Advertisement

மலர் 20

இடைக்கிடை தன் அறைக்குள் தூங்கும் அவளையும்கவனித்துகக்கொண்டான். அவன் சாப்பிடும் போதே நித்யாவின் அப்பாவிடம்,அவள் குணமாகும் வரைக்கும் தங்களது வீட்டில் இருக்கட்டும் என அனுமதி பெறுவதற்கு தாயையும், பாட்டியையும் வைத்து காய்நகர்த்தி காரியம் சாதித்திருந்தான். 

அவனது பாட்டி அந்த நேரத்துக்கு அவனது அறையை நோகாகிச்செல்லவும், “என்ன பாட்டி வோக்கிங் போறிங்களா…” என்றான். 

அங்கிருந்தவனை அப்போது தான் பார்ப்பது போல பார்த்து விட்டு அவனருகில் வந்தவர், “நீ  இங்கே என்னப்பா பண்ற… “

“ம் உங்க பேத்திக்கு வாட்ச்மேன் வேலை பார்க்கின்றேன்… “

“நான் கூட என் பேத்திக்கு துணையாக அவளோடு தூங்குவதற்கு தான் வந்தேன்.அதனால் நீ வெளியே இருந்து பாட்டியையும், பியூட்டியையும் கவனமா பாரு பேராண்டி.” என கூறியபடி உள்ளே சென்று கதவடைத்து கொண்டார்.

‘இந்த பாட்டிக்கிருக்கிற குசும்பு முழுவதும் பேத்திக்கும் இருக்கும் போல.சரியான அராத்து கேசுகள்.’ என நினைத்தவன் சற்று நேரத்தில் உறங்கிவிட்டான்.

அடுத்த நாள் காலையில் எழுந்து  கிராமுக்கு போவதற்காக கிளம்பியவன் அவள் இருந்த அறையினுள் வெளிச்சம் வர கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தவன் அவள் எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்தவன், அருகில் சென்று “பெயின் கில்லர், தூக்கமாத்திரை எல்லாம் கொடுத்தும் தூக்கம் வரவில்லையா…?” என கேட்கவும் இல்லை என்பதுபோல தலையசைத்தவள், அவன் ஜிம்முக்கு போவதற்கான உடையுடன் நிற்பதனை கவனித்தவள் “போன வாரம் முழுவதும் சீக்கிரமாக எழுந்தேன், அது இன்றைக்கும் முழிப்பு வந்துவிட்டது.” என்றவள் மெதுவாக கீழே காலை வைத்தவள் “ஸ்ஸ்…” என்று வலியால் காலை தூக்கிக்கொண்டாள். 

“டாக்டர் தான் வன் வீக் ரெஸ்ட் வேணும் எண்டு சொல்லியிருக்கிறார். பிறகு எதுக்கு காலை எழுந்தபாட்டிற்கு அசைக்காதே… என்றபடி, வா நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறன்.” என்றான். 

அவனை முறைத்து விட்டு திரும்பி, தூங்கிக்கொண்டிருந்த பாட்டியை பார்த்து, ” “பாட்டி… பாட்டி… ” என கத்தியும் எழும்பாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரின் மீது தலையணயை தூக்கி போடவும் அதற்கும் அவர் அசராமல் இருக்கவே கிழவி கும்பகர்ணணுக்கு தjங்கையா இருப்பா போலவே…  எழும்ப மாட்டேன்குதே… என புலம்பியபடி இருந்தவளிற்கு, தான் திடீரென அந்தரத்தில் மிதப்பது போல தோன்றவே கீழே பார்க்கவும், செந்தூர் அவளை வோஸ்றூம் வாசலுக்கு கொண்டு சென்றவன் அவளை மெதுவாக  உள்ளே இறக்கி விட்டவன் அவள் ஏதும் பேச முன்னர் வெளியே வந்து கதவை மூடியவன், “எதுவாக இருந்தாலும் அப்புறமாக பேசு… இப்போது உள்ளே போய்விட்டு வா நித்யா.” என்றான். 

“எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை தூக்குவான்… திமிர்பிடிச்சவன்…” என அவள் திட்டிக்கொண்டிருக்கவும்… அவன் சிரிப்பு சத்தம் வெளியேகேட்கவும்… “இப்போது எதுக்கு சிரிக்கிறீங்க என அவள் உள்ளே இருந்து கத்தவும்

“ஒன்றுமில்லை சீக்கிரமா ஜிம்முக்கு போக வேண்டும் அதுதான்.” என அவன் சமாளிக்கவும் 

“என்ன அவசரம் உனக்கு ஜிம்முக்கு போறதுக்கு, ஏற்கனவே ஜிம் பாடி கொஞ்சம் லேட்டா போனா ஒன்றும் குறைஞ்சு  போகாது.”

“சரி மேடம் நீங்க சொன்னா சரி நான் கொஞ்சம் லேட்டாக ஜிம்முக்கு போறேன் ஓகேவா.”

“நீ  லேட்டா போனா என்ன? லேட்டா போகாட்டி தான் எனக்கென்ன?” என்றவாறு தனது கடமைகளை முடித்து வெளியே வந்தவள் அவளைப் பார்த்து முறைத்தாள்.

“ஹலோ என்ன?  முறைப்பு.”

“நீ என்ன எனக்கு அசிஸ்ரண்ரா?  நான் என்ன? சொன்னாலும் ஆமாம் சாமி போடுகின்றாய்.”

“அடிங்க…  உனக்கு நான் அசிஸ்ரண்ரா? 

பாவம் சின்ன புள்ள என்னால தான் வலியோட கஸ்ரப்படுறா என்று ஹெல்ப் பண்ணி குடுத்தா. ஓவரா சீன் போடுறியா? “

“ஆமா…  தூக்கிட்டு வந்த மாதிரி கொண்டு போய் என்னை பெட்ல விடு.உன்னோட வெட்டிக்கதை பேச எனக்கு நேரமில்லை.”

“மேடம் இந்த அதிகாலை நேரம் எந்த ஆபீசுக்கு போகப் போறீங்க.”

“நான் ஏன்?  ஆபீசுக்கு போகப்போறன். மறுபடியும் தூக்கம் வருகுது தூங்கப்போகின்றேன்.” என்றவள் கையை வைத்து வாயை மறைத்தபடி கொட்டாவி ஒன்றை விட்டாள். 

“நான் ஜிம்முக்கு லேட்டா போணாலும் பரவாயில்லை. இப்ப கூட நான் வெயிட் தூக்கிட்டு தானே இருக்கின்றேன்,” என்றவன். அவளை மறுபடியும் தூக்கிக்கொண்டு போய் படுக்கையில் விட்டான். 

“ரொம்ப நன்றி நான் தூங்கப்போகின்றேன். மறுபடியும் என்னை டிஸ்ரப் பண்ணாமல், உங்கள் வேலையை பார்க்க போகலாம்.”

“இது எனக்கு தேவை தான்.” என்றவன். தோள்களை குலுக்கியபடி இடத்தை விட்டகன்றான். 

அவள் விட்ட தூக்கத்தை காலை ஒன்பது மணி வரை தொடர்ந்தவளை, பாட்டி தட்டி எழுப்பவும் எழுந்தாள். 

“என்ன?  பாட்டி. என்னை கொஞ்ச நேரம் தூங்க விடேன்.என்றவளை முறைத்த பாட்டி மணிக்கூட்டை சுட்டி காட்டி நேரத்தை பாரு பாப்பா ஒன்பதாகுது. எழுந்து பல் தேய்ச்சு, குளிச்சிட்டு வா.வந்து சாப்பிடு கண்ணு. “

“எனக்கு பசிக்கல்ல. ரொம்ப பெயினா இருக்கு. கொஞ்சநேரம் தூங்குறேனே?”

“சரி கண்ணு நான் போய் சாப்பாடு கொண்டு வாறன். நீ வாயை கொப்பளித்து விட்டு, சாப்டுறியா?”

“ம்… வேணாம் பாட்டி. “

“படுத்துக்கிட்டே சாப்பிடு தங்கம். பாட்டி ஊட்டி விடுறன்.”

