Advertisement

மலர் 13
அன்றோடு அவன் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்து ஒருவாரமாயிற்று. ரெஸ்ட் எடுத்தே அவனுக்கு அலுத்து விட்டது. அதுமட்டுமல்லாது அவனுடைய அம்மா அவன் அடிபட்டிருப்பதை  காரணங்காட்டியே” என் பையன் உடம்பில் இருந்து எவ்வளவு இரத்தம் போயிருக்கு…” அதனால பத்தியச்சாப்பாடு தான் தரனும் என்று இதுவரை அவன் சாப்பிடாத உணவை எல்லாம் செய்து அவனுக்கு கொடுப்பதனாலேயே… அவனுக்கு வீட்டிலிருக்கவே…  வெறுத்தது.
நித்யாவை கூட கடைசியாக ஹாஸ்பிட்டலில்  பார்த்தது தான். அதற்கு பிறகு அவள் அவன் கண் முன்னாடி வந்ததேயில்லை… ஆனால் அவள் வீட்டுக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றாள். அவன் இருக்கும் திசைப்பக்கமே அவள் வருவதில்லை. 
அவள் வீட்டுக்கு வந்தாலே அவனருகில் இருக்கும் தாயிலிருந்து, வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் மற்றும், அவனது நாய்க்குட்டி பப்பி வரை எல்லாமே… அவளருகில் சென்று,அவளை சுற்றியே இருப்பார்கள். 
எல்லோரையும் கைக்குள்ளே போட்டு வைத்திருக்கிறாளே… ! சரியான கைகாரி என மனதிற்குள் திட்டிக்கொண்டான். 
அறைக்குள் அடைந்து கிடக்க எரிச்சலாக இருக்கவும், கீழே போய் இருக்கலாம் என நினைத்தவன் மாடிப்படிகளில் இருந்து இறங்கி வரவும் அவன் காதுகளில் விழுந்தது தந்தையின் சிரிப்பு…  அடுத்த அடி எடுத்து வைக்க முன் தாயும் ‘கலகல’த்து சிரிக்கும் சத்தமும் கேட்டது. 
அப்பாவும், அம்மாவும் மனம் விட்டு சிரிப்பதை அவனால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த புன்னகைக்கு பின்னால் யார்? காரணமாக இருந்தாலும் அவர்களை பார்க்க வேண்டும் போல இருக்கவும்,  இறங்கி சத்தம் வந்த திசையை நோக்கி போனான்.
சமையலறை பக்கமே சத்தம் கேட்கவும் அவன் அங்கே போக எத்தனிக்கவும் நேரே வந்த சமையல் செய்யும் பெண் வதணி அவனைக்கண்டு “சின்னத்தம்பி ஏதாவது வேணுமா… ?” என கேட்கவும் இல்லை வேண்டாம் என்பது போல தலை அசைத்தவன் வதணியைப்பார்த்து சத்தம் போட வேண்டாம் என்பது போல அவனது உதடுகளில் விரலை வைத்து காட்டியவர் சமையலறை நோக்கி சென்றவன் வெளிப்பக்கமாக உள்ள ஜன்னல் வழி உள்ள பக்கமாக சென்று வெளியே தோட்டத்தை பார்ப்பது போல நின்றுகொண்டு உள்ளே நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.
அவளே தான்… அவ இருக்குமிடம்  எப்போதும் ‘கலகல’ என்று தானே இருக்கும். அதை மறந்தது அவன் தன் தப்பு கணக்கு போட்டுவிட்டான். ‘சரி இங்கே அப்படி என்ன சர்க்கஸ்சையா காட்டுகிறாள்… ‘ என நினைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கலானான்.
அங்கே அவனது அப்பா கிச்சினுள் இருக்கும் தட்டில் ஏறி உட்கார்ந்திருக்க, அவள் அவருக்கு தோசை ஊற்றிக்கொண்டிருந்தாள். 
“ஏன்மா…? உன் வயசுல உன் அத்தைக்கே… சரியாக சுடுதண்ணி கூட வைக்க தெரியாது? நீ என்னடா என்றால் சமையல்…சும்மா…வெளுத்து 
வாங்கிறியே… !”
