Advertisement

அத்தியாயம் 13
ஆராதனாவின் பிடிவாதம், உறுதியை விஜய் அறிந்திருக்கவில்லை. அவன் எண்ணத்தின் வடிவத்திற்கு எதிர் பிம்பமாய் இருந்தாள். அவளைப் பொறுத்தவரைக் கடனுக்காக அல்லாது கல்யாண வாழ்க்கை என்பது இன்பமாய் அனுபவித்து வாழ வேண்டியது. அதில் தனக்குப் பிடித்தவனே துணையாய் வேண்டும் என்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் முயன்று பார்த்துவிடும் உறுதியில் இருந்தாள். 
இதுவரையும் அவன் அவளை நேரடியாகப் பிடிக்கவில்லை எனச் சொல்லவில்லை! அதுவே அவள் நம்பிக்கையை உடையாது உறுதியாக்கியது. அதுவரை அவன் எண்ணம் அறியும் ஆவலில் இருந்தவளுக்கு அவள் எதிர்ப்படும் போதெல்லாம் நழுவி நழுவி ஓடுபவனை விரட்டுவது ஒரு உற்சாக விளையாட்டாகத் தெரிந்தது. 
அவனை நெருங்கும் அவள் ஈர்ப்பு விசைக்கு இணையாக அவனின் விலக்கு விசையிருக்க, நிலையான மையநோக்கு விசையில் அவனையே மையமாகக் கொண்டு சுற்றினாள். 
ஆரதனாவைத் தவிர்க்க நினைத்து வெகு தாமதமாக மதிய உணவிற்கு அமர்ந்திருந்தான் விஜய். அசாத்திய அமைதி  நிலவிய அவ்விடத்தில் ஆங்காங்கு சிலர் தான் அலைபேசியோடு அமர்ந்திருந்தனர். 
சரியாக அதே நேரம் அவன் எதிரே வந்தமர்ந்த ஆரா, மூச்சை இழுத்து வாசம் பிடித்தபடி, “சிக்கன் பிரியாணியா..?” எனக் கேள்வியோடு சப்புக் கொட்டினாள்.
வந்துட்டாளா? எப்படி சரியான நேரத்துக்கு வந்திடுறா, எனக்கே தெரியாம என்னை உளவு  பார்க்க ஆள் எதுவும் வைச்சிருப்பாளோ? அவன் விபரீத யோசனையிலிருந்தான். 
“சிக்கன் பிரியாணி உங்களுக்குப் பிடிக்கும் தான் அதுக்குன்னு எதிர்ல இருக்கிறவளை சாப்பிட்டியான்னு ஒரு வார்த்தை கூட கேட்காம நீங்களே முழுசா முழுங்குவீங்களா?” எனக் குறைபட்டுக் கொண்டாள். 
நல்ல மனநிலையில் தான் இருக்கா, எத்தற்கும் ஒரு தடவை அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திப்பார்த்தா என்ன? சரிப்படுவாளா? ஆராய்ச்சியாக அவளைப் பார்த்திருந்தான். 
“ஹோ… எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்குறீங்களா? உங்க அக்கா தான் எப்போ செய்தாலும் சிக்கன் பிரியாணினா என் தம்பிக்கு உசுருன்னு சொல்லும். ஏன் அவர் உயிர் என்ன அவித்த முட்டையா பிரியாணிகுள்ள ஒளிச்சு வைக்கன்னு நானும் கேட்பேன்” என அவன் மௌனமறிந்து அவனைச் சீண்டினாள். 
நீண்ட மூச்சை இழுத்து விட்டுக்கொண்டவன், “இந்த சாப்பிடு..” என பிளேட்டை அவள் புறம் நகர்த்த, மறுப்பின்றி ஸ்பூனை எடுத்து வைத்துவிட்டு கையால் அள்ளி உண்ணத் தொடங்கினாள். 
கீழ் உதடு துடிக்க, அழுத்திக் கடித்து வெளிப்படுத்தாத சிறு சிரிப்போடு அவளையே பார்த்திருந்தான். 
