Advertisement

மலர் 15
போட்டோவை எடுத்து விட்டு தனது செல்ஃபோனை அங்கிருந்த கல்பெஞ்சில் வைத்தவன், மார்புக்கு குறுக்காக கையை கட்டியவாறு அவளை மேலும்,  கீழும் அளவெடுப்பதனைப்போல பார்த்துக்கொண்டிருந்தான். 
‘இவன் எதுக்கு இப்படி சீன் போடுறான்.’ என்றவாறு தன்னை குனிந்து பார்த்தவள் ‘கடவுளே’ என்றவாறு ஓடிப்போய் அங்கிருந்த கட்டைச்சுவரின் பின் குத்துக்காலிட்டு அமர்ந்தவள், இவன்கூட சண்டை போடுவதில் அவளது கட்டை சட்டையை மறந்திருந்தாள். 
அவன் அவளை கண்வெட்டாது பார்க்கவும் தான் அவள் நடப்புக்கு வந்தாள். கட்டை சுவருக்கு கீழே இருந்தவள் தலையை மட்டும் நைசாக உயர்த்தி அவனைப்பார்க அவனைக்காணவில்லை. 
‘அப்பாடா போய்விட்டான் போல இருக்கே…’ என பெருமூச்சொன்றை வெளிவிட்டபடியே… எழுந்து உள்ளே போகப்போனவள் திகைத்து நின்றாள். 
“என்னடி… அப்படி திகைத்துப்போய் நிற்கின்றாய். இப்போது உன் பக்கத்தில் ஆவந்து நிற்கின்றேன்… இப்போது விளக்குமாத்தை எடேன் பார்ப்போம்.” என அவளை சீண்ட அவள் தனது கைகளிரண்டையும் முன்பக்க தொடையின் கீழ்பக்கத்தை மறைக்கும் முயற்சியில் அரைமண்டியில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தாள். 
‘வாடி… என் மாமன் மவளே…இன்றைக்கு உன்னை கதற விடுகின்றேன்.’ என நினைத்தவாறு அவளை உற்றுப்பார்க்கவும் அவள் அவனை பார்க்காது வளைந்து நெளிந்து கொண்டிருந்தாள். 
“மஞ்சள் காட்டு மைனா கணக்கா இழுத்து மூடிக்கொண்டு, எங்க வீட்ல எல்லோரையும் மயக்கி வச்சிருக்கிறாய். பட் வீட்ல இருக்கும் போது துணிக்கு வழியில்லாதவ மாதிரி அரையும் குறையுமா…? ஆட்டம் போடுகிறாய் என்ன…?” என கூறிக்கொண்டே அவளை பார்த்தவன் அவள் படும் அவஸ்தையில் இன்னும் சுவாரஸ்யம் கூடியது. 
அவன் அவளருகில் வந்து நின்று அவளை வதைக்கவும் கண்களில் நீர் குளம்கட்டி வழிந்து விழுவதற்கு ஆயத்தமாக நின்றது. 
“சரிடி முட்டைக்கண்ணை விழுத்தாதே… நான் உன்னை கிண்டல் பண்ணியிருந்தால் பதிலுக்கு நீ என்னை கிண்டல் பண்ணு,  இல்லை என்றால் எனக்கு கிண்டல் பண்ணினால் பிடிக்காது என்று முகத்துக்கு நேரா சொல்லியிருக்கணும் அது நல்ல பொண்ணுக்கு அழகு. ஆனால் நீ என் பெயரை சுவர்ல எழுதி  அதுக்கு செருப்பு முதல் கொண்டு கையில் கிடக்கிற எல்லாப்பொருளாலும் விளாசுகிறாய்… இதில் காலக்கொடுமை என்ன? என்றால் அதை எல்லாம் என் கண்ணால் பார்த்தது. பேச்சு பேச்சா இருந்திருந்தால் அது நியாயம். அது சரி நீ தான் பஜாரி ஆச்சே… உன்கிட்ட எதிர்பார்க்க முடியுமா…? நியாயத்தை… “
இவனது பேச்சைக்கேட்டு அவளது இரத்தம் கொதித்தது.இதுக்கு மேல் இப்படியே நின்றால் சரி வராது என நினைத்தவள் தனது உடை விடயத்தை மறந்தவள். அனல் கக்கும் பார்வையுடன் தன் கைகளை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு நிமிர்வாக நின்றாள். 
