Advertisement

மலர் 11
கோபத்துடன் வெளியே வந்தவள் மாமனை கண்டு இன்னும் முறைத்தபடி ‘விறுவிறு’ என வெளியேறினாள். 
நித்யா வெளியே போவதை பார்த்த சுப்பிரமணியன் ‘இவ எதுக்கு இவ்வளவு கோபத்துடன் போறா…’ என யோசித்தவாறு உள்ளே சென்றார். 
அங்கே மகனது கோலத்தை கண்டு சிரிப்புத்தான் வந்தது. 
“என்ன…? நடந்தது…? நித்தி ஏன்…? கோபமாக போறா…”
“எனக்கும் தெரியாது உனக்கு விபரம் ஏதும் தெரிய வேண்டும் என்றால் உன் பையனிடமே விசாரிடா… அவ தனியா போறா… நான் வருகின்றேன்.” என கூறிய வண்ணம் மார்க்கண்டேயன் ஈரத்துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். 
“செந்தூர் அவளை திட்டினாயா… ?”
“……”
“உன்னைத்தான்
கேட்கின்றேன்.சொல்லுடா…? அவ சின்னபுள்ள… உன் குரங்கு சேட்டை ஏதாவதை அவகிட்ட காட்டி விட்டாயா… ?” என தகப்பன் பதறவும் அவனுக்கு தான் இழுத்துப்பிடித்த பொறுமை மறைந்துவிடும் போல இருந்தது. 
“அவமட்டும் ஏதாவது சொல்லட்டும் அப்புறம் உனக்கு இருக்கு…” என அவர் ஏதோ செல்லப் போக, அவன் தன் இரண்டு கைகளையும் ஒன்றாக கூப்பி “அப்பா… என கத்தியவன் உங்களது நம்பிக்கைக்கு நன்றி. உங்கள் மருமகளை நான் ஏதும் சொல்லவில்லை. இனியும் எதுவும் சொல்லப்போவதில்லை. போதுமா…? இப்போது கிளம்புங்கள்…”
“பெரிய சத்தியவான் மாதிரி பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை. செய்யுற வேலை எல்லாம் பக்கா லோக்கிளாஸ் வேலை.” என முணுமுணுத்தார். 
“அவ உலக அழகியாக இருந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன் போதுமா…?”
“ஆமா…இவரோட திறமைக்கு உலக அழகியாமெல்லோ… ?கேட்குது. “
“உங்கள் மருமக… கோபமாக போறதுக்கு  நீங்க கொண்டுவந்த எவிடன்ஸ் தான் காரணம்.” என தன் கையிலிருந்த காகிதங்களை காட்டவும் தந்தை திகைத்து நின்றார்.
“டாமிட்… அவ இதை பார்த்துட்டாளா?  யாருக்கு இது தெரியாமல் இருக்க வேண்டும் என நினைத்தேனோ… ? அவளுக்கே தெரிந்து விட்டதே… இதை எப்படி சமாளிப்பேன்…” என கூறியவர் நான் கிளம்புகின்றேன். உன்னை நாளைக்கு தான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்களாம். நைட்டுக்கு உன் மாமா துணைக்கு வருவார்.” என்றவாறே… கிளம்பினார். 
‘யாரோ பொண்ணு மேலே இருக்கின்ற அக்கறை,பெத்த பையன் மீது இல்லை. உலகத்திலேயே இல்லாத பெரிய புதினம்.’ என நினைத்தபடி தன் ஃபோனை எடுத்து மெசேஜ்சுகளை பார்வையிட்டவண்ணம் இருந்தவன் ஒரு மெசேஜ்ஜில் அவனது கிரடிட்காட்டில் இரண்டரைலட்சம் ரூபாவுக்கு பேச்சஸ் எமவுண்ட் காட்டவும் எதற்கான பில் என்பதை நினைவுறுத்தினான். அது அன்று அக்ஷ்சரா சொப்பிங் செய்த தொகை இந்த மெசேஜ் நேற்றே வந்தது. இவன் எடுத்து பார்க்க நினைக்கையில் அவளே வந்து விட அதை வைத்துவிட்டு அடுத்த பயணத்தை தொடர்ந்ததும் அதற்கு பின்பு நடந்த நிகழ்வுகளையும் கண் முன் கண்டு வந்தவனது உதடுகள் இகழ்ச்சியான முறுவலை சிந்தியது.
