Advertisement

மலர் 14 
ஆமாம்… நித்தி… அவன் என் பையன் தானே… அப்போ… அவன் என்னை மாதிரி தான் இருப்பான். பெண்டாட்டி ஒரு தோப்புகரணம் போடச்சொன்னால் இவன் போனசாக பத்து போடுவான். 
அவள் மறுபேச்சு பேசாமல் “சரி மாமா… அத்தை… நான் கிளம்பட்டுமா… ?” என்று கூறியபடி தான் பொருட்கள் கண்டு வந்த பெரிய பையை எடுத்தாள். 
“சரி… பட்டுக்குட்டி கிளம்பு… அண்ணன் சாப்பிடாமல் உனக்காக காத்திருக்கும். “
“ஐயோ… இந்த பாசமலர் தொல்லை தாங்க முடியவில்லை… . நான் கிழம்புகிறேன்.” என்றவாறே வெளிநடப்புச்செய்தாள். 
இவள் தன்னை  பற்றி ஏதாவது செல்லாமல் போகமாட்டாளே…  என நினைத்துக்கொண்டிருக்க அவள் எதுவும் பேசாமல் போகவும் அவன் மனம்சுணங்கியது. மற்றவர்களோடு பேசுவதென்றால் வாய் காது வரைக்கும் போய் பேசும்…  அது மட்டும் உலகத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளுக்கான அகராதி இவ வாயில் தானே இருக்கு… ‘ என யோசித்தபடி இருந்தான். 
அவன் தட்டில் தோசையை வைத்து, சட்ணியை ஊற்றிய தாய் “என்ன?  தம்பி யோசனை… நித்திய பற்றி தானே… ரோசாப்பூ வாசம் ஆளை மயக்கு மாதிரி இவளும் எல்லாரையும் பட்டென்று மயக்கிபுடுவா… குழந்தை மாதிரி ‘துரு துரு’ என்று எப்போதும் திரியுறா…. உன் அக்கா,தங்கச்சி இரண்டு பேரோடும் கூட உன் அப்பா இவ்வளவு கலகலப்பாக இருந்ததில்லை… ஆனால்… இவ என்னமா… வாயடிக்கிறா… அவரும் இவளுக்கு இணையா பேசி சிரிக்கிறதையும்  பார்த்தாயில்ல…”
“ம்…” என தலையசைத்தவன் இவ குழந்தையா?  குட்டிக்குரங்கு என நினைத்தவாறு தாயைப்பார்த்து புன்னகைத்தான். 
“ஏன்டா… .என்ன?  சொன்னாலும் பேசாமல் சிரித்துக்கொண்டிருக்கின்றாயேடா… என்னாச்சு உனக்கு. “
தாயின் பேச்சில் தன்னை மீட்டுக்கொண்டவன், தாயைப்பார்த்து ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்தவன் தட்டை சிங்கில் போடப்போனவன் என்ன?  நினைத்தானோ… ? தட்டை கழுவி ட்ராக் மீது கவிழ்த்து விட்டு திரும்பியவன் கைதுடைக்கும் துணியை தேட அவன் இருந்து சாப்பிட்ட இடத்தருகில் ஒரு துண்டிருந்ததை கண்டவன் அதை நோக்கிச்சென்றான். 
தனது வீட்டு வாசலருகில் சென்றவள், அப்போது தான் தன்னிடம் துப்பட்டா இல்லை என்பதை உணர்ந்தவளாய் மறுபடியும் மாமனார் வீட்டை நோக்கிச்சென்றாள். 
இவள் வருவதை பார்த்த பாட்டி, ” ஏண்டி… இவளே… ஒரு இடத்தில இருப்பு கொள்ளாதா… உனக்கு. இன்று விடிஞ்சதில இருந்து ஒரு பத்து தரம் அங்கேயும்,இங்கேயுமா அலைஞ்சுகிட்டு கிடக்கிறியே… !” என்றார். 
அவளும் அங்கேயும்,இங்கேயும் நடந்து திரிந்ததில் அலுத்து போயிருந்தாள்… அதிலும் பாட்டியும் கிண்டல் பண்ண இன்னும் சினம் கூடியது. 
