Advertisement

மலர் 10
மருமகள் சைகை காட்டவும் அமைதியானவர். மகனை பார்த்து விட்டு, “குடித்து விட்டு எங்கே கொண்டு போய் இடித்தானாம்.” என வினவினார். 
“இல்ல… மாமா குடிக்க எல்லாம் இல்லை. சொல்லப்போனால் குறுக்காக விட்ட வண்டியை இடிக்காமல் இருக்க இவர் ஸ்பீடா ஓடிவந்த தன் காரை சட்டென்று சடென்ப்ரேக் போட்டதனால் தான் இந்த விபத்து நடந்தது.” என்றாள். 
இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என்பது போல பெரியவர் பார்க்கவும்,” இவரை ஹாஸ்பிட்டல்ல கொண்டு வந்து சேர்த்தவர்களிடம் விசாரித்தேன்.அவர்கள் நாங்கள் வரும் போது இங்கே தான் இருந்தார்கள்.”
“நீ இவனுக்கு சப்போட்டா…”
“உண்மையை சொன்னால் அதுக்கு பெயர் சப்போட் என்பதா…?” என சிரித்தாள். 
இவர்கள் பேசிக்கொண்டிருக்கவும் அவளது தந்தையும் வந்துவிட, அவனும் தூக்கத்தில் கண்முழித்தான். அவன் கண்திறந்ததை பார்த்த அவன் தந்தை அவனருகில் செல்லவும்,மார்க்கண்டேயனும் மகளும் வெளியே இருப்பதாக கூறி மற்றவர்களை தொந்தரவு செய்யாது வெளியேறினர். 
வெளியே வந்த நித்யா தந்தையிடம் மூஞ்சையை  தூக்கினாள். 
“என்ன? நித்யா அசதியாய் இருக்கா?”
திரும்பி அவரை முறைத்தவள் “உங்கள் தொங்கச்சி மகன்ல இருக்கின்ற பாசம் என் மேலே ஒரு துளியாவது இருந்திருந்தால் என்னை காலையிலிருந்து இப்போது வரைக்கும் பச்சைதண்ணி கூட தராமல் பட்டினி போட்டிருப்பியளா? பசிக்குது தெரியுமா?” என்றவள் கண்கள் கலங்கியிருக்க முகம் சேர்ந்து போயிருந்தது. 
“பாப்பா… இன்னும் நீ சாப்பிடல்லயா நீ கீழ இருக்கின்ற  கன்ரீனில் ஏதாவது வாங்கி சாப்பிடுவாய் என்று நினைத்தேன். “
“காசு கொண்டு வரவில்லை… கான்ட்ஃபாக்கை வீட்லேயே மறந்து விட்டுவிட்டேன்.லப் இருக்கும் பையை தான் அவசரத்தில் தூக்கி கண்டு வந்ததே. அவனுக்கு சாப்பாடு பிசைந்து கொடுக்கும் போது என் வாயெல்லாம் எச்சில் ஊறிவிட்டது…” என்ற மகளை ஆறுதல் படுத்தியவாறு கன்ரீனுக்குள் அழைத்து போனார் தகப்பன். 
                                 *****
மகனையே வெற்றுப்பார்வை பார்த்த தந்தை அவனருகில் வந்து “நேற்று என்ன? நடந்தது என்று கொஞ்சம் சொன்னால் நன்றாக இருக்கும்.”
“அ…அது அட்சிடன்ற்…” என அவன் இழுக்கவும் “சட்அப் செந்தூர் நான் கேட்டது நேற்று என்ன? நடந்தது என்று… விபத்து இன்று நடந்தது. ஷோ இப்போது  நான் கேட்பது உன் மண்டைக்குள் நன்றாகவே புரிந்திருக்கும் தானே… ! “
“…….”
“யாரு அவ… உன் கேள்ப்ரண்டா… இல்லை வழமை போல நீ கூத்தடிப்பியே அந்த கூட்டத்தில் இருக்கின்ற உருப்படாத கூதரையா…? அவளை எதற்கு கெஸ்ட்ஹவுஸ் கூட்டிக்கொண்டு போனாய்.நைட் முழுவதும் அவளுடன் இருந்ததாக வேறு தகவல். “
“……..”
“உனக்கு இப்படி அலையுறதுக்கு வெட்கமாயில்லை. அப்படி தேவை என்றால் நல்ல பொண்ணாக பார்த்து கல்யாணம்பண்ணி அவளையே காதலிச்சு குடும்பம் நடத்த வேண்டியது தானே? இப்படி அலைவதற்கு பெயர் ஸ்டைல், ஃபேஷன், கெத்து என்று மட்டும் செல்லாதே… உன் அம்மாவை பற்றி கூட கவலைப்படாத ஜென்மம்டா நீ. சரி…எல்லாவற்றையும் விடு அந்தப்பெண்னையாவது கல்யாணம் பண்ணும் ஐடியா இருக்கா இல்லை இதுவும் ஊர் மேய்ந்த கதை தானா.?”