“என்னடி போஸ் குடுக்கிறியா.பெரிய மொடல் பாரு. “
“ஆமாண்டா… நான் போஸ் குடுக்கின்றேன் அதுக்கு உனக்கு என்ன?  இவர் பெரிய உத்தமபுத்திரன் பாரு என்னை பார்த்து பேச வந்திட்டார். என்னது மொடலா…?  ஹலோ நாங்க ஒன்றும் மொடல் கிடையாது தான் ஒத்துக்கொள்கின்றேன். உனக்கு தான் பார்க்கிற பொண்ணுங்களை எல்லாம் உன் ஆளு அந்த குரங்கு மூஞ்சி மொடல் அழகி அக்ஷ்சரா மாதிரி தெரியுது போல. என்றவள் இப்போது எதுக்கு உன் வீட்டு மொட்டை மாடியில் இருந்து என் வீட்டு மொட்டை மாடிக்கு வந்தாய். முதல்ல உன் வீட்டுக்கு போடா… இனி மேல் என் மொட்டை மாடிப்பக்கம் காலை வச்சுப்பாரு… கையால தான் நடக்க வேண்டி வரும் வெட்டிப்போட்டிடுவேன் உன் காலை. “
“அய்யோ… பயந்துட்டேன் என்னை ஏதும் பண்ணிடாதீங்க மேடம். ” என பணிவு போல பழிப்புக்காட்டினான். 
“உன் நடிப்பை அந்த மொடல் அழகி கிட்ட காட்டு. அவ உனக்கு சினிமால சான்ஸ் வாங்கி குடுத்தாலும் குடுப்பா… அங்கே போய் உன் நடிப்பு திறமையை காட்டு. இப்போது  உன் இடத்துக்கு நடையை கட்டு.” 
“இது என் மாமா வீட்டு மொட்டை மாடி. நான் நிற்பேன் தேவை என்றால் பாயை போட்டு படுப்பேன். அதைக்கேட்க நீ யாரு…?” என அவள் முன்பு அவனுக்கு சொல்லிக்காட்டியதை அவன், அவளுக்கு சொல்லிக்காட்டினான்.
ஆஆஆ… என வாயை பிளந்தவள் அப்போது  இங்கேயே கிடந்து தொலை என்றவள் ‘விறு விறு’ என வீட்டுக்குள்ளே போய் விட்டாள். 
 உள்ளே பேய் உடை மாற்றிக்கொண்டு கீழே சென்றவள். “அப்பா… அப்பா… என கத்தியபடி தந்தை அருகில் சென்று அமர்ந்தவள். அப்பா நான் ஜிம்முக்கு போகட்டுமா…? ரொம்ப குண்டா இருக்கேன் பாருங்க என்றாள். “
“அதுக்கு ஜிம்முக்கு போனால் மட்டும் போதாது… சாப்பாடு எல்லாம் கொண்ரோலாக சாப்பிட வேண்டும். முக்கியமா எண்ணெய், இனிப்பு அளவுகளை குறைக்க வேண்டும் அதிகளவான சிறுதானிய வகைகளை உட்கொள்ள வேண்டும் என்று ஏகப்பட்ட விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும். அது உன்னால் முடியாதே நித்து.”
“அதெல்லாம் என்னால் முடியும்…  அவன் என்னடா என்றால் பூசணிக்காய், சோத்துமூட்டை என்று என்று என்னை டமேஜ் பண்றான். அதனால் நான் மது அக்கா போகின்ற ஜிம்முக்கு அவங்க கூட போறேன்பா… ப்ளீஸ்… நீங்க பெமிசன் மட்டும் குடுங்க… நான் பத்திரமா போய் வருவேன்…” என சிறுமி போல பார்த்து வைத்தாள். 
“அது… யார்? மது?”
“அது உங்களுக்கு மருமகன் என்று ஒன்று சொல்லிக்கொண்டு ஒன்று திரியுதே… அவனோட ப்ரண்ட்.”
“அதுக்கு ஏன்? நீ மதுவோட போகணும்.  செந்தூர்கிட்டயே பேசுகின்றேன் அவனோட போய் வா. பாதுகாப்பாவும் இருக்கும் வா நானே செந்தூர்கிட்ட பேசுகின்றேன். ” என்றார். 
