கிருபாவை ஈசனோடு.. ஈசன் வீட்டில் சேர்ந்தனர். வீடு புது பொலிவோடு இருந்தது. சண்முகம் அசந்துதான் போனார். சுற்று சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அவன் தங்கை திருமணத்தை நடத்தியதே எதோ.. கடன் வாங்கி செய்திருப்பான், ஷங்கர் ஏதும் சேர்த்திருக்க மாட்டான் என எண்ணம். ஆனால், வீடு.. புது பொலிவோடு இருக்கவும்.. சண்முகம் எடை போட்டார் ஈசனை. தங்கைக்கு செய்தது.. கிருபாவிற்கு செய்தது.. திருமணத்தில் பாதி செலவினை ஏற்றுக் கொண்டது என.. மனதில் கணக்கு போட்டு பார்த்தார். ம்.. நல்ல போஸ்டிங்கில் இருப்பான் போல.. அனாவசியமா செலவு செய்யாமாட்டான் போல.. ம்.. கெட்டிக்காரன்தான்.. உள்ளுக்குள் மெச்சிக் கொண்டார்.
இவரையே ஈசன் பார்த்திருந்தான்.. அவர் சுற்றி சுற்றி வீட்டினை பார்ப்பதை பார்த்து.. சிரித்துக் கொண்டான் ‘எல்லாம் முடிந்து, எடை போடுறார் போல.. சரியான தத்தி’ என எண்ணி சிரித்துக் கொண்டான்.
பெண்கள் மதிய உணவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினர்.
முதலில் கிருபாவினை விளகேற்ற சொல்லி.. பால் காய்ச்ச சொல்லி என.. எப்போதுமான நடைமுறைகள் தொடங்கியது.
சஹா நேற்றே வந்து தேவையான சமையல் சாமான்களை வாங்கி வைத்திருந்தாள்.
இப்போது விசாகன் அலுவலகம் செல்லும் முன் அவளை விட்டு சென்றான். மதியம் உண்ண வருதாக சொல்லி சென்றான்.
சம்பூர்ணாவிற்கு, சஹாவை பார்த்ததும் கொண்டாட்டம்தான். நான்குநாட்கள் முன்தான் பார்த்திருந்தாள். சஹா, திருமணம் முடிந்து, தன் அண்ணியோடு இருந்துவிட்டு.. சென்னை வந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது.
விசாகனுக்கு, வேலை வெளிநாட்டில்.. அவர் ஒருமாதம் விடுமுறை எடுத்திருந்தார் முன்னமே. திருமணம் முடிந்து.. தான் மட்டும் வெளிநாடு சென்றுவிட்டார். இப்போது ஈசனின் திருமணம் முன்னிட்டு இரண்டு வாரம் விடுமுறையை எடுத்துக் கொண்டு, வந்திருந்தார்.
இந்த நாட்களில் சஹாவிற்கும், அங்கே வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டார், அவளின் கணவன். அவளுக்கும் விசா வந்துவிடும். ஆச்சு, இன்னும் பத்து நாளில், விசாகன் கிளம்பிடுவார். சஹா அதன்பின் செல்லுவதாக ஏற்பாடு.
சஹா தன் அறைக்கு கூட்டி சென்றாள், இளையவளை. இருவருக்கும் நேரம் இனிமையாக சென்றது.
சீர் என பொருட்கள் ஏதும் தேவையாக இருக்கவில்லை.. சம்பிராதாயத்திற்காக ஒரு டிரெஸ்ஸிங் டேபிள் வாங்கிக் கொடுத்தனர்.
மதிய விருந்து அமர்க்களப்பட்டது. விசாகனும் வந்துவிட.. சிறியவர்கள் உண்டு முடித்து.. கார்ட்ஸ் விளையாட என அமர்ந்தனர். தாத்தாவும் அமர்ந்துக் கொண்டார் அவர்களோடு. கிருபா சண்முகத்தையும் அழைத்தாள். முதலில் சண்முகம் தயங்கினாலும்.. பின் சேர்ந்துக் கொண்டார்.
அந்த ஹாலில்.. பெரிய பெட்ஷீட் விரித்து.. சிறியவர்களும் பெரியவர்களுமாக.. எல்லோரும் ரவுண்டு கட்டி.. விளையாட.. ஈசியாக கிருபாவும் சஹாவும் தோற்றுக் கொண்டே இருந்தனர்.
சம்பூர்ணா இப்போதுதான் விளையாடுகிறாள்.. ஆனால், அவள்தான் எல்லா முறையும் ரம்மியை சரியாக சேர்த்தாள்.
ஈசனும் விசாகனும்.. தன்னவர்களை “வாய் மட்டும்தான்.. கார்ட் பார்த்து விளையாட தெரியுதா” என வம்பிழுத்தனர்.
ஆட்டம் கலைகட்டியது.. இந்த ஜோக்கர்ஸ் விளையாடியது போது.. என விசாகனும் ஈசனும் சொல்ல.. இவர்களுக்கு போடாமல் ஆட்டம் தொடர்ந்தது. கிருபா, சண்முகத்தின் அருகில் அமர்ந்துக் கொண்டாள். சஹா, தாத்தாவின் அருகே அமர்ந்துக் கொண்டாள்.
