Advertisement

26
பூங்கோதை உன் தம்பி ஜாதகம் ஒரு பொண்ணு ஜாதகத்தோட பொருந்தி போகுது. பொண்ணு வீட்டுக்காரங்களும் வந்து விசாரிச்சுட்டு போய்ட்டாங்க
நாம அடுத்து வர்ற நல்ல நாள்ல அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம். நான் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி சொல்லிடறேன், நீயும் அவங்களும் வந்திடுங்க என்றார் ராஜாத்தி.
ஹ்ம்ம் அவர்கிட்ட பேசிட்டு வர்றேன்ம்மாஎன்றாள் அவள்.
நீ ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்திடு. நான் ஜோசியர்கிட்ட போய் நல்ல நாள் பார்த்திட்டு உனக்கு போன் போடுதேன்
ஹ்ம்ம் சரிம்மா
போனை வைத்த பூங்கோதைக்கு மனதிற்கு என்னவோ போல இருந்தது. இரண்டு மூன்று நாட்களாகவே கதிருக்கு அவள் அழைத்துக் கொண்டிருக்கிறாள், அவளின் உடன்பிறந்தவன் அவளின் போனை எடுக்கவேயில்லை.
மீண்டும் அழைப்பான் என்று அவள் இருக்க அவன் அழைத்திருக்கவும் இல்லை. அதுவே அவள் மனதை குடைந்துக் கொண்டிருந்தது.
பார்த்தால் அம்மா போன் செய்து பெண் பார்த்து இருப்பதாக வேறு சொல்கிறார்கள். ‘ஒரு வேளை அவனுக்கு பொண்ணை பிடிக்கலையோ என்று தான் யோசித்தாள் அவள்.
தன் கணவனிடம் சொல்லிவிட்டு மறுநாளே அவள் மதுரைக்கு வந்து சேர்ந்தாள்.
அடுத்த வாரம் தான் வருவேன்னு நினைச்சேன். இன்னைக்கே வந்திட்டியே நேத்து போன் பண்ணப்போ ஒரு வார்த்தை கூட சொல்லலையே பூங்கோதைஎன்றார் ராஜாத்தி.
அதான் வந்திட்டேன்லம்மா விடுங்க என்று பேச்சை முடித்தவளின் கண்கள் தன் தம்பியையே சுற்றி சுற்றி வந்தது.
அவள் வந்ததும் வா என்று அழைத்து உள்ளே சென்றுவிட்டான். எப்போதும் இருக்கும் மலர்ச்சி இல்லை பிள்ளைகள் வரவில்லையே என்று கேட்கவில்லை தன் கணவனை பற்றி விசாரிக்கவில்லை என்ன பிரச்சனை அவனுக்கு முகமும் சரியில்லையே இப்படித்தான் அவளின் மனம் யோசித்தது
அவனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். அவள் இங்கு வந்த அதே நாளில் தான் ஆதித்யன் அவளை பார்த்து நயனா விஷயம் சொல்லிவிடவென விருதுநகருக்கு சென்றிருந்தான்.
அங்கு அவள் மதுரை சென்றிருக்கிறாள் என்றதும் நேரே கிளம்பி வந்துவிட்டான். கதிரிடம் பேசியது வேலைக்கு ஆகவில்லை என்பதால் தான் பூங்கோதையிடம் பேசும் முடிவை அவன் எடுத்திருந்தான். பூங்கோதையை பார்க்க கதிரின் வீட்டிற்கு சென்றால் அவள் அங்கில்லை. அவளை பார்க்க வந்ததாக ஆதியும் காட்டிக் கொள்ளவில்லை.
அக்கா எப்படி இருக்காங்கம்மா??”
நல்லா இருக்கா ஆதி. இங்க தான் வந்திருக்கா நம்ம கதிருக்கு ஒரு இடம் தோதா வந்திருக்கு அதுக்கு தான் வரச்சொன்னேன் என்றவர் பெண் வீட்டை பற்றி அவனிடம் சொல்ல ஆதி நெளிந்துக் கொண்டிருந்தான்.
இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்று தோன்ற கதிரை பார்க்க கடைக்கு சென்றான். அப்போது தான் வழியில் பூங்கோதையை பார்த்தான்.
அவளின் முன்னே வண்டியை நிறுத்தியவன்அக்கா எங்கே போறீங்க??” என்றிருந்தான்.
கதிரை பார்க்க கடைக்கு போறேன் ஆதி
வாங்க நானும் அங்க தான் போறேன். எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொன்னவன் காரின் கதவை திறந்துவிட அதில் ஏறிக் கொண்டாள் அவள்.