“ஆமா… கிழவி வேண்டுதல் வச்சிருக்கேன்.நான் நடந்தால் உனக்கு கால் வலிக்குதா… வாயை மூடிக்கிட்டு இரு.இல்லையென்றால் அம்மிக்கல்லை தூக்கி உன் தலையில போட்டு அப்பிடியே… உன் புருசன்கிட்ட  அனுப்பிடுவேன்.” என்றவாறு அவள் கிச்சனுக்குள் நுழைந்தவள் ‘துப்பட்டாவை இங்கே தானே வைத்தேன்.’ என நினைத்தவாறே… அதை தேடவும் அது அவன் கையில் இருந்தது. 
அதை வைத்து தன் உதடுகளை துடைத்தவண்ணம் நின்றவன் இவள் முறைப்பதை பார்த்து என்ன… ? என்பது போல் பார்க்கவும், அவனருகே வந்தவள்  “இத்தோடு இரண்டாவது உடுப்பை நாசம் பண்ணியாச்சு” என்றவள் அவனிடம் இருந்த தன் துப்பட்டாவை பறித்து உதறியவள் தன்னை சுற்றி போட்டுக்கொண்டு ‘விறுவிறு’ என வெளியேறினாள்.
அவளின் பின்னே வந்த பாட்டி பேரன் திகைத்து நிற்பதை கண்டவர். “என்ன… ? தம்பி உன் மாமன் மக உன்னை என்ன?  சொல்லிவிட்டு போகிறாள்.”
“அவளா… ? அவ என்னை ரொம்ப டமேஜ் பண்ணிட்டா பாட்டி.”
என்னையும் தான். அவ என்னை உன் தாத்தா கிட்ட அனுப்பி வைப்பேன்…  என்று சொல்கிறாடா…! என அவன் பாட்டியை வியந்த பார்வை பார்த்தான். 
“நானும் விடுவனா அவளை,அவன் அப்பனை,  ஆத்தாளை என எல்லாரையும் இழுத்து அவகிட்ட வம்பு பண்ணி விட்டேன்.” என்ற பாட்டியை பார்த்து “அவ உன் தலையில அம்மிக்கல்லை தூக்கி போடுவேன் என்று சொன்னதில் தப்பேயில்லை. ” என்றவாறு இடத்தை காலி பண்ணினான். 
“பாத்தியா… தம்பி பொம்பிளை பிள்ளையை கண்டவுடன் பாட்டியை நைசாக கழட்டிவிட்டுட்டு போகிறாய்… ” 
“ஆமாம்… பாட்டி… உன் பேத்தி பெரிய உலக அழகி பார்… குண்டுபூசணி சோத்து மூட்டை” என்று இளக்காரமாக சொல்லவும், அவன் எதிர்பாராத வண்ணம் அவளது குரல் தாயின் அறை வாசலில் இருந்து வந்தது.
‘அவள் தான்… .அவளே தான் இன்னும் போகவில்லை போல இருக்கே… வண்டை வண்டையாக கேட்பாளே…!’ என அவன் நினைக்கவும் அவள் நடந்து பாட்டியருகே வந்தாள். 
பாட்டிக்கும் தன் பேத்தியை, பேரன் குண்டு பூசணி என இளக்காரமாக தான் குறிப்பிட்டான் என்பது வருத்தமாக இருந்தாலும், அவள் அருகில் வர, என்னத்தை?  செய்யப்போகிறாளோ…? என்று கிலியாகவே…இருத்தது. 
இவளுக்கு கேட்டிருக்குமோ… ! என பாட்டியும்,  பேரனும் நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர்கள் அருகில் வந்தவள் அவர்களிருவரையும் நிமிர்ந்தும் பார்க்காது தன் வீட்டை நோக்கி நகர்ந்தவளது மனம் சல்லடையானது போல வலித்தது. 
‘அவளை இதுவரையும் யாரும் குண்டு என்று அவளது மனம் வலிக்கும் வண்ணம் பேசியதில்லையே… ! இவன் மட்டும் ஏன்? எப்போதும் அவளது உடம்பை பார்த்து கேலி செய்கின்றான்.சோத்துமூட்டையாமே… . என்னமோ இவன் காசில எனக்கு சாப்பாடு போடுவது போல பேசுகின்றானே…?’
அவள் போய் வீட்டுக்குள்ளே உள்ளிடவும் ஏதோ கேட்ட  தகப்பனின் எதுவும் சொல்லாது உள்ளே சென்று கதவடைத்து கொண்டவளது கண்கள் உடைப்பெடுத்தது. 