இப்படியே ஆட்டம் செல்ல.. ஈசனும் சண்முகமும் முட்டிக் கொண்டனர். இருவரும் சமமான புள்ளிகள். இறுதி ஆட்டம்.. என அறிவித்து.. காட்ஸ் போட்டான் விசாகன்.
இந்தமுறை ஈசன் ரம்மி சேர்த்து கார்ட்ஸ்சினை கவிழ்த்தான்.
சண்முகம் தோற்றாலும் புன்னகை மாறாமல்.. “என்ன இப்போ.. நைட் டின்னெர் செலவு தானே.. செய்திடுவோம்” என்றார் இலகுவான குரலில்.
அருணாசலம் “அப்படி சொல்லுடா.. சில்வண்டுகள் ஜெயிச்சிட்டு போகட்டும்ன்னு விட்டுட்டான் என் பையன்” என சொல்லி பெரிதாக சிரித்தார்.
சண்முகம் “அப்படி சொல்லுங்க அப்பா” என சொல்லி மீசையை முருக்கினார்.
பெரியவர்கள் எல்லோரும் சிரித்தனர். பாட்டி “ஆஹா.. உங்க தாத்தா.. அடிக்கடி கட்சி மாறுறார் டா..” என்றார்.
கிருபா “நல்லா பாருங்க..” என சொல்லி.. அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
இருவருக்கும் பேச தோன்றவில்லை.
ஈசன் அவளின் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டான். அவளை இழுத்து தன் மடியில்.. சாய்த்துக் கொண்டான்.. “இத்தனை பேர் கூட இருக்கும் போது.. என்னமோ.. சொல்ல முடியாத அளவு.. தெம்பா இருக்கு டி..” என்றான் ஆத்மார்த்தமாக.
கிருபா அவன் பேசட்டும் என அமைதியாகினாள். மீண்டும் ஈசனே “எங்க அம்மா அப்பா எப்போதும் ஒரு பயத்தில் இருப்பாங்க.. நமக்கு யாருமில்ல.. பணம் காசு மட்டும்தான் உதவும்ன்னு அவங்க சொல்லிட்டே இருப்பாங்க. எனக்கும் முன்னாடி அந்த எண்ணம்தான். ம்.. இப்போது அப்படி இல்ல.. எத்தனை உறவு என்னை சுற்றி.. பணம் மட்டுமே நமக்கு உதவும்ற எண்ணம் இப்போ இல்ல. எது வந்தாலும் பார்த்துக்கலாம்ன்னு தோணுது.” என்றான் ஆத்மார்த்தமாக.
கிருபா ஏதும் பேசாமல் அவனின் விரல்களை இறுக்கமாக தன்னோடு பிணைத்துக் கொண்டாள்.. உண்மை என்பதான அழுத்தம் அது. கண்டுக் கொண்டான் ஈசன். தன்னவளை பார்த்து ஆமோதிப்பாக புன்னகைத்தான்.
ஈசன் “எல்லாம் நீ கொடுத்தது” என்றான்.
கிருபா “அஹ.. மொத்தமாக என்னை சொல்ல முடியாது, நல்லதோ கெட்டதோ.. தாத்தாவை தேடி வந்தீங்க. ஷங்கர் மாமாக்குதான் தேங்க்ஸ் சொல்லணும். உங்களை நான் பார்த்ததற்கு.” என்றாள்.
ஈசன் “அஹ.. கரெக்ட்.” என்றான்.
ஈசனே “தேங்க்ஸ் எல்லாம் போதும்.. வா.. மேலே போலாம்.. நிலா பார்க்கணும் போல இருக்கு..” என்றான்.
கிருபா அதிசயமாக அவனை பார்த்தாள். ஈசன் தன்னவளோடு மேலே வந்தான்.. நிலா முழுநிலவாக பிரகாசமாக ஒளிர்ந்தது.
ஈசன் “சந்தோஷமாக இருக்கும் போது.. நிலாவை பார்த்தால், அது.. நம்மோட டைரி மாதிரி இருக்கும்.. நாம இந்த நாளை அதுகிட்ட.. சொல்லி வைப்போம்.. எப்போது நிலாவை பார்த்தாலும் இந்த நாள் ஞாபகம் வருமில்ல நமக்கு” என்றான் ரசனையாக.
கிருபா “இதென்ன புதுசா இருக்கு” என்றாள்..
ஈசன் “சஹாவிற்கு வேலை கிடைத்த நாளை இப்படிதான் கொண்டாடினோம். அம்மாவோட பர்த்டேவை இப்படிதான் கொண்டாடுவோம்..” என்றான்.
கிருபா ஏதும் பேசவில்லை, ஈசன் “இப்போ, நீ வந்ததை கொண்டாடதான் வந்திருக்கேன்..” என்றான் அவளை பின்னிலிருந்து அனைத்துக் கொண்டு. குளிர்நிலவு.. இன்னமும் ஒளிர்ந்து.. தன் சந்தோஷத்தை அவர்களுக்கு காட்டி கொடுத்தது.