Advertisement

மலர் 12
நித்யாவின் சத்தத்தை காணவில்லையே… என கெளதம் திரும்பி பார்க்கவும் செந்தூரும் திரும்பி பார்த்தான். 
பார்த்த இருவருக்கும் அவள் கட்டிலில் சுருண்டு படுத்திருப்பதை பார்த்து ஒருங்கே புன்னகை தோன்றியது. 
“உன் மாமன் பொண்ணு ‘திட்டி திட்டி’யே களைத்து போயிட்டா போல அதான் தூங்குறாடா… ! நான் வெளியே போய் ரீ வாங்கிக்கொண்டு வருகின்றேன்.அப்புறம் அவளை எழுப்பி தொலைச்சிடாத மச்சான் ‘வண்டை வண்டை’யாக கேட்டிடப் போறா…” என்றவாறு ரீ வாங்குவதற்காக வெளியேறினான் கெளதம். 
அவளை திரும்பி  பார்த்த செந்தூர், அவள் தலையை பிடித்துக்கொண்டு முனகும் சத்தம் கேட்கவும், எழுந்து வந்து பார்த்தான்.
அவள் தலையை பிடித்தவாறு “அம்மா…அம்மா..” என அரைகுறை தூக்கத்தில் புலம்பிக்கொண்டிருந்தாள். 
கட்டிலில் அமர்ந்தவன் அவள் தலையை ஒற்றைக்கையால் தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு அவளது நெற்றியை மிருதுவாக அழுத்திக்கொடுக்கவும்,சிறிது நேரத்தில் அவள் புலம்பல் நின்று முழுதூக்கத்திற்கு சென்றாள். பெட்சீட்டை எடுத்து அவளை இடை வரை போர்த்தியவன் நண்பனிற்கு ஃபோன் செய்து தலைவலி தைலமும், மாத்திரையும் வாங்கி வரச்சொல்லிவிட்டு மறுபடியும் அவளருகில் அமர்ந்து, அவளது தலைமுடியில் கைவைக்கவும் சாதுவான ஈரமாக இருந்தது. 
‘பக்கி தலைக்கு குளித்துவிட்டு நன்றாக தலையை துவட்டாது வந்திருக்கும் போல’ என நினைத்துக்கொண்டு  அவளது தலையிலிருந்து கிளிப்பை அகற்றி தலைமுடியை விரித்து விடலாம் என பின்புறதலைக்குள் கைவைக்க அது இன்னமும் ஈரமாக இருந்தது. அவளது தலையை மெதுவாக தூக்கி தலைமைக்கு மேலாக தலைமுடியை எடுத்து தொங்கவிடலாம் என்று பார்க்க அது பெட்டை தாண்டி நீண்டு தொங்கியது.
‘எவ்வளவு நீளமான முடி…! அதற்கேற்றால்போல அடர்த்தியுமாக இருக்கிறதே… ! இதை பராமரிப்பதற்கே தனியா ரைம் வேணும்.’ என நினைத்து கொண்டு எழுந்து ஃபேன் சுவிட்ச்சை போட்டு விட்டு கதிரையில் அமர்ந்தான். 
சற்று நேரம் கழித்து கெளதம் புது ப்ளாஸ்க் ஒன்றினுள் ரீயையும் பேப்பர் கப்புகளையும், மறக்காது செந்தூர் சொன்ன தலைவலி தைலம், மற்றும் மாத்திரைகளையும் வாங்கிக்கொண்டு வந்தவன் அறைக்குள் நுழைந்தான். 
நித்யா படுக்கையில் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து,  பாக்கெட்டுக்குள் இருந்த தலைவலி தைலத்தை எடுத்து செந்தூரிடம் கொடுத்தான்.
தைலத்தை கையில் வாங்கிய செந்தூர் அதை திறந்து அவளது நெற்றியில் தடவி மசாஜ் செய்யவும்,  ” டேய் நான் ப்ரஸ்அப் ஆகிக்கொண்டு வருகின்றேன்.” என வோஸ்றூமிற்குள் நுழைந்தான். 
நல்லவேளை அது தனியார் மருத்துவமனை அதனால் இவர்களுக்கென வசதியான தனிஅறை கொடுக்கப்பட்டிருந்தது. 
