Advertisement

மலர் 07
இவள் சுப்பிரமணியை உலுப்பவும்,  “என்ன குட்டிம்மா…ஏன்? கார்டிக்கியை திறக்க சொல்கிறாய்.”
“என் பூசணி அதற்குள் தான் இருக்கிறது.மூச்சு முட்டி சாகப்போகுது அங்கிள் சீக்கிரம் வாங்கோ.” என பதறினாள்.
“அட…ராமா… சீக்கிரமாய் வா குட்டிம்மா. நான் அதை மறந்து விட்டேன்.” என்று கூறியபடி இருவரும் கார் அருகினில் சென்று பின்பக்கமாக இருந்த பூசணியை வெளியிலெடுக்கவும் அது இவ்வளவு நேரம் நல்ல தூக்கத்தில் இருந்து அப்போது தான் தன் கண்களை திறந்து புதிய இடத்தை பார்த்து அவளை கண்டு அவளிடம் தாவியது. 
அதை தூக்கி கண்டு வந்தவள் “அப்பா நாங்கள் நம் வீட்டுக்கு போவோமா. “
“சரிடா…போகலாம்.” என்றவர் சுப்பிரமணிய பார்த்து “டேய்… மணி  நாங்கள் வீட்டுக்கு போய் ரிலாக்ஸ் பண்ண வேண்டும். வரட்டுமா? “
அவள் பின்னே வந்த சந்திராவும், மாமியாரும் அவள் செயலை பார்த்து  புன்னகைத்தனர்.
“அங்கிள், அன்ரி அப்புறம் கிழவி எல்லாருக்கும் போயிட்டு அப்புறமா வருகிறேன். “
“ஏன்டி…நான் கிழவியா”
“ஆமா… பின்னே இல்லையா? நீ குமரியா? நீ குமரி என்றால் நான் யார்? என்றாள். “
“அடியேய்… வேணாம் போயிடு. ” என பாட்டி கத்தவும்,”அது தான் போறேனே என்றவாறு ஓடி அவள் தகப்பனோடு சேர்ந்து கொண்டாள்.திரும்பி பாட்டியை பார்த்து தன் ஒற்றை விரலை மடித்து பழிப்பு காட்டி விட்டு, அருகில் நின்ற சந்திராவை பார்த்து கண்டித்து விட்டு ஓடி விட்டாள். 
“அத்தை பார்த்தீர்களா? கொஞ்ச நேரத்திற்குள் எப்படி கதிகலங்க வைக்கிறா என்று, பெத்தா இப்படி ‘துறுதுறு’ எண்டு ஒன்றை பெறனும்.”என சந்திரா அங்கலாய்த்து கொண்டார்.
ஏன்டி…உன் பையனும் முன்பெல்லாம் இப்படி ‘துருதுரு’ என்று இருந்தான். ஆனால் இப்போது  துருப்பிடித்து போய்விட்டான். எல்லாம் சேருவார் சகவாசம் என்று கூறிக்கொண்டே சுப்பிரமணியன் உள்ளே சென்றார். 
                                *****
கொஞ்ச நாளாகவே செந்தூர் நிலை கொள்ளாது வானில் பறந்தான் என்று சொல்லலாம்.ஏனென்றால் அவனை ஒரு பெண் காதலிக்கிறாள் அவள் மிஸ் சென்னை. காதலிப்பதிலும் பார்க்க காதலிக்க படுவதில், இருக்கும் இன்பம் சொல்லி புரியாது. அந்த நிலையில் தான் அவனும் தலைகால் புரியாது பறந்து கொண்டிருந்தான். 
மிஸ் சென்னை அக்ஷ்சரா மோகன் தான் அவன் வாழ்வில் வந்த வசந்தம். வழமை போல அவன் பார்ட்டி, கிளப்,டேட்டிங் என சுத்திக்கொண்டிருந்தவன் வாழ்வில் அவன் நண்பன் திருமணத்துக்கு சென்ற போது சாதரணமாக ஏற்பட்ட நட்பு இன்று காதல் வரை வந்து நிற்கின்றது. 
இந்த காதல் என்பது அவனுக்கு புதுவித அனுபவமாக இருந்தாலும், அவளிற்கு இது பல மாதங்களாக திட்டமிட்டு ஏற்படுத்திக்கொண்ட ஒரு சம்பவம். 