அவ்வளவு நேரம் வாயை மூடிக்கொண்டிருந்தது அவர் மேல் உள்ள பயத்தினால் அல்ல. வீணாக வாக்குவாதம் வேண்டாம் என்றே… அதிலும் இன்று தந்தை சொல்வதெல்லாம் தனக்காகவே என்பதால் அமைதியாக இருந்தவன் கல்யாணம் பற்றி கேட்டவுடன் கசந்த முறுவலுடன்” என்னை கல்யாணம் பண்ணும் ஐடியா அவளுக்கு இல்லை…”
இந்த முறை அவனது பேச்சை கேட்டு அதிசயித்தவர் “கல்யாணமா?  அவள் உனக்கு எந்த வகையில் பொருத்தம் எனநினைத்ததாய். ஒருவேளை உன்னைப்போல அவளும் ஊர் மேய்ந்து திரிவதாலா? “
“டாடி… அவ என்னை லவ் பண்ணுகின்றேன் என்று சொன்னா… நானும் பெரிய ஒழுக்கமாக இருந்ததில்லை. அவளும் முன்னே பின்னே இருந்தாலும் கல்யாணம் என்று ஒன்று நடந்தால் ஓகேயாகிடும்.” என நினைத்தேன் என்றவன் அவளுக்கும் தனக்கும் இடையே நடந்த உரையாடல்களை கூறினான். 
கல்யாணம் பண்ணினால் மட்டும் ஒழுங்காக இருந்து விடுவீங்களா? இரண்டுபேரும் அது நடக்காத கதை அவ உன் பணம் முடியும் வரை உன்னுடன் இருக்க வாய்ப்பிருக்கு… அதுவரையுமே அவள் உன்னை தாக்கு பிடிப்பது கடினம். நீ லவ் என்று சொல்கிறாயே? இது லவ் தானா?  லவ் எண்டா என்ன? என்றே விளக்கம் தெரியலை உனக்கு, இந்த லட்சணத்தில் அவளுக்கு ரைம் வேற கொடுத்திட்டு வந்திருக்கிறாராம் துரை. “
அவனுக்கும் அது லவ் இல்லை என்பது தெளிவாக புரிந்தாலும் அவனிடமும் தப்பு இருப்பதனால் தான் அந்த ரைமை அவளுக்கு அவன் கொடுத்ததே….! 
ஒருவேளை இந்த பத்து நாளுக்குள்ளே அவள் வந்தால் நிச்சயமாக அவளுக்கு அவன் தாலிகட்டி தன் அங்கமாக ஏற்றுக்கொள்வான். இல்லையேல் விதிவிட்ட திசை என அதன்பின்னே செல்வதாய் அவன் முடிவெடுத்திருந்ததை தந்தைக்கு கூறினான். 
அவனது பேச்சை கேட்டாலும் சுப்பிரமணியன் தான் கொண்டு வந்த பைல்கவரை பிரித்து அதில் இருந்த காகிதங்களை எடுத்து அவன் முன்னே போட்டு விட்டு கதவை திறந்து வெளியேறினார். 
கையில் கிடந்த காகிதங்களை பார்க்க பார்க்க அவனது உடல் இறுகி, கண்கள் சிவந்து,வேட்டைக்கு புறப்படும் சிறுத்தை போல உறுமிக்கொண்டே தன் காயம் பட்ட கையால் கட்டில் குத்துகுத்தென குத்தினான். குத்திய கையில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதை கூட கவனிக்காது தான் முட்டாளாக்கப்பட்டதை எண்ணி மறுகினான். 
                                ******
ஆறேழு பூரிகளை உண்ட பின்னரே அவளுக்கு பேச்சு வந்தது. அவள் உண்டு முடித்த பின் காசை கொடுத்து விட்டு மீண்டும் சூடான சமோசாவையும்,ரீயையும் வாங்கிக்கொண்டு மேலே வந்தவர்கள் வெளியே சுப்பிரமணியன் இருப்பது கண்டு அவரருகில் சென்றனர். 
“மாமா இந்தாருங்கள் ரீ.” என்றவள் பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி கூடவே சமோசாவையும் நீட்டினாள். அவரும் களைப்பில் இருந்ததால் மறுப்பேதும் சொல்லாது வாங்கிக்கொண்டார். 
“நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள் நான் உள்ளே போய்  உங்கள் மகனுக்கு கொடுத்து விட்டு வருகின்றேன். ” என கூறிக்கொண்டே  உள்ளே சென்றவள் அவனிருக்கும் நிலையை பார்த்து அதிர்ந்தவள் அவனருகே சென்று “செந்தூர்… செந்தூர்” என அழைக்கவும் அவன் பேச்சின்றி விட்டத்தை வெறித்தபடி கையை கீழே தொங்கப்போட்டவாறு கிடப்பதை பார்த்தாள் கையிலிருந்த பொருட்களை மேசை மீது வைத்து விட்டு தண்ணீர் போத்தலில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் மீது  தெளித்ததும் சுயநினைவு பெற்றாலும் அப்படியே கிடந்தான். 
“மாமா வெளியே தான் இருக்கின்றார் உங்களை இந்த நிலையில் பார்த்தால் ரொம்பவும் வேதனைப்படுவார். எழுந்து பாருங்கள்” என கூறியபடி அவனை தூக்கி அமர்த்தியவளுக்கு மூச்சு வாங்கியது. 
அவனது கையை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டு காயத்தின் மீது மருந்தை தடவவும், அவனது கை உயர்ந்து  அவளது இடையே அழுந்த பற்றி கைகளால் மேலும் அழுத்தத்தை கூட்டியது. அவளுக்கு வலியில் கண்ணீர் ‘கரகர’ என வழிந்தது.அவனது அழுத்தம் அவளுக்கு புரிந்திருந்தது. காயத்திற்கு சரியாக கட்டு போட்டு விட்டு அவனது கையை அவளது இடையிலிருந்து பிரித்து எடுத்து அவன் மடியில் வைத்தாள். 
அவள் சுடிதாரின் இடைப்பக்கம் முழுவதும் இரத்தக்கறை படிந்திருந்தது. நிலம் முழுவதும் விசிறப்பட்டிருந்த காகிதங்களை எடுத்து அடுக்கியவள் அந்த காகிதம் வினோதமாக இருக்கவே படிக்க ஆரம்பிக்கவும் அவள் கைகள் நடுங்க ஆரம்பித்து அதை முடிக்கவும் கண்ணீர் ஆறாய் பெருகியது. 
அவள் அழுவதை பார்த்தவன் அவளை கூப்பிடவும் அவனை உறுத்து விழித்தவள் கையிலிருந்த காகிதங்களை அவன் மீது விட்டெறிந்தவள், “பொறுக்கி… நீ பொம்பிளைப்பொறுக்கி என்றவள் ‘மளமள’ என பாத்றூமிற்குள் சென்று பெரிய பக்கெட்டுக்குள் தண்ணீரை நிரப்பியவள் வெளியே வந்து அவனை ‘தரதர’வென்று பெட்டில் இருந்து இறக்கி வீல்சேரில் அமர்த்தியவள் அவனை தள்ளிக்கொண்டு பாத்ரூமிற்குள் சென்றவள் அங்கேயிருந்த டெட்டோல்லிக்குவிட்டை எடுத்து முழுவதுமாக தண்ணீர் பக்கெட்டுக்குள் ஊற்றி கலந்தவள் அந்த தண்ணீரை எடுத்து அவன் தலை மீது ‘அள்ளி அள்ளி’ அந்த  நீர் முடியுமளவு அவன் தலையில் ஊற்றி தோயவார்த்தாள். 
அவள் கலந்த அமில வகை அவனது காயங்களில் பட்டு கொடுத்த எரிவு அவனது உடலை வலிக்க வைத்தாலும், அவளது அந்த செயற்பாடு அவன் மனதை இதமாக்குவது போலிருந்தது. 
அப்படியே அவனை வெளியே தள்ளிக்கொண்டு வந்தவளை பார்த்து, “நித்யா ஏன்? மாப்பிள்ளையை இப்படி தோயவாத்துக்கொண்டு வந்தாய்… அவன் காயமெல்லாம் நனைந்து செப்டிக் ஆகப்போகுது சீக்கிரமாக தலையை துடைத்து, உடுப்பை சேஞ் பண்ணுவதற்கு உதவி செய்… காயங்களுக்கு மறுபடியும் கட்டுப்போடு.” எனபதறினார் நித்யாவின் தந்தை. 
தந்தையை முறைத்தவள் “அப்பா உன் மருமகன் போருக்கு போய் விழுப்புண்ணோடு இங்கே வந்து படுத்து கிடக்கிறான்…பார். இனிமேல் இவனை மாப்பிள்ளை,மண்ணாங்கட்டி என கூப்பிடு… நடக்கிறதே வேற…” என ஒற்றை விரல் உயர்த்தி கூறியவள், தன் கையிலிருந்த துவாலையை தந்தைக்கு முன் சுழட்டி எறிந்தவள் “நீயே உன் மருமகனை தாங்கு… ச்சை… நான் போகின்றேன்.” என கூறிக்கொண்டே  கதவை திறந்து கொண்டு வெளியேறினாள்.
           

Advertisement