ஒருமணி நேரம் கழித்து தூக்கத்திலிருந்து விழித்தவள், எழுந்து பெட்டில் அமர்ந்தாள். 
அவள் எழுந்து உட்காரவும் ப்ளாஸ்கில் இருந்த ரீயை பேப்பர் கப்பல் ஊற்றி கெளதம் அவளிடம் கொடுத்தான்.
“இந்தாங்க ரீ குடியுங்கள்… “
அவள் எழுந்து அமர்ந்திருந்தாலும் மந்தகாச நிலையிலே இருந்ததால் ரீயை கையில் கூட வாங்க முடியவில்லை அவள் நிலை புரிந்த செந்தூர் ரீ கப்பை தன் கையில் வாங்கி அவனருகில் கொண்டு சென்றான். 
அந்த நேரம் பார்த்து கெளதமிற்கு ஃபோன் வரவும் அவன் ஃபோனை ஆன்சர் பண்ணிக்கொண்டு வெளியே போனான்.
செந்தூர் அவள் அருகில் அமர்ந்து அவளிற்கு ரீயை புகட்டவும் அதை குடித்து முடித்தவள், அவனை முறைத்தாள்.
அவன் என்ன? என்பது போல பார்க்கவும் அவனது சட்டையை கொத்தாக பிடித்தவள் அவனை தன் முகத்தருகே இழுத்து அவன் கண்களை நேருக்குநேர் பார்த்து “ஏன்டா அப்படி செய்தாய்…  நீ சரியான சுயநலவாதி… ஐ கேட் யூ.” என்றவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது. 
“இதுக்கு மேலே நான் என்ன… ?பண்ணி உன்னை இந்த நினைப்பில இருந்து மீட்க முடியும்.உன்னிடம் ஏதும் ஐடியா இருந்தால் சொல்லு …முடிந்தால் ட்ரை பண்றேன். “
“நான் என்ன?  சொன்னாலும் செய்வியா…? அப்படி செய்தால் உன்னை மன்னிப்பதா….வேண்டாமா…? என்று நானே முடிவு பண்றேன். என்றவள் அவன் காதினுள் தன்னுடைய வேண்டுகோளை சொன்னவள். இதை நீ ஒழுங்கா பண்ணாலே போதும்.அதுவரையும் நான் உன்கூட பேசவே மாட்டேன்.” என்றாள். 
 
எழுந்து தலைமுடியை கையால் கோதி கிளிப்பை மாட்டினாள். 
“ஹலோ…நீ சொல்ற எல்லாத்தையும் கேட்க முடியாதுடி…  போடி. என்னை உன் விளையாட்டு பொம்மை என்று நினைச்சியாடி…”
அவள் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு . 
“ச்சே… என பெட்டில் ஓங்கி குத்தியவன்… ஏதாவது சொல்லிட்டு…போறாளா பாரு… “
அவள் வெளியே வரவும் கெளதமும் வந்து கொண்டிருந்தான்.அவனை கண்டவள் “சாரி அண்ணா” என்றாள்.
“நீயா?  இப்படி பேசினாய் என்னால் நம்பவே முடியவில்லை… “
“ஆ… அது காலையிலே தலைவலி இங்கே வந்தாவது ரீ குடிக்கலாம் என்று நினைத்தேன். அந்த வீணாப்போனவன் தலையணையை எறிந்து ப்ளாஸ்கையே…உடைச்சிட்டான். இப்பத்தான் இரண்டாங்கிளாஸ் பையன் பாரு…” என வாய்க்குள் கூறிக்கொண்டு நான் கிளம்புறேன் என்று கூறி ‘கடகட’ என நடந்து சென்று விட்டாள். 
‘இன்னும் கொஞ்ச நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள்… எங்களுடனே வீட்டுக்கு வரலாமே… ! இப்போது ஏன்? இவ்வளவு அவசரமாக போகின்றாள். ஐயோ…! இதுகள் இரண்டும் கீரியும்,பாம்புமாச்சே…என்ன?  சண்டையை போட்டுதுகளோ? தெரியல்லியே…ஓடுடா.. கெளதம் இவ அவன் மண்டையை பிளந்தாலும் பிளந்திருப்பா… !’ என்றவாறு செந்தூர் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான். 