ஆம்… ! அக்ஷ்சரா மிஸ் சென்னை ஆன பின் சினிமா வாய்ப்புகளிற்கு காத்திருந்ததாள். அவள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவுமில்லை. பணம் ‘கோடிகோடி’யாக கொட்டவுமில்லை. அதனால் பல நாட்கள் திட்டமிட்டு யோசித்த வழி இது தான். பணக்காரனாக கோடீஸ்வரனாக ஒருவனை பிடித்து அவனை புரடியூசராக்கி தான் சினிமாவில் கலக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவள் அறியாத விடயம் என்ன?என்றால் அவன் எவ்வளவுக்கு இளகுவானோ…!அந்தளவிற்கு மிக கடினமான இரும்பின் தன்மையுடைய இயல்புடையவன். அவன் எவ்வளவு முக்கியமானது என்றாலும் அது வேண்டாம் என்று நினைத்தால் அதை உயிர் போனாலும் திரும்பி பார்க்க மாட்டான் என்பதை அறியாமல்  போய் விட்டாள் அக்ஷ்சரா. 
கிழமை கடைசி இரு தினங்களும் அவனுடைய நண்பர்கள்,அதாவது அவனுடைய சிறிய வயதில் இருந்தே அவனுடன் ஒன்றாக படித்த நண்பர்கள் அவனது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள்   அவர்கள் மூவரும் உயர்ந்த இடங்களில் இருப்பவர்கள் அவர்களும் பணக்கார வீட்டு பிள்ளைகளே இவர்கள் நால்வரும் என்றுமே பிரிந்ததில்லை அப்படி அவர்களிற்கு இடையில் பிரிவு வந்தது என்றால் அவன் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றபோதே… ! வழமை போல இன்றும் அவர்கள் மூவரும் வந்திருந்தனர்.அவன் வீட்டு மாடி அவர்களால் கலகலத்தது. 
அன்று விடுமுறை என்பதால் நித்யாவிற்கு வீட்டிலிருக்க ஃபோர் அடிக்கவும் “அப்பா நான் அத்தை வீட்டுக்கு போகட்டுமா? “
“சரி…அங்கே போய் அவங்களை கதறடிக்காமல் நல்ல பெண்ணாய் இரு.” என கூறியவர் சீப்பு எடுத்து வந்து அவளது தலையை வாரி பின்னி விட்டு கிளிப் மாட்டியவர் “போய் வா” என்று அனுப்பினார்.
அவள் மான் போல துள்ளிக்கொண்டு ஓடவும் அவளது வீட்டு  கேட் திறந்து ஒரு நாற்பது வயது மதிக்க தக்க பெண்னொருவர் உள்ளே வந்தவர்
அவளைக்கண்டு “மாயன் இருக்கிறாரா? ” என்றாள். 
ஆ… என தலையாட்டியவள் “நீங்க “என கேட்டாள். 
“நான் துர்க்கா…”
அவரை பார்த்தவுடன் ஒரு வித ஒட்டுதல் தோன்ற “நீங்க அப்பா ப்ரண்டா….” என்றவளை பார்த்து ஆம் என்பது போலீஸ் தலையசைத்தார் அந்த பெண். 
“சரி உள்ளே வாங்க… அப்பா உள்ளே தான் இருக்கிறார்.” என்றவள் “அப்பா… அப்பா” என அழைத்து கொண்டு உள்ளே ஓடியவள் திரும்பி தகப்பனுடன் வந்தாள். 
வெளியே வந்த மார்கண்டேயன் அவளை பார்த்தவுடன் “ஹே… துர்க்கா வா… வா…நீ மட்டும் தான் வந்திருக்கின்றாய் எங்கே உன் வீட்டுக்காரன் அவன் வரவில்லையா” என்று வரவேற்று உள்ளே உட்கார வைத்தார். 