“ஏன்? பாட்டி. இந்தம்மா?  பச்சப்புள்ள… அப்பிடியே…  இடுப்பில தூக்கி வச்சு நிலாவ காட்டி சோறூட்ட வேண்டியது தானே.?” என்று அப்போது தான் ஜிம்மில் இருந்து வந்தவன் கூற அவள் கட்டிலில் எழுந்து அமர்ந்து,கைகளை பின்பக்கமாக நீட்டி சோம்பல் முறித்தாள். 

ஹலோ பாட்டி எனக்கும் பாட்டிதான்.சின்ன புள்ளயா இருக்கும் போது உங்களை ஊட்டி வளத்தாங்க தானே…! என்னை சின்ன பேபியா இருக்கும் போது ஊட்டி வளக்கல்ல. அதனால இப்போது என்னை ஊட்டி வளக்கிறாங்க. தேவைன்னா இடுப்பிலயும் தூங்கி வைப்பாங்க. உங்களுக்கு என்ன?  சோலியை பாத்துட்டு போங்க. காத்து வரட்டும்.”

“ம்… வைப்பாங்க…. வைப்பாங்க… பாட்டி கடைசியா உன் இடுப்பை கண்ணாடில பாத்துக்க… சில வேளை இனி வீல்சேர்ல தான் உன் வாழ்க்கையோ… தெரியல்லை.? வயசான காலத்தில இவளை தூக்கி இடுப்பில வச்சு சீராட்டனுமா?  என்று யோசிச்சுக்க பாட்டி பிறகு என்னை குத்தம் செல்லாத?” என்றவன் அப்படியே பாத்றூமுக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான்.

அவன் சென்ற திக்குதிக்கை முறைத்து பார்த்து விட்டு, பாட்டியை பார்த்தாள்,  “கிழவி உன் பேரனை கவனமா இருக்கச்சொல்லு, முகரையை பேத்துடுவேன்.” என்றவள் மறுபடியும் தலை வரை பெட்சீற்றை இழுத்து மூடிக்கொண்டு தூங்கி விட்டாள். 

“இவளுக்கு மட்டும் எப்படித்தான் இருபத்துநாலு மணி நேரமும் தூக்கம் வருகுதோ.” என்று புலம்பியபடி கீழே சென்று விட்டார். 

                           ************

இரண்டு வாரங்களாக விட்டது. அவள் ஹாலில் உள்ள ஷோபாவில் அமர்ந்து, லப்டப்பை வைத்துக்கொண்டு மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். 

“என்ன?  மேடம். ரொம்ப பிஸியா இருக்கீங்க போல.” என்றவாறு அவளருகில் அமர்ந்தவன். “அம்மா ரீ கொண்டு வாங்க. ” என்றபடி நன்றாக அமர்ந்து கொண்டான்.

அவள் பதில் சொல்லாமல் புருவத்தை சுருக்கியபடி,வேலையில் ஆழ்ந்திருக்க அவளருகில் வந்து, அவளது காதருகில் சத்தம் போடவும் திகைத்து படி திரும்பியவள்.அவனை பார்த்து முறைத்தாள்.

“என்ன?  முறைப்பு? என் முகம் அவ்வளவு அழகாகவா? இருக்கு. “

“இல்லை. பச்சை கலர் பச்சோந்தி மாதிரி இருக்கு. முக்கியமான வேலை பார்க்கும் போது டிஸ்ரப் பண்ணிக்கிட்டு… ” என கடுகடுத்தவள். லப்பை எடுக்கவும் அவன் அதை பறித்து மூடி வைத்தான். 

“ஏய் எதுக்கு இப்போ இதில வந்து உக்காந்து வம்பு பண்ற. உனக்கு வேற வேல வெட்டி கிடையாதா… ?”

“இல்லை. உன்கிட்ட வேலை ஏதும் இருந்தா கொடு.நம்ம ரேஞ்சுக்கு ஓகே என்றால் பாக்கலாம்.”

“எப்ப பாரு காமெடி பண்ணிட்டு இருக்கிறதே வேலையா? உனக்கு. “

“சீரியசாக இருக்க இங்க என்ன நடந்தது.”

