Advertisement

மலர் 09
விழுந்தவள் எழ முடியாது அப்படியே இருக்கவும், உள்ளே சென்று கிளம்பி வந்தவன் முகம் சொல்ல முடியாத உணர்வில் இறுகி கிடந்தது. 
என்னடி…நினைத்தாய் என்னைப்பற்றி உனக்கு செலவு பண்ணவும்,உடம்புக்கு சுகத்தை தரவும் ஒரு இளித்தவாயனை பார்த்து கைக்குள் போட்டுக்கொள்ளலாம் என்றா…” என கர்ஜித்தவன்,அவளைப் பார்த்து தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து அவளது முகத்தில் விசிறியடித்தான். “இதற்கு தானே என்னை காதல் என்ற பெயரில் சுற்றி வந்தாய்.  அது மட்டுமல்லாது நேற்று மாட்டர் பண்ணுகின்ற அளவுக்கு வந்தாய் அல்லவா… ?
இது உன் தப்பு மட்டுமல்ல என்னுடையதும் தான். ஆனால் நீ ரொம்ப கெட்டிக்காரி தான். என்னை பாதுகாப்பு கவசம் அணியசொல்லி மாட்டருக்கு ஒத்துகிட்ட போதே நான் புரிந்திருக்கும் வேண்டும்.  இப்போது தான் எல்லாம் புரிகிறது. நீ எவ்வளவு பெரிய தில்லாலங்கடி என்று, பட் இந்த செயலால் எனக்கு தான் உன்னை விட லாபம் அது என்ன? என்று சொன்னாலும் உன் பணத்தாசை பிடித்த மனதுக்கு புரியவும் புரியாது.”
“என்ன பண்ணுவது நான் காதலி என்று நம்பிய பெண் என்னுடைய பணத்திற்கும் ஆசைப்பட்டு அதே நேரம் உடம்பு சுகத்தையும் அடையுறதுக்கு என்ன?மாதிரி… எத்தனை நாளாக பிளான் போட்டியோ…! தெரியலை… ! டபுள் கேம் ஆடுடியாடி நீ. உன்னை என உறுமியவன் கைகள் அவள் தொண்டையை நெரித்திருந்தது. 
“மறுபடியும் சொல்லுகிறேன் கவனமாக கேள்.நீ என் மனைவி என்ற உறவிலும் ராணி போன்றே வாழலாம். உன் சினிமா கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு வா. உன்னை தொட்ட குற்றத்திற்கு காலம் முழுவதும் வைத்து நான் கண் போல காப்பாற்றுவேன்.”
“….”
தப்பான தொழில் செய்யும் பெண்களை விட கேவலமான பொண்ணு  நீ. ஆனால உனக்கு பணக்காரன் வேணுமென்றால் வேற யாரும் இளிச்சவாயன் கிடைப்பான் போய் பார். உன்னுடைய தேவைக்கு என்னை நீ தேர்ந்தெடுத்திருந்தால் அது தப்பான சாய்ஸ்.” எனக்கூறியவன்  அவள் கழுத்தில் இருந்து கையை உதறினான். 
நீ என்னை உண்மையாக லவ் பண்ணியிருந்தால்  உனக்கு பத்து நாட்கள் தான் ரைம்.நீ நேர்ல கூட வர வேண்டாம். உன் மனசு மாறினால் ஃபோன்ல கூட சொல்லு நான் முறைப்படி என் அம்மா, அப்பாவோட வந்து பேசுகின்றேன்.இல்லை என்றால் என் மிகுதி வாழ்க்கையை என்னை எனக்காக ஏற்கும் பெண்ணுக்காய் வாழ்வேன். அது மட்டுமில்லை இனி இந்த குடி என்ற கருமத்தை என் கையால தொடமாட்டேன். ஏன்?தெரியுமா?  ஃபப்புக்கு வந்ததனால் தான் உன்னை மாதிரி கேடு கெட்ட பெண்ணிடம் காதல் என்னும் பெயரில் கட்டிலில் இனணந்தேன்.”
“….”
கைமுஷ்டியை மடக்கி குத்தியவன் இதுக்கெல்லாம் உனக்கு பத்து நாள் ரைம் என்றவன் கெஸ்ட்ஹவுஸ் கதவை சாத்தி பூட்டி விட்டு தன் காரை ஸ்ராட் செய்து அவளருகில் கொண்டு வந்தவன் அவளைப்பார்த்து ரைம் ஸ்ராட்ஸ் நவ் என்று கூறியவன் காரை வளைத்து கொண்டு சென்று விட்டான். 