“இல்ல… இல்ல… வேண்டாம். அவன் தான் என்னை கழுவி கழுவி ஊத்துறான். நீங்க என்னடா… என்றால் அவன்கிட்ட போய் கேட்க்கப்போகிறேன் என்கிறீர்கள். “
“சரி போ…  ஆனால் ரெகுலராக போகணும். நாளைக்கு போய் வந்து கை நோகுது, கால் நோகுது என்று கட் அடிச்சு பார் அப்புறம் இருக்கு உனக்கு. “
“பாருங்க அறுபத்தைந்து கிலோ இருக்கிற நான் நாற்பத்தைந்து கிலோவாக குறைகின்ற வரை ஓய மாட்டேன். 
“இப்பவும் சொல்கிறேன் நித்து நன்றாக கேள் நீ பெரிய உடம்பு கிடையாது. பப்பாளிப்பழம் போல இருக்கிறாய்.”
போதும்… போதும் ஒருத்தன் என்னை பூசணிக்காய் என்கின்றான்.நீங்க பப்பாளி என்கிறீர்கள் ஆக ஊரில் இருக்கின்ற குண்டு பொருளோட எல்லாம் என்னை ஒப்பிட்டு  என்னை வெறுப்பேத்தாதீங்க பேசாமல் போயிடுங்க அப்பா… .நான் கோபமாயிருக்கின்றேன் என்றவள் ஷோபாவில் தொப்பென்று விழுந்தவாறே… அப்பா சாப்பிட என்ன? ஸ்நாக்ஸ் இருக்கு என்றாள். 
“அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்தவர், ” ஸ்நாக்ஸ் இல்லை நித்து…அறுகம்புல் யூஸ் போட்டு தரவா…?”
“என்ன… ? அறுகம்புல் யூசா…?  நான் என்ன? மாடா….” என்றாள்.
“ம்… வெயிட் குறைக்க வெளிக்கிட்டால் அதனுடைய செயற்பாடுகள் எல்லாவற்றையும் ஒழுங்காக செய்ய வேண்டும். இல்லை என்றால் அந்த வேலையை செய்வதில் அர்த்தமே இல்லை. என நீண்ட பொழிவுரையை தகப்பன் நடத்தவும்  “தகப்பா…. போதும்.” என கையெடுத்து கும்பிட்டாள்.
“இந்தக்காலத்து பிள்ளைகளுக்கு நல்லது சொன்னால் கேட்டால் தானே… ” என புலம்பிக்கொண்டே உள்ளே போனவர் ஐந்து நிமிடம் கழித்து ஒரு கிளாஸ் நிறைய ஒரேஞ்கலர் நிறத்தில் யூசை கொண்டு வந்து கொடுத்தார்.
அதை கையில் வாங்கியவள் “அப்பா… என்றால் அப்பா தான் சாப்பிட ஏதும் கேட்டால் குடிக்கிறதுக்கு யூசாவது தருகின்றாரே…” என்றவாறு வாயில் வைத்தவள் முகத்தை சுளித்தாள். 
“ஏன்பா…? ஏன்…?  இது ஒரேஞ் கலர்ல இருக்கு ஆனால் அதனுடைய மணம், குணம், சுவை என எதையும் காணவில்லையே…”
“இது ஒரேஞ் யூஸ் இல்லை. கரட் யூஸ்… “
“என்னது கரட் யூசா… எனக்கு வேண்டாம். இதை விட பச்சை தண்ணி ரேஸ்டாக இருக்கும்.”
“சரி போய் குடி. பட் ஜிம்முக்கு போற கனவை இப்போதே மறந்திடு.” என்றார். 
“அப்பா நீங்கள் என்னை ரொம்ப கொடுமைப்படுத்ததுகின்றீர்கள்.” என கூறிக்கொண்டை யூசை மடக்கென்று குடித்து முடித்து விட்டு கிளாசை வைத்து விட்டு உள்ளே செல்ல எத்தனிக்கவும் தகப்பனது குரல் அவளை தடுத்தது. “இப்போது புரியுதா… ? உன்னால் இதை பண்ணுவது ரொம்ப கஸ்ரம் குட்டிம்மா… நீ பசி தாங்க மாட்டாய், நொறுக்கு தீனி இல்லாமல் இருக்க மாட்டாய். கஸ்ரப்படப்போகிறாய் ஒகேயா…?” என்றார். 
