Advertisement

மலர் 01
காலைக்கருக்கலுக்குள் தூக்கத்தில் இருந்து எழுந்த நித்யஸ்ரீ  காலை வேலைகளை முடித்துக்கொண்டு அப்பாவிற்கு பழைய சாதத்தை பிரட்டி எடுத்து தூக்குச்சட்டியில் வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக தோட்டத்திற்கு ஓடினாள்.
“அப்பா…அப்பா…. எங்கப்பா இருக்கிறிங்க…”
அவள் குரல் கேட்ட தகப்பன் வாழைக்கு தண்ணீரை திருப்பி விட்ட படியே, “நித்தி நான் செவ்வாழைக்கு தண்ணீர் மாத்தி விடுகி்றேன் கண்ணு இங்கே இந்தப்பக்கமாக வாடாம்மா…”
“ஏம்பா வாங்க தண்ணீர் விட்டது போதும்.எப்ப பாரு தோட்டம், தோட்டம் என்று அதிலேயே இருக்காமல் உங்களையும் கவனிக்கனும்ல.தோட்டத்தை வாடாமல் நீங்க பார்த்துக் கொள்கின்ற மாதிரி உங்களது உடம்பையும் பார்த்துகணும்ப்பா….” என்று இழுத்தாள்.
“என்ன? கண்ணு இப்படி சொன்னால் எப்படி? நான் பிறந்த மண்ணில்,தவழ்ந்து திரிந்த இடத்தில், நான் உயிராய் நினைக்கும் என் மண்ணில் என் உயிர் இருக்கும் வரைக்கும்,என் கால்கள் இந்த தோட்டம்,துரவு,வாய்க்கால்வரப்பிலும் தான் உலாவிக்கொண்டிருக்கும். நான் இந்த தோட்டத்திற்குள் வரவில்லை என்றால் தான் நான் முடங்கிப்போய் விடுவேன்.அதனால் நீ எந்த கவலையும் இல்லாமல் தூக்குச்சட்டியை வைத்து விட்டு காலேஜ்ச்சுக்கு நேரமாகுது ஆத்தா… கிளம்பு.”
“சரிப்பா…நான் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பிடுங்கிக்கவா…”
”அப்பா வந்தவுடனே தேவையான எல்லா காய்கறிகளையும் ஆய்ந்து பம்புசெட் அருகில் வைத்திருக்கின்றன் எடுத்துககொண்டு போடா.”
“என்னப்பா நீங்களே? எல்லா வேலையையும் செய்தால் நான் என்ன? வேலையை செய்வதாம்.”
“நீ போ…போய் படிக்கிற வேலையை செய்.”
“அப்பா நான் இந்த காய்கறிகளையாவது சுத்தம் பண்ணி வெட்டி வைக்கட்டுமா?இல்லை அதையும் நீங்கள் தான் செய்வீங்களா?”
“தெரியுதில்லை…அப்புறம் ‘வளவள’ என்று பேச்சு வேண்டிக்கிடக்கு போய் சீக்கிரமாக கிளம்பு,வழமை போல பஸ்சை தவற விட்டுக்கொண்டு அதன் பின் ஓடாதே.”
“சரி… சரி… நான் கிளம்புகிறேன்.நீங்களும் வேலையை முடித்துக்கொண்டு வந்துவிடுங்கள் அப்பா.”
என்று கூறிய படி வீட்டை நோக்கி ஓடினாள்.
பிறந்ததில் இருந்தே தாயை இழந்த அவளிற்கு தாயும் தந்தையுமாய் இருந்து அவளை ஆளாக்கி இன்று கல்லூரியில் இறுதியாண்டு எக்கவுண்ட் முடிக்கப் போகும் நிலையில் கொண்டு வந்து நிறத்தியிருப்பதும் அவளுடைய தந்தை மார்க்கண்டேயன் தான்.அவளும் அவரது வளர்ப்பு தவறாது சூட்டிகையுடனும்,அமைதியுடனும், எல்லோருடனும் அன்பாக பழகும் இயல்பு மட்டுமன்றி தந்தையை போல எல்லோருக்கும் உதவும் குணமும் என ஏகப்பட்ட நல்ல குணங்களையும் அவளிடத்தில் காணலாம்.
இடைக்கு கீழ் அசைந்தாடும் அடர்ந்த கருங்கூந்தல் பார்பவர்களை மனம் காந்த செய்யும்.
