Advertisement

மலர் 18
கீழே சென்ற பாட்டியும், தாயும் வராதிருக்கவும், ‘இவ்வளவு நேரமாக இவர்கள் என்ன?  செய்கின்றார்கள்…!’ என யோசித்து தன் கபேட் கதவை திறந்து அங்கிருந்த மூவ்ஸ்பிரேயை எடுத்துக்கொண்டு அவளருகில் வந்தவன் தயக்கமேதுமின்றி அவளது முன்பக்க சட்டையில் இருந்த பொத்தான்களை அகற்றியவன்,  அவளது நெஞ்சுக்குழியை மெதுவாக வருடிப்பார்த்தான். 
இவனது பலமான கரத்தினால் இடி விழுந்ததாலோ… ! என்னவோ… ? அது பால் நிறமேனியில் சிவந்து போயிருந்ததுடன் வீக்கம் கானத்தொடங்கியிருந்ததுடன் அவள் வலியுடன் முனகத்தொடங்கவும், கையிலிருந்த மூவ்ஸ்பிரேயை அடித்து விட்டு,  கையால் மெதுவாக தேய்த்து விட்டான். 
மிகுந்த வலியுடன் இருந்தவளுக்கு, மூவ் எரிச்லைக்கொடுக்கவும் கண்களால் கண்ணீர் வழிந்தது. அவளது நெஞ்சை வருடியபடி நிமிர்ந்து பார்த்தவன், “ரொம்ப வலிக்குதா…” என கேட்டவாறு அவளை பார்க்கவும் ” ம்… ” என்றவள் கீழே என  கைகளை காட்டவும் குனிந்து பார்த்தவன் ” ஓ மை கோட்…” என அதிர்ந்தான்.
விழும்போது எசகு பிசகாய் காலை வைத்ததில் கீழ்கால் சுழுக்கி இருந்தது போல கால் ‘புசு புசு’ என வீங்கிய வண்ணம் இருந்தது. கீழே குனிந்து 
அவளது காலை தூக்கி தன்மடியில் வைத்தவன், அப்போது தான் தேநீர் தயாரித்து வந்த தாயைப்பார்த்து, “அம்மா ரீயை இந்த குட்டி மேசை மீது வைத்து விட்டு அந்த ட்ராக்கில் ஒரு எண்ணெய் போத்தல் இருக்கிறது எடுங்கள்.”
“ம்… இதோ… ” என்றவாறு  தேநீரை குட்டி மேசை மீது வைத்து மூடியவர் அவன் கேட்ட எண்ணெய் போத்தலை எடுத்துக்கொடுத்தார். 
அதை வாங்கியவன் கொஞ்சமாக கையில் ஊற்றி அவளது காலுக்கு சற்று அழுத்தம் கொடுத்தவாறு தேய்க்கவும், அவள் “ஐயோ… அம்மா…”  என கத்தி ஊரைக்கூட்டினாள். 
“அம்மா இப்போதைக்கு நோவு தெரியாமல் இருக்க மாத்திரை கொடுத்திருக்கின்றேன். இருந்தாலும் கட்டாயம் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும். நான் கிளம்புகின்றேன்.நீங்களும் கூட வரவேண்டும் சீக்கிரமாக கிளம்புங்கள்.” என கீழே அனுப்பியவன் தானும் ஆயத்தமாகியவன் அவளை குழந்தை போல தூக்கிக்கொண்டு கீழே வந்து அவளை தன் காரில் ஏற்றியவன் தாய் வரவும் அவரையும் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பினான். 
அங்கே அவளது காலுக்கு பண்டேஜ் போடப்பட்டு இரண்டு வாரங்களுக்கு நடக்க கூடாது என்ற டாக்டர், நெஞ்சுப்பகுதியில் இருந்த வீக்கத்தை பார்த்தவர் ஸ்கேன் பண்ணி பார்க்க வேண்டும் என்றவர், ஸ்கேன் பண்ணி றிப்போட் பார்த்தவர்  “அடி கொஞ்சம் பலம் தான். அதனால் வீக்கமாக இருக்கிறது. பெண்களுக்கு நெஞ்சுப்பகுதி நொய்த இடம் என்பதால் வலி கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவையான மாத்திரைகள், ஆயில்மெண்ட் எல்லாம் இதிலே சஜெஸ்ட் பண்ணியிருக்கின்றேன். கீழே உள்ள மெடிக்கல்ஷாப்பில் வாங்குங்கள். முக்கியமாக இரண்டும் பெயினாகவே இருக்கும் அதனால் ஒரு மாதத்திற்கு உங்க வைஃப் பெட்ரெஸ்சில் இருக்கணும் ஓகே, இப்போது  கவனமாக கூட்டிப்போங்கள்.” என்றார். 
