல்லியபடி ஏறி அமர்ந்தாள். 
                                  ******
அன்று காலை தன்னுடைய வீட்டுக்குள்ளே இருந்த குட்டி ஜிம்மில் ஒரு மணித்தியாலமாக வியர்வை ஆறாக ஓட வேக்கவுட் பண்ணிக்கொண்டிருந்த செந்தூரின் மொபைல் விடாது ஒலித்தது. 
‘யாராக இருக்கும்’ என நினைத்தபடி ஜிம்மில் இருந்து வெளியே வந்து  தன் றூமில் பெட்டின் அருகே இருந்த குட்டி மேசையில் இருந்த ஃபோனை எடுத்து ஆன்சர் பண்ணி காதுக்குள் கொடுத்தான்.
“ஹலோ…  செல்லு மது… “
“ஹாய் குட்மோர்னிங்… டா. உன் அத்தை பொண்ணு நித்யாவை ஜிம்முக்கு கூட்டிக்கொண்டு போனேன். “
“இதை சொல்லத்தான் எடுத்தியா…?”
“ஏன்டா…  டேய்…  நேற்று அவள் என்னோடு வருகின்றாள் என்று சொன்னதும் கூட்டிக்கொண்டு போ என்று மட்டுமா சொன்னாய், கவனமாக கூட்டிக்கொண்டு போகச்சொன்னாய்.இப்ப என்ன? என்றால் ஓவரா சீன் போடுகின்றாய். “
“சரிடி…  அவ என்ன?  சொல்லுறா…”
“ம்…  நீ கிண்டல் பண்ணியதால் தான் அவ ஜிம்முக்கு வர்றா… அதுமட்டுமா சொன்னா ஜிம் நடத்துறவன் செம டேஸ்ரான ஆளாம்.ஜிம் ஓனருக்கு அவ செம விசிறியாகிட்டாளாம். நான் சொல்லட்டா… ஜிம்முக்கு ஓனர் நீ தான் என்பதை அவகிட்ட சொல்லவா…”
“ஹேய்… செல்ல வேண்டாம். அவளுக்கு தெரிஞ்சா சாமியாடிடுவா”
“ம்… .அது…  டேய் அவ வேற ஒரு விசயம் கூட சொன்னா… அதை சொல்ல இப்போது எனக்கு ரைம் இல்லை. நான் என்னோட ஆபிசுக்கு போகணும். ஃபோனை வைக்கட்டுமா… ?”
“அப்படியா… ? நான் கூட நேற்று கௌதமோட பேரண்ஸ் கூட உன்னைப்பற்றி கதைக்க போனேன். “
அது நீ உடம்பை ரொம்ப நல்லா ஜிம்பாடி மாதிரி வைத்திருக்கின்றாயாம். ஆனால் ஜிம்க்கு வருகிறவர்களிடம் கொள்ளை அடிக்கின்றாயாம். அதாவது பீஸ் ரொம்ப வாங்கீட்டியாம். ஓகேவா…. சரி கெளதம் வீட்டுக்கு போனியே… என்ன?  கதைத்தாய்..
சொல்லேன்.”
“கௌதம் வீட்டுக்கு கதைக்க போனேன் என்று சொன்னேன். ஆனால் கதைத்தேன் என்று சொல்லவில்லை.”
“ப்ளீஸ்டா… சொல்லுடா… “
“முடியாது போடி…. இப்போது  எனக்கு ரைம்  இல்லை. அப்புறம் சொல்லுகின்றேன்.நீ ஃபோனை வை… “
” என்கிட்ட போட்டு வாங்கினியாடா… “
“ஆமா…  நீ ஃபோனை வை. ” என்றவாறு ஃபோனை கட் பண்ணினான். 
அவனை மனதில் திட்டியபடி அவள் தன் அலுவலகத்துக்கு கிளம்பினாள்.
                              