இரண்டு விழிகளும் கயல்மீனைப்போல இருப்பதுடன் ஆயிரம் கதை பேசும் வல்லமை அவைகட்கு இருக்கின்றன.அழகிய மூக்கு,செக்கச் சிவப்பில் அழகாக,அமைப்பாக செதுக்கப்பட்ட உதடுகள். என சற்று பூசினால் போல் உடல் வாகை கொண்டவள்.ஒரு அறுபது அறுபத்தைந்து கிலோ எடை இருக்கும்.அவளை ஒரு குண்டு பூசணி என்றால் அவ்வளவு நன்றாக இருக்காது.வேணுமென்றால் குண்டுத்தக்காளி என்று சொல்லலாம்.
அவளைப்பார்ப்பவர்கள் குண்டாய் இருப்பவர்கள் தான் அழகு என்று நினைக்கும் அளவிற்கு மனதை கொள்ளை கொள்ளுவார்கள்.
ஆனால் அவள் எந்த அலட்டலும் ,ஆர்ப்பாட்டமுமின்றி திரிவதால் மற்றவர்களின் நினைப்புக்கு பொறுப்பாவதில்லை.
அவள் வீட்டு கதவை சாத்தி கொண்டு பஸ்சை பிடிக்க சிட்டாய் பறந்தாள்………!
                       ********************
“ஓன்பது மணியாகியும் உன் மகன் எழும்பவில்லைப்போல என மனைவியிடம் பாய்ந்த சுப்ரமணியம், அப்படி இரவு இரவாக என்னத்தை வெட்டி முறித்து,களைத்துப்போய்….உடம்பு வலி என்று துரை படுத்துக்கிடக்கிறார்.”
“என்னங்க…? நீங்க…? இரண்டு பொண்ணுங்களுக்கு ஒன்றாய் கருவேப்பிலை கொத்து மாதிரி ஒரே ஒரு பையனை பெத்து வச்சிருக்கிறேன்.அவனை குத்தம் சொல்லுவதே உங்களுக்கு தினசரி வேலையாப்போச்சுது. இருங்க புள்ளைக்கு ரீ கொடுத்து விட்டு வாறன்.
என்ன?கொடுமைடா சாமி. ஒன்பது மணிக்கு எழும்புறவனுக்கு பெட் ஃகாபி, காலை நாலு மணிக்கு எழும்புறவனிற்கு அவனுக்கு கொடுத்த பிறகு தான் கிடைக்குமாம்.இந்தக்கொடுமை இந்த வீட்டை தவிர எங்கேயும் நடக்காது.” என் புலம்பியபடி அவர் அவர்களுடைய அலுவலகத்திற்கு ஆயத்தமாவதற்கு அறையை நோக்கி திரும்பினார்.
“ஏன்? சுப்ரமணி என்ர பேரனை திட்டாவிட்டால் உனக்கு தொண்டையில தண்ணீர் இறங்காதா…?”என அவருடைய தாய் கேட்கவும் அவருக்கு இன்னும் கடுப்பாகியது.
“அட நீங்கள் இன்னும் எதுவும் சொல்லவில்லையே என்று தான் நினைத்தேன்.இப்போது மட்டும் உங்களுக்கு காது 
கேட்கிறதா…! அம்மா.”
“பாவம்டா… என் பேரன் அவன் குழந்தை அவனை ஏன்? வைய்யிறாய். அவன் அனுபவிக்க வேண்டிய வயசுடா…? அனுபவிக்கட்டுமே…..?”
“ம்…ஒழுங்கா நான் சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணியிருந்தால் இந் நேரம் ஒரு குழந்தை இருந்திருக்கும்.இந்த லட்சணத்தில் இவனை குழந்தையாமாம்.”
“இன்னும் நீ ஆபிசுக்கு கிளம்பலயா மணி.”
“என்னை ஆபிசுக்கு கிளப்பி விட்டு இங்கே பாட்டியும்,பேரனும் டிஸ்கோத்தே போடுங்க….நான் போய் தொலையுறேன்.”
“என்னங்க… நீங்க இன்னும் கிளம்பல்லயா…?”
“ஏன்? என்னை ரெடி பண்ணி அனுப்பபோகிறாயா…?”