“நேத்து முழுசும் கல்யாணப் பெருமாளுக்கு விரதம் தெரியுமா? இன்னைக்கு காலையிலையும் லேட்டா எழுந்து சீக்கிரம் கிளம்பி வந்ததுல சாப்பிடவே இல்லை தெரியுமா?” என அள்ளி வாய்க்குள் அடைத்தவள் விக்கலோடு, “சரி தான் உனக்கு எங்க என்னைப் பத்தி தெரியபோது? நம்ம என்ன லவர்ஸா போன்லையே பொழுதைக் கழிக்க, நானே ஒரு ஒன் சைடு! என் சைடு யார் பார்க்க?” என தன் போக்கில் புலம்பிக் கொண்டாள். 
அவளையே பார்த்திருந்தவன் தண்ணீர் டம்ளரை அவள் அருகில் தள்ளியபடி, “ஆரா..” என அழைக்க, நிமிராது, “என்ன…?” என்றாள். 
“நீங்க கொடுத்த பாதி பிரியாணிலையும் பாதி வேணுமா?” எனக் கேட்டும் அவன் அமைதியாய் இருக்க, கேள்வியாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். 
“எதனால உனக்கு என்னை பிடிச்சிருக்கு?” 
“ம்ம்ம்…சுமார் மூஞ்சி குமார் தான்! இருந்தும் எதனால பிடிச்சதுன்னு தெரியலையே..” 
பல்லைக்கடித்தவன், “ம்ச், விளையாடாத..!” என்றான். 
“நிஜமா தான். எனக்கே தெரியலை, கல்யாணத்துக்குப் பின்ன அதைக் கண்டுபிடிக்கிறது தான் என் முதல் வேலை. மறக்காமல் நியாபகப் படுத்துங்க என்ன சரியா?” 
“ம்ச், ஆரா காதலிக்கிற வயசா உனக்கு?”
“இல்லை கல்யாணம் பண்ற வயசாம்”
“தெரியுதுல?” 
“எனக்குத் தெரியலை, எங்க வீட்டுல தான் அலயன்ஸ் பார்க்குறாங்க”
“அப்பறம் என்ன காதல் வேண்டி கிடைக்கு, என்னை விட்டுட்டேன்” 
“விட முடியும்னு தோனலை” என்றவள் அடக்கமுடியாமல் சிரிக்க, உண்ட உணவு புரையேற, கண்களில் நீர் சுரக்க, உச்சந்தலையில் தட்டிக் கொண்டிருந்தவளிடம் தண்ணீரை நீட்டினான். 
வாங்கிப் பருகியவளிடம், “அப்படி என்ன சிரிப்பு?” என்றான் அதட்டலாக. 
பொறுமையாக பிளேட்டில் கை கழுவி விட்டு, “இந்த பழைய படத்துல தப்பா பிகேவ் பண்ண வர வில்லன்கிட்ட அப்பாவி பொண்ணு கொஞ்சுற மாதிரி இருக்கு, என்னை விட்டுட்டேன்னு நீங்க கேட்டது” என, நாக்கை துருத்திக் காட்டிச் சிரித்தாள். 
ஐயோ என் இமேஜை இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டாளே! உள்ளுக்குள் புலம்பிய போதும், வெளியே கோபமாக முறைத்தான். 
“எல்லாம் வாய் கொழுப்பு…” 
“கொழுப்பு தான் கொஞ்சம் குறையுங்களேன் பார்ப்போம்..” என்றவள் உதடு குவித்தபடி அவனை நோக்கி நெருங்க, பதறி இருக்கையோடு பின் நகர்ந்தவன் தன் இரண்டு கன்னத்தையும் கைகளால் மறைந்தான். 
அவன் செயலில் இம்முறை அடக்க முடியாது சிரித்தவள், “ஹோ..அன்னைக்கு கொடுத்தது பிடிக்கலையா?” என்க, சட்டென தலையாட்டினான். 
“அப்போ திருப்பிக் கொடுத்துடுங்க, நான் தப்பா நினைச்சிக்க மாட்டேன்” என்றவள் தன் கன்னத்தை அவன் புறம் காட்டினான். 