அவள் உட்காரவும் “ஆன்ரி நீங்க செம பியூட்டி அன்ட் யங் சின்னப்பொண்ணு போலவே இருக்கீங்க… என்றவள் அப்பா நீ ஆன்ரி கூட பேசு நான் அங்கிள் வீட்டுக்கு போய் வருகின்றேன்.” என்றவள் திரும்பி தகப்பனைப்பார்த்து “மறக்காமல் ரீ போட்டு குடுப்பா…” என்றவாறே ஓடி விட்டாள். 
அவள் சந்திராவின் வீட்டுக்குள் நுழைந்து உள்ளே போய் “அத்தை… அத்தை… மாமா… மாமா… “என அழைத்தாள். 
அவளது குரல் மாடியில் இருந்த செந்தூருக்கும் அவனது நண்பர்களுக்கும் கேட்கவே… “டேய் உன் பொண்டாட்டி வந்தாச்சு… பாரு உன் அப்பா அம்மாவை தான் கூப்புடுறா?” என்றான் நண்பன். 
அவன் தோளில் தட்டியவன் எனக்கு தெரியாமல் பொண்டாட்டியா… ?என்னடா திடீர் தோசை திடீர் வடை போல திடீர் பொண்டாட்டியா… ? யாரும் பக்கத்து வீட்டு பெண்ணாயிருக்கும்டா.”
“நானும் எங்களை கழற்றி விட்டு நீ கல்யாணம் கட்டிகிட்டியோ என நினைத்தேன்.” என்றான் நண்பன் கௌதம்.அதைக் கேட்ட மற்ற நண்பர்களும் சிரிக்க, “ஏய்… மது… என்னடி சிரிப்பு பல்லு சுழுக்க போகுது வாயை மூடுடி என்றான் செந்தூர். 
“குட்டிம்மா… வா.. வா. என்ன?  சாப்பிடுகிறாய்.”
“ஒன்றும் வேண்டாம் அத்தை.ஏன்?  எப்போது வந்தாலும் என்ன? சாப்பிடுகின்றாய், என கேட்டு என்னை கொலையாய் கொல்றீங்க… ! நீங்க என்ன?  சாப்பாட்டு கடையா வச்சிருக்கீங்களா ?”
“இல்ல… கண்ணு இது நம்ம பண்பாடு, கலாச்சாரம் வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிப்பது நல்ல பண்புதானே கண்ணு… “
“அப்போது  என்னையும் விருந்தினராக தான் பார்க்கிறீர்கள்? இல்லையா?  அத்தை.” என்றவாறு ஹாலில் மாட்டியிருந்த அவரின் பிள்ளைகளை பார்த்தவளின் தலையில் செல்லமாக குட்டிய சந்திரா உனக்கு இத்தனை வாயா? வாயாடி. “
“எனக்கு ஒரு வாய் தானே அத்தை… ” என்றாள். 
“அம்மா… தாயே… உன்னிடம் பேச நான் தயாரில்லை. வா உனக்கு என் பையனை அறிமுகப்படுத்துகிறேன். ” என்று கூறியவாறு அவளை மேலே இழுத்துச்சென்றார். 
“அத்தை…உங்களுக்கு பையனா? எத்தனை வயசு, எத்தினையாம் வகுப்பு படிக்கிறான்.”
“ம்…அவனே ஒரு பையனுக்கு அப்பா ஆகிற வயசு தான். அவனை நேரே வந்து பார்த்து விட்டு சொல்லு குட்டிம்மா…” என்றார். 
மேலே வந்து அவன் றூமை நோக்கி சென்றவர் கண்களில் அவர்கள் நான்கு பேரும் ரெயில் இருத்து கரம்போட் விளையாடுவதை கண்டவர் அங்கே அவளை அழைத்துச்சென்றார். 
தாய் அருகில் வரவும் எல்லோரும் ஒரேதாய் “அம்மா, என்னம்மா? நீங்க ஏதாவது தேவை என்றால் கீழே நின்று கூப்பிட்டிருந்தாலே வந்திருப்போமே… !”என்றான் மகனின் நண்பன் ஒருவன். 
“தாயை பார்த்த மகன் அம்மா வாங்க கரம்போட் ஒரு றவுண்ட் போகலாம்.”