காரில் சென்றுகொண்டிருந்தவனனுக்கு மிளகாயை அரைத்து உடம்பெல்லாம் பூசியது  உடல் காந்தியது.அதே காந்தல் அவன் மனதையும் பற்றி தகித்தது.
இத்தனை நாள் தப்பு செய்யாத போது இல்லாத பதட்டம் இன்று வந்து ஒட்டிக்கொண்டது. ‘தப்பு பண்ணி விட்டோமோ… ? வாழ்க்கையை கொஞ்சம் சீரியசாக எடுத்திருந்தால் தப்பு என்று தெரிந்தும் அதை பண்ணாமல் தவிர்த்திருக்கலாமோ… ? வீட்டுக்கு தெரிந்தால் என்ற நினைப்பே கசந்தது. தாயின் முகம் அவன் மனதில் வந்து போக அவரின் மடியில் முகம் புதைத்து அழவேண்டும் போலிருக்கவே விரைந்து வாகனத்தை செலுத்தியவன் திடீரென இடது பக்கமாக வந்த வண்டி கட்டுப்பாடின்றி அவனை நோக்கி வரவும்  சட்டென்று காரை வலது பக்கமாக இருந்த பாதையை நோக்கி திருப்பி சடன்ப்ரேக் போட்ட வேகத்தில் கவலை கண்ணாடியில் பட்ட வேகத்தில் கண்ணாடி உடைந்து சிதறியதில் தலையில் அடி பட்டு இரத்தம் பெருகவும் காருக்குள்ளேயே மயக்கமானான். 
                                    
                                 *****
அவன் கண் முடித்த போது  அவன் பக்கத்தில் கண்கலங்கியபடி இருந்த தாயை பார்த்தவனிற்கு  தன் தவறின் தாக்கம் புரிய அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கவும் சந்திரா பொங்கி விட்டார். ” எப்போதிருந்தடா கல்நெஞ்சனாய் மாறினாய் அப்பு.” என அவர் கத்தவும் அவன் விழிகளில் இருந்து கண்ணீர் கோடாக வழிந்து அவன் தலையணையை நனைத்தது.
அப்பு என்ற வார்த்தையில் அவன் சிறுவனாய் மாறியிருந்தான்.கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு தாயின் அந்த ஒற்றை அழைப்பில் இரும்பு இளகியிருந்தது. 
“அத்தை இப்போது எதுக்கு அழுகிறீங்க… ? உங்க அருமை மகனுக்கு எதுவும் ஆகவில்லை.முதல்ல கண்ணை துடையுங்கள். இது ஹாஸ்பிட்டல். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது ஓகேவா…” என மிக மென்மையாய் அவரது கண்களை துடைத்து விட்டாள். 
“சரி… நீ சொன்னால் சரியாக தான் இருக்கும் என்றவர், ஆனாலும் பாரேன் இவனுக்கும் உன் மாமாக்கும் இடையில் என்னென்ன வாக்குவாதம் வரப்போகுதோ…? தெரியல்லியேடி…”என புலம்பினார்.
“அப்படி எதுவும் ஆகாது…”
“உன் வாய்முகூர்த்தம் எந்த பிரச்சனையும் வராமல் இருந்தால் சரி. “
“அது எதுவும் வராது சந்திரா. நீ இப்போது கிளம்பு மாப்பிள்ளைக்கு எதுவும் ஆகாது.” என்றார் அவர்கள் மூவரையும் பார்த்துக்கொண்டிருந்த மார்க்கண்டேயனும். 
 
“அண்ணா நீயே சொல்லு,இவனுக்கு ஊர் சுற்றுகின்ற வயசா? இவ்வளவு பெரிய தொழிலையும் அந்த மனுசனே ஒத்தை ஆளாய் நின்று கவனிக்கிறார்.இந்த வயசில் அவருக்கு ஒரு பத்து நிமிசமாவது ஆறியிருக்க நேரமில்லை. அப்பாக்கு ஒத்தாசையாக இருக்க வேணும் என்று இப்ப வரைக்கும் இவனுக்கு யோசனை இல்லை. அப்படி என்னத்தை வெட்டி கிழிக்கிறான். ஏற்கனவே இவன் செயற்பாடுகளில் அவருக்கு திருப்தி இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்கின்றேன் அவர் சொல்வது மட்டும் உண்மை என்று நான் நம்பும்படியாக ஏதாவது தகவல் கிடைக்கட்டும் அப்புறம்… அப்புறம்… அவன் என்னை உயிரோடு பார்க்கும் கடைசி நாள் அதுவாக தான் இருக்கும்.” என்றவருக்கு மூச்சு வாங்கியது. 