“அப்பா… நீங்க சொல்வது உண்மை தான் ஆனால் முயற்சி செய்து பார்க்கின்றேனே… மற்றவங்க கிண்டல் செய்வது கூட பரவாயில்லை. ஆனால் அருகே இருக்கின்ற நம்ம சொந்தகாரங்க என நினைக்கிறவங்களே… கிண்டல் பண்ணும் போது ரொம்ப வலிக்குதுப்பா. இங்கே வராமலே ஊர்ல இருந்திருக்கலாம் என்று தோன்ற வைக்கிறாங்க அப்பா முடியல்ல…” என வெம்பிய மகளை பார்த்து அதிர்ந்து நின்றார். 
மகளின் எதிர்காலத்தை நினைத்து அவருக்கு உள்ளூர பயம் தொற்றிக்கொண்டது. சின்னதாக ஒரு கேலியை தாங்கிக்கொள்ள மறுக்கின்றவள் ‘பெரிய பெரிய’ பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு அவற்றை எல்லாம் சமாளிக்கப்போகின்றாள். என யோசிக்கும் போதே நெஞ்சம் எல்லாம் பதறியது.
தனது அறைக்குள்ளே போய் பெட்டில் விழுந்தவள் அருகிலிருந்த ஃபோனை எடுத்து மதுவிற்கு அழைப்பை விடுத்தாள். 
“ஹலோ மது அக்கா நான் நித்யா பேசுறேன். எனக்கொரு உதவி செய்ய முடியுமா… “
“சொல்லு நித்தி. என்ன…? ஹெல்ப் வேணும் உனக்கு… “
“அது… என்னையும் உங்க கூட ஜிம்முக்கு கூட்டிக்கொண்டு போறீங்களா…?”
“ஏய்… என்ன?  ஆச்சு திடீரென்று ஜிம் போகப்போறேன் என்கிறாய்… “
“இல்லக்கா… நான் கொஞ்சம் குண்டா இருப்பது போல பீல் பண்ணினேன் அதுதான். உங்களுக்கு சிரமம் என்றால் சொல்லுங்கள் அக்கா, நான் அப்பாவுடன் போய்க்கொள்வேன்.”
“பார்த்தியா… நீ என்னை பிரண்ட் என்று செல்லி விட்டு இப்படியொரு கேள்வியைக்கேட்கலாமா… ?”
“சரிக்கா…தப்புத்தான். எப்போது போக வேணும்.”
“நான் விடியற்காலை ஐந்து மணிக்கு போவேன்.உனக்கு அந்த ரைம் சரிப்பட்டு வருமா… ?”
“என்னது ஐந்து மணிக்கா….! அது எனக்கு இரண்டாம் சாமம் ஆச்சே… ! அக்கா. “
“அப்போது  சரி. ஆறுமணிக்கு என்றால் ஒகேயா… “
“சரிக்கா… அலாரம் வைத்து எழுந்து கொள்கின்றேன். மறக்காமல் என்னையும் கூட்டிக்கொண்டு போங்கள்.”
“நித்தி ஜிம்முக்கு வரும் போது ட்ராக்சூட், ரீசேட் மாதிரி கம்படபிளாக இருக்க கூடிய உடுப்பு அணிந்தால் நன்றாக இருக்கும். உன்கிட்ட இருக்கா… “
“இல்ல… ஆனா ட்ரை பண்றேன் அக்கா…” என்றவள் பேசி முடித்து ஃபோனை கட் பண்ணினாள். 
கீழே இறங்கி வந்து “அப்பா… நாளைக்கு காலையில் ஆறுமணிக்கு ஜிம்முக்கு போகணும் ஐந்து மணிக்கு எழுப்பி விடுப்பா… மறந்து போயிடாத அப்பா… ” என்றாள். 
“அப்ப போகத்தான் போகிறாய் உன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை அப்படித்தானே… “
ஆம் என தலையசைத்தவள் “நான் ரெஸ் அரேஞ் பண்ண வேண்டும். சீக்கிரம் எழுப்பி விடுங்கோ…”  என கூறிய வண்ணம் தன் அறைக்குள் ஓடினாள். 

Advertisement