“அட… சும்மாயிர்றா… நீ வேற நேரம் காலம் தெரியாமல்… ” என அவர் கூறவும் அவர்கள் வீட்டு மேல்மாடியின் வடிவமைப்பை பார்த்துக்கொண்டு சந்திராவின் பின்னே வந்த நித்யாவின் காதுகளிலும் அவர்களது பேச்சு குரல் விழுந்தது. அதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட நித்யா, “ஆன்ரி நீங்க பசங்க கூட கரம் விளையாடுவீங்களா? நீங்க ஒரு சூப்பர் மாம்.” என கூறி பின்னாலிருந்தபடி கட்டிபிடித்து முத்தம் கெடுத்து விட்டு திரும்பி பார்த்தவள் ஷாக் அடித்தது போல் நின்றாள். 
ஏனென்றால் அவர்கள் நான்கு பேரும் கூட அவளை தான் வினோதமாக பார்த்துக்கொண்டிருந்தனர். 
‘ஐயையோ… அத்தையோட பையன் மட்டுமில்ல வேறு யார் யாரோ எல்லாம் நிக்கிறானுகளே… இவனுகளை பார்த்தா ஜிம்பாய் மாதிரி இருக்கிறாங்களே…நல்ல வேளை ஒரு பெண்ணும் நிக்குது போல.’ என நினைத்தவளது மனம் சமாளி நித்யா… இவங்க எல்லாம் உனக்கு சப்பை மாட்டர்.’ என தன்னை தேற்றிக்கொண்டு அவர்களை பார்த்து அப்பாவியாய் கண்ணை விழித்தாள்.
‘பார்றா…பச்சை புள்ள போல முகத்தை வைத்திருக்கிறதை…’என்று நினைத்த செந்தூர் தாயை பார்த்து என்ன? என்று கண்களால் விசாரித்தவனுக்கு சுத்தமாக அவளை நினைவிலில்லை. 
“டேய் இது யார்? தெரியுமா?” என்றவர் அவளை தன் முன்னே இழுத்து “பூக்குட்டி… செல்லம் இங்கே வாடா என்று அழைத்து அவனுக்கு “இவ என் அண்ணன் பொண்ணு நித்யா.”
‘புளிமூட்டை மாதிரி இருக்கிறவளை பார்த்து பூக்குட்டி என்று என் மம்மி சொல்லுதே எங்கம்மாக்கு சூனியத்தை வைச்சிட்டா போல’  என நினைத்தவன் அதை வெளிக்காட்டாமல் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான். 
அவனது தாய் அவனை கவனிக்காது மற்றவர்களிடம் இவளை அறிமுகப்படுத்தினார். “நித்தி… .இது கெளதம்… இது கார்த்திக்… இவ மதுரா இவங்க மூன்று பேரும் உன் அத்தான் செந்தூருக்கு சின்னவயசில் இருந்தே பிரண்ட்ஸ்.” என்றார். 
அத்தான் என்று கூறப்பட்ட செந்தூரை நிமிர்ந்து பார்த்தவள் சந்தோசமாக அதிர்ந்தவள் ‘அவன் முகத்தில் தன்னை அறிந்ததாக காட்டிக்கொள்ளவில்லை என்ற போது தான் ஏன் தெரிந்தது போல காட்ட வேண்டும்.’ என நினைத்தவள் மற்றவர்களை பார்த்து “ஹாய் கெளதம்… அண்ணா… ஹாலோ கார்த்திக்… அண்ணா  அண்ட் மது… அக்கா…ஐ ஆம் நித்யஸ்ரீ என்றவள் அனைவருடனும் கைகுலுக்கி இனி நானும் உங்களுக்கு ஒரு பிரண்ட் ஓகேயா.” என சிறு குழந்தை போல வினவியவளை மூவருக்கும் பிடித்து விட மூவரும் ஒரே குரலில் “ஓகே டன்.” என்றனர். 
இவர்களது பாசப்பிணைப்பை கண்ட செந்தூருக்கு கடுப்பானவன் முகத்தை திருப்பி வெளியே பார்த்துக்கொண்டிருக்கவும் அவர் மற்றவர்களுடன் ஒற்றை நிமிடத்தில் மிங்கிள் ஆகி விட்டதை உணர்ந்தவன் தன்னிடம் இருந்த எதை ஒன்று பறிபோவதாய் நினைத்துக்கொண்டான். 

Advertisement