அவன் உள்ளே போகவும்,செந்தூர் பெட் மீது படுத்தவாறே காலை ஆட்டியபடி கனவில் இருந்தான். ‘இவன் இவ்வளவு அமைதியாக இருக்க மாட்டானே…! இவனை பேசவிடக்கூடாது என இந்தப்புள்ள நித்யா மந்திரிச்சு விட்டுடுச்சோ… ‘ என நினைத்துக்கொண்டு  அவனை தட்டி எழுப்பினான்.
“கெளதம் எதுக்குடா என்னை பிராண்டுகிறாய், என்றவாறு எழுந்து அமர்ந்தவன் அவனைப்பார்த்து நீ எப்போது உள்ளே வந்தாய்” என்றான்.
“நல்ல வேளையாக உனக்கு எதுவும் ஆகவில்லைடா. ” என்றான் கெளதம். 
“ஏன்டா… எனக்கு ஏதாவது ஆகணும் என்று நேர்த்திக்கடன் ஏதாவது வவச்சிருக்கியாடா…” கெளதம். 
“இல்லை…  மச்சான், நித்யா இப்போதுதான் வெளியே போகிறா… அதாவது சுடிதார் போட்ட மொடோன் காளி அவதாரத்தில்…  அதுதான் கோபத்தில் உன் மண்டையை பிளந்துட்டாளோ…” .என்றவன் வாயை கப்பென்று மூடினால். 
“அவ… அவ்வளவு பெரிய ஆளாடா…? என் மண்டையை பிளக்கின்ற அளவுக்கு அவளிற்கு தைரியம் இருக்கு என்று நினைக்கின்றாயாடா… ?”
“ம்… கண்டிப்பாக…. மச்சான் அவளை தவிர வேற யாராலும் உன்னை அடக்க முடியாது என்று தான் நினைக்கின்றேன்… பேசாமல் அவளுக்கு நீ அடங்கி போயேன் மச்சான்… “
” கண்டிப்பாடா…உன் யோசனையை மீளாய்வு செய்ய முயற்சி பண்றேன்டா. அப்புறம் உன் தொங்கச்சி ஏதாவது சொன்னாளா… ?”
“ம்… ஆமாமா… உன்னை வீணாப்போனவன்… என்று சொன்னதாக ஞாபகம். “
“உனக்கு நல்ல ஞாபகசக்திடா மச்சான். இது அவ சொன்னாளா… ? இல்லை உன் மனசில இருக்கிறதை இது தான் சந்தர்ப்பம் என்று நீ சொல்கின்றாயாடா… “
“டேய்…. நல்லவனே… ஏன்டா? வேணும் என்றால் நித்யாவை  ஃபோன் பண்ணி கூப்பிடுகின்றேன். என்ன? கேட்க வேண்டுமோ? அதெல்லாவற்றையும் நேரிலே அவளிடம் கேளேன்…”
“ஏன்டா…  அவ நம்பர் உனக்கு எப்படி தெரியும்.”
“அவ என் தங்கச்சி மட்டுமில்ல என் ப்ரண்ட்டும் கூட உனக்கு தெரியுமில்ல… “
“தெரியும்… தெரியும்”
“தெரியுதில்ல…பொறாமைப்படாமல் தூங்கு மச்சான். உங்கள் இரண்டு பேருக்கும் தான் எப்பவுமே முட்டிக்குதே… ஏன்டா… “
“இப்ப… முட்டிக்கிறது, பின்னாளில் ஒட்டிக்கிறதற்காய் இருக்கும்டா.”
யாரு… என்தங்கை… யாருக்கு தெரியும் யாரோடு யார்.” என்று. 
“டேய்… லூசாடா நீ ஒட்டிக்கிறது என்றால் நட்பாகலாம் என்று அர்த்தம்டா… “
“நம்பீட்டேன்… போ… அதுசரி… அந்த அக்ஷ்ஷரா மாட்டர் அவளுக்கு தெரியுமாடா… ?”