“ஆமா… மாமா…  அப்பா வீட்ல தனியா சமையல் பண்ணுவாங்க…  அதனால அவருக்கு ஹெல்ப் பண்ணுவதற்கு ‘குட்டி குட்டி’யாக கத்துக்கிட்டேன்.” என்றவாறு ஒரு முட்டையை உடைத்து திசை மீது ஊற்றி அது வேகியதும் தோசையை மறுபக்கம் திருப்பிப்போட்டவள்,தோசை ‘மொறு மொறு’ என்று முறுகியவுடன் மாமனாரின் தட்டில் எடுத்து வைத்தாள். 
“பார்த்தியா… நித்திம்மா… .உன் மாமாவை இவ்வளவு நாளும் என் சமையலை பற்றி புகழ்ந்து தள்ளுவார். என் சமையல் தான் உலகத்திலே பெஸ்ட் சமையல் என்பார். இப்போது ஒரு முட்டைத்தோசைக்கு ஆசைப்பட்டு பிளேட்டையே மாத்திப்போட்டுட்டார். இனி  என் சமையலில் புது அவதாரங்களை காட்டி உன் மாமாவை ஓட வைக்கிறேனா… ? இல்லையா… ? என்று பார். “
“எனக்கு தனியா ஓட பயமா இருக்கு சந்திரா… நீயும் கூட வர்றியா…? சேர்ந்தே ஓடலாம்.”
“ஓய்… மாமா…  உங்களுக்கு தான் முட்டி செத்துப்போச்சு… என்று அத்தை தினமும் தைலம் தேய்ச்சு விடுறாங்க… பிறகு என்ன… ? ஓட்டம் வேண்டிக்கிடக்கு… . ரொமான்ஸ்…ஆ… பண்ணுங்க பண்ணுங்க… “
“ஏய்…  என்னடி…  என் புருசனுக்கா முட்டி செத்துப்போச்சு… .அவருக்கு முட்டி வலிடி… .”
“இரண்டும்… .ஒன்று தான் அத்தை… .உன் புருசனை தான் சொன்னேன் அவரு தான் இங்கே இருக்காரே… பின்னே என் புருசனையா சொன்னேன்.”
“மாமா…கேட்டிங்களா… புருசனைப்பற்றி சொன்னதும் கிழவிக்கு சும்மா… சுர்… என்று கோபம் வருகுது.” என்றவாறு அடுத்த தோசைக்கு மேலே, வெட்டி வைத்திருந்த வெங்காயத்தை தூவி அதற்கு மேல் சிறிது நெய் ஊற்றினாள் அதுவும் முறுகலானவுடன் எடுத்து மறுபடியும் மாமனின் தட்டில் போட்டாள்.”
“என்னடி என் மருமகளை பார்த்து கிழவி… என்றா சொல்கிறாயா… .பொறுடி வாறன். “
“நீ ஒன்றும் வரத்தேவையில்லை அங்கினயே இரு… அப்புறம் வட்டமா வர்ற தோசை… கோடு கோடாக வந்திடப்போகுது கிழவி.”
“என்னடி… என்னையும் கிழவி என்று கூப்பிட்டு,என் மருமகளையும் கிழவி என்றே கூப்பிடுறியே… இதுல எது?  உண்மை.”
“இரண்டுமே… உண்மை தான் ஆனால் உண்மையில்லை. மூடிற்று இருந்தாய் என்றால் தோசை தருவேன். இல்லை என்றால் இன்றைக்கு உனக்கு சாப்பாடு கட்.”
“என் மருமகள் எனக்கு தோசை ஊத்தி தருவா எப்படி. “
“உன் மருமகளுக்கே என் கையால தான் சாப்பாடு இது எப்புடி… “
“நித்தும்மா… இது எட்டாவது தோசை இதுக்கு மேல் என்னால் முடியாது. “
“என்ன…? மாமா சாப்பிடுறதுக்கு… யாராச்சும் கணக்கு பார்ப்பார்களா…? சாப்பிட முடியுமான போது தானே சாப்பிட முடியும். இப்படி கணக்கு பார்த்து சாப்பிட்டா அப்புறம் அது உடம்பில் சேராது.”
“சரிடா… இனிமேல் கணக்கு பார்க்கவில்லை. உண்மையாகவே போதும்டா. இனி உன் அத்தைக்கு கொடு.”
“ஐயோ…. எனக்கும் போதும்.நீ சாப்பிடு.”