ஒரு அடி வைத்தால் என்ன என்று தான் அவனுக்கு தோன்றியது, நேராக அமர்ந்தவன், “நீயெல்லாம் பொண்ணா?” என்றான். 
அவன் என்ன அர்த்தத்தில் கேட்டானோ? ஆனால் அவளுக்குச் சுருக்கென வலிக்க, கோபமும் முட்டிக்கொண்டு வர, நரம்புகளில் மின்னல் பாய்ந்தது, கையை மடக்கி அடக்கினாள். 
“நீங்க தான் பார்த்து சொல்லணும்” என்றாள் இலகுவாக. 
“இதுவே ஒரு பையன் செய்தா ஈப் ட்சீங், லவ் டாச்சர்ன்னு, மகளிர் போலீஸ், கேஸ்ன்னு அந்த பையன கொன்னுருக்க மாட்டீங்க?” 
“ஹா..ஹா..இப்போ நான் என்ன செய்துட்டேன் உன்னை?”
“ரொம்ப டிஸ்டர்ப் பண்ற..!” 
“நிஜமாவா..?” கண்கள் மின்ன கேட்டவள், “அப்போ என்னை பிடிச்சிருக்கு?” என்றாள் துள்ளலாக. 
“ஹே..நான் எப்போ பிடிச்சிருக்குன்னு சொன்னேன்?”
“பிடிக்கலைன்னும் சொல்லையே..!”
“பிடிக்கலை..” சட்டென அவன் உரைக்க, அமர்ந்திருந்த டேபுளில் சரிந்து அவனை நெருங்கி மெல்லிய குரலில், “ஏன்..? அந்த மாதிரியா நீ..?” எனப் புருவத்தை ஏற்றிக் கேட்டாள். 
பல்லைக் கடித்தவன், பொறுக்கமுடியாமல் அவள் முன் நெற்றியில் நறுக்கென்று கொட்டியபடி, “ஆளையும் பேச்சையும் பாரு, இந்த மாதிரி கிறுக்குத் தனமா பேசுன பல்லைத் தட்டுவேன்” என்றான் மிரட்டலாக. 
வலியில் தலையை தடவியபடி நிமிர்ந்தவள், கண்கள் இரண்டையும் உருட்டி முறைக்க, அவள் கோபமெல்லாம் நுனி மூக்கில் முட்டிக் கொண்டிருந்தது. 
“பின்ன பிடிக்கலைன்னு ஒரு வார்த்தையில சொன்னா எப்படி? நியமான காரணம் சொல்ல வேண்டாமா?” என்றாள் ரோஷமாக. 
ஒரு நொடி அவன் மௌனமாகிட, அவளுக்கு இதயம் படபடவென குதித்தாடியது. 
“நீ இதை தாங்குவியான்னு தெரியலை, உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன்” என்றவன் மீண்டும் அமைதியானான். 
ஹார்ட் ப்ராபளம், கேன்சர், ஒரு வேளை எய்ட்ஸ்ன்னு சொல்லப் போறானா? ஹோ காட்! அந்த ஒரு நொடியில் மனதில் அலறியே விட்டாள். 
“எனக்கொரு தாய்மாமா இருக்கார்..”
“நாய் மாமாவா? இருந்துட்டு போட்டும் எனக்கென்ன?”
“இடையில பேசாத..” 
சொல்லும்…சொல்லித் தொலையும்..! மனதில் நினைத்ததைப் பார்வையில் காட்டியபடி அமைதியானாள். 
“விலேஜ்ல இருக்கார். அவருக்கு ஒரு பொண்ணு இருக்கு எங்க சின்ன வயசுலையே எனக்கு தான் அந்த பொண்ணுன்னு எங்க இரண்டு பேர் வீட்டுலையும் பேசி வைச்சிருக்காங்க” 
அவன் பேசி முடிப்பதற்குள் பொங்கியே விட்டாள். “யார் அந்த அருக்காணி? இந்த ஆராவுக்கு போட்டியா?” எனக் குரல் உயர, நானும் ரௌடி தான் என்பது போல் மிரட்டலாக் கேட்டாள். 