அவள் சென்ற பின் பாட்டியின் அருகே வந்தவன் “என்ன?  பாட்டி உங்க பேத்தி ரணகளப்படுத்துவா என்று பார்த்தால் எதுவும் பேசாது போகிறாளே… அவ காதில் எதுவும் விழவில்லை போல…”
பாட்டி எதுவும் பேசாது போய் ஷோபாவில் அமர்ந்து முகத்தை தூக்கி வைத்து கொண்டார். 
சரி… சரி பாட்டி உங்க பேத்தியை கிண்டல் பண்ணியது தப்பு தான் இனிமேல் இப்பிடி செய்யமாட்டேன்.சிரிங்க பாட்டி என்றான். 
“அம்மா… இல்லாத பிள்ளை.அவளை நோகடிக்கிறியா… ? நீ. ஏற்கனவே அவ சின்ன வயசில் இருந்தே எத்தனை கஸ்ரப்பட்டாளோ…? தெரியவில்லை. நீ வேற உன் பங்குக்கு செய்கிறாயா… . நீ தான் அவளை பாதுகாப்பா பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே வேலியே பயிரை மேய்கின்றது. என் மக இருந்தால் இப்படி எல்லோரும் என் பேத்தியை மனம் நோக பேசுவார்களா…” என புலம்பித்தள்ளினார். 
“இதுக்கு மேலே உங்க பேத்தியை எதுவும் சொல்ல மாட்டேன். இது உங்கள் மேலே சத்தியம் போதுமா…?”
“ஏதோ…பார்த்து செய் தம்பி… உன் அப்பாவுக்கு முன்னால் அவளைப்பற்றி ஏதாவது கதைத்து அவன் மனதையும் நோகடித்து விடாதே…” என்றவாறு எழுந்து சென்றார். 
‘ச்சை… இவ இங்கே இருக்க கூடும் என்று நினைக்கவில்லையே… கேட்டிருப்பாளோ… ?’ என நினைத்தவன் எழுந்து  உள்ளே சென்றான்.
                           
                                  ******
மதியத்தில் இருந்து நான்கு மணிவரை தூக்கத்தில் இருந்தவள் தூக்க கலக்கத்தோடு மொட்டைமாடிக்கு வந்து கையை மடக்கி, உடம்பை வளைத்து சோம்பல் முறித்தவள் முகம் முழுவதையும் மறைத்திருந்த கற்றை தலை முடியை எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து கொண்டை போல சுழற்றி செருக அது அளவிற்கு திருகணை போன்று தலையை விட பெரிதாக இருந்தது, கழன்று போகாத வண்ணம் முன்பக்க சட்டையின் மேல் குத்தியிருந்த கிளிப்பை எடுத்து தலையில் செருகினாள். 
பின்பு தன் இரு கைகளாலும் முகத்தை தேய்த்து விட்டவள். அருகில் இருந்த சுவரில் பல்பம் கொண்டு எதையோ எழுதியவள், கீழே கிடந்த தடி ஒன்றை குனிந்து எடுத்து எழுதப்பட்ட பெயருக்கு ‘அடி அடி’ என்று அடித்தவள் களைத்துப்போய் கொஞ்ச நேரம் லீவு எடுத்துக்கொண்டு அடுத்த ரவுண்டுக்கு தயாரானாள். 
இவள் செய்வதை எல்லாம் தன் வீட்டு மொட்டைமாடியில் பூந்தொட்டிகளுக்கிடையில் நின்று செந்தூர் பார்த்துக்கொண்டு தான் நின்றான். ‘இவ என்னவோ… ? சுவர்ல எழுதினா… பிறகு எழுதியதற்கு மேலே… தடியெடுத்து அடி பின்னுறா… என்னவாயிருக்கும்.’ என நினைத்தவன் தன் அறைக்குள் சென்று பைனாகுழலை எடுத்து வந்தான்.