“கல்யாண வயசில பையனை வைச்சுக்கொண்டு உங்களுக்கு எப்ப பாரு ரொமான்ஸ் மூட் தான் சும்மா போங்கள்…” வெட்கப்பட்டு சிரித்த சந்திராவை பார்த்து கொலை காண்ட் ஆனார்.
“ஏன்டி…உன் பையன் எழுந்துட்டானா? இல்லை நீ தான் போய் திருப்பள்ளி எழச்சி பாடி அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பினாயா…?” 
“இருபத்துநாலு மணி நேரமும் அவனை வம்புக்கு இழுப்பதற்கென்றே திரியாமல் நல்ல புள்ளயாய் ஆபிசுக்கு கிளம்புங்க மாமா.”என்ற ஒற்றை வார்த்தையில் மனைவியிடம் சரண்டர் ஆனார்.
“கைகாரி பேச வந்த விசயத்தை பேச விடாது மாமா என்ற வார்த்தையை சொல்லி கவுத்திட்டாளே….” என மனதுக்குள் மறுகியவர் ஒரு பெருமூச்சோடு வெளியேறினார்.
“ஏன்டி சந்திரா… உன் பையனுக்காக என் பையனையே கண்டுக்காமல் திரிகிறாயா….? பாவம்டி என் பையன் அவனும் எவ்வளவு சுமையை தான் தூக்கிக்கொண்டே நடப்பான்.”
என மாமியார் வருத்தப்படவும் சந்திரா அவருக்கு ஆறுதல் சொன்னார்.
“அத்தை அது எனக்கு தெரியாதா? அவன் விளையாட்டு தனமாக திரிகின்றான்.அத்தை அப்பாக்கும் பையனுக்கும் முட்டிக்காமல் இருக்கிறதுக்காக நான் இடையில் நின்று அல்லாடுவது உங்களுக்கு புரியவில்லையா…?” என கூறிக்கொண்டு எழுந்து சமயலறைக்குள் சென்றார்.
குளியலறையல் இருந்து வெளியே வந்த செந்தூர்செல்வன் தலையை பிடித்துக் கொண்டு அருகிலிருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டு ‘கடவுளே தலை வெடிக்கிறதே என்ன கருமத்தை கலந்து கொடுத்தானுகளோ தெரியலியே…’
குனிந்து அமர்ந்து இருந்தவன் முன் நீட்டப்பட்ட கிளாசினை பார்த்து நிமிர்ந்தவன் முகம் மலர்ந்தது.”அம்மா தாயே நீ என்னுடைய குலதெய்வம் பையனுடைய பீலிங்சை புரிந்து நடக்கின்ற தாய் நீ தான் மம்மி, வெரிகுட் மம்மி குடு அந்த லெமன்யூசை” என்று செல்லமாக படி தாயின் கைகளில் இருந்த கிளாசை வாங்கி அதிலிருந்த பாணத்தை அருந்தி முடித்தான். 
அவனது அறையை சுத்தம் பண்ணி பெட்சீட்,தலையணை என்பவற்றை தட்டி சுத்தம் செய்து அடுக்கிய வண்ணம் “என்னை குலதெய்வம் என்று செல்லி கடைசி வரைக்கும் என்னை கல்லாக ஆக்கி விடுவாய் போலிருக்கே பையா.”என்றவரின் குரல் நலிந்திருந்தது. 
“முகம் மாறிய செந்தூர் என்ன? மம்மி ஏன்? டல் அடிக்கிறாய்.காலையிலேயே டாடி கூட சண்டை போட்டியா.”என்றான். 
“நான் எதுக்கு என் புருசன் கூட சண்டை போட வேண்டும். எல்லாம் உன்னால் தான். பசங்க ஆளானால் பெத்தவங்களிற்கு துணையாக இருக்கணும்.ஆனால் நீ….” என்றவர் எதுவும் செல்லாது தன் வேலையை தொடர்ந்தார். 
“என்னம்மா?  உனக்கு என்ன? தான் பிரச்சனை?”
“ஒண்ணுமில்லடா விடு.சரி தம்பி இதைச்சொல்லு எப்போது நீ அப்பாவோடு ஆபீசுக்கு போகப்போகின்றாய்.அப்பா எத்தனை வேலையை தான் பார்க்கிறது. நீயும் அப்பாக்கு வேலையில் தோள் கொடுக்கலாம் தானே.”