அவர்களுக்கு டாக்டர் சொன்ன கடைசி வார்த்தை அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாது, அவளை அவன் தூக்கிக்கொள்ள மூவரும் வெளியே வந்தனர். 
“டேய் அவ உன் பெண்டாட்டி…  என்று டாக்டர் சொன்னால் நீ பேசாமல் இருப்பியாடா…”  என தாய் கேட்கவும் அவளை கையில் வைத்திருந்தபடியே… . சிரித்தான் தாயை பார்த்து. 
“என்ன இளிப்பு…” என அவள் அவன் காதுக்குள் முனகவும்  “ம் பெண்டாட்டி  ஆக்கினால் எப்படியிருக்கும்.” என அவளுக்கு கேட்கும் வகையில் ‘முணுமுணு’த்தவன் தாயைப்பார்த்து 
“டாக்டருக்கு விளக்க வேண்டும் என்றால் விம்பார் போட்டு விளக்கினாலும் அவருக்கு விளங்காது. நன்றாக கதை தான் கேட்பார். அதனால் தான் ஒன்றும் சொல்லவில்லை.” என்றார். 
“டேய்…  நீ மனசில என் மருமகள் மீது ஆசையை கீசையை வைத்து தொலைச்சிடாதே… ! நாங்க அவளுக்கு ராஜகுமாரன் மாதிரி மாப்பிள்ளை ஒருவரை தான் தேடுகின்றோம்.” என மகனிடம் ஒரு போடு போட்டார்.
“என்ன?  நித்தி அத்தை சொல்வது உனக்கு ஓகே தானே… ?”
‘அத்தை… நீங்க சொன்னால் எனக்கு ஓகே’ என்பது போல கட்டை விரலை தூக்கி காட்டினாள். 
“ம்… உன் ராஜகுமாரன் வரும் வரைக்கும் மகாராணிக்கு நான் சேவகம் செய்து விட்டு போகின்றேன்… போ” என்றவன் அவளை காருக்குள் கொண்டு போய் அலுங்காமல் குலுங்காமல்  இருத்தியவன் தாயையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியவன் வீடு வந்து சேர்ந்தான். 
மறுபடியும் அலுங்காமல் குலுங்காமல் அவளை தூக்கிக்கொண்டு போய் தன் அறையில் படுத்தி, ஏசியை போட்டு விட்டு கதவை சாத்திக்கொண்டு வெளியே வந்து தாயின் அருகே அமர்ந்தான்.
அப்போது தான் அங்கே இருந்த மாறனை கண்டவன் “சாரி மாமா… என் மேல் தான் தவறு. விளையாட்டுக்கு பண்ணப்போய்…. சாரி மாமா…” என அவன் தடுமாறவும் “சரி மாப்பிள்ளை விடு நடந்தது நடந்து போய் விட்டது. நான் மேலே போய் பார்க்கின்றேன் எனக்கூறியவர் மேலே சென்று மகளை பார்க்கவும், அவள் நல்ல உறக்கத்தில் இருக்கவும் தலைகோதி விட்டு வெளியே வந்தவரது முகம் யோசனையை தத்தெடுத்திருந்தது. 
“என்ன? அண்ணா யோசனையாக இருக்கின்றீர்கள்.” என அவரது கையில் ரீ கப்பை திணித்தபடி வினவினார் சந்திரா. 
“அது…  அம்முவை ‘விட்டுவிட்டு’ நான் ஊருக்கு போய் வர வேண்டும் அது தான் அவளை இந்த நிலையில் விட்டுப்போக முடியாது. ஆனால் கட்டாயம் போக வேண்டும். “
அங்கிருந்த செந்தூர் தாயிடம் கண்ணை காட்டி விட்டு கவிழ்ந்து கொண்டான். மகனின் சைகையை புரிந்து கொண்ட தாயார் “அண்ணா  நீங்கள் போய்விட்டு வாருங்கள் நான் நித்யாவை பார்த்துக் கொள்வேன். டாக்டர் ஒருமாசத்துக்கு பெட் ரெஸ்ட் வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.”