ஏன்… மாமா நீங்க…. சமையல்லபுலி என்று சொன்னீங்களே… அப்போது இரண்டு தோசை வளர்க்கிறது என்று சொல்லி கையிலிருந்த தோசைக்கரண்டியை “கச்” என்று கூறியவாறு அவரிடம் தூக்கிப்போட்டாள். 
அவரும் இலகுவாக கரண்டியை கைப்பற்றி “ஓகே… பேபிம்மா… இப்போது பார் உன் மாமாவின் வித்தையை…” என்றவர் மாவை கிள்ளி ஊற்றி வட்டமாக இழுக்க முயல அது முக்கோண வடிவில் வந்தது. 
அவள் தட்டில் உட்கார்ந்த வண்ணம் அவர் சுடும் அழகை பார்த்தவள்…” அத்தை மாமாவை தோசை தானே கேட்டேன்.உன் புருசன் என்னடா என்றால் தோசை சுடுறதுக்கு பதிலாக சமோசா பண்ற மாதிரி இருக்கே… நான் என் வீட்டுக்கு போறேன் உன் புருசன் செய்யுற சமோசாவை அந்த கிழவிக்கு கொடு.” என்றவாறு ஓடினாள். 
“ஏய்… நித்திம்மா… நில்லு… நில்லு… இரண்டுவாய் சாப்பிட்டு போம்மா… அப்புறம்… உனக்கு பசிக்கும்…நீ பசி தாங்க மாட்டாய்.” என இருவரும் பின்னோடு ஓடினார்கள். 
‘ம்… இவ காட்டில இனி மழை தான்… இந்த அம்மாவும்,அப்பாவும் பச்சைப்புள்ளைக்கு, நிலாவை காட்டி சிறு ஊட்டுவாங்களே… அதை விட ஓவரா பண்றாங்க… ஆனால் எல்லோரோடும் பட்டென்று ஒட்டிக்கிறாளே…’ என நினைத்தபடி உள்ளே வந்தவன் கையை சுவரில் முட்டிக்கொண்டு “ஆஆ….அம்மா..” என கத்தினான். 
சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிய தாய், தந்தை இருவரும், “நீ… என்ன… ? தம்பி இங்கே வந்து நிற்கின்றது. சரி வந்தது வந்துவிட்டாய், தோசை வார்க்கட்டுமா… ?”
“என்ன…? தோசையா….? இல்லை… சமோசாவா…” என கேட்டவன் திண்டில் ஏறி உட்கார்ந்தான். 
“என்ன?  நாங்கள்… எங்களது…மருமகளோடு பேசியதை ஒட்டுக்கேட்டது போல் இருக்கே… !”
“ம்… கேட்டேன்… கேட்டேன்… அது மட்டுமா… ? உங்க பாச மழையில் அவ நனையுறதையும் பார்த்தேன்… “
“ஏய்… சந்திரா… உன் பையனுக்கு பொறாமையை பார்த்தியாடி…”
“யாருக்கு… ? பொறாமை…? எனக்கா… ? அவளே ஒரு டம்மி பீஸ்… அவளைப்பார்த்து நான் பொறாமை படுறேனா… ?”
“ஆமாண்டா… பொறாமைப்படாமலா… பேச்செல்லாம் தாறு மாறா வருகுது.” என்றவாறு தோசையை தட்டில் போட்டு தாய் கெடுக்க, தந்தை தண்ணீரை எடுத்து அவனருகில் வைத்து விட்டு, “இப்போது உடம்பு கொஞ்சம் பரவாயில்லையா… ” என்றார். 
“ம்… ஓகே… ப்பா”
“அப்பனும், பிள்ளையும் எத்தனை காலத்துக்கு பிறகு இப்படி பேசிக்கிறாங்களாம் என நொடித்த தாயார் “இதுக்கெல்லாம்… நம்ம..நித்திக்குட்டி…. தான் காரணம். அவ வந்த நேரம் தான் ரொம்ப நல்லாயிருக்கு…” என்றவர் முகத்தில் எத்தனை பூரிப்பு. 
“ஏன்மா… அவ எல்லாம் ஒரு ஆளா… “
“இல்லடா அவ ஆளில்லை… தேவதைடா… “
மறுபடியும்,  அவள் “அத்தை….” என்றவாறு உள்ளே வந்தவள் கையில் மலை வாழைப்பழ சீப்புகள் இருந்தன. “இந்தாங்க… அத்தை… அப்பா கொடுத்து விட்டார்.மாமாக்கு பிடிக்குமாமே… “
ம்… பார்த்தியா… சொந்த தங்கை எனக்கு எதுவும் கொடுத்துவிடல்லை… மச்சானுக்கு கொடுத்து விட்டிருக்கா… இருக்கு… அவருக்கு.”