இந்த தகவலை நேற்றே பார்த்திருந்தால் இரவு தவறு நடக்காமல் இருந்திருக்குமோ…? ஒரு பெண் ஒரு நாளைக்கு செலவு செய்ய இரண்டரை இலட்சமா…? பணம் என்ன?  மரத்திலா… ? காய்க்கிறது. நல்ல புளியம்கொம்பாய் பார்த்து தான் செலக்ட் பண்ணியிருக்கிறாள்… நாளைக்கு என்னை விட பணக்காரன் வந்தால் என்னை கழட்டி விடுவது உறுதி. 
இந்த அக்ஷ்சரா இப்படி இருந்தால், இந்த நித்யா ஒரு மாதிரி இருக்கிறாளே…! வேண்டாம் இந்த காட்டேறியை பற்றி நினைக்கவே வேண்டாம்…  என நினைத்தவன் உதடுகளில் ஒரு புன் முறுவல் தோன்றியது. 
அவனது இருபத்தியேழு வயதுக்குள் அவன் எத்தனையோ…! பெண்களை பார்த்திருக்கின்றான்,பழகியிருக்கின்றான். அவர்களுள் நினைவில் இருப்பவர்கள் கைவிட்டு எண்ணக்கூடிய சிலரே… ! 
ஆனால் இந்த நித்யாவை பார்த்தே கொஞ்ச நாள் தான் ஆகுது, ஆகக் கூட பத்து நிமிடம் கூட கதைத்திருக்க மாட்டான்,பட் ஆயுள் வரை அவளை மறக்க முடியாதளவு பண்ணி விட்டாளே… !
                                 ******
ஆட்டோ ஒன்றை பிடித்து வீட்டுக்கு வந்தவள்,  இடம் வந்ததும் இறங்கியவள் காசுக்காக பையினுள் கைவிட்டவள் நல்ல வேளையாக கன்ரீனில் கெடுத்து விட்டு மிச்சக்காசை தகப்பன் அவளிடமே… கொடுத்ததனால் நல்லதாகி போயிற்று… பையிலிருந்த காசை கெடுத்து விட்டு வீட்டுக்குள்ளே ஓடினாள். 
பையை தூக்கி கட்டில் போட்டு விட்டு பாத்ரூமுக்குள் ஓடியவள் அப்படியே ஷவரை திறந்து அதன் கீழே நின்றாள், சிறிது நேரம் கழித்து ஷோப்பை போட்டு குளித்தவள், 
மறுபடியும் ஷோப்பை போட்டு நன்றாக உரஞ்சி குளித்தவள் காணாதற்கு உடம்பு உரஞ்சும் பிரஸை எடுத்து நன்றாக கழுவிய பின்பே அவளுக்கு ஓரளவு மனம் நிலை கொண்டது.
அவனது செயல் அவளுக்கு அதிர்ச்சியே… ‘போயும் போயும் ஒரு பொறுக்கிக்கியை நல்லவன் என்று நினைத்தேனே… என மறுகியவள் அதுவும் இன்னொருத்தி கூட தப்பு பண்ணியவனுக்கு நான் சேவகம் பண்ண வேண்டியதாயிற்று… இவனை பற்றி தெரிந்திருந்தால் இவன் இருக்கும் திசைக்கே போயிருக்க மாட்டேன்… சரி இனிமேல் அவன் இருக்கும் திசைக்கே போகாமல் இருந்தா சரி…. தானே…!, ஆனாலும் அன்றைக்கு என் உயிரையும், அதையும் விட மேலான மானாத்தையும் காப்பாற்றினானே… ! ஒருவேளை அப்படித்தான் ஹெல்ப் பண்ணுகிற மாதிரி ஹெல்ப் பண்ணி, பொண்ணுங்களை கவிழ்ப்பானோ… ! அந்த திருடர்களும் இவன் வைத்த ஆட்களாகவும் இருக்கலாம். ஆனால் என்னை ஞாபகம் இல்லாத மாதிரியே இருக்கின்றானே…! ஒருவேளை இவன் அவன் இல்லையோ…! வெளியே ஹீரோ மாதிரி காட்டிக்கொண்டு உள்ளே வில்லன் வேலை பண்ணுவான் போல.’ என நினைத்து தவித்தவள் குளிர் உடம்புக்குள்ளே ஊடுருவவும்,தான் பாத்ரூமுக்குள்ளே இருக்கின்றாள் என்பதையே உணர்ந்தாள். 
தன் நினைவுகளை உதறியவள் வெளியே வந்து, துணிமாற்றிக்கொண்டு,படுக்கையில் அமர்ந்தவள் நெஞ்சு இன்னும் பதட்டமாகவே துடித்தது. 