“சரி…  சந்திரா…  நான் இன்றே போய் இன்றே வந்து விடுவேன்.கொஞ்சம் பணம் பட்டுவாடா செய்ய வேண்டியிருக்கிறது… “
“நான் வேண்டும் என்றால் உங்களோடு வரட்டுமா?  மாமா. காரிலே போனால் சீக்கிரமாக வரலாம். அப்புறம் உங்களை காணவில்லை என்றால் உங்களுடைய குட்டி பாப்பா அழும். ” என்றான் செந்தூர். 
“சரி… மாப்பிள்ளை… இன்னும் அரை மணித்தியாலத்தில் கிளம்பலாம்,” என்றவர் தன் வீட்டை பூட்டிவிட்டு வருவதாக கூறிச்சென்றார். 
“என்னடா…  டாக்டர் அவ உன் பொண்டாட்டி என்று சொன்னது தான் சொன்னா… நீ தலை கால் தெரியாமல் ஆடுகின்றாய்.” என்று மகனை நொடித்தவாறு உள்ளே சென்றார்.
பின்பு மாமனும், மருமகனும் கிளம்பினர். ஒரு மணித்தியாலத்திற்கு பின் சேர வேண்டிய இடம் வந்ததும் அங்கே போய் அவர் நிற்கவும் அவர்களை வரவேற்று அமரச்செய்தவர்கள் ஏற்கனவே பணத்தை ரெடி பண்ணி வைத்திருந்தார்கள் போல, மார்கண்டேயனிடம் கொடுத்து எண்ணி பார்க்க சொல்லவும், அவர்களிடம் மறுப்பாக தலையசைத்தவர்.  “நம்பிக்கை தானே வாழ்க்கை…” என்றவாறு திரும்பவும் பணம் கொடுத்தவர் எழுந்து வந்து “ஐயா… பாப்பா… நல்லா இருக்கிறாவா…  பாப்பாவோட புருசனா இவர்…” என அருகில் நின்ற செந்தூரை காட்டி விசாரிக்கவும், ” இவரும் என் மாப்பிள்ளை தான்… என் தங்கச்சி மகன். ” என்றார். 
“சரிங்க ஐயா…  எங்கிட்ட நாலைந்து நல்ல வரன் இருக்கு பாப்பாவுக்கு பார்க்கலாமா…?” என அவர் தனது மற்ற வேலையை கடை பரப்பினார்.
“இல்லப்பா… அவளுக்கு இப்போது தானே இருபத்தியொரு வயசு இன்னும் ஒன்றிரண்டு வயசு போகட்டும் பார்க்கலாம். என்றவர் வருகின்றோம்.” என கிளம்பிவிட்டாலும்,  எங்கே தன் மாமனார் மகளுக்கு பெண் பார்க்கச்சொல்லி விடுவாரோ…? என மனம் ‘படபட’க்க நின்றவனிற்கு புரியவில்லை தனக்கு ஏன்? இத்தனை பதட்டம் என. 
அவர் வழமையாக போகும் பாங்குக்கு போகச்சொல்லி வழி சொல்லி விட்டு சாய்ந்தமர்தவர் மருமகனை பார்த்து  “எப்போது மாப்பிள்ளை வேலை எல்லாம் பொறுப்பெடுக்க போகின்றீர்கள். ” என்றார். 
“அது வந்து…  இப்போதைக்கு இல்லை மாமா. நான் ஃபுல்போமுக்கு வந்ததுக்கு பிறகு தான். இப்போது என் கைவசம் இரண்டு தொழில் இருக்கு அதை இப்போதைக்கு கொஞ்சம் அவற்றை கவனிக்க வேண்டும் மாமா, அவற்றை இடையிலே விட்டு விட்டு வர முடியாததால் தான் மற்ற வேலைகளுக்குள் இன்னும் வரமுடியவில்லை. இப்போது  பார்க்கும் வேலையை கொஞ்சம் அசைக்க முடியாதவாறு செய்த பின் தான் அப்பாவின் தொழில்களை எல்லாம் கவனிக்க முடியும்.
“என்ன? பிஸ்னஸ் பண்றீங்க மாப்பிள்ளை. இதெல்லாம் உங்க அப்பாக்கு தெரியுமா?”