“இல்லை அருமை தொங்கச்சிக்கும் ஏதோ கொடுத்து விட்டார். என மறைத்து வைத்திருந்த பையை கொடுத்தாள். “
“பையை வாங்கிய சந்திரா… நித்தி இதுக்குள்ளே என்ன?  இருக்கிறது. “
“தெரியல்லை… அத்தை… அப்பா கொடுத்து விட்டார். நான் கொண்டு வந்தேன். உள்ளே என்ன? இருக்கின்றது என பார்க்கவில்லை.”
“சரி…நானே பார்கின்றேன்.” என்று கூறிய வண்ணம்  பைக்குள் இருந்தவற்றை எடுத்தவர் கண்கள்களில் ஆனந்த கண்ணீர்.
ஏனெனில் அதற்குள் இருந்தவை கடலைஉருண்டை, எள்ளுப்பொரிஉருண்டை… மற்றும் தேன்மிட்டாய் என்பன சுத்தமாக கண்ணாடி போத்தலுக்குள் அடைக்கப்பட்டு வந்திருந்தது. 
“அத்தை… இதுக்கா கண்கலங்கினீங்க… “
நித்திம்மா… நீ இப்போது போய் பீரோவில இருக்கின்ற நகை, புடைவை,சொத்துப்பத்திரம் இவை எல்லாவற்றையும் கண்டு வந்து வைத்து அது வேண்டுமா… ? இது வேண்டுமா… ? என்றால் அவ நீ கொண்டு வந்தவற்றை தான் வேண்டும் என்று சொல்லுவா…? அப்படியே நான் வாங்கி கொடுத்த பொருள், நகை, புடைவை எல்லாவற்றிற்கும் பெறுமதி இல்லாமல் பண்றதே இவ வேலை. 
“அப்ப… சரி. புருசன், பொண்டாட்டிக்குள்ளே சண்டையை மூட்டி விடுவது மிகப்பெரிய பாவம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அதனால் நான் அத்தைக்கு கொண்டு வந்ததை திருப்பி எடுத்துக்கொண்டு போகின்றேன். “
“உன் மாமாக்கு பொறாமை…பட்டுக்குட்டி… என் அண்ணன் எனக்கு வாங்கி கொடுக்குது. இவருக்கும் தான் வாங்கி கொடுத்து விட்டிருக்கு… நான் ஏதாவது சொன்னேனா… இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு… ஜெலஸ்…”
“மாமா… உங்களுக்கு தெரியாமல் தான் அத்தைகிட்ட அப்பா…கொடுக்க சொன்னார். “
மார்கண்டேயனா…? அப்படிச்சொன்னான். ஏன்?
“நீங்க பொண்டாட்டி தானாம். சரியான ஜெலஸ் இருக்காம். அதனால நீங்க என்  அப்பா மேலே காண்ட் ஆகுவீங்க என்றும் சொன்னார். நான் நம்பவில்லை. ஆனால் அது உண்மையாக இருக்கும் போலவே…”
“அப்படியா… ? சொன்னான் உன்னோட… அப்பன்… அப்ப அது சரியா தான் இருக்கும்.”என்று மனைவியை பார்த்து அசடு வழிந்தார்.
“அப்போ… இந்த வெட்கம் என்றதே… உங்களுக்கு இல்லை அப்படித்தானே… “
“ம்… கண்டிப்பா… இந்த விசயத்தில் இல்லை. 
ச்சே… மானங்கெட்ட குடும்பத்துக்கு மருமகளாக வேண்டும் என்று என் தலை விதி போல… “
“நான் மட்டுமில்ல நித்தி… உன் தாத்தா… என் பையன்… எல்லோரும் கூட இந்த விசயத்தில் வெட்கத்தை தலை முழுகியவர்கள்… தான். “
“உங்கள் பையனுமா….”
‘இவ எதுக்கு இப்போது என்னை இழுக்கிறா… சரியான லூசு… ‘என நினைத்தவன் தந்தை என்ன பதில் சொல்கின்றார் என கேட்பதற்கு,குனிந்து தோசையை சாப்பிடுவது போல பாசாங்கு செய்தான். 
.

Advertisement