‘இந்த குரங்கை பார்த்த நாள் முதல் நான் நானாகவே இல்லையே… ! ஏன்?’
‘அன்றிலிருந்து இன்றுவரை என்மனசு இவனை கண்டால் இதமான ராகம் பாடுது.அது ஏன் என்று எனக்கே புரியவில்லை. அதுக்குள்ள இந்த கூமுட்டை இப்படியொரு தப்பை பண்ணி, அதுவும் எனக்கு தெரிந்து,இந்த மாட்டர் எனக்கு தெரியாமல் இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும். என அவள் மனது அவனுக்கு சப்போட் பண்ணவும் அதை தட்டி தன் பக்கம் திருப்ப முயன்றாள்.’
‘மனம் ஒரு குரங்கு என்பதை முற்று முழுதாக அவள் உணர்ந்தாள்.மனதை கட்டி வைக்க முயற்சித்த மறுமணம் கட்டவிழ்த்து ஓடி கண்ட கற்பனைகளில்திளைத்து கூத்தாடியது. “அவளை தொடுவானேன் கவலைப்படுவானேன்.” அவன் எவளையோ தொட்டதற்கு இவள் கவலைப்படுகின்றாள்.’
‘என்னுடைய மனசே ஒரு மானங்கெட்ட மனசா இருக்கும் போல…   கருமம் பிடித்தது… என திட்டியவளது விழிகளில் நீர் நிறைந்து வழிந்தது. என் விழிகள் கூட என் கட்டுப்பாட்டை மீறுகின்றதே… !’
அவள் அழுகை கூட மனதிற்கு ஆறுதலை தர அழுது தீர்த்தவள் அப்படியே உறங்கினாள்.
                               
                                *****
முதலில் இந்த கண்றாவி எவிடன்சுகளை கொடு, கொழுத்தி போட வேண்டும. ” என செந்தூரிடம் இருந்த காகிதங்களை வாங்குவதற்காக கையை நீட்டினார் சுப்பிரமணியன்.  
“இல்ல… வேண்டாம்… இதை கவனமாக பைல் பண்ணி முக்கியமான பைல்கள் வைக்கின்ற கபேட்டுக்குள் வையுங்கள். “
“ஏன்? சாம்பிராணிப்புகையும் போட்டு வைத்து, அழகு பார்க்க சொல்லி உன் அம்மாவிடம் கொடுக்கிறேன். அதைக்கொடு.”
தகப்பனின் கிண்டலில் புன்னகைத்தவன்,  “இது சில நேரம் நமக்கு ஹெல்ப்பாக இருக்கும். மற்றப்படி சொல்லிக்கிற… மாதிரி எதுவும் இதில் இல்லை. குப்பையாக கூட இதை கருத முடியாது. ” என்று கூறியவன்,  “மாமாவை அனுப்ப வேண்டாம். கெளதமை வரச்சொல்கின்றேன்…” என்றான். 
தகப்பன் திருப்தி அடையாத பார்வை ஒன்றை பார்க்கவும்,  சலித்து கொண்ட செந்தூர்… “அவ தனியா வீட்ல இருப்பா…அதுதான்” என்றான்.
“ம்… ரொம்பத்தான் அக்கறை.நான் வீட்டுக்கு போகின்றேன்.நாளைக்கு காலையில் வந்து பார்க்கின்றேன். ” என வெளியேறினார். 
சரி… என்பது போல தலை அசைத்தவனது விழிகள் இடுங்கி யோசனையை காட்டியது. இந்தப்பொண்ணு ஏன்…? இவ்வளவு காண்ட் ஆக வேண்டும். ஒருவேளை என்னுடைய தப்பு அவளை பாதிக்குதா…? அப்படி என்றால் என்ன…? அர்த்தமாய் இருக்கும். என யோசித்து…யோசித்து அப்படியே உறங்கிப்போனான். 
                                 *****
அடுத்த நாள் அவன் கண்முழிக்கும் போது அருகில் கதிரையில் அமர்ந்து கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த கெளதம் தென்படவும்,தான் எங்கே இருக்கின்றேன் என்பதை உணர்ந்தவன் “டேய்… மச்சான்… மச்சான்….”என அழைக்க தூக்கத்தில் இருந்த கெளதம் பதறியடித்து எழுந்து “என்னடா… ? என்னாச்சு…” என பதறினான்.