அவள் அருகிலே போட்ட தடியை பார்க்க அது தும்பாக மாறியிருந்தது. இந்த தடி இனிமேல் சரிவராது வேறு ஆயுதம் பார்க்கலாம் என நினைத்துக்கொண்டு சுற்றி வர கண்களை சுழற்றினாள். எதுவும் தென்படவில்லை. அவள் காலில் இருந்த செருப்பை தவிர… குனிந்து அதை கழட்டி கையில் எடுத்தவள், அவனது பெயருக்கு அருகில் அடிப்பதற்கு கொண்டு சென்றவளின் கைககள் சற்று தயங்கி பின் உள்ள கோபம் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அடித்து தீர்த்த பின் செருப்பை கீழே போட்டவள், மறுபடியும் பல்ப்பத்தை எடுத்து ஒரு ஆண் உருவத்தை வரைந்து அதற்கு மேல் அவனது பெயரை எழுதியவள் ‘உன்னை இப்போது என்ன?  செய்கின்றேன் என்று பார். ‘ என தனியே நின்று வாய்விட்டு கதைத்தபடி ஊசியை எடுத்து படத்தில் இருந்த கண்ணை குற்றியவள். ‘என்னை பார்த்தா குண்டு என்று சொல்கின்றாய் இன்றைக்கு நீ சட்னிடா… என்றவள் பல்பத்தால் அந்த படத்தில் கழுத்துக்கு தூக்கு கயறு போல வரைந்து நாக்கை தள்ள வைத்த பின்னரே. கையிலிருந்த பல்பத்தை சுழட்டி எறிந்தவள், கையிலுள்ள தூசியை தட்டியபடி தொலைந்தான் துரோகி என்றவாறு திரும்பி அவன் வீட்டு மொட்டைமாடியை பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். 
அவர்களது மொட்டை மாடி இரண்டுக்கும்இடையில் நடுச்சுவர் தான் இடைவெளி வெளியே நின்று பார்க்கும் போது இரண்டு வீட்டு மொட்டைமாடிகளும் தடுத்த வண்ணமே இருக்கும். இரு மொட்டை மாடிகளிலும் என்ன?  நடந்தாலும் மற்ற மொட்டை மாடியில் இருப்பவர்கள் கண்டுகொள்ள முடியும்.அதுமட்டுமல்லாது அவசரத்துக்கு இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் வீட்டுக்குள்ளே பழகும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டிருந்தது. 
 மொட்டை மாடியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் இருந்து ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தவன், அங்கே அவள் வந்த போதே கண்டு கொண்டவன் அவள் தன்னை காணவில்லை என்பதையும் புரிந்து கொண்டு என்ன செய்கின்றாள் என்பதை கவனித்தபடி தான் நின்றான்.
இவள் அவன் பெயரை எழுதி தடியால் அடித்தபோதே… .அவனுக்கு ஒரு சந்தேகம் தான் அது தன்னுடைய பெயராக இருக்குமோ…? என்று, தன்னுடைய பெயரா…? என்பதை தெளிவு படுத்துவதற்கு தான் பைனாகுழலை எடுக்க சென்றதே…! அவனது சந்தேகம் சரி என்பது போல அவள் அவனை படமாக கீறி கண்ணை குத்தும் அளவிற்கு கொலைவெறியில்… இருந்தது மட்டுமல்லாது….  அவனது பெயர், படம் என்பவற்றுக்கு அவளது பாணியில் பூஜை வைத்துக்கொண்டிருந்தாள். 
எல்லாம் முடிந்து அவள் திரும்பி பார்த்தபோதுதான் அவன் தன் செல் ஃபோனில் அவளை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தான். 
தன்னை சுதாகரித்து கொண்டவள்  தன்னை குனிந்து பார்த்தவள் திடுக்கிட்டாள்.ஏனெனில அவள் அணிந்திருந்த ஆடை அப்படி… குட்டைக்கையுடைய குட்டிச்சட்டை… அது அவளது அவளுடைய முழங்கால்களுக்கு மேலே கால்வாசி தொடைகள் தெரியும் வண்ணம் இருந்தது… மட்டுமன்றி மிக மெல்லியதாகவும் இருந்தது.
‘அதுமட்டுமில்லாமல் வந்தவுடன் வளைந்து நெளிந்து போஸ் வேற கொடுத்தேனே…!
நான் வரும் போது யாரும் இல்லையே… இவன் எப்போது வந்தான் என்று தெரியவில்லையே…! வந்தவன் வேடிக்கை பார்த்தது போதாதது என்று போட்டோ வேற எடுக்கின்றானே… ! லூசுப்பயலே… இருடா… வருகின்றேன். ‘ என்றவள் கீழே கிடந்த விளக்குமாத்தை எடுத்து மற்ற கையில் தட்டி எப்படி வசதி என்பது போல கேட்க… அவனா அசருகின்ற ஆள். 
அவனும் இன்னும் இரண்டு போட்டோவை கிளிக்கியவன் திரும்பி நின்று தானும் போட்டோவுக்குள் வருமாறு செல்ஃபி ஒன்றையும் எடுத்து விட்டு அவளை பார்த்து சூப்பர் என்பது போல கையசைத்தான். 

Advertisement