இருவரும் கடைக்கு வந்திருக்க வந்தவர்களையே யோசனையுடன் பார்த்திருந்தான் கதிர்.
வாக்கா என்று தன் தமக்கையை மட்டும் அழைத்தவன் ஆதியை முறைத்து நின்றிருந்தான். அதிசயமாய் இருவரையும் பார்த்தாள் பூங்கோதை
அக்கா எனக்கு உங்க ரெண்டு பேருகிட்டயும் பேசணும். வெளிய போய் பேசலாம் அவனை வரச்சொல்லுங்க என்றான் ஆதித்யன்.
என்ன பேசணும்??”
பேசணும்
அக்கா நான் வரலை
கதிரு ஆதி உன்கிட்ட என்ன பேசப் போறான்னு எனக்கு தெரியாது. ஆனா நானும் உன்கிட்ட பேசத்தான் வந்தேன், வா வெளிய போவோம் என்று தமக்கையும் அழைக்க அவனால் மறுக்க முடியாது போனது.
ஆதியின் காரிலேயே அவர்கள் எப்போதும் செல்லும் அந்த ஹோட்டலுக்கு சென்றனர். காபியும் வடையும் சற்று நேரம் கழித்து எடுத்து வரச்சொல்லிவிட்டு பேசாமலே அமர்ந்திருந்தனர் மூவரும்.
யார் முதலில் ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்ற எண்ணத்தில் தான் அமர்ந்திருந்தனர். அந்த தயக்கத்தை எல்லாம் உடைத்து பூங்கோதை தன் பேச்சை ஆரம்பித்தாள்.
கதிரு உனக்கு என்ன பிரச்சனை??”
ஒண்ணுமில்லையேக்காஎன்றான் தன் மன வேதனை மறைத்து.
ஒண்ணுமில்லையா??” என்றான் ஆதி.
என்னாச்சு ஆதி உனக்கு எதுவும் விஷயம் தெரியுமா?? நீ தான் சொல்லேன் என்றாள் அவள்.
எதுவா இருந்தாலும் அவன் வாய்ல இருந்தே வரட்டும்க்கா என்றான் அவன்.
சொல்லு கதிரு நீ பழைய மாதிரி இல்லை. நாலு நாளா நான் உனக்கு போன் பண்ணிட்டு இருக்கேன். நீ எடுத்து பேசவும் இல்லை, திரும்ப கூப்பிடவும் இல்லை
கதிர் கேட்கறேன்னு தப்பா நினைக்காதே. அம்மா பார்த்த பொண்ணு உனக்கு பிடிக்கலையாய்யாஎன்று நேரடியாகவே கேட்டுவிட்டாள் அவள்.
ஆதியோ லேசாக இதழ் வளைத்தான். ‘சரியா கேட்டீங்க அக்காஎன்ற எண்ணம் தான் அவனுக்கு. ‘இப்போ பதில் சொல்லு. என்கிட்ட தானே சண்டை பிடிப்ப அக்காகிட்ட சொல்லித்தானே ஆகணும்என்று நினைத்துக் கொண்டே நண்பனை பார்த்திருந்தான் ஆதி.
கதிர் பதில் சொல்லவில்லை, முகம் இன்னமும் இறுக்கமாக அமர்ந்திருந்தான். “கதிர் என்ற பூங்கோதை அவன் கை மேல் தன் கையை வைத்தாள்.
உனக்கு பிடிக்கலைன்னா வேணாம் கதிரு. ஆனா…” என்று நிறுத்தினாள்.
உண்மையை சொல்லு கதிரு உன் மனசுல வேற யாரும் இருக்காங்களா?? எதுனாலும் சொல்லுடா உன் சந்தோசம் தான் முக்கியம்என்று அவள் கேட்டுவிட ஆதி கைத்தட்டி விட்டான் தன்னையுமறியாமல்.
நண்பனை முறைத்த கதிர் உம்மென்றிருந்தான். “கதிர் சொல்லுடாஅம்மாக்கு வாக்கு கொடுத்திட்டேன்னு எல்லாம் யோசிக்காத. இது உன்னோட வாழ்க்கை கதிரு, சொல்லு என்றாள் அவள்.
எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நீ அமைச்சுக் கொடுத்தே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையறது நான் பார்க்க வேணாமா
அக்கா ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாத. இன்னைக்கு நீ வரலைன்னா நானே உனக்கு போன் பண்ணி வரச்சொல்லி இருப்பேன்க்கா” 
உன்கிட்ட எப்படி பேசன்னு நான் யோசிச்சுட்டு இருக்கும் போது தான் நீயே வந்தே
சொல்லு கதிருஎன்று அவள் கேட்கவும் செங்கதிர் தன் மனதில் இருந்த அத்தனையும் கொட்டி தீர்த்தான்.