“ம்மா…ப்ளீஸ் கொஞ்ச நாளைக்கு நாளைக்கு ஃப்ரீயா சுத்துறேன்.அப்புறமாகஅப்பாக்கு ஹெல்ப் பண்ணுகிறேன். இப்போது என்னை விடு மம்மி எனக்கு வேற ப்ரோக்கிராம் இருக்கு” என்று கூறிய படி ஆயத்தமானான். 
“அப்போது இவ்வளவு நேரம் நான் சொன்னதெல்லாம் வீண் தானா?  தண்ணி, தம் வேற என்ன எல்லாம் உன் வாழ்க்கையில் இருக்கிறதோ? கடவுளுக்கு தான் வெளிச்சம்.” என்ற தாய் மகனோடு மல்லுக்கட்டி சோர்ந்து  போய் வெளியேறினார். 
தாயின் கவலையை உணர்ந்திருந்தாலும் அவனது வாலிப வயது விளையாட்டுத்தனத்தை நோக்கி இழுத்தது. 
எல்லா விளையாட்டும் எந்த நேரமும் விருப்பிற்குரியதாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது காலத்தின் கோலத்திற்கேற்ற வகையில் மாறக்கூடும். அப்படி மாறும் போது அவன் எப்படி மாறக்கூடும் என்று அவனுக்கே தெரியாது. தெரிந்திருந்தால்…..!
அவனும் ஒன்றும் சாதாரணமானவன் இல்லை….! 
கோடி  கோடியாக பணம் புரளும் பணக்கார குடும்பத்தில் பிறந்த செல்வத்திருமகன் சாதாரணம் என்பதே அவனுக்கு பிடிக்காது.எல்லாமே குவாலிட்டியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். திமிர் பிடித்தவன். மரியாதையே அவனைக்கண்டால் சலாம் போட்டு தலை தெறிக்க ஓடும். அந்த கருப்பன் பார்க்கும் பெண்கள் அனைவரது உள்ளத்திலும் மை போல ஒட்டிக்கொள்வான் அது சிறுமி,குமரி,பாட்டி என அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் கொள்ளைக்காரன். வெளிநாட்டில் போய் எம்பிஏ படித்து விட்டு அங்கேயும் கோல்ட்மெடல் வாங்கியவன். 
கோல்ட்மெடல் வாங்கிய பசங்க எல்லோரும் நல்ல வேலை,வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருக்க இவருக்காக காத்திருக்கும் தொழில் சாம்ராஜ்யத்தை மறந்து வெட்டியாய் பொழுது போக்கிக்கொண்டிருக்கின்றான். 
அவனது நிறத்தையும் தாண்டி கறுத்தடர்ந்த மீசையின் கீழ் இருக்கும் அழுத்தமான உதடுகளை திறந்தால் முத்துப்போல் ஒளி வீசும் பற்களில் சிரிக்கும் பொது பார்ப்பவர்கள் மனம் ஒரு நிமிடம் தடுமாறிக் கொல்லும்.அவன் கோபத்தை எடுத்துக்காட்டும் நாசிக்கு மேலே,தொடுக்கப்பட்ட இமைகளுக்கு கீழே இருக்கும் அகன்ற வழிகளில்தெரியும் ஃபயரில் இவனது உயரத்தை விட ஏதோ சாதிக்க காத்திருக்கின்றான் என தோன்றும் ஆனால் இருவரையும் அப்படி எதுவும் நடக்கவில்லை. 
தாயிடம் சொன்னது போல டிப்ரொப்பாக கிளம்பி வெளியே வந்தவன் கூலிங்கிளாசை எடுத்து மாட்டிக்கொண்டு “அம்மா நான் கிளம்புகின்றேன். வர லேட் ஆகும்.எனக்கு சாப்பாடு வேண்டாம் ஓகேயா…” என்றவன் காரில் ஏறி புறப்பட்டான்.
.
‘இவன் இப்போது இப்படிப்போகின்றான் வரும் போது தலை கீழாக வருவான். இவன் அவர் வருவதற்கு முன்பே வந்து விட வேண்டும்.இல்லை என்றால் என்பாடு திண்டாட்டமாக அல்லவா இருக்கும். கடவுளே இன்னும் எத்தனை நாட்களுக்கு  தான் எனக்கு இந்த சோதனையோ?’ என பெருமூச்சு விட்ட தாயாரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. 

Advertisement