                                  ******
“அத்தை… அத்தை…” என அழைத்த படி வீட்டுக்குள்ளே நுழைந்தவளை எதிர்கொள்ள யாருமில்லை. ‘எங்கே போயிருப்பார்கள் என யோசித்து வண்ணம் மேல்மாடியில் இருக்கின்றார்களோ…? போய்ப்பார்க்கலாம்.’ என நினைந்தபடி மேலே ஏறியவள் “அத்தை, அத்தை” என அழைத்தபடியே மேலே ஏறினாள்.
திடீரென அவளுக்கு முன் கூக்குரலிட்டபடி அவன் வந்து குதிக்கவும், திடுக்கிடலுடன் அவள் “அம்மா” என்று கத்தியபடி அவன் மேலே மோதவும்,அவனது கால்களும் தடுமாறி அவன் கீழேயும், அவள் மேலேயுமாக மாடியில் போடப்பட்டிருந்த ஷோபாவில் விழுந்தனர். 
அவனது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. தன் மீது பஞ்சுப்பொதி போன்று விழுந்து கிடந்தவளை இறுக்கி அணைக்க வேண்டும் போல ‘பரபர’த்த கைகளை அவளைச்சுற்றி கொண்டு சென்றவன் அவள் பேச்சு மூச்சின்றி கிடக்கவும் நிதானித்தவன், அவளது தோள்களை தொட்டி உலுப்பியவன் ” நித்து…நித்து… எழும்புடி என உலுப்பவும் சிறு முனகலுடன் நெஞ்சை பிடித்தவாறு எழுந்து அமர்ந்தவளது முகம் வேதனையில் சுருங்கி,  மூச்சுக்கு தத்தளித்தபடி இருந்தவளை கண்டு திகைத்தவன் பட்டென்று எழுந்து ஃபான் சுவிச்சை தட்டியவன் அப்போதும் அவள் மூச்சுக்கு சிரமப்படவும் யோசிக்க நேரமின்றி அவளை இழுத்தணைத்து அவனது வாயால் அவளது வாயை முடியவன், தன் வாயால் அவளுக்கு சுவாசத்தை வழங்கினான்.
அவள் சிறிது நேரத்தில் சமப்பட்டு விட்டதை அவன் உணர்ந்தாலும், அவன் உதடுகள் அவள் உதடுகளில் இருந்து விலகவில்லை. அவள் தொய்ந்து போய் அவன் நெஞ்சில் சாய, அவன் உதடுகள் சுவாசம் வழங்கும் வேலையை நிறுத்தி விட்டு,  முத்தம் வழங்கும் சேவையை செவ்வனவே ஆற்றிக்கொண்டிருந்தது. 
மிக மெல்லியதாக ஆரம்பிக்கப்பட்ட முத்தச்சேவை மிக வன்மையாக மாறிக்கொண்டிருந்தது. அவன் தன்னை மறந்த நிலையில், அவனது தாயார் மற்றும் பாட்டியின் குரல்கள் “செந்தூர்,செந்தூர்” என அழைப்பது தூரத்தில் கேட்பது போலிருக்கவும் அதை மறுத்து அவன் தன்னுடைய வேலையில் ஆழ்ந்து போனாவனின் முதுகில் சரமாரியாக அடிகள் விழவும் அவன் திடுக்கிடலோடு அவளில் இருந்து பிரிந்து, சுற்றுபுறத்தை பார்க்கவும், அவனது தாயும், பாட்டியும் கைகளில் சூலாயுதமின்றி கண்கள் சிவக்க முறைத்தவண்ணம் நிற்கவும் முற்றுமுழுதாக தன்னிலை அடைந்தான். 
‘கடவுளே… .முத்தம்  சித்தம் கலங்க வைத்துவிட்டதே… இவங்க இரண்டு பேரையும் எப்படியாவது சமாளிடா செந்தூர்,’ என மனதுக்குள் நினைத்தவன் பட்டென்று அவளை தன்நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு ” அம்மா இவ மூச்சு எடுக்க முடியாமல் மயக்கமாயிட்டா… சீக்கிரம்… சீக்கிரம்… போங்க போய் ஒருத்தர் மூவ்ஸ்பிரேயையும், ஒருத்தர் போய் சமையல்காரம்மாவிடம் சொல்லி ரீ போட்டு எடுத்து வாருங்கள். நான் என்னுடைய துணுக்கு இவளை தூக்கிக்கொண்டு போய் படுக்க வைக்கின்றேன். “
“என்னது… உன்னுடைய றூமுக்கா… அதெல்லாம் வேண்டாம் என இருவரும் ஒத்த குரலில் கூறவும்… .” அவர்களை முறைத்தவன் ” இவளுக்கு என்ன?  ஆனாலும் பரவாயில்லையா…? மாமாக்கு தெரிஞ்சால் பதறிப்போயிடுவார். இப்போது சீக்கிரம் போய் நான் சென்றதை கண்டு வாருங்கள்.” என்றவன் அவளை தூக்கச்செல்லவும் மற்ற இருவரும் அவசரமாக கீழே சென்றனர். 
அவன் அவளை தூக்கிக்கொண்டு செல்லவும் அவள், ” டேய்…  நான் மயக்கம் போடவில்லை.எதுக்குடா தூக்கிட்டு போகின்றாய், என்னை கேட்காமலே முத்தம் கொடுத்த மாதிரி இப்போது மாட்டர் பண்ணப்போகின்றாயா…  விடுடா…விடு… என் நெஞ்சு ரெம்ப வலிக்குது.”என முனகியவள் கண்களில் கண்ணீர். 
அவளை தன் பெட்டில் படுத்தி விட்டு,  “திடீரென உனக்கு எப்படி நெஞ்சுவலி வந்தது நித்து.”
திடீரென என் முன்னாடி பேய் மாதிரி வந்து பாயும் போது நான் விழப்பார்க்கவும் நீ என்னை பிடிப்பதாய் நினைத்து, உன் இரும்பு மாதிரி இருக்கிற முழங்கையால் என் நெஞ்சில் இடித்து விட்டாய், வலிக்கின்றது என்றவாறு நெஞ்சைப்பிடித்தவள் ‘விக்கி விக்கி’ அழவும் விக்கலுக்கு இன்னும் வலித்தது. 
“ஓ… சாரி… சாரி பேபி நான் வேணும் என்று பண்ணவில்லை உன்னை சும்மா பயப்பட வைக்க தான் ஒளித்து நின்று விட்டு நீ கிட்ட வரவும் குரல் கொடுத்துக்கொண்டு உன் முன்னால் பாய்ந்தேன்… .என திக்கி திணறியவன். ரொம்ப… ரொம்ப வலிக்குதா…?”
“ம்… மூச்சு விடவே வலிக்குது… உன்னோடது  கையா…? இல்லை கடப்பாரையா… ? ஐயோ என் இதயமெல்லாம் வலிக்குது. கடைசியில என் இதயம் வீங்கித்தான் நான் சாகப்போறேனா… ? என அவள் வலியோடு புலம்பவும் அவன் பயத்தோடு, “ஹாஸ்பிட்டல் போகலாமா…” என்றான். 
 
 

Advertisement