“உங்களால எப்பிடி எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்க முடியுதோ? தெரியலை.” என்ற படி எழுந்து உள்ளே போனவள் தொப்பென்று பெட்டில் வீழ்ந்தாள்.

“இந்தா தம்பி ரீ.” என்றவாறு சந்திரா, அவன் கையில் ரீக்கப்பை கொடுத்து விட்டு அருகே அமர்ந்தவர், “உனக்கு  அவ கூட வம்பிழுக்கேல்ல என்டா தூக்கம் வராதா? அவ இங்கே வந்ததிலிருந்து நானும் பாக்கிறன், வேணும் என்றே உறண்டை இழுத்துக்கொண்டிருக்கிறாய். பார்த்து கவனமாய் இரு உன் மண்டையையும் உடைக்கிற தைரியம் அவளுக்கு இருக்கு. “

“ம்…  நீங்க எனக்கு தாயா? இல்ல அவளுக்கா? கொஞ்சம் கூட எனக்கு சப்போட் பண்ற மாதிரி தெரியல்லியே? அவ கூட சேர்ந்து என்னை போட்டு தள்ள பிளான் பண்ற மாதிரி தெரியுதே? இனி இந்த வீட்டுக்கு வருவதற்கே பாதுகாப்போடு வரணும் போல.”

“ம்…  இப்போது கொஞ்ச நாளாய் வீட்டில இருக்கிறாய். இல்லை என்றால் நீ எப்போது வீட்டுக்கு வாறாய்? எப்ப வீட்டில இருந்து வெளியே போறாய்? என்று இங்கே இருக்கிற கடிகாரத்துக்கே தெரியாது.? “

“அதுதானே பார்த்தேன். கிடைச்ச இடத்தில் என்னை போட்டுத்தள்ள பிளான் பண்றதே வேலையாக வச்சிருக்கீங்க போல…”

“அட … உண்மையை சொன்னால் சில பேருக்கு உறைக்குதாம் பாரேன்.”

“ம்… இந்த வீட்ல எனக்கு கண்ணுக்குதெரியாத எதிரிகள் எத்தனை பேர் இருக்கிறியளோ? தெரியவில்லையே…!” என்றவாறு ரீ கப்பை அவரின் கைகளில் கொடுத்து விட்டு தன் அறை நோக்கி சென்றான்.

விசிலடித்தவாறே படிகளில் ஏறி மேலே சென்றவன் கண்களில் அவள் வெளியே இருந்த பெஞ்சில் கம்பியூட்டரை வைத்து மாரடித்துக்கொண்டிருப்பதை பார்த்தவாறே அவளருகில் சென்று அமர்ந்தவன் தன் செல்லை எடுத்து நோண்டலானான்.

எந்த டிசைனை கடையின் பெயர்ப்பலகையாக தெரிவு செய்வது என்று புரியாமல் கைகளை பெஞ்சில் குத்தினாள்.

“பாத்து… பண்ணுமா பெஞ்சை டேமேஜ் பண்ணிடாத. நீ இன்னும் இரண்டு நாள் தான் இருந்துட்டு கிளம்பிடுவாய்.நான் உடைஞ்சு போனதை உன் ஞாபக சின்னமாய் வச்சுக்கிறதா…?”

அவனை முறைத்தவள், அவனை பார்த்து, “தயவுசெய்து உங்க வாயை சாத்திட்டு போங்க… இல்ல எண்டா இப்போ என் அடுத்த அவதாரத்தை பாப்பீங்க…” என்றாள் காட்டமாக.

“ம்… காட்டு… காட்டு… எப்பிடி? நல்லா இருக்கா எண்டு பாத்திட்டா போச்சு…” என்று அவளை இன்னும் கடுப்பாக்கினான்.

“மாமன் மகன் என்று பார்க்க வேண்டியதாய் இருக்கு.இல்லை என்றால் மண்டையை பிளந்திருப்பேன்.”

“ஏற்கனவே என்னை சீண்டி கால் போச்சுது. அடுத்த கட்டமாக என்ன? போகப்போகுதோ?” என்று அவன் யோசனை செய்யவும் அவளுக்குள் எரிமலை புகைந்தது.

 

Advertisement