“இன்னும் இல்ல மாமா…  அவருக்கு தெரிந்தால் விடமாட்டார். அகலக்கால் வைக்கின்றேன்… . இருக்கின்ற தொழிலையே பார்க்க நேரம் இல்லை…  இனியும் புதுசா வேண்டாம் என்று செல்வார்….  கொஞ்சநாள் கழித்து கட்டாயம்
அவரிடம் சொல்லுவேன். இலாபம் இந்த மூன்று மாதத்தில் ஒரு கோடியே இருபது இலட்சம். வேலை கஞ்சம் இலகுவா இருக்கு.”
“அது…  தான் மாப்பிள்ளை என்ன?  பிஸினஸ் என்று செல்லவே இல்லையே… !”
ஓ… சாரி மாமா…  சீபூட்ஸ் எக்ஸ்போட் பண்றது. முதல்ல இறால் மட்டும் தான் பண்ணினேன். இப்போது நண்டு,கணவாய்.சுறா.திருக்கை, என எல்லாவகை  கடலுணவுகளும். இங்கே கொஞ்ச ஆட்களை வைத்திருக்கின்றேன்… வெளிநாட்டில் என் பிரண்ட் ஒருத்தனும் ஸ்வாதி அக்காட அத்தானும் இதை டீல் பண்றாங்க மாமா. ஒரு பத்து, பதினைந்து நாடுகளுக்கு இப்போது  எக்ஸ்போட் பண்ணுகின்றேன். ஆனால் ஒரு நம்பிக்கையான ஆள் இருந்தால் பரவாயில்லை… ஆஆ… மாமா நீங்கள் எனக்கு ஹெல்ப் பண்ணுங்களேன் எனக்கு நம்பிக்கையான ஆளாக இருங்களேன் மாமா…  உங்களால் முடியும் தானே மாமா”எனன்றான். 
“கட்டாயம் என் மருமகனுக்கு இல்லாத உதவியா… ? ஆனால் உன் தொழில் விடயத்தை உன் அப்பாவிடம் செல்லி விடுங்கள் மாப்பிள்ளை…  சீக்கிரமாக அப்பாவினது தொழிலையும் முடிந்தளவு பார்த்துக்கொள்ளுங்கள். “
“அதெல்லாவற்றையும் நித்யா பார்க்கட்டும். இபோது அவ தானே பார்க்கிறா… இப்பவெல்லாம் அப்பா கொஞ்சம் ப்ரீயா இருக்கிறார். அதுக்கு காரணம் அவ தானே… ! “
“அதுசரி… அவ கல்யாணமாகி இன்னொருத்தர் வீட்டுக்கு போட வேண்டிய பொண்ணு, அவ கல்யாணமாகி வேற இடத்துக்கு போன பின்னாடி என்ன?  செய்வதாக உத்தேசம்.”
“ஏன்?  அவ வேற இடத்துக்கு போகணும். அவ என் அம்மாக்கும், அப்பாக்கும் தான் கடைசி வரைக்கும் மருமகள்…. நான் முன்னாடி எல்லாம் ரொம்ப நல்லவன் கிடையாது மாமா, எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று கால் போன திக்கில் வாழ்ந்தவன் தான்.பொண்ணுங்க விடயத்திலும் மெச்சிக்கொள்ள கூடிய வகையில் நான் நடந்து கொள்ளவில்லை. ஆனால் எப்போது நித்யாவை நம்ம வீட்டில பார்த்தேனோ…! அப்போதிலிருந்து எங்க வீட்டில் சந்தோசத்துக்கு குறைவே இல்லை…  எல்லாருக்கும் அவளே செல்லக்குட்டியா மாறிட்டா…! “
” நம்ம சிந்தனை தவறானது, அவளுக்கு நான் பொருத்தமில்லாதவன் என நினைக்கும் போதெல்லாம் அவளை சீண்டி என்னை விட்டு தள்ளிப்போக வைத்திருக்கின்றேன். அவளை தள்ளிப்போகவைப்பதாக நினைத்து அவ நினைப்பை அதிகமாக்கி வைத்திருக்கின்றேன்…. நீங்க அவளை வேற இடத்துக்கு கல்யாணம் பண்ணி அனுப்பி என் நினைப்பில் மண்ணை அள்ளிப்போட்டிடாதீங்க மாமா… . அப்புறம் அவளை தூக்கிட மாட்டேன்… ” என்றான். 
 

Advertisement