ஏன்டா இவ்வளவு நாள் பேசாம இருந்தே??”
அதை நான் கேட்டதுக்கு தான் என் மேல சாருக்கு கோபம் என்று இடையிட்டான் ஆதி.
உனக்கு எப்போ தெரியும் ஆதி
அந்த பொண்ணு யாருன்னும் எனக்கு தெரியும்க்கா. நீங்களும் கூட அவளை பார்த்து இருக்கீங்க என்னோட கல்யாணத்துல என்று சொல்லவும் பூங்கோதை தன் தம்பியைத் தான் பார்த்தாள்.
சற்று முன்பு அவன் ஒரு பெண்ணை விரும்புவதை பற்றி சொல்லியிருந்தவன் இன்னமும் அவளின் பெயரை சொல்லியிருக்கவில்லை.
அவளோட பேரு நயனா. என் வைப்போட தங்கை என்றான் ஆதித்யன்.
எனக்கு இவங்க விஷயம் கொஞ்ச நாளா தெரியும்க்கா. இவன்கிட்ட வந்து கல்யாணத்தை பத்தி பேசினா என்னோட சண்டை போடுறான்
ஏன் கதிரு??”
அவன் எனக்காக ஒண்ணும் பேசலை என்று முகம் திருப்பினான் கதிர்.
அக்கா நான் ரெண்டு பேருக்கும் பொதுவானவன். அவங்களுக்காக பொதுவா நான் பேசினேன், அதுல என்னக்கா தப்பு. நான் அவளுக்கு உறவா பேசறேன்னா, இவனுக்கு நண்பனா பேசறேன் அது ஏன் இவனுக்கு புரிய மாட்டேங்குதுன்னு எனக்கு தெரியலைக்கா
இவனுக்காக பேசலைன்னு சொல்லி என்னை ரொம்பவே ஹர்ட் பண்றான். சரி எது எப்படியோ விடுங்க இப்போ என்ன பண்ணலாம் அதை சொல்லுங்க என்று விஷயத்திற்கு வந்தான் ஆதி.
யாரும் எதுவும் செய்ய வேணாம்
அப்போ சாமியாரா போகப் போறியா??” என்றான் ஆதித்யன்.
அக்கா இவனை பேச வேணாம்ன்னு சொல்லு. நானே என்ன செய்யன்னு ரொம்ப குழப்பத்தில இருக்கேன்
அப்போ நீயே பேசுப்பா நான் பேசலைஎன்றான் ஆதி.
போதும் போதும் நீங்க முட்டிக்கிட்டது. கதிர் உன்னோட ஐடியா என்ன??”
நீ தான்க்கா உதவி பண்ணனும்
நானா?? நான் என்ன பண்ணனும்ன்னு சொல்லு
இந்த கல்யாணம் லவ் மேரேஜா இல்லாம அரேன்ஜ் மேரேஜ் மாதிரி பண்ணனும்
எதுக்கு இந்த ஒளிவுமறைவு??”
ப்ளீஸ் ஆதி என்னையும் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. நயனாவை பத்தி மட்டும் யோசிக்காத. யாரோட மனசும் கஷ்டப்படாம இந்த கல்யாணம் நடக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்என்று விளக்கினான் அவன்.
அதற்கு மேல் ஆதி எதுவும் சொல்லவில்லை. மூவருமாய் எப்படி செய்ய என்று பேசினார்கள். கதிர் முன்பே யோசித்திருப்பான் போல எப்படி செய்ய என்ன செய்ய என்று தெளிவாக அவன் திட்டத்தை சொன்னான்.
பூங்கோதையின் கணவரின் வழி சொந்தம் என்றே ஆரம்பித்தனர் நயனாவின் வீட்டு சம்மந்தத்தை. கதிரை பார்த்து சென்றிருந்தவர்கள் அவர்களாகவே வேண்டாம் என்று சொல்லிட அவர்களுக்கு அந்த திருமணத்தை மறுக்கும் வேலை மிச்சமானது.
டேய் என் வீட்டுக்காரர்கிட்ட என்னன்னு சொல்றது
அதை நீ தான்கா பார்த்துக்கணும்
டேய் பேசாம அவருக்கு தெரிஞ்ச பேமிலின்னு சொல்லிருவோம்டா
இல்லைக்கா உன்னோட சொந்தம்ன்னா அம்மா யோசிக்காம சரின்னு சொல்வாங்க அதான்…”
என் அத்தைகிட்ட அம்மா கேட்டிட்டா என்னடா செய்ய??”