“அம்மா… அத்தை… சந்திரா.” என மூன்று குரல்களும் அதிர்ச்சியுடன் வெளியே வந்தது. 
“அப்பா… அத்தையை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போங்கள்.நான் இங்கே இருக்கின்றேன். அத்தை டென்சன் ஆகிறாங்க…” என்றாள். 
“சும்மா…  என்னை துரத்தி விடாதடி.நான் கேட்பதற்கு அவனை சரியாக பதில் சொல் சொல்லு. முதல்ல நேற்று இரவு ஏன்?  வீட்டுக்கு துரை வரவில்லை. எப்படி? இந்த விபத்து நடந்தது… ? இவன் அப்பாக்கு என்ன? விளக்கம் சொல்லப்போகின்றான் என்று எனக்கும் சொல்ல சொல்லு, பிறகு நான் ஒன்றை சொல்ல, இவனொன்றை சொல்லி அவருக்கு பிபி ஏத்த வேணாம் பாரு. “
“நான் பார்த்துக்கிறேன் அம்மா… நீங்கககிளம்புங்க.”
“இவன் நான் நான் என்று யாரையும் மதியாமல் திமிருடன் இருந்தே உருப்படாமல் போகப்போகிறான் பாரு என சொன்னவர் அண்ணா நீ வா நாம போகலாம்.” என்று கண்ணை கசக்கிக்கொண்டே கிளம்பினார்.
“நித்து நீ இங்கே இரு அப்பா சாயங்காலம் வருகின்றேன். சுப்பிரமணியன் வரும் போது அவனை ரென்சன் ஆகாமல் பாரு.” நாங்கள் வருகின்றோம் என இருவருக்கும் பொதுவாக கூறியபடி கிளம்பினர். 
அவர்கள் இருவரையும் வழியனுப்பி விட்டு அவனருகில் வந்தவள் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று ஒரு பேசின் நிறைய தண்ணீரும் துவாலையையும் எடுத்துக்கொண்டு வந்து அவனருகில் நின்றவள்,அவனைப்பார்த்து “ரெஸ்மாத்தணும்.” என்றாள். 
“இல்லை…வேண்டாம்” என்றவன் தன்னை குனிந்து பார்த்தவன் சேட் முழுவதும் இரத்தம் பரவி இருந்தது இரத்தம் காய்ந்து வாடை வீசத்தொடங்கி இருந்தது. 
“அது வந்து…” என அவன் இழுக்கவும் ‘அவனை பார்த்தவள் அவன் தலை,கை,கால் என அடி பட்டு பன்டேஜ் போடப்பட்டிருந்தது. கையில் தான் பார்க்கர் ஆகியிருக்கும் மற்ற இடங்களில் காயம் தான் போல என நினைத்தவள்’ தன் ஒரு பக்கமாக போடப்பட்டிருந்த துப்பட்டாவை எடுத்து இரண்டு பக்கமாக சேர்த்து முடிச்சு போட்டு அவனருகில் கட்டிலில் அமர்ந்தவள் சேட் பட்டன்களை கழற்றி சேட்டை அவன் உடம்பில் இருந்து கழற்றியவள் பார்த்தது அவனது சிக்ஸ் பேக்கையும் திரண்ட புயங்களையும் விரிந்த தோள்களையும் தான். அந்த நிமிடம் அவளுக்கு தோன்றியதெல்லாம் இவன் உடம்பை கட்டுக்கோப்பில் வைத்திருப்பவன் என்று தான் மற்றபடி எதுவும் தோன்றவில்லை.
மெல்ல திரும்பி பேசினுள் இருந்த தண்ணீரினுள் துவாலையை நனைத்து அதை பிழிந்தவள் அவன் பக்கமாக திரும்பி அவனது உடம்பை துடைக்க ஆரம்பித்தவள் அவன் நெழியவும் என்ன? என்பது போல பார்த்தாள். 
“வேற யாராவது இருந்தால் வரச்சொல்லி இதை செய்யலாமே… !என்றான்”
“சரி…எனகாகூறிக்கொண்டே தன் ஃபோனை கையில் எடுத்து  வைத்து கொண்டு அவனை பார்த்து எனக்கு இந்த இடம் புதுசு…. உனக்கு யாரையாவது தெரிந்தால் அவர்கள் நம்பர் சொல்லு வரச்சொல்கின்றேன்.” என்றாள். 