“ஒன்றுமில்லை. டாக்டர்ஸ் றவுண்ட்ஸ் வர்ற நேரம் அதுதாண்டா எழுப்பினேன் என்றவன் எப்போடா இங்கே வந்தாய்…”
“ம்… ஏன்… ? கேட்கமாட்டாய்… நேற்று நைட் நான் வரும் போது நீ பரலோகத்தில இருந்தாய் மச்சி… அது தான் நான் வந்தது கூட தெரியல்ல… ” என தூக்க கலக்கத்தில் வாய் குளறினான்.
“ஆமாமா… சூப்பர் பிளேஸ்டா…”
“என்னடா?  சொல்கிறாய்…” என கெளதம் விழித்தான். 
“ம்… நீ சொன்ன பரலோகத்தை தான் சொல்லுகின்றேன். நேற்று கொஞ்ச நேரம் என் கண் முன்னே தெரிந்ததென்னவோ… ? உண்மை தாண்டா. “
இவன் பேசுவதை கேட்ட கெளதம் எழுந்து வந்து அவனை சுற்றி, சுற்றி பார்த்தவன் அவனது தலையிலும் கை வைத்து தடவிப்பார்த்தான். 
“என்னடா மியூசியத்திற்கு வந்த சின்ன பையன் மாதிரி என்னையே… சுற்றிப்பார்கிறாயே… ஏன்டா? “
இல்லை உன் பேச்சுவார்த்தை எல்லாம் ஒரு மார்க்கமாக இருக்குதே… அதுதான் அடி தலையில ஏதும் பட்டதா? என்று பார்க்கின்றேன். 
“ஏன்டா… ? எனக்கு லூசாகிட்டுதா…? இல்லையா…? என்று உனக்கு டவுட். அப்படித்தானே… “
ஈஈஈஈ… .என இளித்தவன் இல்லை என தலையசைத்தவன் பிறகு ஆமாம் என்பது போல தலையை மேலும் கீழும் ஆட்டினான் கெளதம். 
அடிங்…உன்னை… என தலையணையை தூக்கவும் கெளதம் வாசலை நோக்கி ஓடியவன் சட்டென்று மற்றப்பக்கமாக திரும்பவும், அதே நேரம் பார்த்து கதவு திறந்தது, அவன் எறிந்த தலையணை நேரடியாக சென்று கதவை திறந்தவள் முகத்தில் மோதவும் எதிர்பார்க்கப்படாத தாக்குதலில் கையிலிருந்த ப்ளாஸ்கை கீழே விட்டாள்.அது கலீர் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. 
அதிர்ந்து நின்றவளை “நித்யா நகரு கால்ல கிளாஸ் குத்தப்போகிறது… ” என்ற கெளதமின் குரலால் நிஜத்திற்கு வந்தவள். நின்ற இடத்திலிருந்து நகராமல் அவர்கள் இருவரையும் முறைத்தவளது வாயில்  கெட்ட வார்த்தைகள் வண்டை வண்டையாக வந்து விழவும் அதிர்ச்சியில் வாயை பிளந்த ஆண்கள் இருவரும் பட்டென்று காதை இறுக்கமாக பொத்திக்கொண்டனர். 
சற்று மூச்சு வாங்கியவளை பார்த்த இருவரும் தமது காதுகளில் இருந்து கையை எடுத்து விட்டு அவளது முகத்தை அதிசயமாய் பார்த்தனர். 
அவளது முகத்தை அதிசயமாய் பார்த்தவர்களை கண்டவள், “ஏய்… என்னங்கடா… என் முகத்தில் என்ன?  பிட்டுபடமா… ? ஓடுது. இங்கே உடைந்து கிடக்கும் ப்ளாஸ்கை உங்க அப்பனா…வந்து அள்ளுவான்.வாங்க வந்து அள்ளுங்கள் என்றவள் நகர்ந்து வோஸ்றூமிற்குள் சென்றவள் அவள் கால் மீது கொட்டிய ரீயை கழுவி விட்டு வெளியே வந்தாள். 
அங்கே கெளதம் உடைந்த ப்ளாஸ்கை எடுத்து போட்டு விட்டு நிலத்தை கிளீன் பண்ணிக்கொண்டிருக்க, செந்தூர் கதிரையில் இருந்து கொண்டு கெளதமிற்கு கதை கொடுத்துக்கொண்டிருந்தான். 
‘விறு விறு’ என நடந்து வந்தவள் அவனது பெட்டில் அமர்ந்தவள் தலை ‘விண் விண்’ என்று வலிக்கவே அப்படியே படுத்துக்கொண்டு கண்களை மூடினாள்.
 

Advertisement