அவங்க பேசாம நீ தான் பார்த்துக்கணும்
ரொம்ப பெரிய வேலை கொடுக்கறடா எனக்கு
மாமாகிட்ட நீயே உண்மையை சொல்லிடுக்கா. நீ பேசினதும் நானும் அவங்ககிட்ட பேசறேன்க்கா
அதும் சரி தான்…” என்றாள் அவள்.
ஆதியிடம்நீ என் பக்கமா உன் மச்சினி பக்கமா என்றான் கதிர் எங்கோ பார்த்துக் கொண்டு.
எனக்கு ரெண்டு பேரும் முக்கியம் தான். இப்போ நான் என்ன பண்ணனும்ன்னு சொல்லு??” என்று தன் ஒப்புதலை உடனே கொடுத்தான் ஆதித்யன்.
அக்கா எல்லாம் முடிச்சதும் நான் உன்கிட்ட சொல்றேன், அதுக்கு அப்புறம் நீ தான் நயனாகிட்ட பேசணும்
என்ன விளையாடுறியா?? நீ தான் பேசணும் அவகிட்ட
இதுக்கு தான் சொன்னேன் நீ அவ சைடுன்னு
டேய்!!” என்று பல்லைக்கடித்த ஆதிசரி சொல்லு நான் என்ன செய்ய??”
நீ தான் இப்போதைக்கு அவகிட்ட பேசணும். இந்த கல்யாணம் அரேன்ஜ் மேரேஜ் மாதிரி தான் நடக்கும்ன்னு சொல்லி அவளை கன்வின்ஸ் பண்ணனும்”
நான் இதெல்லாம் அவகிட்ட சொன்னா அவளுக்கு கோபம் தான் வரும். ஏதோ ஏமாத்துறேன்னு நினைப்பா ஆதி. எனக்கு எல்லாரும் வேணும், எந்த பிரச்சனையும் இல்லாம புரியுதா” என்றவனின் பார்வை என்னை புரிந்துக் கொள்ளேன் என்பதாய் இருந்தது.
அதை உணர்ந்தவனாக ஆதிசரி செய்யறேன். ஆனா ஒண்ணு நீ அவகிட்ட சீக்கிரம் பேசு. அவ்வளவு தான் சொல்வேன், பாவம்டா அவ
ஆதி நான் இப்போதைக்கு அவகிட்ட பேசப் போறதில்லை. எங்களுக்கான தனிமையில நான் அவகிட்ட பேசிக்கறேன்
ஆமாமா கால்ல விழணும்ல என்று கிண்டல் செய்தாள் பூங்கோதை.
அக்கா என்று சொன்னாலும் அவன் முகத்திலும் புன்னகை அரும்பியது தன் அக்கா சொன்னது அவன் கற்பனையில் வந்து போனது.
உன் ஐடியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா அதுல பெரிய ஓட்டை இருக்கே??”
என்னடா சொல்றே??”
என்னை என்னன்னு சொல்லி சமாளிப்ப, நான் நயனாவுக்கு உறவுக்காரன்னு தெரிஞ்சிடாதா??”
இவ்வளவு யோசிச்சவன் அதெல்லாம் யோசிக்காம இருப்பேனா. சுத்தி வளைச்சு பார்த்தா நம்ம ஆதிக்கும் சொந்தம் தான் வருதுன்னு ஒரு போடு போடா வேண்டியது தான். அக்கா அதெல்லாம் சரியா சமாளிப்பா
நான் சமாளிக்கறனோ இல்லையோ நீ நல்லா சமாதானம் சொல்றடா எங்களுக்கு என்றாள் பூங்கோதை.
ஆதியோஅக்கா கன்பார்ம் இவன் கண்டிப்பா கால்ல தான் விழுக போறான்என்று சொல்ல மூவருக்குமே சிரிப்பு வந்தது.
கதிர் உங்க வீட்டை பொறுத்தவரை இது அரேன்ஜ் மேரேஜாவே இருக்கட்டும். ஆனா மாமாகிட்ட நான் உண்மையை சொல்லிடலாம்ன்னு இருக்கேன்
தாராளமா சொல்லு. நானும் வரணும்ன்னா வர்றேன்
இப்போதைக்கு அதெல்லாம் தேவைப்படாது நான் பேசிக்கறேன் என்றான்.
என்னென்ன எப்படி செய்ய வேண்டும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அதை சிறப்பாகவே செயல்படுத்தினர். அவர்கள் திட்டப்படியே நல்ல முறையில் திருமணமும் நடந்து முடிந்திருந்தது.
———————

Advertisement