“ஏய்..ஷ்.ஷ்..அமைதி..” என்றவன் அடக்கவும், அவள் இருக்கையில் அமர்ந்தாள். 
“போட்டிங்கிற வார்த்தைக்கே இடமில்லை. சின்ன வயசுல பெரியவுங்க பேசி வைச்சிடாங்க அந்த வயசுல இருந்தே என் நெஞ்சுல, நினைப்புல, இரத்தத்துல, சுவாசத்துல, கண்ணுல, மூக்குல எல்லாம் அவ தான் நிறைஞ்சி இருக்கா. நான் காலையில கண்ணு முழிக்கிறதும் நைட் கண் மூடுறதும் அவ போட்டோ பார்த்துத் தான். அவளைத் தவிர என் மனசுல யாருக்கும் இடமில்லை..சோ…நீ புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்?” எனக் கேள்வியாக நிறுத்தினான். 
அதுவரையிலும் அவன் சொல்வது உண்மை தானா என ஆராய்ச்சியாய் பார்த்திருந்தவளுக்கு வெறும் செய்தி சொல்ல வந்த தூதுவன் போன்ற அவனின் முகபாவனையில் ஒன்று அறிய முடியவில்லை. 
தன்னை போன்று அவன் விளையாட்டாய் பேசுபவனும் அல்ல, ஆனாலும் அவள் சொல்வதை முழுமனதாய் ஏற்கவும் முடியவில்லை. 
“சரி இப்போ நான் என்ன சொல்லணும்? நீங்க எங்கிருந்தாலும் மஞ்சள் குங்குமத்தோட வாழ்கன்னு வாழ்ந்தணுமா?” என அவனிடமே கேட்க, பதிலில்லை. 
“ஓகே, ஆல் தி பேஸ்ட்” என்றபடி பர்சிலிருந்து தன் உணவிற்கான பணத்தை டேபுளில் வைத்து விட்டு எழுந்து நின்றாள்.
“ஒன் ரெக்வஸ்ட் உங்களுக்கு கல்யாணம்னா என்னை இன்வைட் பண்ணிறாத சாபம் கொடுத்துடுவேன், அன்ட் பொண்ணு பிறந்தாலும் என் பெயரை வைச்சிடாத” என கரகரப்பான குரலில், சிரிக்க முயன்று, முடியாது நொடியில் விலகிச் சென்றாள். 
என்ன தான் அவள் கேலி உரைத்த போதும் அவள் குரலில் வலி இருக்கவே அதை அவனும் உணர்ந்தான். 
இத்தனை எளிதாக அவள் விலகிச் செல்வாள் எனச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவளோடு பெரிதும் போராட வேண்டியிருக்குமோ என நினைத்தவனுக்கு ஏமாற்றமே! இதை விடவும் மென்மையாக அவள் மனம் நோகாதபடி சொல்லிருக்க வேண்டுமோ? 
தன் இடத்தில் வந்த அமர்ந்தவனுக்கு வேலையில் கவனத்தை பதிக்க இயலவில்லை. தலையைப் பற்றியபடி அமர்ந்தான். 
அவனை கவனித்திருந்த அகில், “என்னடா மச்சான் தலைவலியா?” என அவன் புறம் திரும்பினான். 
“ச்சே, லவ் டாச்சர் பண்றாடா..” என நொந்தவன் உரைக்க, சட்டெனச் சிரித்தான் அகில். 
விஜய் முறைக்க, வாயை மூடி அடைக்க முயன்றும் முடியாது சிரித்துக் கொண்டிருந்தான் அகில். 
“ஏன் மச்சான்? லவ் டாச்சர்..! உனக்கே ஓவார தெரியலை?” எனச் சிரிப்புடனே கேட்க, 
“அவகிட்ட தான் அதை கேட்கணும்” என்றான் விஜய். 
“நீ அந்த அளவுக்கு வொர்த் இல்லையே மச்சி..” 

Advertisement