‘இவ சும்மாவே ஆடுவாளே…  நாம வேற தெரியாத்தனமாக வேப்பிலையை கையில கொடுத்துட்டோமே…! இவ சுழன்று சுழன்று ஆடுவாளே…? இவ கூட பேசாமல் இருந்தாலே போதும்.’ என மனதுக்குள் நொந்து கொண்டான். 
அவன் பேசாது அமைதியாக இருக்கவும் கையிலிருந்த தன் ஃபோனை வைத்து விட்டு மீண்டும் அவன் உடலை துடைத்து விட்டு அவனை நிமிரச்செய்து முகத்தை மெதுவாக துடைத்தவள் பையினுள் இருந்த வட்டகழுத்துள்ள ரீ சேட்டை அணிவித்தவள் அவனை பார்த்து “பான்ட்டை கஞ்சம் கழற்றுகிறாயா?” என்றாள். 
“முடியாது போடி…”
அவள் அவனை பார்த்து முறைக்கவும் “சும்மா… சும்மா உன் முட்டைக்கண்ணை காட்டி  என்னை வெறுப்பேத்தாதேடி… என்னால் முடிந்தால் கழற்ற மாட்டேனா… ?” என்றான். 
அதை சொல்லித்தொலைக்க வேண்டியது தானேடா….?  என்னமோ நான் உன்னை ரேப் பண்ண வந்த மாதிரி முழிக்கிற…” என்றவள் அவனது லுங்கியை எடுத்து தலை வழியாக போட்டு அவனது இடுப்புக்கு கீழே இழுத்து விட்டவள் ஆவனது பெல்டையும்,பான்டையும் கழற்றி விட்டு கால்களையும் துடைத்து முடித்த விட்டு பேசினையும் துவாலையையும் எடுத்து போய் கழுவி வைத்தவர், துவாலையை அலசி பிழிந்து காயப்போட்டவள்,அவனருகில் இருந்த ஃபான் சுவிச்சை போட்டு விட்டு  அவனை பார்த்து ” பவுடர் போட்டுக்கிறியா… ” என்றாள். 
“இல்ல… அதெல்லாம் போட்டுக்கிறதில்லை.”
“சரி… பெப்பியூம் போட்டுக்கோ ப்ளட் வாடை வீசாது. கஸ்யூவலான ஸ்மெல் தான்.” என்றவள் அவனது பதிலை எதிர்பாராது கொஞ்சமாக போட்டு விட்டாள். 
வீட்டில் இருந்து வந்த உணவை பிசைந்து ஸ்பூன் போட்டு கொடுத்தவள் கூடவே மாத்திரைகளையும் கொடுத்து அவனை படுக்கவைத்தாள். 
அவன் வலியின் வீரியத்தில் உறங்கி விட அவள் தன் லப்டாப்பை ஓப்பின் பண்ணி அருகிலிருந்த மேசையில் வைத்து தன் வேலைகளை ஆரம்பித்தாள் அதாவது தன் மாமனின் எக்ஸ்போட்கம்பனி கணக்கு வழக்குகள், அவருக்கு இருக்கும் பத்து பதினைந்து ஷோரும் கணக்குகள், அவர்களது ஷாப்பிங்மால், ஒரு ஸ்வீட்ஸ்டால்,நான்கைந்து துணிக்கடை,பேக்கரி, சர்க்கரை மில், என ஏகப்பட்ட தொழில்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி போல்டர்சை உருவாக்கி அந்தந்தவியாபாரத்திற்குரிய டேட்டாக்களை பதிய ஆரம்பித்தவள் தன் மாமனிற்குக்கு ஃபோன் பண்ணி ” மாமா உங்களது அத்தனை வியாபார நிறுவனங்களுக்கும் தனித்தனியாக சென்று அங்கே கணக்கு வழக்குகள் மற்றும் வியாபாரம் நடைபெறும் முறை என்பவற்றை கண்காணிக்க வேண்டும். ” என்றாள். 
“அதற்கென்ன நித்தி பேய் பார்த்தால் போகிறது.” என்ற குரல் அருகில் கேட்கவும் மாமா என துள்ளியெழுந்தவள் அருகில் தூங்குபவனை பார்த்து அமைதி என சைகை காட்டினாள். 

Advertisement