“ம்… அது தான் ஒரே சண்டைடா… ஒன்றும் புரியல்ல…”
“உனக்கு அக்ஷ்சரா மாட்டர் தேவையாடா… ! நீயே இழுத்துகிட்டது தான் அனுபவி… எவ்வளவோ…? சொன்னோம் கேட்டியாடா…. பெரிய காதல், காவியம்,கத்தரிக்காய் என்று என்னென்னவோ… ? சொன்னியேடா…”
“ம்… ஆமாமா… ஆனால் இவ சரியான பஜாரி மச்சான். ஐந்து வருடத்துக்கு லிவிங் றிலேசன்ஸ்ல இருக்கலாமாம். அதுக்கு பிறகு ஓகே என்றால் கல்யாணம் பணணிக்கலாமாம்,அவளுக்கு என்னை விட என் பணம் தாண்டா முக்கியம்.”
“அப்போ… இந்த பொண்ணு நித்யாவை பார்த்தால் இந்த ஜென்மத்தில் உன்னை விட மாட்டா போல… ஆனால் அவ ரொம்ப நல்ல பொண்ணுடா…”
“ம்… தெரியும்… பட் நான் அக்ஷ்சராக்கு பத்து நாள் ரைம் கொடுத்திருக்கின்றேன்டா… “
“ஏன்டா… அவளை பற்றி தெரிந்துமா…? அவளை கல்யாணம் பண்றேன் என சொன்னாய். வேணாம்டா…அவளே விலகுறன் என்ற மாதிரி பேசினாலும்… நீயாக அவளுக்கு சான்ஸ் கொடுப்பாய் போலிருக்கே… “
“இது என்னுடைய தப்புக்கான தண்டணை என்று நினைத்துக்கொள்கின்றேன்டா… “
“டேய்… நித்யா….ரொம்ப நல்ல பொண்ணுடா… நீ எதிர்பார்க்கின்றன காதலை அவ ‘டன்டன்’னாக அள்ளி தருவாடா…!  வேணும் என்றால் பார்றா… உன் மொத்த வாழ்க்கையையும் அவ கைக்குள்ளே தான் இருக்கும். நீயும் இஸ்ரப்பட்டு அவ கைக்குள் கட்டுப்பட்டிருப்பாய். அப்போது என் பெயரையே மாற்றி வைத்து கொள்கின்றேன்.” என்றான் கெளதம். 
“டேய்… ப்ளீஸ்டா… கெளதம்… என்னை மாதிரி ஒருத்தன் அவளுக்கு வேண்டாம். இந்த பேச்சை இத்தோடு விடு. “
“டேய்… அப்புறம்… ரொம்ப கவலை படுவாய் பாரு. நான் செல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.”
“ப்ச்… விடு மச்சான். வீணாக அவ மனசில் ஆசையை வளர்க்காமல் இருந்தால் சரிடா…”
“என்னவோ…? நீ நினைத்ததை செய்து முடிப்பதில் நிலையாய் இருப்பாய் அதற்காக அவ மனசை நோகடிச்சிடாதே… ஓகே… “
“டேய்… நான் உன் நண்பன்டா… “
“அதனால் தான்டா இதை சொல்கின்றேன். என் நண்பனின் குணம் எனக்கு அத்துப்படியாயிற்றே… .” என்றான் கெளதம். 
“சரியா… இந்தப்பேச்சை விடு. கார்த்திக் எப்போது மும்பையில் இருந்து வருகின்றான்.தகவல் ஏதும் சொன்னானா…”
“இல்லைடா… இந்த மது உன்னை பார்க்க வருகின்றேன் என்றாள். நான் இங்கே வரவேண்டாம் உன் வீட்டுக்கு வரச்சொன்னேன். அநேகம் ஈவ்னிங் வருவாளாயிருக்கும்.” 
“மது வந்து கத்தப்போறா… மச்சான். அவ அத்தனை தூரம் படித்து படித்து சொன்னா, நான் கேட்கவில்லை.செம கோபத்தில் இருப்பா என்று நினைக்கின்றேன்.” என்றான் செந்தூர். 
“ஏன்டா… ஒருவாட்டி கூட உனக்கு சந்தேகம் வரலியா அவ மேலே உனக்கு… “
“பேச விட்டா தானே… அதுக்குள்ள என்னை     டைவேட் பண்ணிட்டாடா…இதுவே என் கடைசியும் முதலுமான தப்பாக இருக்கும்டா… சாரிடா கெளதம் என்னை மன்னிச்சிடு…”
“சரி…  விடு… எல்லாவற்றையும் சரி பண்ணலாம். உன்னால் சரி பண்ண முடியும்.”

Advertisement